PDA

View Full Version : தமிழ் மன்றத்தில் நான்

பிச்சி
14-12-2006, 01:33 PM
வணக்கம்,.
என் பெயர் பிச்சி.. (கவிதைக்காக). உண்மையான பெயர் பிரபா. காலேஜில் படிக்கறேன் bsc final year, சின்ன வயசுல இருந்தே நிறைய கவிதை எழுதுவேன், அப்பா திட்டுவார்னு அப்பப்பவே கிழிச்சி போட்டுற்வேன். என் தோழிகள் எல்லாரும் என்னை நல்லா என்கரேஜ் பண்னாங்க.. ஆர்குட்ல சேர்ந்து கவிதை அனுப்புனேன், ப்ரியன் தான் எனக்கு இந்த தமிழ் மன்றத்தை அறிமுகம் செய்தார்.

(இந்த அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன்)

leomohan
14-12-2006, 01:50 PM
பிச்சி, கவிதையில் பிச்சி எடுத்துடுங்க. நல்வரவு.

பிச்சி
14-12-2006, 01:59 PM
பிச்சி, கவிதையில் பிச்சி எடுத்துடுங்க. நல்வரவு.

நன்றி மோகன்...

meera
14-12-2006, 02:08 PM
வாங்க பிரபா,

உங்களை இப்படி கூப்பிடலாமா?

உங்களை ஊக்கப்படுத்த இங்க நிறைய பேர் இருக்காங்க.

உங்கள் வரவு எங்களுக்கு சந்தோஷம்.

தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள் தோழி.

மதி
14-12-2006, 02:23 PM
வரவேற்கிறோம் பிச்சி..
தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறோம்..!

தாமரை
14-12-2006, 02:51 PM
பிச்சி உதறுங்க பிச்சி.. வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.

ஓவியா
14-12-2006, 02:52 PM
வணக்கம் பிரபா

நலமா?

உங்கல் வரவு நல்வரவாகுக

தமிழ்மன்றத்தில் கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள்

அறிஞர்
14-12-2006, 03:02 PM
பிரியனின் தோழரை இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கவி மழை பொழியுங்கள்.. அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்துங்கள்.

இளசு
14-12-2006, 08:22 PM
வாங்க.... வாழ்த்துகள்..

சொல்லியிருக்கும் மூன்று பெயர்களில் ஒன்றை மட்டும் தேர்ந்து சொல்லுங்கள்.. நாங்கள் அழைக்க!

ப்ரியனின் ரசிகர் கூட்டமே இங்குண்டு..
இனி உங்களுக்கும் ..அமைய வாழ்த்துகள்!

பிச்சி
15-12-2006, 04:57 AM
வாங்க பிரபா,

உங்களை இப்படி கூப்பிடலாமா?

உங்களை ஊக்கப்படுத்த இங்க நிறைய பேர் இருக்காங்க.

உங்கள் வரவு எங்களுக்கு சந்தோஷம்.

தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள் தோழி.

தாராளமாக மீரா,,,,,,

பிச்சி
15-12-2006, 04:58 AM
வரவேற்கிறோம் பிச்சி..
தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறோம்..!

நன்றி ராஜேஷ்

பிச்சி
15-12-2006, 04:59 AM
பிரியனின் தோழரை இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கவி மழை பொழியுங்கள்.. அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்துங்கள்.

அறிஞரே,,, தோழரல்ல.. தோழி.. பால் மாற்றம் செய்துவிட்டீர்களே.

பிச்சி
15-12-2006, 05:00 AM
நன்றி தாமரை செல்வன், ஓவியா மற்றும் இளசு..

மன்மதன்
15-12-2006, 05:55 AM
அன்பு வரவேற்புகள் பிரபா.. நிறைய கவிதைகள் தாருங்கள்...

gayathri.jagannathan
15-12-2006, 06:04 AM
வரவேற்புகள் பிரபா...

paarthiban
15-12-2006, 07:30 AM
வருக வணக்கம்

பிச்சி
15-12-2006, 11:42 AM
அனைவருக்கும் நன்றி.. எனக்கு இவ்வளவு வரவேற்பு இருக்குமென் எதிர்பார்க்கவில்லை

அறிஞர்
15-12-2006, 12:27 PM
அறிஞரே,,, தோழரல்ல.. தோழி.. பால் மாற்றம் செய்துவிட்டீர்களே.
அன்பரே என்பது போல் தோழர் என்று அழைத்துவிட்டேன்... மன்னிக்கவும்... :rolleyes: :rolleyes:

தாமரை
15-12-2006, 01:03 PM
அன்பரே என்பது போல் தோழர் என்று அழைத்துவிட்டேன்... மன்னிக்கவும்... :rolleyes: :rolleyes:

அவள் - பெண்பால்
அவன் - ஆண்பால்
அவர் - பொது

தோழர் என்று ஆணை மரியாதையாய் விளிப்பது என்றால் தோழிக்கு அந்த மரியாதையை எப்படித் தருவது அறிஞரே!:rolleyes: :rolleyes: :rolleyes:

(நான் வினா வாக்கியத்தில் கேள்விக்குறி இடவில்லை.. என் வினாக்கள் கேள்வியா? ஆச்சர்யமா!)

அறிஞர்
15-12-2006, 01:12 PM
அவள் - பெண்பால்
அவன் - ஆண்பால்
அவர் - பொது

தோழர் என்று ஆணை மரியாதையாய் விளிப்பது என்றால் தோழிக்கு அந்த மரியாதையை எப்படித் தருவது அறிஞரே!:rolleyes: :rolleyes: :rolleyes:

(நான் வினா வாக்கியத்தில் கேள்விக்குறி இடவில்லை.. என் வினாக்கள் கேள்வியா? ஆச்சர்யமா!)
கேள்வியோ, ஆச்சர்யமோ.. இப்போதைக்கு தோழருக்கு விளக்கம் கிடைச்சாச்சு... எஸ்கேப் ஆகவேண்டியதுதான். :cool: :cool: :cool: :cool:

ஓவியா
15-12-2006, 01:25 PM
அவள் - பெண்பால்
அவன் - ஆண்பால்
அவர் - பொது

தோழர் என்று ஆணை மரியாதையாய் விளிப்பது என்றால் தோழிக்கு அந்த மரியாதையை எப்படித் தருவது அறிஞரே!:rolleyes: :rolleyes: :rolleyes:

(நான் வினா வாக்கியத்தில் கேள்விக்குறி இடவில்லை.. என் வினாக்கள் கேள்வியா? ஆச்சர்யமா!)

ஆச்சர்ய கேள்வியோ!!!!!:rolleyes:

pradeepkt
17-12-2006, 02:44 AM
மன்றத்தில் இன்னொரு கவிதாயினி..
வருக வருக!

மயூ
18-12-2006, 03:27 AM
புது உறவு ஒன்று கிடைத்துள்ளது!
வருக பிரபா!
உங்கள் படைப்புகளைத்தாருங்கள்

உங்கள் படைப்புகளை வாசித்துப் பின்னூட்டமிட நாமுள்ளோம் பயப்படாமல் எழுதுங்கள்!!!
காலேஜ் காலத்தில்தான் கவிதைகள் அதிகம் வரும் சளைக்காமல் எழுதுங்கள்!

பிச்சி
06-01-2007, 09:27 AM

நன்றி மயுரேசன். உங்கள் வாழ்த்துக்களோடு என் கவிதையும்....

பரஞ்சோதி
11-01-2007, 08:57 AM
சகோதரியை தமிழ்மன்றத்தில் வாழ்த்தி வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

மதுரகன்
11-01-2007, 04:03 PM
மன்னிக்கவும் மேலும் ஒரு இடைச்சொருகல்
தோழர் என்ாது ஆண்பாற் பலவிடைச்சொல்லாகவும் வரலாம்..
தோழன்கள் என்பதற்குப்பதில் தோழர்
தோழிகள் என்பதற்குப்பதில் தோழியர்...

அதே வேளை ஆணையோ பேண்ணையோ சாடாத பொதுப்பால் சொல்லாகவும் வரலாம்...
உதாரணம்.. தோழர்,அறிஞர்,கவிஞர்,..இப்படி எத்தனையோ இருவருக்கும் பொருந்தலாம் ஆயினும் கால வழக்கத்தால் ஆன்பாலென மயங்கி நிற்கின்றன..

பிச்சி
26-01-2007, 07:47 AM
பரம்ஸ் மதுரகன் உங்கள் இருவருக்கும் எனது நன்றி

ஓவியா
26-01-2007, 02:50 PM
மன்னிக்கவும் மேலும் ஒரு இடைச்சொருகல்
தோழர் என்ாது ஆண்பாற் பலவிடைச்சொல்லாகவும் வரலாம்..
தோழன்கள் என்பதற்குப்பதில் தோழர்
தோழிகள் என்பதற்குப்பதில் தோழியர்...

அதே வேளை ஆணையோ பேண்ணையோ சாடாத பொதுப்பால் சொல்லாகவும் வரலாம்...
உதாரணம்.. தோழர்,அறிஞர்,கவிஞர்,..இப்படி எத்தனையோ இருவருக்கும் பொருந்தலாம் ஆயினும் கால வழக்கத்தால் ஆன்பாலென மயங்கி நிற்கின்றன..

அப்படியா,

நன்றி மதுரகன்

மனோஜ்
26-01-2007, 06:08 PM
பிச்சி என்றதும் ஒரு ஆண் என்று நினைத்தேன்
நல்ல வேலை உங்களை அறிமுகபடுத்த இப்பெழுதாவது வந்திர்களே
உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகமிக அறுமை
தொடருங்கள் உங்கள் கவிதைமழை....
செழிக்கட்டும் நமது தமிழ் மன்றம்
வாழ்த்துக்கள்

farhan mohamed
27-01-2007, 10:20 AM
பிச்சி உங்கள் தொடரான ஒவ்வொரு கவிதையையும் வாசித்து வருகிறேன்.அருமையான பதிவுகள்.உங்கள் சேவையால் மன்றம் மிளிர எனது வாழ்த்துக்கள்.

பிச்சி
27-01-2007, 12:21 PM
உங்கள் இருவருக்கும் எனது நன்றி...........