PDA

View Full Version : உன்னை நான் காதலிக்காமல் இருந்திருந்தால்



lenram80
16-12-2006, 10:16 PM
ஒரு கண்ணில் ஆனந்த கண்ணீரும்
மறு கண்ணில் அழுகையின் கண்ணீரும்
ஒரே நேரத்தில் வடித்திருக்கமாட்டேன்!

மேல் உதட்டில் சிரிப்பும்
கீழ் உதட்டில் அழுகையும் - நடக்கும்
ஆச்சரியத்தை செய்திருக்கமாட்டேன்!

ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தையும் காட்டி,
அரைந்தவரிடம் " அடித்த கை வலிக்குதா?" - எனக்
கேட்குமளவுக்கு மனித நேயம் வளர்த்திருக்கமாட்டேன்!

உன்தேகம் சுட்ட சூரியனிடமும்
உன்மேல் ஜொல்மழை பொலிந்த மேகத்திடமும்
உன்னிடம் மன்னிப்பு கேட்கும்படி மன்றாடியிருக்கமாட்டேன்!

உன் பெயரை ஒவ்வொரு மொழியிலும் எழுதிய பிறகு தான்
மொழிகளே மோட்சம் அடைகின்றன - என்ற
உண்மையை உலகுக்கு அறிவித்திருக்கமாட்டேன்!

உன்னிடம் தோல்வி பெற்று
வெற்றி பெற்ற சந்தோஷம் பெற்றிருக்கமாட்டேன்!

வார்த்தைகளை தோண்டி தோண்டி
கவிதைப் புதையலை எடுத்திருக்கமாட்டேன்!

செலவே இல்லாமல் சிறந்த காதல் படங்களை
என் கனவின் வழியே கண்டிருக்கமாட்டேன்!

நீ சொல்லிய வார்த்தைகளுக்குக் கூட
மரியாதை கொடுக்கும் மனப்பக்குவம் அடைந்திருக்கமாட்டேன்!

மல்லிகை மொட்டு, மாலை மதி, மாமரக் குயில், மென் தோகை மயில்
போன்றவற்றை உன் கொள்கை பரப்பு செயலாளர்களாக நினைத்திருக்கமாட்டேன்!

மந்தியிலிருந்து மனிதன் வந்தான் - என்ற பரிணாமத்தை
பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கமாட்டேன்!

உன் கூந்தல் கொடி உதிர்த்த பூக்களை
உன் வானில் நட்சத்திரங்களாய் மாட்டியிருக்கமாட்டேன்!

கண்ணால் குண்டு பொழியும் வித்தையை
காணாமலேயே போயிருப்பேன்!

கம்பியே இல்லாமல் மின்சாரத்தை
உன் கடைக்கண் வழியே பரப்பலாம்
என்று கூறும் புதிய மைக்கேல் ஃபாரடே
ஆகாமல் இருந்திருப்பேன்!

இறுதியாய்,
உயர் திணையோடும் அஃறிணையோடும்
ஒப்பிடவே முடியாத உன்னதம் - பெண் என்ற
உண்மையை உணராமலேயே இறந்திருப்பேன்!
-லெனின்-

நம்பிகோபாலன்
17-12-2006, 08:10 PM
அருமை

lenram80
19-12-2006, 09:50 PM
நன்றி நம்பிகோபாலன்

இளசு
19-12-2006, 10:00 PM
காதல் செய்யும் மாயங்கள்.. மாற்றங்கள்
ஒன்றா இரண்டா...

கவிதை அருமை. பாராட்டுகள் லெனின்..

ஆதவா
20-12-2006, 02:35 AM
லெனின்... நான் இக்கவிதையை ஓர்குட்டில் படித்திருக்கிறேன்.. அருமையாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..நிறைய எதிர்பார்க்கிறோம்...

lenram80
23-12-2006, 12:07 AM
நன்றி...இளசு & ஆதவா....

jpl
23-12-2006, 01:30 AM
நல்ல நயம்.அருமை லெனின்.

மயூ
23-12-2006, 04:48 AM
அனுபவம் புதுமை என்பது போல!! அனுபவங்கள் இப்படியான கவிதைகளை எழுத வைக்கும் இல்லையா?

lenram80
24-12-2006, 01:13 PM
நன்றி ஜெயபுஷ்பலதா & மயூரேசன்....
மயூரேசன்,
அது என்ன அனுபவங்கள்? அனுவபம் என்று கேளுங்கள். ஒரு தடவை செய்வதன் பெயர் தான் காதல். எனக்கு தான் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. முயற்சித்தேன். ஒரு தலை காதலாகப் போய்விட்டது....ம்ம்ம்ம் (கொசுறு: அவள் இப்போது இரு குழந்தைகளின் தாய்... எங்கிருந்தாலுன் வாழ்க)