PDA

View Full Version : ஷீ-நிசி கவிதைகள்Pages : [1] 2

ஷீ-நிசி
18-12-2006, 09:30 AM
ஆசையாகத்தானிருக்கிறது!!!

ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகளை எல்லாம்
உன்னிடம் சொல்லிவிட
ஆசையாகத்தானிருக்கிறது!

விடியல் தலை காட்டும் வரை
மடியில் தலை சாய்த்துக்கொண்டு;
நொடியும் இடைவெளியின்றி,
பேசிக்கொண்டிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

மங்கிய நிலவொளியில்
பொங்கிய சாதத்தை
இங்கிதம் பார்க்காமல்
ஊட்டிவிட;
ஆசையாகத்தானிருக்கிறது!

கண்ணிறம் கருப்பல்லவா!
செந்நிறம் உதடல்லவா!!
பொன்னிறம் மேனியல்லவா!!!
உன்னைப் பாடிவிட
ஆசையாகத்தானிருக்கிறது!

சோர்வோடு நீ இருக்கும்போது
மார்போது அனைத்துக்கொண்டு;
உயிரோடு கலந்த உன்னைப்
பரிவொடு விசாரிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

பின்னால் உன்னை அமரவைத்து
முன்னால் போகும் வாகனங்களை;
என்னால் முடிந்த மட்டும்
விரட்டிப் பிடிக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

குளித்து விட்டு நீ
தலை துவட்ட;
தெளித்து விழும்
அந்த துளியில்;
சிலிர்த்துக்கொண்டு நான் எழுந்து,
அப்படியே உன்னைக் கட்டிக்கொள்ள
ஆசையாகத்தானிருக்கிறது!

காதருகில் வைத்த அலாரம்
12 மணி இரவில் கதற;
அலற லோடு நீ எழும்
அந்த தருணத்தில்
பிறந்த நாள் வாழ்த்துக் கூறி,
முத்தமிட ஆசையாகத்தானிருக்கிறது!

நகத்தை நீ கடிக்கும்போது
நானும் அப்படியே செய்து;
முகத்தை நீ திருப்பும்போது
நானும் அப்படியே செய்து;
கோபத்தில் இருக்கும் உன்னை
மேலும் கோபமூட்ட
ஆசையாகத்தானிருக்கிறது!

நீ சிரிக்கின்றபோது
உனக்கு பின்பாகவும்;
நீ அழு கின்றபோது
உனக்கு முன்பாகவும்;
நீ நடக்கின்றபோது
உனக்கு பக்கமாகவும்;
என்றுமே காவலனாயிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

ஆசையாகத்தானிருக்கிறது!
ஆசைகள் எல்லாம்
உன்னுடன் நடந்துவிட,
ஆசையாகத்தானிருக்கிறது!

ஷீ-நிசி

ஆதவா
18-12-2006, 09:34 AM
என்னோட பதில் இல்லாமயா ஷீ... அருமை அருமை... முதல் கவிதையிலேயே அசத்திட்டீங்க....

நீ சிரிக்கின்றபோது
உனக்கு பின்பாகவும்;
நீ அழு கின்றபோது
உனக்கு முன்பாகவும்;
நீ நடக்கின்றபோது
உனக்கு பக்கமாகவும்;
என்றுமே காவலனாயிருக்க
ஆசையாகத்தானிருக்கிறது!

அருமையான வரிகள்...

leomohan
18-12-2006, 09:42 AM
ரொம்ப தான் ஆசை அற்புதராஜ். ஆசைப்படுங்க தப்பில்லை. நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா.................கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படித்திலிருந்து.

மயூ
18-12-2006, 10:21 AM
இளைஞர்களே கற்பனை காணுங்கள் என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கும் போது என்ன கவலை கற்பனை காணுங்கள்...:)
கற்பனை தானே இலக்கியங்களில் ஊற்று!! B)

ஷீ-நிசி
18-12-2006, 02:09 PM
போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!

சோந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!

மறுகணமே
கஞ்சப் பிரபு என
புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!

கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!

நாம் இழைக்கும்
தவறுகளிலே
கதைப் பேசி
பிழைக்கும் கூட்டங்கள்

இந்த
நயவஞ்சக நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!

வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின்
ஒப்பாரி சத்தமிது..

தானாய்
குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

கருணையற்ற கூட்டம்
காணும்படி,
கண்ணீரை மட்டும்
சிந்தி விடாதே!

இவர்கள் -உன்
விழி நீரிலே விளையாடும்
விந்தை மனிதர்கள் -உன்
கண்ணீரிலே கவிபாடும்
கந்தை மனிதர்கள்!

வில்லில் பூட்டின
அம்புக்கும்,
அவர்கள் நாவிலே
பிறக்கும் வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை!

இரண்டுமே
காயப்படுத்திவிட தயாராய்;

அம்பின் கூர்மையும்
மழுங்கி விடலாம்;
வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும்
மழுங்கி விடாது!

புறம் கூறிடும்
வஞ்சக கூட்டத்தின்;
நிறம் மாறிடும் நாட்கள்
வெகு தொலைவில்
அல்ல தோழா!

நன்றி கெட்ட
மனிதனின் நாக்கு;
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்!

அவனுக்கும்
ஒரு கூட்டம்;
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்!

போகட்டும்
அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!

இவர்களைப் பற்றி
இனி மனதிலே
சிந்திக்கவும் வேண்டாம்!

மறந்தும் கூட
நிந்திக்கவும் வேண்டாம்!

காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!

meera
18-12-2006, 02:45 PM
அருமை நண்பரே!


வில்லம்பின் காயம் கட்டாயம் மாறும்.ஆனால் சொல்லம்பின் காயம் ஆருவது கடிணம் தான்.

பேசுபவர் பேசட்டும் நாம் நம் கடமையை செய்வோம்.

அழகான,ஆழமான வரிகள். வாழ்த்துகள்.

meera
18-12-2006, 02:47 PM
அடடா,எத்தனை ஆசைகள்.

ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்.

நம்பிகோபாலன்
18-12-2006, 07:56 PM
அருமை ....காதலை காதலியிடம் சொல்லியாச்சா

நம்பிகோபாலன்
18-12-2006, 08:26 PM
வைரமுத்து உலகம் கவிதை பொல இருக்கிரது....அருமையான முதல் இரு வரிகல்

ஷீ-நிசி
19-12-2006, 02:42 AM
நன்றி மீரா & கோபாலன் அவர்களே!

ஷீ-நிசி
19-12-2006, 02:46 AM
கவிதை எழுதிவிட்டேன்... இனி இதைக் கொடுப்பதற்கு ஒரு காதலி கிடைக்க வேண்டும்.. சும்மா விளையாட்டுக்காக...

காதலின்
எல்லா சுகங்களும்,
எல்லா முகங்களும்
கண்டுவிட்டேன்

guna
19-12-2006, 06:17 AM
காதலி கிடைகாதவரை-
எல்லாமே ஆசை ஆசையாய் தான் இருக்கும் ஷீ...

ஆசையை சொன்ன அழகான கவிதைக்கும்..
ஷீ'யின் ஆசைகள் நிறைவேரவும்..
வாழ்த்துக்கள்..

ஆதவா
19-12-2006, 07:27 AM
கவிதை எழுதிவிட்டேன்... இனி இதைக் கொடுப்பதற்கு ஒரு காதலி கிடைக்க வேண்டும்..

ஷீ!!! காதலியா? வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
19-12-2006, 07:34 AM
நன்றி குணா

ஷீ-நிசி
19-12-2006, 08:46 AM
காலையில் சோம்பலாய்
எழுந்தார்கள்;
மாலையில் சாம்பலாய்
விழுந்தார்கள்!

புத்தகப் பையுடன்
பிஞ்சுகளெல்லாம் படியேறியது
பள்ளிக்கூடத்திற்கா? -இல்லை
பலிக்கூடத்திற்கா?!

கருகியது எல்லாம்
8,9 வயது விதைகள்
கணக்கெடுத்ததில் அன்று மட்டும்
89 சிதைகள்!

சேலையில் போட்டு
தன் பிள்ளை
தூங்கிய முகத்தைக் கண்டு
ரசித்தக்கொண்டிருந்தவள்தான் -இன்று

வாழையில் போட்டு
தன் பிள்ளையின்
வீங்கிய முகத்தைக் கண்டு
கசிந்துக்கொண்டிருக்ககிறாள்;

எரிந்துவிட்டதில்
எத்தனை மகாத்மாக்களோ;
என்று மட்டும்
இந்த தேசம்
கண்ணீரை சிந்தவில்லை;

பிரிந்துவிட்ட பிள்ளைக்காய்
கதறித்துடிக்கும்
ஒரு தாயின்
பார்வையில் நின்று
இந்த தேசமே
கடல்நீரை சிந்தியது...

அன்று
எல்லா வகுப்பு
குழந்தைகளுக்கும்
ஒன்றாம் வகுப்பு பாடம்தான்!
'தீ' யவள் வந்து
பாடம் நடத்தினாள்
'அ' - அம்மா என்ற
ஒற்றை வார்த்தையை மட்டுமே
திரும்ப, திரும்ப கற்கச் சொல்லி!

இல்லை! இல்லை!!
கதறச் சொல்லி....

meera
19-12-2006, 08:53 AM
இது வேதனை.

கனவுகளுடன் பள்ளி வந்த குழந்தைகள் கருகி விட்ட செய்தி கல் நெஞ்சையும் கரைத்த சோக தினம்.

சொல்லிமாளாது வேதனை.

ஷீ-நிசி
19-12-2006, 09:07 AM
நன்றி மீரா

சம்பவத்தின் அடுத்த நாளே எழுதப்பட்ட கவிதை!

ஆதவா
19-12-2006, 09:11 AM
ஷீ,, பாராட்ட வார்த்தைகள் தமிழில் உண்டு. எனக்கில்லை.
எதுகைகள் விளையாடுகிறது உம் கவிதையில்... இந்த கவிதை கனவுகளோடு சொர்க்கம் சென்ற அக் குழந்தைகளுக்கு போய்ச் சேரட்டும்..

ஒவ்வொரு வரியிலும் உங்கள் அழுகை தெரிகிறது
வெறும் கவிதை மட்டுமல்ல
இது அக்குழந்தைகளுக்காக இறைவனிடம் வேண்டப்பட்ட வேண்டுகோள்
மேலும் இதுபோல் கவிதை எழுத இறைவன் வாய்ப்பளிக்காதிருக்க வேண்டுகிறேன்,,

pradeepkt
19-12-2006, 09:12 AM
அருமையான சிலேடைகள், உருக்கும் வரிகள்.
ஷீ, மனதைத் தொடும் கவிதைகளில் இது நிச்சயம் உண்டு...

ஷீ-நிசி
19-12-2006, 09:15 AM
நிச்சயமாக...
இதுபோல் கவிதை எழுத இறைவன் வாய்ப்பளிக்காதிருக்க நானும் வேண்டுகிறேன்,,

நன்றி ஆதவா

ஷீ-நிசி
19-12-2006, 09:16 AM
நன்றி பிரதீப்..

பென்ஸ்
19-12-2006, 12:26 PM
ஷீ...

சமுதாய கவிதைகள் என்றால் எனக்கு காரா சிப்ஸ் சாப்பிடுவது மாதிரி... கொஞ்சம் எரிக்கும்தான் ஆனாலும் எவ்வளவு வேனுமானாலும் திகட்டாம திங்கலாம். அதிலும் அப்படியே வாழ்க்கை நடை முறையில் இருக்கும் விஷயங்களை சொல்லி எழுதி இருப்பது

அடடே.. அருமை....

"இவர்கள் இப்படிதான்".. என்று முத்திரைமட்டும் குத்தி செல்லுகிறோமா.. ???

பாம்பை கண்டு பதுங்கி, ஒதுங்கி போவது நலமே, நம் உயிர் காப்பாற்றபடலாம்.. ஆனால் நமக்கு பிரியமான எதோ ஒரு உயிருக்கோ அல்லது சமுதாயத்துக்கோ ஆபத்துதானே... இந்த விஷ செடிகள் பிடுங்க படவேண்டாமா????

ஷீ-நிசி
19-12-2006, 12:40 PM
இந்த
நயவஞ்சக நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!

வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின்
ஒப்பாரி சத்தமிது..

தானாய்
குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

sriram
19-12-2006, 02:56 PM
ஷீ .!! உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்தேன். இனிய நடை.,மொழிநயம் , கற்பனைநயம், உணர்வு எல்லாம் கோலேச்சுகிறது.,
வாழ்த்துகள்.

நம்பிகோபாலன்
19-12-2006, 02:59 PM
உங்கல் ஆசைக்கு காதலி கிடைக்காமலா

நம்பிகோபாலன்
19-12-2006, 03:10 PM
உதிர்ந்தது மலரல்ல எனது மனம்

அறிஞர்
19-12-2006, 03:18 PM
அருமையான கவிதை...

வெகு நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்...

இந்த செய்தி கேட்டு... பதைத்தது என் மனம்.......

மீண்டும் தங்கள் கவிதை படிக்கும்போது.. பிஞ்சு முகங்களை பற்றிய எண்ணங்கள் நெஞ்சை நெகிழவைக்கிறது.

தொடருங்கள்...

ஷீ-நிசி
19-12-2006, 03:52 PM
நன்றி கோபாலன்..

அறிஞரே.. ஒவ்வொரு முறை இந்தக் கவிதையை படிக்கும்போதெல்லாம்
ஒரு துளி கண்ணீர் என் விழியினில் முட்டி நிற்கிறது..

தீ தாங்கும் தேகங்களா இப்பிஞ்சுகள்?

ஷீ-நிசி
19-12-2006, 03:54 PM
நன்றி nambi(கை)gobalan

ஷீ-நிசி
19-12-2006, 03:55 PM
உணர்ந்து எழுதின உங்கள் பாராட்டுக்களுக்காய் நன்றி ஸ்ரீராம்

இளசு
19-12-2006, 10:09 PM
ஷீ .!! உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்தேன். இனிய நடை.,மொழிநயம் , கற்பனைநயம், உணர்வு எல்லாம் கோலேச்சுகிறது.,
வாழ்த்துகள்.


வழிமொழிகிறேன் ஸ்ரீ-யின் கருத்தை...

வாழ்த்துக்கள் ஷீ..

அந்நியோன்னியம் மணக்கும் அழகுக்கவிதை!

ஷீ-நிசி
20-12-2006, 03:04 AM
மிக்க நன்றி நிர்வாகி அவர்களே!!

ஷீ-நிசி
20-12-2006, 05:55 AM
கிழிக்கப்பட்ட காகிதங்கள்
கையிலே சுமையாய்,

உதட்டின் விளிம்பின் வரையிலும்
வந்துவிட்ட உமிழ் நீர்,

அவசரகதியில்
இயற்கையின் அழைப்பு,

இருந்தும்,
அவன் எதையுமே
இறைக்கவில்லை சாலையோரத்தில்....

காரணம்!

அவன் நின்றுக் கொண்டிருக்கும் தேசம்
இந்தியா இல்லையே!!!

meera
20-12-2006, 06:02 AM
ஷீ,

அழகு கவிதை.

இப்படி ஒரு நிலை இந்தியாவுக்கு எப்போ வரும்?????????????

ஆதவா
20-12-2006, 06:04 AM
சரியாகச் சொன்னீர்கள் ஷீ... நாடு சோந்திரம் வாங்கி 60 வருஷமாச்சி.. இன்னும் சுத்தங்கறது பேருக்கு கூட கிடையாது.. அவனவன் குண்டு விழுந்த எடத்தையே சுத்தம் பண்ணி பெரியாளுங்களாய்ட்டானுங்க,,, நம்ம இதப் பார்த்தாவது திருந்தியிருக்கணும்... சரியான கவிதைதான் நண்பரே.. சிங்காரச் சென்னை எப்படி இருக்குது? (பார்த்தேனே ஒருநாள்..ரெம்ப அசிங்கம்.. சொன்னேன்னா மன்றத்தில சென்ஸார் பண்ணிடுவாங்க )

ஷீ-நிசி
20-12-2006, 06:06 AM
நீயும் நானும் நினைத்தால்.....

எதையும் சாலையோரங்களில் வீசக்கூடாது என்று முடிவெடுத்தால்....

ஆரம்பிப்போமே, தமிழ் மன்றத்தில் உள்ள அத்தனை பேரும்...

ஆங்கில பழமொழி ஒன்று

"THE LONGEST MARCH PAST STARTS WITH A SINGLE STEP"

ஷீ-நிசி
20-12-2006, 06:08 AM
சரிதானா மீரா? ஆதவா... அவனவன் குண்டு விழுந்த எடத்தையே சுத்தம் பண்ணி பெரியாளுங்களாய்ட்டானுங்க,,, ரசிக்கும்படியாக இருந்தது.. நாமெல்லாம் யோசிக்கவேண்டிய விஷயம்

meera
20-12-2006, 06:23 AM
அட சரியா சொன்னீங்க ஷீ,

நாமாவது சுத்தமாய் வைக்க முயற்சி செய்யலாம்.

ஆதவா
20-12-2006, 06:39 AM
ஹி ஹி ஹி... நானென்லாம் மொதல்லயே ஆரம்பிச்சிட்டேனுங்கோ.. ( குப்பை கொட்றதுக்குதான் ) ஏலே இது தமிழன் பண்பாடுலே, மாத்த முடியாதுலே... ஹிஹ் ஹி ஹி/.. இப்படியெல்லாம் யாராவது நெனச்சிருந்தா அய்யாமாரே, அம்மாமாரே வுட்றுங்க.... மொதல்ல கவர்மெண்ட சொல்லனும்பா.. குப்பை கொட்றதுக்குன்னு தொட்டி வெச்சுருக்காங்களே,, ரெம்ப கேவலம்... அந்த தொட்டியை குப்பைனு நினைச்சு இன்னொரு தொட்டியில போடலாம்..... நன்றி ஷீ.... அருமையான கவிதை மட்டுமல்ல,, சுத்தமான (!) கவிதை...

ஷீ-நிசி
20-12-2006, 06:49 AM
அது உண்மை தான் ஆதவா. குப்பை போட குப்பை தொட்டியை தேடினேன் இரயில் நிலையத்தில், இனி கவிதையாக..

"எங்களுக்கு உதவுங்கள்
உங்களுக்கு சேவைசெய்ய"

இரயில் நிலையத்தின் சுவற்றில்.....

கசக்கின காகித கோப்பை கையில்,

சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தும்
கண்டுப்பிடிக்கவே முடியவில்லை;

பின்லேடனைப் போலவே
குப்பைத்தொட்டியையும்;

தயவுசெய்து

"எங்களுக்கு உதவுங்கள்
உங்களுக்கு சேவைசெய்ய"

மதி
20-12-2006, 07:14 AM
சுத்தமான இந்தியா..
எல்லோர் கனவிலும் உண்டு. ஆயின் என் வீட்டையே என்னால் சுத்தமாக வைத்திருக்க முடியலியே..
கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு...

நல்லதொரு கவிதையை கொடுத்தமைக்கு நன்றி..ஷீ.

ஷீ-நிசி
20-12-2006, 07:16 AM
நிதர்சன உண்மை ராஜேஷ் குமார் அவர்களே.

ஆதவா
20-12-2006, 07:18 AM
கண நேரக் கவிதைகள்
காற்றில் கலந்து தாரீரே ஷீ!!

பிச்சி
20-12-2006, 09:46 AM
அருமையான கவி ஷீ... எனக்கு அன்னிக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.. என்னோட முகம் தான் அழுகலையே டவிர நான் ரொம்ப அழுதிட்ட்டேன்.... உங்க கவிதை சூப்பர்..

ஷீ-நிசி
20-12-2006, 09:49 AM
நன்றி பிச்சி... எங்க உங்களை கானோம்...

தாமரை
20-12-2006, 12:50 PM
ஷீ-நிசி,

கொடுப்பது என்பது என்ன? எதைக் கொடுப்பது? ஏன் கொடுப்பது? எப்படிக்கொடுப்பது?

கால் இல்லாது கொடுப்பது கெடுப்பது.

கால் --அதாவது காரணம்.. அதாவது தன்னை நிறுத்திக் கொள்ளும் தேவை

வேண்டுமெனக் கேட்பவனுக்கெல்லாம் தேவை இருந்துவிடுவதெல்லை..
தேவை இருப்பவனெல்லாம் வேண்டுமெனக் கேட்பதில்லை..

மனிதனை எளிதாய் கேட்டது கிடைத்தால் சோம்பேறி ஆகிவிடுகிறான்..
உழைக்கட்டும்.. உழைக்க முடியாதோருக்கு பெயரின்றி கொடுக்கலாம்..
ஒருவன் தனக்காக என்று பெறுவது உழைப்பின்றி என்றால் அதற்கு மதிப்பில்லை.மதிப்பில்லா ஒன்றை கொடுத்தவனை மற்றோர் மதிப்பதில்லை..


இதை ஒழிக்க எனக்க்குள் இருந்த எண்ணத்தை எழுதியது இது.. படித்துப் பாருங்களேன்


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6081

ஷீ-நிசி
21-12-2006, 02:33 AM
அர்த்த்முள்ள கட்டுரை. தாமரை செல்வன் அவர்களே! உங்கள் திரியையும் படித்தேன்...

நான் நினைக்கிறேன்...

எத்தனையோ பேர்...
உழைக்கும் தகுதி இருந்தும்
இரந்து திரிகிறார்கள் -அவர்கள்
உயிர் இருந்தும்
இறந்து திரிகிறார்கள்.

அவர்களைக் கண்டால் தானமிடக்கூடாது என்று நினைத்தாலும், உள்மனம் சொல்கிறது.. உன்னால் அவனை உழைக்கவைக்க முடியாது.. அதற்கு உனக்கு நேரமும் கிடையாது (என்று நீ நினைப்பாய்)..

முடிந்தது,

உன்னால் தானம் மட்டுமே-அதை
செய்துவிட்டுப் போ..
அல்லது அவன் உழைக்க -வழி
செய்துவிட்டுப் போ..

ஒருவேளை தானம் கேட்கிறவன் நினைக்கக்கூடும்.. இதுவும் ஒருவகை உழைப்புதானே.....

தாமரை
21-12-2006, 03:10 AM
அர்த்த்முள்ள கட்டுரை. தாமரை செல்வன் அவர்களே! உங்கள் திரியையும் படித்தேன்...

நான் நினைக்கிறேன்...

எத்தனையோ பேர்...
உழைக்கும் தகுதி இருந்தும்
இரந்து திரிகிறார்கள் -அவர்கள்
உயிர் இருந்தும்
இறந்து திரிகிறார்கள்.

அவர்களைக் கண்டால் தானமிடக்கூடாது என்று நினைத்தாலும், உள்மனம் சொல்கிறது.. உன்னால் அவனை உழைக்கவைக்க முடியாது.. அதற்கு உனக்கு நேரமும் கிடையாது (என்று நீ நினைப்பாய்)..

முடிந்தது,

உன்னால் தானம் மட்டுமே-அதை
செய்துவிட்டுப் போ..
அல்லது அவன் உழைக்க -வழி
செய்துவிட்டுப் போ..

ஒருவேளை தானம் கேட்கிறவன் நினைக்கக்கூடும்.. இதுவும் ஒருவகை உழைப்புதானே.....


தானங்கள் விநாடி நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு விநாடி நேரத்தில் முடிந்து விடுகின்றன..எளிதில் வருவது எளிதில் மறந்து விடுகிறது

ஒரு குழந்தைக்கோ சிறுவனுக்கோ பிச்சையிடும்போது இன்னொரு சிறுவனின் கையோ காலோ கண்ணோ பறிக்கப்படுகிறது என்பதை மனதில் வையுங்கள். சில நேரம் மனதை கல்லாக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது..

ஆதவா
21-12-2006, 03:16 AM
தானங்கள் விநாடி நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு விநாடி நேரத்தில் முடிந்து விடுகின்றன..எளிதில் வருவது எளிதில் மறந்து விடுகிறது

ஒரு குழந்தைக்கோ சிறுவனுக்கோ பிச்சையிடும்போது இன்னொரு சிறுவனின் கையோ காலோ கண்ணோ பறிக்கப்படுகிறது என்பதை மனதில் வையுங்கள். சில நேரம் மனதை கல்லாக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது..

உதை ஏற்கிறேன்....

ஷீ-நிசி
21-12-2006, 03:45 AM
ஒரு குழந்தைக்கோ சிறுவனுக்கோ பிச்சையிடும்போது இன்னொரு சிறுவனின் கையோ காலோ கண்ணோ பறிக்கப்படுகிறது என்பதை மனதில் வையுங்கள். உண்மைதான் நண்பரே...

இந்த மாதிரி பிள்ளைகள் கண்ட மாத்திரத்திலே நாம் ஏதாகிலும் உதவும் மையங்களுக்கு தெரிவிக்க வேண்டும்..

எல்லாம் செய்ய மனம் விரும்புகிறது
ஆனால் எதையும் செய்யாமலே -என்
நாட்கள் ஓடுகிறது......

ஷீ-நிசி
21-12-2006, 06:14 AM
இதுவும் ஒரு சாதாரண
விடியல்தானே!

இதற்கு மட்டும் என்ன
இத்தனை வரவேற்பு
கொடுக்கிறாய்?!

வருடத்திலே தொடங்கும்
முதல் விடியலாம்;
வாழ்விலே தொடரும்
தவறுகள் மடியலாம் -என்று
எண்ணுகிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் குழந்தைகளின்
பொத்தலாடைகளினால்;
தெருக் குழந்தைகள்
புத்தாடை அணிவார்களே!

ஒருவேளை அதற்காகவா?!

முதியோர் இல்லங்களில் வாழும்
மூத்தோர் உள்ளமும், வயிறும்
உன்னால் நிறைந்திடுமே
அந்நாளிலே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் வீட்டிலே
தயாரிக்கப்படும் இனிப்புகள்;
உன் பகைவர்களின் வீட்டிலே
ருசிக்கப்படப்போகிறதே!

ஒருவேளை அதற்காகவா?!

ஏதோவொரு
சூழ்நிலையில் உண்டான
கோபதாபங்களை
மறந்து, மன்னித்து
யாவருடனும் நட்புறவு
கொள்ளத் துடிக்கிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

இல்லாத நிலையிலும்
இருப்பதே போதுமென்று
கடன் வாங்காமல்
இன்முகத்துடன்
இந்நாளை வரவேற்கிறாயே

ஒருவேளை அதற்காகவா?!

அப்படியென்றால்,

நண்பா,
கண்டிப்பாக உனக்கு மட்டும்
இது சாதாரண விடியலில்லை!
இதற்கு நீ
எத்தனை வரவேற்பு
கொடுத்தாலும் தகும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

mukilan
21-12-2006, 06:16 AM
புத்தாண்டு கொண்டாட இத்தனை காரணங்கள் இருக்கின்றனவா? அடடே!
சபாஷ்! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
21-12-2006, 06:21 AM
நன்றி நண்பரே

இளசு
21-12-2006, 06:43 AM
புதிய, விசால, நேயப் பார்வை...யில்
புத்தாண்டு கவிதை அருமை!

வாழ்த்துகள் ஷீ!

ஷீ-நிசி
21-12-2006, 06:54 AM
நன்றி நிர்வாகி அவர்களே

ஆதவா
21-12-2006, 07:04 AM
ஷீ,,, கவிதை அருமை... புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்குண்டா?

ஷீ-நிசி
21-12-2006, 07:33 AM
கொண்டாட்டங்கள் என்று இல்லை. இதுவும் ஒரு இனிய நாள். அவ்வளவுதான்!

ஆதவா
21-12-2006, 07:38 AM
கொண்டாட்டங்கள் என்று இல்லை. இதுவும் ஒரு இனிய நாள். அவ்வளவுதான்!

எனக்கும் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது.. நான் பிறந்தா நாளே கொண்டாட மாட்டேன்.. எனக்கு வேலைகள் வந்துவிட்டன ஷீ.. இனி இரவு மட்டுமே தமிழ் மன்றத்தில் பங்கு பெறுவேனென்று நினைக்கிறேன்... அப்பப்ப வந்து போவேன்....

ஷீ-நிசி
21-12-2006, 07:48 AM
அடடடடடடா? என்ன இப்படி ஒரு சோக செய்தி சொல்லிவிட்டீர்கள்!...
நமக்கு வேலையும் முக்கியம்..... மன்றமும் முக்கியம்... தடைபடக்கூடாது என்று நான் வீட்டிலும் இணைப்புக் கொடுத்துவிட்டேன்.. நீங்களும் யோசியுங்கள். ஏதாகிலும் வழி பிறக்கும்...

மயூ
21-12-2006, 08:07 AM
புத்தாண்டு பின்னால் இத்தனை ஸ்டேரி இருக்குமென்று நினைக்கவேயில்லை... தொடககமே அருமையான கேள்வியோடு!
மன்றத்து உறவுகள் அனைவருக்கும் இப்பவே புத்தாண்டு வாழ்த்தை சொல்லிவிடுகிறேன்!!!

ஆதவா
21-12-2006, 08:09 AM
அடடடடடடா? என்ன இப்படி ஒரு சோக செய்தி சொல்லிவிட்டீர்கள்!...
நமக்கு வேலையும் முக்கியம்..... மன்றமும் முக்கியம்... தடைபடக்கூடாது என்று நான் வீட்டிலும் இணைப்புக் கொடுத்துவிட்டேன்.. நீங்களும் யோசியுங்கள். ஏதாகிலும் வழி பிறக்கும்...

யோசித்துக் கொண்டிருக்கிறேன் நண்பரே!! என்னை பொருத்தவரை இரண்டுமே முக்கியம்தான் ஆனால் என்ன செய்ய... என்றைக்கு மன்றத்தில் வ்ந்து சேர்ந்தேன் அன்றிலிருந்தே ஏகப்பட்ட வேலை... ( மன்ற நிர்வாகிகளே பங்கு கேட்டுவிடப்போகிறீர் :D )

தோலை யுரித் துயிர் தரலாம்
தமிழுக்கென ஆனாலும்
வேலை யெனும் போது
தீண்டுமோ கண் போனாலும்

ஷீ-நிசி
21-12-2006, 08:29 AM
புத்தாண்டு வாழ்த்துக்கள் மயூரேசன். இத்தனை story-யும் இருந்தால் புத்தாண்டு இன்னும் அழகாக இருக்கும்..

ஆதவா. எல்லாம் புரியுது.. ஆனால் அந்த கடைசி இரண்டு வரி ..ம்ஹூம்..
புரியலபா!

தோலை யுரித் துயிர் தரலாம்
தமிழுக்கென ஆனாலும்
வேலை யெனும் போது
தீண்டுமோ கண் போனாலும்

ஆதவா
21-12-2006, 08:39 AM
தோலை யுரித் துயிர் தரலாம் தமிழுக்கென
ஆனாலும் வேலை யெனும் போது தீண்டுமோ கண் போனாலும்

தமிழென சொன்னது தமிழ் மன்றம்

வேலைன்னு வந்துட்டா என் கண்களே போனாலும் தொடுவேனோ (அதாவது இணையம் வருவேனோ )தமிழ்மன்றம்..
இது மிகைபடுத்தப்பட்டதுதான்.. கவிதைக்காக...

சரி உங்களுக்காக

தோலை யுரித் துயிர் தரலாம்
தமிழுக்கென ஆனாலும்
வேலை யென்றாலும் தமிழ்
மன்றம் வருவேன் வா(ழ்)நாளும்

தாமரை
21-12-2006, 08:49 AM
தோலை யுரித் துயிர் தரலாம்
தமிழுக்கென ஆனாலும்
வேலை யெனும் போது
தீண்டுமோ கண் போனாலும்


அட! எங்களைப் போன்றவர்கள் வேலை அதிகம் இருக்கும்பொழுதுதான் புத்தியை தீட்டிக் கொள்ள மன்றம் வருகிறோம் என்று உமக்குத் தெரியுமா?

ஆதவா
21-12-2006, 08:54 AM
அட! எங்களைப் போன்றவர்கள் வேலை அதிகம் இருக்கும்பொழுதுதான் புத்தியை தீட்டிக் கொள்ள மன்றம் வருகிறோம் என்று உமக்குத் தெரியுமா?

எத்தித் தாவுகின்ற மான்கள்போல்
நாங்க ளெல்லாம் இளையவர்கள்! நீர்
புத்தி தீட்ட வந்த புலிகளெனத்
தெரியாது தமிழ் செல்வரே!!

ஷீ-நிசி
21-12-2006, 09:14 AM
ஆஹா ஆதவா என்ன இது கலக்குறே.....

ஆதவா
21-12-2006, 09:25 AM
ஆஹா ஆதவா என்ன இது கலக்குறே.....

எல்லாம் உங்க கைராசிதான் :) :) :)

நேசித்த உம்மால் உண்டாகுமே
கடகடவென கவிதைகள்!
சுவாசிக்கும் காற்றைப் போல்
வந்த ளித்தீரே பாராட்டு.
கைராசிக்காரரே!!

ஷீ-நிசி
21-12-2006, 09:32 AM
நான் பேசல! நான் பேசல!!

ஆதவா
21-12-2006, 09:38 AM
நான் பேசல! நான் பேசல!!

:) :) :) ஓகே... ஓகே...

புத்தாண்டு வாழ்த்து கவிதைக்கு பதில் எழுதி எப்படி கொண்டு போயிருக்கோம் பாருங்க ஷீ.... இருந்தாலும் உங்கள மாதிரி புத்தாண்டு கவிதை எழுதலாம்னு நெனச்சாலும் வரமாட்டேங்குது..

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!
குறிப்பாக ஷீ க்கு

ஷீ-நிசி
21-12-2006, 09:53 AM
ஆதவா, online members ரொம்ப குறைவா இருக்கு தமிழ் மன்றத்துல....நிறைய பேருக்கு தெரியலைனு நினைக்கிறேன். தெரியவச்சிடுவோமா?????

தாமரை
21-12-2006, 10:00 AM
எத்தித் தாவுகின்ற மான்கள்போல்
நாங்க ளெல்லாம் இளையவர்கள்! நீர்
புத்தி தீட்ட வந்த புலிகளெனத்
தெரியாது தமிழ் செல்வரே!!
புலிகளுக்கும் புத்திக்கும் சம்பந்தமில்லை

ஷீ-நிசி
21-12-2006, 10:03 AM
கணக்குல புலினு சொல்வாங்க இல்ல...
புத்தி இல்லாம கணக்கு போட முடியாது..

புத்தி+கணக்கு
கணக்கு+புலி

அதனால
புத்தி+கணக்கு+புலி
ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதால்
புத்திக்கும் புலிக்கும் தொடர்பு உண்டு

ஆதவா
21-12-2006, 10:09 AM
கணக்குல புலினு சொல்வாங்க இல்ல...
புத்தி இல்லாம கணக்கு போட முடியாது..

புத்தி+கணக்கு
கணக்கு+புலி
இருப்பதால்
புத்திக்கும் புலிக்கும் தொடர்பு உண்டு


ஆஹா ஆஹா,,,

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு..

ஆதவா
21-12-2006, 10:11 AM
ஆதவா, online members ரொம்ப குறைவா இருக்கு தமிழ் மன்றத்துல....நிறைய பேருக்கு தெரியலைனு நினைக்கிறேன். தெரியவச்சிடுவோமா?????

கண்டிப்பா!!! ஏற்கனவே ஓர்குட்ல டாபிக்கை போட்டேன் பா ரிப்ளை யில்ல.. ரிப்ளை இல்லாட்டி பரவால்ல வந்தாங்கனா சரி..

எப்டின்னு சொல்லுங்க செஞ்சிடுவோம்ம்

ஷீ-நிசி
21-12-2006, 10:16 AM
வழி கிடைக்காமலா போயிடும்....

தாமரை
21-12-2006, 10:57 AM
கணக்குல புலினு சொல்வாங்க இல்ல...
புத்தி இல்லாம கணக்கு போட முடியாது..

புத்தி+கணக்கு
கணக்கு+புலி

அதனால
புத்தி+கணக்கு+புலி
ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதால்
புத்திக்கும் புலிக்கும் தொடர்பு உண்டு


மானுக்கும் புலிக்கும் தொடர்பு இருப்பதினால் மானுக்கும் புத்திக்கும் தொடர்பு உண்டுதானே.. அப்போ மானுக்கும் புல்லுக்கும் தொடர்பு இருப்பதினால் புல்லும் புத்திசாலிதானே.. புல்லுக்கும் மாட்டுக்கும் ....

ஷீ-நிசி
21-12-2006, 11:03 AM
சரணடைஞ்சிட்டேன் stselvan

ஆதவா
21-12-2006, 11:09 AM
மானுக்கும் புலிக்கும் தொடர்பு இருப்பதினால் மானுக்கும் புத்திக்கும் தொடர்பு உண்டுதானே.. அப்போ மானுக்கும் புல்லுக்கும் தொடர்பு இருப்பதினால் புல்லும் புத்திசாலிதானே.. புல்லுக்கும் மாட்டுக்கும் ....

அய்யோ!!!! சாமீ....

mukilan
21-12-2006, 12:55 PM
இப்போ நல்லாத் தெரியுது ஏன் அநிருத் பென்ஸூவை இந்த மடக்கு மடக்கறாப்லன்னு. செல்வருக்குப் பிறந்தது...

(நான் புலிக்குப் பிறந்ததுன்னுதான் போடலாம்னு நினைச்சேன். ஏற்கனவே ஆதவா கடி பட்டது போதும்னுதான்)

தாமரை
21-12-2006, 01:10 PM
எல்லாம் உங்க கைராசிதான் :) :) :)

நேசித்த உம்மால் உண்டாகுமே
கடகடவென கவிதைகள்!
சுவாசிக்கும் காற்றைப் போல்
வந்த ளித்தீரே பாராட்டு.
கைராசிக்காரரே!!


அறிவில் ஆதவரைப் போல வராதுதான்..

காதல் காற்றை சுவாசிப்பவன்
கவிதையை வெளி விடுகிறான்
இது நுரையீரல் சுவாசமல்ல
இதய சுவாசம்..
அதிலெங்கும்
அவளின் வாசம்

leomohan
21-12-2006, 01:15 PM
இதுவும் ஒரு சாதாரண
விடியல்தானே!

இதற்கு மட்டும் என்ன
இத்தனை வரவேற்பு
கொடுக்கிறாய்?!

வருடத்திலே தொடங்கும்
முதல் விடியலாம்;
வாழ்விலே தொடரும்
தவறுகள் மடியலாம் -என்று
எண்ணுகிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் குழந்தைகளின்
பொத்தலாடைகளினால்;
தெருக் குழந்தைகள்
புத்தாடை அணிவார்களே!

ஒருவேளை அதற்காகவா?!

முதியோர் இல்லங்களில் வாழும்
மூத்தோர் உள்ளமும், வயிறும்
உன்னால் நிறைந்திடுமே
அந்நாளிலே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் வீட்டிலே
தயாரிக்கப்படும் இனிப்புகள்;
உன் பகைவர்களின் வீட்டிலே
ருசிக்கப்படப்போகிறதே!

ஒருவேளை அதற்காகவா?!

ஏதோவொரு
சூழ்நிலையில் உண்டான
கோபதாபங்களை
மறந்து, மன்னித்து
யாவருடனும் நட்புறவு
கொள்ளத் துடிக்கிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

இல்லாத நிலையிலும்
இருப்பதே போதுமென்று
கடன் வாங்காமல்
இன்முகத்துடன்
இந்நாளை வரவேற்கிறாயே

ஒருவேளை அதற்காகவா?!

அப்படியென்றால்,

நண்பா,
கண்டிப்பாக உனக்கு மட்டும்
இது சாதாரண விடியலில்லை!
இதற்கு நீ
எத்தனை வரவேற்பு
கொடுத்தாலும் தகும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

நெஞ்சை தொட்டது அற்புதராஜ். வாழ்த்துக்கள்.

அறிஞர்
21-12-2006, 02:10 PM
ஷீயின்
புதுக்கவிதையால்
புத்தாண்டு ஒளிர்கிறது.
----
கவிதையோடு... அன்பு நெஞ்சங்களில் உரையாடல் மனதை நெகிழவைக்கிறது.

தொடருங்கள்...

ஆதவனின், ஷீ-நிசியின் படைப்புக்கள் தொடரட்டும்.

ஆதவன் தினமும் வாருங்கள்.. படைப்புக்களை கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

ஆதவா
21-12-2006, 02:20 PM
ஷீயின்
புதுக்கவிதையால்
புத்தாண்டு ஒளிர்கிறது.
----
கவிதையோடு... அன்பு நெஞ்சங்களில் உரையாடல் மனதை நெகிழவைக்கிறது.

தொடருங்கள்...

ஆதவனின், ஷீ-நிசியின் படைப்புக்கள் தொடரட்டும்.

ஆதவன் தினமும் வாருங்கள்.. படைப்புக்களை கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

நன்றி அறிஞரே!!

அறிஞர்
21-12-2006, 02:54 PM
ஆதவா, online members ரொம்ப குறைவா இருக்கு தமிழ் மன்றத்துல....நிறைய பேருக்கு தெரியலைனு நினைக்கிறேன். தெரியவச்சிடுவோமா?????


கண்டிப்பா!!! ஏற்கனவே ஓர்குட்ல டாபிக்கை போட்டேன் பா ரிப்ளை யில்ல.. ரிப்ளை இல்லாட்டி பரவால்ல வந்தாங்கனா சரி..

எப்டின்னு சொல்லுங்க செஞ்சிடுவோம்ம்

தமிழ் பரப்பும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

மன்றத்தின் கதை பெரிய கதை.....
தமிழ் இணைய தளங்களில், தமிழ் மன்றம் பழமையானது.

ஆரம்ப காலங்களில் தமிழ் விரும்பிகள் பலர் உலாவிய இடம்.

இணைய தளத்தில் உலாவரும் பெரிய கவிஞர்கள், சங்கமித்த இடம் இது.

ஒரு சில பதிவுகளால் சர்ச்சை எழும்போது சிலர் ஒதுங்கினர்.

தமிழ் மன்றத்தின் வளர்ச்சி கண்டு, பொறாமையால் வீழ்த்த முயன்றோர் பலர். நல்ல எழுத்தாளர்கள் இங்கு வரும்போது.... அவர்கள் மனதை மாற்றி அவர்களை தங்கள் இடங்களுக்கு இடம் மாற செய்தோர் சிலர்.

வேலை, குடும்ப சூழலால் வராமுடியாமல் போனோர் சிலர்.

பல இன்னல்கள் நடுவில், அன்பால் கட்டப்பட்டவர்களால் மன்றம் தொடர்ந்து தன் பாதையில் செல்கிறது.

இன்னல்கள் பல வந்தாலும் தங்களின் பதிவுகள் தொடரும் என்றே நம்புகிறேன்.

ஆதவா
21-12-2006, 02:58 PM
அறிவில் ஆதவரைப் போல வராதுதான்..

காதல் காற்றை சுவாசிப்பவன்
கவிதையை வெளி விடுகிறான்
இது நுரையீரல் சுவாசமல்ல
இதய சுவாசம்..
அதிலெங்கும்
அவளின் வாசம்

இன்னா தல... இப்டி சொல்டீங்க... நான் வெறும் இளம் புயல் தானே!!

தல எனக்கு மட்டும் இது பிர்யல.. இன்னாத்துக்கு இந்த இடத்தில இந்த கவித....

அப்பா!! தமிழை இப்படி எழுதவே முடியலஏ... எப்படிதான் பேசறாங்களோ?!!!!

அறிஞர்
21-12-2006, 03:00 PM
புயலும், புதிய (இளைய) தலையும்.. கவிதையில் விளையாடுவது... நன்றாக உள்ளது.

ஆதவா
21-12-2006, 03:06 PM
தமிழ் பரப்பும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

மன்றத்தின் கதை பெரிய கதை.....
தமிழ் இணைய தளங்களில், தமிழ் மன்றம் பழமையானது.

இன்னல்கள் பல வந்தாலும் தங்களின் பதிவுகள் தொடரும் என்றே நம்புகிறேன்.

விடை யேது என்றறியா திருந்தோம்
அறிஞர் விளக்கம் தர
முடை யேது மிருந்தாலும் வருவோம்
அலைகளின் காதல் போல
தடை யேது மில்லாம
தருவோம் நல்ல கவிதை பல
நடை போட்டுச் செல்லோம்
தமிழ் மன்றம் விட்டு....

தாயினை மறக்கும் சேயுண்டா
கற்ற பாடத்தை மறக்கும் நாயுண்டா ( மன்னிக்கவும்)
காயி லிருந்தோம் இதுவரை
கனி ஆக்கியதே தமிழ் மன்றம்
சாயும் வரை நினைத்திருப்போம்
அறிஞர் பட வேண்டாம் வருத்தம்..

தாமரை
21-12-2006, 03:29 PM
இன்னா தல... இப்டி சொல்டீங்க... நான் வெறும் இளம் புயல் தானே!!

தல எனக்கு மட்டும் இது பிர்யல.. இன்னாத்துக்கு இந்த இடத்தில இந்த கவித....

அப்பா!! தமிழை இப்படி எழுதவே முடியலஏ... எப்படிதான் பேசறாங்களோ?!!!!
அட நீங்க கவனிக்கலையா

இல்லை கவனித்தும் நமட்டுச் சிரிப்போட பதியறீங்களா?

கதை பல எழுதி
கவிதையில் மருகி
உள்ளம் உருகி
உள்ளங்களை உருக்கி
எதிர்ப்புகளை கருக்கி
உலகத்தைச் சுருக்கி
வாழ்வோம் என்னென்னவோ கிறுக்கி

அறிஞர்
21-12-2006, 03:35 PM
விடை யேது என்றறியா திருந்தோம்
அறிஞர் விளக்கம் தர
முடை யேது மிருந்தாலும் வருவோம்
அலைகளின் காதல் போல
தடை யேது மில்லாம
தருவோம் நல்ல கவிதை பல
நடை போட்டுச் செல்லோம்
தமிழ் மன்றம் விட்டு....

தாயினை மறக்கும் சேயுண்டா
கற்ற பாடத்தை மறக்கும் நாயுண்டா ( மன்னிக்கவும்)
காயி லிருந்தோம் இதுவரை
கனி ஆக்கியதே தமிழ் மன்றம்
சாயும் வரை நினைத்திருப்போம்
அறிஞர் பட வேண்டாம் வருத்தம்..
என்ன செல்வன் ஓரே மூடில் இருக்கிறீர்கள் போல....
கலக்கலாக கொடுக்கிறது கவிதைகள்...

ஆதவா
21-12-2006, 03:52 PM
ஆஹா என்னே தமிழ் விளையாட்டிது?!!!!! நண்பரே தனியாக திரி ஆரம்பிப்போமா? கவிதையாலே பதில் சொல்லி விளையாடலாம்

அறிஞர்
21-12-2006, 04:52 PM
ஆஹா என்னே தமிழ் விளையாட்டிது?!!!!! நண்பரே தனியாக திரி ஆரம்பிப்போமா? கவிதையாலே பதில் சொல்லி விளையாடலாம்
ஆரம்பிங்க.. நீங்க...
ஒரு கலக்கல் கலக்கிடுவோம்.

ஆதவா
21-12-2006, 05:00 PM
அறிஞரே ! என்னை விட பெரிய புலவர்கள் நிறைந்திருக்கும் இந்த மன்றத்தில்ல் நான் எப்படி ஆரம்பிக்கிறது? எனக்கு ஆரம்பம் மட்டும் தெரியாது... போகப் போக .... வெளுத்துக் கட்டிடலாம்

அதனால் அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே... என்னுடன் பிறவா சகோதர சகோதரிகளே அறிஞர் இன்று புதிய திரி தீட்டி விளக்கு ஏற்றி வைப்பார்....

மன்மதன்
21-12-2006, 06:01 PM
நல்ல கவிதை ஷீ.. தொடர்ந்து எழுதுங்க..

தாமரை
22-12-2006, 04:17 AM
அறிஞரே ! என்னை விட பெரிய புலவர்கள் நிறைந்திருக்கும் இந்த மன்றத்தில்ல் நான் எப்படி ஆரம்பிக்கிறது? எனக்கு ஆரம்பம் மட்டும் தெரியாது... போகப் போக .... வெளுத்துக் கட்டிடலாம்

அதனால் அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே... என்னுடன் பிறவா சகோதர சகோதரிகளே அறிஞர் இன்று புதிய திரி தீட்டி விளக்கு ஏற்றி வைப்பார்....

பதில் கவிதைகள் என்பது நல்ல யுக்தி.. எனக்கு பதிலுக்கு பதில்தான் தெரியும்.. இந்தப் பாணியில் எழுதிய சில கவிதைகள் இதோ.. படித்து தயாராகுங்கள். புதுவருஷத்தில் கலக்கி விடுவோம்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6057

ஷீ-நிசி
22-12-2006, 04:38 AM
வாழ்த்தின அறிஞர், மோகன், செல்வன், ஆதவா அனைவருக்கும் நன்றி...

கவிதையில் பதில்..... நல்ல திரி.... யாராவது முதலில் கொழுத்துங்கள்.... அனையாமல் பார்த்துக்கொள்வோம்!!!..

"நல்லதொரு
திரிக்கான கருவிது..
அறிஞருக்கே
உண்டான அறிவிது!

கவிதையில்,
பதிலுக்கு பதில் புதிதில்லை..
கவிதையில்
நீங்கள் சொல்லாவிட்டால்
இந்த திரியில் அது பதிலில்லை...

நம்பிகோபாலன்
22-12-2006, 04:46 AM
சுத்தமான கவிதை யோசிக்க வைத்தமைக்கு நன்றி நண்பரே

ஷீ-நிசி
22-12-2006, 04:49 AM
நன்றி நம்பி...

தாங்களும்.. கவிதையில் சொல்லப்பட்ட மூன்று காரியங்களை கடைப்பிடித்து நம்மாலான உதவியை நம் சமூகத்திற்கு செய்திடுவோம்!

ஷீ-நிசி
22-12-2006, 06:04 AM
கண்டிப்பா!!! ஏற்கனவே ஓர்குட்ல டாபிக்கை போட்டேன் பா ரிப்ளை யில்ல.. ரிப்ளை இல்லாட்டி பரவால்ல வந்தாங்கனா சரி..

எப்டின்னு சொல்லுங்க செஞ்சிடுவோம்ம்

ஆதவா... ஒர்குட்ல என்னோட community எல்லாத்துலயும்

அருமையான மற்றொரு தமிழ் குழுமம்
பார்வையிடுங்கள் www.tamilmantram.com அப்படினு போட்டாச்சி...நீங்க உங்க community எல்லாத்துலயும் போட்டுடுங்க...

பார்ர்ப்போமே....

ஆதவா
22-12-2006, 07:24 AM
சரி ஷீ அவர்களே./..

செல்வரே.... நீங்கள்தான் புது வருஷத்தில் கவிதையால் வினா விடை திரி கொளுத்த வேண்டும்....

ஷீ-நிசி
22-12-2006, 07:37 AM
ஆதவா, யாராவது சிறந்த கவிஞர்கள் ஆரம்பிக்கட்டும்.....

ஷீ-நிசி
22-12-2006, 08:27 AM
நேற்றிரவு
நிலவை யாரோ
களவாடிவிட்டார்களாம்;

இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்லவெண்டுமாம்!

நட்சத்திரங்களெல்லாம்
இன்று காலைமுதல்
என்னை நச்சரிக்கின்றன;

நிலவை களவாடியது
நான்தானென்று தெரியாமல்
என்னிடமே!

முடியாது என்று
புறமுதுகு காட்டினேன்;

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன்முதலாக அன்று
பூமியிலிருந்து மழை பெய்திட
ஆரம்பித்தது!!

அழுகையில் மனமிளகி
அரைமனதாக ஒப்புக்கொண்டு;
அவற்றிடமே கேட்டேன்!

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!

உங்கள் சூரியத்தலைவன்
கண்டுபிடித்தால் -உங்களை
சுட்டெரித்திடுவானே என்று!?

விடை தெரியாமல்
விழிகளெல்லாம் நனைந்தன
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;

வினாவெழுப்பிய நானே
விடையளித்தேன்!

நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!

என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!

ஆதவா
22-12-2006, 08:55 AM
முதன்முதலாக அன்று
பூமியிலிருந்து மழை பெய்திட
ஆரம்பித்தது!!

அருமையான வரிகள் நண்பரே!!!,,,பிரமாதமான கவிதை... வாழ்த்துக்கள்..

ஷீ-நிசி
22-12-2006, 09:04 AM
நன்றி ஆதவா

ஷீ-நிசி
22-12-2006, 01:20 PM
http://sunny.moorparkcollege.edu/~review/2004/graphics/small4x6/mother%20and%20baby.jpg
மறந்தே போனதடா!!

தலை சுற்றும் வாந்தியும்
தள்ளாடும் மயக்கங்களுமாய்;
நான் கடத்தின
அந்த நாட்கள்!

மறந்தே போனதடா!!

விரும்பிய உணவுகள்
எதிரிலே இருந்தும்
உனக்கு ஒவ்வாது என்பதால்
உண்ண முடியாத
அந்த நாட்கள்!

மறந்தே போனதடா!!

நேராக படுத்தால்
உன்க்கு ஆகாது என்பதால்
ஒருக்களித்து படுத்தே
ஒரு பக்கம் முழுவதும்
வலியினைப் பெற்ற
அந்த நாட்கள்!

மறந்தே போனதடா!!

தாய்மை அடைந்ததில்
பயணம் செய்யக்கூடாது -என்று
என் தாய்வீடு செல்ல முடியாமல்
பரிதவித்த
அந்த நாட்கள்!

மறந்தே போனதடா!!

தலைவலி, காய்ச்சல்
எது வந்தாலும்
மாத்திரைகள் கூடாது என்பதால்
நோயோடு பழகி குணமான
அந்த நாட்கள்!

மறந்தே போனதடா!!

நீ இந்த உலகை காண
விரும்பி அவதரித்த -அந்த
வேதனை நிறைந்த நிமிடங்கள்

மறந்தே போனதடா!!

என் எல்லா வலிகளும்
உன் புனிதமான
இந்தச் சிரிப்பினால்...

ஷீ-நிசி

அறிஞர்
22-12-2006, 01:35 PM
வாவ்.. கலக்கல் ஷீ.
---
குழந்தையை வயிற்றில்
சுமக்கும்போது
எத்தனை இன்னல்கள்.

பிறந்தபின்னும்
தொடரும் இன்னல்கள்.

அந்த மழலை சிரிப்பில்
மறைகின்றன.
--------
தாய்மை நிலை பார்த்து ரசித்து வடித்த கவிதை அருமை...

ஆதவா
22-12-2006, 01:48 PM
ஷீ,, இது ஒர்குட்லேயே படித்திருக்கிறேன்....

மறுமுறை தாயின் வயிற்றுக்குப் போய் வந்திருக்கிறீர்... வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
22-12-2006, 01:50 PM
அது orkut நண்பர்களுக்காக... இது நம் மன்ற நண்பர்களுக்காக...

இளசு
22-12-2006, 02:42 PM
உடல், உள்ள உபாதைகளை
உருவாக்கும் ஜீன் பிரதிக்காக
ஓர் உபாசனை போல் உவந்தேற்கும்
தாயின் பெருமையை அழகாய்ச் சொன்ன கவிதை..

பாராட்டுகள் ஷீ!

இளசு
22-12-2006, 02:46 PM
சாதாரண காதல் கவிதையாய் தொடங்கி
கடைசி வரியில் கவிதை மிக உயரமாகி விட்டது...

பாராட்டுகள் ஷீ !


( அவைகளிடம் என்பதைவிட அவற்றிடம் என்பதே இலக்கணப்படி சரி என நினைக்கிறேன்..)

meera
22-12-2006, 02:49 PM
ஷீ,

தாயின் கஷ்டம் அந்த மழலையின் சிரிப்பில் மாயமாய் மறைவது என்னவோ உண்மைதான்.

கண்ணில் கண்ணீர் வருகிறது நண்பா.

பாராட்டுகள்.

meera
22-12-2006, 02:57 PM
நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!

ஷீ,

பாராட்ட வார்த்தைகள் இல்லை.அழகு அழகு அழகு........

வாசித்தேன் என்பதைவிட ரசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.

நம்பிகோபாலன்
22-12-2006, 03:01 PM
தாயின் தியாகங்களுக்கு மதிப்பே இல்லை... இது பெண்மையின் சிறப்பு

ஷீ-நிசி
22-12-2006, 03:02 PM
நன்றி மீரா,

நன்றி இலசு....

அவைகளிடம் என்பதைவிட அவற்றிடம் என்பதே இலக்கணப்படி சரி என நினைக்கிறேன்

இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கூறினால் புரிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்

ஷீ-நிசி
22-12-2006, 03:03 PM
நன்றி இலசு, மீரா & நம்பி

நம்பிகோபாலன்
22-12-2006, 03:05 PM
ரசித்தேன் ...தேன் ..... நிலவை காதலி நிலாவே காதலியாக...மிக அருமை

ஷீ-நிசி
22-12-2006, 03:10 PM
நன்றி நம்பி

ஷீ-நிசி
22-12-2006, 03:35 PM
நீங்கள் மட்டும்தான்
என்னை வந்து
ரசிக்க வேண்டுமோ?

நானும் கொஞ்சம்
ரசிக்கிறேனே!

விரும்பினாயோ?!

இதுவரை
கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தாய்;

இன்று
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தாயே!

வெள்ள நீர் வடிந்தவுடன்
எப்பொழுதும் காண்பது,
குவியல் குவியலாக
குப்பைகளைத்தான்!

இன்றுதான் காண்கிறோம்
குவியல் குவியலாக,
குப்பைகளோடு குழந்தைகளையும்!

இருக்கும் இடம்
போதவில்லையென்றா;
எங்கள் வீதியில் வந்து
விளையாடினாய்?!

இல்லை இல்லை
எங்கள் விதியில்
அல்லவா விளையாடினாய்!

பந்துகளில் விளையாடிய
குழந்தைகளையும்
விட்டுவைக்கவில்லை;

தெருச் சந்துகளில்
விளையாடிய குழந்தைகளையும்
விட்டுவைக்கவில்லை;

விரட்டி விரட்டி
ரசித்தாய்!
விரட்டி விரட்டி
ருசித்தாய்!

உடலின் அளவைக்
குறைக்கத்தானே
உன்னிடம் ஓடி வந்தார்கள்!

நீயோ
உயிரின் அளவையே
குறைத்துவிட்டாயே!

நாங்கள் மெரீனாவில்
சமாதி செய்தோம் -நீ
மெரீனாவையே சமாதியாக்கினாய்!

இதுவரை நீ
எங்கள் உள்ளத்தில்
கடல்தாய்;

இன்றோ, நீ
எங்கள் உள்ளத்தைவிட்டே
கடந்தாய்!

இளசு
22-12-2006, 03:39 PM
அவைகளிடம் என்பதைவிட அவற்றிடம் என்பதே இலக்கணப்படி சரி என நினைக்கிறேன்

இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கூறினால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்

அது = ஒருமை
அவை = பன்மை

இங்கே அவைகள், அவைகளுக்கு என்பது பிழை.


அவை, சபை = ஒருமை
அவைகள், சபைகள் = பன்மை.

சரிதானே ஷீ?

நம்பிகோபாலன்
22-12-2006, 03:43 PM
தவறுகள் மனிதனுக்கு மட்டுமல்ல இயற்க்கைக்கும் உண்டு...கடலன்னையும் இரு வருடங்களாக வருத்தத்தில் இருக்கிறாள் .....அவள் மேல் இனியும் கோபம் வேண்டாமே

ஷீ-நிசி
22-12-2006, 03:43 PM
அவைகளுக்கு என்பதின் பயன்பாடென்பது தமிழில் எங்கு வரும்? அல்லது பயன்பாடே இல்லையா?

தெரிந்துக் கொள்வதற்காகத்தான்

ஷீ-நிசி
22-12-2006, 03:46 PM
இந்த கவிதை ஜனவரி 2005-ல் எழுதப்பட்டது... அன்று செய்த தவறுக்காகத்தான் இந்த கவிதை.

மறுபடியும் கடலன்னை தவறு செய்தால்
மறுபடியும் கவிதையென எழுதுவேன்..

அலை என்னையும்
அழைத்துக் கொள்ளும்வரை...

இளசு
22-12-2006, 03:46 PM
அவைகளுக்கு என்பதின் பயன்பாடென்பது தமிழில் எங்கு வரும்? அல்லது பயன்பாடே இல்லையா?

தெரிந்துக் கொள்வதற்காகத்தான்

ஷீ,

நன்கு தமிழறிந்தவர்களும் அடிக்கடி செய்யும் பிழைகளில் இதுவும் ஒன்று.

they, them - என்ற பயன்பாட்டில் அவைகள் தவறு.

நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின - இது சரி...

ஷீ-நிசி
22-12-2006, 03:48 PM
they என்றால் அவர்கள் சரி...

them என்றால் தமிழில்??

இளசு
22-12-2006, 03:49 PM
they என்றால் அவர்கள் சரி...

them என்றால் தமிழில்??

it - அது, them - அவை

இந்த இடத்தில அவை என்பதே பன்மை!

நம்பிகோபாலன்
22-12-2006, 03:50 PM
தவறுகள் திருத்தபட வேன்டுமே தவிர தண்டிக்கப்படகூடாது என்பது என் விண்ணப்பம் ....

ஷீ-நிசி
22-12-2006, 03:59 PM
நன்றி நண்பரே.. இனி திருத்திக்கொள்கிறேன்

ஆதவா
22-12-2006, 04:03 PM
கண்ணீர் விடுகிறேன் காதலனே
நீ செய்த தவறுக்காக,,
அடுக்குகளாய் ஏற்றிவிட்டாய்
அலைகளால் அழித்துவிட்டேன்

என் கண்ணீர் நீரால் தெரியாது போனது
இக் கவிஞர்களின் கண்ணீர் எனக்கு புரியாது போனது

அன்று நடுங்கினாய்
என் ஒழுங்கீனக் காதலனே-அதனால்
இன்றும் நடுங்குகிறேனே
ஷீ யின் கவிதைகளாலே..

என் அருமை நண்ப ஷீ
மற்றும்
என்னை பாராட்டிய வாயால்
பேயென சொல்லிய கவிஞர்களே
என் காதலன் செய்த தவறுக்கு
இன்னுமா கவித் தண்டனை எனக்கு??

ஷீ-நிசி
22-12-2006, 04:16 PM
ஆதவா என்னமோ சொல்ல வரன்னு தெரியுது... ஆனா என்னனுதான் தெரியலப்பா

ஆதவா
22-12-2006, 04:22 PM
தீண்டிய என் காதலன் நெஞ்சினை
வஞ்சம் என்றீரே கவிஞர்களே - அலை
தாண்டிய தால் உம் குழந்தை களை
கொன்றேனெனச் சொன்னீர்களே
வேண்டியா தீண்டினேன்; அதுவல்ல -அவன்
தூண்டிய தாலே தானய்யா!!

பாரதம் எனக்கும் உயிரன்றோ!
என் காதலன் செய்த தவறுக்கு
காரணம் நானென் கிறீர்களே!!

ஷீ-நிசி
22-12-2006, 04:23 PM
காதலன் யார்

ஷீ-நிசி
22-12-2006, 04:25 PM
கண்ணீர் விடுகிறேன் காதலனே
நீ செய்த தவறுக்காக,,
அடுக்குகளாய் ஏற்றிவிட்டாய்
அலைகளால் அழித்துவிட்டேன்

பாரதம் எனக்கும் உயிரன்றோ!
என் காதலன் செய்த தவறுக்கு
காரணம் நானென் கிறீர்களே!!


காதலன் கடல் என்றால் காதலி யார்

நம்பிகோபாலன்
22-12-2006, 04:26 PM
தீண்டிய என் காதலன் நெஞ்சினை
வஞ்சம் என்றீரே கவிஞர்களே - அலை
தாண்டிய தால் உம் குழந்தை களை
கொன்றேனெனச் சொன்னீர்களே
வேண்டியா தீண்டினேன்; அதுவல்ல -அவன்
தூண்டிய தாலே தானய்யா!!

புரியவில்லை.....

ஆதவா
22-12-2006, 04:28 PM
நாமி ருவரும் கூடல் செய்வோமெனச்
சொல்லி அடுக்கடுக்காய் எழுந்து
நேமி என் கைகளால் பல
செல்வங்களை அழிக்கச் செய்த
பூமி யே என் காதலன்...

ஆதவா
22-12-2006, 04:33 PM
தீண்டிய என் காதலன் நெஞ்சினை
வஞ்சம் என்றீரே கவிஞர்களே - அலை
தாண்டிய தால் உம் குழந்தை களை
கொன்றேனெனச் சொன்னீர்களே
வேண்டியா தீண்டினேன்; அதுவல்ல -அவன்
தூண்டிய தாலே தானய்யா!!

புரியவில்லை.....


விம்மல் சத்தம் கேட்டேன்
கரையினிலே அங்கே பல
கம்மல் விழுந்திடக் கண்டேன்
குழந்தை இவளுக்கு வயதில்லை ஆறு
உன்னாலே விளைந்ததிங்கே ஊறு.
ஏ!! காதலனே !! பார்
உன் காமம் எழுதிய சாதலை

ஆதவா
22-12-2006, 04:35 PM
பாறை உள்ளம் என்கிறார்கள் இவர்கள்
ஆம் சொல்லுவார்கள்
சூறை கொண்ட என்னை இனி
கவிதையாலே கொல்லுவார்கள்

ஆதவா
22-12-2006, 04:37 PM
அற்றவனும்
உற்றவனும்
விற்றவனும்
கற்றவனும்
பற்றவனும்
பெற்றவனும்

சொல்லவைத்தாய்
நான் கடல் தாயல்ல
வெறும் பேயென்று

நம்பிகோபாலன்
22-12-2006, 05:10 PM
யாரு காதலன்

ஆதவா
22-12-2006, 05:17 PM
யாரு காதலன்

நாமி ருவரும் கூடல் செய்வோமெனச்
சொல்லி அடுக்கடுக்காய் எழுந்து
நேமி என் கைகளால் பல
செல்வங்களை அழிக்கச் செய்த
பூமி யே என் காதலன்...

நம்பிகோபாலன்
22-12-2006, 05:25 PM
அருமை அன்பரே....காமத்தில் பிறப்பும் உண்டு இறப்பும் உண்டு போலிருக்கிறது

ஆதவா
22-12-2006, 05:40 PM
அருமை அன்பரே....காமத்தில் பிறப்பும் உண்டு இறப்பும் உண்டு போலிருக்கிறது

காமம் அது பலவுண்டு..
பிறப்புண்டு
இறப்புண்டு
காதலுண்டு
சாதலுண்டு (இச் சாதல் பேரின்பம் )
தாய் மறக்கும் தன்மையுண்டு
நோய் பறக்கும் வன்மையுண்டு
ஏழ் பிறவி யெடுத்தாலும்
வாழ் திடவேண்டும் காமத்தோடு,,

(பிகு) காமம் ஒன்றும் வெறும் இன்பம் மட்டுமல்ல

மேல் நோக்கிப் பார்க்கும்
எனது இடுப்பிலிருந்து கீழாய்
துலாவி, என்னுயிரினில்
இடுகிறாய்
என் கண்களும் காணாத
உன்னுயிரை!
காலக்கெடுவினில்
வலியோடு பிடுங்கியெடுக்கிறாய்
நீயிட்ட நம்முயிரை..

என் பழைய கவிதைகளில் ஒன்று

நம்பிகோபாலன்
22-12-2006, 05:52 PM
உங்கள் கவிதைகள் தொகுப்பு தர இயலுமா...

ஆதவா
22-12-2006, 05:58 PM
உங்கள் கவிதைகள் தொகுப்பு தர இயலுமா...

வகுத்த கவிதை யிட
தமிழ் மன்ற மிருக்க
தொகுக்க வேண்டுமோ
நம்பி கோபாலரே

கவிதை தொகுப் பொன்றுமில்லை
யாவும் இங்கேயே
அவித்து விட்டேன்
பாருங்கள்...

ஆதவா
22-12-2006, 05:59 PM
என் வலைப்பூ வாசனை நுகருங்களேன்...

http://www.kavithai.fundataz.com

நம்பிகோபாலன்
22-12-2006, 06:08 PM
தன்னடக்குத்துக்கு மறுபெயர் ஆதவன்

ஆதவா
22-12-2006, 06:19 PM
தன்னடக்குத்துக்கு மறுபெயர் ஆதவன்

கொதித்தெழும் ஆதவனும்
தன் னடங்குவானெனில்
உதித்தெழும் நானும்
தன்னடக்க முள்ளவனே

சதை கண்ட பின்னும்
கொத்தாது போகாதாம் பருந்து
வதை கண்டபின்னும்
தமிழ் பார்க்காது போவேனா?
புதைத்து விடலாம் இங்கிலீசு பாஷயை
இனி அது இங்கே உயிர்தெழாதவாறு
நகைக்க வேண்டாம் நம்பியே
என்னை அடக்கமெனச் சொன்ன தம்பியே!! (கவிதைக்காக தம்பி... மற்றபடி அண்ணன் )

ஷீ-நிசி
23-12-2006, 08:41 AM
சண்டை போட்டு
கட்டிட்டாங்க,

அவங்க சாமிக்கு ஒரு கோவில்,
இவங்க சாமிக்கு பக்கத்துலயே;

இப்போ சாமிங்க ரெண்டும்
ஒண்ணா நிக்குது!

கோவில் கட்டின ஜனங்க மட்டும்
பிரிஞ்சே நிக்குது!!

ஷீ-நிசி

ஆதவா
23-12-2006, 09:07 AM
சண்டை போட்டு
கட்டிட்டாங்க,

அவங்க சாமிக்கு ஒரு கோவில்,
இவங்க சாமிக்கு பக்கத்துலயே;

இப்போ சாமிங்க ரெண்டும்
ஒண்ணா நிக்குது!

கோவில் கட்டின ஜனங்க மட்டும்
பிரிஞ்சே நிக்குது!!

ஷீ-நிசி


அருமையான பார்வை ஷீ...
இது உண்மையில் நடக்கும் சம்பவம்
படையுங்கள் மேலும்....

meera
23-12-2006, 12:13 PM
இது நிதர்சன உண்மை.:eek: :eek: :eek:

அருமை ஷீ.

ஷீ-நிசி
23-12-2006, 12:13 PM
மிக்க நன்றி ஆதவா....

இதை வேறு மாதிரி எழுதியிருப்பேன்... சில காரணங்களுக்காக பொதுவாக எழுதினேன்

ஆதவா
23-12-2006, 01:07 PM
மிக்க நன்றி ஆதவா....

இதை வேறு மாதிரி எழுதியிருப்பேன்... சில காரணங்களுக்காக பொதுவாக எழுதினேன்


ஆமாமாம்!!! இங்கு மதம் இறைவன் போன்றவற்றை உள்ளே கொண்டுவருதலே ஒருமாதிரி யாக இருக்கும்...

ஷீ-நிசி
23-12-2006, 01:12 PM
நன்றி மீரா மற்றும் ஆதவா

இளசு
24-12-2006, 10:15 AM
பல ஊர்கள்.. பல கலவரங்கள்..
சில கொலைகள்....
நிதர்சன.. நித்தியக் கொடுமை..
பொதுவாய்ச் சொன்ன பாங்கு நன்மை..
பாராட்டுகள் ஷீ

பிச்சி
24-12-2006, 12:08 PM
என்னங்க.... ரெண்டு பேரும் திட்டிகிட்டீங்களா? ஒன்னுமே புரியல...

ஷீ-நிசி
24-12-2006, 12:40 PM
முத பார்வையிலேயே
நொறுங்கிடுச்சி இதயம்;
இனிமேலும் வருமாடி
என் வாழ்வில் உதயம்!

வார்த்தை ஒண்ணு சொல்லிபுட்டா
செய்திடுவேன் எதையும்;
வார்த்தை மட்டும் வந்துபுட்டா
வாடாது என் சதையும்!

நேத்து வரைக்கும் தோணலையே
வகிடெடுத்து தல வார;
சேர்த்துப்புட்டேன் கலர் கலரா
சீப்பு மட்டும் ஒரு நூற!

உட்காரப் புடிக்கலடி
ஜன்னல் பக்கம் பஸ்ஸுக்குள்ள;
காத்துக் கொஞ்சம் தல கலைச்சா
கலங்குறேனே மனசுக்குள்ள!

வடிச்சி வச்ச சோறு கூட
என் பசிய தூண்டலடி;
குடிச்சிப் பார்த்த நாக்கு கூட
தேன் ருசிய காட்டலடி!

கால் கடுக்க நின்னாலும்
கண்டுக்காம போற;
கண்டுபிடிச்சேனே பொண்னே
உன்னோட இன்னொரு பேர!

அப்பப்போ கெடச்சிடுமே
உன்னோட தரிசனம்;
எப்பத்தான் வருமோ
என் மேல கரிசனம்!

தனியாளா வெளிய வாடி
என் காதல் சொல்ல;
பிணியாளா புலம்புறேனே
என் மனசுக்குள்ள!

யார் யாரையோ தூது விட்டேன்;
என்னென்னமோ செய்துப்புட்டேன்!
உன் மனசு இரங்கலியே!
என் மனசு உறங்கலியே!!

காதல் இருக்குனு சொல்லிப்புடு -ஒண்ணு
இல்லைனு தள்ளிவிடு
எதை எதையோ சொல்லி
உன் காதல் மறைக்கறியே;
புரியாத பதில் சொல்லி
என் நெஞ்ச அறுக்கறியே!

செத்த பின்னாவது வருமாடி
உன் காதல் மோகம்;
அப்ப வந்தாலும் போதுன்டி
என் கட்ட வேகும்!

ஷீ-நிசி

பிச்சி
24-12-2006, 12:50 PM
நல்ல கவி ஷீ.. கிராமத்து டைப்ல நானும் எழுத ட்ரை பன்ன்ரேன்,,

ஷீ-நிசி
24-12-2006, 12:51 PM
வாழ்த்துக்கள்..பிச்சி... சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்

guna
25-12-2006, 05:39 AM
செத்த பின்னாவது வருமாடி
உன் காதல் மோகம்;
அப்ப வந்தாலும் போதுன்டி
என் கட்ட வேகும்!

ஷீ-நிசி

கட்ட வெந்தா மட்டும்
இப்ப என்ன ஆகும்?
தாங்கலையே ஷீ-நிசி
உங்க காதலின் சோகம்

அழகான கிராமத்து நடை கவிதைக்கு வாழ்த்துக்கள் ஷீ-நிசி.

குணா

meera
25-12-2006, 05:46 AM
ஷீ,

கிராமத்து வாசனை வருது.அழகான கவிதைக்கு பாராட்டுகள்.

மதி
25-12-2006, 05:52 AM
ஷீ..
நல்லதொரு கவிதை...
உண்மையிலேயே கிராமத்துக் காதலன் பாடு திண்டாட்டம் தான். அவன் பார்த்தது அழகான ராட்சசியோ?

ஆதவா
25-12-2006, 06:22 AM
ஷீ, கிராமத்தில் இருந்து காதலித்து சோகமானது போன்ற உணர்வு....

இளசு
25-12-2006, 06:57 PM
இந்த வகைக் கவிதைகள்...
கம்மஞ்சோறு, கருப்பட்டி போல்
நெஞ்சுக்கு நெருக்கமானவை..

பீட்ஸாவோ கேப்பைக்களியோ
உணவென்ற ஒன்றுதான்...

கிராமமோ...நகரமோ - காதல்
உணர்வுகள்.. வேதனை ஒன்றுதான்..


பாராட்டுகள் ஷீ-நிசி..

பிச்சியின் எசப்பாட்டும் வரட்டும்...

ஷீ-நிசி
30-12-2006, 12:37 PM
நன்றி குணா, மீரா, இராஜேஷ்குமார், ஆதவா மற்றும் இளசு..... அவர்களே

ஆதவா
30-12-2006, 01:18 PM
நன்றி குணா, மீரா, இராஜேஷ்குமார், ஆதவா மற்றும் இளசு..... அவர்களே

கிறிஸ்மஸ் முடிஞ்சதா?

ஷீ-நிசி
30-12-2006, 01:20 PM
ஆதவா...... இங்கதான் இருக்கியா... இப்பதான் வந்தேன்....நல்லபடியா முடிஞ்சது ஆதவா

gandhi
01-01-2007, 10:50 AM
கிராமத்து மண்ணுக்கு மட்டுமல்ல,
காதலுக்கும் மணம் உண்டு.
தொடரட்டும் உங்கள் கவி மணம்.

அன்புடன்,
காந்தி.

ஷீ-நிசி
01-01-2007, 11:16 AM
நன்றி காந்தி

ஷீ-நிசி
01-01-2007, 11:55 AM
உறங்கும் நேரங்களில்
விழித்துக்கொண்டும்,
விழிக்கும் நேரங்களில்
உறங்கிக்கொண்டும்,
இருந்திருக்கமாட்டேன்!

பசி நேரம், ருசி காரம்
எனக்கும் கூட
மறந்துபோகுமென்று உணர்ந்து
இருந்திருக்கமாட்டேன்!

வைரமுத்துவையும், வாலியையும்
இத்தனை அதிகமாய் விரும்பி
இருந்திருக்கமாட்டேன்!

சோகப் பாடலின்
வரிகளையெல்லாம்
இவ்வளவு வேகமாய்
என் மனதில் பதித்து
இருந்திருக்கமாட்டேன்!

நொடியில் கடந்துபோகும்
உன் கடைக்கண் பார்வைக்காக
யுகங்களை வீணாக்கி
இருந்திருக்கமாட்டேன்!

சாதாரணமாக நீ சிந்தும்
வார்த்தைகளுக்கெல்லாம்;
ஆயிரம் அர்த்தங்கள் சேர்த்து
ஆனந்தித்து இருந்திருக்கமாட்டேன்!

உனக்கு திருமணம் -என்று
உன் பெற்றோர் வைத்த
பத்திரிகையை படிக்காமல்
இருந்திருக்கமாட்டேன்!

உன் கணவரோடு
நீ நிற்கும் காட்சியை கண்டு;
உதடுகளில் புன்னகை படர,
உள்ளத்தில் அழுது கொண்டு
இருந்திருக்கமாட்டேன்!

சத்தியமாக, எனக்குள்(ளும்)
உறங்கிக் கொண்டிருந்த
கவிஞனின் உறக்கத்தை
ஒருநாளும் கலைத்து
இருந்திருக்கமாட்டேன்!

ஆதவா
01-01-2007, 12:22 PM
ஆதவா...... இங்கதான் இருக்கியா... இப்பதான் வந்தேன்....நல்லபடியா முடிஞ்சது ஆதவா

எங்கப்பா போறது? வேல ஜாஸ்தி

ஆதவா
01-01-2007, 12:35 PM
ஆர்குட்டில் படித்திருக்கிறேன் ஷி. அருமையான சோகம் கலந்த கவிதை

ஷீ-நிசி
01-01-2007, 01:00 PM
நன்றி ஆதவா...

ஆதவா
01-01-2007, 01:26 PM
ஷீ, இன்று எப்படி புதுவருடம் கொண்டாடினீர்கள்?

ஷீ-நிசி
01-01-2007, 01:40 PM
வழக்கம்போல ஆலயத்தில்தான் ஆதவா.....

நம்பிகோபாலன்
02-01-2007, 05:48 PM
அருமை நண்பரே.... காதலின் சோகம் என்றுமே சுகமான வலிதான்

ஓவியா
02-01-2007, 05:54 PM
அழகான கவிதை ...
ஆழமான அர்த்தம்.....

பாராட்டுக்கள்

வாழ்க்கையில்
ஒருமுறையேனும்
காதலித்தே
ஆகவேண்டும்
இல்லையேல் - நீ
மடிவதே மேல்
- ஓவியா

இளசு
02-01-2007, 07:08 PM
தப்புகள் இல்லையென்றால்
தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு செய்யேண்டா

-- வைரமுத்து வரிகள் இவை..

தப்பு என்பதற்கு காதலையும்
தத்துவம் என்பதற்கு கவிதையையும்
பொருத்திப் பாடுங்கள்..
பொருத்தமாய் இல்லை?

பாராட்டுகள் ஷீ-நிசி!

ஷீ-நிசி
03-01-2007, 05:37 AM
http://www.ddasonline.com/Images/helmet1.jpg

மழையின் தூறல்
விழுமுன் அணிகிறாய்
மழைக்கவசம்!

தலையில் கீறல்
விழுமுன் அணிவாயோ?!
தலைக்கவசம்!

ஷீ-நிசி
03-01-2007, 06:12 AM
நன்றி ஓவியா மற்றும் நம்பி அவர்களே!

ஷீ-நிசி
03-01-2007, 06:14 AM
தப்புகள் இல்லையென்றால்
தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு செய்யேண்டா

-- வைரமுத்து வரிகள் இவை..

தப்பு என்பதற்கு காதலையும்
தத்துவம் என்பதற்கு கவிதையையும்
பொருத்திப் பாடுங்கள்..
பொருத்தமாய் இல்லை?

பாராட்டுகள் ஷீ-நிசி!

காதல் இல்லையென்றால்
கவிதை இல்லையடா
கவிதைகள் பிறக்கட்டுமே
காதல் செய்யேண்டா

அருமை இளசு...

meera
03-01-2007, 07:46 AM
ஷீ,

இதெல்லாம் சொன்னா யாரு கேக்கறாங்க.நல்லா சத்தமா சொல்லுங்க.

ஷீ-நிசி
03-01-2007, 07:52 AM
மீரா..

நமக்காக இல்லன்னாலும் நம்மை நேசிக்கும் உறவுகளுக்காகவாது நாம் தலைக்கவசம் அணியவேண்டும்.... அவர்களால் தாங்க முடியாது நம் இழப்பை.

meera
03-01-2007, 07:55 AM
உண்மை ஷீ.

ஷீ-நிசி
03-01-2007, 08:15 AM
விழி நீர் இரவெல்லாம்
தலையணை நனைக்க
வலியோடு உறங்குகிறேன் நிலவே!

சில இரவுகள் மட்டும்
உமிழ் நீர் தலையணை நனைக்க
உறங்குகிறேன்!

அன்றெல்லாம் உன் இதழ்கள்
என்னைக் கண்டு
புன்னகைத்திருந்திருக்கும்!!

ஆதவா
03-01-2007, 08:51 AM
http://www.ddasonline.com/Images/helmet1.jpg

மழையின் தூறல்
விழுமுன் அணிகிறாய்
மழைக்கவசம்!

தலையில் கீறல்
விழுமுன் அணிவாயோ?!
தலைக்கவசம்!

நச் சுனு ஒரு இச்...

மண்டையில கொட்டுதுபா... ஏன்ன நானும் ஹெல்மட் போட்றதில்ல

ஒன்னு வாங்கணும்..

ஷீ-நிசி
03-01-2007, 08:55 AM
முதல்ல அதை வாங்குங்க ஆதவா..

ஆதவா
03-01-2007, 11:20 AM
முதல்ல அதை வாங்குங்க ஆதவா..

எல்லாம் அசால்டுதான் பா!!! வாங்கிரலாம். 2007 க்கு அதையாவது பண்ணுவோம்

ஷீ-நிசி
03-01-2007, 01:14 PM
நொடியில் சிந்தினான்
வலியான வார்த்தைகளை;
நொடிக்கொருதரம் சிந்தித்தான்
அப்படி சொல்லாமலிருந்திருக்கலாமே!

இறுக்கமான மனதில்
உருக்கமான வேண்டுதல்
இறைவனிடம்;
சமாதானம் வேண்டி!

சாபங்களால் அர்ச்சிக்கிறாய்
பிரச்சனையில்;
தீபங்களால் ஆராதிக்கிறாய்
பிரார்த்தனையில்;

காரணமில்லாமலிட்ட சாபங்களும் -மனம்
பூரணமில்லாமலிட்ட தீபங்களும்
ஒருபோதும் தன்
நிலையினை அடைவதில்லை;

இறைவனை
நேசிக்கின்ற உன்னால் -அவன்
படைத்திட்ட உன்
இனத்தவனை நேசிக்க
முடிவதில்லை!

சமாதானம் வேண்டுமா
இறைவனைத் தேடாதே;
எதிரியைத் தேடிச்செல்!

சண்டை வேண்டுமா
எதிரியைத் தேடாதே;
இறைவனைத் தேடிச்செல்!

மூன்றாம் நபரால்,
உருவாகும்
சமாதானங்களுக்கு ஆயுள்
மூன்றில் ஒரு பங்கு மட்டும்தான்!

சம்பந்தப்பட்டவர்கள்
ஒரு நாள் உணரும்வரை;
சமாதானங்கள்
ஒரு நாளும் உயிர்த்தெழுவதில்லை!

மன்னிக்கின்ற மனதில்
மனிதம் இருக்கிறது;
மறக்கின்ற மனதில்
புனிதம் இருக்கிறது..

ஆதவா
03-01-2007, 01:35 PM
சமாதானக் கவிதை

மன்னிக்கின்ற மனதில்
மனிதம் இருக்கிறது;
மறக்கின்ற மனதில்
புனிதம் இருக்கிறது

அழகிய உண்மையான வரிகள்..

அய்யா ஷி.... நிசி.. இப்படி சமாதானம் சமாதானம் னு எழுதி எழுதியே நோபல் வாங்கிட்ர ஐடியாவோ?
ஒரே காதல் பிரியாணியாகவே சாப்பிட்டு அலுத்துப் போச்சு.. இந்தமாதிரி கருவாட்டுக் கொழம்பு ரெம்பவே ருசி./.

நிறய கருவாடு வறுத்துப் போடுங்க...

ஷீ-நிசி
03-01-2007, 02:14 PM
சமாதானக் கவிதை

மன்னிக்கின்ற மனதில்
மனிதம் இருக்கிறது;
மறக்கின்ற மனதில்
புனிதம் இருக்கிறது

அழகிய உண்மையான வரிகள்..

அய்யா ஷி.... நிசி.. இப்படி சமாதானம் சமாதானம் னு எழுதி எழுதியே நோபல் வாங்கிட்ர ஐடியாவோ?
ஒரே காதல் பிரியாணியாகவே சாப்பிட்டு அலுத்துப் போச்சு.. இந்தமாதிரி கருவாட்டுக் கொழம்பு ரெம்பவே ருசி./.

நிறய கருவாடு வறுத்துப் போடுங்க...


கருவாட்டுக் குழம்புனா எனக்கு ரொம்ப புடிக்கும்... ஆனா பிரியாணி கிடைச்சாலும் விடுறதில்ல

ஓவியா
03-01-2007, 03:58 PM
மக்களுக்கு அவசியம் தேவையான அறிவுரை....


கவிதையாய்....ஜோர்...

ஓவியா
03-01-2007, 04:14 PM
காதல் இல்லையென்றால்
கவிதை இல்லையடா
கவிதைகள் பிறக்கட்டுமே
காதல் செய்யேண்டா

அருமை இளசு...

அட நம்ம இளசு சார் அருமையானவர்தான்......:D

கவிதையை வரைந்த வைரமுத்துவுக்கும் ஒரு நன்றி

பென்ஸ்
03-01-2007, 04:15 PM
பாராட்டுகள் ஷீ...

அப்படியே முகத்தில் வந்து மோதும் காற்றி அனுபவித்து கொண்டு
வண்டு ஓட்டுவது என்றால் ஒரு சுகந்தான்...

மழை விழும் நேரங்களில் விழும் ஒவ்வொரு துளியையும்
தலையில் வாங்கி முகத்தில் அந்த நீரை வழியவிட்டு, உதடோடு
இறங்கும் அந்த துளிகளை காற்றில் மூச்சினால் விசிறியடித்து ...

அடடே சுகந்தான்....

ஆனால் இவ்வாறு பயணிக்கும் சமயங்களில் சாலையில் எஙோ
விபத்தினால் சிக்கி மண்டை உடைந்துகிடக்கும் உயிர்களை பாக்கும்
போது...
இந்த ரசனையேல்லாம் செத்துவிடும்....

ஆனாலும் தலைகவசம் அணிய மணம் வந்தது இல்லை..
அது ஒரு தொந்தரவாஇ தோன்றும்... சரியா சுவாசிக்க முடியாது...
இரவு ஓட்டும் போது சரியாக வாகனக்களை கணிக்க முடியாது
(தரமில்லாத கண்ணாடிகளால்) ....
ஆனாலும் இப்போ இங்கு தலைகவசம் கண்டிப்பு ஆனாதால் ..
பழக்கமாயிடுச்சு....

இப்போ தலைகவசமில்லாமல் நான் வெளியே செல்லுவதில்லை....

பென்ஸ்
03-01-2007, 04:43 PM
எச்சரிக்கிறேன்..!!!
என்னை காதலனாக்கிவிடு
இல்லையேன்றால்
நான் கவிஜனாகிடுவேன்..!!!
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாரம்மா அந்த அழகான ராச்சசி.... நன்றிமா
நல்ல கவினரை கொடுத்ததுக்கு....

இளசு..
தப்பு என்பது தவறி செய்வதுதானே???? அதையே திருப்பி திருப்பி கூட செய்யுறோமே...!!!?????

ஷீ-நிசி
03-01-2007, 05:09 PM
எச்சரிக்கிறேன்..!!!
என்னை காதலனாக்கிவிடு
இல்லையேன்றால்
நான் கவிஜனாகிடுவேன்..!!!
!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாரம்மா அந்த அழகான ராச்சசி.... நன்றிமா
நல்ல கவினரை கொடுத்ததுக்கு....

இளசு..
தப்பு என்பது தவறி செய்வதுதானே???? அதையே திருப்பி திருப்பி கூட செய்யுறோமே...!!!?????


நன்றி பெஞ்சமின்...

தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது

M.G.R ஒரு பாடலில் பாடியுள்ளார்

ஷீ-நிசி
03-01-2007, 05:10 PM
நன்றி பெஞ்சமின்

இளசு
03-01-2007, 08:03 PM
சாலையில்
விபத்தினால் சிக்கி மண்டை உடைந்துகிடக்கும் உயிர்களை பாக்கும்
போது...

....

நல்ல கருத்தைச் சொன்ன கவிதைக்கு நன்றி ஷீ-நிசி.

இனிய பென்ஸின் பின்னூட்டம் சிறப்பு.

நரம்பியல் நிபுணர் இராமமூர்த்தி அடிக்கடி வலியுறுத்திய கருத்து.

எத்தனை இளம் உயிர்கள் அகால விடை பெற்றதைப் பார்த்திருப்பார்...!:mad:

இளசு
03-01-2007, 08:07 PM
சமாதானம் வேண்டுமா
இறைவனைத் தேடாதே;
எதிரியைத் தேடிச்செல்!

சண்டை வேண்டுமா
எதிரியைத் தேடாதே;
இறைவனைத் தேடிச்செல்!

..

வீரியமான உண்மை...
அருமை.
பாராட்டுகள் ஷீ-நிசி!

இளசு
03-01-2007, 09:46 PM
பலநாள் உறக்கம் தொலைந்தால்
சேர்த்துவைத்து உமிழ்நீர் வழிய தூங்கிதானே ஆகணும்..


இழப்பு = ஈடு..
எல்லாவற்றிலும் ஒரு கணக்கு இருக்கிறது...

பாராட்டுகள் ஷீ-நிசி!

ஷீ-நிசி
04-01-2007, 02:33 AM
நன்றி இளசு

ஷீ-நிசி
04-01-2007, 02:34 AM
நன்றி இளசு

ஷீ-நிசி
04-01-2007, 02:37 AM
நன்றி இளசு

meera
04-01-2007, 05:43 AM
ஷீ,

நல்ல கருத்து கவிதையில்.தொடருங்கள் நண்பா.

ஷீ-நிசி
04-01-2007, 01:53 PM
எந்த வெள்ளை புறா
நடந்து சென்ற
பாத சுவடுகள்
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் இரவு நேரங்களில்
போர்த்திக் கொள்ளும்
பொத்தல் நிறைந்த போர்வையா
இந்த நட்சத்திரங்கள்?!

பால் நிலா
தோட்டத்தில் பூத்திருக்கும்
தேன் மல்லிப் பூக்களா
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் சுத்தம்
செய்யப்படுவதற்காய்
தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா
இந்த நட்சத்திரங்கள்?!

மேக தேவதைகளின்
உறக்கத்திற்காய் வான் மெத்தை மேல்
துவப்பட்ட வெள்ளிப் பூக்களா
இந்த நட்சத்திரங்கள்?!

நிலாவிற்கு
வர்ணம் பூசினப்போது
சிந்தின துளிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

விதியினை எழுதும்
எழுதுகோலில் மை உள்ளதா என்று
இறைவன் உதறிப் பார்த்த துளிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் இரவு நேரங்களில்
கீழே விழுந்து விடாமலிருக்க
குத்தப்பட்ட குண்டூசிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

நட்சத்திரங்களிடமே கேட்டேன்?!

விடை கிடைக்குமுன்பே
விடை பெற்றுக்கொண்டது;
என் நட்சத்திர கனவு
அலாரத்தின் கதறலால்......

அறிஞர்
04-01-2007, 01:59 PM
நட்சத்திரங்களை பற்றி எத்தனை சிந்தனைகள்...

அருமை அன்பரே....

ஒவ்வொரு சிந்தனையும் தனித்தனியே.. நட்சத்திரங்களாக அலங்கரிக்கிறது.

ஷீ-நிசி
04-01-2007, 02:05 PM
நன்றி அறிஞரே!

ஆதவா
04-01-2007, 03:32 PM
எந்த வெள்ளை புறா
நடந்து சென்ற
பாத சுவடுகள்
இந்த நட்சத்திரங்கள்

அருமையான சிந்தனை
தொலைவில் உள்ளவைகள் கூட சிந்தனையில் சிந்தையில் ஒட்டிக்கொள்ளும் உம் கவிதைகளால்....

வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
04-01-2007, 04:17 PM
பாராட்டுகளுக்கு நன்றி ஆதவா

ஷீ-நிசி
06-01-2007, 03:41 AM
பூ ஒன்று பூவைக்
கசக்கி பிழிந்திடுமோ?!

புலிக்கூட மானைத்தான்
கொல்ல நினைக்கும்;

பூனைக்கூட எலியைத்தான்
கொல்ல நினைக்கும்;

சொந்த இனத்தையே
அழிக்க நினைபதில்லை,
எந்த இனமும்!

மனித இனமோ?!

பிஞ்சுக் குழந்தைகளின்
கன்னக் குழிகளைவிடவும்,
எண்னெய்க் குழிகள் மீது
தீராக் காதல்!

ஆயுதங்கள் உண்டென்று
ஆயுதங்கள் கொண்டு;
ஆயுதங்கள் தேடினர்!

பேரழிவுகள் ஏற்படுத்தி
கண்ட ஒரே ஆயுதம்!!

ஓ!
இதுதான் பேரழிவு ஆயுதமோ?!

மரணத்தை இப்படியும்
வரவேற்றிட முடியுமா?!

அடுத்த சில நிமிடங்களில்
இறக்கப்போகிறவனுக்கும்
அறிவுரைகள்!!

எப்படி
நடக்க வேண்டுமென்றல்ல;
எப்படி
இறக்க வேண்டுமென்று!

மரணம் தழுவிய.. அல்ல.. அல்ல...
மரணத்தை தழுவிய
மாவீரர்களின் வரலாற்றில்
இனி உன்னையும் காணலாம்!!

ஆதவா
06-01-2007, 04:26 AM
சதாமைப் பற்றிய மறைமுக வரிகள். இது அந்த மாவீரனுக்கே அஞ்சலி. ஆனால் முதலிரண்டு பேராக்கள் ஒட்டாமல் செல்வதாகத் தோணுகிறது.

சொந்த இனத்தையே
அழிக்க நினைபதில்லை,
எந்த இனமும்!

வாசிக்க, யோசிக்க ஒரு நல்ல கவிதை

மயூ
06-01-2007, 06:07 AM
சதாமுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றீர்கள் போல!
கோடாரிக்காம்பு போல சீவிக்கும் சிலரை தன் இனம் என்றி அழிக்காமல் இருக்க முடியாதப்பா!

பண்டாரவன்னியன் தொடக்கம் வீரபாண்டியக்கட்டப்பொம்மன் வரை காட்டிக்கொடுத்தவர் நம் இனத்தவர்தான்.

பென்ஸ்
06-01-2007, 11:29 AM
விழி நீர் இரவெல்லாம்
தலையணை நனைக்க
வலியோடு உறங்குகிறேன் நிலவே!

சில இரவுகள் மட்டும்
உமிழ் நீர் தலையணை நனைக்க
உறங்குகிறேன்!

அன்றெல்லாம் உன் இதழ்கள்
என்னைக் கண்டு
புன்னகைத்திருந்திருக்கும்!!

ஷீ...

அருமை...

அருகில் இருந்தாலும்
நாம் நோக்கும் திசை நோக்கி
அவள் படுத்திருந்தால் கூட
தலையனை கண்ணீரால் நனையும்...:rolleyes: :rolleyes:

விதிவிலக்கு: "டோனி பிராக்ஸ்டன்" பாடிய "அன் பிரேக் மை கார்ட்" பாடலின் கடைசி வரிகள்...:D :D

ஷீ-நிசி
07-01-2007, 03:26 AM
ஷீ...

அருமை...

அருகில் இருந்தாலும்
நாம் நோக்கும் திசை நோக்கி
அவள் படுத்திருந்தால் கூட
தலையனை கண்ணீரால் நனையும்...:rolleyes: :rolleyes:

விதிவிலக்கு: "டோனி பிராக்ஸ்டன்" பாடிய "அன் பிரேக் மை கார்ட்" பாடலின் கடைசி வரிகள்...:D :D

உண்மைதான் பெஞ்சமின்

ஷீ-நிசி
07-01-2007, 03:38 AM
சதாமுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றீர்கள் போல!
கோடாரிக்காம்பு போல சீவிக்கும் சிலரை தன் இனம் என்றி அழிக்காமல் இருக்க முடியாதப்பா!

பண்டாரவன்னியன் தொடக்கம் வீரபாண்டியக்கட்டப்பொம்மன் வரை காட்டிக்கொடுத்தவர் நம் இனத்தவர்தான்.

உங்களுக்கும் எனக்கும் காந்தியைப் பிடிக்கும்... ஆனால் கோட்சேவுக்கு?

எண்ணங்கள் வேறு வேறாய் இருப்பதால்தான் வாழ்க்கை இத்தனை கலவையாயுமிருக்கிறது! கவலையுமாயிருக்கிறது!!

சொந்த இனத்தையே
அழிக்க நினைபதில்லை,
எந்த இனமும்!

மனித இனமோ?!

மனித இனம் என்று மொத்தமாகத்தான் கூறியுள்ளேன்.. இதில் எல்லோருமே அடங்குவர்..

ஷீ-நிசி
07-01-2007, 03:43 AM
எந்த உயிரினமும்
ஆயுதம் ஏந்துவதில்லை.
தன் எதிராளியுடன்
சண்டையிடுவதற்கு.

மனிதனைத் தவிர!

meera
07-01-2007, 08:33 AM
எந்த உயிரினமும்
ஆயுதம் ஏந்துவதில்லை.
தன் எதிராளியுடன்
சண்டையிடுவதற்கு.

மனிதனைத் தவிர!

ஷீ,

உண்மை தான்.அறிவியலை ஆக்கத்திற்கு பயன்படுத்த ஒரு கூட்டம் இருந்தால்.அதை அழிவிற்க்கும் பயன்படுத்த்ற கூட்டமும் இருக்கு .

மு.மேத்தாவின் கவிதை எப்பவோ படிச்சது.கவிதை நினைவில் இல்லை ஆனால் கரு நினைவில் இருக்கிறது.

எந்த பறவையும் கூடு கட்டி வாடகைக்கு விடுவதில்லை.

இந்த கவிதை தொகுப்பில் நிறைய சொல்லிருப்பார்.

leomohan
07-01-2007, 09:00 AM
எந்த உயிரினமும்
ஆயுதம் ஏந்துவதில்லை.
தன் எதிராளியுடன்
சண்டையிடுவதற்கு.

மனிதனைத் தவிர!

நண்பரே அனைத்து மிருகங்களும் சக்திவாயந்த உறுப்புகள் உள்ளதால் அவற்றிற்கு ஆயுதம் தேவையில்லை. மனிதனுக்கு தேவை, ஏனென்றால் அவன் கையால் அடித்தால் யாரும் இறக்க மாட்டார்கள், புலியிடம் ஒரு அடி வாங்கி பாருங்கள், காலால் மிதித்தால் யாரும் இறக்க மாட்டார்கள், யானைக்கால் கீழ் வந்துபாருங்கள், அவன் கடித்தால் யாரும் சாகமாட்டார்கள், பாம்பு கடி பட்டதுண்டா.

அனைத்து உயிரினங்களுக்கும் சண்டையிடும் குணமும் உண்டு. மனிதனுக்கு மட்டும் தான் மூளையே ஆயுதம். அதை வைத்து தான் அவன் ஆயுதங்களை தயாரிக்கிறான்.

:)

meera
07-01-2007, 09:10 AM
ஆயுதங்கள் தயாரிப்பது தவறல்ல மோகன்,அதை அப்பாவி மக்கள் மேல் உபயோகிப்பதுதான் தவறு.

ஷீ-நிசி
07-01-2007, 11:38 AM
ஷீ,

உண்மை தான்.அறிவியலை ஆக்கத்திற்கு பயன்படுத்த ஒரு கூட்டம் இருந்தால்.அதை அழிவிற்க்கும் பயன்படுத்த்ற கூட்டமும் இருக்கு .

மு.மேத்தாவின் கவிதை எப்பவோ படிச்சது.கவிதை நினைவில் இல்லை ஆனால் கரு நினைவில் இருக்கிறது.

எந்த பறவையும் கூடு கட்டி வாடகைக்கு விடுவதில்லை.

இந்த கவிதை தொகுப்பில் நிறைய சொல்லிருப்பார்.

எந்த பறவையும் கூடு கட்டி வாடகைக்கு விடுவதில்லை.ஒற்றை வரியில் ஒரு கவிதை


உணர்ந்து எழுதியமைக்கு நன்றி மீரா

ஷீ-நிசி
07-01-2007, 12:28 PM
http://hietanen.typepad.com/photos/hawaii/rainbow-thumb.jpg

வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;

கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!?
அடியே, உன் புருவங்களைத்தானடி
சொல்கிறேன்.

ஷீ-நிசி
07-01-2007, 01:26 PM
http://img149.imageshack.us/img149/6845/sakuntalagb0.jpg

எப்போதடா வருவாய்?
என் மணாளா!

திறந்தும் என் விழிகள்
எதையுமே காணவில்லை -உன்
நினைவுகளில் உறங்கியதால்!

மறந்தும் என் இதழ்கள்
மொழியொன்றும் பேசவில்லை -உன்
நினைவுகளில் இறங்கியதால்!

நினைவுகள் கலைந்திடுமோ என்று
உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்
நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!

நீ அழைத்தால்
எந்தத் திசைக்கும் வந்திடும்
ஆவலில் என் பாதங்கள்!

எப்போதடா வருவாய்?
என் மணாளா!

ஆதவா
07-01-2007, 02:17 PM
http://hietanen.typepad.com/photos/hawaii/rainbow-thumb.jpg

வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;

கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!?
அடியே, உன் புருவங்களைத்தானடி
சொல்கிறேன்.

ஏனுங்க கண்ணுல ஏதோ தென்படுதா பார்த்து சொல்லுங்க

ஆதவா
07-01-2007, 02:26 PM
எப்போதடா வருவாய்?
என் மணாளா!திறந்தும் என் விழிகள்
எதையுமே காணவில்லை -உன்
நினைவுகளில் உறங்கியதால்!

விழிகள் திறந்தும் உறங்கும் நிலை காதலில்தானே! காதலியின் நினைவுகளில் உறக்கம் அவள் கண்களில் எதுவும் தெரிய வாய்ப்பில்லைதான்

மறந்தும் என் இதழ்கள்
மொழியொன்றும் பேசவில்லை -உன்
நினைவுகளில் இறங்கியதால்!

இன்னும் நினைவுகளிலிருந்து கலையாமல் இருக்கும் உங்கள் கவிதைக்காதலி தமிழ் கூட மறப்பாள். இங்கே மெல்ல நினைவுகளிலேயே அடியெடுத்து வைக்கிறாள்.. அடுத்து பார்ப்போம்

நினைவுகள் கலைந்திடுமோ என்று
உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்
நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!

கண்களில் அனல் பறக்க பார்த்துக் கொண்டிருக்கும் நினைவுகளை அவள் கலையாமல் காக்கிறாளோ? எண்ணம் எப்போதுமே உள்ளங்கை வழியேதானே செல்லும். உஷ்ணம் தலைக்கேறவில்லையா ஷீ?

நீ அழைத்தால்
எந்தத் திசைக்கும் வந்திடும்
ஆவலில் என் பாதங்கள்!

காதலன் அழைத்து காதலி எங்கே வராமல் போவால்? நிஜமாகவும், கற்பனையாகவும்தான்..

எப்போதடா வருவாய்?
என் மணாளா

வருவாங்க ஷீ-- கூடியவிரைவில்.

பிகு: கவிதைகளின் இடைச் சொறுகலை மன்னிக்க,, விமர்சனம் இப்படி பண்ணலாமே என்ற எண்ணம்தான்.
காத்திருந்த காதல் கவிதை மிக அருமை.. சில வரிகள் நன்றாக அமைந்துள்ளது. ]
உதா:
நினைவுகள் கலைந்திடுமோ என்று
உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்
நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!

ஷீ-நிசி
07-01-2007, 02:26 PM
தெரியல ஆதவா, நீதான் சொல்லேன்

ஆதவா
07-01-2007, 02:28 PM
தெரியல ஆதவா, நீதான் சொல்லேன்

என்னங்க ஷீ- புருவத்துல வானவில்லைப் பாத்தீங்க, கண்கள்ல எதையும் பார்க்கலையா??

ஷீ-நிசி
07-01-2007, 02:28 PM
கவிதையை விட உன் விமர்சனம் அருமை ஆதவா

ஷீ-நிசி
07-01-2007, 02:59 PM
விழி வலை

http://i128.photobucket.com/albums/p163/shenisi/eyebrow1.jpg

நாம் தானே வலை விரிப்போம்
மீன் பிடிக்க;
இங்கே மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
என்னைப் பிடிக்க

உன் விழிகளைத்தானடி சொல்கிறேன்

ஆதவா
07-01-2007, 03:05 PM
http://www.esnips.com/imageable/thumbnail/06044b99-7f7b-4e84-9e53-e8b160c7caf8

நாம் தானே வலை விரிப்போம்
மீன் பிடிக்க;
இங்கே மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
என்னைப் பிடிக்க

உன் விழிகளைத்தானடி சொல்கிறேன்

பின்னீட்டீங்க பின்னீட்டீங்க !!

ஆதவா
07-01-2007, 03:09 PM
கவிதையை விட உன் விமர்சனம் அருமை ஆதவா

எல்லாம் உங்க ராசிதான்...

கவிதையில் படம் தெரியவில்லை.. பாருங்க ஷீ!!!

ஷீ-நிசி
07-01-2007, 03:09 PM
நன்றி ஆதவா

meera
07-01-2007, 03:17 PM
எந்த பறவையும் கூடு கட்டி வாடகைக்கு விடுவதில்லை.ஒற்றை வரியில் ஒரு கவிதை


உணர்ந்து எழுதியமைக்கு நன்றி மீரா

அது நான் எழுதியவையல்ல.
மு.மேத்தாவின் கவிதையில் வரும் ஒரு வரி.இந்த தொகுப்பில் அவர் நிறைய அற்புதமான வரிகள் தந்திருப்பார்.எனக்கு அவை நினைவில் இல்லை.

ஷீ-நிசி
07-01-2007, 03:21 PM
அது நான் எழுதியவையல்ல.
மு.மேத்தாவின் கவிதையில் வரும் ஒரு வரி.இந்த தொகுப்பில் அவர் நிறைய அற்புதமான வரிகள் தந்திருப்பார்.எனக்கு அவை நினைவில் இல்லை.


கலக்கம் வேண்டாம், குழம்பவில்லை

அது மு.மேத்தாவின் வரிகள் என்று அறிவேன்.

meera
07-01-2007, 03:21 PM
ஷீ,

சூப்பரூஊஊஊஊஊஊ.:D :D :D :D

ஆதவா
07-01-2007, 03:22 PM
ஆயுதங்கள் தயாரிப்பது தவறல்ல மோகன்,அதை அப்பாவி மக்கள் மேல் உபயோகிப்பதுதான் தவறு.

எந்த வகையில் ஆயுதம் தயாரிப்பது தவறல்ல என்று சொல்லுகிறீர்கள்?

ஷீ-நிசி
07-01-2007, 03:23 PM
மீரா.......

சத்தம் இங்க கேட்குது

meera
07-01-2007, 03:25 PM
தனக்கு துன்பம் வரும் போது தன்னை காத்து கொள்ளும் பொருட்டு தயாரிப்பது தவரல்ல ஆதவா.

meera
07-01-2007, 03:27 PM
கேட்டுதா? உங்களுக்கு நல்லா கேட்கனுமேனு தான் இவ்ளோ சத்தம் ஹி ஹி ஹி ஹி

ஆதவா
07-01-2007, 03:28 PM
கேட்டுதா? உங்களுக்கு நல்லா கேட்கனுமேனு தான் இவ்ளோ சத்தம் ஹி ஹி ஹி ஹி

:D :D :D

ஆதவா
07-01-2007, 03:33 PM
தனக்கு துன்பம் வரும் போது தன்னை காத்து கொள்ளும் பொருட்டு தயாரிப்பது தவரல்ல ஆதவா.

துன்பம் எப்படி வரும்?

காற்றால்,
மழையால்,
பூகம்பத்தால்,
இன்னும் பல இயற்கையால்.

வேறுவகைத் துன்பம் (அதாவது இறந்துபோகக் கூடிய)
மனிதன் அன்றி வராது,.,
விலங்குகள் கூட நாம் சீண்டினாலே போய்விடும்.. (பல தவிரக் கள் உண்டு)

மனிதன் மூலம் வரக்கூடிய துன்பத்தை எதிர்க்க ஆயுதம் வேண்டும்.
அந்த வகையில் நீங்க சொல்லுகிறீர்களா?

ஆதவா
07-01-2007, 03:35 PM
இப்ப தெரியுதுங்க ஷீ!!! நம்ம ரவிவர்மா ஓவியம்... படத்திற்க்கேற்ப அருமையான கவிதை..

ஷீ-நிசி
07-01-2007, 03:36 PM
:D :D :D


நல்லாவே கேட்டுச்சி மீரா..

ஷீ-நிசி
07-01-2007, 03:54 PM
தனக்கு துன்பம் வரும் போது தன்னை காத்து கொள்ளும் பொருட்டு தயாரிப்பது தவரல்ல ஆதவா.

நமக்கு துன்பம் வரும்போது தாக்கினால், தாக்கப்பட்டவனுக்கு அது துன்பம்தானே.. இங்கே நாம் காத்துக்கொண்டோமா? அல்லது காயப்படுத்தினோமா?

ஆதவா
07-01-2007, 03:58 PM
நமக்கு துன்பம் வரும்போது தாக்கினால், தாக்கப்பட்டவனுக்கு அது துன்பம்தானே.. இங்கே நாம் காத்துக்கொண்டோமா? அல்லது காயப்படுத்தினோமா?

இரண்டும்தான். ஆயுதங்களில்லை யெனில் யோசித்துப்பாருங்கள்.

ஷீ-நிசி
07-01-2007, 04:02 PM
இரண்டும்தான். ஆயுதங்களில்லை யெனில் யோசித்துப்பாருங்கள்.

காயங்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வாய்ப்புள்ளது..
அல்லது இருவருமே சமரச நிலைக்கு வந்திருக்கலாம்..

ஆயுதங்களில் கிழ்த்துக்கொண்டு வழியும் இரத்த ஆற்றைக் காட்டிலும்
நகங்களில் கீறிக்கொண்டு வழியும் இரத்தங்களின் அளவு குறைவுதான்

உயிர் பிழைத்திடும் வாய்ப்புகள் அதிகம்

ஷீ-நிசி
07-01-2007, 04:04 PM
ஓ! இது ரவிவர்மாவின் ஓவியமா?... நன்றி ஆதவா

ஆதவா
07-01-2007, 04:22 PM
காயங்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வாய்ப்புள்ளது..
அல்லது இருவருமே சமரச நிலைக்கு வந்திருக்கலாம்..

ஆயுதங்களில் கிழ்த்துக்கொண்டு வழியும் இரத்த ஆற்றைக் காட்டிலும்
நகங்களில் கீறிக்கொண்டு வழியும் இரத்தங்களின் அளவு குறைவுதான்

உயிர் பிழைத்திடும் வாய்ப்புகள் அதிகம்


அது நிஜம்தான்., நம் காலங்களில் போரின் அளவு குறைந்து உலகம் சற்று நல்ல பாதையில் ஜோராக போய்கொண்டு இருக்கிறது.

யோசியுங்க ஷீ!! நாம் படிச்ச வரலாறு எத்தனைப் போர்ன்னுதான் அதிகமே தவிர என்னன்ன செஞ்சாங்கன்னு இல்ல. வாழ்க்கை முழுசா போர் போர் போர் னு கழிச்சிட்டு இருந்தவங்க இருந்திருக்காங்க. எல்லாமெ ஆயுதம்தான்.

நம்ம தமிழ்நாட்டுலயாவது ஆயுதம் குறையனும்னு நெனச்சாங்கலோ என்னவோ ஆயுத எழுத்துக்கூட அவ்வளவா உபயோகப் பட்றதில்ல.

ஆதவா
07-01-2007, 04:24 PM
ஓ! இது ரவிவர்மாவின் ஓவியமா?... நன்றி ஆதவா

எங்கிட்ட நெறய் ஆர்ட் கலெக்ஷன் இருக்குப்பா!! அப்பா ஓவியர்தானே.. ஏதாவது இண்டெர்நெட்டில் படம் எடுத்துக்கிட்டு இருப்பார் வரைஞ்சுக்கிட்டு இருப்பார்,,, அவர்மூலமாத்தான் எனக்கும் தெரியும்.

ஷீ-நிசி
07-01-2007, 04:39 PM
பரவாயில்லையே, அப்பா ஓவியர், மகன் கவிஞர். கலைக் குடும்பம்தான்

ஆதவா
07-01-2007, 04:55 PM
பரவாயில்லையே, அப்பா ஓவியர், மகன் கவிஞர். கலைக் குடும்பம்தான்

ஷீ,, நானும் ஓவியந்தான்,, அப்பப்ப வரைவேன் அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்ல. பொறுமை இல்லப்பா@@

இளசு
07-01-2007, 07:58 PM
கவிதை, ஓவியம் கருத்தைக் கவர்ந்தன.
முக்கியமாய் உள்ளங்கை உஷ்ணம்..

பாராட்டுகள் ஷீ-நிசி.

ஆதவாவின் விமர்சனமும் அழகு...

ஓவியா
07-01-2007, 11:32 PM
பக்கம் திறந்தவுடன்....ராஜாரவிவர்மாவின் ஓவிய....ம்......(எனக்கு ரொம்ப பிடித்த ஓவியர்)

கவிதை, மிகவும் அருமையான சிந்தனை..
கருத்து சொல்ல, விமர்சிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை......


நீ அழைத்தால்
எந்தத் திசைக்கும் வந்திடும்
ஆவலில் என் பாதங்கள்!
ரசித்தேன்

பாரட்டுக்கள் ஷீ-நிசி

ஆதவாவின் விமர்சனமும் அசத்தல்....தூள் மக்கா

கண்களில் கண்ணீர் கொட்டுவது தெரியும்
இதயத்தில் ரத்தம் சொட்டுவது..................????????????????!!!!!!

ஷீ-நிசி
08-01-2007, 02:19 AM
நன்றி இளசு மற்றும் ஓவியா