PDA

View Full Version : மன்றம் இயங்குவது ஒரு நாள் தடை படலாம்

இராசகுமாரன்
14-12-2006, 12:26 PM
நண்பர்களே..!!

மன்றத்தில் உள்ள ஒரு சில அசௌகரியங்கள் எனக்கு சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. அதை நிவர்த்தி செய்ய, மற்றும் சில மாறுதல்களுக்காக மன்றம் ஒரு நாள் முழுக்க நிறுத்தி வைக்க வேண்டிய காட்டாயம் வரும். அதனால், இந்த வாரத்தில் ஒரு நாள் மன்றம் இயங்குவது தடை படும் என்று முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் மன்றம் வராத நாள் எதுவோ அன்று இந்த இயக்க தடையை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு உகந்த, அதாவது வராத நாள் எது என்று விரைந்து கூறினால் அந்த நாளில் வேலைகளை வைத்துக் கொள்வோம்.

நன்றி..

இராசகுமாரன்

leomohan
14-12-2006, 12:33 PM

ஐயோ ஒரு நாளா. சற்று கடினம் தான். எங்களுக்கு நாளையிலிருந்த 4 நாட்கள் விடுமுறை வருகிறது. என்றுவேண்டுமானாலும் சரிதான்.

பென்ஸ்
14-12-2006, 12:41 PM
ராசகுமாரன்....
நான் மன்றத்தில் ஞாயிற்று கிழமைகளில் பதிவுகள் குறைவாக இருப்பதை கவனித்து இருக்கிறேன்.... சனி கிழமைகள் அதைவிட கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அந்த நாளும் குறைவுதான்.... இந்த நாட்களை பயன்படுத்தலாமே...

franklinraja
14-12-2006, 01:17 PM
ராசகுமாரன்....
நான் மன்றத்தில் ஞாயிற்று கிழமைகளில் பதிவுகள் குறைவாக இருப்பதை கவனித்து இருக்கிறேன்.... சனி கிழமைகள் அதைவிட கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அந்த நாளும் குறைவுதான்.... இந்த நாட்களை பயன்படுத்தலாமே...

பென்ஸ் சொன்னது போல, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு நாளில் வைத்துக்கொள்ளலாம்..!

ஓவியா
14-12-2006, 01:55 PM
வணக்கம் சார்,

சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைகளை வைத்துக் கொள்வோம்........

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

பணிவுடன்
ஓவியா

எனக்கு மன்றதில் லூட்டி அடிக்க 7நாட்களே குறைவுதான்.......அதிலேயும் ஒன்னு மைனஸா....

gragavan
14-12-2006, 02:07 PM
ஞாயிறு ஒளிமழையில்.............

அறிஞர்
14-12-2006, 02:53 PM
சனி, ஞாயிறு எந்த தினமும் சரியே...

karikaalan
14-12-2006, 04:15 PM
எந்த நாளாகிலும் சரியே!!

ஒழுங்காக வந்தால்தானே..

என்னுடைய ஓட்டும் சனி அல்லது ஞாயிறுக்கே!

===கரிகாலன்

இளசு
14-12-2006, 07:45 PM
சிகிச்சை நாள் ( எந்நாளாயினும் ) வெற்றி நாளாக வாழ்த்துகள் தலைவரே!

poo
15-12-2006, 05:16 AM
அடடா... வாரக்கடைசியில தலைவர் சந்தோஷமாக ஓய்வாக இருக்க வேண்டாமா?!..

aren
15-12-2006, 05:19 AM
தலைவரே, உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அன்றைக்கே இந்த வேலலயை செய்யுங்கள். எங்களுக்கு ஒரு நாள் மன்றம் வரமுடியாவிட்டால் பரவாயில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

மன்மதன்
15-12-2006, 06:07 AM
ஞாயிறு அன்று நல்ல நாள் நண்பரே..

அடடா... வாரக்கடைசியில தலைவர் சந்தோஷமாக ஓய்வாக இருக்க வேண்டாமா?!..

அவருக்கு வாரக்கடைசி வெள்ளி நண்பா..

leomohan
15-12-2006, 08:03 AM
:)
ஞாயிறு அன்று நல்ல நாள் நண்பரே..

அவருக்கு வாரக்கடைசி வெள்ளி நண்பா..

இப்ப எங்களுக்கெல்லாம் வெள்ளி சனி கிடைக்குதுல்ல :)

Mano.G.
15-12-2006, 08:28 AM
தலைவரே உங்களுக்கு எந்த நாள் சரியெனப் படுகிறதோ
அந்த நாளை எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விடுங்கள்
நாங்கள் மன்ற மேம்பாடுக்காக ஒரே ஒரு நாளை விட்டுகொடுக்கிரோம்

மனோ.ஜி

இராசகுமாரன்
17-12-2006, 04:02 PM
நண்பர்களே..

இன்று (17/12/2006, ஞாயிறு) மன்றத்தை நிறுத்தாமல், பதிக்கும் உரிமையை மட்டுமே முடக்கி வைத்து, நமது தளத்தை வேறொரு சர்வருக்கு வெற்றிகரமாக மாற்றப் பட்டு விட்டது.

ஆனால், அதன் பின் செய்ய வேண்டிய சில வேலைகள் இன்னும் பாக்கி உள்ளது, அதற்குள் மிக முக்கிய அலுவலக பணி காரணாக வெளியூர் செல்வதால், மீண்டும் திரும்பி வந்தவுடன் மேம்படுத்தும் வேலையை தொடர்கிறேன்.

இப்போது நீங்கள் உங்கள் பதிப்புகளை தொடரலாம்.

நன்றி..

குறிப்பு: மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது யாராவது புதியவர்கள் சேர்ந்திருந்தால் பிரச்சனை வந்திருக்கலாம். அவர்கள் கணக்கு துவங்கியிருக்காது.

அது போல் யாராவது வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்தாலும் அவர்கள் வாக்கு போய் சேர்ந்திருக்காது. ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறேன்.

இளசு
17-12-2006, 05:38 PM
நன்றி தலைவரே

மற்ற பணிகளை நேரம் கிடைத்தவுடன் இதேபோல் வெற்றிகரமாய் முடியுங்கள்..

leomohan
17-12-2006, 06:32 PM
ஆப்ரேஷன் சக்ஸஸ். வாழ்த்துக்கள்.

மயூ
18-12-2006, 09:57 AM
ஒரு வெற்றிக்குப் பின்னால் சில தீமைகளும் இருக்கலாம்
மிஷன் பகுதி இப்போதைக்கு வெற்றி!!! :D