PDA

View Full Version : பிச்சிப் பூந்தோட்டம்



பிச்சி
14-12-2006, 12:18 PM
கண்களில் கருவும் உருவும் அடக்கம். பெண்களில் காதலும் கவிதையும் அடக்கம். என் தோட்டத்தில் நான் பறித்த பூக்களை இங்கே விற்பனையில்லாமல் தொடுத்து வைக்கிறேன்.. அள்ள அள்ள மணம் அதிகரிக்கும்.... பிச்சிப் பூவை உங்கள் கொண்டையில் சூடுங்கள் தோழிகள் மற்றும் சகோதரிகள். வாசனை நுகர்ந்து பாருங்கள் தோழர்கள், சகோதரர்கள்..
என்றும் வாடாமல் இருக்கத்தான் உங்கள் கைகளில் தவழவும் கண்களில் பரவவும் கொய்து வைக்கிறேன். பிச்சியை என்றும் சூடிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்............

பிச்சி
-------------
தமிழ்மன்றத்தில் எனது முதல் கவிதை

வணக்கம்,,

ஆயிரம் முறை பார்த்திருப்பாய்
என்னோடு வரும் என் தோழியை,
ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
என் அழகில்லாத முகத்தை.

உன் விழிப் பார்வைகள் நோக்கும்
தேன் குழைந்த என் தோழியை,
ஒரு முறையாவது பார்த்திருப்பாயா
நான் தொலைத்த என் மனதை..

நீ பார்க்காமலே பேசாமலே
கொல்கிறாய், வதைக்கிறாய் என்னை.
நான் பார்த்து பார்த்தே
மெல்லுகிறேன் சிதைக்கிறேன் உன்னை.

அழகற்றதால் தான் என்-
முகம் மட்டும் தெரியவில்லையோ உனக்கு?
அகல விரித்துப் பார் என்னை.
என்னுள் அறுவடையாகும் காதலை.

என் இதயத்தின் ஆடை உனக்கென்றேன்
விழிகளின் ஈரம் உனக்கென்றேன்
அழகற்ற நானும் பெண்தான்
கவிதைக்காக மட்டுமல்ல இது...


இந்த கவிதையில ஏதாவது தப்பு இருந்தா மன்னியுங்கள்

leomohan
14-12-2006, 12:37 PM
வணக்கம்,,

அகல விரித்துப் பார் என்னை.
என்னுள் அறுவடையாகும் காதலை.



அருமை. தொடருங்கள்.

மதி
14-12-2006, 01:15 PM
நல்ல கவிதை...
பாராட்டுக்கள்..!

பென்ஸ்
14-12-2006, 01:23 PM
லைக்சன்ரெய்ஸ்பேபி...

1) நீங்கள் உங்கள் பெயரை முதலில் சுருக்கலாம்...

2) உங்களை பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகபகுதியில் கொடுக்கலாம்...

3) கவிதை விமர்சணம்.
ஆண்கள் அடிப்படையாகவே எழிதாக காதலில் விழுந்து, கஸ்டபட்டு மீழ்பவர்கள், அது அவங்க தப்பு கிடையாது கடவுள் அப்படி படச்சுட்டார் "டெஸ்டடேரோன்" போன்ற ஹார்மோன்கள் அவனை கொடுமை படுத்தும் போது அவன் எழிதாக விழுந்து ஆகனும், அதிலும் அப்படியே அழகை நாடி போகதான் செய்யும்....

அப்ப அழகா இல்லைனா காதல் இல்லையா.... உண்டு உண்டு...

அது அவர்களுக்காகவே செய்ய பட்ட ஒரு இளவரசன் வெள்ளைகுதிரைமீது வெள்ளி வாள் ஏந்தி வருவான் ... (இது பொய்யில்லை... சத்தியமா... நான் அன்பான ஒரு இளவரசனை சொல்லுறென்.... ) இவன் அக அழகை கண்டு மண்டியிட்டு , ஒரு பார்வைக்காக காத்து கிட்டப்பான்...

இந்த கவிதையின் நாயகி தப்பான ஆசாமியை பார்த்து இருக்கிறாளோ????

கவிதை அருமை.... ஆனால் உங்கள் பெயரை போலவே கவிதையில் எழுத்துகளும் அதிகமா இருக்கு... வார்த்தைகளை குறைத்து கொண்டு இன்னும் நிறைய படைக்க வாழ்த்துகள்....

meera
14-12-2006, 01:39 PM
வாருங்கள்,

உங்களை எப்படி அழைப்பது என்று சொன்னால் நன்றாய் இருக்கும்.

முதல் கவிதையே முத்தாய்ப்பாய்..

தொடருங்கள்.

பிச்சி
14-12-2006, 01:54 PM
அருமை. தொடருங்கள்.

நன்றி மோகன்

பிச்சி
14-12-2006, 01:57 PM
லைக்சன்ரெய்ஸ்பேபி...

1) நீங்கள் உங்கள் பெயரை முதலில் சுருக்கலாம்...

2) உங்களை பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகபகுதியில் கொடுக்கலாம்...

3) கவிதை விமர்சணம்.
ஆண்கள் அடிப்படையாகவே எழிதாக காதலில் விழுந்து, கஸ்டபட்டு மீழ்பவர்கள், அது அவங்க தப்பு கிடையாது கடவுள் அப்படி படச்சுட்டார் "டெஸ்டடேரோன்" போன்ற ஹார்மோன்கள் அவனை கொடுமை படுத்தும் போது அவன் எழிதாக விழுந்து ஆகனும், அதிலும் அப்படியே அழகை நாடி போகதான் செய்யும்....

அப்ப அழகா இல்லைனா காதல் இல்லையா.... உண்டு உண்டு...

அது அவர்களுக்காகவே செய்ய பட்ட ஒரு இளவரசன் வெள்ளைகுதிரைமீது வெள்ளி வாள் ஏந்தி வருவான் ... (இது பொய்யில்லை... சத்தியமா... நான் அன்பான ஒரு இளவரசனை சொல்லுறென்.... ) இவன் அக அழகை கண்டு மண்டியிட்டு , ஒரு பார்வைக்காக காத்து கிட்டப்பான்...

இந்த கவிதையின் நாயகி தப்பான ஆசாமியை பார்த்து இருக்கிறாளோ????

கவிதை அருமை.... ஆனால் உங்கள் பெயரை போலவே கவிதையில் எழுத்துகளும் அதிகமா இருக்கு... வார்த்தைகளை குறைத்து கொண்டு இன்னும் நிறைய படைக்க வாழ்த்துகள்....


மிக்க நன்றி பெஞ்சமின், உங்களோட விமர்சனம் நல்லா இருந்தது, பெயரை இனியும் குறைக்க முடியாது.. பிச்சி' யிலிருந்து பெயரை பிச்சி எடுத்தா நல்லா இருக்குமா?

பென்ஸ்
14-12-2006, 02:04 PM
உங்களுக்கு விருப்பமானால் சொல்லுங்கள் , உங்கள் பெயரை மாற்றி கொடுப்பார்கள்....

தாமரை
14-12-2006, 02:28 PM
வணக்கம்,,

ஆயிரம் முறை பார்த்திருப்பாய்
என்னோடு வரும் என் தோழியை,
ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
என் அழகில்லாத முகத்தை.

உன் விழிப் பார்வைகள் நோக்கும்
தேன் குழைந்த என் தோழியை,
ஒரு முறையாவது பார்த்திருப்பாயா
நான் தொலைத்த என் மனதை..

நீ பார்க்காமலே பேசாமலே
கொல்கிறாய், வதைக்கிறாய் என்னை.
நான் பார்த்து பார்த்தே
மெல்லுகிறேன் சிதைக்கிறேன் உன்னை.

அழகற்றதால் தான் என்-
முகம் மட்டும் தெரியவில்லையோ உனக்கு?
அகல விரித்துப் பார் என்னை.
என்னுள் அறுவடையாகும் காதலை.

என் இதயத்தின் ஆடை உனக்கென்றேன்
விழிகளின் ஈரம் உனக்கென்றேன்
அழகற்ற நானும் பெண்தான்
கவிதைக்காக மட்டுமல்ல இது...


இந்த கவிதையில ஏதாவது தப்பு இருந்தா மன்னியுங்கள்

தப்பா எடுத்துக்காதீங்க.. கவிதையில தப்புகள் இருப்பதில்லை.. அதில் உள்ளதெல்லாம் எண்ணங்கள்தான்...

ஒண்ணு சொல்றேன்.. இதையே பால் மாற்றிப் போட்டு எத்தனை பேரின் மனங்கள்.. சிந்திக்கின்றன தெரியுமா?

இல்லையா ஓவியா?

mukilan
14-12-2006, 02:34 PM
உங்கள் முதல் முயற்சியிலேயே அல்லது தமிழ்மன்றத்தில் முதல் முறையாகவே தமிழில் ஒரு நல்ல கவிதை பதித்ததற்கு வாழ்த்துக்கள். செல்வன் கேட்ட கேள்விதான். ஆஜீத் சூர்யாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்னா ஆசின், ஜோ தான் பசங்களுக்குப் பிடிக்கும்.

அறிஞர்
14-12-2006, 03:17 PM
முதல் கவிதை கொடுத்த பிச்சிக்கு வாழ்த்துக்கள்...

பிச்சி என்று பெயர் மாற்றிவிடலாமா. தமிழில் வேண்டுமா, ஆங்கிலத்தில் வேண்டுமா. அடுத்த வாரத்திற்குள் மாற்றி தருகிறோம்.

ஓவியா
14-12-2006, 03:19 PM
வணக்கம்,,

ஆயிரம் முறை பார்த்திருப்பாய்
என்னோடு வரும் என் தோழியை,
ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
என் அழகில்லாத முகத்தை.

உன் விழிப் பார்வைகள் நோக்கும்
தேன் குழைந்த என் தோழியை,
ஒரு முறையாவது பார்த்திருப்பாயா
நான் தொலைத்த என் மனதை..

நீ பார்க்காமலே பேசாமலே
கொல்கிறாய், வதைக்கிறாய் என்னை.
நான் பார்த்து பார்த்தே
மெல்லுகிறேன் சிதைக்கிறேன் உன்னை.

அழகற்றதால் தான் என்-
முகம் மட்டும் தெரியவில்லையோ உனக்கு?
அகல விரித்துப் பார் என்னை.
என்னுள் அறுவடையாகும் காதலை.

என் இதயத்தின் ஆடை உனக்கென்றேன்
விழிகளின் ஈரம் உனக்கென்றேன்
அழகற்ற நானும் பெண்தான்
கவிதைக்காக மட்டுமல்ல இது...


இந்த கவிதையில ஏதாவது தப்பு இருந்தா மன்னியுங்கள்

சும்மா கொன்னு பிச்சு போட்டுட்டீங்க.......

ரொம்ப அருமையாய் இருக்கு கவிதை

மேனியழகில் மயங்கும் மன்மதன்களுக்கு இதேல்லாம் உறைக்காது.....

பாராட்டுக்கள் தோழி



பாரதி பாடிய:
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.....
பொன்னையே நிகர்த்த மேனி

'பொன்னையே நிகர்த்த மேனி'...
பாரதியின் கனவு கண்ணமாவும் சிகப்பா அழகாதான் இருந்திருப்பாறோ. ...வார்ண மோகம் யாரை விட்டது.....

ஒருசமயம் வயக்காட்டு பெண்களை பா**** பார்த்ததில்லையோ என்னவோ...

ஓவியா
14-12-2006, 03:23 PM
தப்பா எடுத்துக்காதீங்க.. கவிதையில தப்புகள் இருப்பதில்லை.. அதில் உள்ளதெல்லாம் எண்ணங்கள்தான்...

ஒண்ணு சொல்றேன்.. இதையே பால் மாற்றிப் போட்டு எத்தனை பேரின் மனங்கள்.. சிந்திக்கின்றன தெரியுமா?

இல்லையா ஓவியா?

ஆமாம் ஆமாம்
ஆமாம் ஆமாம்
ஆமாம் ஆமாம்...........:D :D :D

தாமரை
14-12-2006, 03:30 PM
சும்மா கொன்னு பிச்சு போட்டுட்டீங்க.......

ரொம்ப அருமையாய் இருக்கு கவிதை

மேனியழகில் மயங்கும் மன்மதன்களுக்கு இதேல்லாம் உறைக்காது.....

பாராட்டுக்கள் தோழி



பாரதி பாடிய:
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.....
பொன்னையே நிகர்த்த மேனி

'பொன்னையே நிகர்த்த மேனி'...
பாரதியின் கனவு கண்ணமாவும் சிகப்பா அழகாதான் இருந்திருப்பாறோ. ...வார்ண மோகம் யாரை விட்டது.....

ஒருசமயம் வயக்காட்டு பெண்களை பா**** பார்த்ததில்லையோ என்னவோ...
காக்கைச் சிறகினிலே நந்தலாலா..உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்த லாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கரிய கண்ணனை
தங்க வண்ணப் பெண்ணாய்
பார்க்கத்தெரிந்த கண் அது..

வெள்ளை நிறத்தொரு பூனை எந்தன் வீட்டில் வளருது கண்டேன் என்ற கவிதையைப் படியுங்கள்...


கண்ணால் மட்டுமல்லாமல்,, மனதாலும் பார்க்கத் தெரிந்தவர்கள் கவிஞர்கள்.. வார்த்தைகளில் வர்ணஜாலம் இருக்கும் ஆனால் மனம் மட்டும் வெள்ளை,,,

ஓவியா
14-12-2006, 03:47 PM
காக்கைச் சிறகினிலே நந்தலாலா..உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்த லாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கரிய கண்ணனை
தங்க வண்ணப் பெண்ணாய்
பார்க்கத்தெரிந்த கண் அது..

இது அப்பாவே ஆரம்பமா....
கருப்பு மேனி கொண்ட ஆண்கள் = கண்ணன்,
கருப்பு நிரமேனி கொண்ட பெண் = கருப்பாயீ..........இது சரியா....:eek: :eek:


வெள்ளை நிறத்தொரு பூனை எந்தன் வீட்டில் வளருது கண்டேன் என்ற கவிதையைப் படியுங்கள்...
சரியண்ணா......ஆனால் இந்த பாட்டை பாடி எந்த ஆணும் பெண்னை மயக்கவில்லையே...:cool: :cool:

கண்ணால் மட்டுமல்லாமல்,, மனதாலும் பார்க்கத் தெரிந்தவர்கள் கவிஞர்கள்.. வார்த்தைகளில் வர்ணஜாலம் இருக்கும் ஆனால் மனம் மட்டும் வெள்ளை,,,

இது எத்தனை ஆண்மகன்களுக்கு புரியுது...
ஆண்களின் கண்களுக்கு முதலில் தெரிவதே அவள் நிரமும் அழகும்தான்....,,,

:) :)

இளசு
14-12-2006, 08:38 PM
மிக அழகான உருவ அமைப்பு உள்ள ஆணுக்கு சுமாரான இணை..
அதி அற்புத அழகிக்கு , சாதாரண தோற்றமுள்ளவன்...

இவர்களை மகிழ்ச்சி இல்லா வன்பூட்டு இணை என்று இட்டுக்கட்டிப்
பார்க்கும் இயல்பு நமக்கு...


பழக, பகிர தெரிய வரும் அழகு... தனி அழகு..

ஒரே இடத்தில் பணி செய்ய - ஒருவரின் சிறு கழுத்து வெட்டு, நெற்றி வியர்வை, சோர்வில் புன்னகை -
என மின்னலாய் சுண்டும் பொறிகள்..
சுவாரசியமானவை..

புற அழகே முதல் ஊக்கி..

ரசனை, நெருக்கம், புரிதல் தரும் அழகே தொடர் ஊக்கி.. நிலை நிறுத்தி!!!


அழகானவர்கள் எல்லாரும் காதலிக்கப்படுவார்களோ என்னவோ..
காதலிக்கப்படுபவர்கள் எல்லாருமே அழகானவர்கள்தான்..!

'அந்தக்' காதலன் பார்வை படும்வரை
இவள் அழகாய் உணர வாய்ப்பில்லை!


லைலாவைக் காண மஜ்னுவின் கண்கள் மட்டுமே !


பிச்சியின் கவிதை நாயகிக்கும்.... ஒரு பித்தன் கிடைக்கட்டும்!

கவிதைக்கு பாராட்டுகள்.. நிறைய நிறைய வாசியுங்கள்.. நிறைய எழுதுங்கள்! வாழ்த்துகள்!

தாமரை
15-12-2006, 03:36 AM
:) :)
காதலி அழகில்லை என்று எந்த ஆண்மகனும் சொல்லமாட்டான்..

பிச்சி
15-12-2006, 05:05 AM
அனைவருக்கும் நன்றி,, எல்லா ஆண்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை, இருந்தாலும் சிலர் பெண்களைப் பார்க்கும் போது அழகற்றவர்களை ஒதுக்கிவிடுகின்றனர்,,, என் தோழியர் பலர் சொல்லக் கேட்டிருக்கேன். எங்கள் வேதனை எங்களுக்கு மட்டுமே புரியும்.. எனினும் பாரதியாரை ஏன் இழுக்கிறீர்கள், பாவம் அங்கேயாவது அவர் நிம்மதியாக இருக்கட்டும்... இந்த விஷயத்தில் ஓவியா சொன்னது மிகவும் சரி

பிச்சி
15-12-2006, 05:08 AM
சும்மா கொன்னு பிச்சு போட்டுட்டீங்க.......

ரொம்ப அருமையாய் இருக்கு கவிதை

மேனியழகில் மயங்கும் மன்மதன்களுக்கு இதேல்லாம் உறைக்காது.....

பாராட்டுக்கள் தோழி



பாரதி பாடிய:
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.....
பொன்னையே நிகர்த்த மேனி

'பொன்னையே நிகர்த்த மேனி'...
பாரதியின் கனவு கண்ணமாவும் சிகப்பா அழகாதான் இருந்திருப்பாறோ. ...வார்ண மோகம் யாரை விட்டது.....

ஒருசமயம் வயக்காட்டு பெண்களை பா**** பார்த்ததில்லையோ என்னவோ...

ஓவியா கவனிக்க...

"நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா"

அவள் எப்படி இருந்தாலும் அவளை ரதியென நினைக்கிறார் பாரதி..

பிச்சி
15-12-2006, 05:09 AM
முதல் கவிதை கொடுத்த பிச்சிக்கு வாழ்த்துக்கள்...

பிச்சி என்று பெயர் மாற்றிவிடலாமா. தமிழில் வேண்டுமா, ஆங்கிலத்தில் வேண்டுமா. அடுத்த வாரத்திற்குள் மாற்றி தருகிறோம்.

அறிஞரே... பிச்சி என்று தமிழில் மாற்றித் தாருங்கள்.. username password maaruma?

ஓவியா
15-12-2006, 09:15 AM
ஓவியா கவனிக்க...

"நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா"

அவள் எப்படி இருந்தாலும் அவளை ரதியென நினைக்கிறார் பாரதி..

சரி முதல் வரியிலே....நீதான்.....அட நீயேதான்......நீ ஒருத்திதான்...நீ மட்டும்தான்...எனக்கு ரதினு சொல்லிட்டார்...:)

இருப்பினும் வயக்காட்டு பெண்களிடம் 'பொன்னையே நிகர்த்த மேனி'...னு அடுத்த வரி பலிக்காதே....

சரி,
காதலனுக்கு காதலிதான் ரதி....:D :D

பிச்சி
15-12-2006, 11:12 AM
என் கருவுக்குள் நீ!!

கல்லூரி வளாகங்களில்
என்னையே சுற்றி வருகிறாய்
கோயில் சிலைகள் தோற்க.
கண்களினால் உன்னைக் கடைந்திடுவேன்
காதல் மட்டும் வாராது அப்போது.

தேக உரசலுக்கு உன் கண்கள்
தேடாது; மாறாக
சாகும் வரை காதலிப்பாய்
அன்றியும் உதறுவேன்
என் கைகுட்டையை.

(எனக்கு) துளி ரத்தம் சிதறினால்
உனக்கு வினாடிகளில் மறுஜென்மம்
கண்ணீர் உடைந்தால்
ஒட்ட முடியாத உன் இதயம்
பாதம் சறுக்கினால்,
போய்விடுகிறது
என்னைக் காப்பதாகச் சொன்ன
உன் கண்கள்.
ஓவியங்களை என் நெற்றியில் கண்டால்
கோவிலுக்குச் சென்று வேண்டுகிறாய்
இருந்தும் மெளனம் காக்கிறது
என்னுடைய கனமான இதயம்.

தும்மலோ, விக்கலோ, இருமலோ,
எனக்கு வருவதில்லை அவ்வளவு.
வந்தால் அலைகிறாய், நெளிகிறாய்
சற்றும் பிழைத்தும் போகிறாய்
என்மேல்தான் உனக்கு காதல் எவ்வளவு!!

ஆர்குட்டிலே நீ வீரியன்;
தமிழ் மன்றத்திலே நீ சூரியன்
இன்னபிற கவிதை சோலைகளுக்கு
நீயே எல்லாம்.
காரணம் நானென்றா சொல்கிறாய்?
நெருப்பு கொள்கிறது என் கண்கள்.

ஏதாவதொரு சமயத்தில்
உணவு இடைவேளைகளில்
தவறிவிழும் பருக்கைகளை
தேடிப் பிடிக்கிறாய்.
என் நா பட்ட பருக்கைகள்
உனக்கென்ன முத்துக்களா?
என் கொலுசுகள் ஏசுகின்றன உன்னை.

கல்லூரி மணியடிக்கும் போதெல்லாம்
உன் முகத்தில் கண்ணீர் செத்துப் போகிறது.
காலை கல்லூரி வந்து
என் முகம் பார்த்து பிழைக்கிறது
பரிதாபம் கொள்கிறேன் முதல்முறையாய்!

தயங்கி தயங்கி
என்னோடு வரும் தோழியை
நோண்டி
என்னோடு பேச நினைக்கிறாய்
பேச்சுக்கள் உடைந்து போகிறது
மூச்சும் கலைந்து போகிறது உனக்கு
என் சிரிப்பலைகளால் நீ சிலையாகிறாய்.

என்றாவது நான் பேச்சு கொடுத்தால்
இதயத்தை கையில் எடுத்துக் கொண்டு
சென்று விடுகிறாய்
பேசியபின் சொல்கிறாய்
'இதயத்தைக் காணவில்லை'
மெல்ல மெல்ல புரிகிறேன் உன் காதலை

இத்தனை காதல் வைத்தென்னை,
என் இதயத்தை
பிடுங்கியெடுக்கிறாய்
உன் நெஞ்சினில் என் இதயத்தைப் அமர்த்தி
கெஞ்சுகிறாய்,
என் நினைவுகளினாலேயே
உன் நினைவுகளை உருக்குகிறாய்
உன் காதலால் உன் இதயம்
என் கருவினில் வந்தமர்கிறது
என் காதலனே!!!

leomohan
15-12-2006, 11:18 AM
அருமை. தொடருங்கள் பிச்சி

மதி
15-12-2006, 11:22 AM
நல்ல கவிதை பிச்சி...
தொடருங்கள்...!

ஆதவா
15-12-2006, 03:28 PM
என்னதான் சொல்லுங்க ஓவியா,, பாரதியை நாம் எந்த விதத்திலும் சந்தேகப்படக்கூடாது... கண்டிப்பா அவர் அந்த மாதிரி நினைச்சிருக்க மாட்டார்....

ஓவியா
15-12-2006, 03:42 PM
என்னதான் சொல்லுங்க ஓவியா,, பாரதியை நாம் எந்த விதத்திலும் சந்தேகப்படக்கூடாது... கண்டிப்பா அவர் அந்த மாதிரி நினைச்சிருக்க மாட்டார்....

உண்மையிலே எனக்கு பாரதியை வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு பிடிக்கும்.....:D :D :D


அடடே
இறந்தும் தமிழ்மன்றத்தில் தமிழ்மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்....பாரதி

பெறுமையாதான் இருக்கு...:)

மகாகவியே உன் புகழ் வையத்தில் வாழ்வாங்கு வாழ்கவே

ஆதவா
15-12-2006, 03:58 PM
அடடே இப்படி சொல்லி என் நெஞ்சு குளிர வைச்சுட்டீங்களே..

நம்பிகோபாலன்
15-12-2006, 05:48 PM
காதலியின் காதலை சொன்ன விதம் அருமை

அறிஞர்
15-12-2006, 07:09 PM
ஆர்குட்டிலே நீ வீரியன்;
தமிழ் மன்றத்திலே நீ சூரியன்
இன்னபிற கவிதை சோலைகளுக்கு
நீயே எல்லாம்.
காரணம் நானென்றா சொல்கிறாய்?
நெருப்பு கொள்கிறது என் கண்கள்.!!!
இக்கால தளங்களையும் சுட்டிக்காட்டி கவிதை தொடர்கிற்து அருமையாக




இத்தனை காதல் வைத்தென்னை,
என் இதயத்தை
பிடுங்கியெடுக்கிறாய்
உன் நெஞ்சினில் என் இதயத்தைப் அமர்த்தி
கெஞ்சுகிறாய்,
என் நினைவுகளினாலேயே
உன் நினைவுகளை உருக்குகிறாய்
உன் காதலால் உன் இதயம்
என் கருவினில் வந்தமர்கிறது
என் காதலனே!!!
முதலில் நெளிந்து, வழிந்து....
பிறகு உருக்கி கருவுக்குள் வந்து அமர்வது தானே...
காதலனின் இலட்சியம். :rolleyes: :rolleyes: :rolleyes:

இளசு
15-12-2006, 07:17 PM
காதலியின் காதலை சொன்ன விதம் அருமை


வேண்டுகோளை ஏற்று தமிழில் பதித்தமைக்கு நன்றிகள்
நம்பிகோபாலன் அவர்களே..

தொடக்கத்தில் தமிழில் தட்டச்ச கொஞ்சம் சிரமமாய் இருக்கும்.
பழகப்பழக, ஆங்கிலத்தை விட விரைவாக.. எளிதாக..

மன்றத்தின் நோக்கமே தமிழில் எழுதுவதை வளர்ப்பதே....

meera
16-12-2006, 05:33 AM
பிரபா,

அசந்துவிட்டேன்.தொடருங்கள் தோழி

guna
16-12-2006, 08:19 AM
ஆர்குட்டிலே நீ வீரியன்;
தமிழ் மன்றத்திலே நீ சூரியன்
இன்னபிற கவிதை சோலைகளுக்கு
நீயே எல்லாம்.
காரணம் நானென்றா சொல்கிறாய்?
நெருப்பு கொள்கிறது என் கண்கள்.

பிச்சி வாங்கறீங்க பிச்சு..
வரிகள் எல்லாமே அழகா இருக்கு..

மேலும் மேலும் கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள் தோழி..

"தமிழ் மன்றத்திலே நீ சூரியன்"னு
புதியவர் "ஆதவன்"னை குறிப்பிடலையே????:confused:

பிச்சி
18-12-2006, 10:55 AM
மோகன், மதி, நம்பி கோபாலன் , அறிஞர், இளசு மற்றும் மீரா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. எழுதவே தயங்கிய எனக்கு ஊக்கமள்க்க இத்தனை பேர் எனும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நிறைய படிக்கவேண்டியது இர்க்கு அதனால நாளைக்கு இன்னொரு கவிதை எழுதி அனுப்பறேன்...

பிச்சி
18-12-2006, 10:57 AM
ஆர்குட்டிலே நீ வீரியன்;
தமிழ் மன்றத்திலே நீ சூரியன்


[B][I]"தமிழ் மன்றத்திலே நீ சூரியன்"னு
புதியவர் "ஆதவன்"னை குறிப்பிடலையே????:confused:

அய்யயோ!! சும்மா வீரியன்" ங்கர வார்த்தைக்கு எதுகையா இருக்கட்டும்னு சூரியன் னு போட்டேன் பா.. பாவம் அந்த ஆதவன்... ;)

gragavan
18-12-2006, 02:32 PM
அய்யயோ!! சும்மா வீரியன்" ங்கர வார்த்தைக்கு எதுகையா இருக்கட்டும்னு சூரியன் னு போட்டேன் பா.. பாவம் அந்த ஆதவன்... ;)
எது கையோன்னு நெனச்சேன். :) கடைசியில எதுகைதானா :D :D :D

ஆதவா
18-12-2006, 03:14 PM
ராகவரே!! என்னை எதற்க்காகப்பா வம்புக்கிழுக்கிறீர்...

பிச்சி
24-12-2006, 12:39 PM
என் கனவு


தூங்கிய பின்னும் முகங்கொடுத்து
தூங்கிய என்னை உன்
மடி அமர்த்தினாய்
பஞ்சு மெத்தையிலே
நான் படுத்ததில்லை
படுத்திய பின்னும் இன்னும்
ஏனடா தயக்கம்?
முத்தமிடு என்னில்.
இந்த இரவு சுகப்படட்டும்
சோகம் கூட தாலாட்டாய்
எவ்வாறு படிப்பாய்?
உதிரும் பூக்கள் போல் வார்த்தைகளை
கொட்டும் உன் நாவிதழில்
தேன் இருக்குமோ?
உருவமில்லா உன்னை
நினைக்கவே என்னுருவம்
தொலைந்து போனது
என்னை நாளும் தொந்தரவு
செய்வதை நிறுத்து

கேள்விக்கு பதிலாக,
உன் முத்தத்திற்கு என்னால்
முத்தமிட முடியாது
சத்தமில்லாத உலகைப்
படைத்த நீ
என்னைப் போல் எத்தனை
பேரை மயக்க வைத்தாய்!

போர்த்திய போர்வையிலே
நான் அறியாமல்
என்னுள் நுழைந்து
என்னை வாட்டுகிறாய்
இனியும் உன்னுடன் பேசாதிருப்பது
சரியல்ல தானே!

கண்களால் பேசிக்கொள்ள
நம் கண்களும் இல்லை;
உதடுகளால் பேசிக்கொள்ள
என்னுதடும் இல்லை
நினைவுகளாலே பேசுவோம்!!
பொழுது விடியும்வரை
கண்ணுக்கு புலப்படாத நீ
சொல்லாமலே சென்று விடுகிறாய்!
என் நினைவுகளையும்
கலைத்து விடுகிறாய்

கால்களால் இணைத்து
என் கைகளை அணைக்கிறாய்
மூடாத விழிகளில் காண முயலுகிறேன்
இனியும் சொல்வதெற்கென்ன
முடிந்து போகாத என் வாழ்வின்
இளமைக் காதலனே!
உன்னை விட எனக்கு ஆசை
வளர்த்தவர் எவருமில்லை

எழுத முடியாத கவிதையாய்
நாள்தோரும் வாட்டும் உன்
வார்த்தைகள் காற்றோடு
கலைந்து போவது பாவமடா!
நேற்றுவரை நடந்தது
நடந்தபடிதான்!
இன்று நடனமாடு என் முன்
இதோ! என் இதயம்
சபையமைத்துத் தருகிறது
எப்பொழுது வரும் இரவென
பகல் முழுவது நினைத்திருப்பேன்
அட! அதிலும் நீ
முழுவதுமாய் உன்னை
எனக்களித்தா யானால்
எனக்கெதற்கு விழிகளும்
என் இதயமும்.?

ஷீ-நிசி
24-12-2006, 12:53 PM
அழகான கவிதை

பிச்சி
24-12-2006, 12:54 PM
அழகான கவிதை

நன்ரி ஷிநிசி அண்ணா

இளசு
27-12-2006, 09:50 PM
கனவு மெய்ப்படவேண்டும்...

பாராட்டுகள் பிச்சிக்கு..

உதிரும் பூக்களைப் போல் கொட்டும்
உங்கள் கவிதையில் தேன் இருக்கிறது...

பிச்சி
31-12-2006, 06:04 AM
கனவு மெய்ப்படவேண்டும்...

பாராட்டுகள் பிச்சிக்கு..

உதிரும் பூக்களைப் போல் கொட்டும்
உங்கள் கவிதையில் தேன் இருக்கிறது...

நன்றி அண்ணா..

பிச்சி
06-01-2007, 09:33 AM
நீ
யோகங்களின் பிறப்பிடம்.
உன்மதமான உறைவிடம்.
தியாக வளைவுகளில்
நர்த்தனமாடும் தெய்வீகம்.
வாழ்வுச் செறிவில்
ஓசையின்றி கூக்குரலிடும்
தாய்மையின் தாலாட்டு.

நீ
குறுத்துக்களில் மத்தியில்
திரவமில்லாமல் ஒளிந்திருக்கும்
சம்பத்து.
சுனைநீர் மேலிட
அங்கங்களில் கவிதை பாடும்
மகா கவி.
தாவரம் மேல் மிதக்கும்
ஆவி போன்ற வெண்மை
பனித்துளி.
பெளதிக வாழ்வில்
ஆன்மிகச் செறிவு
உட்கொள்ளும் ஆசிரியன்..

நீ
தாளங்களை ஏற்றிச் செல்லும்
ராகங்களின் உதயம்.
வேதப் பித்துக்களில்
யாதொரு பயமறியாது
கோள் சொல்லும் பிள்ளை.
விரல் நுனிவினில்
தேகம் வைத்து
நான் யாரெனச் சொன்னவன்.

நீ
கற்பு நெறி விளங்கும்
என் மனதில், ஆணின்றி
விதைத்திட்ட விதை.
என் விழிகளின் வழி
துளைத்து உன் ரசங்களை
ஊற்றிவிட்ட தென்றல்.
பிரபஞ்ச விருத்திக்கு என
பூமியுடன் கூடல் செய்த
தூயவன்.

நீ
என் காதல்
என் கவிதை.
என் தேகம்; தமிழ் தாகம்
என்னோடு யாதுமாகி.
நீயின்றி ஒரு அணுவும் உளதோ?

அன்பு
பிச்சி..

பென்ஸ்
06-01-2007, 11:39 AM
காதலின் உச்சத்தில் இருக்கும் போது தன் காதலனை துரும்பு, எறும்பு
என்று துவங்கி கரும்பு , இரும்பு என்று வரை ஒப்பிடுவதிலும் , புகழ்வதிலும்
நீங்கள் சளைத்தவர் இல்லை என்று நிரூபித்திருக்கிறீர்கள்...

சபாஷ்..

ஆனா பாருங்க, உங்க கவிதைகள் எல்லாம் இதே மாதிரியே இருக்கு.
கொஞ்சம் மாற்றம் கொண்டு வரலாம். மேலும் வரிகளை கொன்சம்
குறைக்க முயற்சிக்கலாம்.

ஆமா அந்த லக்கி பையம் யாரு... :rolleyes: :rolleyes: :rolleyes:

பிச்சி
06-01-2007, 01:04 PM
காதலின் உச்சத்தில் இருக்கும் போது தன் காதலனை துரும்பு, எறும்பு
என்று துவங்கி கரும்பு , இரும்பு என்று வரை ஒப்பிடுவதிலும் , புகழ்வதிலும்
நீங்கள் சளைத்தவர் இல்லை என்று நிரூபித்திருக்கிறீர்கள்...

சபாஷ்..

ஆனா பாருங்க, உங்க கவிதைகள் எல்லாம் இதே மாதிரியே இருக்கு.
கொஞ்சம் மாற்றம் கொண்டு வரலாம். மேலும் வரிகளை கொன்சம்
குறைக்க முயற்சிக்கலாம்.

ஆமா அந்த லக்கி பையம் யாரு... :rolleyes: :rolleyes: :rolleyes:

பெஞ்சமின் அண்ணா, நான் என்ன செய்யறது? இப்படித்தான் எனக்கு எழுத வருது.
ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன். தலைப்பு போடல. அது பாரதியை நினச்சு எழுதினது. இன்னும் சின்னதாக எழுத கத்துக்கறேன்..

நன்றி அண்ணா

பிச்சி
09-01-2007, 03:03 PM
என்னங்க ஒரு ரெப்ளை கூட காணோம்?

ஷீ-நிசி
09-01-2007, 03:32 PM
நல்லா இருக்கு பிச்சி...

பாரதிக்கு ஒரு கவிதை.

மதுரகன்
09-01-2007, 04:26 PM
தியாக வளைவுகளில்
நர்த்தனமாடும் தெய்வீகம்.
வாழ்வுச் செறிவில்
ஓசையின்றி கூக்குரலிடும்
தாய்மையின் தாலாட்டு.
நல்ல சிந்தனை பிச்சி

உங்களிடமிருந்து பல வித்தியாசமான சிந்தனைகளை எதிர்பார்க்கிறேன்..

பிச்சி
11-01-2007, 02:42 PM
நல்ல சிந்தனை பிச்சி

உங்களிடமிருந்து பல வித்தியாசமான சிந்தனைகளை எதிர்பார்க்கிறேன்..

மிக்க நன்றி மாதுரங்கன்.

மதுரகன்
11-01-2007, 03:56 PM
நன்றிக்கு நன்றி பிச்சி நான் மாதுரங்கன் அல்ல.. மதுரகன்...

பிச்சி
13-01-2007, 02:17 AM
நன்றிக்கு நன்றி பிச்சி நான் மாதுரங்கன் அல்ல.. மதுரகன்...

மன்னிக்கவும்.. தவறாக சொல்லிவிட்டேன்.

பிச்சி
13-01-2007, 02:21 AM
நட்பு

தீண்டும் தென்றலின்
இன்ப ராகங்கள்
அதைக் குடைந்து குடைந்தே
உருவாக்கிய கவிஞனின் சிற்பம்

ஆண்டவன் அதிமயங்கி
தென்னைக் கீற்றுச் சந்துகளில்
வந்திறங்கி சுவாசம் தேடும்
ஆரோக்கிய ஸ்பரிசம்

ஆர்ப்பாட்ட கடலடியில்
ஆழ்ந்துறங்கும்
தென்றலை
அடிமனதில் வைத்து
அழுத்தி
காலம் இசைக்கும்
சோகத் தாலாட்டு

கற்பாறை மனதுகளை
தூக்கி யெறிந்த
கட்டிலா அலைகளின்
முக்கிய தருணங்கள்.

இருட்டுகிற பொழுதுகளில்
இனிய ஓசை எழும்
இலை உதிர்வுகளைக்
கேட்டு கேட்டே
உதயமாகும்
இன்பச் சூரியன்.

நித்தமும் ஓலைக் கீற்றின்
உள்வழி ஒளியாக
பிம்பங்களின் ரூபம் மாற்றும்
நிழல்களின் சிரிப்பு.

அஃறிணை பொருள்களின்
சத்துழைக்காத அனுபவங்களை
ஒத்துழைக்கச் செய்யும்
சண்டமாருதம்.

வெப்பத்தின் சச்சரவுகளை
சொக்கியே பார்க்கும்
H2O உள்ளத்தின் தவனம்
நீரின்றி உலகேதென
நமட்டுச் சிரிப்புடன் வாழும்
ஆன்மீக நந்தவனம்

உயிர்க் காற்றின்
ஓர்பொழுதுகளில்
திசையறியா பயணமிக்கும்
பறவைகளின் சரணாலயம்.

இளசு
13-01-2007, 08:17 AM
பிச்சி

நீர்த்துப்போகாத சம்பத்து
ஆணின்றி விதைத்த விதை
பூமியுடன் கூடிய தூயவன்


சொல் புதிது - தந்த
வீரியக் கவிஞனுக்கு
புது வீரியச் சொற்களால்
கவிமாலை தொடுத்தீர்கள்...


தொடுத்த கரங்களுக்குப் பாராட்டுகள்!

பிச்சி
13-01-2007, 09:26 AM
பிச்சி

நீர்த்துப்போகாத சம்பத்து
ஆணின்றி விதைத்த விதை
பூமியுடன் கூடிய தூயவன்


சொல் புதிது - தந்த
வீரியக் கவிஞனுக்கு
புது வீரியச் சொற்களால்
கவிமாலை தொடுத்தீர்கள்...


தொடுத்த கரங்களுக்குப் பாராட்டுகள்!


மிக்க நன்றி இளசு அண்ணா!.

மதுரகன்
13-01-2007, 03:59 PM
பிச்சி பிச்சுப்புட்டீங்க.. போங்க தனித்தனியாக கூறமுடியாது அத்தனை வரிகளும் அற்புதம் ... சிந்தனை அற்புதம்.. தேடிக்கண்டறிந்த வார்த்தைகள் அற்புதம்... தொடர்ந்து பின்னுங்கள்...

பிச்சி
14-01-2007, 03:00 AM
பிச்சி பிச்சுப்புட்டீங்க.. போங்க தனித்தனியாக கூறமுடியாது அத்தனை வரிகளும் அற்புதம் ... சிந்தனை அற்புதம்.. தேடிக்கண்டறிந்த வார்த்தைகள் அற்புதம்... தொடர்ந்து பின்னுங்கள்...

மிக்க நன்றி மதுரகன் அவர்களுக்கு. தொடர்ந்து ஊக்கமளியுங்க்கள்

பிச்சி
14-01-2007, 03:01 AM
இரவுப் பூச்சிகளின்
முதுகில் வெங்கதிர் பாய்ச்சி
கனவைக் கலைத்து
அதன் ஒளியைக் கெடுத்து
ஒளியைக் கொடுக்கும்
வெண்மை மைந்தன்.

மகரந்த விதைகளின்
வீழ்ச்சியினால், சோகமாய்
கண்ணீர் வடிக்கும் பூக்களுக்கு
மெல்ல ஆறுதல் சொல்ல
அள்ளி வரும்
பூக்களின் தலைவன்.

இலைகளின் காதலி
நுனியிதழ் தேவதைக்கு
மறுஜென்மம் நீட்டித்து
தெய்வமாகும்
புற்களின் புதல்வன்.

பூச்சிகளின் பேச்சுவார்த்தைகளை
தினமும் கலைத்து விட்டு
யோஜனை ஏதுமின்றி
குழப்பங்களுக்கு மத்தியில்
அமர்ந்து சிரிக்கும்
சிந்தனைச் செம்மல்.

பின்னிப் பிணைந்திருக்கும்
இரவுப் பிள்ளையின்
நாபிக் கமலத்தை
நிதம் நிதம் அறுத்து
இரவுக்குள் மீண்டும் பிள்ளையாக்கும்
நிலவின் கணவன்.

தனித்தே இருக்கும்
தண்சுடர் காதலியின்
உயிர் கெடுத்து, சிதைத்து,
உயிர்கொடுத்து வாழும்
உன்னதமான நண்பன்.

ஆழ்ந்துறங்கும் மான்களின்
கொம்பு வழி சக்தி புகுத்தி
வம்பு வளர்க்கும்
விலங்கின வீரியன்.

மெய்ஞானத்தின் ஓர் புறத்தில்
மெய்யாகவே அமர்ந்து
பொய்யான வாழ்வுக் கடலில்
மூழ்கி மீன் பிடிக்கும்
மீனவக் குமரன்.

செதில்களின் அசைவுகளில்
தாளம் இசைத்து
கண்களின் வளைவுகளில்
பாடல் பாடும் மீன்களை
மேடை ஏற்றும்
விண்மீன் காந்தன்.

மெல்ல எழும் போது
தன் துணைவியின் நிறம் கலைத்து
நித்திய தரிசனத்தின்
மத்தியில் வந்து வணங்கும்
சத்திய சூரியன்.

(இவை எதுவும் பொருட்படுத்தாது
பிளாஸ்டிக் கனவுகளில்
வாழ்க்கை நடத்தும்
செயற்கை மனிதம்..)

ஓவியா
14-01-2007, 12:13 PM
அறிஞரே... பிச்சி என்று தமிழில் மாற்றித் தாருங்கள்.. username password maaruma?


நிர்வாகிகளின் கவனத்திர்க்கு

ஓவியா
14-01-2007, 12:39 PM
என் கருவுக்குள் நீ!!

கல்லூரி வளாகங்களில்.
................................
என் இதயத்தை பிடுங்கியெடுக்கிறாய்
உன் நெஞ்சினில் என் இதயத்தைப் அமர்த்தி கெஞ்சுகிறாய்,
என் நினைவுகளினாலேயே
உன் நினைவுகளை உருக்குகிறாய்
உன் காதலால் உன் இதயம்
என் கருவினில் வந்தமர்கிறது
என் காதலனே!!!


என்றாவது நான் பேச்சு கொடுத்தால்
இதயத்தை கையில் எடுத்துக் கொண்டு
சென்று விடுகிறாய்.........:D :D
பேசியபின் சொல்கிறாய்
'இதயத்தைக் காணவில்லை'
மெல்ல மெல்ல புரிகிறேன் உன் (என்) காதலை
:D :D :D


வணக்கம் பிரபா

தங்களின் கவிதைகள் நீளமாக இருப்பதினாள் நேரம் கிட்டும் பொழுதான் படிகின்றேன்.....மன்னிக்க

கவிதை மிகவும் அருமையாய் இருக்கு
சிந்தனை, நடை, கோர்வைனு அனைத்திலுமே ஒரு இணைப்புல்லது.....கவிதை நிஜத்தில் வரும் உண்மை.......பாரட்டுக்கள்

ரசித்தேன்

ஓவியா
14-01-2007, 12:46 PM
முதலில் நெளிந்து, வழிந்து....
பிறகு உருக்கி கருவுக்குள் வந்து அமர்வது தானே...
காதலனின் இலட்சியம். :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆராய்ச்சு இதுதானா.....நல்லதான் பன்னரீக :D





[B][I]"தமிழ் மன்றத்திலே நீ சூரியன்"னு
புதியவர் "ஆதவன்"னை குறிப்பிடலையே????:confused:

அட ஆதவா.................ரொம்ப பேமஸ்தான் நீங்க :D :D




இளசு சார், ராகவன் கவிதையின் விமர்சனம் எங்கே?

மன்னிக்கவும் தங்களின் விமர்சனம் அருமையாய் இருக்கும் அதான் கேட்டு விட்டேன்....வந்துட்டு விமர்சனம் போட மறந்துடீங்களோனு நினைக்கிறேன்...அப்படிதானே

பிச்சி
14-01-2007, 03:19 PM
நிர்வாகிகளின் கவனத்திர்க்கு

எடுத்துக் காட்டியமைக்கு நன்றி அக்கா!
(அக்கானு கூப்பிடலாமா? )

பிச்சி
14-01-2007, 03:22 PM
என்றாவது நான் பேச்சு கொடுத்தால்
இதயத்தை கையில் எடுத்துக் கொண்டு
சென்று விடுகிறாய்.........:D :D
பேசியபின் சொல்கிறாய்
'இதயத்தைக் காணவில்லை'
மெல்ல மெல்ல புரிகிறேன் உன் (என்) காதலை
:D :D :D


வணக்கம் பிரபா

தங்களின் கவிதைகள் நீளமாக இருப்பதினாள் நேரம் கிட்டும் பொழுதான் படிகின்றேன்.....மன்னிக்க

கவிதை மிகவும் அருமையாய் இருக்கு
சிந்தனை, நடை, கோர்வைனு அனைத்திலுமே ஒரு இணைப்புல்லது.....கவிதை நிஜத்தில் வரும் உண்மை.......பாரட்டுக்கள்

ரசித்தேன்





மிக்க நன்றி அக்கா!! அப்படியே என்னோட எல்லா கவிதையும் படிங்களேன்.

ஓவியா
14-01-2007, 04:03 PM
மிக்க நன்றி அக்கா!! அப்படியே என்னோட எல்லா கவிதையும் படிங்களேன்.

வாய்ப்பிருப்பின் அவசியம் படித்து விமர்சனம் போடுகிறேன் தோழியே

தாங்களும் மற்றவர்களின் படைப்பினை படித்து கருத்து கூருங்கள்,
அது நட்பை வளர்க்கும், தங்களின் எழுத்து திறமையும் கூடும்

ஓவியா
14-01-2007, 04:16 PM
எடுத்துக் காட்டியமைக்கு நன்றி அக்கா!
(அக்கானு கூப்பிடலாமா? )

அடியேன் தங்களைவிட இளயவளென்று நினைக்கின்றேன் ஓவியா ஓவீ ஓ என்றே அழைக்கலாம்...
இல்லனா தோழியே..(இன்னும் பள்ளி செல்லும் குழந்தை நான் :D :D :D )


பண்பட்டவர் ஆகியாச்சுதானே

வாழ்த்துக்கள்

மதுரகன்
14-01-2007, 04:19 PM
அருமை பிச்சி
ஆனால் ஏன் இந்த வரிகளுக்கு அடைப்பிட்டீர்கள்

(இவை எதுவும் பொருட்படுத்தாது
பிளாஸ்டிக் கனவுகளில்
வாழ்க்கை நடத்தும்
செயற்கை மனிதம்..)
படிப்போர் மனங்களில் தெறித்தோட வேண்டிய வரிகளே இவை தாமே...

ஆதவா
14-01-2007, 05:29 PM
அடியேன் தங்களைவிட இளயவளென்று நினைக்கின்றேன் ஓவியா ஓவீ ஓ என்றே அழைக்கலாம்...
இல்லனா தோழியே..(இன்னும் பள்ளி செல்லும் குழந்தை நான் :D :D :D )


பண்பட்டவர் ஆகியாச்சுதானே

வாழ்த்துக்கள்

ஆஹா!!! எப்ப இந்த மாதிரி??????:confused: :confused: :confused: சொல்லவே இல்ல!!!:eek:

ஆதவா
14-01-2007, 05:33 PM
அட ஆதவா.................ரொம்ப பேமஸ்தான் நீங்க :D :D



என்ன பண்ண சொல்றீங்க!!! வெளிய நடமாட முடியல... ஆட்டோ கிராஃப் போட்டு போட்டு கை வலி டெய்லியும் இருக்கு...ம்ம்... இதில மன்றத்தில நம்ம ஃபேனுங்க வேற.... எல்லாத்தையும் சமாளிக்கறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிருதுங்க...

ஓவியா
14-01-2007, 05:37 PM
ஆஹா!!! எப்ப இந்த மாதிரி??????:confused: :confused: :confused: சொல்லவே இல்ல!!!:eek:

:D :D :D :D

பிச்சி
15-01-2007, 02:57 AM
அருமை பிச்சி
ஆனால் ஏன் இந்த வரிகளுக்கு அடைப்பிட்டீர்கள்

படிப்போர் மனங்களில் தெறித்தோட வேண்டிய வரிகளே இவை தாமே...

மிக்க நன்றி மதுரகன்.. அடைப்பிட்டதற்கு காரணமிருக்கிறது.

அது தலைப்போடு ஒட்டாதென நினைத்தேன். கடைசியாக நினைத்து எழுதியது...
மனிதம் ஒரு அடைப்புக்குள் இருக்கிறது என்பதைக் காண்பிக்கவே அடைப்பிட்டிருந்தேன்.

மிக்க நன்றீ மீண்டும்

guna
15-01-2007, 06:08 AM
மனிதம் ஒரு அடைப்புக்குள் இருக்கிறது



உங்கள் கவிதை வரிகளையும் மிஞ்சிடும் வரிகள்..
அருமை.

வாழ்த்துக்கள்

meera
15-01-2007, 07:13 AM
(இவை எதுவும் பொருட்படுத்தாது
பிளாஸ்டிக் கனவுகளில்
வாழ்க்கை நடத்தும்
செயற்கை மனிதம்..)

பிரபா,

நீளமான கவிதை.அழகான வரிகள்.வாழ்த்தும் பாராட்டும். இந்த கடைசி வரிகள் அருமையாய் இருக்கிறது தோழி.

nonin
15-01-2007, 11:13 AM
முதல் முயற்ச்சி பாராட்டத்தக்கது. எனினும் ஆண் வழி பார்வையில் பெண் கவிதை படைத்ததால் சொல்லவரும் பொருள் பிடிபடவில்லை.

பிச்சி
15-01-2007, 01:17 PM
முதல் முயற்ச்சி பாராட்டத்தக்கது. எனினும் ஆண் வழி பார்வையில் பெண் கவிதை படைத்ததால் சொல்லவரும் பொருள் பிடிபடவில்லை.

இல்லையே!!! இது பெண் வழிப் பார்வையில்தானே எழுதியிருக்கிறேன்....

பிச்சி
15-01-2007, 01:23 PM
பிரபா,

நீளமான கவிதை.அழகான வரிகள்.வாழ்த்தும் பாராட்டும். இந்த கடைசி வரிகள் அருமையாய் இருக்கிறது தோழி.

மிக்க நன்றி மீரா தோழி

பிச்சி
15-01-2007, 01:25 PM
உங்கள் கவிதை வரிகளையும் மிஞ்சிடும் வரிகள்..
அருமை.

வாழ்த்துக்கள்

மிக்க நன்றி....

பிச்சி
16-01-2007, 04:38 AM
அம்மா!

என் கருவிழியின்
நரம்புகளுக்குள்
திவலை கட்டிய நீரினைக்
கண்டு கண்டே
உயிர் பதறும்
மயிர் நிறைந்த இமைகள் நீ!

கண்களின் பாஷைகளை
கண்சிமிட்டியே
கற்றுக் கொடுத்து
நிலவோடும் மலரோடும்
இணைய வைத்த
திருப்புதல்வி நீ!

என் அறை முழுவதும்
சப்தமின்றி பரவிக் கிடக்கும்
இறைவனோடு கலந்த
ஒளிச் சிதறல் நீ!

மேகக் கூடலில்
வண்ணமில்லா, வன்மையில்லா
தூய்மையான மழைத்துளியின்
ஓர் துளி அணு நீ!

தன்மையும், மென்மையும்,
பெண்மையும், உண்மையும்
கலந்த இக் காலத்ததின்
பொருத்தமான காவியம் நீ!

ஆயிரம் கவிதைகள்
உள்ளடங்கிய
ஆற்றல் வைரத்தினைவிட
ஒப்பில்லா
திருக்குறள் நீ!

நிறமும், சுவையும்,
உயிரும், விலையும்,
இல்லா ஜடப் பொருள்களுக்கு
கண்ணசைவில் உயிர்கொடுக்கும்
பார்வதியும் நீ!

இந்த யுகங்களின்
தூய்மையான ராகமாகிய
தாலாட்டின் தாய்மை நீ!

மலர்ந்து, குலுங்கும்
பூக்களின் மகிழ்ச்சியில்
குதூகலிக்கும் புன்னகை நீ!

மேகக் கூட்டங்களில்
ஆழ்ந்துறங்கும்
வெண்மதியின் மடியமர்ந்து
என்னை உறங்கவைத்த
தியாக சொரூபி நீ!

பூ மொட்டுக்களை
பார்வைக் கணைகளால்
ஏற்றி, கனியாக்கம் செய்யும்
தென்றலின் தலைவி நீ!

எத்தனை தவமிருந்தும்
எத்தனை வரம் பெற்றும்
காணக் கிடைக்கா தெய்வமும்
கிடைக்கக் காணா வரமும் நீ!

(ஆயிரம் வருடங்கள்
தவம் செய்து, வரம் பெற்ற
ஞானியர் எவரும்
காணாத தெய்வம் நீ!)

ஒரு விழியில்
இரு விழியாக்கி
ஒரு உயிரினில்
இன்னுயிர் இட்டு
வலிபிடுங்க பிச்சியைப்
பெற்றெடுத்தவள் நீ!

ரம்மியமாக சப்தமிடும்
ரீங்கார வண்டுகளின்
சத்தத்தில்
பிச்சிப்பூ வரவேற்க
மெளனமே பாடலாய் பாடும்
இணையில்லா ராகத்தின்
முதல் வரி நீ!

பல வார்த்தைகள் அடங்கிய
ஈடில்லா கவிஞனின்
கவிதைக்குள்,
மறைமுகமாய்
மறைந்திருக்கும்
உட்கருத்து நீ!

சிறு சத்தத்தோடு ஒரு
முத்தம் நான் கொடுக்க,
உன் ரத்தத்தை பாலாக்கித்
தந்த ஸ்ரீதேவீ நீ!!

மல்லிகையும், ரோஜாவும்
இன்னும் உயிர் வாழ
கூந்தல் ஏற்றி சூட்டிக்கொள்ளும்
பூக்களின் கடவுள் நீ!!

தினமும் உன்னைத்
தொழவே எழுந்திடும்
சூரியனின்
தாயும் நீ!

ரதியென்ன, ரம்பையென்ன,
மூவுலகிலும் இணையில்லா
சொரூபவதியும் நீ!

கொத்தித் திரியும்
குயில்களின் விழிகள் ஒத்த
கண்களைக் கொண்ட
சீதையும் நீ!

விரிந்து ஆடும்
மயில்களின் தோகையும் விட
மென்மை கொண்ட
கரங்களை உடையவளும் நீ!


நீ யின்றி
இக்கவிதை இல்லை
நானில்லை
உலகில்லை,
மோட்சமில்லை,
ஆக, நீயின்றி கடவுளும் உளவோ?

farhan mohamed
16-01-2007, 06:47 AM
ரொம்ப ரொம்ப அருமை
உங்கள் கவிதைத் தொகுப்பு

தாயின் மகத்துவம்
கூடுகிறது உங்கள்
கவி நயத்தால்
தொடரட்டும்
கலைஞ்சனின்
படைப்புகள்
என்றும் அன்புடன் பர்ஹான்

இளசு
16-01-2007, 07:06 AM
தாய் -மகள் பாசத்தை
இத்தனை வலிமையாய்
இதற்கு முன் வாசித்ததில்லை..

சொல்லாட்சி அழகு என்றால்..
உள்ளுறை உண்மை பேரழகு.

மெய்சிலிர்த்தேன்..பிச்சி..
பாராட்டுகள்.

பிச்சி
16-01-2007, 07:14 AM
ரொம்ப ரொம்ப அருமை
உங்கள் கவிதைத் தொகுப்பு

தாயின் மகத்துவம்
கூடுகிறது உங்கள்
கவி நயத்தால்
தொடரட்டும்
கலைஞ்சனின்
படைப்புகள்
என்றும் அன்புடன் பர்ஹான்

பர்கான் அவர்களுக்கு மிக்க நன்றி. கலைஞ்சன் என்பதற்கு வேறேதாவது அர்த்தம் இருக்கிறதா?

பிச்சி
16-01-2007, 07:16 AM
தாய் -மகள் பாசத்தை
இத்தனை வலிமையாய்
இதற்கு முன் வாசித்ததில்லை..

சொல்லாட்சி அழகு என்றால்..
உள்ளுறை உண்மை பேரழகு.

மெய்சிலிர்த்தேன்..பிச்சி..
பாராட்டுகள்.

இளசு நிர்வாகிக்கு மிக்க நன்றி...

அறிஞர்
16-01-2007, 01:07 PM
அம்மா!
நீ யின்றி
இக்கவிதை இல்லை
நானில்லை
உலகில்லை,
மோட்சமில்லை,
ஆக, நீயின்றி கடவுளும் உளவோ?
அருமையான கவிதை வரிகள் பிச்சி....

அம்மாவிற்கு இணை உலகில் உண்டோ.

இன்னும் கொடுங்கள்..... தொடர்ந்து தங்கள் பதிவை கொடுங்கள்.

ஷீ-நிசி
16-01-2007, 01:34 PM
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு பிச்சி..

நான் பிச்சியின் ரசிகனாகிவிட்டேன்!!

அறிஞர்
16-01-2007, 01:38 PM
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு பிச்சி..

நான் பிச்சியின் ரசிகனாகிவிட்டேன்!!

உமக்கு நாங்க ரசிகர்கள்.. நீங்கள்... பிச்சியின் ரசிகனா..
ஒருவருக்கு ஒருவர் ரசிகர்கள் வாழ்த்துக்கள்..

ஷீ-நிசி
16-01-2007, 01:48 PM
ஆஹா, அறிஞரே உமக்கு மிக்க நன்றி

மதுரகன்
16-01-2007, 04:51 PM
பிச்சி எப்படி உம்மால் முடிகின்றது அற்புதம்..

ஆரம்பமே ரகளைதான்.. இப்படி ஒரு உவமையை ஒருசில தடவைகள்தான் என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்...
என் கருவிழியின்
நரம்புகளுக்குள்
திவலை கட்டிய நீரினைக்
கண்டு கண்டே
உயிர் பதறும்
மயிர் நிறைந்த இமைகள் நீ!

மயிர்நிறைந்த இமைகள் இதற்கு மேலும் என்ன சொல்ல வேண்டும்
இந்த ஒரு வரி போதாதா..?

எல்லாத்துறைகளிலும் உயர்ந்ததை உவமையாக்குகின்றீர்..
மேகக் கூடலில்
வண்ணமில்லா, வன்மையில்லா
தூய்மையான மழைத்துளியின்
ஓர் துளி அணு நீ!

ரம்மியமாக சப்தமிடும்
ரீங்கார வண்டுகளின்
சத்தத்தில்
பிச்சிப்பூ வரவேற்க
மெளனமே பாடலாய் பாடும்
இணையில்லா ராகத்தின்
முதல் வரி நீ!

பல வார்த்தைகள் அடங்கிய
ஈடில்லா கவிஞனின்
கவிதைக்குள்,
மறைமுகமாய்
மறைந்திருக்கும்
உட்கருத்து நீ!

உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது பிச்சி பின்வரும் வரிகளில்..
உயிர் பதறும்
மயிர் நிறைந்த இமைகள் நீ!

இறைவனோடு கலந்த
ஒளிச் சிதறல் நீ!

தினமும் உன்னைத்
தொழவே எழுந்திடும்
சூரியனின்
தாயும் நீ!



அற்புதம் கவிஞர்.பெருவுடை.பிச்சி அவர்களே...
உங்களை விமர்சிக்க நான் தகுதியற்றவன்
தொடருங்கள்...

paarthiban
17-01-2007, 04:35 PM
மிக மிக மிக நல்ல கவீதை. அம்மா என்ற சொல்லே ஒரு கவிதை அல்லவா.
கவிஞர் பிச்சிக்கு நானும் ரசிகன் ஆகிட்டேன்.

பிச்சி
18-01-2007, 12:26 PM
அருமையான கவிதை வரிகள் பிச்சி....

அம்மாவிற்கு இணை உலகில் உண்டோ.

இன்னும் கொடுங்கள்..... தொடர்ந்து தங்கள் பதிவை கொடுங்கள்.

மிக்க நன்றி...........

பிச்சி
18-01-2007, 12:30 PM
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு பிச்சி..

நான் பிச்சியின் ரசிகனாகிவிட்டேன்!!

ஆ!! எனக்கு ஒரு ரசிகரா? நன்றி அண்ணா!!

பிச்சி
18-01-2007, 12:34 PM
பிச்சி எப்படி உம்மால் முடிகின்றது அற்புதம்..

ஆரம்பமே ரகளைதான்.. இப்படி ஒரு உவமையை ஒருசில தடவைகள்தான் என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்...
என் கருவிழியின்
நரம்புகளுக்குள்
திவலை கட்டிய நீரினைக்
கண்டு கண்டே
உயிர் பதறும்
மயிர் நிறைந்த இமைகள் நீ!

மயிர்நிறைந்த இமைகள் இதற்கு மேலும் என்ன சொல்ல வேண்டும்
இந்த ஒரு வரி போதாதா..?

எல்லாத்துறைகளிலும் உயர்ந்ததை உவமையாக்குகின்றீர்..
மேகக் கூடலில்
வண்ணமில்லா, வன்மையில்லா
தூய்மையான மழைத்துளியின்
ஓர் துளி அணு நீ!

ரம்மியமாக சப்தமிடும்
ரீங்கார வண்டுகளின்
சத்தத்தில்
பிச்சிப்பூ வரவேற்க
மெளனமே பாடலாய் பாடும்
இணையில்லா ராகத்தின்
முதல் வரி நீ!

பல வார்த்தைகள் அடங்கிய
ஈடில்லா கவிஞனின்
கவிதைக்குள்,
மறைமுகமாய்
மறைந்திருக்கும்
உட்கருத்து நீ!

உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது பிச்சி பின்வரும் வரிகளில்..
உயிர் பதறும்
மயிர் நிறைந்த இமைகள் நீ!

இறைவனோடு கலந்த
ஒளிச் சிதறல் நீ!

தினமும் உன்னைத்
தொழவே எழுந்திடும்
சூரியனின்
தாயும் நீ!



அற்புதம் கவிஞர்.பெருவுடை.பிச்சி அவர்களே...
உங்களை விமர்சிக்க நான் தகுதியற்றவன்
தொடருங்கள்...

மிக மிக மிக நன்றி........ நான் உங்களைவிட ரொம்ப சிறறயவள். எனது கவிதை விளக்கத்திற்கு மிகவும் நன்றி... உங்கள் விமர்சனம் மிகவும் எதிர்பார்ப்பேன்.

பிச்சி
18-01-2007, 12:44 PM
மிக மிக மிக நல்ல கவீதை. அம்மா என்ற சொல்லே ஒரு கவிதை அல்லவா.
கவிஞர் பிச்சிக்கு நானும் ரசிகன் ஆகிட்டேன்.

இன்னுமொரு ரசிகரா??/ எனக்கு வெட்கம் இதயம் பிளக்கிறது.

பிச்சி
18-01-2007, 12:50 PM
மணம் தேடிக் காத்திருக்கும் மங்கை

இசைந்திடும் பாடலுக்கு ஏற்ப
வளைந்து நடனமிடும்
பூமித்தாயின் ஓர் மடியில்......
தொட்டு மலரும் பூக்களுண்டு
தொட்டு வெட்கும் இலைகளுண்டு
நான் எந்த வகை?
மெல்லத் திறவும் பூவாக
அதரங்கள் திறந்து
உதிரும் வார்த்தைகளைப்
பொறுக்க வேண்டும்
கவிதைக்காவே!

மெல்லிய கனவுகளோடு
பூப்பெய்திய நாள் முதல்
பூவுக்குள் வெடிச்சத்தம்
நாளூம்
கண்களின் துளிகள்
வருத்தமல்ல; ஆயினும்
பெண்கள் நாங்கள்
துயில் கொள்ள வேண்டுமே
காதலனின் மடி!

தெள்ளிய நீருக்குள்
முகம் பார்க்கலாம்
அகம் பார்க்க முடியுமா?
உரலுக்குள் அரைத்த மாவினில்
அரைந்துபோன கண்ணீர்த் துளிகள்
உரசலாலும் விரசலாலும்
நெருப்பாய் மாறிவிடும்.

நெருப்பு அழிவு;
வன்மை, கொடூரம்;
தீபம் அதுவல்ல.

தீபம் வேண்டிக் கேட்கிறேன்
என்றும் தீராத திரவத்துடன்.

அறிஞர்
18-01-2007, 02:08 PM
மங்கையின் குமுறல் சத்தம் காதில் கேட்கிறது......

மங்கையை மணம் கொள்ள காதலன் விரைவில் வருவானா.......

அருமை பிச்சி... தொடருங்கள்...
----
இந்த கவிதை இங்கு இருக்கட்டுமா... (நண்பர்கள் எண்ணங்களை கொடுத்தால் பண்பட்டவர் பகுதிக்கு மாற்றலாம்).

பிச்சி
18-01-2007, 02:21 PM
அறிஞர் மேற்பார்வையாளருக்கு,
எதற்காக பண்பட்டவர்கள் பகுதிக்கு மாற்றம் செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

ஷீ-நிசி
18-01-2007, 02:29 PM
தெள்ளிய நீருக்குள்
முகம் பார்க்கலாம்
அகம் பார்க்க முடியுமா?

நல்ல சிந்தனை அழகிய வரிகள் பிச்சி

பிச்சி
18-01-2007, 02:36 PM
தெள்ளிய நீருக்குள்
முகம் பார்க்கலாம்
அகம் பார்க்க முடியுமா?

நல்ல சிந்தனை அழகிய வரிகள் பிச்சி

மிக்க நன்றி ஷி அண்ணா!

மதுரகன்
18-01-2007, 03:54 PM
அற்புதம் பிச்சி
வகை வகையாய் கோலம் போடுகிறீர்கள்...
தமிழ் மன்றம் பெருமிதம் கொள்வதற்காய்...


வளைந்து நடனமிடும்
பூமித்தாயின் ஓர் மடியில்......
தொட்டு மலரும் பூக்களுண்டு
தொட்டு வெட்கும் இலைகளுண்டு
நான் எந்த வகை?

அற்புதமான வார்த்தைகள்
அற்புதமான கேள்வி...


தெள்ளிய நீருக்குள்
முகம் பார்க்கலாம்
அகம் பார்க்க முடியுமா?
உரலுக்குள் அரைத்த மாவினில்
அரைந்துபோன கண்ணீர்த் துளிகள்
உரசலாலும் விரசலாலும்
நெருப்பாய் மாறிவிடும்
ஏக்கத்தையும் நினைவுகளின் தேக்கத்தையும் உணர்விக்கிறீர் தெளிவாய்...

வாழ்த்துக்கள்... வளருங்கள்....

சில எழுத்துப்பிழைகளைத்திருத்துங்கள்...


மெல்லத் திறவும் பூவாக
அதிரங்கள் திறந்து
உதிரும் வார்த்தைகளைப்
பொருக்க வேண்டும்
கவிதைக்காவே!

பிச்சி
19-01-2007, 08:53 AM
மிக்க நன்றி மதுரகன்...
பிழைகள் கவனக் குறையால் வந்துவிட்டது. திருத்துவிட்டேன்

பிச்சி
19-01-2007, 09:00 AM
சோககீதம் இந்த பெண்ணோடு!

வெளூத்த பொழுதைக்
கழிக்க, குருவிக்
குஞ்சுகளுக்கும்
கனவுண்டு.
காதல் ஓலம் படைக்க
இந்தப் பெண்ணுக்கும்
நனவுண்டு

அண்ணாந்து பார்த்த
அந்த ஒரு நிமிடம்
ஆர்ப்பரிக்கும்
அலைகடலுக்கும்
ஒப்பாகாத பார்வை;
காதலிக்கும் வண்டின்
ரீங்கார சப்தத்திற்கும்
மாட்டாத ஓலக்குரல்;
விழித்து விழித்து
விழிகளில் கோலமிடும்
காந்தக் கண்கள்
இவை யாவற்றிற்கும்
தகுந்த உனது அம்மா!

சொல்லவே துடிக்கும்
இந்தப்பெண் கவிதையின்
எழுத்துகளுக்கு நிகரில்லை

தெவிட்டாத கூக்குரல்
தெளித்த இடமெங்கும்
எதிரொலிக்கும் கடலுக்கும்
எதிரான சக்தி கொண்டு
கேட்கிறது.
இயற்கையாய்
இறக்கை
இறந்துவிட்ட இவளுக்கு
இறவாத பறவை நீ!

சோகத்தில் கீதம் பாடும்
கவிதை படைக்கத் தெரியும்
இவளுக்கு. ஆனால்
பாடத் தெரியாது.

ஆதலால்
பாடு குயிலே; சோக கீதம்
இந்தப் பெண்ணோடு!
ராகமும், தாளமும் மாற்றி,
சோகமும், காதலும் ஏற்றி,
குயிலுக்கே உரிய பண்ணோடு.
பாடு நீ!
அந்த சூரியன் அழியும் வரை
வானம் சிவக்கும் வரை
அலைகள் ஓய்வெடுக்கும் வரை
நானும் சாயும் வரை.
பாடு கீதம்!!

பிச்சி
19-01-2007, 09:18 AM
சோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்

என்றும்
என்னிதயம் மகிழும்
உன் (காதலன்) சொற்கள்
இன்று
மெல்ல மெல்ல
அவிழ்கிறதே
இதயத்தின் மேலாடை.

தனிமரமாய்
தவித்து தவித்து
ஏங்கிய என்னை அள்ளிப்
பருகினாய் உள்ளத்தில்.
அள்ளியபின்
எள்ளிச் சிரிக்கிறாய்

என்னிடம் தீர்த்தம் தீர்ந்துவிட்டதா?
அமிழ்தம் அமிழ்துவிட்டதா?
அள்ளியபோது நிறைகண்டாய்
இன்று குறையே காணுகிறாயே!

வெட்கம் இன்று எனக்கு.
நீர் கோர்த்த வெட்கம்!
உன்னிடம்தான்
வெட்கத்தின் இருவகை கண்டேன்.

சிரிக்கும்போது
வெட்கும் கூடவே இருப்பாய்
அழும்போது நீ சிரிக்கிறாய்
என் துளிகள் எனக்கு ரத்தம்
உனக்கு தூசி..

பேனாக்கள் இன்று
கடைகின்றன
என் விழித்துளிகளை வைத்து
ஒரு சோகக் கவி.

அவையும் அழுகின்றன மையோடு
எனக்குமட்டும் தெரியும் வகையில்
உனக்குத் தெரிந்து நான் ஒரு பூக்கும் மரமா?
இல்லை பட்ட கரமா?
அழுகிறேன்; அழுகிறேன்;
அழுவதற்கு இனி
நீரின்றி உலர்ந்து போகிறது.
உன்னையே இன்றும் நினைக்கும்
என் விழிகள

ஷீ-நிசி
19-01-2007, 09:33 AM
நல்ல கவி பிச்சி..

சுட சுட எழுதிய கவிதையோ?!

பிச்சி
19-01-2007, 01:01 PM
சூரிய பூமி யுத்தம்

மத்தியில் ஆளும்
நித்திய சூரியனின் வீரர்கள்
போர்த் தொடுக்கச் செல்லுகிறார்கள்
பூமிக்கு.

கேடயம் வைத்துத் தடுக்கிறது
தடுக்க நினைக்கிறது
கேடு கெட்ட பூமி.

கேடு கெட்டதா?
எப்படி?

புகையும், புணர்வும்,
செயற்கை பிளாஸ்டிக்
கழிவுகளும்,
என்றாவது ஒருநாள்
பூமியையே மூடிவிடும்
பாலித்தீன் பைகளும்,
கேடயத்தின் கேடாய்
கேடு செய்கிறது.

வீழ்த்த முடியாமல் போனால்
எங்கே தொலையும் மனிதம்?
வெறும் நாட்டுப் போர்
கண்களுக்குத் தெரிகிறது
தெரியாமல்தான் போகிறது
சூரிய, பூமி யுத்தம்..

வேண்டாமெனச் சொல்லியும்
கதிரவனின் படைகள்
ஊடுருவல் செய்கிறதே
கண் நிறைந்த குழல்
காற்றைப் போல
மெல்ல மெல்ல
அழிக்கிறதே பனிகளை!

கேடயத்திலே ஓட்டை
நாடெதுவும் வேட்டை
இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றன
ஓசோனைக் காப்பாற்றுங்கள் எனும்
சில காகிதங்கள்...

புனையும் கவிதைகள்
மட்டுமா போருக்கு
மல்லுக்கட்ட?
நீல நிற வீரர்கள்
மல்லுக்கு நிற்க
இங்கே கறுப்பும் சிவப்புமாய்,
கவிதை எழுதிக் கொண்டிருக்கும்
மனிதம் மவுனம் காக்கிறதே
தன் அன்னையைக் காக்க...

ஜகத்தில் அழிவில்லாத (மனிதம்)
என்று ஆண்டவன் சொல்லுவான்
அதையும் அழித்து அழித்தே
ஆண்டவனைக் கேளுவான்
இன்னுமொரு பூமி.

வேண்டும் இறைவனிடம்
கேட்டேன்
இறைவ!
ஊடுறுவிய ஊதா வீரர்களை
எங்ஙனம் தடுப்பது?
இதயம் ஓட்டையானால்
தைக்கத்தான் தையல் உண்டு
நம் அன்னைக்கு ஒரு ஓட்டை (அன்னை - பூமி)
என்றால் என்னதான் உண்டு?

இறைவனும் சொல்லுவான்.
சந்ததி இனி சந்நிதியில்
கிடக்கட்டும்
இரைதின்னப் பாம்பாக
குறைகளைக் களையும் ஓய்!
குறை சொல்வது விட்டு

தொடரும்..........

அறிஞர்
19-01-2007, 01:06 PM
சோககீதம் இந்த பெண்ணோடு!

வெளூத்த பொழுதைக்
கழிக்க, குருவிக்
குஞ்சுகளுக்கும்
கனவுண்டு.
காதல் ஓலம் படைக்க
இந்தப் பெண்ணுக்கும்
நனவுண்டு

அண்ணாந்து பார்த்த
அந்த ஒரு நிமிடம்
ஆர்ப்பரிக்கும்
அலைகடலுக்கும்
ஒப்பாகாத பார்வை;
காதலிக்கும் வண்டின்
ரீங்கார சப்தத்திற்கும்
மாட்டாத ஓலக்குரல்;
விழித்து விழித்து
விழிகளில் கோலமிடும்
காந்தக் கண்கள்
இவை யாவற்றிற்கும்
தகுந்த உனது அம்மா!

சொல்லவே துடிக்கும்
இந்தப்பெண் கவிதையின்
எழுத்துகளுக்கு நிகரில்லை

தெவிட்டாத கூக்குரல்
தெளித்த இடமெங்கும்
எதிரொலிக்கும் கடலுக்கும்
எதிரான சக்தி கொண்டு
கேட்கிறது.
இயற்கையாய்
இறக்கை
இறந்துவிட்ட இவளுக்கு
இறவாத பறவை நீ!

சோகத்தில் கீதம் பாடும்
கவிதை படைக்கத் தெரியும்
இவளுக்கு. ஆனால்
பாடத் தெரியாது.

ஆதலால்
பாடு குயிலே; சோக கீதம்
இந்தப் பெண்ணோடு!
ராகமும், தாளமும் மாற்றி,
சோகமும், காதலும் ஏற்றி,
குயிலுக்கே உரிய பண்ணோடு.
பாடு நீ!
அந்த சூரியன் அழியும் வரை
வானம் சிவக்கும் வரை
அலைகள் ஓய்வெடுக்கும் வரை
நானும் சாயும் வரை.
பாடு கீதம்!!

பெண்ணின் சோக கீதம், மனதை கனக்க வைக்கிறது.

சோகத்தில் பாடத்தெரியாத குயில்.. அழகாய் கவிதை வடிக்கிறது..

இந்த குயில், ராகமும், தாளமும் மாற்றி, சோகமும், காதலும் ஏற்றி பாடினால் ரசிப்பர் பலர்.
---
அருமை பிச்சி.. தொடருங்கள்

மனோஜ்
19-01-2007, 01:54 PM
சோகத்தில் உள்ள பெண்
பிச்சி உங்களது கவிதையை வாசிக்கவில்லை போலிருக்கிறுது
வாசித்திருந்தால் ஆறுதலய் இருந்திருக்கும்
நன்று

பிச்சி
19-01-2007, 02:15 PM
பெண்ணின் சோக கீதம், மனதை கனக்க வைக்கிறது.

சோகத்தில் பாடத்தெரியாத குயில்.. அழகாய் கவிதை வடிக்கிறது..

இந்த குயில், ராகமும், தாளமும் மாற்றி, சோகமும், காதலும் ஏற்றி பாடினால் ரசிப்பர் பலர்.
---
அருமை பிச்சி.. தொடருங்கள்

மிக்க நன்றி..........

பிச்சி
19-01-2007, 02:15 PM
சோகத்தில் உள்ள பெண்
பிச்சி உங்களது கவிதையை வாசிக்கவில்லை போலிருக்கிறுது
வாசித்திருந்தால் ஆறுதலய் இருந்திருக்கும்
நன்று

நன்றி மனோஜோலெக்ஸ்

அறிஞர்
19-01-2007, 04:32 PM
சோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்

சோக கீதங்கள்.. எனத் தனித்தலைப்பிலே... எல்லா கவிதைகளையும் தொடர்ந்தால் நன்றாக இருக்குமே பிச்சி.. அதில் வரும் கருத்துக்களை பார்த்து, திருத்தி, தொகுத்து எதிர் காலங்களில் நூலாக வெளியிட உதவுமே...

சோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்

என்றும்
என்னிதயம் மகிழும்
உன் (காதலன்) சொற்கள்
இன்று
மெல்ல மெல்ல
அவிழ்கிறதே
இதயத்தின் மேலாடை.

தனிமரமாய்
தவித்து தவித்து
ஏங்கிய என்னை அள்ளிப்
பருகினாய் உள்ளத்தில்.
அள்ளியபின்
எள்ளிச் சிரிக்கிறாய்

என்னிடம் தீர்த்தம் தீர்ந்துவிட்டதா?
அமிழ்தம் அமிழ்துவிட்டதா?
அள்ளியபோது நிறைகண்டாய்
இன்று குறையே காணுகிறாயே!

ஆரம்பத்தில் இன்பமாக இருந்த அமிழ்தம்....
காலம் கடந்த பின் காதலனுக்கு நஞ்சாக மாறிவிட்டதோ.....

அருமை பிச்சி...



பேனாக்கள் இன்று
கடைகின்றன
என் விழித்துளிகளை வைத்து
ஒரு சோகக் கவி.

அவையும் அழுகின்றன மையோடு
எனக்குமட்டும் தெரியும் வகையில்
உனக்குத் தெரிந்து நான் ஒரு பூக்கும் மரமா?
இல்லை பட்ட கரமா?
அழுகிறேன்; அழுகிறேன்;
அழுவதற்கு இனி
நீரின்றி உலர்ந்து போகிறது.
உன்னையே இன்றும் நினைக்கும்
என் விழிகள கண்களின் கண்ணீர்..... கண்டு...
பேனாக்கள் மையாய் அழுகின்றன......
சோகக் கவிகளை.....

அருமையான அடுத்த சோகக் கவிகள்... வாழ்த்துக்கள் பிச்சி..

மதுரகன்
19-01-2007, 04:45 PM
பிச்சி ஒரே உணர்வுகளில் எத்தனை வகையான படையல்கள்
சிந்தனைகளை கச்சிதமாக கவிதையாக்குகிறீர்கள்
அற்புதமான திறமைதான்...


என்றும்
என்னிதயம் மகிழும்
உன் (காதலன்) சொற்கள்


நான் கேட்கமாடடேன் இந்த உணர்வுகளின் ஊற்றினை நானும் சற்று முற்போக்கு எண்ணமுள்ள கவிஞன் என்பதால்...


சிரிக்கும்போது
வெட்கும் கூடவே இருப்பாய்
அழும்போது நீ சிரிக்கிறாய்
என் துளிகள் எனக்கு ரத்தம்
உனக்கு தூசி..

பேனாக்கள் இன்று
கடைகின்றன
என் விழித்துளிகளை வைத்து
ஒரு சோகக் கவி.

அவையும் அழுகின்றன மையோடு
எனக்குமட்டும் தெரியும் வகையில்
உனக்குத் தெரிந்து நான் ஒரு பூக்கும் மரமா?
இல்லை பட்ட கரமா?
அழுகிறேன்; அழுகிறேன்;
அழுவதற்கு இனி
நீரின்றி உலர்ந்து போகிறது.
உன்னையே இன்றும் நினைக்கும்
என் விழிகள்

இன்னமும் சின்னச்சின்ன உணர்வுகளை கவிப்படுத்துங்கள்..
கவிதை மேலும் மெருகேறும்...

வாழ்த்துக்கள்
முயற்சி செய்யுங்கள் முன்னேறுங்கள்...

மதுரகன்
19-01-2007, 05:43 PM
வெற்றிகரமாக தொடர்கிறீர்கள் பிச்சி
வாழ்த்துக்கள்...
என்னைக்கவர்ந்த வரிகள்...

அண்ணாந்து பார்த்த
அந்த ஒரு நிமிடம்
ஆர்ப்பரிக்கும்
அலைகடலுக்கும்
ஒப்பாகாத பார்வை;
காதலிக்கும் வண்டின்
ரீங்கார சப்தத்திற்கும்
மாட்டாத ஓலக்குரல்;
விழித்து விழித்து
விழிகளில் கோலமிடும்
காந்தக் கண்கள்
இவை யாவற்றிற்கும்
தகுந்த உனது அம்மா!

ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் ஒப்பாகாத பார்வையா அப்பப்பா..

முயன்றுபாருங்கள் முன்னேறுங்கள்....

தொடர்ந்து சோகம் வேண்டாமே
இடையிடையே சுகமான கவிதைகளையும் கொடுங்கள்

மதுரகன்
19-01-2007, 05:47 PM
அருமை பிச்சி
நேரமின்மையால் விமர்சிக்கவில்லை
நாளை என் விமர்சனத்தை எதிர்பாருங்கள்...

முயன்றுபாருங்கள் முன்னேறுங்கள்...

பிச்சி
20-01-2007, 03:46 AM
நிச்சயமாக... உங்கள் விமர்சநத்திற்குபின் எனது மீதி கவிதை.

பிச்சி
20-01-2007, 03:47 AM
உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி

மதுரகன்
20-01-2007, 05:38 PM
சூரிய பூமி யுத்தம்
தலைப்பே புதுமையாய் உள்ளதே..


மத்தியில் ஆளும்
நித்திய சூரியனின் வீரர்கள்
போர்த் தொடுக்கச் செல்லுகிறார்கள்
பூமிக்கு.
வார்த்தைகள் கையாளலின் லாவகம் உங்களுக்கு அற்புதமாக வசப்பட்டுள்ளது... நித்திய சூரியன்...
ஆனால் சூரியனுக்கும் ஆயுள் உள்ளதே..


கேடயம் வைத்துத் தடுக்கிறது
தடுக்க நினைக்கிறது
கேடு கெட்ட பூமி.
முதலில் பூமியால் தடுக்க முயலுமா..?


கேடு கெட்டதா?
எப்படி?

புகையும், புணர்வும்,
செயற்கை பிளாஸ்டிக்
கழிவுகளும்,
என்றாவது ஒருநாள்
பூமியையே மூடிவிடும்
பாலித்தீன் பைகளும்,
கேடயத்தின் கேடாய்
கேடு செய்கிறது.
அடடா சூழல் பிரச்சினையை கருத்தில் எடுக்கிறீர்கள்


வீழ்த்த முடியாமல் போனால்
எங்கே தொலையும் மனிதம்?
வெறும் நாட்டுப் போர்
கண்களுக்குத் தெரிகிறது
தெரியாமல்தான் போகிறது
சூரிய, பூமி யுத்தம்..
உங்கள் சிந்தனைக்கு ஒரு ஓ..


வேண்டாமெனச் சொல்லியும்
கதிரவனின் படைகள்
ஊடுருவல் செய்கிறதே
கண் நிறைந்த குழல்
காற்றைப் போல
மெல்ல மெல்ல
அழிக்கிறதே பனிகளை!
அடடா பனித்துளிகளை கதிரவன் அழிப்பதை பார்த்து வருந்தினால் நிறைய பயன்களை இழக்க வேண்டி வரலாம்..


கேடயத்திலே ஓட்டை
நாடெதுவும் வேட்டை
இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றன
ஓசோனைக் காப்பாற்றுங்கள் எனும்
சில காகிதங்கள்...
இந்த வார்த்தைகள் வெறும்வார்த்தைகளாக எத்தனை நாள்தாம் தாளில் உறங்குவது...


புனையும் கவிதைகள்
மட்டுமா போருக்கு
மல்லுக்கட்ட?
நீல நிற வீரர்கள்
மல்லுக்கு நிற்க
இங்கே கறுப்பும் சிவப்புமாய்,
கவிதை எழுதிக் கொண்டிருக்கும்
மனிதம் மவுனம் காக்கிறதே
தன் அன்னையைக் காக்க...
வரிகளில் வியக்கிறேன் அற்புதம்..


ஜகத்தில் அழிவில்லாத (மனிதம்)
என்று ஆண்டவன் சொல்லுவான்
அதையும் அழித்து அழித்தே
ஆண்டவனைக் கேளுவான்
இன்னுமொரு பூமி.

வேண்டும் இறைவனிடம்
கேட்டேன்
இறைவ!
ஊடுறுவிய ஊதா வீரர்களை
எங்ஙனம் தடுப்பது?
இதயம் ஓட்டையானால்
தைக்கத்தான் தையல் உண்டு
நம் அன்னைக்கு ஒரு ஓட்டை (அன்னை - பூமி)
என்றால் என்னதான் உண்டு?

இறைவனும் சொல்லுவான்.
சந்ததி இனி சந்நிதியில்
கிடக்கட்டும்
இரைதின்னப் பாம்பாக
குறைகளைக் களையும் ஓய்!
குறை சொல்வது விட்டு

வாழ்த்துக்கள்
முயன்றுபாருங்கள் முன்னேறுங்கள்...

மதுரகன்
20-01-2007, 05:38 PM
மேலும் நிறைய எதிர்பார்க்கிறோம் தொடருங்கள் பிச்சி..

பிச்சி
21-01-2007, 03:23 AM
மிக்க நன்றி மது... என் எல்லா கவிதைகளையும் கவனிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...........

இளசு
21-01-2007, 10:47 AM
பாராட்டுகள் பிச்சி..

கண்ணீரே உப்பாய்
கண்ணீரே நெருப்பாய்..

கனன்ற கனலை
கவிதையாக்கிய வன்மைக்கு பாராட்டுகள்..

குலமாதர் யாரும் தனியாக வாடும்
நிலை என்றும் இல்லை மறவாதே..

அசரீரீயாய் கவியரசின் வரிகள்..
ததாஸ்து சொல்லியும் தப்பிப்போன குமரிகள்..

பாடுபொருளின் 'வயதை' எண்ணி அறிஞரின் ஆலோசனை.
மூடுபொருளில் சொன்னதால் இங்கேயும் இருக்கலாம்..

இளசு
21-01-2007, 11:00 AM
இனிமையும் சோகமும்
இழப்பும் படைப்பும்
இணைந்தே இருப்பது ஏன்?

அக்கக்கோ எனும் கீதம்...
சோகமான சுகராகம்..

-----------------------------------

பாராட்டுகள் கவிஞர் பிச்சி.

இளசு
21-01-2007, 11:09 AM
விண்ணுக்கு மேலாடை ?

சுரதாவின் உவமை விளையாட்டு அது...


இதயத்தின் மேலாடை?

வெட்கம்...

பிச்சியின் அழகான உவமை விளையாட்டு இது..


நிஜமேலாடை விலக்க கரங்கள்..
இதயமேலாடை விலக்க சொற்கள்...


சொற்கள்...
ஆண்வேட்டையனின் கவண்கற்கள்..

பாலகுமாரன் சொல்வார்:

கண்ணெதிரே தோன்றினாள்
கனிமுகத்தைக் காட்டினாள்...

இது ஆணின் ஆரம்பம்...

பின்னர், அனைத்தையும் அவிழ்த்துக்காட்டு எனச் சொல்லப்போவதன் கட்டியம்..

காதல் இல்லாத காமுகன் கவண் - கொலைப்பொறி..
காதல் கலந்துவிட்டாலோ - இதுதான் ஆண்-பெண் வாழ்வு நெறி..

காமம் தீர்ந்தபின்னும்
காதல் இருந்துவிட்டால்
சிக்கல்கள் இல்லை..

சிக்கலே,
பந்திவைக்குமுன் வந்தவன்
ஒரு பசிக்காரனா, இரு பசிக்காரனா
பிரித்தறிய இயலா பேதமைதான்..

பந்தியில் வைத்தது இதயமாய் இருந்தாலும்..

இளசு
21-01-2007, 11:25 AM
பாராட்டுகள் பிச்சி.

புற ஊதாக்கதிர்கள்
ஓசோன் படுகையில் ஓட்டை
மக்காக் குப்பைகள்..
'பச்சைவீடு' - (வெப்பவீடு) நிகழ்வு..

நல்ல கவிதை...


புதுவையை அடுத்த பிள்ளையார்குப்ப கிராம இளைஞர்கள்
இந்த புத்தாண்டில் பிளாஸ்டிக் இல்லா கிராமம் ஆக்க
சின்ன ஊசியைக் கையில் எடுத்திருக்கிறார்கள்..

ஊசிகள் பல்கட்டும்..ஓட்டைகள் குறுகி மறைய..


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7634
இங்கே சூரியனை இன்னொரு நிலவாக்கி
ஆதவா சில ஒப்பந்தங்களுக்கு அழைக்கிறார்:

ஷீ-நிசி
21-01-2007, 11:53 AM
உங்கள் சோகத்தை பேனாவில் ஊற்றி எழுதியிருக்கிறீர்கள்.. அது போதாதென்று தன் பங்கிற்கு, கவிதை எழுதின பேனாவும் தன் கண்ணீரை கொட்டியிருக்கிறது... ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள். பிச்சி கவிதையில் நல்ல வளர்ச்சி கண்டுகொண்டு வருகிறீர்கள்

வாழ்த்துக்கள்

பிச்சி
22-01-2007, 12:16 PM
இளசு அண்ணாவுக்கும் ஷீ அண்ணாவுக்கும் மிக்க நன்றி....
இளசு அண்ணன் அருமையாய் எழுதியிருக்கிறார்

பிச்சி
22-01-2007, 12:20 PM
நன்றிக்கள் கோடி மதுரகன் மற்றும் இளசு அண்னன் அவர்களுக்கு... படிப்பு வேலைகள் இருப்பதால் மீண்டும் பிறகு தொடர்ந்து எழுதுகிறேன்... ஆதவாவின் இன்னொரு நிலவை திரும்ப படிக்கிறேன்....

பிச்சி
22-01-2007, 12:21 PM
மிக்க நன்றி இளசு அண்ணா!

பிச்சி
22-01-2007, 12:22 PM
பாடுபொருளின் 'வயதை' எண்ணி அறிஞரின் ஆலோசனை.
மூடுபொருளில் சொன்னதால் இங்கேயும் இருக்கலாம்..

எனக்கு புரியவில்லை அண்ணா!!! மீண்டும் விளக்குங்கள்....

பிச்சி
22-01-2007, 12:25 PM
அரவாணிகளை நாம் ஒதுக்குகிறோமே!!

வீணைக் கம்பிகளின்
ஒலிவழியே சென்று
இசையாகி மலர்ந்த
ஓர் ராகத்தை
சீ! வேண்டாமென
சொல்லி ஒதுக்கினோம்

மண் வழியே ஊர்ந்து
விதையாகி, இலையாகி,
மரமாகி கனியாவதற்குள்
சீ! இந்த பழம் புளிக்கும்
என வீசி எறிந்தோம்

நத்தையை அழகென்று
எண்ணி கைகளில் சேர்த்து
ஊரும் வலியை மனதில்
வேறு விதமாய் நினைத்து
சீ! என்று வீசியெறிந்தோம்

பூவழகு, புனையழகு
என்று பூவைச் சுவைத்து
பல கவிதை சொல்லி
கனியழகு கனிச் சுவையழகு
என்று கொறித்து மகிழ்ந்தோம்
சீ! என்று ஒதுக்கி விட்டோம்
பூவுக்கும் கனிக்கும்
இடைப்பட்ட காயை!

வேல்விழியும் மான் தலையும்
பால் முகமும் பருத்தித் தோலும்
நால் குணமும் நல்லுயர்வும்
பெற்ற ஒருவரை
வணங்குகின்றோம்
சீ! என்று பார்க்காது போகிறோம்
மேற்சொன்ன
குணம் இருந்தும் இருக்காதவரை!

சில நேரங்களில்
அமீபாவாய் உருமாரும்
மனிதர்களின் ரூபமற்ற
அகத்தினை
சீ! என்று என்றாவது
சொல்கிறோமா?

மனோஜ்
22-01-2007, 12:50 PM
பிச்சி அவர்களே கவிதையை
பிச்சு பிச்சு வக்கிறிங்க
அறுமை...

ஷீ-நிசி
22-01-2007, 01:07 PM
பூவழகு, புனையழகு
என்று பூவைச் சுவைத்து
பல கவிதை சொல்லி
கனியழகு கனிச் சுவையழகு
என்று கொறித்து மகிழ்ந்தோம்
சீ! என்று ஒதுக்கி விட்டோம்
பூவுக்கும் கனிக்கும்
இடைப்பட்ட காயை!

அருமையான வரிகள்

அரவாணிகளை இந்த சமுதாயம் எப்படி பார்கிறது என்பதை இந்த சமூகம் அறியும்.

சிலர் பிறப்பால், சிலர் வளர்ப்பால், அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும்.

மதுரகன்
22-01-2007, 05:47 PM
அரவாணிகளினை ஒதுக்குவதை கண்டிக்கிறீர்கள்..
அதுவும் அருமையான வரிகளுடன்..

வீணைக் கம்பிகளின்
ஒலிவழியே சென்று
இசையாகி மலர்ந்த
ஓர் ராகத்தை
சீ! வேண்டாமென
சொல்லி ஒதுக்கினோம்

இசையாகி மலர்ந்த ஓர் இராகம்
அற்புதமான வார்த்தைகள்..
வாழ்த்துக்கள் பிச்சி..

இளசு
22-01-2007, 10:43 PM
மன ஊனம் உள்ளவர்கள்
பிறப்பூனம் பெற்றவர்களை
உதாசீனம், இழிவு, வன்கொடுமை செய்-வதை
உண்மைக் கரிசனத்தோடு கண்டிக்கும் கவிதை..

பிச்சியின் மனிதநேயப்பார்வைக்குப் பாராட்டுகள்..

பூ, கனி, செங்காய் - இதெல்லாம் இருக்கட்டும்..
ஓர் உயிராய், சக மனிதராய் நேசமதிப்பாவது இருக்கட்டும்..

பிச்சி
23-01-2007, 09:08 AM
உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி........ போதுமான நேரமில்லாததால் மற்றவரது கவிதை படிக்க முடியவில்லை...... மன்னிக்கவும்

பிச்சி
23-01-2007, 09:08 AM
மரத்தில் அமர்ந்த பறவை

புன்னை மரத்தின் ஒரு கிளை......
பனி ஒரு மன்மதன்.
அஃறிணை மனிதர்களுக்கும்
உயர்திணை மிருகங்களுக்கு..
நெடுமழை ஒரு அப்பாவி..
யாருக்குத் தருவது
யாருக்குத் தரக்கூடாது என
அறியாத சிறுபயல்..
இவர்களின் மோகத்தில்
ஒரு குடும்பமாய் புன்னை மரம்.
இங்கே செவியில்லை; விழியில்லை;
நுதல்வதற்கோ நாவில்லை
ஆக பயமில்லை....
தேகம் சிரிக்க, கரங்கள் குலுங்குகின்றன..
பிஞ்சு விரல்களில் முளைத்துவிட்ட
சின்னஞ்சிறு நுனிகளின்
தங்கிய நீரோ வருத்தமாய் பிரிகிறது..
நுனியும் நீரும் கொண்ட காதல்
எனக்குத் தெரியாதா?
மெல்ல மெல்ல கார்பன்-டை-ஆக்ஸைடு
தீண்டிப் பார்க்கிறது, அது
நோண்டிய சிலுசிலுப்பில்
சிலிர்த்துப் போய்
என்னை வரவேற்கிறது கரங்கள்.
இறகுகளின் படபடப்பில்
இவனுக்கும் ஓர் விசிறிதான்
முகத்தில் அறைந்த காற்றாய்,
காதலாய், இவன் தழும்புகள்
என் இறகின் மென்மையையும் விட
மேலும் மெருகாகும்..
என் அலகின் முத்தத்தில்
இவன் அழகு கூடும்
வந்தமர்கிறேன் இவன் மடியில்
நுனியிலே விரல் விட்ட காதலை
நான் தொடர்கிறேன்...

இவன் எனச் சொன்னது.... புன்னை மரம்......

மனோஜ்
23-01-2007, 09:12 AM
அருமையான வரிகள்
பிச்சி அவர்களே

பிச்சி
23-01-2007, 09:17 AM
மிக்க நன்றி மனோஜ்...

ஷீ-நிசி
23-01-2007, 09:54 AM
புன்னை மரத்திற்கு கூட கவி எழுத முடியுமா?
ஆச்சரியபடுத்துகிறீர்கள் தங்கையே!
அழகான கவிதை.

பிச்சி
23-01-2007, 12:13 PM
நன்றி,,,,,,,,,,,,,,, உங்கள் பெயர்

ஷீ-நிசி?
ஷீ என்றால் கடல்
நிசி என்றால் நிசித்தல்

கடல் குடித்தவன்??
கடலரசன்?
ஆழிவேந்தன்/?

ஷீ-நிசி
23-01-2007, 02:05 PM
நன்றி,,,,,,,,,,,,,,, உங்கள் பெயர்

ஷீ-நிசி?
ஷீ என்றால் கடல்
நிசி என்றால் நிசித்தல்

கடல் குடித்தவன்??
கடலரசன்?
ஆழிவேந்தன்/?

இந்தப் பெயருக்கு இப்படி ஒரு விளக்கமா???

என் பெயர் அற்புதராஜ் பிச்சி.

gragavan
23-01-2007, 02:37 PM
ரசிக்க முடிகிறது. நாமும் ஒரு புன்னையான் மாறி. சிலிர்க்க முடிகிறது. நாமும் மழையில் நனைந்து. சொட்டுத் துளி இலையை விட்டுப் பிரியப் போகும் வலி காட்சியாய் மனக்கண்ணில் விரிகிறது.

பிச்சி
23-01-2007, 02:49 PM
மிக்க நன்றி ராகவன் சார்.

pradeepkt
23-01-2007, 04:56 PM
எந்த பாலின வகையில் மட்டும் சாராதவர்களை ஒதுக்குபவர்களைச் சாடுகிறதா கவிதை? அது மட்டும் ஊனமில்லையே!!!

என் பார்வையில் இதை மனதால் மற்றோரை ஒதுக்கும் ஊனம் கொண்டவர்கள் மீது பரிதாபம் கூடத் தெரிகிறது. ஆனாலும் முதல் சில வரிகளில் சில குழப்பங்கள் மிகுவதாகத் தெரிகிறது. மொத்தமாகக் கவிதை ஏதாவது ஒரு கருத்தைச் சுற்றி வருகிறதா என்று விளக்குங்களேன் பிச்சி!

ஆதவா
23-01-2007, 05:00 PM
எந்த பாலின வகையில் மட்டும் சாராதவர்களை ஒதுக்குபவர்களைச் சாடுகிறதா கவிதை? அது மட்டும் ஊனமில்லையே!!!

என் பார்வையில் இதை மனதால் மற்றோரை ஒதுக்கும் ஊனம் கொண்டவர்கள் மீது பரிதாபம் கூடத் தெரிகிறது. ஆனாலும் முதல் சில வரிகளில் சில குழப்பங்கள் மிகுவதாகத் தெரிகிறது. மொத்தமாகக் கவிதை ஏதாவது ஒரு கருத்தைச் சுற்றி வருகிறதா என்று விளக்குங்களேன் பிச்சி!

எதுக்கு வம்புன்னு பேயாம இருக்கம்..... பிச்சிக்கே வெளிச்சம்

மதுரகன்
23-01-2007, 05:06 PM
இங்கே செவியில்லை; விழியில்லை;
நுதல்வதற்கோ நாவில்லை
ஆக பயமில்லை....

சின்னஞ்சிறு நுனிகளின்
தங்கிய நீரோ வருத்தமாய் பிரிகிறது..
நுனியும் நீரும் கொண்ட காதல்
எனக்குத் தெரியாதா?

எனக்குப்பிடித்த வரிகள் மேலே
புலன்களினால்தான் பயம் உண்டாகின்றது என்பதையும்
மறைபொருளாக கொடுத்துள்ளீர்கள்..

புல்நுனியும் பனித்துளியும்
எந்தக்காலத்திலும் வற்றாத கவிதைகளை தோற்றுவிக்கவல்ல கன்னித்தன்மை
உடையவை.
நானும் எத்தனையோ இடங்களில் இவற்றை பயன்படுத்தி கவியெழுதி இருக்கிறேன்..
உங்களுடையது சற்றே வித்தியாசமாய்..
வாழ்த்துக்கள்...

பென்ஸ்
23-01-2007, 06:48 PM
பிச்சி...
கையை கொடுமா...
அருமை...
உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன் பிச்சி.... ஆனால் விமர்சிக்க எனக்கு நேரம் கிடைக்காததால் வாசித்து மட்டும் சென்று விட்டேன்... மீண்டும் வந்து இந்த ஒரு பதிலாவது கண்டிபா கொடுக்கனும் , இல்லைனா உறக்கம் வராது என்று இங்கு பதிக்கிறேன்....
இந்த பணி சுமையுலும் மன்றம் வந்து நீங்கள், ஆதவா, ஷீ, மதுரகன், நோனின், லெனின் இன்னும் இன்னும் மன்ற கவிகளின் கவிதையை வாசிக்க வைக்கும் வசீகர எழுத்துகள்....
போறாமை தோன்றும்...
அது ஏனோ உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது இசையும் வருதே.. மனக்கம்பிகளை உங்கள் கவிதைகள் சுட்டுவதாலோ????

தொடருங்கள்...
குறிப்பு: எனக்கும் புன்னை மரத்திற்க்கு பல அன்பான நினைவுகள் உண்டு... மீண்டும் என்னை என் கடந்த காலத்திற்க்கு கொண்டு சென்ரு வந்தமைக்கும் நன்றி...

இளசு
24-01-2007, 12:03 AM
மரத்தை ஆணாய்
வந்தமரும் பறவையைப் பெண்ணாய்..

மன உறவுகள் எப்படி இருக்கவேண்டும் என என்
மனதில் நெடுநாள் உருவகம் இது..

வலிய வந்தமரவேண்டும் - பிரிந்தாலும்
வலிக்காமல் சுதந்திரமாய் விலகவேண்டும்...

புன்னையைச் சகோதரியாய்ச் சொன்ன அகநானூறு
புன்னை வனத்தில் சிவகாமி முகம் தொட்டு
எண்ணத்தைச் சொன்ன நரசிம்ம பல்லவன்..

இப்படி புன்னை பற்றிய நினைவுகள் உண்டு..


இன்னொரு புன்னை நினைவை என்னுள் சேர்த்த
இனிய கவிதை தந்த பிச்சிக்கு நன்றி..

பிச்சி
24-01-2007, 08:05 AM
என் பிரிவு (இலையுதிர்வு)

உனக்கும் எனக்குமான
ஓர் பந்தம்;
நிரந்தரமற்றது.
யாவரின் பிறப்பைப் போல்
கொப்பூள் கொடியோடு
பிறக்கிறேன்.
என் பிறப்பிலிருந்து
இறப்புவரை
அது நீங்குவதில்லை
என்னை விட்டு.
என் நரம்புகள்
ரேகையாக எங்கும் படர
தேகமெல்லாம் ஓவியங்கள்;
செயற்கைக் காகிதங்களை விட
வலிமையான இழைகளான
பெட்டகங்களே என் குறிப்புகள்;
வர்ணத்திலும், வாழ்க்கையிலும்
இயற்கையாகவே
இருந்துவிட்டேன்.
நான் இறப்பதற்கு சற்று
முந்தய நாளில்
என் கொப்பூள் கொடி அறுப்பாய்!
நான் வீழ்ந்திடுவேன் கோபமாய்!
மெல்ல மெல்ல
மெளனராகமாய்
அங்குமிங்கும் அலைந்து
என் கீதங்கள் யாரின்
செவிக்கும் எட்டாதவாறு
மண்ணில் கலந்திடுவேன்..
இறந்துபோகும் யாருக்கும்
மண்ணே வீடு.
உன்னைவிட்டு விழுந்த போதும்
நீயே எனக்கு சுவர்க்கம்.
என் உதிர்வுகள்
ஒவ்வொருநாளும் நடக்கின்றன.
ஒரு சாதாரண மழையைப்போல....

Narathar
24-01-2007, 11:52 AM
அருமையான கற்பனை......................
ஒரு கனம் நான் இலையாய் ஆனேன்..........

பிச்சி
24-01-2007, 12:12 PM
மிக்க நன்றி நாரதர்...

பிச்சி
24-01-2007, 12:18 PM
எனக்குப்பிடித்த வரிகள் மேலே
புலன்களினால்தான் பயம் உண்டாகின்றது என்பதையும்
மறைபொருளாக கொடுத்துள்ளீர்கள்..

புல்நுனியும் பனித்துளியும்
எந்தக்காலத்திலும் வற்றாத கவிதைகளை தோற்றுவிக்கவல்ல கன்னித்தன்மை
உடையவை.
நானும் எத்தனையோ இடங்களில் இவற்றை பயன்படுத்தி கவியெழுதி இருக்கிறேன்..
உங்களுடையது சற்றே வித்தியாசமாய்..
வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி மதுரகன்.

பிச்சி
24-01-2007, 12:20 PM
பிச்சி...
கையை கொடுமா...
அருமை...
உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன் பிச்சி.... ஆனால் விமர்சிக்க எனக்கு நேரம் கிடைக்காததால் வாசித்து மட்டும் சென்று விட்டேன்... மீண்டும் வந்து இந்த ஒரு பதிலாவது கண்டிபா கொடுக்கனும் , இல்லைனா உறக்கம் வராது என்று இங்கு பதிக்கிறேன்....
இந்த பணி சுமையுலும் மன்றம் வந்து நீங்கள், ஆதவா, ஷீ, மதுரகன், நோனின், லெனின் இன்னும் இன்னும் மன்ற கவிகளின் கவிதையை வாசிக்க வைக்கும் வசீகர எழுத்துகள்....
போறாமை தோன்றும்...
அது ஏனோ உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது இசையும் வருதே.. மனக்கம்பிகளை உங்கள் கவிதைகள் சுட்டுவதாலோ????
..

கைகொடுத்துவிட்டேனே!! அவதாரில்........... மிக்க நன்றி..
இதுபோதும் அப்படியே பறந்துவிடலாம்........

பிச்சி
24-01-2007, 12:21 PM
மரத்தை ஆணாய்
வந்தமரும் பறவையைப் பெண்ணாய்..

மன உறவுகள் எப்படி இருக்கவேண்டும் என என்
மனதில் நெடுநாள் உருவகம் இது..

வலிய வந்தமரவேண்டும் - பிரிந்தாலும்
வலிக்காமல் சுதந்திரமாய் விலகவேண்டும்...

புன்னையைச் சகோதரியாய்ச் சொன்ன அகநானூறு
புன்னை வனத்தில் சிவகாமி முகம் தொட்டு
எண்ணத்தைச் சொன்ன நரசிம்ம பல்லவன்..

இப்படி புன்னை பற்றிய நினைவுகள் உண்டு..


இன்னொரு புன்னை நினைவை என்னுள் சேர்த்த
இனிய கவிதை தந்த பிச்சிக்கு நன்றி..



உங்கள் நெடு விமரிசன்ம் அருமையா இருந்தது,. புன்னைமர நினைவுகள் பலருக்குத் தந்ததில் பெருமை அடைகிறேன்.

பிச்சி
24-01-2007, 12:25 PM
எந்த பாலின வகையில் மட்டும் சாராதவர்களை ஒதுக்குபவர்களைச் சாடுகிறதா கவிதை? அது மட்டும் ஊனமில்லையே!!!

என் பார்வையில் இதை மனதால் மற்றோரை ஒதுக்கும் ஊனம் கொண்டவர்கள் மீது பரிதாபம் கூடத் தெரிகிறது. ஆனாலும் முதல் சில வரிகளில் சில குழப்பங்கள் மிகுவதாகத் தெரிகிறது. மொத்தமாகக் கவிதை ஏதாவது ஒரு கருத்தைச் சுற்றி வருகிறதா என்று விளக்குங்களேன் பிச்சி!

பிரதீப் அண்னாவுக்கு..........

அரவாணிகளை நாம் எந்த ஒரு பொதுஇடத்தில்கூட சேர்த்துவது இல்லை,. அவர்களை பார்க்கும்போது எல்லாம் சீ! என்று நாம் கருதுகிறோம். உங்களுக்கு எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.. யாராவது உதவி செய்தால் போதும்.. கவிதையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்..

பிச்சி
24-01-2007, 12:26 PM
எதுக்கு வம்புன்னு பேயாம இருக்கம்..... பிச்சிக்கே வெளிச்சம்

பேசாம இருந்தீங்கனா எப்படி?

பென்ஸ்
24-01-2007, 12:49 PM
பிச்சி...
சில கவிதைகளை படிக்கும் போது , எழுத்தாளர்களின் மன அலைவரிசை எவ்வாறு பல சமயங்கலில் ஒத்து போகிறது என்பது புரியும்...
****/என் கொப்பூள் கொடி அறுப்பாய்!
நான் வீழ்ந்திடுவேன் கோபமாய்!
மெல்ல மெல்ல
மெளனராகமாய்
அங்குமிங்கும் அலைந்து
******/
இந்த வரிகள் என்னுல் பலமுறை வந்து போவதுன்டு...

மன்றத்து கவிஜர்கள் பலர் இந்த உதிர்தலை இங்கு பேசியும் இருக்கிறார்கள்... கரு வேறகினும்... வேகம் அப்படியே இன்னும் குறையாமல்...
உதிர்தல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5686&page=2) என்று கவிதா ஒரு கவிதை எழுதி இருந்தார், அதில் நண்பன் மற்றும் நண்பர்கள் விமர்சனத்தை பாருங்கள், அருமையாக இருக்கும்...

பிச்சி.... பிச்சி பூவுக்கு எந்த ஊர் பிரபலம் தெரியுமா????:D :D

மன்றத்தில் பிச்சியின் வாசம் அருமையாக இருக்கிறது.... தொடருங்கள்...:) :)

பிச்சி
24-01-2007, 02:19 PM
முதலில் நான் அந்த கவிதை படிக்கும்போது எனக்கு அந்த நினைவுகள் தோன்றவில்லை.. நண்பன் அவர்கள் நன்றாக ஆராய்ந்துள்ளார். அவர்களெல்லாம் இப்போது வருவதில்லையா?
பொதுவாக ஆண்கள் இப்படி நினைப்பார்கள் என்று நினைக்கிறேன். அதாவது எழுதியது பெண்கள் என்றால் அதன் வரிகளில் பெண்மை இருக்கும் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்ன்... நானும்கூட அப்படித்தன். எழுதிய கவிதை பெண்களின் பார்வையில் இருந்தாலும் ஆண் எழுதியிர்ந்தால் எனக்கு ஒட்டுவதே இல்லை....

உதாரணமாக என்னுடைய கவிதைக்கு சிலர் 'அந்த விளக்கம் அளித்தனர்..
அவர்களின் கவிதை ஆராய்ச்சி அப்படிப்பட்டது.

இதுதான்:

மெல்லிய கனவுகளோடு
பூப்பெய்திய நாள் முதல்
பூவுக்குள் வெடிச்சத்தம்
நாளூம்
கண்களின் துளிகள்
வருத்தமல்ல; ஆயினும்
பெண்கள் நாங்கள்
துயில் கொள்ள வேண்டுமே
காதலனின் மடி!

பெஞ்சு அண்ணா!~! உங்களுக்கும் அப்படி ஏதாவது மேலே சொன்ன வரிகளில் தெரிகிறதா?

ஷீ-நிசி
24-01-2007, 02:33 PM
இலைகளின் இறப்பை மிக அழகாய் விளக்கியுள்ளீர்கள் பிச்சி..

பிச்சி
24-01-2007, 02:53 PM
இலைகளின் இறப்பை மிக அழகாய் விளக்கியுள்ளீர்கள் பிச்சி..

மிக்க நன்றி ஷீ அண்னா

அறிஞர்
24-01-2007, 04:16 PM
இலையுதிர்வு.... இயற்கையாக நடக்கும் செயல்..

அதை கவிஞர்கள் தங்கள் பாணியில் கூறுவது ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கும்.. பிச்சியின் இந்த பாணி.. மிக அழகாக உள்ளது.

கவிதா நேரம் கிடைக்கும்பொழுது இங்கு வருவார் என எண்ணுகிறேன்... அப்பொழுது தங்கள் கவிதைக்கு கருத்துக்கொடுப்பார்.

நண்பன் சென்ற மாதம் வந்தார்.... திரும்ப வந்தால் தங்கள் கவிதைகளை படிப்பார்.. கருத்து கூறுவார் என எதிர்ப்பார்ப்போம்.

பென்ஸ்
24-01-2007, 09:05 PM
பிச்சி...
மன்றத்தில் இதற்க்கு முன்னே இதே போன்ற ஒரு கவிதையில் அறவாணிகளை பற்றி விவாதித்து இருக்கிறோன்...
இங்கு இன்னொரு அக்கரை கவிதையாக பார்க்கும் போது ...
மீண்டும் அதே வார்த்தைகளை கொடுக்க நினைக்கும் மனம்.

அறவாணிகளை யாராவது ஒதுக்கி இருக்கிரோம் என்று சொன்னால் அது தவறு என்று சொல்லுவேன்....
இங்கு அறவானிகள் தங்களுக்கேன்றே ஒரு சமூகத்தை உருவாக்கி,
சாதாரண சமூகத்தில் இருந்து தன்னை பிரித்து கொள்ளுகிறார்கள்...
இது அவர்கள் செய்யும் முதல் தவறு...

உதாரணமாக: அறவாணி நிலைக்கு வந்து விட்ட ஆனோ, பெண்ணோ தன் குடும்பம் அல்லது ஊரை விட்டு பம்பாய் சென்று அறவாணிகளுடன் சேர்ந்து கொள்ளுகிறார்கள்.

இப்படி ஒரு தனி சமுதாயமாக இருக்கும் இவர்கள் பிழைப்புக்காக பிச்சை எடுத்தல்,
முறையற்ற உடலுறவுகள் பொற செயல்கள் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்...
இந்த செயல்கள் நமது சமுதாயத்தில் தவறானவை, ஈனமானவை...
ஆனால் அவர்கள் சமுதாயத்தில் அது சரி...
இந்த வேறுபாடு நம்மை அவர்களிடம் இருந்து இன்னும் பிரிக்கிறது....

இவர்கள் நிலை மாற வேண்டும் என்பதுதான் எல்லோர் எண்ணமும்,
ஆனால் இதை தனிமனிதனால் மாற்ற முடியாது...
இவர்கள் ஒரு சமூகமாக இருப்பதால் அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டும்,
இவர்களின் வாழ்க்கை முறையை மாற்றுவதற்க்கு உதவவேண்டும்....

சமுதாயம் தானாக ஏற்றுகொள்ளும்....

பென்ஸ்
24-01-2007, 09:24 PM
முதலில் நான் அந்த கவிதை படிக்கும்போது எனக்கு அந்த நினைவுகள் தோன்றவில்லை.. நண்பன் அவர்கள் நன்றாக ஆராய்ந்துள்ளார். அவர்களெல்லாம் இப்போது வருவதில்லையா?
பொதுவாக ஆண்கள் இப்படி நினைப்பார்கள் என்று நினைக்கிறேன். அதாவது எழுதியது பெண்கள் என்றால் அதன் வரிகளில் பெண்மை இருக்கும் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்ன்... நானும்கூட அப்படித்தன். எழுதிய கவிதை பெண்களின் பார்வையில் இருந்தாலும் ஆண் எழுதியிர்ந்தால் எனக்கு ஒட்டுவதே இல்லை....

உதாரணமாக என்னுடைய கவிதைக்கு சிலர் 'அந்த விளக்கம் அளித்தனர்..
அவர்களின் கவிதை ஆராய்ச்சி அப்படிப்பட்டது.

இதுதான்:

மெல்லிய கனவுகளோடு
பூப்பெய்திய நாள் முதல்
பூவுக்குள் வெடிச்சத்தம்
நாளூம்
கண்களின் துளிகள்
வருத்தமல்ல; ஆயினும்
பெண்கள் நாங்கள்
துயில் கொள்ள வேண்டுமே
காதலனின் மடி!

பெஞ்சு அண்ணா!~! உங்களுக்கும் அப்படி ஏதாவது மேலே சொன்ன வரிகளில் தெரிகிறதா?
பிச்சி...
கவிதை எழுதியதை விட சுகம் ... அது வாசிக்க படுவதில்...
அதிவிட சுகம்.. விமர்சிக்க படுவதில்...
அதை விட சுகம்... அதில் குற்றம் கண்டு பிடிக்கபடுவதில்....

எனக்கும் என் விமர்சனங்கள் விமர்சிக்க படுவதில் அதி சுகமே...

கவிதா, நண்பன் , பிரியன், இளசு, செல்வன், ராகவன், பிரதிப் இவர்கள் கவிதையை வாசித்து விட்டு சென்றால் ...
அப்படா நல்ல கவிதை என்று அர்த்தம்...

உள்ள வந்து பதிவு போட்டுடாங்கனா..
எதோ எடக்குமுடக்கா இருக்குன்னு அர்த்தம்...

இவர்கள் மன்றம் வரவில்லை என்றால் பணி அல்லது குடும்ப வாழ்க்கையில் இவர்களது கண்கானிப்பு அவசிய படுகிறது என்று அர்த்தம்...
மற்றவை நம் மனதை அழுத்தும் போதும் வாசித்து லயிக்க முடியாயின்மை ஒரு காரணம்...

எல்லாம் ஒரு சுழற்ச்சி தானே...
இறுக்கம் தழரும் போது மீண்டும் மீண்டும் இதமான புயலாய் மீண்டும் வந்து செல்லுவார்கள்....

எனக்கு பணி பளுதான்...
இப்போ காலை மணி நாலு..
இன்னும் அலுவலகத்தில்....
நண்பர்கள் நேரம் கிடைக்கும் போது பிச்சியை கேள்வியால் பிச்சி புடுங்குவார்கள்...
பதில் தயாராய் வைத்திருங்கள்...

கவிதை பற்றி....
பிச்சி: இந்த இனிப்பான அல்வா இனிக்குமா... கசக்குமா... பென்ஸ்
பென்ஸ்: தேரியலையேமா...

ஓவியா
24-01-2007, 09:35 PM
இறந்துபோகும் யாருக்கும்
மண்ணே வீடு.

என்ன உயர்ந்த சிந்தனை,
பிரபா கவிதை மிகவும் அருமை

பூக்களை மட்டும்
கண்ணடிக்கும் கண்களுக்கு
இனி இலையயும்
ரசிக்க வாய்ப்பளித்துலீர்கள்........

தங்களின் சிந்தனை வளர்க

பாராட்டுகிறேன் தங்கையே

pradeepkt
25-01-2007, 05:32 AM
பிரதீப் அண்னாவுக்கு..........

அரவாணிகளை நாம் எந்த ஒரு பொதுஇடத்தில்கூட சேர்த்துவது இல்லை,. அவர்களை பார்க்கும்போது எல்லாம் சீ! என்று நாம் கருதுகிறோம். உங்களுக்கு எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.. யாராவது உதவி செய்தால் போதும்.. கவிதையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்..
கவிதையில் தவறு இருந்தால் மன்னிக்க மாட்டோம். :D :D :D ஏனென்றால் மன்னிப்பதற்கும் ஒரு தகுதி வேணுமில்ல? நாங்க என்ன சீத்தலைச் சாத்தனாரா??? சமஸ்கிருதத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - "மன்னிப்பு" -- அய்ங்... !!!

கவிதையின் கருத்துகளில் மாற்று இருந்தால் அப்படி விட்டுற முடியாதில்ல??? உடனே கச்சை கட்டிட்டு வந்துருவோம், அடி வாங்குறதுக்கு!!! உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் பிச்சி!

ஆதவா
25-01-2007, 04:05 PM
பேசாம இருந்தீங்கனா எப்படி?


கவிதையில் தவறு இருந்தால் மன்னிக்க மாட்டோம். :D :D :D ஏனென்றால் மன்னிப்பதற்கும் ஒரு தகுதி வேணுமில்ல? நாங்க என்ன சீத்தலைச் சாத்தனாரா??? சமஸ்கிருதத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - "மன்னிப்பு" -- அய்ங்... !!!

கவிதையின் கருத்துகளில் மாற்று இருந்தால் அப்படி விட்டுற முடியாதில்ல??? உடனே கச்சை கட்டிட்டு வந்துருவோம், அடி வாங்குறதுக்கு!!! உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் பிச்சி!

பேசறேன் பிச்சி.......... போதுமான நேரமில்ல.. கவிதை வாசிக்க.

பெஞ்சமின் மற்றும் பிரதீப் அவர்களுக்கு....

அரவாணிகள் தாமாக ஒதுங்க என்ன காரணமாக நினைக்கிறீர்கள்?
அவர்களுக்கென்று தனியாக பிரிவுகளோ அல்லது வேறேதாவது சிறப்புகளோ ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறதா?
உதாரணத்திற்கு ஒரு கழிவறையாவது தனியே கட்டியிருக்கிறீர்களா?
நீங்கள் (அதாவது ஒதுக்காத மக்கள்) அரவாணிகளுடன் என்றாவது பேச்சாவது கொடுத்திருக்கிறீர்களா?
அவர்கள் தங்களுக்கென்று தனி சமூகம் ஒதுக்க காரணம் என்ன?
முறையற்ற உறவுகள், பிஷை.... நன்றாகத்தான் இருக்கிறது......... நீங்கள் (அதாவது ஒதுக்காத மக்கள்) ஒரு வேலை கொடுக்கத் தயாரா? (அரவாணிகளே விரும்பும் பஷத்தில்)
இந்த செயல்கள் நமது சமுதாயத்தில் தவறானவை, ஈனமானவை... ஆனால் அவர்கள் சமுதாயத்தில் அது சரி...பெஞ்சு சார்!! வேறுவழியில்லை சார்......... பணத்திற்க்காக உடல் விற்கும் ஆண் அரவாணியை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.. (நான் யாரிடமும் பேசினதில்லை.) அரசாங்கம் அவர்களை தனி பாலினமாக ஒதுக்கி அவர்களுக்கு இன்ன இன்ன வேலைகள் தரும்போதுதானே இவைகள் மெல்ல மெல்ல கலையும் (களையும்)
இவர்களின் இன்னிலைக்கு அரசாங்கமே முக்கிய காரணம்........
நாம் இவர்களை ஒதுக்குவதில்லை என்று சொல்வது மிக மிக மிக தவறு............. தவறான உறவுகளோ அல்லது வேறெதுவோ கூட நாம் நினைப்பதில்லை............. ஒரு சிறுவன் கூட அரவாணியைக் கண்டு ஏசுகிறான், அல்லது கேலி செய்கிறான்....
அரவாணிகளைப் பற்றி பேசியிருப்பதாகச் சொன்னீர்கள்.... என்ன என்று அறிந்துகொள்ளலாமா?பிச்சிக்கு எவ்வளவு உதவி பண்ணியிருக்கேன் பாருங்க.........:D

ஷீ-நிசி
25-01-2007, 04:31 PM
பேசறேன் பிச்சி.......... போதுமான நேரமில்ல.. கவிதை வாசிக்க.

பெஞ்சமின் மற்றும் பிரதீப் அவர்களுக்கு....

அரவாணிகள் தாமாக ஒதுங்க என்ன காரணமாக நினைக்கிறீர்கள்?
அவர்களுக்கென்று தனியாக பிரிவுகளோ அல்லது வேறேதாவது சிறப்புகளோ ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறதா?
உதாரணத்திற்கு ஒரு கழிவறையாவது தனியே கட்டியிருக்கிறீர்களா?
நீங்கள் (அதாவது ஒதுக்காத மக்கள்) அரவாணிகளுடன் என்றாவது பேச்சாவது கொடுத்திருக்கிறீர்களா?
அவர்கள் தங்களுக்கென்று தனி சமூகம் ஒதுக்க காரணம் என்ன?
முறையற்ற உறவுகள், பிஷை.... நன்றாகத்தான் இருக்கிறது......... நீங்கள் (அதாவது ஒதுக்காத மக்கள்) ஒரு வேலை கொடுக்கத் தயாரா? (அரவாணிகளே விரும்பும் பஷத்தில்)
இந்த செயல்கள் நமது சமுதாயத்தில் தவறானவை, ஈனமானவை... ஆனால் அவர்கள் சமுதாயத்தில் அது சரி...பெஞ்சு சார்!! வேறுவழியில்லை சார்......... பணத்திற்க்காக உடல் விற்கும் ஆண் அரவாணியை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.. (நான் யாரிடமும் பேசினதில்லை.) அரசாங்கம் அவர்களை தனி பாலினமாக ஒதுக்கி அவர்களுக்கு இன்ன இன்ன வேலைகள் தரும்போதுதானே இவைகள் மெல்ல மெல்ல கலையும் (களையும்)
இவர்களின் இன்னிலைக்கு அரசாங்கமே முக்கிய காரணம்........
நாம் இவர்களை ஒதுக்குவதில்லை என்று சொல்வது மிக மிக மிக தவறு............. தவறான உறவுகளோ அல்லது வேறெதுவோ கூட நாம் நினைப்பதில்லை............. ஒரு சிறுவன் கூட அரவாணியைக் கண்டு ஏசுகிறான், அல்லது கேலி செய்கிறான்....
அரவாணிகளைப் பற்றி பேசியிருப்பதாகச் சொன்னீர்கள்.... என்ன என்று அறிந்துகொள்ளலாமா?பிச்சிக்கு எவ்வளவு உதவி பண்ணியிருக்கேன் பாருங்க.........:D


ஆதவா.. என்னதான் அரசாங்கம் தனி பாலினமாக ஒதுக்கி, தனி கழிவறை எல்லாம் கட்டி, எல்லாம் செய்து கொடுத்தாலும், நாம் அவர்களுடன் பேசுவதையோ, அவர்களுடன் பழகுவதையோ மனபூர்வமாய் விரும்பமாட்டோம் என்று என்னுகிறேன். எனக்கு தோன்றியவரையில் அவர்களால் மற்றவர்களோடு சகஜ நிலையில் பழகும் நிலை ஏற்பட வாய்பில்லை என்றே கருதுகிறேன். அவர்களுக்கென்று ஒரு தனி தேசம் இருந்தாலொழிய, எப்படி பழங்குடியினரோ, ஆதிவாசிகளோ அப்படி..

ஆதவா
25-01-2007, 04:36 PM
ஆதவா.. என்னதான் அரசாங்கம் தனி பாலினமாக ஒதுக்கி, தனி கழிவறை எல்லாம் கட்டி, எல்லாம் செய்து கொடுத்தாலும், நாம் அவர்களுடன் பேசுவதையோ, அவர்களுடன் பழகுவதையோ மனபூர்வமாய் விரும்பமாட்டோம் என்று என்னுகிறேன். எனக்கு தோன்றியவரையில் அவர்களால் மற்றவர்களோடு சகஜ நிலையில் பழகும் நிலை ஏற்பட வாய்பில்லை என்றே கருதுகிறேன். அவர்களுக்கென்று ஒரு தனி தேசம் இருந்தாலொழிய, எப்படி பழங்குடியினரோ, ஆதிவாசிகளோ அப்படி..

நண்பரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .... மனதார சொல்கிறேன்.. என்னாலும் அவர்களுடன் பேச முடியாது.. ஆரம்பத்திலிருந்தே நான் அவர்களை கேலியாகவே பார்த்துவிட்டேன்.. அதற்கு சமுதாயமும் ஒரு காரணம்.. அது நாம் ஒதுக்குவதாகவே கருத்தாகுமல்லவா?

பிச்சி, பெஞ்சு, பிரதீப்... உங்கள் கருத்தை எதிர்நோக்கி,,

ஆதவன்.

மதுரகன்
25-01-2007, 04:58 PM
அருமையாய் ரசித்தேன் பிச்சி..தொடர்ந்து விளாசிக்கொண்டிருக்கிறீர்கள்...

யாவரின் பிறப்பைப் போல்
கொப்பூள் கொடியோடு
பிறக்கிறேன்.
என் பிறப்பிலிருந்து
இறப்புவரை
அது நீங்குவதில்லை

சின்ன சின்ன விடயங்களிலும் எப்போது சிரத்தை எடுக்க ஆரம்பித்தீர்களோ அப்போதே நீங்கள் வெற்றியடைந்தவர்..


உன்னைவிட்டு விழுந்த போதும்
நீயே எனக்கு சுவர்க்கம்.
என் உதிர்வுகள்
ஒவ்வொருநாளும் நடக்கின்றன.
ஒரு சாதாரண மழையைப்போல
ஒலிச்சிதறல் போல் உங்கள் வார்த்தைகள் மனமெங்கும்...

தொடருங்கள் வெற்றிகரமாக..

பிச்சி
26-01-2007, 02:06 AM
நன்றி பென்ஸ் மற்றும் ஓவி அவர்களுக்கு.....

பிச்சி
26-01-2007, 02:07 AM
மதுரகன் அவர்கலுக்கு எனது நன்றி...

பிச்சி
26-01-2007, 02:10 AM
அய்யொ எனக்கு அந்த அளவு ஞானம் இல்ல. ஆதவன் பென்ஸ் பிரதீப் மற்றும் ஷீ-நிசி ஆகியவரின் கருத்துக்கு தலை வணங்குகிறேன்.. எனக்கு சொல்லத் தெரியவில்லை.

பிச்சி
26-01-2007, 07:52 AM
http://i157.photobucket.com/albums/t41/pichiflower/362417548_a9cb1e6b59_b.jpg


உன் வீரிய கண்களில்
தெரிகிறது
வேதனையின் ரணங்கள்

துயர் தீரும் சிரிப்பில்
தெரிகிறது
இழந்து போன கேள்விகள்

உன் வதனமே
ஓர் வசந்தம்தான்
உன் நயன விழிகளே
ஓர் சொந்தம்தான்

வெந்துபோன இதயம்
கொண்ட பேரலைகளுக்கு
சொந்தமிருக்கா?
இருந்திருந்தால்
உன் சொந்தம் இருக்கும்.

நெற்றிக் குங்குமம் ஓர்
ஆன்மிகத் தாலாட்டு
பொட்டுச் சந்தன ஓர்
ஞானிச்சியின் அடையாளம்

அரித்துப் போன
கடல் வணங்கும் உன்னை
உன் புன்னகையினால்...
சிரி சிரி சிரி
சிரித்துக் கொண்டே இரு
உன் சிரிப்புச் சுனாமியில்
தன்னைத் தானே
அழித்துக் கொள்ளும்
ஆழ்கடல்..

ஆனால்
மன்னிப்பு மட்டும் கொடுக்காதே!

அறிஞர்
26-01-2007, 02:31 PM
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள்
என்னை ஒருவன் காதலித்தான்... வேதனை செய்தான்... என் மனம் அறியாமல் தோற்றோடிவிட்டான்... அவனைப் பற்றி...............
வீதியில் நின்று சிரித்தோடிவிடுகிறது
இளமை பொங்கும்
இன்ப நிலா!

நெஞ்சு பிளந்தாலும்
நெருங்க முடியாத ஒரு
நட்சத்திரத்தின் அனல் மட்டும்
எப்போதும் வீசிக்கொண்டேதான் இருக்கும்...
முன் குறிப்போடு.... விளக்கம் கொடுத்து கொடுத்த கவிதை

இளமை பொங்கு நிலவின்.... மனம் அறியாதவன்.... தோற்றவனே...

அவனுக்காக உம் கவிகள்.... அருமையாக உள்ளது...

நட்சத்திரத்தின் அனல்

பிச்சி
26-01-2007, 03:05 PM
மிக்க நன்றி.... இதன் தொடர்ச்சியாக உன்னொரு கவிதை கொடுத்துள்ளேஎன்.. பார்வையிடுங்கள்.

பென்ஸ்
26-01-2007, 05:19 PM
ஆதவா... கேள்விகள் தாம் நம்மை நாமாக ஆக்குகின்றன என்று நினைப்பவன் நான்.... அருமையான கேள்விகள்...


அரவாணிகள் தாமாக ஒதுங்க என்ன காரணமாக நினைக்கிறீர்கள்?நாகர்கோவிலில் எனக்கு தெரிந்த அறவானி ஒருவர் உண்டு... ஒரு ரத்ததான முகாமுல் சந்தித்தேன்... இவர் ஒரு அறவாணி என்று அவர் சொல்லும் வரை எனக்கு தெரியவில்லை... இவர் பிறப்பில் ஆண் பென்னாக மாறிஉள்ளார்.... ஆனாலும் ஆண் உடையில் ஒரு சாதார மனிதனாக இருகிறார். ஆவர் சொன்ன பிறகுதான் அவர் குரலில் இருக்கும் கரல் அலைவரிசை வித்தியாசத்தை கவனித்தேன்... அது வரை அவரையும் ஒரு சாதாரண மனிதாராஇ நினைத்திருந்தேன்....
இவர் வீட்டில் இவரை அவர் பிள்ளையாக, வீட்டில் ஒருவராக ஏற்றிருக்கிறார்கள்... இரண்டாவது இவர் மற்றவர்களை போல் வாழ விரும்பி நம் சமுகத்துக்கு ஏற்றவாறு நடக்கிறார்... இதனால் சமுதாயமும் இவரை விலக்கவில்லை..
அதை விட்டு... அறவாணி உடையனிந்து (இவர்கள் உடை வேடம் சாதாரமானவர்கள் போல் இருக்காதே..!!!) கையை வழுக்கி கொட்டி கொண்டு, மாமா...என்று அசிங்கமாக டியூன் கொடுக்கும் போது குழந்தைகளும் கல் எடுத்து எறிவார்கள்....
அன்பு ராகவனிடம் ஒரு நால் பேசிகொண்டிருக்கும் போது, வலை பூவிலும் அறவாணி ஒருவர் நன்றாக எழுதி வருவதாக கூறினார்... ஆச்சரியமாக இருந்ததுடன் இவர்கள் சிறு குப்பை சமுதாயத்தை விட்டு வேளியே வருவது குறித்து மகைச்சியாக இருந்தது...
இது ஒரு ஊனம் மட்டுமே, இதை ஏற்றுகொண்டு வாழ வேண்டிய மனதை முதலில் வளக்க நாம் உதவ வேண்டும்...


அவர்களுக்கென்று தனியாக பிரிவுகளோ அல்லது வேறேதாவது சிறப்புகளோ ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறதா?( உதாரணத்திற்கு ஒரு கழிவறையாவது தனியே கட்டியிருக்கிறீர்களா?)எதற்க்கு தேவை....
அமெரிக்காவில் ஒரு பொது இட கட்டடம் அனுமதிக்கபடவேண்டுமானால் அஙு ஊனமுற்றவருக்கு வசதியாக இருக்க வேண்டும்.. களிவறை உட்ப்பட... அங்கு கூட அறவாணிகளுக்கு என்று இல்லையே.. அங்கு என்ன எங்கையுமே இல்லை...
தேவையும் இல்லை... களிப்பறையின் நாலு சுவருக்குல் என்ன நடந்தால் என்னபா.... சும்மா இதை எல்லாம் சப்பை கட்ட கூடாது :D :D

நீங்கள் (அதாவது ஒதுக்காத மக்கள்) அரவாணிகளுடன் என்றாவது பேச்சாவது கொடுத்திருக்கிறீர்களா?என் முதல் பதிலையே உங்களுக்கு புரிந்து இருக்கும்...
நான் மும்பையில் வசித்த பகுதியில் சில நேரம் அறவானிகள் வருவார்கள்... அன்று எந்த வசூலும் இல்லை என்றால் எங்கல் அப்பார்ட்மென்ட் வந்து காசு வாங்க வருவாற்கள்... எல்லோரும் கொடுப்பார்கள்... நானும் கொடுத்ததுண்டு...
சமுதாயத்தில்.. குஸ்டரோகிகள், அரவானிகள் இருவருக்கும் எங்கும் யாரும் வேலை கொடுத்து நாண் பார்ததில்லை.. அதனால் நான் காசு கொடுக்கவும் வருந்தியதில்லை...

அவர்கள் தங்களுக்கென்று தனி சமூகம் ஒதுக்க காரணம் என்ன?முட்டாள் தனம்...
முதைல் ஏற்றுகொள்ளமையும்... போராடும் மனநிலையும் இல்லாதது என்று நான் கூறுவேன்...

முறையற்ற உறவுகள், பிஷை.... நன்றாகத்தான் இருக்கிறது......... நீங்கள் (அதாவது ஒதுக்காத மக்கள்) ஒரு வேலை கொடுக்கத் தயாரா? (அரவாணிகளே விரும்பும் பஷத்தில்)நான் ஒரு முதலாளியாக ஆகும் போது திறமையை, குணம் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் வேலை உண்டு...

இந்த செயல்கள் நமது சமுதாயத்தில் தவறானவை, ஈனமானவை... ஆனால் அவர்கள் சமுதாயத்தில் அது சரி...பெஞ்சு சார்!! வேறுவழியில்லை சார்......... பணத்திற்க்காக உடல் விற்கும் ஆண் அரவாணியை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.. (நான் யாரிடமும் பேசினதில்லை.) அரசாங்கம் அவர்களை தனி பாலினமாக ஒதுக்கி அவர்களுக்கு இன்ன இன்ன வேலைகள் தரும்போதுதானே இவைகள் மெல்ல மெல்ல கலையும் (களையும்)மனிததில் ஆண் ஜாதி.. பெண்ஜாதி என்று சொல்லுவதே தவறு என்று நினைப்பவன் நான்....
அரசாங்கம் இவர்களுக்கும் வேலை வாய்ப்பு, மனயியல் உதவி அளித்தாலே போதும்... அறவானிகளுக்கு பிற்படுத்தபட்டோருக்கும் அளிக்கும் சலுகைகளை கொடுத்தாலே போதும்... இவர்களே முன்னேறுவார்கள்...

இவர்களின் இன்னிலைக்கு அரசாங்கமே முக்கிய காரணம்........இது டிபன்ஸ்...
ஒரு செயலுக்கு, விலைவுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இருக்கும் என்று சொல்லுவதி நான் ஏற்றுகொள்லவே மாட்டேன்....
அரசாங்கத்தின் பங்கு இருக்கிறது...

நாம் இவர்களை ஒதுக்குவதில்லை என்று சொல்வது மிக மிக மிக தவறு............. தவறான உறவுகளோ அல்லது வேறெதுவோ கூட நாம் நினைப்பதில்லை............. ஒரு சிறுவன் கூட அரவாணியைக் கண்டு ஏசுகிறான், அல்லது கேலி செய்கிறான்....முதல் விடையிலையே இதர்க்கு பதில் இருக்கிறது..

அரவாணிகளைப் பற்றி பேசியிருப்பதாகச் சொன்னீர்கள்.... என்ன என்று அறிந்துகொள்ளலாமா?அதுவும் இதேபோன்ற ஒரு விவாதம் தான்.. தேடி கண்டுபிடிக்க வேன்டும் என்ன என்று தெரிந்து கொள்ள...

சமுதாயத்தில் இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கின்றன... அதிகமாக நாம் நம்மை பற்றி மட்டும் நினைப்பதால் இதை எல்லாM விட்டு விடுகிறோம்....

ஆதவா
26-01-2007, 05:57 PM
உங்களின் பதில்கள் அருமை.....


அரவாணிகள் தாமாக ஒதுங்க என்ன காரணமாக நினைக்கிறீர்கள்? என்று நான் கேட்ட கேள்விக்கு உங்கள் அனுபவத்தை நீங்கள் சொன்னீர்கள்//// எத்தனை பேர் இப்படி உள்ளார்கள்.. அல்லது எத்தனை பேரை அவர்கள் குடும்பம் ஏற்றுள்ளது... நான் கேட்டது யாரோ ஒருவரைப் பற்றி அல்ல... எல்லாரையும் சேர்த்துதான்
அவர்களுக்கென்று தனியாக பிரிவுகளோ அல்லது வேறேதாவது சிறப்புகளோ ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறதா? நண்பரே நான் கழிவரையை ஒரு உதாரணமாக காட்டினேன்... யாதார்த்தம் சொல்கிறேன் கேளுங்கள். ஆண்களோடோ அல்லது பெண்களோடோ நின்று கொண்டு கழிவரைப் பகுதிக்கு அவர்களால் செல்ல முடியுமா? அப்படியே சென்றாலும் அவ்ரை ஆண்கள் என்று பெண்கள் ஒதுக்கிவிட்டால், பெண் என்று ஆண் ஒதுக்கி விட்டால்,??? எந்த ஒருவனும் (பெரும்பாலும்) அரவாணிகளுடன் நின்று கொண்டு கழிவறை செல்லமாட்டான்...
அரவாணிகளுடன் பேச்சு கொடுத்த உங்களுக்கு ஒரு ஓ!!! நான் முன்பே சொன்னது போல, என்னதான் உள்மனம் நினைத்தாலும் அவர்களைக் காணும்போது எல்லாம் கேலித்தனமாகவே நினைப்பேன்... அதுதான் உண்மை... மீண்டும் அரவாணிகளை சந்தித்தால் அவர்களிடம் பல விபரங்களைக் கேளுங்கள்..
முட்டாள் தனம்...
முதைல் ஏற்றுகொள்ளமையும்... போராடும் மனநிலையும் இல்லாதது என்று நான் கூறுவேன்... சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. எப்படி சார் போராடுவாங்க... நீங்கதான் சொன்னீங்க மாமா...என்று அசிங்கமாக டியூன் கொடுக்கும் போது குழந்தைகளும் கல் எடுத்து எறிவார்கள் பிறகெப்படி சார் தைரியம் வரும்
நான் ஒரு முதலாளியாக ஆகும் போது திறமையை, குணம் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் வேலை உண்டு... நிச்சயமாக உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.... ஆனால் நான் சொல்கிறேன்... உங்களால் அது முடியாது... உங்களின் கீழ் வேலை செய்பவர்கள் பொறுத்துப் போக மாட்டார்கள்..
இவர்களின் இன்னிலைக்கு அரசாங்கமே முக்கிய காரணம்........முக்கிய காரணமே தவிர முழு காரணமும் அல்ல...

இளசு
26-01-2007, 09:53 PM
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்?


டி.ராஜேந்தர் எழுதிய வரிகளில் என்னைக் கவர்ந்தவை..


உயிர் விட்ட இலை காற்றில் அலைந்தபடி
ஊமையாய்ப் புலம்பும் கானம் கேட்பவர் யார்?


பிச்சி போலக் கவியுள்ளங்கள் மட்டுமே..


ஓர் இயற்கை நிகழ்வை இத்தனை நுணுக்கமாக
விவரித்த விதத்துக்குப் பாராட்டுகள் பிச்சி..

இளசு
26-01-2007, 10:00 PM
புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சொல்லும் சேதி -
மனித இனத்தின் மேல் இறைவனுக்கு
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.. தாகூரின் வாக்கு இது.

சொந்தங்களை சுனாமியில் இழந்தும்
சிந்திய புன்னகை மாறா சின்னவளைக் கண்டதும்..

என்னாட்டு இளைய தலைமுறை மேல்
இன்னும் நம்பிக்கை உயர்கிறது..


பாராட்டுகள்..பிச்சி

பிச்சி
27-01-2007, 12:26 PM
மிக்க நன்றி இளசு அண்ணா!

பிச்சி
27-01-2007, 12:27 PM
மிக்க நன்றி இளசு அண்ணா!!

மதுரகன்
27-01-2007, 03:31 PM
சுனாமியின் பாதிப்பிலிருந்து மீண்ட ஓர் குழந்தையின் எண்ண ஓட்டங்களை கொண்டமைந்த ஓர் அற்புதமான கவிதை


உன் வீரிய கண்களில்
தெரிகிறது
வேதனையின் ரணங்கள்
அவள் கண்களினுள் ரணங்கள் புதைந்து கிடப்பினும்
வீரியமாக உள்ளதோ என்ன ஒரு மனவுறுதி..


துயர் தீரும் சிரிப்பில்
தெரிகிறது
இழந்து போன கேள்விகள்
எத்தனை கேள்விகள் மனத்தில் மீண்டும் மீண்டும் மோதினாலும்
அவள் சிரிப்பில் எம் துயரெல்லாம் விடுபடுகின்றதே...
இதுதான் குழந்தைத்தனம் என்பது....


உன் வதனமே
ஓர் வசந்தம்தான்
உன் நயன விழிகளே
ஓர் சொந்தம்தான்
அவள் தன்வாழ்வை தனக்குள்ளே சிருடித்துக்கொண்டதை சித்தரிக்கிறீர்கள்
போலும்...


வெந்துபோன இதயம்
கொண்ட பேரலைகளுக்கு
சொந்தமிருக்கா?
இருந்திருந்தால்
உன் சொந்தம் இருக்கும்.
அற்புதமாய் பேரலைகளை சாடுகிறீர்கள்..


அரித்துப் போன
கடல் வணங்கும் உன்னை
உன் புன்னகையினால்...
சிரி சிரி சிரி
சிரித்துக் கொண்டே இரு
உன் சிரிப்புச் சுனாமியில்
தன்னைத் தானே
அழித்துக் கொள்ளும்
ஆழ்கடல்..

ஆனால்
மன்னிப்பு மட்டும் கொடுக்காதே!
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்"
என்கிறீர்கள்...

வாழத்துக்கள் பிச்சி...
தொடருங்கள் உங்கள் கவிதைகளை..

மதுரகன்
27-01-2007, 03:47 PM
நிலவை நிந்தித்தே
நித்தம் கூடிடுவார்கள்
தீட்சணம் இல்லாமல்
தீண்டிடுவார்கள்
அனலின் அனுபவத்தை
எப்போதும் தாங்கியே போன
நிலவின் மையத்தில்
பனிகளை உருக்கி ஊற்றுவார்கள்
போகப்பொக ஒவ்வொரு கவிதைகளினதும் அழகு கூடிக்கொண்டே போகிறது..
வர்ணிக்க புதிய வார்த்தைகள் கிடைக்கவில்லை..

அதே
அற்புதம்
அழகு
சிறப்பு

வாழ்த்துக்கள்...

மதுரகன்
27-01-2007, 04:03 PM
சொரிந்து கிடக்கின்றன
வெந்தழலில் கருகப்போகும் பூக்கள்
முழித்துப் பார்த்து சிரிக்கிறதே
தேனுக்குச் சுற்றும் வண்டுகள்
உங்களுக்கு மட்டும் வார்த்தைகள் எங்கிருந்துதாம் கிடைக்கின்றன பிச்சி..

கல்லூரியில் என்ன படிக்கிறீர்கள்..
இலக்கியம் சார்ந்த கல்வியா..? விஞ்ஞானம் சார்ந்த கல்வியா..?

மீண்டும் சிலிர்த்துக்கொள்கிறேன்..

மீதியின்றி கருகிப் போகும்
பூக்களின் வாசனை நுகருவது
வண்டுகளின் நோக்கமென்றால்
தீந்துளிகளின் தடுப்பணை
தோற்று விடுகிறதே!
இறைவா! விட்டுவிடு
இனி மென்மையாகப் படைப்பதை
அற்புதம்..

ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் ஆண்களை இப்படி
யே படைப்பது உறுத்துகின்றது...

மனோஜ்
27-01-2007, 04:41 PM
உங்கள் கவிதையை படிக்க புதுஅகரதி தேவை
வார்த்தைகள் எங்கிருந்துதாம் கிடைக்கின்றன அறுமை.. பிச்சி அவர்களே

பிச்சி
28-01-2007, 01:28 PM
உங்களுக்கு மட்டும் வார்த்தைகள் எங்கிருந்துதாம் கிடைக்கின்றன பிச்சி..

கல்லூரியில் என்ன படிக்கிறீர்கள்..
இலக்கியம் சார்ந்த கல்வியா..? விஞ்ஞானம் சார்ந்த கல்வியா..?

மீண்டும் சிலிர்த்துக்கொள்கிறேன்..

அற்புதம்..

ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் ஆண்களை இப்படி
யே படைப்பது உறுத்துகின்றது...

மது அவர்களுகு... உங்கள் விமர்சனம் அருமையா இருந்தது.. இலக்கியமெல்லாம் இல்லை. கணிணி சம்பந்தமான படிப்புதான். என்னவோ தெரியவில்லை. ஆண்களை நானாக குறை சொல்லவில்லை தானாக அமைந்துவிடுகிறது..

பிச்சி
28-01-2007, 01:28 PM
உங்கள் கவிதையை படிக்க புதுஅகரதி தேவை
வார்த்தைகள் எங்கிருந்துதாம் கிடைக்கின்றன அறுமை.. பிச்சி அவர்களே

மிக்க நன்றி மன்சோலெக்ஸ்,., தொடர்ந்து ஆதரவு குடுங்கள்

பிச்சி
28-01-2007, 01:29 PM
போகப்பொக ஒவ்வொரு கவிதைகளினதும் அழகு கூடிக்கொண்டே போகிறது..
வர்ணிக்க புதிய வார்த்தைகள் கிடைக்கவில்லை..

அதே
அற்புதம்
அழகு
சிறப்பு

வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி மதுரகன்,,,, தொடர்ந்து ஆதரவு குடுங்கள்

பிச்சி
28-01-2007, 01:31 PM
மிக்க நன்றி மதுரகன்..

leomohan
28-01-2007, 01:35 PM
பிச்சி உங்கள் கவிதைகள் அனைத்தும் ஒரே திரியில்

பிச்சியின் கவிதைகள் என்று படைத்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

பிச்சி
28-01-2007, 01:47 PM
பிச்சி உங்கள் கவிதைகள் அனைத்தும் ஒரே திரியில்

பிச்சியின் கவிதைகள் என்று படைத்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

இங்கே யாரும் அந்த மாதிரி குடுக்காததால நானும் அப்படியே குடுத்தேன்.. உங்கள் விருப்பத்திற்கேற்ப பிச்சியின் கவிதைத் தோட்டம் என்ற தலைப்பில் எல்லா கவிதைகளையும் இணைத்துக் கொள்கிறேன்.

மதுரகன்
28-01-2007, 04:10 PM
அப்படியா விரைவில் எதிர்பார்க்கிறோம்...
ஆனால் ஒரு வேண்டுகோள் தொடர்ந்து ஒரே தொனிப்பொருளில் எழுதாது பல தரப்பட்ட விடயங்களில் எழுதுங்கள்..
அதுதான் உங்கள் பூரண ஆற்றலை வெளிப்படுத்தும்...

மதுரகன்
28-01-2007, 04:26 PM
நன்றிஙெல்லாம் எதற்கு நீங்கள் கவிதைகளை தெறியுங்கள்....
நாங்கள் படித்துக்கொள்கிறோம்...

மதுரகன்
28-01-2007, 04:37 PM
கணிணி சம்பந்தமான படிப்புதான்
எந்தத்துழறயில் இருந்தாலும் ஆர்வம் திறமை இருக்கலாம்..
ஆனால் விஞ்ஞான,கலைத்துறையினரிடம் வார்த்தைகளை கையாள்வதில் இலாவகம் தென்படும் என்பது நானட கண்டறிந்த உண்மை...
அதுதான் உங்களிடம் கேடடேன்....
நன்றி

இளசு
28-01-2007, 09:16 PM
சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம்...
நிலா???


இங்கே லெனினின் கவிதையையும் அல்லிராணி அவர்களின் பதில் கவிதையையும் படியுங்கள்...
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=165447#post165447

பிறகு ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப்பார்த்தேன்
நிலவில் குளிரில்லை...

எனப் பாடவே மாட்டான்...


பிச்சியின் இந்த நல்ல கவிதைக்குப் பாராட்டுகள்..

kavitha
29-01-2007, 10:15 AM
எந்தவரியையும் ஒதுக்கமுடியா அழகிய கவிதை. ஆழ்மனதினைத்தொட்டக்கவிதை. நன்றாக இருக்கிறது.


வர்ணத்திலும், வாழ்க்கையிலும்
இயற்கையாகவே
இருந்துவிட்டேன்
.....
என் கீதங்கள் யாரின்
செவிக்கும் எட்டாதவாறு
மண்ணில் கலந்திடுவேன்..
என் கீதங்கள் யாரின்
செவிக்கும் எட்டாதவாறு
மண்ணில் கலந்திடுவேன்..
எ சிம்பதி டச்..

கவிதையைப்பற்றி விளக்கிக்கொண்டே இருக்கலாம்;அது பார்வையாளர்களின் கண்ணோட்டமே அன்றி வேறெதுவுமில்லை.
தொடர்ந்து எழுதுங்கள்.

ஷீ-நிசி
29-01-2007, 10:39 AM
தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்?
டி.ராஜேந்தர் எழுதிய வரிகளில் என்னைக் கவர்ந்தவை..

நண்பர் இளசு அவர்களே!

டி.ராஜேந்தரின் இந்த வரிகளும் உங்களுக்கு பிடிக்காமல் இருக்காது என்று நம்புகிறேன்...

"தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரைப்பூ மீது விழுந்தனவோ!?
அதைக் கண்ட வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான்
உன் கண்களோ"

எனக்கு மிக மிக பிடித்த வரிகள்

பிச்சி
29-01-2007, 02:54 PM
எந்தவரியையும் ஒதுக்கமுடியா அழகிய கவிதை. ஆழ்மனதினைத்தொட்டக்கவிதை. நன்றாக இருக்கிறது.

எ சிம்பதி டச்..

கவிதையைப்பற்றி விளக்கிக்கொண்டே இருக்கலாம்;அது பார்வையாளர்களின் கண்ணோட்டமே அன்றி வேறெதுவுமில்லை.
தொடர்ந்து எழுதுங்கள்.

மிக்க நன்றி கவி அவர்களுக்கு... இந்த பதிவில் உங்களைப் பற்றிதான் பேசிக்கொண்டோம். நீங்க வந்திட்டீஇங்க. நல்வரவு

பிச்சி
29-01-2007, 02:54 PM
இளசு, ஷீ ஆகியோருக்கு நன்றி..

பிச்சி
29-01-2007, 02:56 PM
நன்றி இளசு அண்னா!!! இந்த கவிதை எல்லா ஆண்களையும் சாடி எழுதவில்லை.. எனக்குத் தொந்தரவு செய்தவனை மட்டுமே நினைத்து எழுதினேன்...

பிச்சி
29-01-2007, 02:58 PM
எந்தத்துழறயில் இருந்தாலும் ஆர்வம் திறமை இருக்கலாம்..
ஆனால் விஞ்ஞான,கலைத்துறையினரிடம் வார்த்தைகளை கையாள்வதில் இலாவகம் தென்படும் என்பது நானட கண்டறிந்த உண்மை...
அதுதான் உங்களிடம் கேடடேன்....
நன்றி

அதெல்லாம் ஒன்னுமில்லை. புஸ்தகம் நிறய் படித்தாலெ போதும்.... புஸ்தக அறிவே எல்லாத்துக்கும் சசிறந்தது. அதுபோல பிறப்பிலிருந்தே ஒரு கவிதைத் தனம் இறைவன் கொடுத்ட்த வரம். நினைத்த உடனே கவிதை எழுத யாராலும் முடியுமா? (காதலர்கள் த்விர)

பிச்சி
29-01-2007, 03:00 PM
நன்றிஙெல்லாம் எதற்கு நீங்கள் கவிதைகளை தெறியுங்கள்....
நாங்கள் படித்துக்கொள்கிறோம்...

நண்பர் மதுரகன் அவர்களுக்கு..... இங்கே தெறித்தால் காணாமல் போய்விடுமே? பறித்தால் சூடலாமே?

பிச்சி
29-01-2007, 03:06 PM
கண்களில் கருவும் உருவும் அடக்கம். பெண்களில் காதலும் கவிதையும் அடக்கம். என் தோட்டத்தில் நான் பறித்த பூக்களை இங்கே விற்பனையில்லாமல் தொடுத்து வைக்கிறேன்.. அள்ள அள்ள மணம் அதிகரிக்கும்.... பிச்சிப் பூவை உங்கள் கொண்டையில் சூடுங்கள் தோழிகள் மற்றும் சகோதரிகள். வாசனை நுகர்ந்து பாருங்கள் தோழர்கள், சகோதரர்கள்..
என்றும் வாடாமல் இருக்கத்தான் உங்கள் கைகளில் தவழவும் கண்களில் பரவவும் கொய்து வைக்கிறேன். பிச்சியை என்றும் சூடிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்............

பிச்சி

ஷீ-நிசி
29-01-2007, 03:08 PM
நிலவை நிந்தித்தே
நித்தம் கூடிடுவார்கள்

நல்ல அனுபவித்து எழுதின வார்த்தைகள்.. சிறப்பாக உள்ளது கவிதை

பிச்சி
29-01-2007, 03:09 PM
நிலவை நிந்தித்தே
நித்தம் கூடிடுவார்கள்

நல்ல அனுபவித்து எழுதின வார்த்தைகள்.. சிறப்பாக உள்ளது கவிதை

மிக்க நன்றி ஷீ அண்ணா

அறிஞர்
29-01-2007, 03:28 PM
எந்தவரியையும் ஒதுக்கமுடியா அழகிய கவிதை. ஆழ்மனதினைத்தொட்டக்கவிதை. நன்றாக இருக்கிறது.

எ சிம்பதி டச்..

கவிதையைப்பற்றி விளக்கிக்கொண்டே இருக்கலாம்;அது பார்வையாளர்களின் கண்ணோட்டமே அன்றி வேறெதுவுமில்லை.
தொடர்ந்து எழுதுங்கள்.
கூப்பிட்ட குரலுக்கு.. வந்து பதில் கொடுத்த தோழிக்கு நன்றி...

நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.... தங்களின் வரவு.. புது கவிஞர்களுக்கு தெம்பு தரும்.

அறிஞர்
29-01-2007, 03:29 PM
பிச்சியின் பூக்கள் அனைத்தும் இந்த பதிவில் இணைந்து.. பூந்தோட்டமாக காட்சியளிக்கிறது..

தொடரட்டும் உங்கள் கவிமழைகள்...

பிச்சி
29-01-2007, 03:36 PM
பிச்சியின் பூக்கள் அனைத்தும் இந்த பதிவில் இணைந்து.. பூந்தோட்டமாக காட்சியளிக்கிறது..

தொடரட்டும் உங்கள் கவிமழைகள்...

நான் வெறும் பறவைதான் என நினைத்தேன்
காற்றால் வேகமாக சுழன்று வந்து நின்றது
இறக்கைகளின் சுழற்சியில்
பூமியின் புழுதிகள் பறந்து போக
என் கைகளின் நுனியைப் பற்றியே
வானம் இழுத்துச் சென்றது.
வானம் இதுநாள் வரைப் பார்த்ததில்லை
புழுதிகளும் பூச்சிகளும் இங்கில்லை
என் கைகளின் பிடி இருக்கமாக
மேலும் உயர்ந்தேன்.
சொர்க்கமில்லை என்று யார் சொன்னார்கள்?
இந்த றெக்கைத் தலைவன்
கூட்டிச் செல்லுகிறான் பார் சொர்க்கம்
முகம் பார்க்க முடியாது
என்றாலும்
அவனுக்கு வலிக்காமல்
அகம் பார்க்க முடிகிறது
இதயத்தை நோண்டி..
கைப்பிடிகள் மெல்ல தளர்ந்தாலும்
என்னால் ஏனோ மீண்டும் வரமுடியவில்லை
இந்த பூமியின் ஓர் பகுதிக்கு...

அறிஞர் அண்ணா! உங்களுக்குத்தான் இந்த கவிதை!!! பூக்களை ஒன்றாக கோர்த்ததற்க்கு நன்றி...

பிச்சி
29-01-2007, 03:42 PM
http://i157.photobucket.com/albums/t41/pichiflower/1223.jpg

எத்தித் தெரிக்கிறாய்
வாழைக்குருத்து போன்ற
உன் பருவக் கால்களால்
பளிங்கு போல தெரிக்கிறது
உன் மீது ஏக்கமாய்
இத்தனை நாள்
தவமிருந்த தண்ணீர்!

ஏன் என்று கேட்கிறது நீர்!
கொலுசுகளின் சப்தம் கேட்டாயா
என்று சொல்கிறாய்
அடிப் பாவாய்!
நீருக்கு கண்கள் உண்டு...
செவியிருக்குமா? உன் சொல் கேட்க...

அட!! பேசிவிட்டதே தண்ணீர்!
கொலுசோசைக்கு
நீரும் அடிமையோ?
கால்களின் வெட்கம்
தெறித்த நீராய் தெரிகிறது..
நில்
ஓடாதே!
சலசலத்துப் போயிருக்கும்
நீருக்கு என்ன பதில் வைத்திருக்கிறாய்?

அறிஞர்
29-01-2007, 04:05 PM
நான் வெறும் பறவைதான் என நினைத்தேன்
காற்றால் வேகமாக சுழன்று வந்து நின்றது
இறக்கைகளின் சுழற்சியில்
பூமியின் புழுதிகள் பறந்து போக
என் கைகளின் நுனியைப் பற்றியே
வானம் இழுத்துச் சென்றது.
வானம் இதுநாள் வரைப் பார்த்ததில்லை
புழுதிகளும் பூச்சிகளும் இங்கில்லை
என் கைகளின் பிடி இருக்கமாக
மேலும் உயர்ந்தேன்.
சொர்க்கமில்லை என்று யார் சொன்னார்கள்?
இந்த றெக்கைத் தலைவன்
கூட்டிச் செல்லுகிறான் பார் சொர்க்கம்
முகம் பார்க்க முடியாது
என்றாலும்
அவனுக்கு வலிக்காமல்
அகம் பார்க்க முடிகிறது
இதயத்தை நோண்டி..
கைப்பிடிகள் மெல்ல தளர்ந்தாலும்
என்னால் ஏனோ மீண்டும் வரமுடியவில்லை
இந்த பூமியின் ஓர் பகுதிக்கு...

அறிஞர் அண்ணா! உங்களுக்குத்தான் இந்த கவிதை!!! பூக்களை ஒன்றாக கோர்த்ததற்க்கு நன்றி...

அன்பர்களுக்கு உதவி செய்திட நாங்கள் இருக்கிறோம்...

என்ன உதவியென்றாலும் உடனுக்குடன் செய்து கொடுப்போம்... இது எங்கள் பணி பிச்சி...

தங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான்..

தாங்கள் தொடர்ந்து படைப்புக்களை கொடுத்து.. அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தவேண்டும் என்பதே...

மதுரகன்
29-01-2007, 05:04 PM
நண்பர் மதுரகன் அவர்களுக்கு..... இங்கே தெறித்தால் காணாமல் போய்விடுமே? பறித்தால் சூடலாமே
விண்பொருட்களிலிருந்து தெறித்து வந்த நட்சத்திரங்கள் நித்தம் ஒளிவீச
சூடப்பட்ட பூக்கள் ஓர் நாளில் வாடிவிடுகின்றனவே பிச்சி..

மதுரகன்
29-01-2007, 05:15 PM
ஏன் என்று கேட்கிறது நீர்!
கொலுசுகளின் சப்தம் கேட்டாயா
என்று சொல்கிறாய்
அடிப் பாவாய்!
நீருக்கு கண்கள் உண்டு...
செவியிருக்குமா? உன் சொல் கேட்க...


அற்புதமான வரிகள் பிச்சி
தொடருங்கள் எங்கள் ஆதரவு உண்டு..

அறிஞர் அண்ணா எனது பதிவுகளையும் தொகுத்து தந்துள்ளார்...

pradeepkt
30-01-2007, 04:19 AM
காதல் என்னும் மந்திரத்தில் கட்டுண்டோர் பார்வையில் நீருக்குக் காதுகளும் கொலுசுக்கு வாயும் வருவதில் ஆச்சரியம் என்ன?

தெறிக்கும் நீருக்கும் தெரியும் இப்படி ஒருநாள் தன்னைக் குறித்தும் கவிப்பார்கள் என்று!

ஆதவா
30-01-2007, 03:47 PM
பிச்சிப் பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டனவே!!! தோட்டமாய் இருந்து எல்லார் மனதிலும் பூக்கவும் செய்து ஆவலுருங்கள்..

அறிஞர்
30-01-2007, 03:48 PM
தண்ணீரை பேச வைத்த...
கொலுசோசைக்கு... அடிமைகள்..
இன்னும் எத்தனை பேர்களோ.....
----
கொலுசு சத்தம் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.... இங்கு... மீண்டும் சிந்திக்க தூண்டிய பிச்சிக்கு வாழ்த்துக்கள்...
---
பிச்சி.. வரிகள் தெறிக்கும் என்று தானே வரும்...

முடிந்தால் மாற்றிவிடுங்கள்.......
------

பிச்சி
01-02-2007, 03:02 PM
உங்கள் எல்லாருக்கும் நன்றி

பிச்சி
01-02-2007, 03:19 PM
உடைந்துபோன முகிலனிடமிருந்து
பொடிப் பொடியாய் வீழ்கிறாய்
விண்ணிலிருந்து நேராய்
மண்ணுக்கு.
எங்காவது உடைந்த பொருள்கள்
உதவுமா மனிதத்திற்கு?
உடைந்த குழல்
ராகமிட்டதுண்டா?
நீ வாசிக்கிறாயே!

உன் ஒரு துளியை
இரு பிளவாக்கி
ஒன்றில் ஆன்மீகமும்
மற்றொன்றில் அற்பாசையும்
பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது
என்னால் மட்டுமே உணரமுடியும்
யாருக்கு வழங்குவது
யாருக்கு விடுப்பது
என்று நீ புலம்புவது...
உன்னையறியாமல் ஆத்மா
செல்லுகிறது எல்லாருக்கும்!

விழுந்து தெறித்த உயிரிலிருந்து
பல உயிர்கள் பிரித்து
மண்ணிலே அழுகிறாய்
அந்த உயிர்களில்
ஒரு உயிராவது
எனக்கு அறிமுகம்
செய்யமாட்டாயா?
ஆன்ம உணர்வின்றி தவிக்கும்
ஜென்மங்களுக்கு உதவுகிறாய்!
நண்பனை அறிமுகம் செய்யமாட்டாயா?

இரு துளிகளின் ஊடலில்
பிரிந்து இன்னொரு துளி
விழுந்துவிடுமே!
அதை என் கையில்
இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்
கன்னத்தில் வழிந்தோடும்
கற்பனையாக அதைத்
துடைத்துக் கொள்வேன்
நீ வெகுளித் தனமான
முகத்தால் சிரித்திடுவாய்

என் கரங்களின் அழுக்குகள்
மென்று தின்றுவிடுவாய்!
முகத்தின் முடிச்சுகளை
மெல்ல அவிழ்திடுவாய்
என் அதரத்தில்
ஒரு முத்தம் தருவாய்
அங்கே வெடித்துப் போன
சில வரிகளை
முத்தத்தாலே வைத்தியம் செய்வாய்

சில வேளைகளில்
நான் இன்புறும்போது
கூந்தலை விரித்து
சகதியில் ஆடுவேன்
இச் இச் என்று
தலையில் கொட்டுவாய்
என் கூந்தல் இழையில்
வழிந்தோடும் ஓர் துளியைக்
கண்டு ரசிப்பேன்
காலமெல்லாம்

பின்னிரவில்
தொந்தரவு செய்திடுவாய்
நோயாக
மீண்டும் என் பற்கள்
தெரிய சிரிப்பேன்
உன்னுடன் கூத்தாடியதை நினைத்து

அன்றிலிருந்து
இன்றுவரை
என் நண்பனாக
காதலனாக
கணவனாக
என் துப்பட்டாவின்
நரம்பில் தங்கி
இதயத்தின் கதவு வழி
செல்கிறாய் ஆத்மாவினுள்

உனக்கொரு உருவமிருந்தால்
மழையே!
உன் இதயத்தை பிடித்து
தொங்குவேன்
பூட்டிவிடுவாயா எலும்புகளை வைத்து?

மதுரகன்
01-02-2007, 03:40 PM
வாழ்த்துக்கள் பிச்சி..

சில வேளைகளில்
நான் இன்புறும்போது
கூந்தலை விரித்து
சகதியில் ஆடுவேன்
இச் இச் என்று
தலையில் கொட்டுவாய்
என் கூந்தல் இழையில்
வழிந்தோடும் ஓர் துளியைக்
கண்டு ரசிப்பேன்
காலமெல்லாம்

வித்தியாசமாய் செல்கிறது கவிதை..
ஆனாலும் உங்களுக்குரிய ஏதோ ஒரு கவித்துவம் விடுபட்டிருப்பதுபோல தோன்றுகின்றது...

அதற்காக கவிதையில் குறையிருப்பதாய் எண்ணவேண்டாம் அது அருமை...
உங்கள் இயல்பிலிருந்து மாறுபட்ட ஒரு வரியோடல் அவ்வளவே...

பிச்சி
03-02-2007, 02:21 PM
மிக்க நன்றி மதுரகன்......... மூளைக்கு தோன்றியது எழுததனேன். அடுத்த கவிதையாவது நீங்கள் எதிர்பாக்கும்படி இருக்குதா பாருங்க/

மதுரகன்
03-02-2007, 04:55 PM
இயற்கையுடன் கலந்து சமுதாயத்திற்கு ஓர் செய்தி
உணர்த்தியிருக்கிறீர்கள்...
அருமை பிச்சி

மாலைச் சூரியனைத்
தன் ஓரக் கண்ணால் சிமிட்டும்
கீத்துக் கீத்தாக கிழிந்து
அதேசமயம் அழகாய் வடிந்து
இருக்கும் இரு இலைகளின் மேல்
முள் பாதுகாப்பில் விழித்திருக்கும்
ஒரு சிவப்பு நிற மெல்லிதழ்


இந்த வரிகளைப்படிக்கும் போது எனது சமீப கால கவிதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன..
அவற்றை அவ்வளவாக இன்னமும் பிரசுரிக்கவில்லை..
ஆனால் 2050களில் ஓர் நாள் படித்திருப்பீர்கள்..
அதுபோல் நீண்ட வசனங்களில் வர்ணிப்பு...

உண்மையில் அது அற்புதமான ஓர் வகை இருப்பினும் பலர் அதை வசனங்கள் என்பார்கள் அது எம் துர்ப்பாக்கியமே....

நீங்கள் தளராது எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்

பிச்சி
04-02-2007, 12:27 PM
மிக்க நன்றி மதுரகன் அவர்களுக்கு....

பிச்சி
05-02-2007, 12:55 PM
http://bp2.blogger.com/_3cZp84ktgHs/RboMH3RLuuI/AAAAAAAAACU/zD9QbTWaRw4/s320/colorsinlife.jpg



கதிர் எழுப்பிய உன்னை
வரைந்துவிட்டேன் காதலோடு
உன் காதல் வெட்கி ஓடும் வண்ணம்.
நின் விழியிரண்டில் ஒன்று
என் விழியில் இருப்பது கண்டு
குதித்தாடுகிறதோ
திமிங்கிலம் வேதனையோடு?
அலைகளும் தூங்க
மறுக்கிறதோ நிந்தனையோடு!!???

உன் முகத்தில் தெரிவதெல்லாம்
கதிரவன் கீற்றுகளா?
கண்கள் காணாமல் போகிறதே!
அலைகளின் ஓதங்களா?
விழியுரண்டை அலைந்து திரிகிறதே!
உன்னோடு எழுந்தாடும் கதிரின்
இயக்கமும் என் தூரிகையின்
வர்ண கலப்பில் தூங்கிவிடும்
ஆதலால் மூடிய
இன்னொரு இமை
திறந்துப் பார் !
வெட்கித் தலை குனிந்து
ஓடும் உன் காதலியாகிய என்னை......

பென்ஸ்
05-02-2007, 01:27 PM
கண்களில் கருவும் உருவும் அடக்கம். பெண்களில் காதலும் கவிதையும் அடக்கம். என் தோட்டத்தில் நான் பறித்த பூக்களை இங்கே விற்பனையில்லாமல் தொடுத்து வைக்கிறேன்.. அள்ள அள்ள மணம் அதிகரிக்கும்.... பிச்சிப் பூவை உங்கள் கொண்டையில் சூடுங்கள் தோழிகள் மற்றும் சகோதரிகள். வாசனை நுகர்ந்து பாருங்கள் தோழர்கள், சகோதரர்கள்..
என்றும் வாடாமல் இருக்கத்தான் உங்கள் கைகளில் தவழவும் கண்களில் பரவவும் கொய்து வைக்கிறேன். பிச்சியை என்றும் சூடிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்............

பிச்சி

பிச்சி...
பணி பளு அதிகமான காலங்களில் மன்றம் வந்து வாசித்து மட்டுமே போய்விடுவேன்....

ஆனாலும் மனம் கனக்கும்...
உறங்க எத்தனிக்கும் அந்த சில நொடிகளில் ..
நாளைய நினைவுகளை வரிசைப்டுத்தும் அந்த சில நொடிகளில் (நான் படுத்து உடனயே தூங்கிடுவேன்)...
கவிதைக்கான பதில்களும் எழுதி வைப்பேன்...
"எங்கே எனது கவிதை, கனவில் எழுதி மடித்த கவிதை" என்று மீண்டும் அடுத்த நாள்...
நேற்று யோசித்ததை யோசிக்காமல் அடுத்த பதிலுக்காய்....

உனக்காக எழுதி வைத்த பதில்கள் எல்லாம் அப்படிதான் போய் விட்டன...

பிச்சி... ஒரு ஆலோசனை மட்டும்....
வரிகளை குறைக்க முயர்ச்சிக்கவும்...
முழு கவிதைகள்... ஆழமான பாதிப்புகள் கொடுக்கும். என்பதில் சந்தேகமில்லை...

ஆனால்... துவக்க காலத்தில், சிறு கற்க்களை எறிந்து.. அப்புறமா முழு கல்லை போட்டு எங்களை குளோஸ் பன்னு...

பிச்சி
05-02-2007, 01:37 PM
பிச்சி...

பிச்சி... ஒரு ஆலோசனை மட்டும்....
வரிகளை குறைக்க முயர்ச்சிக்கவும்...
முழு கவிதைகள்... ஆழமான பாதிப்புகள் கொடுக்கும். என்பதில் சந்தேகமில்லை...

ஆனால்... துவக்க காலத்தில், சிறு கற்க்களை எறிந்து.. அப்புறமா முழு கல்லை போட்டு எங்களை குளோஸ் பன்னு...


அண்ணா இது முதலிலே யே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் நான் எப்போதும் கவிதைக்கு யோசிக்க மாட்டேன். வந்தால் எழுதலாம் இல்லாட்டி விட்டுவிடுவென். வந்தால் அலை அடித்த மாதிர்ரி வரும் இல்ல. வரவே வராது. அப்படி என்னால் அடக்க முடியவில்லை. இல்லாட்டி தனித்தனியா போடலாம். குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் அப்படித்தான். வந்துகிட்டே இருக்கு. அதனால்தான் பாகம் பிரிச்சு எழுதறேன். சின்ன சின்ன கவிதைகள் அங்கங்க நட்புகவிதையில் எழுதறேன் பாருங்க. வார்த்தைகளை சுருக்கவும் தெரியல.. வீணா போக கூடாதுங்கறதுக்காக எல்லாமே எழுதிடறேன். ஆனா கண்டிப்பா முயற்சி செய்வேன்.

சேசே கல்ல போடமாட்டென். பாறாங்கல்லுஇதான் :D :D

பிச்சி
07-02-2007, 12:23 PM
http://i157.photobucket.com/albums/t41/pichiflower/i8cono1.jpg

கூத்தாடுகிறதே பார்
என் எண்ணத்தில் அடிப்பட்ட
மரத்து இலைகள்!
பறித்துவிட்டதாலோ என்னவோ
பூவுக்கும் என்மீது கோபம்தான்.
பூவின் சொந்தமே! கலங்காதிரு
சிந்தனைகளினால் உனக்கொரு
தோட்டம் செய்திடுவேன்,...

இச்சூரியனைப் பார்
என்னை நகைக்கிறது...
அறியாத ஜடம்..
நான் இதை நிலவென்று
நினைத்துக்கொண்டேனாம்!
நினைவுகளினால் கொண்டது யாவும்
தோற்றப் பிழையா?

கடலினைப் பார்
எழுந்தாடுகிறது... எங்கே!?
விழுந்துவிட்ட இலைகளின் மத்தியில்
ஒருசேர கண்களில் தெரிகிறது
உனக்கு மட்டும் காட்சிப் பிழை..

என் நுனியில் சொக்கும்
பூ வழி சொல்கிறது உன்னை அடைய,
அதோ பார் வழி தெரிகிறது.
எங்கே?
கேட்காதே!
வழி அடைந்துதான் இருக்கிறது உனக்கு..
கண்களின் கோளாறுகள்............

பிச்சி
08-02-2007, 01:06 PM
புறவிதழ் ரணம்படியா
பொற்றாமரைக் கூந்தல்!
கொடியிடைக் கோலம் கண்ட
பித்திகப் பூங்குறுநல்.

செவ்வானத்தடி குமுறலில்
புதிதாய் முளைத்திட்ட
நறுமுகையின் மறுபிரவேசம்!
எத்திசை வைத்தாலும்
கால்தடத்திலேயே ஓவியம் படைக்கும்
ரவிவர்மாவின் சொப்பன நாயகி!

மலடற்ற இதயத்தைக்
காணவைத்தே புன்னகையின்
நெஞ்சை நெக்கும் கொடிமுல்லை!
காயமின்றி கால்மடக்கி
நறுமணத்தைச் சூழ்ந்து
பூமீதேகிய பூக்களின் பிள்ளை.

முடியிழைத் தவறலில்
ஏங்கிய மல்லிகைக்கு
மூச்சுக் காற்றால்
வாசனை தந்த நீரூற்று.
இனியில்லை என்று
இலைகளைக் கொட்டிவிட்ட
தவிட்டுமரத்திற்கு
ஸ்பரிசத்தாலே உயிர்கொடுத்த
மென் காற்று.

அறுபதினாயிரம் ராகங்கள்
தோற்கும் அதி அதிசய ராகம்!
இசைத்திடவே பிரம்மன்
அசைக்கும் கண்ணனின்
புல்லாங்குழல்....

கதிருக்குள்ளும்
காதலுக்குள்ளும்
புதிருக்குள்ளும்
ஈதலுக்குள்ளும்
ஒளிந்திருக்கும்
ஓர் நிஜமான கற்பனை......

நான்....
நானேதான்......

மதுரகன்
08-02-2007, 05:35 PM
தோண்டிய குறிப்புகளை விடு
அல்லது
விஷமிழந்த கள்ளிச் செடியாக
அழுதிடுவேன் வர்ணமற்ற ரத்தத்தோடு
எண்ணுவதை விடு
நாட்களையும்
என்னையும்.....



கூத்தாடுகிறதே பார்
என் எண்ணத்தில் அடிப்பட்ட
மரத்து இலைகள்!
பறித்துவிட்டதாலோ என்னவோ
பூவுக்கும் என்மீது கோபம்தான்.



முடியிழைத் தவறலில்
ஏங்கிய மல்லிகைக்கு
மூச்சுக் காற்றால்
வாசனை தந்த நீரூற்று.
இனியில்லை என்று
இலைகளைக் கொட்டிவிட்ட
தவிட்டுமரத்திற்கு
ஸ்பரிசத்தாலே உயிர்கொடுத்த
மென் காற்று.


அற்புதமான சாடல்..
வித்தியாசமான சிந்தனைகள்...
நேர்த்தியான வரிகள்..
இலக்கிய ஓசை..
வேறென்ன கூற..
வாழ்த்துக்கள் பிச்சி.. உங்களை வாழ்த்தும் தகுதி கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது என்னில்..

ஆனால் ஒன்று..
ஆசுவாசப்படுத்தவாவது கொஞ்சம் இடைவெளி விடுங்கள்..
தொடர்ந்து சாடாதீர்கள்...
உங்கள் கவிதைகள் சில தவிர்க்கப்பட அவை காரணாமாயிருக்க அனுமதிக்ககூடாது..
ஆகவே தேவை சிறிது இடைவெளி..

பிச்சி
09-02-2007, 01:08 PM
அற்புதமான சாடல்..
வித்தியாசமான சிந்தனைகள்...
நேர்த்தியான வரிகள்..
இலக்கிய ஓசை..
வேறென்ன கூற..
வாழ்த்துக்கள் பிச்சி.. உங்களை வாழ்த்தும் தகுதி கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது என்னில்..

ஆனால் ஒன்று..
ஆசுவாசப்படுத்தவாவது கொஞ்சம் இடைவெளி விடுங்கள்..
தொடர்ந்து சாடாதீர்கள்...
உங்கள் கவிதைகள் சில தவிர்க்கப்பட அவை காரணாமாயிருக்க அனுமதிக்ககூடாது..
ஆகவே தேவை சிறிது இடைவெளி..


நீங்க சொல்வது கரெட்.. ஆன என்ன செய்ய? இன்னும் ஒருமாதம்தான் எழுதுவேன். அப்பறம் எப்பவாச்சும்தான். அதனால இருக்கறவரைக்கும் எழுதிட்டு அப்பறம் மெதுவா போயரலாம்.... உங்க்க்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி

அறிஞர்
09-02-2007, 02:08 PM
நீங்க சொல்வது கரெட்.. ஆன என்ன செய்ய? இன்னும் ஒருமாதம்தான் எழுதுவேன். அப்பறம் எப்பவாச்சும்தான். அதனால இருக்கறவரைக்கும் எழுதிட்டு அப்பறம் மெதுவா போயரலாம்.... உங்க்க்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி
நேரம் கிடைக்கும்பொழுது எழுது குவியுங்கள்...

எல்லாவற்றையும் சேமித்து வையுங்கள். பிற்காலங்களில் நூலாக வெளியிட உதவும்....

கவிதைகள் ஒவ்வொன்றையும் தனி தனியாக விமர்சனம் செய்ய ஆசை.. நேரம் கிடைக்கும்பொழுது அவசியம் செய்கிறேன்.

பிச்சி
09-02-2007, 02:14 PM
நேரம் கிடைக்கும்பொழுது எழுது குவியுங்கள்...

எல்லாவற்றையும் சேமித்து வையுங்கள். பிற்காலங்களில் நூலாக வெளியிட உதவும்....

கவிதைகள் ஒவ்வொன்றையும் தனி தனியாக விமர்சனம் செய்ய ஆசை.. நேரம் கிடைக்கும்பொழுது அவசியம் செய்கிறேன்.

அறிஞர் அவர்களுக்கு.... நான் சும்மா எழுதுகிறேன். நூலாக வெளியிடும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. என்னால் அது முடியாது.. இருந்தாலும் உங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி. உங்கள் விமர்சனங்களை அவசியம் எதிர்பார்க்கிறேன்.

அறிஞர்
09-02-2007, 02:16 PM
அறிஞர் அவர்களுக்கு.... நான் சும்மா எழுதுகிறேன். நூலாக வெளியிடும் அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. என்னால் அது முடியாது.. இருந்தாலும் உங்கள் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி. உங்கள் விமர்சனங்களை அவசியம் எதிர்பார்க்கிறேன்.
முதலில் உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள்..
உங்களால் முடியும்.. எதிர்காலத்தில் நூல் வெளியிடுவீர்கள்..... என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பெஞ்சமினும் தங்களை புகழ்ந்து கூறியுள்ளார்.

பிச்சி
09-02-2007, 02:32 PM
எனக்கு ஊக்கமளித்த ஈழத்து (கவிஞை) சகோதரியைப் பற்றிய கவிதை.....

அத்திப்பூவின் அடிவயிறைத்
தொட்டுப் பார்த்து
நறுமணத்தின் அந்தரங்கங்களை
அறிந்து கொண்ட வெண்புறா

அவலட்சணத் தாமரையை
அள்ளியெடுத்து தன்
மென்கரங்களில் தொட்டுத் துலாவி
ஸ்பரிசக் காற்றாலே
சொரூபமாக்கும் ஆற்று மல்லிகை!

அவனியெங்கும் அலைந்து திரிந்து
காலவரையறையில் கூட்டுக்குள் நுழைந்து
புதுரகக் குருவியாக, கிடைத்த் இரைகளை
மரத்தில் இரைக்கும் ஈழத்து மண்கொடி

குறிஞ்சிப் புஷ்பத்தின்
புணர்ச்சியை
நெருக்கத்தில் கண்டுவிட்டு
அதன் சூட்சுமத்தை
உலகிற்களித்த பைங்கொடி

வல்லின வார்த்தைகளின்
பொருட்சிதைவைக் கண்டு
இனி மெல்லினமே என்றும்
சிறந்ததாய்க் கவி கொடுக்கும்
அதியற்புத கவிமங்கை

முரித்துவிட்ட அம்புகளின்
சிதறல்களை மூச்சுக்காற்றால்
ஒட்டி வைத்து, சிகையிழையின்
முடிச்சுகளால் கட்டி வைத்த
தேவலோகத்துப் பதுமை!

மேல்நோக்கிய விழிகளைக் காட்டி
மிளகுச்சாற்றின் கசப்புகளை
ருசித்து விட்டு, அது இனிப்பேதான்
என்றுணர்த்திய வீரியஅழகி

எங்கள் காய்ந்த மல்லிகையை
வரிகளாலேயே புதுப்பிக்கிறாய்
ஒடிந்துபோன முல்லையை
தடவித் தடவியே ஒட்டுகிறாய்

பூந்தோட்டத்தில் ஒரு ராணியாக
பூக்களைப் பிரசவிக்கிறாய்
எம் சருகுகளையும்
காலத்தடத்தால் மெய்ப்பிக்கிறாய்

வாழ்க என் சகோதரியே!
உன் வயதை குறிஞ்சுப்பூவாய் நினைத்துக் கொண்டு
ஆயிரம் பூக்கள் மலரக் கண்டு
வாழ்வாயே!!!!

இப்படிக்கு அன்பு தமக்கை
பிச்சி (எ) பிரபா. Bsc.,

பிச்சி
09-02-2007, 02:36 PM
முதலில் உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள்..
உங்களால் முடியும்.. எதிர்காலத்தில் நூல் வெளியிடுவீர்கள்..... என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பெஞ்சமினும் தங்களை புகழ்ந்து கூறியுள்ளார்.

என் மீது நீங்க வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி.... இப்பவே கவிதை எழுதக்கூடாதுங்கற சட்டம் வீட்ல இருக்கு... நாளைக்கு கணவன் அமையும்போது தெரியும்.:)

maganesh
09-02-2007, 03:49 PM
நீங்க சொல்வது கரெட்.. ஆன என்ன செய்ய? இன்னும் ஒருமாதம்தான் எழுதுவேன். அப்பறம் எப்பவாச்சும்தான். அதனால இருக்கறவரைக்கும் எழுதிட்டு அப்பறம் மெதுவா போயரலாம்.... உங்க்க்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி
குறுகிய நேரத்தில் உங்களால் நிறவாக ரொம்ப எழுத முடியும். தளராது எழுதுங்கள்.

பிச்சி
11-02-2007, 03:23 AM
குறுகிய நேரத்தில் உங்களால் நிறவாக ரொம்ப எழுத முடியும். தளராது எழுதுங்கள்.

ரொம்ப நன்றிங்க

பிச்சி
17-02-2007, 01:34 PM
காதல் உணர்வுகளுடன்
காற்றை மெல்ல விழுங்கும்
பூக்களின் ராஜ குமாரி அவள்!

மெல்ல ஒளியிழந்து
சாயம் கலைந்த
சாயுங்கால நிலவுக்கு
பாலூட்டும் அன்னை அவள்!

வலியேதும் இல்லாமல்
புன்னகையும் சிதறாமல்
புற்களின் மேல் நடக்கும்
பூச்சிகளின் ராணி அவள்!

சிதறிய தானியங்களை
கொத்தித் தின்னும்
கோலவிழி மென் குயிலினும்
மென்குரல் கொண்ட
பெண்குயில் அவள்!

பாலைநிலப் பூக்களை
சோலை நிலப் பூக்களாய்
மாற்றி, புத்துணர்ச்சியாய்
காட்சிக்கு காட்சி
விருந்தளிக்கும் ஏந்திழை அவள்!.

நிதம் நிதம் என்னைப் பார்த்து
வெட்கிக் குனிந்து
மண்ணின் மடியில் சரியும்
பூங்குறுநல் பூங்கா அவள்!

மின்னிய மின்னல்களின்
சிதைவில், சிதையாமல்
தோன்றிய
மின்னல்கொடி அவள்!

பிக்காசோ கைகளில்
விசித்திர வண்ணம் பாய
நிழலாய் சிரிக்கும்
சித்திரம் அவள்!

கண்களில் நடனமிடும்
காவியத் தலைவியும்,
கோவலனின் காதலியுமான,
கண்ணகியின் சலங்கை அவள்!.

காதல் இறகுகளாய்ப்
பறந்து, பார்வதியின் கூந்தலில்
சிக்கிச் சிரிக்கும்
புஷ்பவதி அவள்!

அண்டார்டிகா வெப்பத்தில்
அலைந்து திரியும்
குளிர் பறவைகளையும் விட
நயனமான பெண்கரடி அவள்!

நிலத்தில் ஊடுறுவி
அழகுக்கு முளைத்திடும்
மங்கள மஞ்சளிலும்
இணையில்லா வர்ணம் அவள்

தரித்திர வாழ்வினிலும்
என்னைப் பார்த்து வியந்து
சிரித்திடும் அழகு ஓவியம்
அவள்.

அவள் அவள் என்று
அழைத்தது
அன்னையைத் தான்
அவள் எனக்கு என்றும்
அழகிதான்.

மதுரகன்
19-02-2007, 04:32 PM
பாலைநிலப் பூக்களை
சோலை நிலப் பூக்களாய்
மாற்றி, புத்துணர்ச்சியாய்
காட்சிக்கு காட்சி
விருந்தளிக்கும் ஏந்திழை அவள்!.

நிதம் நிதம் என்னைப் பார்த்து
வெட்கிக் குனிந்து
மண்ணின் மடியில் சரியும்
பூங்குறுநல் பூங்கா அவள்!


உங்களிடம் வகை வகையாய் விருந்திருக்கிறது பிச்சி
வீட்டைப்பற்றி பயப்படாது எழுதுங்கள்...

எனக்கு கவிதை எழுதத்ததெரியும் என்பதே வீட்டில் எவருக்கும் தெரியாது..

நீங்கள் அருமையாய் எழுதுங்கள் ஆனால் நிதானியுங்கள்
உங்களுக்காக அல்ல எங்களுக்காக..
உங்களிடம் தொடர்ந்து எழுதக்கூடிய திறமை உள்ளது எம்மிடம் தொடர்ந்து வாசிக்க திறமை இல்லையே..
ஆனால் தற்போதய நேர இடைவெளி போதுமென எண்ணுகின்றேன்..

பிச்சி
22-02-2007, 01:12 PM
உங்களிடம் வகை வகையாய் விருந்திருக்கிறது பிச்சி
வீட்டைப்பற்றி பயப்படாது எழுதுங்கள்...

எனக்கு கவிதை எழுதத்ததெரியும் என்பதே வீட்டில் எவருக்கும் தெரியாது..

நீங்கள் அருமையாய் எழுதுங்கள் ஆனால் நிதானியுங்கள்
உங்களுக்காக அல்ல எங்களுக்காக..
உங்களிடம் தொடர்ந்து எழுதக்கூடிய திறமை உள்ளது எம்மிடம் தொடர்ந்து வாசிக்க திறமை இல்லையே..
ஆனால் தற்போதய நேர இடைவெளி போதுமென எண்ணுகின்றேன்..

ரொம்ப நன்றிங்க மதுரகன். உங்க கவிதைகள வீட்ல படிக்க கொடுங்க. இங்க தான் பிரச்சனை.
கவிதை எழுதி உங்களுக்காக தருகிறேன். படிச்சு கருத்து சொல்ல்ங்க. நாம் இருக்கப் போகிற இந்த கொஞ்ச கால கஞ்ச வாழ்க்கையில இதையாவது உருப்பிடியா செய்வோம்.

பிச்சி
22-02-2007, 01:34 PM
இணையத்தில் கிடைத்த ஹரீஸ் என்னும் நண்பனைப் பற்றி எழுதியது

இணையத்து லோகத்தில்
விரிந்து திரிந்தது
வண்ணப்புறா..
சிறகுகளை நீட்டி
அமர்ந்திருக்கையில்
காணக்கிடைக்காத குயிலொன்று
கண்டதாம்... குயிலைப் பற்றி சொல்லுகிறேன்.

நெறித்துப் போட்ட
மரத்துண்டுகளின் அணுக்களில்
வீழ்ந்து கிடக்கும் அன்பை
ஒட்டி எடுக்கும்
உண்மைத் தோழன்

சரிந்து போன இலைகளின்
நுனியினிடம் காதல்
பேசும் வண்டுகளின்
சொந்தக்காரன்

புரியாத பாஷைகளின்
தோள் மீதேறி
அவனியெங்கும் தெறித்துவிட்ட
மொழிகளின் தலைவன்

காற்றுக்கும் நெருப்புக்கும்
ஊடான இடைவெளியில்
உள் நுழைந்து வீரியம்
பேசும் உண்மைத் தீரன்

பரிசுண்டென சொல்லி
வர்ணப்புறாவை புலமையாக்கி
ஹரீஸென்னும் பெயரில்
உலகை ஆளும்
ஆஸ்திரேலியச் சூரியன்

வார்த்தை கிடையாதோ
என்று ஏங்கி நிற்கும் தமிழுக்கு
இவளே வார்த்தை என்று
பொய்களைக் கொட்டிய
சிட்னியின் விளக்கு....

இன்னும் சொல்ல வார்த்தைகள் உண்டு
சொல்லத்தான் தெரியவில்லை...

அறிஞர்
22-02-2007, 01:47 PM
இணைய தளத்தில் கிடைத்த சிட்னி நண்பனுக்கு.. கொடுத்த கவிதை.. அருமை தோழி..

பிச்சி
23-02-2007, 11:52 AM
இணைய தளத்தில் கிடைத்த சிட்னி நண்பனுக்கு.. கொடுத்த கவிதை.. அருமை தோழி..

மிக்க நன்றிங்க அறிஞர் அண்ணா!

பிச்சி
28-02-2007, 12:48 PM
http://bp2.blogger.com/_3cZp84ktgHs/RboGQ3RLusI/AAAAAAAAAB8/q5FgQyFQn54/s320/256957033_b95061fcc8.jpg

நீர்க் குமிழ் நிலைபோல
நெஞ்சம் நிமிர்ந்து
கண்களை தூண்டுகிறது
முளைக்கப்படாத மொட்டு..

பருவ வயதுகளின்
இடைவெளியில்
நானும் ஓர் அழகியென்று
சூரியனைப் பார்த்து
சுட்டதுவே இந்த மொட்டு!

காலம் கடந்த பின்னும்
விரித்துக் காட்டி
வண்டுகளின் இமைகளை
ஈர்க்கச் செய்யுமே இந்த மொட்டு.

ஏதாவதொரு வண்டின் வாசனையில்
உலர உலர தேன் கொடுத்து
இன்னுமொரு மொட்டு
உருவாக்குமே இந்த மொட்டு..

இறுதிக் காலத்தில்
புயலாவது தென்றலாவது என்று
வண்டின் இறகுகளோடு
பயணம் புரிந்து
தரிசனம் கிடைக்காத
தூரத்திற்குச் சென்றுவிடுமே இந்த மொட்டு...

அறிஞர்
28-02-2007, 12:59 PM
தரித்திர வாழ்வினிலும்
என்னைப் பார்த்து வியந்து
சிரித்திடும் அழகு ஓவியம்
அவள்.

அவள் அவள் என்று
அழைத்தது
அன்னையைத் தான்
அவள் எனக்கு என்றும்
அழகிதான்.
அழகான வர்ணனைகள் காதலி நினைக்க வைத்தது.

காதலியை விட அழகானவர்....அன்னைதான்...
அன்னைக்கு இணையுண்டோ....

தொடரட்டும்... பிச்சியின் பூக்கள்..

அறிஞர்
28-02-2007, 01:01 PM
இறுதிக் காலத்தில்
புயலாவது தென்றலாவது என்று
வண்டின் இறகுகளோடு
பயணம் புரிந்து
தரிசனம் கிடைக்காத
தூரத்திற்குச் சென்றுவிடுமே இந்த மொட்டு...
அழகான புகைப்படம்..
மொட்டுக்களை பற்றி
அழகான வரிகள்...

தொடரட்டும் பிச்சி...

மனோஜ்
28-02-2007, 01:15 PM
இறுதிக் காலத்தில்
புயலாவது தென்றலாவது என்று

வண்டின் இறகுகளோடு
பயணம் புரிந்து
தரிசனம் கிடைக்காத
தூரத்திற்குச் சென்றுவிடுமே இந்த மொட்டு...
கவிதை மிக அருமை இந்த வரிகளில் இருதிகாலத்தை அருமையாக கூறிஉள்ளீர்கள் இலைமறை காயாக

ஷீ-நிசி
28-02-2007, 02:03 PM
எங்கப் போயிட்டீங்க..... ரொம்ப நாளாக் காணோம்... மொட்டு க்கு ஒரு கவிதை எழுதி கலக்கறீங்க.. ரொம்ப்வே வித்தியாசமா யோசிக்கறீங்க பிச்சி.. வாழ்த்துக்கள்!

பிச்சி
28-02-2007, 02:07 PM
உங்க எல்லாருக்கும் நன்றி.. அதிகப்படியான படிப்பு வேலைகள் இருந்ததனால் அவ்வளவாக வரமுடியல.

மொட்டு கவிதையில் நான் ஒன்றை உருவகப் படுத்தியிருக்கிறேன்.. அதை கண்டுபிடியுங்களேன்... .... ...

பிச்சி
28-02-2007, 02:55 PM
அவள்

காதல் உணர்வுகளுடன்
காற்றை மெல்ல விழுங்கும்
பூக்களின் ராஜ குமாரி அவள்!

மெல்ல ஒளியிழந்து
சாயம் கலைந்த
சாயுங்கால நிலவுக்கு
பாலூட்டும் அன்னை அவள்!

வலியேதும் இல்லாமல்
புன்னகையும் சிதறாமல்
புற்களின் மேல் நடக்கும்
பூச்சிகளின் ராணி அவள்!

சிதறிய தானியங்களை
கொத்தித் தின்னும்
கோலவிழி மென் குயிலினும்
மென்குரல் கொண்ட
பெண்குயில் அவள்!

பாலைநிலப் பூக்களை
சோலை நிலப் பூக்களாய்
மாற்றி, புத்துணர்ச்சியாய்
காட்சிக்கு காட்சி
விருந்தளிக்கும் ஏந்திழை அவள்!.

நிதம் நிதம் என்னைப் பார்த்து
வெட்கிக் குனிந்து
மண்ணின் மடியில் சரியும்
பூங்குறுநல் பூங்கா அவள்!

மின்னிய மின்னல்களின்
சிதைவில், சிதையாமல்
தோன்றிய
மின்னல்கொடி அவள்!

பிக்காசோ கைகளில்
விசித்திர வண்ணம் பாய
நிழலாய் சிரிக்கும்
சித்திரம் அவள்!

கண்களில் நடனமிடும்
காவியத் தலைவியும்,
கோவலனின் காதலியுமான,
கண்ணகியின் சலங்கை அவள்!.

காதல் இறகுகளாய்ப்
பறந்து, பார்வதியின் கூந்தலில்
சிக்கிச் சிரிக்கும்
புஷ்பவதி அவள்!

அண்டார்டிகா வெப்பத்தில்
அலைந்து திரியும்
குளிர் பறவைகளையும் விட
நயனமான பெண்கரடி அவள்!

நிலத்தில் ஊடுறுவி
அழகுக்கு முளைத்திடும்
மங்கள மஞ்சளிலும்
இணையில்லா வர்ணம் அவள்

தரித்திர வாழ்வினிலும்
என்னைப் பார்த்து வியந்து
சிரித்திடும் அழகு ஓவியம்
அவள்.

அவள் அவள் என்று
அழைத்தது
அன்னையைத் தான்
அவள் எனக்கு என்றும்
அழகிதான்.

poo
01-03-2007, 09:59 AM
எளிய நடையில் வலிய கவிதையொன்று..

வலிகளை தொடர வாழ்த்துக்கள்... அது இன்பமாய் அமைவதில் மகிழ்ச்சிகள்!!

poo
01-03-2007, 10:01 AM
இந்த பூந்தோட்டத்தில் வலம்வர ஆரம்பம்முதலே வரவில்லையேயென ஏங்குகிறேன்..

பிச்சி
02-03-2007, 11:47 AM
நன்றிங்க பூ அன்னா!

பிச்சி
03-03-2007, 03:54 PM
லட்சுமி எழுப்பும்
வீணை இசையின்
துளியில், ஒரு அணுவாக
வியாபித்திருக்கும்
நித்தியானந்தன் அவன்!.

உலகோர் செவிகளில்
உள்ளிருக்கும் படலங்களில்
அமர்ந்துகொண்டு
உள் நுழையும் பாடல்களைத்
தணிக்கை செய்யும்
பரம சுந்திரன் அவன்!

ஒளியை மிஞ்சும் வேகத்தில்
கண்களைச் சிமிட்டியும்
இமை முடிகளுக்கு இடைப்பட்ட
இடைவெளியில் நிலைகுலையாமல்
நிற்கும் சுந்திர ரூபன் அவன்!

இறந்துபோன பிக்காசோவை
ஐன்ஸ்டீன் விதிப்படி அழைத்து
சித்திரமாய் தன்னை
வரையச் சொன்ன
நித்தியத் திருமகன் அவன்!

அன்னையின் தாலாட்டில்
ஒவ்வொரு எழுத்துமாய்
நிறைந்து கொண்டு
குழந்தையின் செவிக்குள்
ஊற்றெடுக்கும் நாதசுவரம் அவன்!.

கொக்கரிக்கும் கூட்டத்திற்கு
வெறும் சக்கரத்தைக் காட்டி
குற்றேவல் புரியவைத்து
அவர்களை வெள்ளையாக்கியே
நீலமாய் போனவன் அவன்!

அமரகற்பகம் எனும் ஊருக்குள்
ஆளை அடக்கும் இந்திரனும்
நிந்தனையே என்று நினையாத
நான்முக பிரம்மனும்
நிதமும் தரிக்கும்
திருநாமச் சந்தனம் அவன்!

இத்தனைக்கும் சொந்தக் காரன்
திருநீல வர்ணக்காரன்
சித்திபெற்ற யுத்திக்காரன்
யசோதையின் மைந்தன்
என் கண்களின் துடிப்புகளுக்கு
அடிமையாவது ஏன்?

பிச்சி
08-03-2007, 01:04 PM
ஈரம் மிகுந்த ஒரு கவிதையின்
வார்த்தைகளை சிதறிவிட்டாய்
அதன் உன்னத பொருள் தெரியாமல்
எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி
பதம் பார்க்கும், என் காதலை
பங்கப்படுத்திய உன்னை.

விழிப்படலங்களின்
விந்தையான சக்தியில்
உன்னை நான் சந்தித்தேன்
உறுதியில்லாமல் உதறிவிட்டாய்
கதிர்களின் பாய்ச்சலை!
வெளிச்சம் தர மறுக்கும் (உனக்கு)
ஒளியின் பிள்ளைகள்.

ஏங்கி ஏங்கி கண்ணீரில்
வீங்கிப் போன இதயத்தை
உனக்காக காண்பித்தும்
கண்கள் கோண
மறுத்துப் போகிறாய்
இரத்த நாளங்கள்
பீய்ச்சி அடிக்கிறது
உன் கோரம் படிந்த முகத்தில்

இதயம் ஏற்ற கணமே
அறியாமல் போனதினால்
இன்று கனமாகப் போகிறது
என் நெஞ்சுக்குள்
உனக்காக" என்று நான் நினைத்த
இதயம்

வெறும் வாலிபத்தை
உபயோகித்த
உன்னை.
வார்த்தைகளால் சாகடிப்பேன்.

அறிந்து கொண்டேன்
உன் அழுகிய கண்களை
இன்றும் இறைவன்
இருப்பதால்தான்
அழுகாமல் இருக்கிறது
என் இதயம்.
:(

அரசன்
05-04-2007, 09:49 AM
'பிச்சி' உதறிங்க போங்க! பாராட்டுக்கள்

பிச்சி
05-04-2007, 09:50 AM
நன்றி.. நானே இந்த பதிவை தொலாவீட்டு இருந்தேன்.. நன்றி ...