PDA

View Full Version : கணிணியில் வரையலாம் வாங்க !!!.



ஆதவா
15-12-2006, 08:50 AM
அன்பு நேயர்களே,, நாம் கற்றதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலாவதுண்டா? எனக்கு corelDraw மற்றும் Photoshop நன்றாகவே தெரியும். அதை இங்கே படிப்படியாக சொல்லித்தருவதில் சிரமமேதுமில்லை..

உங்களுடைய சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யக் கடமை பட்டுள்ளேன்..

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.....

பாடங்கள் இன்றிரவு முதல்.......


.

ஓவியா
15-12-2006, 10:41 AM
இந்தாங்க ஆதரவு......தந்துட்டேன்


வாழ்த்துகள்

மதி
15-12-2006, 10:53 AM
நல்லதொரு முயற்சி ஆதவன்..
நானும் CorelDraw, Photoshop-ல் ஆர்வமுள்ளவன் தான்..
தங்கள் முயற்சி தொடரட்டும்...!
வாழ்த்துக்கள்...

பாடங்களை எதிர்நோக்கி....

leomohan
15-12-2006, 11:24 AM
எனக்கு கொரல் பெயின்டரில் மிக விருப்பம். அதனால் ஒரு டாப்லெட் பென் மற்றும் டாப்லெட் மௌஸ் வாங்கி சில படங்களை கிறுக்கினேன். இதைப்பற்றி சொல்லித்தந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Mano.G.
15-12-2006, 11:33 AM
ஆ! ஹா!! நல்ல முயற்சி
வாழ்த்துக்கள் அதோடு
SMARTDRAW பற்றி தெரிந்தால்
சற்று கூறுங்களேன்.

மனோ.ஜி

ஆதவா
15-12-2006, 02:22 PM
எனக்கு கொரல் பெயின்டரில் மிக விருப்பம். அதனால் ஒரு டாப்லெட் பென் மற்றும் டாப்லெட் மௌஸ் வாங்கி சில படங்களை கிறுக்கினேன். இதைப்பற்றி சொல்லித்தந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

எனக்கு நீங்கள் சொன்ன சாதனங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது இருப்பினும் corelDRW பற்றி முழுமையாகவே தெரியும்...

ஆதவா
15-12-2006, 02:23 PM
ஆ! ஹா!! நல்ல முயற்சி
வாழ்த்துக்கள் அதோடு
SMARTDRAW பற்றி தெரிந்தால்
சற்று கூறுங்களேன்.

மனோ.ஜி

நண்பரே!! smart draw வை விட எளிமையானது corel Draw..

ஆதவா
15-12-2006, 03:22 PM
Corel Draw ஒரு அறிமுகம்...

அன்பு மன்றக் கிளிகளே, மிகச் சரியான தமிழில் corel draw வை சொல்லித் தருவதென்பது மிகச் சிரமமான ஒன்று,.. அங்கங்கே ஆங்கிலம் தலை தூக்கும்... கண்டுக்காதீங்கப்பா!!

Corel Draw கணிணியில் படம் வரைவதற்கான மென்பொருள்.. இதன் உதவியால் நாம் நினைத்த படங்களை துல்லிய அளவுகளோடு தெளிவான வண்ணங்களோடு வரையலாம். விளம்பர படங்கள், ஆடைகளுக்கு அழகூட்டும் ஓவியங்கள், மற்றும் இணைய பக்கங்களை அழகூட்டும் Vector images ஆகியவையும் வரையலாம்.. corel Draw, Corel corporation நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.. (இலவசமா இல்ல மச்சி.)

சரி Corel Draw மென்பொருளோடு வேறென்ன வழங்கப்படுகிறதென்பதைக் காண்போமே!!

1. Corel Draw
2. Corel Photo Paint.
3. Corel R.A.V.E மற்றும் பல சின்ன சின்ன மென்பொருள்கள்.. இவை மூன்றும் பிரதானம்....

இன்று இத்தோடு முடிப்போம்,, நாளை கொஞ்சம் விரிவாகவே காண்போம்...

.

பாரதி
15-12-2006, 04:34 PM
சிறப்பான உங்கள் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பரே..!

ஆதவா
16-12-2006, 04:38 AM
நன்றி பாரதி,,, மேலும் பாடங்கள் தொடரும்..

அறிஞர்
18-12-2006, 01:55 PM
நல்ல முயற்சி ஆதவன்...

இது வரை நான் photoshop மட்டுமே உபயோகிக்கிறேன்.

corel draw பற்றிச்சொல்லிக்கொடுங்கள்... பையனுக்கு கற்றுக்கொடுக்கிறேன்.

ஆதவா
18-12-2006, 04:11 PM
அன்பர்களே.!! இன்று முதல் பாடங்கள் தொடங்கவுள்ளேன்.. ஏற்கனவே கோரல் ட்ரா பற்றி சிறு அறிமுகம் தந்தேன்...

இப்போது நான் சொல்லும் பாடங்கள் யாவும் கோரல் 12 பதிப்பிலிருந்து... தற்போது கோரல் 13 பதிப்பு வெளியாகிவிட்டது.

இன்னும் பார்க்கவில்லை....


Startup Screen
ஒவ்வொரு முறையும் corel draw திறக்கும் போது உங்களை வரவேற்த்து ஒரு screen நிற்கும்.. ஆறு பொத்தான்கள் அந்த ஸ்கிரீனில் இருக்கும். அவை
New - புதிய வரைகளம் (அதாங்க Graphic) தோன்ற..
Recently Used -- கடைசியாக பதிவு செய்யப்பட்ட வரைபடத்தை பார்வையிட அல்லது edit செய்ய
Open -ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வரைபடத்தை பார்வையிட அல்லது edit செய்ய
New From Template - கோரல் நிறுவனம் பதிவு செய்திருக்கும் Template களை பயன்படுத்த..
Corel Tutor - கோரல் பற்றிய உதவி புத்தகம்..
Whats New - புதிய கோரல்ட்ராவில் என்னன்னவெல்லாம் புதியது என்று தெரிந்துகொள்ள..
240

குறிப்பு: உங்களுக்கு இந்த வரவேற்பு ஸ்கிரீன் பிடிக்கவில்லையெனில் அதன் கீழ் show this welcome at startup என்று டிக்

செய்யப் பட்டிருக்கும் அதை எடுத்துவிட்டீர்களேயானால் திரும்ப வராது..

அடுத்து கோரலின் முகப்பு பகுதி...
பார்க்க படம்:

241முதலாவதாக Title Bar

நீங்கள் ஒரு வரைபடத்தை திறந்தாலோ அல்லது புதிய வரைபடம் ஏற்படுத்தினாலோ அதன் பெயர் முகவரி இந்த Title Bar ல்

தான் வந்து அமரும். இதைப் பற்றி மேலும் விளக்கம் வேண்டியதில்லை....

அடுத்து Menu Bar

Title Bar க்கு அடுத்து வரும் பகுதி. எல்லா மென்பொருகளிலும் காணப்படும் மெனுக்களே தான் உள்ளன.. மொத்தம் 11

மெனுக்கள். இதன் சிறப்பு என்னவென்றால் உங்கள் வசதிக்கேற்ப அதை தள்ளி வைக்கலாம் அல்லது மறைத்து வைக்கலாம்...
( அதுபாட்டுக்கு கெடக்கும்பா ஏன் வம்பு )

ஏதாவதொரு மெனுவை அழுத்தினால் மெனு திறக்கும்... அதில் கட்டளைகளோடு குறுக்குவழி கீ (shortcut keys தான் சரியான

மொழிபெயர்ப்பு தெரியல அட்ஜீஸ் பண்ணுங்க) இருக்கும்... உங்கள் வேலைகளை சுலபமாக்கிக் கொள்ளலாம்...

குறுக்கு வழி pop up menu:
242

இவ்வகை மெனு வரைதளத்திலோ அல்லது வரைந்த பொருளின் மீதோ Right Click செய்தால் மட்டுமே தோன்றும் (பார்க்க படம்)
கிட்டத்தட்ட இது ஒரு Shorcut pop up menu,...

அடுத்து Standard Menu
243

இவ்வகை மெனு கிட்டத்தட்ட எல்லா மென் பொருள்களிலும் காணப்படுகின்றன.. ஆகையால் இதன் விபரங்கள் அதிகம் தேவையில்லை என்று எண்ணுகிறேன்..

இருப்பினும் சின்ன பார்வை..:

New - புதிய வரைபடம் துவக்கு
Open - ஏற்கனவே சேமிக்கப்பட்ட வரைபடத்தைத் திற
Save - சேமி
Print - ப்ரிண்டு போடு ( தமிழ் விளையாடுதுப்பா!!! )
Cut - வரைந்த பொருளை Cut செய்
Copy - காப்பி போடு ( குடிக்கிற காப்பி இல்லீங்க)
Paste - பேஸ்டு போடு (சத்தியமா தமிழ்ல என்னனு தெரியாது)
Undo - செய்த செயலை வேண்டாமென சொல்லு
Redo - வேண்டாமென் சொன்ன செயலை திரும்ப அழை
Import - வரைந்த பொருளை அல்லது அதன் சார்பான பொருளை வரவழை
Export - வரைந்த பொருளை அல்லது அதன் சார்பான பொருளை கொண்டுசெல்
Application launcher - கோரலுடன் இணைந்த மென்பொருளை துவக்கு
Corel Online -- இணையத்தில் கோரல்
Zoom Levels - பெரிது படுத்திப் பார்

அப்பா சாமி!!! போதும்டா.. இன்னிக்கி கிளாஸ் முடிஞ்சிது... இனி நாளைக்கு...

ஏம்பா படிச்சு ஏதாவது சொல்லுங்கப்பா..

.

pradeepkt
19-12-2006, 04:07 AM
கலக்குங்க ஆதவா! இந்தப் பதிவுகளைச் சேமிச்சு வச்சுக்கிறேன்

ஆதவா
19-12-2006, 05:47 AM
attachement படங்களை இன்னும் பெரிதாக எப்படி காட்டுவது?

அறிஞர்
19-12-2006, 01:03 PM
attachement படங்களை இன்னும் பெரிதாக எப்படி காட்டுவது?
பெரிய சைஸில் சேமித்து... photobuckets மூலம் பதியுங்கள்....

அறிஞர்
19-12-2006, 01:07 PM
கோரல் 12 பதிப்பு எல்லாம்... விலை கொடுத்து தான் வாங்கவேண்டுமா. முழுமையான இலவச பதிப்புக்கள் உள்ளதா? (30 நாள் ட்ரையல் மட்டும் தானா)

ஆதவா
19-12-2006, 01:40 PM
முழுமையான இலவச பதிப்புகள் நிறுவனத்திடமிருந்து இல்லை.. :D :D

30 நாட்களுக்குண்டான Demo உள்ளது இல்லயெனில் 35000/- அழ வேண்டியிருக்கும்..

இங்கே இணையத்தில் இலவசமாக (திருட்டுத்தனமாக) கிடைக்கும் என்கிறார்கள்.. முகவரிதான் தெரியவில்லை...

அறிஞர்
19-12-2006, 03:25 PM
முழுமையான இலவச பதிப்புகள் நிறுவனத்திடமிருந்து இல்லை.. :D :D

30 நாட்களுக்குண்டான Demo உள்ளது இல்லயெனில் 35000/- அழ வேண்டியிருக்கும்..

இங்கே இணையத்தில் இலவசமாக (திருட்டுத்தனமாக) கிடைக்கும் என்கிறார்கள்.. முகவரிதான் தெரியவில்லை... தகவலுக்கு நன்றி. நான் முன்பு இருந்த தேசத்தில் எளிதாக (திருட்டு பொருள்) கிடைக்கும். இங்கு எளிதில்லை. 30 நாட்கள் டெமோ இறக்கி பார்க்கவேண்டியதுதான். முகவரி கிடைத்தால் தனிமடலில் கொடுங்கள்.

pradeepkt
20-12-2006, 04:08 AM
இதெல்லாம் தப்பில்லீங்களா? :D :D

ஷீ-நிசி
20-12-2006, 04:15 AM
கோணலாக எழுதப்பட்டிருக்கும் ஆதவா எழுத்தின் காரணம் இப்போதுதான் தெரிகிறது... காரணம் இதானுங்களோ!

நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஆதவா
20-12-2006, 04:56 AM
இதெல்லாம் தப்பில்லீங்களா? :D :D

என்னனென்னமோ நடக்குதாமா!!
இதெல்லாம் என்ன தப்பு...

( யாராவது முகவரி இருந்தா சொல்லுங்கப்பா அந்த தப்பையும் செஞ்சுதான் பாத்திருவோமே!!!... ஏற்கனவே லட்சக்கணக்கிலே சாஃப்ட்வேட்ருக்கு அழுதாச்சு... ( ஹி ஹி அப்படியும் Multi user உரிமம் வாங்கலீங்கோ ) :D :D :D

ஆதவா
20-12-2006, 04:58 AM
கோணலாக எழுதப்பட்டிருக்கும் ஆதவா எழுத்தின் காரணம் இப்போதுதான் தெரிகிறது... காரணம் இதானுங்களோ!

நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஷீ,,, இந்த கையெழுத்து ஆளவந்தான் படத்தில் இருக்கும் டைட்டிலைப் போல அல்லவா இருக்குது? (இந்த படம் வருவதற்கு முன்பேயே இவ்வாறு கையெழுத்து போட்டிருக்கிறேன்.. இன்னும் சொல்லப்போனால் நன்றாக வரையத்தெரிந்தவர்களுக்கு இவ்வகை கையெழுத்து அருமையாக வரும் )

ஷீ-நிசி
20-12-2006, 05:22 AM
ஆதவா, ஓரளவிற்கு வரையவும் செய்வேன்.... சீக்கிரம் அவற்றையெல்லாம் தமிழ் மன்றத்தில் upload செய்கிறேன்

ஆதவா
20-12-2006, 06:05 PM
என் இனிய தமிழ் மன்றத் தோழர்களே/தோழிகளே!!! இன்றைக்கு கொஞ்சம் கோரல்ட்ரா பாத்திருவோம்... என்னடா இவன் ரெம்ப சுலோவா போறானேன்னு நினைக்காதீங்க.. அய்யா நிலைம அந்த மாதிரி..

Property Bar (:D)

கோரலில் அதி முக்கியமான ஒரு டூல்பார்..
இது நேற்று சொன்ன Standard Bar க்கு கீழே உள்ளது,. நீங்கள் வரையும் ஒரு பொருளின் அளவுகள், என்ன நிலையில் அது இருக்கிறது?, போன்ற எல்லா அளவு (property)சம்பந்தமான விவரங்கள் இதில் இருக்கும்..

245

Tools Box (தமிழில் கருவிப்பெட்டி???)

கோரலில் ரெம்ப முக்கியமானது.. இடதுபக்க ஓரத்தில் இருக்கும் (பார்க்க படம்) கிட்டத்தட்ட பதினாலு முக்கிய டூல்ஸ் இருக்கும்... சில டூல்கள் மறைந்திருக்கும்.. அதற்கென்று விசேசமாக அம்புக்குறி இருக்கும்; அதைப்பயன்படுத்தினால் மறைவிலிருக்கும் டூல்கள் வெளியே வரும் (பார்க்க படம்)
246

toolbox ல இருக்கிற இந்த டூல்ஸ் என்னென்ன வேலை செய்யுதுன்னு பார்க்கலாமே போகப் போக உங்களுக்கே தெரியும்...

அடுத்து Status Bar

கோரலில் கடைசியாக அடியில் இருக்கும் பார்.. நாம் என்னென்ன செய்து கொண்டிருக்கிறோம்.. வரைந்த பொருளின் Color , thickness மற்றும் சில டிப்ஸ் போன்றவைகள் இதில் வலம் வரும்..

Color Palatte..
கோரலில் நாம் வரைந்த பொருளுக்கு கலர் கொடுக்க இங்கே வரவேண்டும்.. வலது ஓரத்தில்

Drawing Page

நோட்டு புத்தகத்தில் காகிதம் போல... இங்கே வைத்துதான் வரைய வேண்டும்... ( எங்கே வேண்டுமானாலும் வைத்து வரையலாம் ஆனால் அச்சிடும் போது அந்த வரைந்த பொருள் page க்குள்ளேயே இருக்கவேண்டும் )

அப்பாடி எல்லாம் முடிஞ்சது.. இனி வெளக்கனும்...

1. எல்லா டூல்பார்களையும் நம் தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.. வேண்டாதவற்றை தூக்கிவிடலாம் (Hide)
2. எல்லா டூல்பார்களும் நகர்த்தக் கூடியது,, நம் செளகரியத்திற்கேற்ப அதனை நகர்த்திக் கொள்ளலாம்..
3. மேலும் அதது அங்கே இருத்தலே நலம்...
4. தேவையான டூல்களை மட்டும் வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை அழித்து விடலாம்....
5. மீண்டும் பழைய மாதிரியையும் கொண்டு வந்துவிடலாம்...
6. கலர் பேலட்டில் இல்லாத கலர்கள் அல்லது Pantone கலர்களை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்திக் கொள்ளலாம்
7. Property bar க்கும் Drawing page க்கும் இடையில் Rulers உண்டு.. அதைக்கொண்டு பொருளின் அளவுகளை தெரிந்து கொள்ளலாம்..

மேலும் தொடரும்....

.

leomohan
20-12-2006, 06:25 PM
அருமை. உபயோகமான தகவல் எளிய தமிழி்ல். தொடருங்கள். நேரம் கிடைத்தால் தமிழ் விக்கியிலும் உங்கள் கட்டுரைகளை இடலாம். http://wiki.etheni.com

kavitha
21-12-2006, 10:00 AM
நல்லதொரு பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கக்காத்திருக்கிறோம்.

ஆதவா
21-12-2006, 10:07 AM
நன்றி கவிதா அவர்களே....

ஆதவா
23-12-2006, 09:09 AM
விடுமுறையிலிருப்பதால் பாடங்கள் புதிய வருடத்தில்ல்....

rjau
04-03-2007, 11:45 AM
உங்கள் பாடம் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்

ஷீ-நிசி
04-03-2007, 04:16 PM
ஆதவா.. என்னப்பா ஆச்சு இந்தத் திரி....

ஆதவா
04-03-2007, 04:18 PM
மறந்தே போச்சு.. இனியாவது புதுப்பிக்கிறேன்..

jasmin
08-03-2007, 06:34 AM
பல சாப்ட்வேர்கள் ARES முலம் டவுன் லோடு செய்யலாம். சில சாப்ட்வேர்களும் + இலவசமாக வைரஸ்சும்:eek: கிடைக்கும். நான் பல சாப்ட்வேர்களை இங்கு இருந்து டவுன் லோடு செய்துயிருக்கிறோன்.:D :D

மனோஜ்
08-03-2007, 06:53 AM
ஆதவன் ஆசிரியரே உன்மையில் மனமாற நன்றி கூறுகிறோன் தொடர்ந்து கற்று தாருங்கள் மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி

ஆதவா
08-03-2007, 07:07 AM
சரி சிஷ்யரே!

march
21-03-2007, 07:22 PM
யாராவது வெப் டிசைன் பற்றி தமிழில் சொல்லுங்கலேன்

வித் லவ்
மார்ச்

rjau
27-09-2007, 07:45 PM
உங்கள் பாடம் எஅல்லாகவே உள்ளது

க.கமலக்கண்ணன்
28-09-2007, 05:48 AM
மிகவும் நன்றாக இருக்கிறது ஆதவா

மின்னும் உங்களின் தனி தன்மையுடன்

மிளிர்கிறது. நானும் உங்கள் சார்பாக கோரல் டிராவை தொடரலாமா ?

praveen
28-09-2007, 06:10 AM
ஆதவா & கமலக்கண்ணன் இந்த கோரல்டிரா யுனிகோடு சப்போர்ட் செய்யுமா?. ஒரு படத்தில் உள்ளே இகலப்பை கொண்டு தமிழில் டைப் செய்ய இயலுமா?. இல்லையென்றால் வேறு எந்த மென்பொருள் மூலம் முடியும். நான் இதுவரை mspaintல் தான் முயற்சித்து செய்கிறேன். மற்றவை யுனிகோடு ஒத்திசைக்க மாட்டேன்கிறது.

க.கமலக்கண்ணன்
28-09-2007, 08:46 AM
ஆதவா & கமலக்கண்ணன் இந்த கோரல்டிரா யுனிகோடு சப்போர்ட் செய்யுமா?. ஒரு படத்தில் உள்ளே இகலப்பை கொண்டு தமிழில் டைப் செய்ய இயலுமா?. இல்லையென்றால் வேறு எந்த மென்பொருள் மூலம் முடியும். நான் இதுவரை mspaintல் தான் முயற்சித்து செய்கிறேன். மற்றவை யுனிகோடு ஒத்திசைக்க மாட்டேன்கிறது.

யுனிகோடு கோரல்டிரா சப்போட் செய்யாது. இகலப்பை நான் உபயோபடுத்துவதில்லை.

அதற்கு முரசுஅஞ்சல் மிக நன்றாக இருக்கும். முரசுஅஞ்சல் நிறுவிய பின், யுனிகோடை காப்பி செய்து நோட்பேடில் பேஸ்ட் செய்து பின் Help அடுத்துள்ள +Mrusu திறந்து Conert Selection உள்ளே வந்து To TSCII 1.7 கிளிக் செய்தால் யுனிகோடு திஸ்கி முறைக்கு மாறிவிடும் பின் காப்பி செய்து கோரல்டிரா மட்டும் அல்ல எந்த சாப்ட்வேருக்கும் கொண்டு செல்லாம்....

அதுதான் மிக எளிய வழி...

http://www.geocities.com/kamal_kkk/note.jpg

http://www.geocities.com/kamal_kkk/note1.jpg

.

praveen
28-09-2007, 08:52 AM
விரைவு தகவலுக்கு நன்றி நண்பரே, ஆனால் எனக்கு என்னமோ முரசு பயன்படுத்த தயக்கமாக உள்ளது, இகலப்பை தவிர வேறு நான் பயன்படுத்துவதில்லை/தெரியாது. தெரிந்து கொள்ளவும் நேரமில்லை.

க.கமலக்கண்ணன்
28-09-2007, 08:53 AM
விரைவு தகவலுக்கு நன்றி நண்பரே, ஆனால் எனக்கு என்னமோ முரசு பயன்படுத்த தயக்கமாக உள்ளது, இகலப்பை தவிர வேறு நான் பயன்படுத்துவதில்லை/தெரியாது. தெரிந்து கொள்ளவும் நேரமில்லை.


இகலப்பையை விட முரசுஅஞ்சல் தான் விரைவாக செயல்படும் ஒரு முறை உபயோகித்து பாருங்கள் பின் அதை விட மாட்டீர்கள்...

செல்வா
27-01-2008, 12:59 PM
ஐயா ஆதவா... ஆவலுடன் கோரல்டிரா படிக்க காத்திட்டுருக்குறோம்..... இந்த பக்கம் கதிர்களை வீசகூடாதா

சூரியன்
27-01-2008, 01:12 PM
நல்ல முயற்சி நண்பரே ஆரம்பித்து ரெண்டுவருசம் ஆச்சு இன்னும் பாதி கூட தாண்டல.?

ஆதவா
27-01-2008, 02:36 PM
ஐயா ஆதவா... ஆவலுடன் கோரல்டிரா படிக்க காத்திட்டுருக்குறோம்..... இந்த பக்கம் கதிர்களை வீசகூடாதா

உங்கள் பின்னுட்டம் நிறைவைத் தருகீறது செல்வரே! என்னால் முன்பைப் போல அதிகம் வரமுடிவதில்லை... அந்த நேரத்தில் இம்மாதிரியான பாடங்கள் கொடுக்கவும் நேரமில்லல... ஆனாலும் இந்தத் திரியில் உங்கள் எதிர்பார்ப்பை அடுத்து மீண்டும் ஆரம்பிக்கிறேன்.... சற்று அவகாசம் கொடுங்கள்.. மீண்டும் புதுப்பித்து உங்களை கணிணியில் வரைய வைக்கிறேன்.....

நன்றியுடன்
ஆதவன்

சூரியன்
04-02-2008, 02:31 PM
உங்கள் பின்னுட்டம் நிறைவைத் தருகீறது செல்வரே! என்னால் முன்பைப் போல அதிகம் வரமுடிவதில்லை... அந்த நேரத்தில் இம்மாதிரியான பாடங்கள் கொடுக்கவும் நேரமில்லல... ஆனாலும் இந்தத் திரியில் உங்கள் எதிர்பார்ப்பை அடுத்து மீண்டும் ஆரம்பிக்கிறேன்.... சற்று அவகாசம் கொடுங்கள்.. மீண்டும் புதுப்பித்து உங்களை கணிணியில் வரைய வைக்கிறேன்.....

நன்றியுடன்
ஆதவன்

எனக்கு தெரிந்தவற்றை நான் சொல்லலாமா?

அக்னி
06-02-2008, 06:37 AM
எனக்கு தெரிந்தவற்றை நான் சொல்லலாமா?
தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள எப்போதும் மன்றத்தில் தடையில்லை.
ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

அனுராகவன்
22-02-2008, 11:50 PM
கோரல்ட்ரா பெயரின் காரணம் என்ன?
அதற்கு எப்படி அப்பெயர் வந்தது..
விளக்கம் தேவை..

indiran
06-04-2008, 04:52 AM
கோரல்டிரா 12 புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு பேய் முழி முழிக்கும் எங்களைப் போன்ற ஞான சூனியங்களுக்கு ஆதவனின் அறிவொளி ஒரு வரப்ப்ரசாதம். தொடருங்கள் ஆதவா!

siva
07-04-2008, 05:23 PM
ஆதவா!!! உங்கள் பணி முடிந்துவிட்டது என்று நினைத்து விட்டீர்களா?

reader
08-04-2008, 12:50 PM
தாங்கள் இதை கொஞ்சம் தொடர்ந்து வந்தால் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்.. டிசைனிங்கில் போக வேண்டும் என்று எண்ணும் அன்பர்களுக்கு உங்களின் இந்தப் பதிப்பு வரப்பிரசாதம்

ஆர்.ஈஸ்வரன்
10-05-2008, 10:36 AM
வாழ்த்துகள்

sunson
10-07-2008, 09:55 AM
தொடர்ந்து எழுத, விரைவில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும், உங்கள் பதிவிற்காகவும் காத்திருக்கின்றேன். மேலும் Photoshop பற்றியும் தமிழில் அறியத்தரவும். வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 08:29 PM
தோழர் ஆதவா அவர்கள் ஆரம்பித்த இந்த பதிவினை தொடர்ந்து மன்ற தோழர்கள் பயன்பெறும் வகையில் தோழர் தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் மீள் பதிவு செய்கிறேன் ...

tami
02-02-2012, 06:09 AM
நண்பர்களே, என்னிடம் சில movie clips உண்டு, அதை delete பண்ணும்போது delete ஆகவில்லை
access is denied என்று வருகிறது, clips மஞ்சள் கலரில் உள்ளது மட்டும் delete ஆகவில்லை,
அதை எப்படி delete பண்ணுவது.

sunson
30-05-2012, 07:09 AM
கொஞ்சம் படங்களுடன் சேர்த்து தந்தால் என் போன்ற கத்துக்குட்டிகளுக்கு விரைவாக புரிந்து கொள்ள இயலும்.