PDA

View Full Version : தெருவோரக் குறிப்புகள்...



rambal
28-04-2003, 05:59 PM
தெருவோரக் குறிப்புகள்...

குப்பை பொறுக்கி
கோணிப்பை நிரப்பி
கொண்டு போய்
போட்டா
இருபது...

எச்சில் டீக்கிளாஸ்
கழுவி..
பக்கத்துக் கடைகளுக்கு
டீ சப்ளையும் செய்தா
ஏழு ரூபாய்..

தள்ளுவண்டியில்
ஐஸ்க்ரீம் விற்று
நாயாய் சுத்தி சுத்தி
நாயாகிப் போனா
இருபது ரூபாய்..

சுண்டல் வித்து
ரவுடிக்கு ஓசி கொடுத்து
முதலாளிகிட்ட
பணத்தைக் கொடுத்தா
பத்து ரூபாய்..

எச்சிலை தூக்கிப் போட்டு
எச்சலையாகி
மிதிபட்டா
பதினைஞ்சு ரூபாய்..

உடம்பு வித்து
மாமாவுக்கு கொடுத்து
போலீசுக்கு கொடுத்து
மிஞ்சிப்போனா
நூறு ரூபாய்...

வெள்ளை வேட்டி
கட்டி கரை வைச்சு
தைச்சு காரில போயி
இறங்குனா
கோடி கோடியா ரூபாய்..

poo
28-04-2003, 07:14 PM
அந்த கோடி ரூபாயை அள்ளித்தரும் வள்ளல்கள் (மக்கள்) வெட்கப்படவில்லையே!!!

prabhaa
28-04-2003, 10:33 PM
கோடிக்கும், வெறும் இருபதுக்கும் உள்ள வித்தியாசத்தை,
ஆறு பத்திகளில், அழகாய் வடித்துள்ளீர் !

அருமை !

Narathar
29-04-2003, 05:42 AM
இத்தனை தொழில்கள் அங்கிருக்க
இன்னுமேன் வேலையில்லாப்பிரச்சனை அங்கே?

poo
29-04-2003, 12:51 PM
இத்தனை தொழில்கள் அங்கிருக்க
இன்னுமேன் வேலையில்லாப்பிரச்சனை அங்கே?

நாரதர் கமெண்ட்டை ரசிக்கத்தான் வேண்டுமா?!!!..

வசீகரி
30-04-2003, 06:48 AM
இத்தனை தொழில்கள் அங்கிருக்க
இன்னுமேன் வேலையில்லாப்பிரச்சனை அங்கே?

நாரதர் கமெண்ட்டை ரசிக்கத்தான் வேண்டுமா?!!!..ரசனையோடு பார்த்தா எதையும் ரசிக்கலாம் பூ

பாரதி
30-04-2003, 08:38 AM
ஒரு ரூபாய் கூட கொடுக்காமல்
ஒராயிரம் விஷயங்களை கொடுத்து
இதயத்தின் பாரத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி
என்னமோ செய்கிறாய் நண்பா...


பாரதி

இளசு
09-05-2003, 05:36 PM
இத்தனை தொழில்கள் அங்கிருக்க
இன்னுமேன் வேலையில்லாப்பிரச்சனை அங்கே?

நல்ல படைப்பு ராம்... பாராட்டுகள்..
நண்பர் நாரதரே...

விமர்சன பாதை தடம் புரட்டும் மற்றொரு மடல்
படைப்பவரின் மனதுக்கு வேகத்தடை இந்த மடல்
மொழியால் இணைந்திருக்கிறோம்..
வேறு காழ்ப்புணர்ச்சியை காட்ட இடம் இதுவல்ல....

இது அன்பும் அக்கறையும் கொஞ்சம் வேதனையும் கலந்த
எச்சரிக்கையாகவே பதிகிறேன்.....

Nanban
11-05-2003, 06:08 AM
எத்தனை தொழில் செய்தாலும்
எத்தனுக்குத் தான் பயம்....
இன்றைய எத்தனுக்கும்
வருவான் இன்னொரு எத்தன்
விஷமே விஷத்தை முறிப்பது போல....

எத்தர்கள் வழி செல்லும்
பித்தர்களாய் மாறாமல்
நித்தமும் உழைத்துப் பிழைத்திட்டால்
வந்திடும் நிம்மதி -
காரில் பயணிக்கும்
கரைவேட்டிகளுக்குக் கிட்டாத நிம்மதி....

நெருப்பே நெருப்பை
அணைப்பது போல
இந்த உலகும் தன்னைத் தானே
சுத்தம் செய்து கொள்ளும்....

karikaalan
11-05-2003, 08:13 AM
சிலசமயம் நான் நினைப்பதுண்டு ..... ஏன் நாமே ஒரு எம்பி ஆகிவிடக்கூடாது என்று.

அருமையான வரிகள் ராம்பால்ஜி. நாட்டின் அவலங்களைப் படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள்.
நோவதைத் தவிர வேறு என் செய்வது.

===கரிகாலன்