PDA

View Full Version : காரணம் அறியா உறவொன்று உண்டோ?



gandhi
15-12-2006, 09:14 AM
அன்பின் ஆதியில் அன்னையின் உறவு,
பசியறியும் முன்பே பாலூட்டினாள்..
தூங்கத்துவங்கும் முன்பே தாலாட்டினாள்..
துயருறு முன்பே தலையணையாய்
தன் மடி தந்தாள்..
கண்கலங்கும் முன்பே
தன் கண்ணீரையும் தந்தாள்..
இத்தனையும் அறிந்தல்லோ...
அன்னை எனும் உறவை
உயர்வாய் சொல்கிறோம்..........
உணரும்போது ஒரு உறுத்தல் உள்ளே;
இருந்தும்
காரணம் அறியா உறவொன்று உண்டோ?
ஆம்..
அவள் என்மேல் காட்டும் அன்பிற்கு காரணம் இல்லையே!

ஓவியா
15-12-2006, 09:21 AM
அழகான கவிதை

வாழ்த்துக்கள்

தொடருங்கள்

***************************************************************
அவள் என்மேல் காட்டும் அன்பிற்கு காரணம் இல்லையே!.....:eek:

meera
15-12-2006, 01:57 PM
காந்தி, அழகாய் இருக்கிறது கவிதை.

அன்னை அன்புக்கு உலகில் வேரேதும் ஈடு உண்டோ??

நம்பிகோபாலன்
15-12-2006, 07:44 PM
அன்னைக்கு எவரும் நிகரில்லை

இளசு
15-12-2006, 07:49 PM
நாளெல்லாம் பட்டினியாய்க் கிடந்திடுவாள்... ஒரு
நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள்..

மேல் எல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேதினியில் நாம் வாழ வைத்தாள்...


--------------------

அன்னையைப் போலொரு தெய்வமில்லை!


நன்றி காந்தி..


( தாயின் உழைப்பை எண்ணி ' கைகள்' என்றொரு கவிதை முன்பு எழுதி இருக்கிறேன்.. தேடித்தருகிறேன்..)

இளசு
15-12-2006, 07:54 PM
கைகள்....

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3509


--------------------------------------------------------------------------------
மடங்கி விட்ட கைகள்..

அத்தனை பேரையும்
அணைத்து வளர்த்த கைகள்
ஆறுதல் தந்து, ஆதுரம் தந்து
அமைதி அளித்திட்ட கைகள்
இல்லாதவன் வீடுதான்..
இருந்தாலும்
எப்படியோ உண்ண, உடுத்த , வளர்க்க
ஏற்பாடு செய்திட்ட
மந்திரமான கைகள்..

ஓய்ந்துவிட்ட கைகள்...

பஞ்ச காலங்களில்
பைசாவுக்கு நாலு முந்திரி உடைத்து
கருத்துப் போன கைகள்
ஆற்றோர எருமுட்டை
காட்டில் காய்ஞ்ச சுள்ளி
பொறுக்கி காய்த்த கைகள்
கரும்புச்சோலை அடுப்பின்
சுவாலை தீய்த்த கைகள்

சாய்ந்துவிட்ட கைகள்...

கதிர் அறுவா பட்டு
காயம்பட்ட கைகள்
களை பறிப்பு, நாற்று நடவில்
சேற்றுப்புண் பட்ட கைகள்
அறுவடை போது
கூர் சுனை குத்திய கைகள்
தை பிறப்பு நாளில்
பொங்கல் ஊட்டிய கைகள்

காய்ந்துவிட்ட கைகள்...

மத்தியான பசி ஆட்களுக்கு
மொத்தை சோறு இட்ட கைகள்
கூடத்து கோழிக்கு
குருணை அள்ளி விசிறிய கைகள்
ஆயி கழுவிவிட்ட கைகள்
ஆனை கட்டி ஆட்டிய கைகள்

இன்று

மடங்கி விட்ட கைகள்..
ஓய்ந்துவிட்ட கைகள்...
சாய்ந்துவிட்ட கைகள்...
ஓய்ந்துவிட்ட கைகள்...
சலனமற்ற கைகள்.....
என் வெப்பக்கண்ணீரை வாங்கி
தலை புதைத்த என் மீது
ஆசிப் பன்னீராய்
வார்க்கும் கைகள்...

gandhi
18-12-2006, 03:25 AM
அணைக்கின்ற இரு கைகளுக்குள் இத்தனை கைகளைக் காட்டினீர்கள்.....சிறப்பு.
அன்புடன்,
காந்தி.

ஆதவா
18-12-2006, 05:15 AM
காந்தி,,, அருமையான கவிதை தொடருங்கள்.

நம்பிகோபாலன்
18-12-2006, 09:26 PM
இருக்கும் பொது மதிப்பு தெரியவில்லை இல்லாத பொது உனர்ந்தென் தெய்வத்தின் இரு கைகழை பட்ரி......