PDA

View Full Version : நன்றியுரை



kjothira
16-12-2006, 02:08 PM
நன்றி என் நண்ப,
உணர்வோடு ஒட்டாத
வெறும் சப்தங்களையே
வார்தைகளாய் நம்பி
நான் தலையசைத்துக்
கிடந்த போது -

நீ தான் நீ தான்
கற்றுத் தந்தாய்

சில ஆழமான மௌனங்களின்
அழுத்தமான வார்த்தைகளைப்
புரிந்து கொள்ள.

நன்றி என் நண்ப,
யாரோ தந்த தொடக்கத்தில்
காற்றிலே வரைந்ததையெல்லாம்
கனவிலே
நான் வைத்த போது

நீ தான் நீ தான்
உணரச் செய்தாய்

என் ஓலைக்குடிசை வழியே
ஊடுவி வந்து விழும்
ஒற்றை ஒளிக்கற்றையின்
வெப்பத்தை.

நன்றி என் நண்ப,
பூக்களையே பார்த்துப் பார்த்து
அழகை நான்
வியந்த போது

நீ தான் நீ தான்
காணச் செய்தாய்

ஏதோ ஓர் ஆழத்தில்
எங்கோ முடியும் பயணத்தில்
தன்னைச் சிதைக்கும்
வேர்களின் வியர்வையை.

நன்றி என் நண்ப,
நீ தான் என் சொந்தம்
நீ தான் என் சொத்து
உன் பெயர் -
சோகம்.

anbudayan
16-12-2006, 03:50 PM
(நீ தான் என் சொந்தம்
நீ தான் என் சொத்து
உன் பெயர் -
சோகம்).

உண்மை தான் நண்பர் அவர்களே

இளசு
16-12-2006, 06:31 PM
புடம் போடப்பட்ட தங்கம்
நெருப்புக்குச் சொல்லும் நன்றி...

பாராட்டுகள் கணேஷ்குமார் அவர்களே..

meera
19-12-2006, 06:49 AM
அழகாய் இருந்தது கவிதை.



நன்றி என் நண்ப,
நீ தான் என் சொந்தம்
நீ தான் என் சொத்து
உன் பெயர் -
சோகம்.

இதை எதிர்பார்க்கவில்லை:eek: :eek:

ஆதவா
19-12-2006, 07:02 AM
ஆம் மீரா... சோகம் என்பதை நானும் எதிர்பார்க்கவில்லை...
ஜோதிரா... அருமை