PDA

View Full Version : நெருப்பு நீ, நீர் நான்.



ஆதவா
18-12-2006, 06:43 AM
நெருப்பு நீ,
நீர் நான்.

சூரியத் தகட்டில்
வெப்பந் தணியா நெருப்பு நீ,
வா!
வந்தனை பூமியை
உருட்டு; திரட்டு;
என்னோடு இணைந்து பிரட்டு.
என்னுள் ஊடுருவி
உள் துளை
கக்கிய தீயெடுத்து
நாக்கிலே குழை.

அணை என்னை; அல்லது
அணைப்பேன் உன்னை.
பிதுக்கி யெடுத்தவாறு
பதுங்கி வா!
தொடு
முத்தமிடு
தீ முழுவதுமாய் கக்கு,
முடிந்தவரை போராடுகிறேன்.

சத்தமிடு,
மொத்தமும் இடு.
இன்னதென அறியாமல் தொடுகிறேன் உன்னை
தாக்கு;
தேக்கு
காதல் ரசங்களை
(உன்)ஜுவாலைகளின் வழியே போக்கு.
சுவடெரித்து விட்டு திரும்பச் செல்;
இல்லயெனில்
எனை நீரென்றும் பாராமல் கொல்.

உடுத்து;
படுத்து;
உன் கோப வெறிக்கு ஆளாகாத
என்னை உன் சாம்பலிலே கிடத்து.

அகல விரி
விழி;
உன் தீயால் என்னிதயம் பிழி.
திடமான் பொருள் எனக்கதுவே.

குதி;
கூச்சலிடு;
அக்னி விட்டு கும்மாளமிடு
சலனமாய் கவனித்தே
அணைக்கிறேன் உன்னை.

சாபமிடு;
கோபமிடு;
ஆக்சிஜன் பொருள்களில்
தாளமிடு;
இசையாகி வழிகிறேன் நீரிலிருந்து,
எரித்துவிடு இந்த இசையை.

சூடு தாங்காது ஓடுவிடுவேனோ?
வெப்பம் என்ன செய்யும் நீருக்கு?
அணைக்க ஓடி வந்து விடு.
வரும் போது,
யாவற்றையும் அழி;
வேண்டியவர்களை கழி;
மிச்சம் வை துளி.
வெறி தலைக்கேறி வந்தாய்
சுடுகிறாய் இன்னமும்.
என் நீர் வற்றியது நெருப்பே!

குனிந்து பார்!
எரிகின்ற ஆழி நெருப்பில்
தீபமாய் கிடக்கின்றேன்..........

நம்பிகோபாலன்
18-12-2006, 09:21 PM
காதல் வெப்பமா அல்லது காதலியின் மெல் வெப்பமா நன்பா விழக்கவும்

ஆதவா
19-12-2006, 03:55 AM
காதல் வெப்பமா அல்லது காதலியின் மெல் வெப்பமா நன்பா விழக்கவும்

நண்பரே காதலி நெருப்பாகவும், காதலன் நீராகவும்..

gragavan
19-12-2006, 08:47 AM
நீரும் நெருப்பும் சேர்ந்தா கொதிக்கும் இல்லைன்னா அணையும். அதத்தான் சொல்றீங்களா?

ஆதவா
19-12-2006, 09:15 AM
இல்லை ராகவன் அவர்களே.. காதலியை நெருப்பாகவும் காதலனை நீராகவும் சொல்லியிருக்கிறேன்

நீரான காதலன், நெருப்பான காதலியை அழைக்கிறான்... இறுதியில் நெருப்பு அணைத்து நீர் வற்றி, நெருப்போடு ஐக்கியமாகிறான்....

இளசு
19-12-2006, 11:17 PM
முரண்களின் ஈர்ப்பு
ஆழமான சொற்தொகுப்பு..

பாராட்டுகள் ஆதவா..

(பண்பட்டவர் பகுதிக்கு ஏற்ற படைப்பு..)

மயூ
20-12-2006, 02:04 AM
கொஞ்சம் பண்பண்டவர்க்கான படைப்பு என்றாலும்
உங்கள் தமிழ் வெறியும் காதலி மீது கொண்ட அன்பு வெறியும் புரிகிறது
சபாஷ் தொடருங்கள்...

ஆதவா
20-12-2006, 02:25 AM
நன்றி மயூரேசன் மற்றும் இளசு அவர்களே

அமரன்
06-06-2007, 05:27 PM
மன்றத்தில் வந்த புதிதில் ஆதவன் பாரதியாரின் ரசிகன் என்றார்கள். அதை நிரூபித்துள்ளீர்கள். காதல்க் கவிதையில் உணர்ச்சிப் பிளம்புகள் கொழுந்து விடுகின்றன. சொற்கட்டுகள் சுடுகின்றன. வாழ்த்துக்கள் ஆதவா.

ஆதவா
06-06-2007, 06:56 PM
நன்றீ அமரன்.. பழைய கவிதைகள் சில தூசுதட்டுகிறீர்கள்... மகிழ்ச்சியாக இருக்கிறது...