PDA

View Full Version : பாஷா இந்தியாவிலிருந்து



leomohan
15-12-2006, 05:17 PM
மதுரைத் திட்டத்தின் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு திட்டம் "தமிழ் மரபு அறக்கட்டளை" என்பது. இது டிஜிட்டல் இந்திய நூலகத்துடன் இணைந்து பல்வேறு ஓலைச் சுவடிகள், பழைய புத்தகங்கள் இவைகளை மின்னாக்கம் செய்து வருகிறது. இதன் இலக்க நூலக முகவரி:
http://bharani.dli.ernet.in/thf/index.html
தமிழ் மரபு அறக்கட்டளை இலண்டன் வாழ் தமிழர்களுடன் சேர்ந்து பிரித்தானிய நூலகத்திலுள்ள பழம் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து வருகிறது. இந்த ஆக்கங்களைக் காண:
http://www.e-mozi.com/bl_thf/bl_thf.html
இ-சுவடி எனும் யாகூ மடலாடற்குழு ஒன்று 2003-லிருந்து இதன் செயல் திட்டங்களை செம்மைப் படுத்த இயங்கி வருகிறது.
http://groups.yahoo.com/group/esuvadi/ (http://groups.yahoo.com/group/esuvadi/)


முதல் முகவரியில் ஓலைச்சுவடிகளை டிஜிடல் முறையில் பதிவு செய்திருக்கிறார்கள். பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

pradeepkt
17-12-2006, 03:53 AM
பிரமாதம். நான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சில நூல்களைக் கண்டேன் மோகன் உதவியால்... வாழ்க வளமுடன்.