PDA

View Full Version : கிரிட்டெர்கேம் - Crittercam



பாரதி
15-12-2006, 04:19 PM
அன்பு நண்பர்களே,

நமக்கு வெப்கேம் பற்றி தெரியும். கிரிட்டர்கேம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? இது கேள்விப்படாதவர்களுக்கு மட்டுமான பதிவு.
கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் திரு. கிரெய்க் மார்ஷல் என்பவர் 1986 ஆம் ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு சுறாமீனைக் காண நேர்ந்தது. அப்போது ரிமோரா என்ற ஒரு வகை மீன் சுறாமீனுடன் சேர்ந்து அதனடியில் ஒட்டிக்கொண்டு திரிவதைப் பார்த்தார்.

அப்போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அந்த மீனுக்குப் பதிலாக ஒரு புகைப்படக்கருவியை கற்பனை செய்தார். அவரே ஒரு புது வகை புகைப்படக்கருவியை வடிவமைத்து, ஒரு கடல் ஆமையில் பொருத்தி சோதித்தார். எதிர்பார்த்த படியே முடிவுகள் மிகச்சிறப்பாக அமைந்தன. அந்த வகைப் புகைப்படக்கருவியைத்தான் (அசைப்படக்கருவியும்தான்..!) கிரிட்டெர்கேம் என்று அழைக்கிறார்கள்.

நேஷனல் ஜியாகரஃபிக் சொஸைட்டியை சேர்ந்தவர்களும் சுறாமீன்கள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள், பென்குயின்கள் போன்ற பல வகையான உயிரினங்களுக்கு இந்த வகை புகைப்படக்கருவிகளை பொருத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்து சிங்கம், கரடி போன்றவற்றிலும் பொருத்தினர். இதன் முக்கிய நோக்கம் அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் இவற்றை ஆராயவும், எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன, எவற்றை உட்கொள்கின்றன, மற்ற விலங்குகளை எவ்வாறு எதிர்கொள்கின்றன போன்றவற்றை கண்காணிக்கவுமே.

கிரிட்டர்கேம் பற்றி மேலும் அறிந்து கொள்ள
http://channel.nationalgeographic.com/channel/crittercam
சுட்டியை உபயோகியுங்கள்.

சில சுவாரசியமான கிரிட்டெர்கேம் சுட்டிகள் உங்களுக்காக:
1. http://www.aad.gov.au/asset/webcams/mawson/default.asp
இந்த வகைப் புகைப்படக்கருவியால் அண்டார்டிக்காவில் எடுக்கப்படும் புகைப்படங்களும்,அசைபடங்களும் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும்
புதுப்பிக்கப்படுகின்றனவாம்!

2.http://www.fs.fed.us/gpnf/volcanocams
இந்த சுட்டியில் செயிண்ட் ஹெலன்ஸ் எரிமலையில் உள்ள நிலவரங்களை இணையத்த்தில் நேரடியாக நாம் பார்க்க இயலும்.

3. http://www.wildweb.de
உலகத்தின் பல இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளில் இருந்து வரும் நேரடி ஒளிபரப்பை நாம் காண இந்த சுட்டி உதவுகிறது.

நன்றி:டிஜிட் இதழ்.

leomohan
15-12-2006, 04:57 PM
சுவையான தகவல். நன்றி பாரதி. அவசியம் பார்க்கவேண்டிய தளங்கள்.

இளசு
15-12-2006, 06:40 PM
மிக நல்ல தகவல் கட்டுரை.. சுட்டிகளை விரைவில் பார்க்கிறேன்.

நன்றி பாரதி..

அறிஞர்
15-12-2006, 06:54 PM
நல்ல தகவல்கள், புகைப்படங்கள்.. நன்றி பாரதி...

மயூ
03-02-2007, 02:41 PM
ம்... சுவையான ஆர்வமூட்டும் அறிவியல் தகவல் நன்றி இளசு அவர்களே!

ஷீ-நிசி
03-02-2007, 02:47 PM
இதுவரை கேள்விபடாத தகவல்கள்... நன்றி நண்பரே

மதுரகன்
03-02-2007, 04:46 PM
வாழ்த்துக்கள் பாரதி..
மிக அருமையான தகவல்...

மதுரகன்
03-02-2007, 04:48 PM
ம்... சுவையான ஆர்வமூட்டும் அறிவியல் தகவல் நன்றி இளசு அவர்களே!
மயூரேசன் கவனியுங்க எழுதியவர் இளசு அல்ல..
பாரதிதான்...

பரஞ்சோதி
04-02-2007, 07:09 AM
அண்ணா,

இதுவரை அறியாத தகவல்கள், சுவையாக இருக்குது, மிக்க நன்றி.

Mano.G.
04-02-2007, 03:11 PM
உங்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள
தமிழ் மன்றம் வாருங்கள்

தவலுக்கு மிக்க நன்றி பாரதி

மனோ.ஜி

மன்மதன்
04-02-2007, 05:43 PM
கேள்விப்படாத தகவல்தான் . நன்றி பாரதி. சுட்டிகள், அது தரும் வீடியோக்கள் அருமை..

ஓவியா
09-02-2007, 11:04 PM
அருமையான தகவல்

சுட்டிகளும் அருமை

நன்றி அண்ணா

praveen
22-02-2007, 12:28 PM
நான் அறியாத தகவல், அறிய தந்ததற்கு நன்றி

செல்வா
28-01-2009, 08:17 AM
உண்மையிலேயே புதிய தகவல் சுட்டிகள் பயனுள்ளவையாக இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி அண்ணா.