PDA

View Full Version : கண்மணிக் கவிதைகள்

kjothira
15-12-2006, 11:41 AM
தூக்கம் கலைந்த ஒரு பின்னிரவில்
இதழ்கள் குவிந்துறங்கும் உன் முகப்பூவை
இமைக்காமல் பார்த்திருப்பேன் -
கள்ளப் புன்னகை சிந்தி
இன்னும் நீ சிவந்திருப்பாய்.

வேல்விழியோ கூர்விழியோ
சொல்மொழியோ கள்மொழியோ என்றெல்லாம்
கவிதைப் பிதற்றல்கள் செய்வேன் -
மெச்சியென் பொற்கிழியாய் தருவாய்
தலையில் குட்டும் கன்னத்து முத்தமும்.

சேர்த்து வைத்த உன் சிரிப்பாலே
நிரம்பி நான் வழிந்திருக்க இன்றிந்தப் புதுச்சிரிப்பை
எங்குதான் வைப்பதென்பேன் -
சொன்னாலும் கேளாமல்
இன்னுமொன்றைச் சிரித்து வைப்பாய்.

தேக்கி வைத்த ஒளியெல்லாம்
வானிறைக்கும் நிலவிருக்க என் நெஞ்சத்தின்
முள்வலிகள் சொல்வேன் -
கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
என் காயங்கள் வடுவின்றி ஆறும்.

அறிஞர்
15-12-2006, 01:43 PM
காதலியின்
கள்ள சிரிப்பு
கன்னத்து முத்தம்
கண்ணீர் துளி.......

ஆஹா இவையல்லவா இன்பம்.....

தொடருங்கள்.. அன்பரே....

நம்பிகோபாலன்
15-12-2006, 05:18 PM
தேக்கி வைத்த ஒளியெல்லாம்
வானிறைக்கும் நிலவிருக்க என் நெஞ்சத்தின்
முள்வலிகள் சொல்வேன் -
கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
என் காயங்கள் வடுவின்றி ஆறும்.[/QUOTE]

காதலியின் கன்னீரை விட அவலின் சிரிப்பு கவலைகலை மரக்க செய்யும்

பென்ஸ்
18-12-2006, 04:43 AM
காதலியின் கன்னீரை விட அவலின் சிரிப்பு கவலைகலை மரக்க செய்யும்
நம்பிகோபால்... நொந்து போயிருக்கும் போது அவ சிரிச்சா பல்லை பேத்திரமாட்டான்....:D :D :D

காதலியின் அருகாமையில் இரும்பு தடைகளும் துரும்பு தடைகள்தானே...
தனக்காக ஏங்க ஒரு மனதை தேடும் வழக்கமான மனிதனாய்....

ஜோதிரா...
துவண்டு போகும் தருணங்களில்,
நண்பணின் தோள்கள் தாங்கியதில்லையா????
எல்லாவற்றிக்கும் மேலாய்...
தாய் மடியை தவிர வேறு என்ன வேண்டும்???

தாமரை
18-12-2006, 05:01 AM
சிரிக்கும் மொட்டினை முள்ளால் குத்தி
கண்விழி வடிக்கும் துளியினைத் தொட்டு
காயமெங்கும் பூசி காய்ந்துவிட காத்திரு

முள்ளால் மலரை குத்தும்
முரட்டு இதயமடா உனக்கு

ஆதவா
18-12-2006, 05:11 AM
நம்பிகோபால்... நொந்து போயிருக்கும் போது அவ சிரிச்சா பல்லை பேத்திரமாட்டான்....:D :D :D

காதலியின் அருகாமையில் இரும்பு தடைகளும் துரும்பு தடைகள்தானே...
தனக்காக ஏங்க ஒரு மனதை தேடும் வழக்கமான மனிதனாய்....

ஜோதிரா...
துவண்டு போகும் தருணங்களில்,
நண்பணின் தோள்கள் தாங்கியதில்லையா????
எல்லாவற்றிக்கும் மேலாய்...
தாய் மடியை தவிர வேறு என்ன வேண்டும்???

நண்பரே நீங்கள் சொல்வதி மிகச் சரிதான் இருந்தாலும், காதல் அல்லவா இது

அருமையான கவிதை சோதிரா

meera
18-12-2006, 05:26 AM
கண்ணீர் ஒரு துளி தருவாய் போதும்
என் காயங்கள் வடுவின்றி ஆறும்.

கணேஷ்,

வரிகள் ஒவ்வொன்றும் ரசிக்கவைத்தது.
கவிதை அருமை பாராட்டுகள்.

meera
18-12-2006, 05:28 AM
முள்ளால் மலரை குத்தும்
முரட்டு இதயமடா உனக்கு

அண்ணா,

சூப்பரா இருக்கு.

தாமரை
18-12-2006, 05:38 AM
என்னவோ தெரியவில்லை கொஞ்ச நாளைக்கு முன்னால பென்ஸ் காதலியை அழச் சொன்னார்.. இப்போ ஜோதிரா!

kavitha
18-12-2006, 05:41 AM
நம்பிகோபால்... நொந்து போயிருக்கும் போது அவ சிரிச்சா பல்லை பேத்திரமாட்டான்....:D :D :D

சீரியஸான கவிதையில் அப்பப்போ வடிவேலு மாதிரி வந்து ஜோக்கடிக்கிறீர்...ம்!

கவிதை நன்றாக இருக்கிறது கணேஷ். இறுதி வரி அருமை!

பென்ஸ்
18-12-2006, 05:58 AM
சீரியஸான கவிதையில் அப்பப்போ வடிவேலு மாதிரி வந்து ஜோக்கடிக்கிறீர்...ம்!

கவிதை நன்றாக இருக்கிறது கணேஷ். இறுதி வரி அருமை!

கவி...
சிரித்து கொண்டே சோன்னதால் அது ஜோக்கில்லை கவி....
அது ரொம்பவே சீரியசானவிஷயம்....

அலுவலக எரிச்சலில் இருந்து வீட்டுக்கு வரும் கணவன் தன்னை ஊர் சுற்றி பார்க்க கொண்டு போக வேண்டும் என்ரு நினைப்பதும்... (தவறில்லை, ஆனால் நச்சரிப்பதை சொல்லுகிறென்)

அலுவலக சுமையை விட்டு வரும் மனைவி தனக்கு சோறாக்கி, பாலாக்கி, பாய்விரித்து கொடுக்க வேண்டும் என்றும் , தன்னைடைய காரியம் மட்டும் எந்த நோவும் இல்லாமல் தீரவேண்டும் என்று மட்டுமே நாம் அதிக நேரம் நினைக்கிறோமா????

பகிர்தலில் வலியும் வடுவும் மாறும்தான்.. ஆனால் அது இரு வழி பாதையாக இருக்க வேண்டும்.. ஒரு வழி பாதையாக இருக்க கூடாது.... நாம் பகிரும்போது அடுத்தவர் அதை ஏற்றுகொள்ளும் மனநிலையில் இருக்கிறாரா என்று தெரிந்து பகிரலாமே????

kavitha
18-12-2006, 06:18 AM
பகிர்தலில் வலியும் வடுவும் மாறும்தான்.. ஆனால் அது இரு வழி பாதையாக இருக்க வேண்டும்.. ஒரு வழி பாதையாக இருக்க கூடாது.... நாம் பகிரும்போது அடுத்தவர் அதை ஏற்றுகொள்ளும் மனநிலையில் இருக்கிறாரா என்று தெரிந்து பகிரலாமே????

சரியாகச்சொன்னீர்கள். புரிந்துக்கொள்ளுதல்தான் நட்பின் முதல்படி.