PDA

View Full Version : நின்னைச் சரணடைந்தேன்!



akilan
14-12-2006, 03:02 AM
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்னை)

துன்பமில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னை)

நல்லது தீயது நாமறியோம்! அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

எழுதியவர்: பாரதியார்

meera
14-12-2006, 04:25 AM
பாரதியின் தொகுப்புக்கு நன்றி அகிலன் அண்ணா.

ஓவியா
14-12-2006, 01:42 PM
எனக்கு பிடித்த பாடல்

நன்றி நண்பரே

பென்ஸ்
14-12-2006, 02:01 PM
நன்றி அகிலன்....
பாரதியின் பாடலை கொடுத்தமைக்கு நன்றி....
மன்றத்தில் கவிதைகள்/பாடல்கள் பகுதியில் நமது சொந்த கவிதைகளையும் இலக்கியங்கள்/புத்தகங்கள் பகுதியில் இதை போன்ற முத்துகளையும் பதிப்பது வழக்கம்....
தங்கள் பணிதொடரட்டும்.....

நம்பிகோபாலன்
15-12-2006, 06:17 PM
These lines are awesome ..................................................................................

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

துன்பமில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னை)

I m expecting more to see the poems of Bharathi.......

இளசு
15-12-2006, 06:33 PM
நம்பிகோபாலன் அவர்களே


ஒவ்வொரு பக்கத்திலும் கீழே எழுத்துரு மாற்றி உள்ளது.
தமிழில் மட்டுமே இங்கே பதிக்க வேண்டும்..

நன்றி...

நம்பிகோபாலன்
15-12-2006, 06:49 PM
மன்னிக்க

ஓவியன்
26-02-2007, 11:38 AM
நின்னைச் சரணடைந்தேன் - மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று (நின்னை)


இன்றைய இளைய சமூதாயத்தினருக்குத் தேவையானவரிகள் இல்லையா அகிலன்?

pradeepkt
26-02-2007, 02:16 PM
இந்தப் பாட்டை நேற்று இசைஞானியின் இசையில் இரண்டு நகல்களையும் (ஒன்று அவரே பாடியது இன்னொன்று பாம்பே ஜெயஸ்ரீ) கேட்டேன். மெய் சிலிர்க்க வைத்த வரிகள். அதை அவர் இசை கோர்த்திருக்கும் விதம் இருக்கிறதே... ஹூம்! மியூஸிக்கல் ஜீனியஸ் என்ற வார்த்தைக்கு நேரே இவர் பெயரைப் போட்டிருக்க வேண்டும்!