PDA

View Full Version : தமிழ்மன்றத்தில் என் முகவரி



ஆதவா
15-12-2006, 08:17 AM
வணக்கம் இலக்கியங்களே!!

விழியில் படும் வார்த்தைகளை பூச்சோலைகளில் சிதறிவிட இன்னுமொரு ஆதவன் உங்களிடம் உதயமாகிறேன். ஆதவன் என் இயற்பெயரல்லவாயினும் என் பெயரும் அவனையே குறிக்கும்.

பிழிந்தெடுத்த கவிதைகளை உங்களிடம் பகிரவும்
மொழி வளர்க்க சிறுகதைகளும் தருவதற்க்கு ஏற்பட்ட என் தாமதத்தை மன்னிக்க வேண்டுகிறேன்.

திருப்பூரில் பின்னலாடைகளுக்கு அச்சக வடிவ அமைப்பு செய்து வருகிறேன்.. மேற்கொண்டு என்னைப் பற்றித் தெரிய.

நெளிவு சுழிவுகளை
அடக்கத்தோடு
அடக்கிய பின்னும்
நெளிந்திருக்கும்
கேள்விக் குறிக்குள்ளே
ஒளிந்திருக்கும் பதில்
நான்

இலக்கணங்களும்
அர்த்தங்களும்
இல்லாத அகராதி
நான்

ஒளி தேடி
இரவைத் தீண்டிய
இரவியின் செவியில்
ஓதிய மந்திரங்களின்
சொந்தம் நான்

சந்திரனும் சூரியனும்
காதலர்களாய்
காதில் முத்தமிட்ட
கனவை நனவாக்கிய
பொய்மைக் கவிஞன்
நான்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஆதவா~~~~~~~~~~~~~~~~~~

meera
15-12-2006, 08:35 AM
வாருங்கள் ஆதவன்.

வரவேற்பதற்கு காத்திருக்கிறோம்.

அறிமுகமே அழகாய் இருக்கிறது.

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

மதி
15-12-2006, 08:38 AM
வாங்க ஆதவன் வாங்க..!

ஆதவா
15-12-2006, 08:42 AM
வாருங்கள் ஆதவன்.

வரவேற்பதற்கு காத்திருக்கிறோம்.

அறிமுகமே அழகாய் இருக்கிறது.

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

நன்றி மீரா, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

ஆதவா
15-12-2006, 08:43 AM
வாங்க ஆதவன் வாங்க..!

நன்றி ராஜேஷ் குமார்,, எனக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...

ஓவியா
15-12-2006, 08:54 AM
ஆஹா அருமையான கவிதை அறிமுகம்

பிழிந்தெடுத்த கவிதைகளை உங்களிடம் பகிரவும்
மொழி வளர்க்க சிறுகதைகளும் தருவதற்க்கு ஏற்பட்ட என் தாமதத்தை மன்னிக்க வேண்டுகிறேன்.

அவசரமில்லை ஆதவா...:)
ஆதவன் தன் கடமையிலிருந்து தவறுவதில்லை
தக்க தருனத்தில் வருபவனே ஆதவன்....

உங்கள் வரவு நல்வரவாகுக
:)

franklinraja
15-12-2006, 09:25 AM
ஆதவனின் உதயத்தில்
மன்றப் பூக்களின்
அகம் மகிழ்கிறது..!

அறிமுகமே
அற்புதமான
கவிதை போல் உள்ளது..!

உங்கள் கதிரை
மன்றம் முழுதும்
பரவச்செய்யுங்கள்..! :)

தாமரை
15-12-2006, 09:57 AM
ஆதவன் பிரஹாசமா உதிக்கிறீங்க.. வாங்க வாங்க

ஆதவா
15-12-2006, 10:39 AM
நன்றி, தாமரை, ஓவியா மற்றும் ப்ராங்கிளின்...

leomohan
15-12-2006, 11:22 AM
வாருங்கள் சான்ரா. உங்கள் வரவு நல்வரவாகட்டும். அவதாரமும் அருமை. கையெழுத்தும் அருமை. வந்து கலக்குங்கள்.

அறிஞர்
15-12-2006, 12:30 PM
ஆரம்பத்திலே அதிரவைக்கும் ஆதவனுக்கு வாழ்த்துக்கள்....
தொடர்ந்து கவிதைகளை கொடுங்கள்....

இளசு
15-12-2006, 07:21 PM
வரவேற்பும் வாழ்த்துகளும் ஆதவன்..

மன்றத்தோடு இணைந்திருங்கள்...

ஆதவா
16-12-2006, 04:34 AM
நன்றி மோகன் அறிஞர் மற்றும் இளசு...அவர்களே

மயூ
18-12-2006, 03:43 AM
ஆதவரே அறிமுகமே கலக்கல்!!!
உங்கள் அவதார் கையெழுத்துப் பார்க்கையிலேயே தெரிகின்றது தாங்கள் படைபபாற்றல் மிகுந்தவர் என்று!!!

ஆதவா
18-12-2006, 05:17 AM
மிக்க நன்றி மயூரேசன்... உங்கள் வாழ்த்துக்களுடன் என் பணி தொடரும்...

செழியன்
05-07-2008, 10:50 AM
வணக்கம் ஆதவா
உங்கள் படைப்புக்களை படித்தபோது உங்களை வரவேற்று மகிழவேண்டும்போல் தோன்றியது.அதனாலேயே இது
மன்ற பொறுப்பாளர் ஆதவாவை வரவேற்பதில்பெருமை கொள்கிறேன்.

Narathar
07-07-2008, 09:16 AM
இரண்டு வருடங்களுக்கு பிறகாவது அன்பு ஆதவாவை
வரவேற்க கிடைத்தமைக்கு மனமகிழ்கின்றேன்.......

ஆதவா
07-07-2008, 09:22 AM
வணக்கம் ஆதவா
உங்கள் படைப்புக்களை படித்தபோது உங்களை வரவேற்று மகிழவேண்டும்போல் தோன்றியது.அதனாலேயே இது
மன்ற பொறுப்பாளர் ஆதவாவை வரவேற்பதில்பெருமை கொள்கிறேன்.

மிக்க நன்றி செழியன். மீண்டும் இத்திரியை எழுப்பியதில் மனமகிழ்ச்சி எனக்கு..


இரண்டு வருடங்களுக்கு பிறகாவது அன்பு ஆதவாவை
வரவேற்க கிடைத்தமைக்கு மனமகிழ்கின்றேன்.......

நாரதரே! எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த வரவேற்புத் திரி மட்டும் ஒரு நினைவுப் பெட்டகம்... இல்லையா?

வரவேற்புக்கு நன்றி நாரதரே! மன்றத்தின் புதியவன் போல உணருகிறேன்.