PDA

View Full Version : ஆவி அழுது போதலை......



ஆதவா
16-12-2006, 04:48 PM
வெந்துவிட்ட என்னிதயத்தின்
சாம்பலை, என்றும்
நொந்து போகாத உனக்குத்
தருவதை விரும்பிவிட்டேன்
வந்து அதைத் தின்னு.
சொல்லு அப்பொழுதாவது
உன் இரக்கமற்ற காதலை!!

கழுகுகளின் வேட்டையில்
காய்ந்துபோன எனது உடல்
காயப்பட்டு போனது அறிந்து
என் உணர்ச்சியைப் புரிந்து
பாடுவாயா காதல் ஓதலை?

பனியின் பிடியில் சிக்கிய
மனிதனாய் தவித்து
இனி உன் மடியே என
நினைத்தவனுக்கு நீ
இழைத்த கருமங்கள்
எண்ணிப் பாரடி! அப்பொழுதாவது
புரிவாய் என் மூடத்தனமான சாதலை!!

வாயிலே பேசாமல்
கண்களிலே பேச முயன்றேன்
இன்று அதுவும் பயனில்லாது
போயினவே என
ஆவியாய் நின்று அழுது போகிறேன்
கண்டு கண்ணீர் விடுவாயா எனது
ஆவி அழுது போதலை??

இளசு
16-12-2006, 06:36 PM
காதல் போயின் சாதல்!
சாதலுக்குப்பின்னும் காதல்..!


வாழ்த்துகள் கவிதைக்கு- ஆதவன்!

leomohan
16-12-2006, 07:11 PM
ஆதவா அசத்தல். தொடருங்கள்.

தாமரை
18-12-2006, 04:17 AM
வெந்துவிட்ட என்னிதயத்தின்
சாம்பலை, என்றும்
நொந்து போகாத உனக்குத்
தருவதை விரும்பிவிட்டேன்
வந்து அதைத் தின்னு.
சொல்லு அப்பொழுதாவது
உன் இரக்கமற்ற காதலை!!

கழுகுகளின் வேட்டையில்
காய்ந்துபோன எனது உடல்
காயப்பட்டு போனது அறிந்து
என் உணர்ச்சியைப் புரிந்து
பாடுவாயா காதல் ஓதலை?

பனியின் பிடியில் சிக்கிய
மனிதனாய் தவித்து
இனி உன் மடியே என
நினைத்தவனுக்கு நீ
இழைத்த கருமங்கள்
எண்ணிப் பாரடி! அப்பொழுதாவது
புரிவாய் என் மூடத்தனமான சாதலை!!

வாயிலே பேசாமல்
கண்களிலே பேச முயன்றேன்
இன்று அதுவும் பயனில்லாது
போயினவே என
ஆவியாய் நின்று அழுது போகிறேன்
கண்டு கண்ணீர் விடுவாயா எனது
ஆவி அழுது போதலை??

தந்தபின் இதயம் உனக்குச்
சொந்தமா? எரித்து இதயத்தை
நொந்தவா! எனக்குச் சாம்பலெனில்
மந்தமா மசக்கையா மனப்பிறழ்வா

கழுகுகளின் வேட்டையில் காயம்
மெழுகுக் கோட்டையில் வாசம்
காதலை ஓதல்..
காயப்பட்டது உடல்
மரத்தது மனம்

எரிந்த இதயம்
பனியில் வெடித்த உடல்
உள்ளும் புறமும்
இப்படி துடிக்கையில்
போன ஆவியே

கண்ணீர் வற்றி
காலமாகி விட்டது..
எனக்கு அழத் தெரியவில்லை.

ஆதவா
18-12-2006, 05:14 AM
நன்றி தாமரை... இதை பதிலாக எடுத்துக் கொள்வதா இல்லை, கவிதையாகவா? நன்று..

தாமரை
18-12-2006, 05:19 AM
நன்றி தாமரை... இதை பதிலாக எடுத்துக் கொள்வதா இல்லை, கவிதையாகவா? நன்று..
இது பதில் கவிதை என்னும் நூதன முயற்சி.. அதாவது கவிதைகளின் கருவை உள்வாங்கி, நிகழ்வுகளை கூர்நோக்கி, அக்கருவில் இயைந்து கவிதையின் இன்னொரு பாத்திரமாய் இன்னொரு நோக்கை, இன்னொரு பார்வையை வெளிப்படுத்தல். சில காலமாய் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.. இங்கே சில கவிதைகளில் இம்முயற்சிகளைக் காணலாம்.

ஆதவா
18-12-2006, 06:14 AM
அருமையான முயற்சி நண்பரே,, தொடருங்கள்...

அமரன்
06-06-2007, 05:16 PM
வாயிலே பேசாமல்
கண்களிலே பேச முயன்றேன்
இன்று அதுவும் பயனில்லாது
போயினவே என
ஆவியாய் நின்று அழுது போகிறேன்
கண்டு கண்ணீர் விடுவாயா எனது
ஆவி அழுது போதலை??

ஆதவா காதலைச் சொல்லாமல் தோல்வியடைந்த ஒருவன் மனதால் அல்லது நிஜத்தில் இறந்து காதலியைப் பார்த்து சொல்வது போல கவிதை அமைந்திருப்பதாக நினைக்கின்றேன். தவறாக இருப்பின் மன்னித்து விடுங்கள்.

அமரன்
06-06-2007, 05:18 PM
இது பதில் கவிதை என்னும் நூதன முயற்சி.. அதாவது கவிதைகளின் கருவை உள்வாங்கி, நிகழ்வுகளை கூர்நோக்கி, அக்கருவில் இயைந்து கவிதையின் இன்னொரு பாத்திரமாய் இன்னொரு நோக்கை, இன்னொரு பார்வையை வெளிப்படுத்தல். சில காலமாய் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.. இங்கே சில கவிதைகளில் இம்முயற்சிகளைக் காணலாம்.
கவிதைக்கு பதிலாக அதே கருவில் இன்னொரு கவிதையா? வித்தியாசமான் முயற்சி. கவிதையில் வார்த்தைகள் விளையாடுகின்றது. வாழ்த்துக்கள் பல.

ஆதவா
06-06-2007, 06:54 PM
நன்றி அமரன். என்ன திடீர்னு இந்த பதிவைத் தூக்கி பார்த்திருக்கீங்க... மனசு கொஞ்சம் குளிர்ந்த மாதிரி இருக்கு... (ஆமாங்க.. இப்போ வெந்துகிட்டு இருக்கு... இந்த கவிதையின் சில வரிகள் போல.. )

அமரன்
06-06-2007, 06:56 PM
அதான் சொன்னேனே ஆதவன். தமிழ் படிப்பதற்கு எனக்கு வேறு இடமில்லை. அதனாலேயே தமிழ் மன்றத்தின் எல்லாப் பதிவுகளையும் படித்துக்கொண்டிருக்கின்றேன்.

ஆதவா
06-06-2007, 07:08 PM
நிச்சயம் படியுங்கள்.. மறக்காமல் பின்னூட்டங்களைப் படியுங்கள்... வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

ஓவியா
06-06-2007, 09:00 PM
வெந்துவிட்ட என்னிதயத்தின்
சாம்பலை, என்றும்
நொந்து போகாத உனக்குத்
தருவதை விரும்பிவிட்டேன்
வந்து அதைத் தின்னு.
சொல்லு அப்பொழுதாவது
உன் இரக்கமற்ற காதலை!!

காதலில் இரக்கம் வேண்டாமே!!! இரக்கமற்ற காதலும் வேண்டாமே!!!


கழுகுகளின் வேட்டையில்
காய்ந்துபோன எனது உடல்
காயப்பட்டு போனது அறிந்து
என் உணர்ச்சியைப் புரிந்து
பாடுவாயா காதல் ஓதலை?

அவன்/அவள் உணர்ந்தால், காதல் அங்கே இப்படி காய்ந்து போகாது!!


பனியின் பிடியில் சிக்கிய
மனிதனாய் தவித்து
இனி உன் மடியே என
நினைத்தவனுக்கு நீ
இழைத்த கருமங்கள்
எண்ணிப் பாரடி! அப்பொழுதாவது
புரிவாய் என் மூடத்தனமான சாதலை!!

கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் எதற்க்கு!!!!

வாயிலே பேசாமல்
கண்களிலே பேச முயன்றேன்

பார்வையற்றவ(ளு)னுக்கு இது எதற்க்கு!!!


இன்று அதுவும் பயனில்லாது
போயினவே என
ஆவியாய் நின்று அழுது போகிறேன்

கல் கரையாது!!

கண்டு கண்ணீர் விடுவாயா எனது
ஆவி அழுது போதலை??

இது நடக்கலாம்,



அருமையான கவிதை.

படித்தேன்.....ஏனோ ரசிக்கவில்லை, முடியவில்லை.

நன்றி ஆதவரே.

ஓவியா
06-06-2007, 09:11 PM
தந்தபின் இதயம் உனக்குச்
சொந்தமா? எரித்து இதயத்தை
நொந்தவா! எனக்குச் சாம்பலெனில்
மந்தமா மசக்கையா மனப்பிறழ்வா

அருமையான வரிகள். (வேறு பார்வையில்)

கழுகுகளின் வேட்டையில் காயம்
மெழுகுக் கோட்டையில் வாசம்
காதலை ஓதல்..
காயப்பட்டது உடல்
மரத்தது மனம்

அர்த்தம் புரியவில்லையே

எரிந்த இதயம்
பனியில் வெடித்த உடல்
உள்ளும் புறமும்
இப்படி துடிக்கையில்
போன ஆவியே

அற்புதம் .


கண்ணீர் வற்றி
காலமாகி விட்டது..
எனக்கு அழத் தெரியவில்லை.

ஒரு உண்மை.




நல்ல கவிதை. மிக்க நன்றி.

ஆதவா
07-06-2007, 01:49 AM
நன்றிங்க ஓவியா