PDA

View Full Version : தமிழ் மன்றம்



ஷீ-நிசி
19-12-2006, 05:30 AM
உயிரற்ற பக்கங்கள்
பலவும் பார்த்துவிட்டேன்
இணையதளத்தில் -இன்று

உயிருள்ள உணர்வுள்ள
ஓர்பக்கம் சேர்த்துவிட்டேன் -என்
இதயதளத்தில்!!

சங்ககால புலவர்கள்
வளர்த்தனர் அன்று
தமிழ்ச் சங்கம்!

எங்கள் கால அறிஞர்கள்
வளர்க்கின்றனர் இன்று
தமிழ் மன்றம்!

ஊக்கப்படுத்ததும்
வார்த்தைகள் பலவுண்டு
தமிழில் ஓராயிரம்,

அவைகளையெல்லாம்
தேடித்தேடி ஊக்கப்படுத்தும்
நண்பர்களே!
உங்களுக்கு நிகர்வுண்டா
யாராகிலும்!

இரண்டிற்கும் தெரியும்
தமிழ் -ஆனால்
இரண்டும் பேசாது
தமிழில்!

அரைகுறையில்....
ஆங்கிலம் பேசும்
அரைகுறைகள்!!

நமக்கெல்லாம்
தமிழ்ப்பற்றென்பது,
உதட்டளவில் கூட இல்லை!

உதட்டளவிலாவது
இருக்கவேண்டுமென்றால்
தமிழரிடம் தமிழில்
பேசுவோம்!

ஆங்கிலம் கோலோச்சும்
இணையதளத்தில்,
வியக்கவைக்கிறது
தமிழின் அசுரவளர்ச்சி...

தமிழ் மன்ற நிர்வாகிகள்.....
நீங்கள் எல்லாம்
தமிழ் என்ற தாயின் தியாகிகள்!!!!

அன்புடன்

ஷீ-நிசி

ஆதவா
19-12-2006, 05:44 AM
ஷீ.. எப்படி பா? இதெல்லாம் ஷீ னால மட்டுந்தான் முடியும்... அருமை ஷீ... தொடரட்டும் வெற்றி நடை....

meera
19-12-2006, 06:06 AM
ஷீ,

அருமை அருமை

தமிழ் மன்றத்துக்கு அழகா ஒரு கவிதை.

வளர்க தமிழ்,வாழ்க உங்கள் தொண்டு.

pradeepkt
19-12-2006, 06:16 AM
ம்ம்... வந்தவுடன் மன்றத்துக்கு வாழ்த்துப்பா!
நன்றாக வாழ்த்து(ங்கப்)பா!
நீங்களும் வாழ்க! தமிழும் வாழ்க! மன்றமும் வளர்க!

பென்ஸ்
19-12-2006, 06:36 AM
ஷீ,
முதலில் மன்றத்தில் உங்களை வரவேற்க்கிறென்....
நண்பர்கள் ஒரு கூட்டமாக வந்திருப்பதை போல் தோன்றுகிறதே..!!!!
வாழ்த்துபா....
நன்று.... தொடருங்கள்...

ஷீ-நிசி
19-12-2006, 06:41 AM
ஆதவா, மீரா, பெஞ்சமின் & பிரதீப்

அனைவருக்கும் நன்றி

அன்புடன்
ஷீ-நிசி

aren
19-12-2006, 06:53 AM
அருமை ஷீ-நிசி. தொடருங்கள்.

ஷீ-நிசி
19-12-2006, 12:54 PM
நன்றி Aren

அறிஞர்
19-12-2006, 01:12 PM
வாழ்த்து பா பிரமாதம்.....

தமிழருடன் தமிழில் உறவாடவேண்டும்.

தமிழரின் திறமைகளை அனைவருக்கும் காட்டவேண்டும்.

படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும்...

என பல குறிக்கோள்களுடன் தொடங்கப்பட்டது மன்றம்.

ஷீ-நிசி
19-12-2006, 01:24 PM
நன்றி அறிஞரே

நம்பிகோபாலன்
19-12-2006, 03:02 PM
நீங்களும் வாழ்க! தமிழும் வாழ்க! மன்றமும் வளர்க!!!!!!!!!!!!!!!!!!

ஷீ-நிசி
19-12-2006, 03:53 PM
வாழ்த்தின நீங்களும் வாழ்க

இளசு
19-12-2006, 11:02 PM
எண்ண அதிர்வுகள்
ஒன்றாய் இருக்கும்
உங்களைப் போன்றவர்களால்
இன்னும் வளரட்டும் நம் மன்றம்..

அழகிய வாழ்த்துக் கவிதைக்குப் பாராட்டுகள் ஷீ...!

மயூ
20-12-2006, 02:06 AM
எங்கள் தமிழ் மன்றத்திற்கு
ஒரு தமிழ் கவியை சமர்ப்பித்த உங்களுக்கு நன்றிகள்.

ஷீ-நிசி
20-12-2006, 03:02 AM
நன்றி... நம் தமிழ் மன்றத்திற்கு...... வழங்கினேன்

gandhi
20-12-2006, 07:18 AM
தமிழ் மன்றதுக்கு ஒரு தமிழாரம் கொடுத்தீர்கள்.......அருமை


அன்புடன்,
காந்தி.

ஷீ-நிசி
20-12-2006, 07:19 AM
நன்றி காந்தி... உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கிறேன்

Mano.G.
20-12-2006, 08:09 AM
ஷீ தமிழ் மன்றத்துக்கு
வழங்கிய வாழ்த்துப்பா அருமை
உங்களது கவிதைகளையும் படைப்புக்களையும்
மேலும் எதிர்பார்க்கிரோம்

நன்றியுடன் வாழ்த்துக்கள்

மனோ.ஜி

ஷீ-நிசி
20-12-2006, 08:11 AM
நன்றி மனோ! சில கவிதைகளை மன்றத்தில் பதித்துள்ளேன். படித்து உங்கள் விமர்சனங்களை அளியுங்கள்

மதி
20-12-2006, 08:29 AM
மன்றத்திற்கோர் வாழ்த்துப்பா பாடிய ஷீ..
நீர் வாழிய பல்லாண்டு..

வாழ்த்துக்கள்..!

ஷீ-நிசி
20-12-2006, 08:33 AM
உளம் கனிந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திரு.இராஜேஷ் குமார் அவர்களே!

பிச்சி
24-12-2006, 12:16 PM
நல்ல கவிதை. தமிழ்மன்றத்துக்கு, ஷி நீங்க கிரேட்

ஷீ-நிசி
24-12-2006, 12:31 PM
நன்றி பிச்சி

sriram
28-12-2006, 04:08 PM
தமிழே நீ வாழ்க.
தமிழ் நிலவே நீ வாழ்க.
தமிழ் காற்றே நீ தென்றலாய் தாலாட்டு.

ஷீ-நிசி
01-01-2007, 07:13 AM
தமிழனே நீயும் வாழ்க

Mathu
08-01-2007, 06:18 AM
ஆகா இன்னும் ஒரு கவிஞர்...!
வளரட்டும் உங்களால் தமிழும் தமிழ் மன்றமும்.

மதுரகன்
08-01-2007, 04:19 PM
பாரதி வரிகளிலிருந்து....
மெல்லத்தமிழினிச்சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதையுரைத்தான்.. ஆ... இந்த வசையெமக்கெய்திடலாமோ
சென்யிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

ஷீ-நிசி
10-01-2007, 10:02 AM
ஆகா இன்னும் ஒரு கவிஞர்...!
வளரட்டும் உங்களால் தமிழும் தமிழ் மன்றமும்.

வளரட்டும் நம்மால்

ஷீ-நிசி
10-01-2007, 10:06 AM
பாரதி வரிகளிலிருந்து....
மெல்லத்தமிழினிச்சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதையுரைத்தான்.. ஆ... இந்த வசையெமக்கெய்திடலாமோ
சென்யிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

அருமையான வரிகள்

Narathar
15-01-2007, 10:53 AM
ஷீ நி சி........................ ( ஊர் என்ன சைனா பக்கமா? )

அருமையான வரிகள் அன்பரே...................

நீங்கள் பரவாயில்லை தப்புத்தப்பாகவாது தமிழ் பேசும் சென்னையில் இருக்கின்றீர்கள்.......

நாங்கள்?

தமிழ் வார்த்தைகளே கேற்க முடியாத ஒரு தனித்தீவில் இருக்கின்றோம்.

எமக்கெல்லாம் தமிழ் மன்றம் தான் ஆறுதலே.......
கிட்டத்தட்ட தாய்மடி மாதிரி

ஷீ-நிசி
16-01-2007, 01:54 PM
ஷீ நி சி........................ ( ஊர் என்ன சைனா பக்கமா? )

அருமையான வரிகள் அன்பரே...................

நீங்கள் பரவாயில்லை தப்புத்தப்பாகவாது தமிழ் பேசும் சென்னையில் இருக்கின்றீர்கள்.......

நாங்கள்?

தமிழ் வார்த்தைகளே கேற்க முடியாத ஒரு தனித்தீவில் இருக்கின்றோம்.

எமக்கெல்லாம் தமிழ் மன்றம் தான் ஆறுதலே.......
கிட்டத்தட்ட தாய்மடி மாதிரி

நான் சென்னையில் தான் இருக்கிறேன், அது சும்மா கவிதைக்காக.. என் பெயர் அற்புதராஜ்...

நீங்கள் தனித்தீவில் இருக்கலாம்... ஆனால் உங்களுக்காக தமிழ் மன்றத் தீவிருக்கிறது.. இதுதான் உங்களுக்கு தீர்வாகவுமிருக்கிறது...

அறிஞர்
16-01-2007, 02:14 PM
நான் சென்னையில் தான் இருக்கிறேன், அது சும்மா கவிதைக்காக.. என் பெயர் அற்புதராஜ்...

நீங்கள் தனித்தீவில் இருக்கலாம்... ஆனால் உங்களுக்காக தமிழ் மன்றத் தீவிருக்கிறது.. இதுதான் உங்களுக்கு தீர்வாகவுமிருக்கிறது...
நாரதர் ஆரம்ப காலத்து மன்றத்து நண்பர்.... அருமையானவர்....

தங்களின் கவிதைகள் அவரை மீண்டும் ஈர்த்துள்ளது.

ஷீ-நிசி
16-01-2007, 02:16 PM
நன்றி அறிஞரே

மனோஜ்
18-01-2007, 12:53 PM
அறுமை ஷீ நிசி அவர்களே
வளறட்டும் உங்கள் தமிழ் தொன்டு

ஷீ-நிசி
18-01-2007, 01:37 PM
நன்றி நண்பரே!

Narathar
18-01-2007, 05:39 PM
நாரதர் ஆரம்ப காலத்து மன்றத்து நண்பர்.... அருமையானவர்....

தங்களின் கவிதைகள் அவரை மீண்டும் ஈர்த்துள்ளது.

நன்றி அறிஞ்ரே உங்கள் அறிமுகத்துக்கு..................
ஆனால் இப்போது இங்கே பெரிய பெரிய ஜாம்பவான்களை புதிதாய் காண்கின்றேன்

ஓவியன்
06-05-2007, 06:43 AM
தமிழ் மன்ற நிர்வாகிகள்.....
நீங்கள் எல்லாம்
தமிழ் என்ற தாயின் தியாகிகள்!!!!


இன்று தானே பார்தேன் ஷீ!

நச்சென்ற முத்தாய்ப்பு கவிக்கு வலுச்சேர்கின்றது.