PDA

View Full Version : புத்தகங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?



gayathri.jagannathan
14-12-2006, 10:44 AM
சகோதர சகோதரிகளே,

வணக்கம், எனது பெயர் காயத்ரி. இந்த வலை தளத்தில் இருந்து புத்தகங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? எனக்கு அதற்கான அனுமதி இந்த வலை தளத்தில் மறுக்கப்பட்டுள்ளது.

சற்றே உதவுங்கள்.

பென்ஸ்
14-12-2006, 10:56 AM
நல்ல தமிழ்... முதல் பதிவே தமிழில் அழகாக....
நீங்க பண்பட்டவர் அப்படின்னு ஒரு அனுமதி பெற்றால் மட்டுமே பதிவிறக்கம் பண்ணமுடியும்....
எப்படி பண்பட்டவர் ஆவது????
காசு கொடுத்தா.... இல்லை இல்லை
உங்கள் படைப்புகளை அள்ளிவீசுங்கள்... அனுமதி தானா வரும்...பிரீயா கிடைக்கும்...

gayathri.jagannathan
15-12-2006, 02:59 AM
தோழரே,
நான் ஒரு ரசிகை மட்டுமே. பிறரின் படைப்புகளை ரசிக்க தெரியுமே தவிர படைக்கத் தெரியாது..

பண்பட்டவர் ஆவதற்கு படைப்புகளை வழங்கினால் மட்டுமே முடியுமா? வேறு ஏதாவது வழி உண்டா?

நன்றி,
காயத்ரி.

mukilan
15-12-2006, 03:26 AM
வருக காயத்ரி! நீங்கள் படைக்க முடியாவிட்டாலும் மன்றத்தின் மற்ற படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு விமர்சனம் செய்யலாம். போட்டிகளில் கலந்து கொள்ளலாம். பின்னூட்டங்கள் போட்டே பண்பட்டவர் ஆகலாம்.இவ்வாறு செய்வதன் முக்கிய நோக்கமே நீங்கள் தமிழில் தவறில்லாமல் எழுதச் செய்வதுதா. நீங்கள்தான் அதை அருமையாகச் செய்கிறீர்களே!

gayathri.jagannathan
15-12-2006, 03:55 AM
தங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி முகிலன் தாங்கள் கூறிய வழிமுறையை பின்பற்றுகிறேன்...
நன்றி, வணக்கம்.
ஜெ.காயத்ரி.

அறிஞர்
15-12-2006, 12:38 PM
தோழரே,
நான் ஒரு ரசிகை மட்டுமே. பிறரின் படைப்புகளை ரசிக்க தெரியுமே தவிர படைக்கத் தெரியாது..

பண்பட்டவர் ஆவதற்கு படைப்புகளை வழங்கினால் மட்டுமே முடியுமா? வேறு ஏதாவது வழி உண்டா?

நன்றி,
காயத்ரி.
தொடர்ந்து கருத்துக்கூறுங்கள்... முகிலன் கூறியது போல்.

எல்லாரும் படைப்பாளி ஆகிவிட்டால்.... கருத்து கூறுவது யார்? நானும் தங்களை போல அடுத்தவர்கள் படைப்புக்களை ரசித்து கருத்து கூறக்கூடியவன்.

தொடருங்கள் உங்கள் கருத்துக்களை.