PDA

View Full Version : கவிதை போல விடுகதை..

ஆதவா
19-12-2006, 07:59 AM
அன்பர்களே..
விடுகதை திரி ஆரம்பிக்கலாமே!!

முதலில் நான் ஆரம்பிக்கிறேன்!! கண்டுபிடியுங்கள்.

நீயிருக்க நான் செல்வேன்
நானிருக்க நீ செல்வாய்
நிதமும் உயிர் தருகிறாய்
எனக்குயிர் தந்தே நீ வாழுகிறாய்!!
யார் இவர்கள்:

(பரிசு: இன்னொரு விடுகதை..)

உங்கள் விடை சரியாகவே இருந்தால் விளக்கம் தேவை

ஷீ-நிசி
19-12-2006, 08:31 AM
class..... பரிசு இன்னொரு விடுகதை

ஆதவா
19-12-2006, 08:38 AM
ஷீ Class தான் உங்க விடையா? தவறென்று எண்ணுகிறேன்...

meera
19-12-2006, 08:42 AM
அன்பர்களே..
விடுகதை திரி ஆரம்பிக்கலாமே!!

முதலில் நான் ஆரம்பிக்கிறேன்!! கண்டுபிடியுங்கள்.

நீயிருக்க நான் செல்வேன்
நானிருக்க நீ செல்வாய்
நிதமும் உயிர் தருகிறாய்
எனக்குயிர் தந்தே நீ வாழுகிறாய்!!
யார் இவர்கள்:

(பரிசு: இன்னொரு விடுகதை..)

உங்கள் விடை சரியாகவே இருந்தால் விளக்கம் தேவை

ஆதவன் நான் கண்டுபிடிச்சுட்டேன்

காற்று. சரியா?

பரிசு கொடுக்க ஆளை கானோம்.:eek: :eek: :eek:

ஆதவா
19-12-2006, 09:05 AM
தவறு மீரா அவர்களே... இதில் இருவர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்

ஹ ஹா பரிசு இல்லையே!!! :D :D

ஷீ-நிசி
19-12-2006, 09:24 AM
ஆதவா.. class.. என்று என் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்..... பரிசு என்று ஆர்வத்துடன் பார்த்தால் "இன்னொரு கவிதை" என்று நீங்கள் எழுதியதை ரசித்தேன்...class என் ஆச்சரியத்தின் வெளிப்பாடு.. உங்கள் விடுகதைக்கு பதில் யோசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் வருகிறேன் விடையுடன்

அன்புடன்
ஷீ-நிசி

அறிஞர்
19-12-2006, 01:02 PM
என்ன ஆதவா...

சூரியன், சந்திரனா....

ஆதவா
19-12-2006, 01:05 PM
அறிஞர் அறிஞர்தான்..... சரியான விடை அறிஞரே

அறிஞர்
19-12-2006, 01:08 PM
அறிஞர் அறிஞர்தான்..... சரியான விடை அறிஞரே உங்கள் பெயரிலே..முதல் விடுகதை கொடுத்துவிட்டீர்.. எளிதாகிவிட்டது....

அடுத்தது கொடுங்கள்.. நண்பர்கள் முயற்சிப்பார்கள்...

ஆதவா
19-12-2006, 01:19 PM
உன் மேனியில் பட்டு
இறந்து போகிறேன்
நான் இறப்பதாலேயே
உன் மேனி தளிர்கிறது.
இறந்தேபோவேனென நினையாதே
மீண்டும் உயிர்(தெழு)வேன் உன்னிலிருந்து..

யார் இவர்கள் ?

meera
19-12-2006, 01:31 PM
தவறு மீரா அவர்களே... இதில் இருவர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்

ஹ ஹா பரிசு இல்லையே!!! :D :D

சரி போகட்டும் ஆதவன்.

அடுத்த முறை விடாம பிடிக்க முயற்சி செய்யறேன்.:D :D :D :D

ஷீ-நிசி
19-12-2006, 01:32 PM
அறிஞரே, அருமை...
ஆதவா, (விடு)கவிதை நடை அருமை..

விடை தெரிந்தபின் தான்
வினாவின் சுவை தெரிகிறது...

அறிஞர்
19-12-2006, 01:39 PM
அறிஞரே, அருமை...
ஆதவா, (விடு)கவிதை நடை அருமை..

விடை தெரிந்தபின் தான்
வினாவின் சுவை தெரிகிறது...
இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்காதீங்க...
நீங்களும் முயற்சிங்க...

அறிஞர்
19-12-2006, 01:41 PM
உன் மேனியில் பட்டு
இறந்து போகிறேன்
நான் இறப்பதாலேயே
உன் மேனி தளிர்கிறது.
இறந்தேபோவேனென நினையாதே
மீண்டும் உயிர்(தெழு)வேன் உன்னிலிருந்து..

யார் இவர்கள் ?
புல், பனித்துளி போல் உள்ளது...

மற்றவர்கள் சரியான விடை கூறுவார்கள் என எண்ணுகிறேன். :rolleyes: :rolleyes:

ஆதவா
19-12-2006, 01:45 PM
புல், பனித்துளி போல் உள்ளது...

மற்றவர்கள் சரியான விடை கூறுவார்கள் என எண்ணுகிறேன். :rolleyes: :rolleyes:

இருக்கலாம்.. சில விடைகள் பொருத்தமாகவே இருக்கும்.. ஆனால் என் மனதில் இருக்கும் விடை இதுவல்ல...

புல், பனித்துளி... எனக்குதான் புரியவில்லை (நமக்குதான் ஆயிரம் மூளையாச்சே ஒன்னுகூட வேலை செய்யாது..)

meera
19-12-2006, 01:46 PM
புல், பனித்துளி போல் உள்ளது...

மற்றவர்கள் சரியான விடை கூறுவார்கள் என எண்ணுகிறேன். :rolleyes: :rolleyes:

அய்யோஒ அறிஞர் அய்யா,

முடியலை முடியலை.இப்படி அதிகமா யோசிச்சா முடி கொட்டுமாம் எல்லாரும் சொல்றாங்க.பார்த்து. ஹா ஹா ஹா:D :D :D :D

ஆதவா
19-12-2006, 01:46 PM
மேலும் முயலுங்கள் மீரா மற்றும் ஷீ... உங்களிடமும் இதுபோல் இருந்தால் எங்களுக்கு அளியுங்கள்... ( விடுகதை கவிதை நடையில் இருக்கவேண்டும் )

ஆதவா
19-12-2006, 01:47 PM
அய்யோஒ அறிஞர் அய்யா,

முடியலை முடியலை.இப்படி அதிகமா யோசிச்சா முடி கொட்டுமாம் எல்லாரும் சொல்றாங்க.பார்த்து. ஹா ஹா ஹா:D :D :D :D

முடிகொட்டினால் மூளை வளருமாமே மீரா... :D :D :D :D

அறிஞர்
19-12-2006, 01:52 PM
முடிகொட்டினால் மூளை வளருமாமே மீரா... :D :D :D :D
நல்ல மருந்து பார்த்து சொல்லுங்க... :confused: :confused: :confused:

ஆதவா
19-12-2006, 01:55 PM
சேச்சே மீரா அவர்கள் சும்மா சொல்லுகிறார்... ஹி ஹி ஹி... (எப்டி ரெண்டு பக்கமும் போட்டு வாங்கறேன் பாத்தீங்களா )

அறிஞர்
19-12-2006, 01:56 PM
இருக்கலாம்.. சில விடைகள் பொருத்தமாகவே இருக்கும்.. ஆனால் என் மனதில் இருக்கும் விடை இதுவல்ல...

புல், பனித்துளி... எனக்குதான் புரியவில்லை (நமக்குதான் ஆயிரம் மூளையாச்சே ஒன்னுகூட வேலை செய்யாது..)

சரி சரி மற்றவர்கள் முயற்சிக்கட்டும். :rolleyes: :rolleyes: :rolleyes:

ஷீ-நிசி
19-12-2006, 02:02 PM
உன் மேனியில் பட்டு
இறந்து போகிறேன்
நான் இறப்பதாலேயே
உன் மேனி தளிர்கிறது.
இறந்தேபோவேனென நினையாதே
மீண்டும் உயிர்(தெழு)வேன் உன்னிலிருந்து..

யார் இவர்கள் ?

மழைத்துளி, கடல்

ஆதவா
19-12-2006, 02:09 PM
ஷீ... எப்படிப்பா? சரியான விடை...

அறிஞர்
19-12-2006, 02:10 PM
உன் மேனியில் பட்டு
இறந்து போகிறேன்
நான் இறப்பதாலேயே
உன் மேனி தளிர்கிறது.
இறந்தேபோவேனென நினையாதே
மீண்டும் உயிர்(தெழு)வேன் உன்னிலிருந்து..

யார் இவர்கள் ?

மழைத்துளி, கடல் கலக்கல் அன்பரே..... வாழ்த்துக்கள்... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
19-12-2006, 02:14 PM
ஷீ. உங்களுக்கு இதன் விடை தெரியும் அதனால் மற்றவர்கள் முயலட்டும்.

பொட்டிழந்து
பூவிழந்து
பெண் அழுகிறாள்
உடல் முழுவதும்...

இதற்க்கு பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும்?

அறிஞர்
19-12-2006, 03:15 PM
ஷீ. உங்களுக்கு இதன் விடை தெரியும் அதனால் மற்றவர்கள் முயலட்டும். ?ஷீக்கு மட்டும் தான் தெரியுமா.. எனக்கு... :angry: :angry:

மற்றவர்கள் முயலட்டும்.. எஸ்கேப்... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
19-12-2006, 03:19 PM
அறிஞரே பதில் அளிப்பதிலும் எஸ்கேப் ஆவதிலும் கில்லாடிதான் நீர்,,,

ஷீ-நிசி
19-12-2006, 03:41 PM
அறிஞரே.

பொட்டிழந்து
பூவிழந்து
பெண் அழுகிறாள்
உடல் முழுவதும்...

இந்த விடுகதை நண்பர் ஆதவா orkut-ல் பதித்தபோது கண்டுபிடித்துவிட்டேன்.. அதனால்தான் இப்படி சொல்கிறார்... நீங்கள் விரைவில் கண்டுபிடித்துவிடுவீர்கள்....

ஆதவா அடுத்தது தயார் செய்யுங்கள்......

ஆதவா
19-12-2006, 03:45 PM
என்னிதயத் துவாரங்களின் வழி
விடும் அம்புகள் தைக்கிறதா அன்பே!!?
நீ விடும் கண்ணீர்
என்னை புண்ணாக்குதே!!

யார் இவர்கள்.?

ஷீ-நிசி
19-12-2006, 04:10 PM
ஆதவா இது கவிதையா? விடுகதையா?

ஆதவா
19-12-2006, 05:44 PM
ஆதவா இது கவிதையா? விடுகதையா?

விடுகதையேதான் ஷீ விடை கண்டுபிடியுங்கள்

guna
20-12-2006, 02:50 AM
ஷீ. உங்களுக்கு இதன் விடை தெரியும் அதனால் மற்றவர்கள் முயலட்டும்.

பொட்டிழந்து
பூவிழந்து
பெண் அழுகிறாள்
உடல் முழுவதும்...

இதற்க்கு பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும்?

மெளுகுவர்தியா ஆதாவன்?

குணா

ஆதவா
20-12-2006, 03:14 AM
மெளுகுவர்தியா ஆதாவன்?

குணா

இல்லை குணா

மயூ
20-12-2006, 04:15 AM
ஷீ. உங்களுக்கு இதன் விடை தெரியும் அதனால் மற்றவர்கள் முயலட்டும்.

பொட்டிழந்து
பூவிழந்து
பெண் அழுகிறாள்
உடல் முழுவதும்...

இதற்க்கு பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும்?

இலையுதிர் காலம்

ஆதவா
20-12-2006, 04:51 AM
இலையுதிர் காலம்

இலையுதிர் காலமென்றால் சற்று விளக்கவும்... என் பதில் இதுவல்ல..

மயூ
20-12-2006, 06:24 AM
இலையுதிர் காலமென்றால் சற்று விளக்கவும்... என் பதில் இதுவல்ல..
இலையுதிர் காலத்திலே பூக்கள் ஏன் இலைகள் கூட வீழ்ந்து விட தவித்து நிற்கும் மாது போல மரங்கள் நிற்கன்றனவே அதைத்தான் நான் நினைத்தேன்.:)

ஆதவா
20-12-2006, 06:34 AM
நண்பரே பூக்களும் இலைகளும் முழுவதுமாகவா வீழ்ந்துவிடுகிறது. இருப்பினும் உடல் முழுவதும் என்ற வார்த்தையை கவனியுங்கள்... உங்கள் வழியிலேயே நான் வருகிறேன்... மரத்தின் பூக்கள் தலை பகுதியில் மட்டுமே உள்ளது... நான் சொன்னது முழுவதுமாக.... இன்னும் யோசியுங்கள்.. (இதன் தலைப்பு மட்டுமே தொலவுங்கள். மறைமுகமான விடையல்ல )

ஷீ-நிசி
20-12-2006, 06:41 AM
சரி மயூரேசன்.. பொட்டிழந்து என்ற வார்த்தை எங்கே பொருள்படுகிறது இலையுதிர்காலத்தில்

ஆதவா
20-12-2006, 06:44 AM
சரி மயூரேசன்.. பொட்டிழந்து என்ற வார்த்தை எங்கே பொருள்படுகிறது இலையுதிர்காலத்தில்

ஆஹா சரியான நேரத்தில் கைகொடுத்தார் ஷீ.... இப்போ ரெண்டுபேர் தாக்குதல்... ஆரோக்கியமான தாக்குதல்

மற்றும்
நன்றி மயுரேசன்,, ஏனெனில் என்னிடம் இன்னொரு விடுகதை உண்டாகிவிட்டது உங்களால்,,,

அறிஞர்
21-12-2006, 03:38 PM
ஆஹா சரியான நேரத்தில் கைகொடுத்தார் ஷீ.... இப்போ ரெண்டுபேர் தாக்குதல்... ஆரோக்கியமான தாக்குதல்

மற்றும்
நன்றி மயுரேசன்,, ஏனெனில் என்னிடம் இன்னொரு விடுகதை உண்டாகிவிட்டது உங்களால்,,,
விடுகதை மன்னா..... 2 நாட்கள் காத்திருங்கள்.. பதில் வராவிட்டால்.... பதிலை கொடுத்துவிடுங்கள்... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
21-12-2006, 03:55 PM
விடுகதை மன்னா..... 2 நாட்கள் காத்திருங்கள்.. பதில் வராவிட்டால்.... பதிலை கொடுத்துவிடுங்கள்... :rolleyes: :rolleyes: :rolleyes:

கண்டிப்பாக அறிஞரே நான் எவ்வளவு நாளும் காத்திருக்க தயார்,, ஏனென்னில் பல அன்பர்கள் மன்றம் வர நாட்களாகுமல்லவா?

மன்மதன்
21-12-2006, 06:58 PM
ஹ்ம்ம்.. கண்டுபிடிக்க முடியலை.. நல்லா விடுகதை கொடுக்கிறீங்க ஆதவா.

ஆதவா
21-12-2006, 07:20 PM
ஹ்ம்ம்.. கண்டுபிடிக்க முடியலை.. நல்லா விடுகதை கொடுக்கிறீங்க ஆதவா.

நன்றி மன்மதன் அவர்களே... இப்படியே தப்பிக்க முடியாதுங்ஓ.... கண்டுபிடியுங்கோ

மன்மதன்
21-12-2006, 07:39 PM
யோசிக்கணும்.. முயற்சி பண்றேன்..

அறிஞர்
21-12-2006, 10:31 PM
கண்டிப்பாக அறிஞரே நான் எவ்வளவு நாளும் காத்திருக்க தயார்,, ஏனென்னில் பல அன்பர்கள் மன்றம் வர நாட்களாகுமல்லவா?
விடுமுறை காலங்கள்.. நாட்கள் ஆகும்.

gayathri.jagannathan
22-12-2006, 06:40 AM
பொட்டிழந்து
பூவிழந்து
பெண் அழுகிறாள்
உடல் முழுவதும்...

இந்த விடுகதைக்கு எனக்கு தெரிஞ்ச விடை மழை...

விடை சரியா தவறா?

ஆதவா
22-12-2006, 06:44 AM
பொட்டிழந்து
பூவிழந்து
பெண் அழுகிறாள்
உடல் முழுவதும்...

இந்த விடுகதைக்கு எனக்கு தெரிஞ்ச விடை மழை...

விடை சரியா தவறா?

மழை என்றால் விளக்கம் அளிக்கவும்...

இவை போன்ற விடுகதைகளுக்கு நிறைய விடை இருக்கலாம்..

gayathri.jagannathan
22-12-2006, 06:51 AM
பெண் அழுகிறாள்
உடல் முழுவதும்...
இந்த இடத்துக்கு விளக்கம் தேவையில்லன்னு நெனைக்கறேன்... மழை வரும்போது சூரியன்/சந்திரன் மறைஞ்சுதும் இல்லயா அத பொட்டிழந்துன்னு சொல்லலாம்... வெள்ளை மேகங்கள் போயி கருப்பு மேகங்கள் தானே தெரியும்.. அத பூவிழந்துன்னு சொல்லலாம்...

ஆதவா
22-12-2006, 06:59 AM

அப்படியே கொண்டாலும் உடல் முழுவதும் அழுகிறாள் என்பதற்கு??

பூமியை உடலெனக் கொண்டாலும் முழுவதுமாக மழையால் நனைவதில்லை...

உங்களின் இந்த சிந்தனைக்கு பாராட்டென்று சொல்லுவதை விட நன்றி என்றே சொல்லவேண்டும்... ()
எனக்கு இன்னுமொரு விடுகதை தோன்றிவிட்டது,,,

பதில் அளியுங்கள் தொடர்ந்து... மூளை கசக்கி பிழிந்து......

gayathri.jagannathan
22-12-2006, 07:06 AM
எனக்கு இன்னும் ஒரு விடை தோணுது... கரும்பு சாறு... கரும்பின் தோகை பூ... அதன் கணு பொட்டு.... உடல் முழுதும் அழுதால் தான் சாறு கிடைக்கும்...விடை சரியா தவறா?

ஆதவா
22-12-2006, 07:17 AM
எனக்கு இன்னும் ஒரு விடை தோணுது... கரும்பு சாறு... கரும்பின் தோகை பூ... அதன் கணு பொட்டு.... உடல் முழுதும் அழுதால் தான் சாறு கிடைக்கும்...விடை சரியா தவறா?

ஆஹா!!!! இதற்கு இங்குள்ள அறிஞர்கள் உதவி தேவைப்படுகிறது...

எனக்கு கொஞ்சம் சரியென்றெ தோணுகிரது
காயத்த்ரி அவர்களே !! என் விடை இதுவல்ல... இருந்தாலும் மூளையை கசக்கி பிழிய சொன்னதுக்கு கரும்பை கசக்கி பிழிந்து விட்டீர்களே!!!!

ஷீ-நிசி
22-12-2006, 07:56 AM
காயத்ரி...... ஆனாலும் இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது........

gayathri.jagannathan
22-12-2006, 08:20 AM
இதுக்கு பேரு தான் Lateral thinking.... நான் கொஞ்சம் decenta சொல்லிட்டேன்.... கொஞ்சம் தரம் தாழ்ந்து சொல்லணும்னா குண்டக்க மண்டக்க யோசிக்கறது...

என்ன தான் சொல்லுங்க.... மத்தவங்க மாதிரி சும்மா இருக்காம இருக்கற கொஞ்சோண்டு மூளைய உபயோகப்படுத்திருக்கொம்லா???

என்னோட அறிவை பார்த்து எல்லாரும் ஏம்பா இப்படி பொறாமை படுறீங்க?

புகைச்சல போடாதீங்க விடுங்க விடுங்க... escaaaaaaaappppppppppeeeeeeeee!!!!!!!!!!!!

ஆதவா
22-12-2006, 08:57 AM

:D :D ஹி ஹி,,, என்னமோ போங்க... எனக்குத்தான் இந்த மன்றத்திலேயே அறிவு கம்மி... நடத்துங்க..நடத்துங்க..

ஷீ-நிசி
22-12-2006, 09:23 AM
ஆதவா, இந்த விடை-யை நீங்க பரிசீலிக்கலாம்.... உங்க விடை கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில்.....காயத்ரி வித்தியாசமா யோசிச்சிருக்காங்க

ஆதவா
22-12-2006, 09:57 AM
ஆதவா, இந்த விடை-யை நீங்க பரிசீலிக்கலாம்.... உங்க விடை கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில்.....காயத்ரி வித்தியாசமா யோசிச்சிருக்காங்க

ஷீ.. நான் ஏற்கனவே சொன்னதுபோல,, இந்த மாதிரி விடுகதைக்கு பல பதில்கள் இருக்கும்.

தோழி காயத்திரி சொன்னது எனக்கு சரியென்றே தோன்றுகிறது,

என்னோட அடுத்த விடுகதைக்கு பதில் சொல்லுங்க...

என்னிதயத் துவாரங்களின் வழி
விடும் அம்புகள் தைக்கிறதா அன்பே!!?
நீ விடும் கண்ணீர்
என்னை புண்ணாக்குதே!!

யார் இவர்கள்.?

ஷீ-நிசி
22-12-2006, 10:55 AM
யோசிக்கிறேன் பா

அறிஞர்
22-12-2006, 01:28 PM
அப்படியே கொண்டாலும் உடல் முழுவதும் அழுகிறாள் என்பதற்கு??

பூமியை உடலெனக் கொண்டாலும் முழுவதுமாக மழையால் நனைவதில்லை...

உங்களின் இந்த சிந்தனைக்கு பாராட்டென்று சொல்லுவதை விட நன்றி என்றே சொல்லவேண்டும்... ()
எனக்கு இன்னுமொரு விடுகதை தோன்றிவிட்டது,,,

பதில் அளியுங்கள் தொடர்ந்து... மூளை கசக்கி பிழிந்து......
மேகம் என வைத்துக்கொள்ளலாமா...

அறிஞர்
22-12-2006, 01:32 PM
...

என்னிதயத் துவாரங்களின் வழி
விடும் அம்புகள் தைக்கிறதா அன்பே!!?
நீ விடும் கண்ணீர்
என்னை புண்ணாக்குதே!!

யார் இவர்கள்.?
கள்ளிச்செடி போல் கவிதை தைக்குது...

ஆதவா
22-12-2006, 01:44 PM
மேகம் என வைத்துக்கொள்ளலாமா...

அறிஞரே தவறு... பதில் மறைமுகமாகமாக இருக்காது...

meera
22-12-2006, 03:03 PM
இதுக்கு பேரு தான் Lateral thinking.... நான் கொஞ்சம் decenta சொல்லிட்டேன்.... கொஞ்சம் தரம் தாழ்ந்து சொல்லணும்னா குண்டக்க மண்டக்க யோசிக்கறது...

என்ன தான் சொல்லுங்க.... மத்தவங்க மாதிரி சும்மா இருக்காம இருக்கற கொஞ்சோண்டு மூளைய உபயோகப்படுத்திருக்கொம்லா???

என்னோட அறிவை பார்த்து எல்லாரும் ஏம்பா இப்படி பொறாமை படுறீங்க?

புகைச்சல போடாதீங்க விடுங்க விடுங்க... escaaaaaaaappppppppppeeeeeeeee!!!!!!!!!!!!

எப்படி தோழி இதெல்லாம்,

ஆமா, ஆமா எனக்குகூட கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு.:eek: :eek: :eek:

ஜமாய்ங்க ஜமாய்ங்க.:D :D :D

மயூ
23-12-2006, 04:18 AM
ஷீ.. நான் ஏற்கனவே சொன்னதுபோல,, இந்த மாதிரி விடுகதைக்கு பல பதில்கள் இருக்கும்.

தோழி காயத்திரி சொன்னது எனக்கு சரியென்றே தோன்றுகிறது,

என்னோட அடுத்த விடுகதைக்கு பதில் சொல்லுங்க...

என்னிதயத் துவாரங்களின் வழி
விடும் அம்புகள் தைக்கிறதா அன்பே!!?
நீ விடும் கண்ணீர்
என்னை புண்ணாக்குதே!!

யார் இவர்கள்.?

சதுப்பு நிலமும், மழையும்... :confused:

ஆதவா
23-12-2006, 04:48 AM
சதுப்பு நிலமும், மழையும்... :confused:

மயூரேசன்,, தவறென்று நினைக்கிறேன்... விளக்க முடியுமா?

மயூ
23-12-2006, 04:55 AM
மயூரேசன்,, தவறென்று நினைக்கிறேன்... விளக்க முடியுமா?
சதுப்பு நிலத்தில் இருந்து எழும் உஷ்ணக் காற்று மழை மேகத்தை சுடுகின்றதோ என்று சதுப்பு நிலம் வருந்துகின்றது...
மழை பெய்து சதுப்பு நிலத்தை மேலும் ஐதாக்குகின்றது (ஐயோ சொதப்புறேனே!!!)

ஆதவா
23-12-2006, 05:03 AM
சதுப்பு நிலத்தில் இருந்து எழும் உஷ்ணக் காற்று மழை மேகத்தை சுடுகின்றதோ என்று சதுப்பு நிலம் வருந்துகின்றது...
மழை பெய்து சதுப்பு நிலத்தை மேலும் ஐதாக்குகின்றது (ஐயோ சொதப்புறேனே!!!)

ஹ ஹா..... இன்னும் முயலுங்கள் விடை உங்களுக்கு அருகாமையில்ல்

(காதைக் கொடுங்கள்: ரகசியம்: இதயத் துவாரம் என்பதை சற்று யோசியுங்கல் )

ஷீ-நிசி
23-12-2006, 05:27 AM
ஆதவா, ஷவரில் குளிக்கும் பெண்ணா?

மயூ
23-12-2006, 05:43 AM
ஆதவா, ஷவரில் குளிக்கும் பெண்ணா?
ஆதவா!
இதை மறுக்க முடியாது தானே!!! :D

ஆதவா
23-12-2006, 06:15 AM
ஆதவா!
இதை மறுக்க முடியாது தானே!!! :D

நீ விடும் கண்ணீர் என்னை புண்ணாக்குதே!!!!

இது பொருந்தவில்லை..

ஷீ-நிசி
23-12-2006, 06:19 AM
நானும் நினைத்தேன் நண்பா

ஆதவா
23-12-2006, 09:17 AM
நானும் நினைத்தேன் நண்பா

என்ன ஷீ,,, கிறிஸ்துமஸ் வந்தாகிவிட்டதே,, (ட்ரீட் கிடைக்காதா நண்பார்?)

ஷீ-நிசி
23-12-2006, 12:09 PM
வாங்க வீட்டுக்கு......

விடை.... வெங்காயம் நறுக்கும் பெண்ணா....

ஆதவா
23-12-2006, 01:05 PM
வாங்க வீட்டுக்கு......

விடை.... வெங்காயம் நறுக்கும் பெண்ணா....

ஆஹா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!!!! எப்படின்னு விளக்கமா சொல்லுங்களேன்,,,, தவறெனத் தோன்றுகிறது.

ஷீ-நிசி
23-12-2006, 01:19 PM
என்னிதயத் துவாரங்களின் வழி
விடும் அம்புகள் தைக்கிறதா அன்பே!!?
நீ விடும் கண்ணீர்
என்னை புண்ணாக்குதே!!

யார் இவர்கள்.?

என்னிதய துவாரங்கள் வழி என்பது

வெங்காயத்திலிருந்து

விடும் அம்புகள் என்பது

அதிலிருந்து புறப்படும் அந்த கண்ணீர் வரவழைக்கும் சமாச்சாரம் (என்னனு சரியா தெரியலபா வார்த்தை)

அம்புகள் தைக்கிறதா அன்பே

கண்களை அரிக்கிறதா?

நீ விடும் கண்ணீர்

நறுக்கும்போது வருகின்ற கண்ணீர்

என்னை புண்ணாக்குதே

அவள் நறுக்குவதால் அவைகள் துண்டுகளாகிறதே....

ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியது இவ்வளவுதான் ஆதவா

ஆதவா
23-12-2006, 03:36 PM
அய்யோ அய்யோ..... என்ன அறிவு,,, கலக்கீட்டீங்க.... ரெம்ப மூளை போட்டு கசக்கி......
ஆனா

நீ விடும் கண்ணீர்
நறுக்கும்போது வருகின்ற கண்ணீர்
என்னை புண்ணாக்குதே
அவள் நறுக்குவதால் அவைகள் துண்டுகளாகிறதே....

பொருந்தவில்லை....

இருப்பினும்.... சரியான விடையாக ஏற்றுக்கொள்கிறேன்

ஷீ மற்றும் மற்றவர்களே மாற்று விடை கண்டுபிடியுங்கள்...

lenram80
23-12-2006, 10:44 PM
முதலாவது விடை:
ஒசோன் படலம் & பூமி

என்னிதயத் துவாரங்களின் வழி விடும் அம்புகள் தைக்கிறதா அன்பே!!?
விளக்கம்: ஒசோன் படலத்தின் தூவாரங்களின் வழியே வரும் புற ஊதா கதிர்கள் பூமியை பாதிக்கின்றன
நீ விடும் கண்ணீர் என்னை புண்ணாக்குதே!!
விளக்கம்:பூமி உமிழும் கரியமில வாயு ஒசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது.

இரண்டாவது விடை:
புகை போக்கி & வாயு மண்டலம்

என்னிதயத் துவாரங்களின் வழி விடும் அம்புகள் தைக்கிறதா அன்பே!!?
விளக்கம்: வாகன & தொழிற்சாலை புகை போக்கி தூவாரங்களின் வழியே வரும் கழிவு வாயு, வெளிமண்டலத்தைப் பாதிக்கின்றது.
நீ விடும் கண்ணீர் என்னை புண்ணாக்குதே!!
விளக்கம்: அதனால் பொழியும் அமில மழையால், புகை போக்கி உலோகம் துருபிடித்து, ஓட்டையாகிறது.

- லெனின் -

ஆதவா
24-12-2006, 03:23 AM
லெனின்... பிரமாதம்... மிகச் சரியான விடை.... (இரண்டாவது விடை நான் யோசிக்கவில்லை...)
பரிசு....பரிசு......பரிசு.......................... தோ வந்தர்ரேன்....

நீங்களும் விடுகதை போடலாம்....

ஆதவா
26-12-2006, 04:12 PM
உன் முதல் பார்வையிலே
நான் மயங்கி வீழ்கிறேன்
என் இதழிடும் முத்தத்தில்
நீ உருகி என்னுள்ளே வழிகிறாய்

யார் இவர்கள்?

மதி
27-12-2006, 01:57 AM
ஐஸ்கிரீம்....!

ஆதவா
28-12-2006, 03:37 PM
ஐஸ்கிரீம்....!

நன்றி ராசேசு அவர்களே!! இதற்கு விடை பலவாக இருக்குமென்பதால் மீண்டும் வரிகளை மாற்றி அமைக்கிறேன்

ஆதவா
28-12-2006, 03:39 PM
உன் முதல் பார்வையிலே
நான் மயங்கி வீழ்கிறேன்
என் இதழிடும் முத்தத்தில்
நீ உருகி என்னுள்ளே வழிகிறாய்
உன்னுயிர் என்னுள்ளே தான்
உடலை அனுப்பிவிடுகிறேன் வானுக்கு!!

யார் இவர்கள்?

ஆதவா
28-12-2006, 03:39 PM
உன் முதல் பார்வையிலே
நான் மயங்கி வீழ்கிறேன்
என் இதழிடும் முத்தத்தில்
நீ உருகி என்னுள்ளே வழிகிறாய்
உன்னுயிர் என்னுள்ளே தான்
உடலை அனுப்பிவிடுகிறேன் வானுக்கு!!

யார் இவர்கள்?

lenram80
28-12-2006, 05:13 PM
விடை: பழம் & பூமி

உன் முதல் பார்வையிலே நான் மயங்கி வீழ்கிறேன்
விளக்கம்: பூமியின் மீது, பழம் பழுத்து விழுகிறது.
என் இதழிடும் முத்தத்தில் நீ உருகி என்னுள்ளே வழிகிறாய்
விளக்கம்: பழம் உருகினால் விதை . தரைக்கு உள்ளே விதை செல்கிறது.
உன்னுயிர் என்னுள்ளே தான் உடலை அனுப்பிவிடுகிறேன் வானுக்கு!!
விளக்கம்: விதை உள்ளே. தாவரம் வான் நோக்கி வளர்கிறது.

ஆதவா
28-12-2006, 11:19 PM

நல்ல அருமையான யோஜனைதான் லெனின்
ஆனால்
என் இதழிடும் முத்தத்தில் என்ற வார்தை பொருந்தவில்லையே

(வாழ்த்துக்கள் லெனின்.. நன்றாக யோசனை செய்கிறீர்கள்.... என் கடைசி கேள்விக்கு சரியான பதில் சொன்னீர்கள்...)

மயூ
29-12-2006, 05:59 AM
உன் முதல் பார்வையிலே
நான் மயங்கி வீழ்கிறேன்
என் இதழிடும் முத்தத்தில்
நீ உருகி என்னுள்ளே வழிகிறாய்
உன்னுயிர் என்னுள்ளே தான்
உடலை அனுப்பிவிடுகிறேன் வானுக்கு!!

யார் இவர்கள்?
மெழுகுதிரியும் நெருப்பும்

ஆதவா
29-12-2006, 09:30 AM
மெழுகுதிரியும் நெருப்பும்

மயூரேசன் அவர்களே... சற்று விளக்கமாகச் சொன்னால் செளகரியம்...

ஆதவா
04-01-2007, 08:43 AM
விடை யாரும் சொல்லாததாலே நானே சொல்லுகிறேன்..

மனிதன் , சிகரெட் (தமிழில் சுருட்டு?)

ஆதவா
04-01-2007, 08:45 AM
நீ அமிர்தம்
நான் சேறு

விடையைக் கண்டுபிடியுங்கோஓ!!!!

விடை யாரும் சொல்லாட்டி. 3 நாட்களில் என்னிடமிருந்தே பதில் வரும்

அறிஞர்
04-01-2007, 12:58 PM
விடை யாரும் சொல்லாததாலே நானே சொல்லுகிறேன்..

மனிதன் , சிகரெட் (தமிழில் சுருட்டு?)
மெழுகு, நெருப்பும் சரி போல உள்ளதே...

அருமையான விடுகதைகள் தொடருங்கள்..

அறிஞர்
04-01-2007, 01:00 PM
நீ அமிர்தம்
நான் சேறு

விடையைக் கண்டுபிடியுங்கோஓ!!!!

விடை யாரும் சொல்லாட்டி. 3 நாட்களில் என்னிடமிருந்தே பதில் வரும் இதுக்கு நிறைய சொல்லலாமே.... தேன், தேன்கூடு.

ஷீ-நிசி
04-01-2007, 01:28 PM
விடை யாரும் சொல்லாததாலே நானே சொல்லுகிறேன்..

மனிதன் , சிகரெட் (தமிழில் சுருட்டு?)

அருமை ஆதவா

ஆதவா
04-01-2007, 03:34 PM
இதுக்கு நிறைய சொல்லலாமே.... தேன், தேன்கூடு.

ஹி ஹி ஹி:D :D :D

அறிஞர்
04-01-2007, 03:43 PM
ஹி ஹி ஹி:D :D :D
இது பதிலா.. ஆதவா... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
04-01-2007, 06:21 PM
இது பதிலா.. ஆதவா... :rolleyes: :rolleyes: :rolleyes:

உங்கள் பதிலும் சரிதான்... என் பதில்

நீ அமிர்தம்
நான் சேறு

ஹி ஹி ஹி...

ஆதவா
06-01-2007, 04:06 PM
சத்தமிட்டே
முத்தமிட்ட என்னை
உன் கூட்டில் சிறை வைத்தாய்.
என் கைகளின் வழி அமுதூட்ட
நீ விழித்திருக்கிறாய் நிதமும்.

யார் நாங்கள்?

ஆதவா
11-01-2007, 09:28 AM
என்னப்பா!!1 யாரும் இங்கே வரலியா?

அறிஞர்
11-01-2007, 01:06 PM
என்னப்பா!!1 யாரும் இங்கே வரலியா?
ஷீ-நிசி என்ன ஆனாரு.. வாங்க..
பரம்ஸ் பதில் தாங்க...

ஓவியா
14-01-2007, 04:59 PM
ஆதவா இதற்க்கு முன் கேட்ட அனைத்து விடுகதைக்கும் எனக்கு பதில் தெரியும், ஆனல் இதற்க்கு மட்டும் சிறிது அவகாசம் தேவை.. ஜூட்.....வாணாம்

நீங்களே பதிலை போடுங்க ஆபீசர்

ஆதவா
14-01-2007, 05:46 PM
ஆதவா இதற்க்கு முன் கேட்ட அனைத்து விடுகதைக்கும் எனக்கு பதில் தெரியும், ஆனல் இதற்க்கு மட்டும் சிறிது அவகாசம் தேவை.. ஜூட்.....வாணாம்

நீங்களே பதிலை போடுங்க ஆபீசர்

யாரும் பதில் சொல்லாததினாலே நானே பதில் எழுதுகிறேன்.. ( ஓவி வேண்டுகோளுக்கு இணங்க)

சத்தமிட்டே
முத்தமிட்ட என்னை
உன் கூட்டில் சிறை வைத்தாய்.
என் கைகளின் வழி அமுதூட்ட
நீ விழித்திருக்கிறாய் நிதமும்.

சத்தமிட்டு முத்தமிடும் - ஹிருதயம்...
கூடு - நெஞ்செலும்பு..
கைகளின் வழி அமுது - ஆரிக்கிள் வெண்டிரிக்கிள் மற்றும் அமுதானது இரத்தம்
நிதமும் விழித்திருப்பது - இதயத்தால்தானே!!!

ஓவியா
14-01-2007, 05:52 PM
கேள்வியும் நானே பதிலும் நானேனு பாட தோன்றுது..:D

ஒரு டாக்டர்கூட இப்படியெல்லாம் சிந்திப்பாறானு தெரியவில்லை.....நான் எம்பதில் அப்பீட்டு :D

திரியை தொடரவும் ஆதவா

மீண்டும் சின்ன ராயருக்கு ஒரு வாழ்த்துக்கள்

ஆதவா
14-01-2007, 06:03 PM
கேள்வியும் நானே பதிலும் நானேனு பாட தோன்றுது..:D

ஒரு டாக்டர்கூட இப்படியெல்லாம் சிந்திப்பாறானு தெரியவில்லை.....நான் எம்பதில் அப்பீட்டு :D

திரியை தொடரவும் ஆதவா

மீண்டும் சின்ன ராயருக்கு ஒரு வாழ்த்துக்கள்

நன்றி..............................................:)

டாக்டருக்கு இதெல்லாம் தெரிந்தால் என்னாவது?????/

ஆதவா
19-01-2007, 04:11 PM
வலைஞனுக்குப் புகழிடம் கவிக்
கலைஞனுக்குத் தெரிவிடம்.
விலைஞனுக்கு தெருக்கடை- பல
கொலைஞனும் வருங்கடை.

எவ்விடம்
இவ்விடம்?
எக்கடை யிக்கடை?

poo
20-01-2007, 03:46 AM
கடலா? காதலா?!!

(ஹிஹி.. விளம்பர பாதிப்பு..)

அறிஞர்
20-01-2007, 03:55 PM
வலைஞனுக்குப் புகழிடம் கவிக்
கலைஞனுக்குத் தெரிவிடம்.
விலைஞனுக்கு தெருக்கடை- பல
கொலைஞனும் வருங்கடை.

எவ்விடம்
இவ்விடம்?
எக்கடை யிக்கடை?
கொஞ்சம் யோசிக்கனும் போல....
வலைத்தளம், கொலைத்தளம் பற்றி பேசுகிறீரோ...

ஆதவா
20-01-2007, 04:39 PM
யோசியுங்கள்!!!!! மிக எளிதானதுதான்......

Narathar
21-01-2007, 01:14 AM
கொஞ்சம் யோசிக்கனும் போல....
வலைத்தளம், கொலைத்தளம் பற்றி பேசுகிறீரோ...

நம்ம மன்றத்தைத்தான் இப்படி சொல்றாரோ? நாராயணா!!!!!!

ஆதவா
21-01-2007, 03:48 AM
நம்ம மன்றத்தைத்தான் இப்படி சொல்றாரோ? நாராயணா!!!!!!

நாராயணா!!! இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்................ உங்கள் கண்களுக்கு அருகில் விடை........

farhan mohamed
21-01-2007, 11:17 AM
நானும் ஒன்று கேட்கிறேன்.
நீ வருகிறாய் போகிறாய் எனக்காக
நீ வரும் வரை காத்திருகிறார் பெரியார்
நான் இறந்தேன் உனக்காக
நீ இறக்கத் தயாரா? எனக்காக

நான் யார்??

ஷீ-நிசி
21-01-2007, 11:48 AM
வலைஞனுக்குப் புகழிடம் கவிக்
கலைஞனுக்குத் தெரிவிடம்.
விலைஞனுக்கு தெருக்கடை- பல
கொலைஞனும் வருங்கடை.

எவ்விடம்
இவ்விடம்?
எக்கடை யிக்கடை?

இணையதளமா???

farhan mohamed
21-01-2007, 11:54 AM
இல்லயே கொஞ்சம் முயலுங்கள்.

ஓவியா
21-01-2007, 12:20 PM
ஆதவா,
எனக்கும் கடல், மீன் விற்க்கும் சந்தைனு தான் தோனுது...

................................................................................................................................

நாராயணா!!! இன்னும் கொஞ்சம் யோசியுங்கள்................ உங்கள் கண்களுக்கு அருகில் விடை........

என் கண்களுக்கு அருகில் கன்னமும் மூக்கும் தானுங்க இருக்கு :cool:

ஆதவா
21-01-2007, 12:34 PM
நானும் ஒன்று கேட்கிறேன்.
நீ வருகிறாய் போகிறாய் எனக்காக
நீ வரும் வரை காத்திருகிறார் பெரியார்
நான் இறந்தேன் உனக்காக
நீ இறக்கத் தயாரா? எனக்காக

நான் யார்??

நண்பரே யோசிக்கிறேன்....

ஆதவா
21-01-2007, 12:35 PM
இணையதளமா???

கரீட்டு பா!!!

ஆதவா
21-01-2007, 12:36 PM
ஆதவா,
எனக்கும் கடல், மீன் விற்க்கும் சந்தைனு தான் தோனுது...

................................................................................................................................

என் கண்களுக்கு அருகில் கன்னமும் மூக்கும் தானுங்க இருக்கு :cool:

உங்க குசும்பு இன்னும் போகல பாருங்க,,,,,,,,,,,

ஓவியா
21-01-2007, 12:46 PM
உங்க குசும்பு இன்னும் போகல பாருங்க,,,,,,,,,,,

:D :D :D

இணையதளமா?

தம்பீ,
தயவு செய்து விடுகதையை கொஞ்சம் விளக்க முடியுமா?

ஆதவா
21-01-2007, 01:15 PM
வலைஞனுக்குப் புகழிடம் கவிக்
கலைஞனுக்குத் தெரிவிடம்.
விலைஞனுக்கு தெருக்கடை- பல
கொலைஞனும் வருங்கடை.

வலைஞன் - இணையத்தில் வலையமைப்பவன்.. (administrator, or programmer. ) புகழ் சேர்க்குமிடம்
கவிக் கலைஞன் - ( Poet writers and music, cinema, drama all others ) தெரிந்த இடம்
விலைஞன் - e-business செய்பவனுக்கு இது தெருக்கடை
கொலைஞன் - வைரஸ் பரப்புபவன் வரும் கடை...

ஷீ-நிசி
21-01-2007, 01:18 PM
கரீட்டு பா!!!

பரவாயில்லையே நான் கூட யோசிக்கிறேனே.. அடுத்தது??

ஓவியா
21-01-2007, 01:18 PM
வலைஞனுக்குப் புகழிடம் கவிக்
கலைஞனுக்குத் தெரிவிடம்.
விலைஞனுக்கு தெருக்கடை- பல
கொலைஞனும் வருங்கடை.

வலைஞன் - இணையத்தில் வலையமைப்பவன்.. (administrator, or programmer. ) புகழ் சேர்க்குமிடம்
கவிக் கலைஞன் - ( Poet writers and music, cinema, drama all others ) தெரிந்த இடம்
விலைஞன் - e-business செய்பவனுக்கு இது தெருக்கடை
கொலைஞன் - வைரஸ் பரப்புபவன் வரும் கடை...

அடடா

ரொம்ப திறமையான புள்ளாதான்பா நீங்கா

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

ஆதவா
22-01-2007, 05:51 PM
ஈனமா என்றாருயிர் கேட்டாள் இல்லை
மானமா என்றவள் கேட்டாள் இல்லை
ஞானமா என்றே கேட்டாள் அட! இல்லை
ஊனமா சொல்லென்றாள் என்சொல்வேன்?
அவள் இழந்த அரூபத்தை?

ஆதவா
25-01-2007, 04:25 PM
ஏம்பா!!! யாராவது இங்கன தலைய காட்டுங்கப்பா!!!

ஷீ-நிசி
25-01-2007, 04:53 PM
ஈனமா என்றாருயிர் கேட்டாள் இல்லை
மானமா என்றவள் கேட்டாள் இல்லை
ஞானமா என்றே கேட்டாள் அட! இல்லை
ஊனமா சொல்லென்றாள் என்சொல்வேன்?
அவள் இழந்த அரூபத்தை?

யோசிக்கவே முடியலயே ஆதவா? ஒரு துப்பும் கிடைக்கல....

ஆதவா
25-01-2007, 04:57 PM
யோசிக்கவே முடியலயே ஆதவா? ஒரு துப்பும் கிடைக்கல....

அட ரெம்ப ஈஸிங்க... விடை கேள்வியிலே ஒளிஞ்சுகிட்டு இருக்குங்க,,,,,

ஓவியா
26-01-2007, 12:04 AM
எனக்கும் ஒன்னுமே தெரியலங்க...கவிதை புரியவும் இல்லைங்க

farhan mohamed
26-01-2007, 04:04 AM
புரியலயே ஆதவா? ரொம்ப யோசிகனும்போல..

ஆதவா
09-02-2007, 06:30 PM
அட கொஞ்ச நாள் கவனிக்காம போய்ட்டேன்... அதுக்குள்ள நம்ம திரியை துலாவ வேண்டியதாப் போச்சுதே!!

ஈனமா என்றாருயிர் கேட்டாள் இல்லை
மானமா என்றவள் கேட்டாள் இல்லை
ஞானமா என்றே கேட்டாள் அட! இல்லை
ஊனமா சொல்லென்றாள் என்சொல்வேன்?
அவள் இழந்த அரூபத்தை?

அட.... காதலுங்க.... அவள் இழந்தது மனசு...............

காதல் (மனசை இழத்தல்) என்ன இழிவா என்று கேட்டாள்
அல்லது மானம்தானா என்று கேட்டாள்

காதல் என்ன ஞானமா என்று கேட்டாள் அல்லது இழந்துவிட்டதால் ஊனமா என்று கேட்டாள்.... எதுவுமில்லை...............
என்னதான் சொல்வது??? அவள் இழந்த மனதை.....
அரூபம் - உருவமின்மை........

ஆதவா
09-02-2007, 06:38 PM
பெட்டகத்தில் பொதிந்து கிடக்கிறது
மாபெரும் உலகம்.
பெட்டைகளை மயக்க வைக்க
மாபெரும் கலகம்....
கட்டமாகவே காட்சியளிக்கும்
ஆறாம் கைவிரல்
திட்டமாகவே நம்மை பேச வைக்கும்
தொழிலுக்கான தோழன்.....

யாரிவன்?? விடை எளிது.. கண்டுபியுங்கோ!!

thoorigai
10-02-2007, 07:00 AM
பேனாவா ஆதவா?

sham
10-02-2007, 07:09 AM
"லிப் ஸ்டிக்"??????????????

ஆதவா
10-02-2007, 08:56 AM
"லிப் ஸ்டிக்"??????????????

பேனாவா ஆதவா?

இரண்டுமில்லை நண்பர்களே!!! மீண்டும் கண்டுபிடியுங்கள்..

ஓவியா
10-02-2007, 12:36 PM
நானும் எழுகோல் என்றுதான் நினைத்தேன்!!!

மைக் 'ஆ ஆதவா?

ஆதவா
10-02-2007, 12:38 PM
நானும் எழுகோல் என்றுதான் நினைத்தேன்!!!

மைக் 'ஆ ஆதவா?

இல்லீங்கோ! கடைசி வரியில தான் உதை வெச்சுருக்கேன்.. (உதை- பஞ்ச்)

lenram80
17-02-2007, 12:15 AM
கைக் கடிகாரம் இல்லாட்டி செல்ஃபோன்

ஆதவா
17-02-2007, 12:53 AM
கைக் கடிகாரம் இல்லாட்டி செல்ஃபோன்
சரியே! பாராட்டுக்கள். லெனின்.

அமரன்
17-02-2007, 07:51 AM
அருமையான முயற்சி ஆதவா. அடுத்த கவிப்புதிர் என்னவோ?

ஆதவா
08-04-2007, 08:00 PM
நீண்ட நாட்களுக்குப் பிறகு இத்திரி திறக்கப்பட்டிருக்கிறது... நண்பர்க மூளையை கொஞ்சம் கசக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடை சற்று எளிதாகவே இருக்கும்....

சுவையழகி நீ வடிவழகி நீ
கிடைக்கப்பெறா புதையல் நீ!
கண்கள் கண்ட இடத்தில்
நிறைந்திருக்கும் அரூபம் நீ!
நீயின்றி நானில்லை
பொருளில்லை
உலகில்லை
நீயின்றி உலகொண்டோ பார் வானம்..

யார் நீ?

மனோஜ்
08-04-2007, 08:10 PM
இந்த திரி என் கண்ணில படாம எப்படி இருந்தது
ஆதவா அருமை கவிவிடுகதை புலியா:thumbsup:

நீர் சரியா ஆதவா

விகடன்
09-04-2007, 08:24 AM
ஜாவா இன்னும் இந்தத்திரியை பார்க்கவே இல்லையாம்....

ஜூட்....:auto003:

அன்புரசிகன்
09-04-2007, 09:06 AM
நீண்ட நாட்களுக்குப் பிறகு இத்திரி திறக்கப்பட்டிருக்கிறது... நண்பர்க மூளையை கொஞ்சம் கசக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடை சற்று எளிதாகவே இருக்கும்....

சுவையழகி நீ வடிவழகி நீ
கிடைக்கப்பெறா புதையல் நீ!
கண்கள் கண்ட இடத்தில்
நிறைந்திருக்கும் அரூபம் நீ!
நீயின்றி நானில்லை
பொருளில்லை
உலகில்லை
நீயின்றி உலகொண்டோ பார் வானம்..

யார் நீ?

நீர்??? சரியா?

ஆதவா
09-04-2007, 12:38 PM
விடை என்ன என்று பிறகு சொல்கிறேன் நண்பர்களே! மற்றவர்களும் முயலட்ட்டும்

ஓவியா
09-04-2007, 12:45 PM
தண்ணீர்

விகடன்
09-04-2007, 02:25 PM
காற்று.

ஓவியா
09-04-2007, 02:46 PM
காற்று.

சுவையழகி நீ வடிவழகி நீ

இது கற்றுக்கு சரிபட்டு வருமா?????

காற்று என்ன சுவை???? என்ன வடிவம்????

ஷீ-நிசி
09-04-2007, 04:26 PM
தண்ணீர் என்பதே சரி என்று தோன்றுகிறது....

விகடன்
09-04-2007, 04:34 PM
சுவையழகி நீ வடிவழகி நீ

இது கற்றுக்கு சரிபட்டு வருமா?????

காற்று என்ன சுவை???? என்ன வடிவம்????

வடிவம் - எந்த வடிவத்தையும் எடுக்கும் வல்லமை உண்டு

சுவை.... சிந்திக்க வேண்டிய விடயந்தான்.:icon_wacko:

விகடன்
09-04-2007, 04:37 PM
காற்றாக வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கிறது..

காற்றுத்தான்...

என்ன சொல்லுறீங்க ஆதவா..

அன்புரசிகன்
10-04-2007, 11:29 AM
காற்றாக வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கிறது..

காற்றுத்தான்...

என்ன சொல்லுறீங்க ஆதவா..

நான் ஏற்கனவே நீர் என்று கூறியிருந்தேன். இப்பொழுது சிந்திக்கத்தான் தோன்றுகிறது. காரணம் நீருக்கும் சுவை இல்லை. காற்றுக்கும் கூட. இரண்டுமே தவறாக இருக்கலாம். ஆதவா.. ஏதாச்சும் உதவித்துப்பு கொடுங்களேன்.

ஆதவா
10-04-2007, 01:28 PM
நன்றி நண்பர்களே!

நம் மன்றத்தின் வளர்ச்சி கண்டு உசுப்பி விட்ட திரி தான் இது... விடையளிக்க வந்தவர்கள் கண்டு மனம் நெகிழ்ந்தது.

முன்பே சொன்னதுபோல விடையெளிதுதான் என்பது.
பெரும்பான்மையோர் சரியான விடை சொல்லி இருக்கிறார்கள்.. நீரின்றி அமையாது உலகு.....

எல்லாருக்கும் என் அன்பு கனிந்த பாராட்டுக்கள்....

அடுத்த விடுகவிதை நோக்கி......

அன்புரசிகன்
10-04-2007, 01:30 PM
நீரின்றி அமையாது உலகு...
..

அப்போ நான் கூறியது சரி. :icon_clap:

சக்தி
03-06-2007, 05:47 AM
மறுபடியும் இத்திரி திறக்கபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

சுட்டிபையன்
03-06-2007, 06:09 AM
யாரப்பா பூட்டி வச்சிருக்கிறது?

ஓவியன்
03-06-2007, 06:19 AM
யாரப்பா பூட்டி வச்சிருக்கிறது?

ஆமா சுட்டி!

வர வர என்ன நடக்குது என்றே தெரியலைப்பா!!

சுட்டிபையன்
03-06-2007, 06:25 AM
ஆமா சுட்டி!

வர வர என்ன நடக்குது என்றே தெரியலைப்பா!!

ஆமா ஓவியரே

ஆதவா
04-06-2007, 07:39 AM
நண்பர்களே! மீண்டும் இங்கே வருகிறேன்.. கவிதை விடுகதைகளோடு.. நமக்கு கைவந்த கலையாச்சே!! மன்றத்தில் சில வேலைகள் இருக்கிறது. முடிந்ததும் வந்துவிடுகிறேன்.. பொறுக்க..

ஷீ-நிசி
04-06-2007, 07:44 AM
வாங்க! வாங்க!

மனோஜ்
04-06-2007, 07:55 AM
ஆமங்க ஆமாங்க

ஆதவா
18-06-2007, 05:22 PM
எனது மேனிதொட்டு
கரையப்படுகிறாய்
மின்னும் என் உடலால்
நிறம் மாறி
குணம் மாறி
முழுவதுமாய் மாற்றி அனுப்புகிறேன்

நான் ஒரு ஆசிரிய*ன்
உன்னை எந்த*வ*கையிலும்
வ*டிப்ப*த*ற்குத் த*குந்த*வ*ன்

நானின்றி நீயேது?

யார் இவ*ர்க*ள்...