PDA

View Full Version : அன்பு காதலியின் அன்பு



anbudayan
15-12-2006, 01:36 PM
அன்பினை
தேடித்தேடி அலைந்தேன்
ஆசையுடன்
ஓடோடி வந்தேன்
இறைவனிடம்
கூட கேட்டேன்
ஈன்ற தாய்
அன்பு போல்
உன் அன்பு
என்னை மேலும்
ஊக்கமடைய செய்தது
எதையும் வெல்லும்
சக்தியை
ஏழையான எனக்குள்
எழச் செய்தது
ஐக்கியமானேன்
உன் அன்பில்
ஓடி விட
நினைக்கையில்
ஒளி வீசும்
உன் பார்வையால் தடுமாறி நின்றேன்
ஒளவையார் போல் மாறினும்
என்றும் மாறா நம் அன்பு .

leomohan
15-12-2006, 01:55 PM
ஆஹா காதலுக்கு ஒரு ஆத்திச்சூடியா. :)

ஓவியா
15-12-2006, 02:02 PM
அசத்தல்.....ஆத்திச்சூடி

காதலில் தத்தளிக்கும் மக்களுக்கு ஒரு அருமையான ஆத்திச்சூடி..
காதலர்கள் அனைவரும் படித்து பயன் அடையவும்

அறிஞர்
15-12-2006, 02:38 PM
ஈன்ற தாய் போல்
அன்புகொண்ட காதலி
ஆத்திச்சூடியில்..ஒளிர்கிறாள்....

தொடருங்கள்... இன்னும் ...

meera
15-12-2006, 02:51 PM
அழகு அழகு அழகு...

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்...

anbudayan
16-12-2006, 04:01 AM
மோகன்,ஓவியா,அறிஞர்,மீரா அனைவருக்கும் மிகவும் நன்றி.

anbudayan
16-12-2006, 10:04 AM
கற்பனையில் உதிர்த்தாய்
கனவினில் தோன்றினாய்
நினைவினில் வந்தாய்
உயிரினில் கலந்தாய்
உறவுக்குள் நுளைழந்தாய்
விழிகளை திறந்தாய்
எதிரினில் நின்றாய் - அந்த
ரவிவர்மன் ஓவியமாய்.

இளசு
16-12-2006, 07:34 PM
காதல் ஆத்திச்சூடியா... இல்லை அரிச்சுவடியா...


அன்புடையான் அன்புக்காக பதித்த கவிதைக்கு வாழ்த்துகள்!

அமரன்
14-06-2007, 04:40 PM
காதலாத்திசூடி. நன்று.
அன்புடையான் கற்பனை அருமை.

சுட்டிபையன்
17-06-2007, 05:08 AM
அன்புடையான்
உங்கள் ஆத்தி சூடி காதல் கவிதை அழோகு அழகு
மேலும் பல கவிதைப் படைப்புக்களை படையுங்கள் களத்தில்

சிவா.ஜி
17-06-2007, 05:24 AM
அ முதல் ஔ வரை காதலைப் பதித்த அன்புடையான் என்றும் அன்புடன் இன்னும் நிறைய பதிக்க வாழ்த்துக்கள்.

greatsenthil
18-06-2007, 09:28 AM
அருமை அருமை அருமை

ஒக்காந்து யோசிப்பீங்களோ!