PDA

View Full Version : இன்னும் காதலிக்கவில்லையா?lenram80
15-12-2006, 12:45 AM
இதுவரை யாரையும் காதலிக்கவில்லையா?
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்!

காதல் உலகம் சிறு உலகம் - எந்நேரமும்
காதலியை நினைத்து உங்களின்
கற்பனைக்குக் கடிவாளம் போடாதீர்கள்!

புற்களோடு பேசுங்கள்!
எறும்புகளோடு கூடவே ஓடுங்கள்!
ஒருநாள் விருந்துக்கு வரவா? - என்று
யாருக்கும் தெரியாமல் அதன் காதுக்குள் ஓதுங்கள்!

பூத்திருக்கும் பூக்களை எல்லாம், மெல்ல மெல்ல தொட்டு
'கூச்சமாக இருக்கிறதா?' - என்று கேளுங்கள்!

சாமி சிலைகளின் கைகளில் கற்பூரத்தைக் கொளுத்தி
'சுடுகிறதா?' - எனக் கேளுங்கள்!

பூவுக்கே தெரியாமல் அதன் தேனைக் குடியுங்கள்!
அதற்கு வண்ணத்துப் பூச்சியிடம் அதன் வாயை
வாடகைக்குக் கேளுங்கள்!

அங்கே பறந்து வரும் பறவைகளை எல்லாம்
'பத்தினியா?' - எனக் கேளுங்கள்!
'ஆம்' என்று சொன்னால்
ஐந்தாறு பழங்களை அள்ளிக் கொடுங்கள்!
'இல்லை' என்று அவைகள் சொன்னால்
அருகிலிருக்கும் இந்தியப் பெண்ணை
கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள்!
கண்ணகிகளின் சொல்லைக் கேட்டு
கற்புடன் வாழட்டும்!

முடிந்தால் அம்மாவின் வயிற்றுக்கே சென்று
இந்த முறை, வலியே கொடுக்கமால் வெளியே வாருங்கள்!
வந்தவுடன் எப்போதும் அழாமல்
எல்லாருக்கும் புதிராக ஒரு புன்னகையைத் தூவுங்கள்!

படித்தால் புரியாத கடினமான புத்தகங்களை
கம்பளி பூச்சியை விட்டுக் கடிக்க விடுங்கள்!
கடித்து முடித்தபின், தடித்த இடங்களில் சொரிந்து விடுங்கள்!

கோழிகளோடு சேர்ந்து குப்பையைக் கிளறுங்கள்!
என்னதான் தின்கின்றன? - என இப்போதாவது பாருங்கள்!

மாடுகளிடம் சென்று 'அம்மா'வை விடுத்து
'அப்பா' என கத்தச் சொல்லி அடம் பிடியுங்கள்!

'எதிரி துரத்துகிறான். ஒளிந்து கொள்ள இடம் வேண்டும்'
என ஒருவருக்கும் தெரியாமல் எறும்புகளிடம் கூறுங்கள்!
அதன் பின்னால் ஒளிந்து நின்று,
அதன் முதுகை முகர்ந்து பாருங்கள்!
தாங்க முடியாத வாடை வந்தால், அதன் மேல் தண்ணீரைத் தெளியுங்கள்!
மாறாக,நறுமணம் வந்தால் மறுகணமே பாண்டிய மன்னனிடம் சென்று
பட்டி மன்றன் நடத்துங்கள்!
'இந்த மணம் இயற்கை மணமா? அல்லது செயற்கை மணமா?' - என்று!

இத்தனையையும் நீங்கள் ரசிக்க முடிந்தால்,
ரசனையுடைய நீங்கள் தான் காதலிக்கத் தகுதியானவர்கள்!
ஏனென்றால்,
காதல் என்பது ஒரு கலை!
ரசனை உள்ளவர்கள் ரசித்தால் தான் அதன்
எனவே,
ரசனையுடைய நீங்கள் இப்போது
சென்று இயன்றவரை காதலியுங்கள்!

இதோ... இதோ....
நான் காதலிக்கப் புறப்பட்டுவிட்டேன்!

நீங்கள்........?

-From Lenin

தாமரை
15-12-2006, 03:46 AM
இத்தனையையும் நீங்கள் ரசிக்க முடிந்தால்,
ரசனையுடைய நீங்கள் தான் காதலிக்கத் தகுதியானவர்கள்!
ஏனென்றால்,
காதல் என்பது ஒரு கலை!
ரசனை உள்ளவர்கள் ரசித்தால் தான் அதன்
எனவே,
ரசனையுடைய நீங்கள் இப்போது
சென்று இயன்றவரை காதலியுங்கள்!

இதோ... இதோ....
நான் காதலிக்கப் புறப்பட்டுவிட்டேன்!

நீங்கள்........?

-From Lenin
ஆமாம் ஆமாம்.. அடிபட அடியைத் தாங்கிக்கொள்ளும் வழி(வலி) முறைகளை எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்..:D :D :D காதல்னா உதை வாங்க உடம்பு தாங்கணுமில்லையா...:eek: :eek:

காதலர்களை பலர் பைத்தியங்களாகவே பார்க்கின்றனர்
ரசிகர்களையும்தான்.. அவர்கள்தான் இயற்கையை காதலிக்கின்றனரே!

இயற்கையை காதலிப்பவர்கள்
இயற்கையாய் காதலிக்கிறார்கள்..

இவர்கள்
தம் காதலரை
காதல் கொடுமைக்கு
ஆளாக்குவதில்லை..சபாஷ்.. உங்கள் கற்பனை! வித்தியாசமான சிந்தனை, எதனையும் ஆராய்ந்து பார்க்கும் நோக்கு.. எல்லாவற்றிலும் ஆர்வம். வியக்கிறேன்.. இத்தனை நாள் எங்கிருந்தீர்?

பிச்சி
15-12-2006, 05:17 AM
அருமையான கற்பனை

மதி
15-12-2006, 05:25 AM
வித்தியாசமான பார்வையில் காதல்...
ஒன்றுதல் பற்றி நல்ல சிந்தனைகள்

வாழ்த்துக்கள்..!

meera
15-12-2006, 05:33 AM
அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்.

இயற்க்கையை காதலிப்பதே ஒரு சுகம் தான்.

gragavan
15-12-2006, 05:34 AM
ஆக காதலிக்கனும்னா இதத்தனையும் செஞ்சிருக்கனுமா! இதுல எதுவுமே செய்யாமக் காதலிச்சவங்கள என்ன செய்றது?

மதி
15-12-2006, 05:38 AM
ஆக காதலிக்கனும்னா இதத்தனையும் செஞ்சிருக்கனுமா! இதுல எதுவுமே செய்யாமக் காதலிச்சவங்கள என்ன செய்றது?

இதெல்லாம் செஞ்சாலே காதலிக்க ஆரம்பிச்சுடுவீங்க....:D :D :D

SathishVijayaraghavan
15-12-2006, 05:44 AM
அருமையன படைப்பு

தாமரை
15-12-2006, 05:44 AM
ஆக காதலிக்கனும்னா இதத்தனையும் செஞ்சிருக்கனுமா! இதுல எதுவுமே செய்யாமக் காதலிச்சவங்கள என்ன செய்றது?
அதான் காதல் கொடுமைன்னு சொன்னோமில்ல..:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

இளசு
15-12-2006, 05:45 AM
வரவேற்புகள்.. லெனின் அவர்களே..

முதல் படைப்புக்கு வாழ்த்துகள்.

(இயற்கை உபாசனை தினசரி முடையேறிப்போன வாழ்வுக்கு ஆக்சிஜன்தான்.. ஆனாலும் எறும்பை முகர்வது.. நீர் தெளிப்பது என பல கட்டளைகளை - கவிச்சுதந்தரம்....என விட்டுவிடலாம்..
நேரடி செய்முறைக்கல்ல..!!!!)

ஓவியா
15-12-2006, 10:52 AM
அழகான் சிந்தனை
கவிதையும் அழகுதான்..:)

வாழ்த்துக்கள்

பாராட்டுக்கள்


........................................................................................................................................................................................
நானே நானா யாரோத்தானா...மெல்ல மெல்ல மாறினேனா.....
ஒரே காதல் மயம்...மாயம்......மாயா.....அச்சோ எங்கோ போகிறேனே.....ஓ இயற்கையை ரசிக்கிறேனா....

lenram80
16-12-2006, 01:08 PM
பாராட்டுக்கள் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள்.
லெனின்

ஆதவா
16-12-2006, 03:46 PM
அட நம்ம லெனின்,,,, என்ன தெரியலயா லெனின்? சூர்யா பா!!!! மேலும் கவிதைக்கு ஏற்கனவே ஆர்குட்ல விமர்சனம் எழுதிட்டேன்.. இருந்தாலும் நல்ல கவிதைக்கு எத்தனை தடவை வேணாலும் எழுதலாம்...

அருமை அருமை அருமை