PDA

View Full Version : மதி

ஆதவா
15-12-2006, 08:20 AM
என்னடா இவன் எடுத்த எடுப்பிலேயே காதலை ஆரம்பிச்சிட்டானேன்னு நினைக்காதீங்க..
நாம் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை கூட வரும் இன்னுமொரு சொந்தம் காதல்" காதலில்லாது யாருமில்லை...
பிகு: ( இது காதலிக்காக எழுதிய காதலில்லை..)

மஞ்சள் மதியழகே மதிமயங்கும்
செண்பகமே யென
பஞ்சப் பாட்டிசைத்து
வழியெல்லாம் பூவிரைத்து
நெஞ்சம் உருகி நினைவெல்லாம்
நீயென்று
கொஞ்சு தமிழ் பேசி, குலவி,
நினைப்பேனடி!

உறங்கவோ உயிரில்லை
நினைவினிலே
மறக்கவோ முகமில்லை
என
கிறங்கவோ நீ வந்தாய்
அமுதே
திறந்துவிடு மனதை
எனக்காய்!

கொதித்தெழ தெம்பில்லை
நாவினிலே,
மிதித்தெழ வலுவில்லை
நினைவினிலே
விதித்த தண்டனை இனியுமோ?
என்றேன்
விதியே! விளக்கே! எனக்கு
விளங்காதவளே!

ரதியே! ரம்பே! நான்
வணங்கும் தேவகியே!!
வா வந்தணை என்னை!
வானம் முழுவதும் விடியும்வரை
காத்திருப்பேன்.

gragavan
15-12-2006, 08:57 AM
விடியும் வரை காத்திருன்னு அவங்க சொல்லீட்டாங்களா? :-)

நல்ல முயற்சி ஆதவன்.

ஆதவா
15-12-2006, 10:42 AM
ஹ ஹா !!! நன்றி ராகவன்

நம்பிகோபாலன்
15-12-2006, 08:05 PM
காத்திருத்தல் காதலின் குனம்

ஆதவா
16-12-2006, 04:36 AM
காத்திருத்தல் காதலின் குனம்

நன்றி கோபன்... தாங்களும் காத்திருக்கிறீர்களா?

meera
16-12-2006, 05:24 AM
ஆதவன்,

அசத்துங்க.காத்திருப்பதே சுகம் என நினைத்துவிட்டீரோ!!!

வாழ்த்துகள் நண்பா.

sarcharan
16-12-2006, 05:36 AM
ஆதவனா விடியும் வரை காத்திருப்பது???
:eek:

ஆதவா
16-12-2006, 05:36 AM
நன்றி மீரா,

காதலில் காத்திருப்பது எத்தனை சுகம்?

நேற்றுதான் உன் விழிகளைப் பார்த்தேன்
காற்றும் நீரும் நெருப்பும் கடந்து,
என் கண்களின் முன்
பூமி சுற்றியதை கண்டும்
காத்திருக்கிறேன் இன்று..
நாளையில்லாது பரவாயில்லை
அடுத்த நாளாவது வா!!!
உன் காதலோடு..

ஆதவா
16-12-2006, 05:37 AM
ஆதவனா விடியும் வரை காத்திருப்பது???
:eek:

நன்றி சரவணன்.. பசக் குனு புடிச்சிட்டீங்களே!!!

நிலவுக்காக ஆதவன் காத்திருப்பதையே சொல்லியிருக்கிறேன்...

பென்ஸ்
19-12-2006, 06:07 AM
ஆதவன்...

தங்கள் கவிதைகளை படித்து , ரசித்து வருகிறென்.... பணிபளு இருப்பதால் சரியாக விமர்சணம் கொடுக்க முடியாமல் இருந்தது... மன்னிக்க...

சாராய போதை ஒருவனை அடிமையாக்க வருடங்கள் எடுக்கும், சிகெரெட் அப்படிதான், காஞ்சா மாதங்கள், அபின் எஸ்டஸி போன்றவை வாரங்கள்... ஆனால் "கிராக்" என்று செல்லமாக அழக்கபடும் கிராக் கோக்கேன் மட்டும் தான் ஒரு முறை பயன் படுத்தினாலே அடிமையாக்கி விடும்....

காதலும் ஒரு "கிராக்"தான் .... ஒரு பார்வையிலையே அடிமையாக்கி விடும், அப்புறம் அது இல்லாமல் முடியாது... தவிக்க விடும், கை கால் எல்லாம் உதறும்... கவிதை எழுத வைக்கும்...

சில நேரம் கிறுக்கன் கூட ஆக்கிவிடும்.....:D :D

எப்படியோ.... "நல்வரவு":rolleyes: :rolleyes: :rolleyes:

விதியே! விளக்கே! எனக்கு
விளங்காதவளே!
.
ஆனாலும் இப்படியெல்லாம் திட்டனுமா????:D :D :D

pradeepkt
19-12-2006, 06:18 AM
நான் கூட நம்ம மதியைப் பத்தி ஏதாச்சும் அறம் பாடி வச்சுருக்கீங்களோன்னு நினைச்சு வந்தேன்...
ஆனா, ஒரு காதல் கவிதையை மட்டும் கொடுத்துட்டீங்களே.. நான் சொல்ல நினைச்சதை எல்லாம் பென்ஸூ சொல்லிட்டதாலே, நான் அப்பீட்டு...

ஆதவா
19-12-2006, 07:07 AM
ஆதவன்...

தங்கள் கவிதைகளை படித்து , ரசித்து வருகிறென்.... பணிபளு இருப்பதால் சரியாக விமர்சணம் கொடுக்க முடியாமல் இருந்தது... மன்னிக்க...

ஆனாலும் இப்படியெல்லாம் திட்டனுமா????:D :D :D

மிக்க நன்றி பென்ஸ் அவர்களே... மேலும் தங்கள் விமர்சனத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்...

நீங்கள் சொல்லியது போல் காதலியை திட்டவும் செய்யலாம்.. காதலனின் கோபம், காமம், காதல், வெறி யாவும் காதலியின் மேலேயே இருக்க வேண்டுமென நினைக்கிறேன்... மேற்சொன்னவைகள் யாவும் அன்புக்காக மட்டுமிருந்தால்.....

ஆதவா
19-12-2006, 07:11 AM
நான் கூட நம்ம மதியைப் பத்தி ஏதாச்சும் அறம் பாடி வச்சுருக்கீங்களோன்னு நினைச்சு வந்தேன்...
ஆனா, ஒரு காதல் கவிதையை மட்டும் கொடுத்துட்டீங்களே.. நான் சொல்ல நினைச்சதை எல்லாம் பென்ஸூ சொல்லிட்டதாலே, நான் அப்பீட்டு...

சேச்சே. மதியை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது.. (நேற்று அவர் பிறந்தநாள்) இருந்தாலும் அவர் பிறந்த நாளுக்காக மதி என்ற இக்கவிதையை..... கவிதையை... என்னப்பா வார்த்தை வரமாட்டேங்குது...

ஆங் புடிச்சிட்டேன் டெடிகேட் பண்றேன்.... எப்படி நம்ம தமிழ்... ( மன்ற நிர்வாகிகள் மன்னிக்க. சரியான தமிழ் பதம் எனக்கு கிட்டவில்லை.. சமர்ப்பணம் சரியா? )

ஷீ-நிசி
19-12-2006, 07:16 AM
ஆதவா கவிதை மிக அருமை...
ஆதவா எனக்கு நன்கு பரிச்சயமானவர்.... மிக அழகாக கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர்.. அதைவிட மிக அழகாக விடுக(வி)தைகள் போடுவார்.. கலக்குங்க ஆதவா என்னும் சூர்யா

ஆதவா
19-12-2006, 07:26 AM
ஆதவா கவிதை மிக அருமை...
ஆதவா எனக்கு நன்கு பரிச்சயமானவர்.... மிக அழகாக கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர்.. அதைவிட மிக அழகாக விடுக(வி)தைகள் போடுவார்.. கலக்குங்க ஆதவா என்னும் சூர்யா

நன்றி ஷீ... விடுக(வி)தைகள் போட்டு விடலாம்.. ஆனால் நம்ம ஒர்குட் பிருந்தா மேடம் மாதிரி யாராவது இங்கிருந்தால் என்ன செய்ய...

பென்ஸ்
19-12-2006, 10:17 AM
__________________
"கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக் கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான். காதலில் கூட இது சாத்தியப்படுவதிலை" -ஷீ-நிசி

இது ஏன் என்று தெரியுமா ஷீ...?????:rolleyes: :rolleyes: :D :D

ஷீ-நிசி
19-12-2006, 10:37 AM
எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாததால்....

ஆதவா
19-12-2006, 10:40 AM
அப்படியென்றால் காதல், எதிர்பார்ப்புகள் மிகுந்தது என்று சொல்லுகிறீர்களா?

பென்ஸ்
19-12-2006, 10:44 AM
எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாததால்....

எதிர்பாப்புகள் இல்லாத ஒரு உறவை கூறமுடியுமா... ???:rolleyes: :rolleyes: :rolleyes:
தாயன்பாக இருந்தாலும்..... !!!1:) :)

ஆதவா
19-12-2006, 10:48 AM
நானறிந்தவரை தாயன்பைத் தவிர வேறெதுவும் எதிர்பார்புகள் மிகுந்த உறவுதான்...

அமரன்
06-06-2007, 05:00 PM
ஆதவனின் முதல் கவிதையை படிக்கும் சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது. முதல்கவிதையிலேயே முத்திரை பதித்த உமக்கு பாராட்டுக்கள்.
காதலன் காதலியை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோலத் தெரிந்தாலும் ஆதவனின் முதல் கவிதையை படிக்கும் சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது. முதல்கவிதையிலேயே முத்திரை பதித்த உமக்கு பாராட்டுக்கள்.
காதலன் காதலியை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோலத் தெரிந்தாலும் வானம் முழுவதும் விடியும்வரை
காத்திருப்பேன்
என்கின்ற இறுதி வரிகள் வேறு ஏதோ சொல்கின்றனவோ. இரவு உலாப்போன நிலவுக்காதலிக்காக பகல் உலா சூரியன் காத்திருக்கின்றதோ. இங்கே காத்திருக்கும் காதலன் சூரியன். காதலி நிலவு. அப்படியா ஆதவா?

ஓவியா
06-06-2007, 05:50 PM
என்னடா இவன் எடுத்த எடுப்பிலேயே காதலை ஆரம்பிச்சிட்டானேன்னு நினைக்காதீங்க..
நாம் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை கூட வரும் இன்னுமொரு சொந்தம் காதல்" காதலில்லாது யாருமில்லை...
பிகு: ( இது காதலிக்காக எழுதிய காதலில்லை..)

மஞ்சள் மதியழகே மதிமயங்கும்
செண்பகமே யென
பஞ்சப் பாட்டிசைத்து
வழியெல்லாம் பூவிரைத்து
நெஞ்சம் உருகி நினைவெல்லாம்
நீயென்று
கொஞ்சு தமிழ் பேசி, குலவி,
நினைப்பேனடி!

உறங்கவோ உயிரில்லை
நினைவினிலே
மறக்கவோ முகமில்லை
என
கிறங்கவோ நீ வந்தாய்
அமுதே
திறந்துவிடு மனதை
எனக்காய்!

ஆ ஆ ஓ ஓ னு இருக்கு

கொதித்தெழ தெம்பில்லை
நாவினிலே,
மிதித்தெழ வலுவில்லை
நினைவினிலே
விதித்த தண்டனை இனியுமோ?
என்றேன்
விதியே! விளக்கே! எனக்கு
விளங்காதவளே!

ரதியே! ரம்பே! நான்
வணங்கும் தேவகியே!!
வா வந்தணை என்னை!
வானம் முழுவதும் விடியும்வரை
காத்திருப்பேன்.

பிரமாதம் ஆதவா.

இந்த கவிதையை காதலர் தின போட்டிக்கு அனுப்பியிருக்கலாமே!!!!

மிகவும் எழிமையாக அசத்தலாக இருகின்றது. சபாஷ் தலிவா.

அனைத்து பின்னூட்டங்களும் ஜாலி, மீண்டும் தூசு தட்டிய அமரனுக்கு நன்றி.

அமரன்
06-06-2007, 05:52 PM
பிரமாதம் ஆதவா.

இந்த கவிதையை காதலர் தின போட்டிக்கு அனுப்பியிருக்கலாமே!!!!

மிகவும் எழிமையாக அசத்தலாக இருகின்றது. சபாஷ் தலிவா.

அனைத்து பின்னூட்டங்களும் ஜாலி, மீண்டும் தூசு தட்டிய அமரனுக்கு நன்றி.
இது காதல் கவிதையாகத் தெரியவில்லையே....
அல்லது நான் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றேனா?

ஓவியா
06-06-2007, 05:55 PM
இது காதல் கவிதையாகத் தெரியவில்லையே....
அல்லது நான் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றேனா?

அவளுக்காக விடியும்வரை காத்திருக்காறே,

ஆனாலும் மதிக்காக ஆதவன் காத்திருப்பது போல் ஜாடையா காதலை மறைத்து சொல்லியுல்லார்.

அமரன்
06-06-2007, 05:57 PM
அவளுக்காக விடியும்வரை காத்திருக்காறே,

ஆனாலும் மதிக்காக ஆதவன் காத்திருப்பது போல் ஜாடையா காதலை மறைத்து சொல்லியுல்லார்.
நன்றி ஓவிக்கா..........

அக்னி
06-06-2007, 05:57 PM
அவளுக்காக விடியும்வரை காத்திருக்காறே,

ஆனாலும் மதிக்காக ஆதவன் காத்திருப்பது போல் ஜாடையா காதலை மறைத்து சொல்லியுல்லார்.
ஆமாம்..
அதற்காகத்தான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் இது காதலிக்காக எழுதிய காதலில்லை என்று வேறு ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளாரோ..?

பிரமாதமான கவிதைக்குப் பாராட்டுக்கள் ஆதவா...

அமரன்
06-06-2007, 06:02 PM
ஆமாம்..
அதற்காகத்தான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் இது காதலிக்காக எழுதிய காதலில்லை என்று வேறு ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளாரோ..?

பிரமாதமான கவிதைக்குப் பாராட்டுக்கள் ஆதவா...
இப்படிப்பார்த்தால் என்ன அக்னி. எழுதியவர் ஆதவன். அவர் காத்திருக்கின்றார். அவராக நினைத்துக்கொண்டால் காதல் கவிதை. அவர்பெயராக நினைத்துக்கொண்டால் இயற்கைக் கவிதை.

ஓவியா
06-06-2007, 06:03 PM
ஆனாலும் நிலவுக்காக சூரியனின் காதல் மெய்சிலிர்க்க வைகின்றது.....

இயற்க்கையும் இப்படிதான் கொஞ்சி குலாவி லவ் பண்ணுமோ!!!!!!

பொறாமையுடன்
ஓவியா.

அமரன்
06-06-2007, 06:08 PM
ஆனாலும் நிலவுக்காக சூரியனின் காதல் மெய்சிலிர்க்க வைகின்றது.....

இயற்க்கையும் இப்படிதான் கொஞ்சி குலாவி லவ் பண்ணுமோ!!!!!!

பொறாமையுடன்
ஓவியா.
:fragend005: :fragend005: :fragend005: :fragend005: :fragend005: :fragend005:

ஓவியா
06-06-2007, 06:10 PM
Currently Active Users Viewing This Thread: 4 (4 members and 0 guests)
ஓவியா, அமரன், மனோஜ், அக்னி

ஆரம்பித்தாகிவிட்டது
................................................................................

அமரன் நீங்க ஓடி வந்து என் பதிவின் சீக்ரட் பாய்ண்ட புடிக்கறீக. இது நல்லதுகல்ல, ஆமாம்.

ஹி ஹி ஹி

அக்னி
06-06-2007, 06:15 PM
இப்படிப்பார்த்தால் என்ன அக்னி. எழுதியவர் ஆதவன். அவர் காத்திருக்கின்றார். அவராக நினைத்துக்கொண்டால் காதல் கவிதை. அவர்பெயராக நினைத்துக்கொண்டால் இயற்கைக் கவிதை.
ஆமாம்... சிறந்த பார்வைதான்...

ஆனாலும் நிலவுக்காக சூரியனின் காதல் மெய்சிலிர்க்க வைகின்றது.....

இயற்க்கையும் இப்படிதான் கொஞ்சி குலாவி லவ் பண்ணுமோ!!!!!!

பொறாமையுடன்
ஓவியா.
ஏன் இந்தப் பொறாமை...
இயற்கை மொழி விளங்காமையாலா?
இயற்கைபோல் வெளிப்படையாய் வாழ இயலாமையாலா?
மனிதனுக்கு காதல் இலகுவாய் எட்டாமையாலா?
எட்டியும் காதல் சுதந்திரமாய் இல்லாமையாலா?
இவையெல்லாம்,
கிடைக்கப் பெறாமையால்,
யாருக்கும் இருக்கும் பொறாமையே...

அமரன்
06-06-2007, 06:17 PM
Currently Active Users Viewing This Thread: 4 (4 members and 0 guests)
ஓவியா, அமரன், மனோஜ், அக்னி

ஆரம்பித்தாகிவிட்டது
................................................................................

அமரன் நீங்க ஓடி வந்து என் பதிவின் சீக்ரட் பாய்ண்ட புடிக்கறீக. இது நல்லதுகல்ல, ஆமாம்.

ஹி ஹி ஹி
ஹி....ஹி.......ஹி......:grin: :grin: :grin:

ஆதவா
06-06-2007, 07:05 PM
மறுபடியும் தோண்டி எடுத்த அமரனுக்கு என் நன்றிகள்
பின்னாலேயே பின்னூட்டமிட்ட அக்னிக்கும் சேர்த்து..

உண்மையிலேயே இந்த கவிதை காதல் கவிதை என்று நான் நினைத்து எழுதியதல்ல... எப்போதாவது மொட்டைமாடியில் நிலவைப் பார்த்து எழுதியிருப்பேன்... ஆனால் அது காதல் மெட்டில் அமைந்ததுதான் கொடுமை... நன்றி மக்களே!

அமரன்
06-06-2007, 07:06 PM
நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்களோ தெரியாது..ஆனால் இரு பொருள்பட அமைந்து விட்டது..

ஓவியா
06-06-2007, 07:24 PM
மறுபடியும் தோண்டி எடுத்த அமரனுக்கு என் நன்றிகள்
பின்னாலேயே பின்னூட்டமிட்ட அக்னிக்கும் சேர்த்து..

உண்மையிலேயே இந்த கவிதை காதல் கவிதை என்று நான் நினைத்து எழுதியதல்ல... எப்போதாவது மொட்டைமாடியில் நிலவைப் பார்த்து எழுதியிருப்பேன்... ஆனால் அது காதல் மெட்டில் அமைந்ததுதான் கொடுமை... நன்றி மக்களே!

அய்யா பெரியவரே, நாங்களும் பின்னூட்டம் போட்டோம், எங்க பின்னூட்டம் உங்கள் அருள் கண்களுக்கு தெரியவில்லையா!!!!

வரவர நாம யாரு கண்ணும் தெரிவதில்லையாம். :1:

ஆதவா
06-06-2007, 07:28 PM
அய்யா பெரியவரே, நாங்களும் பின்னூட்டம் போட்டோம், எங்க பின்னூட்டம் உங்கள் அருள் கண்களுக்கு தெரியவில்லையா!!!!

வரவர நாம யாரு கண்ணும் தெரிவதில்லையாம். :1:

மன்னிக்கவும்.... தெரியாமல் எழுதிவிட்டேன்...

கவிதையை ரசித்து பின்னூட்ட மிட்டதற்கு நன்றிகள் பல..

ஓவியா
06-06-2007, 07:37 PM
மன்னிக்கவும்.... தெரியாமல் எழுதிவிட்டேன்...

கவிதையை ரசித்து பின்னூட்ட மிட்டதற்கு நன்றிகள் பல..

வர வர உங்கள் கண்களுக்கு என் பின்னூட்டங்கள் தெரிவதில்லை, பொருங்கள் நண்பரே, அடுத்த வாரம் ஒரு அனுகுண்டு போடுகிறேன்.

பின்.
ஓவி, ஓவியா, ஓவியக்கா, யக்கா, அக்கா, ஓவிகுட்டினு ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம், வேண்டாம்.

ஆதவா
06-06-2007, 08:05 PM
வர வர உங்கள் கண்களுக்கு என் பின்னூட்டங்கள் தெரிவதில்லை, பொருங்கள் நண்பரே, அடுத்த வாரம் ஒரு அனுகுண்டு போடுகிறேன்.

பின்.
ஓவி, ஓவியா, ஓவியக்கா, யக்கா, அக்கா, ஓவிகுட்டினு ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம், வேண்டாம்.

அப்படி இல்லீங்க.. ஏதோ நினைவில் நன்றி சொல்ல மறந்துவிட்டேன். மற்றபடி வேண்டுமென்றே செய்வதில்லை. மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன். இனி நிச்சயம் தங்களின் பின்னூட்டத்தைக் கண்காணிக்க்கிறேன்.
நன்றி

சக்தி
06-06-2007, 08:18 PM
ஆதவா ஒரு சின்ன சந்தேகம் இந்த காதல் காத்திருப்பிற்கு ஏன் மதி என்று பெயரிட்டீர்கள்

ஓவியா
06-06-2007, 08:19 PM
ஆதவன் என்ற சூரியனின் காதல் நிலவு என்ற மதிமேல்

பின் குறிப்பு
மதியழகியாம் அம்மனி பெயர்

ஆதவா
06-06-2007, 08:20 PM
ஆதவா ஒரு சின்ன சந்தேகம் இந்த காதல் காத்திருப்பிற்கு ஏன் மதி என்று பெயரிட்டீர்கள்

மதி என்றால் நிலவு என்று அர்த்தம்... (கவிதை பற்றி.???)

ஓவியா
06-06-2007, 08:29 PM
மதி என்றால் நிலவு என்று அர்த்தம்... (கவிதை பற்றி.???)

ஆதவன் என்ற சூரியனின் காதல் நிலவு என்ற மதிமேல்

பின் குறிப்பு
மதியழகியாம் அம்மனி பெயர்

அப்பாடி சரியான விடை. :medium-smiley-029:

சக்தி
06-06-2007, 08:49 PM
ஆதவா
இது உங்களின் ஆரம்ப காலக்கவிதையா? இப்போது நீங்கள் எழுதுவதிற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது.
கவிதையைப் பற்றி சொல்ல வேண்டுமெனில்
காதல்- இந்த ஒரு வார்த்தை மட்டுமே மனிதனுக்கு என்றும் திகட்டாதது. இந்த் மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏங்குவது இதற்காகத்தான்.
கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
கிடைக்காதவர்களும் அதிர்ஷ்டசாலிகளே( இன்றைய நிலையில்)
காதலிக்காக ஏங்கிக் கிடக்கும் காலம் கவிதையின் கரு.
மனதிலேயே அவளுடன் வாழ்ந்து
அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கவிதையாக என்னும் காலம்.
அவளின் ஒரு வார்த்தை, ஒரு பார்வைக்காக தவம் கிடக்கும் காலம்.
காத்திருப்பு தொடரும் போது அவளின் ஒவ்வொரு அணுக்களையும் அறியும் ஆர்வம், ஏக்கம்
நல்ல கரு
வார்த்தைகளில் விளையாடியுள்ளீர்.
வார்த்தை கோர்வைகள் அழகாக உள்ளது.
காதல் கொண்டவனின் அவஸ்தைகளை அழகாக கூறியுள்ளீர்.
காதலின் ஆதார தத்துவமே
காத்திருந்து
தவித்திருப்பது தானே.:icon_clap: :icon_clap: :icon_clap:
உங்களின் முதற்கவிதையை பாராட்டி இ பணம் 100

ஆதவா
07-06-2007, 01:54 AM
மிக்க நன்றி சக்தி.. அன்றைய காலகட்டத்தில் வார்த்தை விளையாட்டுக்கள் நிறைய செய்வேன்.. இன்று அதற்கு முற்றுப் புள்ளி சிறிதளவு வைக்கப் பட்டிருக்கிறது... மிக மிக நன்றி.. உங்கள் விமர்சனம் தூள்..

அமரன்
07-06-2007, 07:12 AM
நேற்று நான் இக்விதையை படித்துப் பின்னூட்டமிட்டபோது இரண்டு பக்கங்கள் மட்டுமே இருந்தது. இன்று அது ஐந்தை அடைந்துவிட்டது. கவிதையின் அழகை இது காட்டுகின்றது. இப்படியான ஒரு அழகான கவிதையை மீண்டும் எல்லோர் பார்வைக்காகக் கொண்டுவந்ததில் பெருமை அடைகின்றேன். சக்தியின் விமர்சனம் அருமை.

ஆதவா
07-06-2007, 06:38 PM
நன்றி அமரன்...