PDA

View Full Version : வெளிச்சம் தேடும் வேர்கள்kjothira
15-12-2006, 10:55 AM
பிறந்த கணத்திலிருந்தே
ஆழமான இருள்வெளியில்
திசை தெரியாத பயணம்.

மண்படிமங்கள் குடைந்து
பாறைகள் மோதி
நம்மை நூறாய் கிழித்துக் கொண்டும்
விதித்த வழியே தொடர்ந்தோம்.

வெறுமை இறுக்கத்தின்
வியர்வை கசகசப்பில்
நாம் முடங்கித் தவித்திருக்க
நம்மின் மறுபாதியோ
வான்முட்டக் கிளைபரப்பி
பூமணத்தின் கிறக்கத்தில்
தென்றலோடு சல்லாபித்திருக்கிறது.

இனி பொறுப்பதில்லை.
ஒன்றுகூடி முட்டிமோதி
பூமிபிளந்து வெளிப்புறப்பட்டன
வேர்கள்.

பேரிரைச்சலோடு
சரிந்து விழுந்தது
மரம்.

/6th Dec, 2006

ஆதவா
15-12-2006, 10:59 AM
அருமையான கவிதை ஜோதிரா... மேலும் எழுதுங்கள்..

leomohan
15-12-2006, 11:28 AM
பிறந்த கணத்திலிருந்தே
ஆழமான இருள்வெளியில்
திசை தெரியாத பயணம்.

மண்படிமங்கள் குடைந்து
பாறைகள் மோதி
நம்மை நூறாய் கிழித்துக் கொண்டும்
விதித்த வழியே தொடர்ந்தோம்.

வெறுமை இறுக்கத்தின்
வியர்வை கசகசப்பில்
நாம் முடங்கித் தவித்திருக்க
நம்மின் மறுபாதியோ
வான்முட்டக் கிளைபரப்பி
பூமணத்தின் கிறக்கத்தில்
தென்றலோடு சல்லாபித்திருக்கிறது.

இனி பொறுப்பதில்லை.
ஒன்றுகூடி முட்டிமோதி
பூமிபிளந்து வெளிப்புறப்பட்டன
வேர்கள்.

பேரிரைச்சலோடு
சரிந்து விழுந்தது
மரம்.

/6th Dec, 2006

அருமை. அருமை. மேலும் தொடருங்கள்.

மதி
15-12-2006, 12:28 PM
நல்ல கவிதை கணேஷ்..தொடருங்கள்..!

ஓவியா
15-12-2006, 01:23 PM
முதலில் படித்தேன் புரியவில்லை......இராண்டம் முறை அழகாக புரிந்தது......மீண்டும் மீண்டும் படித்தேன்.......


அடடே
அழகான தமிழ்...
கவிதை படு ஜோர்

எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கறீங்கலோ...
ஒரே பொறாமையா இருக்கு.....சரி பொறாமையில் ஒரு இரண்டு வரி திட்டுறேன்

நல்லாருங்க
நிறைய எழுதுங்க
பாரட்டுக்கள்
வாழ்த்துக்கள்
தொடருங்க

அறிஞர்
15-12-2006, 01:36 PM
வேர்களின் துன்பம்
மறுபாதிக்கு இன்பம்.

வேர்களின் இன்பம்
மொத்த மரத்திற்கே துன்பம்.....
-----
தன்னிலை விட்டு.. மறு நிலை தேடும்போது.. எத்தனை தான் துன்பங்கள்..

அருமை.. அன்பரே தொடருங்கள்.

meera
15-12-2006, 01:54 PM
என்ன சொல்ல:confused: :confused:

அருமையான கவிதை கணேஷ் தொடருங்கள்.

பாரதி
15-12-2006, 04:58 PM
அருமையான பார்வை நண்பரே...!

வெளியில் புலப்படாத வேர்களைப்பற்றியும் சிந்திக்க இன்னும் ஒரு ஆள் உண்டென்பதில் மகிழ்ச்சி எனக்கு..

கவிதை மிக நன்று.

பாதிக்கவிதை தன்னிலையிலும், இறுதி படர்க்கையிலும் வந்தது போலத் தோன்றுகிறதே..?

மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இளசு
15-12-2006, 07:32 PM
கணேஷ் அவர்களே..

அழகிய கட்டமைப்பு..சொல்வீச்சு.. பாராட்டுகள்!


எந்த படிமத்தைச் சொல்ல வருகிறீர்கள் என விளங்கவில்லை...


இதோ என் பார்வையில் ... விமர்சனம்:


அவரவர் கடமை அவரவர்க்கு..
வேரின் நீர்ச்சாறு மேலே வரவும்
இலையின் உயிருணவு கீழே வரவும்..
இயற்கை ஏற்பாடு...

வேருக்கு வெளிச்சமும்
கிளைக்கு மண்ணடியும்...

புரட்சியா? வீழ்ச்சியா??

kavitha
16-12-2006, 10:05 AM
இனி பொறுப்பதில்லை.
ஒன்றுகூடி முட்டிமோதி
பூமிபிளந்து வெளிப்புறப்பட்டன
வேர்கள்.

பேரிரைச்சலோடு
சரிந்து விழுந்தது
மரம்.


அருமையான வரிகள் என்பதைவிட இது அருமையான உட்பொருள்!
ஆனால் வேர்கள் எல்லாம் முட்டி வெளியில் விழுந்துவிட்டால் காணப்பூவுமில்லை, உண்ண கனியுமில்லை.

மனித சக்தி இப்படி பல சமயங்களில் பலருக்கு வேராகத்தானிருக்கின்றன. யாரோ ஒருவர் கனி உண்கிறார்கள் என்றால் அது யாரோ ஒரு வேரின் வலியில் தான்.

சுதந்திரத்தாகத்தின் மொத்த வலி இது!

உண்மையான வரிகள். உணருமா உலகு!
வாழ்த்துகள் ஜோதிரா..(கணேஷ்?) வித்தியாசமான பார்வை... தொடர்ந்து எழுதுங்கள்.

kjothira
16-12-2006, 01:56 PM
கவிதையை இரசித்த அனைவருக்கும் நன்றி.

சமூகமோ குடும்பமோ அந்த அமைப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை இருக்கிறது. ஒவ்வொரு கடமையுமே அமைப்பின் இருப்புக்கு ஆதாரம். அப்படி இருக்க வெளிச்சமும் அங்கீகாரமும் அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை. அந்த நிராகரிப்பின் விரக்தியில் சில கடமைகள் தவறவிடப்பட்டால் என்னாகும் என்பதை பூடகமாக சொல்லும் அல்லது சொல்ல முயலும் கவிதையிது. I think the system will break.

பென்ஸ்
19-12-2006, 05:26 PM
ஜோதிரா...

வாழ்த்துகள்.... தமிழ்மன்றத்தில் உங்களை வரவேற்கிறேன்....

கவிதை ஒரு மனக்கண்ணாடி போல... வாசிப்பவர் மனதை அப்படியே பிரதிபலிக்கும்....

நான் வாசித்தபோது அட நம்ம (unforgiven) மனசில இருந்ததை அப்படியே போட்டு வைத்திருக்கிறாரே என்று தோன்றியது....

அறிஜர் அதை சுருக்கமாக அவர் மொழியில் விளக்க..
ஒரு பக்க தெளிவு...

பாரதி அதன் பொதிவை காண்பிக்க ....
"அட ஆமா அப்படிதான் இருக்கு ..!!!" என்று ஆச்சரியம்....
(நன்றி பாரதி, இவ்வாறு கவிதை பற்றிய குறிப்புகளை கொடுத்து புதியவர்களை வளர்க்கலாமே..!!!)

இளசு, இவர் விமர்சணம் செய்தபின் மாற்று சிந்தனை செய்ய மனம் வராது...
எனோ அவர் சொல்லுவதுதான் சரி என்று தோன்றும்...
அவர், ஆனாலும் நான் சிந்தித்ததைவிட முற்ரிலும் மற்று சிந்தனை கொடுக்க... (இது சமுக அளவில்)

அப்புறம் கவிதா... இவங்க எது எழுதினாலும் அதுல ஒரு விவகாரம் இருக்குமே, அது என்ன என்று சிந்திக்க...
அடட.. கவிதை எழுதியவர் இவர் சொல்லவருகிற கருவில்தான் எழுதி இருக்கிறாரோ என்று ஒரு எண்ணம்...
(குடும்பம் இப்படிதானே கவி..!!)

யாராவது தும்மினால் கூட பதில் கவிதை எழுதும் செல்வன் என்ன ஆனார் ... கவிதை அப்படி உறுதியான கருத்தை சொல்லுதோ????

ஜோதிரா... பாராட்டுகள் ....

கவிதை அருமை.... அற்ப்புதமான கரு.. அற்புதமான வடிவு.. தொடரட்டும் உங்கள் பணி.....

நண்பா Mangrove காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள் என்ன செய்யும் தெரியுமா???

kjothira
20-12-2006, 03:54 AM
ஜோதிரா...
நண்பா Mangrove காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள் என்ன செய்யும் தெரியுமா???

Hi Benjamin,

Thanks for your wonderful comments. கவிதையில் சில செய்திகளைச் சொல்ல சில abstraction தேவைப்படுகிறது. so ரொம்ப scientific-a mangrove forest பத்தியெல்லாம் யோசிக்காதீங்க :)

-Ganesh.

பென்ஸ்
20-12-2006, 07:15 AM
Hi Benjamin,

Thanks for your wonderful comments. கவிதையில் சில செய்திகளைச் சொல்ல சில abstraction தேவைப்படுகிறது. so ரொம்ப scientific-a mangrove forest பத்தியெல்லாம் யோசிக்காதீங்க :)

-Ganesh.

இல்லை கனேஷ்.. நான் அறிவியல்பூர்வமாக எல்லாம் யோசிக்கவில்லை... அறிவு பூர்வமாகதான் யோசிக்கிறேன்....
கவிதா சொல்லுவது போல் குடும்பம் என்று ஒரு வட்டத்தை பற்றி யோசிப்போம்...

குடும்பம் => மரம்

கிளைகள் வெயிலில் அலைந்து, காற்று தேடி....

அடுத்தவர் வேராய் நீர் எடுத்து நிலை படுத்தி பரப்பின் கீழ் அடங்கி , மொத்ததையும் தாங்கி, உறுதி படுத்தி

மாங்குரூவ் காடுகளில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காததால் வேர்களும் மேலேளும்பி "மரம்" வாழ துனை புரிகின்றன...

வேர் மண்ணுகடியில் இருக்கவேண்டும் என்று கிளை நினைத்தாலோ, கிழை ஆக்சிஜனை தயாரிக்கட்டும் என்று வேர் விட்டுபோனால் கூடா மொத்த அழிவுதானே....

குடும்பத்திலும் இப்படிதானே???

ஆதவா
20-12-2006, 07:36 AM
Hi Benjamin,

Thanks for your wonderful comments. கவிதையில் சில செய்திகளைச் சொல்ல சில abstraction தேவைப்படுகிறது. so ரொம்ப scientific-a mangrove forest பத்தியெல்லாம் யோசிக்காதீங்க :)

-Ganesh.


ஜோதிரா!! கூடியவரை தமிழில் எழுதுங்கள்.. தயவுசெய்து......

ஷீ-நிசி
20-12-2006, 08:25 AM
அவ்வப்போது வந்தேன்
இக்கவிதை வழியே...

கவிதை பலமுறை படித்தேன்...
பாராட்டுக்களை பார்த்தேன்...

ஏனோ... பதிலெழுத
தயங்கின என் விரல்கள்..

மறுபடி மறுபடி
படித்தேன்....

மனம் சிரித்தது!!

அடடா... எனக்குத்தான்
கவிதை இத்தனை நேரம்
விளங்கவில்லை..

விளங்கியது வேர் என்று!
விரும்பியது மனம்
எழுதியது யார் என்று!
தெரிந்தது அது
ஜோதிரா என்று...

வேரின் பாரிவையில் இருந்து
மறுபடி படித்தேன்....
மிக அருமை நண்பா!!

ஆனால், எந்த வேறும்
தான் வளர்த்து ஆளாக்கியதை
வீழ்த்திட நினைத்திடாது...

ஆம்! வேர்கள் நம்
தாயினைப் போல....