PDA

View Full Version : ராகவன், மன்னிக்க வேண்டுகிறேன்.



இளசு
13-12-2006, 08:46 PM
அன்பு ராகவன்

தங்கள் புதுக்கிராமம் திரியில் தலைப்பை கட்டுரையுடன் சேர்த்து, முதல் காலிப்பதிவை மட்டும் நீக்க முற்படும்போது, மென்பொருள் சதியோ என்னவோ, மொத்தத் திரியையும் காணவில்லை.

தவறுக்கு வருந்துகிறேன்.. மன்னிக்கவும்.

தலைவரிடம் சொல்லி அந்தத்திரியை மீட்க வழியுண்டா எனப் பார்க்கிறேன்.

வழியில்லை என்றால் - மீண்டும் மன்னித்து , அப்பதிவை மறுபதிவு செய்ய வேண்டுகிறேன்..

மற்ற பின்னூட்டம் இட்ட செல்வன் உட்பட்டவர்களும் மன்னிக்கவும்.

தாமரை
14-12-2006, 04:09 AM
ராகவன் ஒரு வேளை நன்றி கூட சொல்லலாம்..:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
14-12-2006, 04:11 AM
அப்ப இளசு அண்ணாவுக்கு நன்றி சொல்லலையா நீங்க ?? ..:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

gragavan
14-12-2006, 04:24 AM
இளசு அண்ணா, ஆனது ஆகி விட்டது. திரும்பக் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல் குறையில்லை.

gragavan
14-12-2006, 04:25 AM
ராகவன் ஒரு வேளை நன்றி கூட சொல்லலாம்..:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
பின்னே...தவறு நேர்ந்ததும் அதைத் தெரிவிக்க ஒரு திரியும் போட்டிருக்காரே...நன்றி சொல்ல வேண்டாமா? ;)

தாமரை
14-12-2006, 09:07 AM
அப்ப இளசு அண்ணாவுக்கு நன்றி சொல்லலையா நீங்க ?? ..:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
நம்ம நக்கீரர் விவாதமும் திருநெல்வேலி அல்வா, அருவா டயலாக்கும், தூத்துக்குடி புதுக்கிராமம் தார்ரோடு கணக்கா மழையில அடிச்சிட்டு போயிடுச்சேங்கற ஆதங்கம்தான்,..:D :D :D :D

அறிஞர்
14-12-2006, 02:57 PM
இளசு அண்ணா, ஆனது ஆகி விட்டது. திரும்பக் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல் குறையில்லை.கிடைப்பதுக்குறிய வாய்ப்புக்கள் குறைவே....
மீண்டும் பதிந்தால் நன்றாக இருக்கும் இராகவன்.

பெரிய பதிப்புக்களை ஒரே பதிப்பாக பதிய முடியாத குறை உள்ளது. விரைவில் அந்த குறை நீங்கும்.

ஓவியா
14-12-2006, 03:05 PM
கடைசி பதிவு நாந்தேன் போட்டேன்.....

ஞாபகத்தில் இருக்கு,...இப்படிதான்

படிக்க ஜாலியா இருக்கு

சரித்திர பாடம் ஆரம்பம்னு.....:D :D :D (சிரிச்சு வேற வச்சேன்)..


ராகவன்,
அப்படியே வருத்தங்கள் இருந்தால்
நண்பர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்கிறோம்....:)

தாமரை
14-12-2006, 03:14 PM
கடைசி பதிவு நாந்தேன் போட்டேன்.....

ஞாபகத்தில் இருக்கு,...இப்படிதான்

படிக்க ஜாலியா இருக்கு

சரித்திர பாடம் ஆரம்பம்னு.....:D :D :D (சிரிச்சு வேற வச்சேன்)..


ராகவன்,
அப்படியே வருத்தங்கள் இருந்தால்
நண்பர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்கிறோம்....:)
பலகாரம்னா சொல்லுங்க பகிர்ந்து கொள்ள ராகவன், பிரதீப்பு, முகிலன் எல்லாம் ரெடி...:D :D :D

ஓவியா
14-12-2006, 03:51 PM
பலகாரம்னா சொல்லுங்க பகிர்ந்து கொள்ள ராகவன், பிரதீப்பு, முகிலன் எல்லாம் ரெடி...:D :D :D

ஆமாமா

முகி பலகார படமெல்லாம் போட்டாரு....:D :D :D

இளசு
14-12-2006, 07:56 PM
அன்பு ராகவன்


மன்னித்தமைக்கு நன்றி..

ஒரு திரியின் முதல் பதிவு ( காலியாய் இருந்தாலும்) சிரம் போல் முதன்மையானது. அதை நீக்கப்போய் எல்லாமே போய்...

வருந்துகிறேன்..


' நிர்வாகி' பொறுப்பில் உள்ளவர் செய்தால் - இழந்ததை மீட்க வாய்ப்பு குறைவு என்று தலைவர் சொல்கிறார்..

' அந்த தெய்வமே கலங்கி நின்னா' பிரமீளா கேட்ட கேள்வி போல...


கணினி, மன்ற மென்பொருள் அறிவு இல்லாத என்னால் நேர்ந்த
இந்த 'சோதனைக்கு மேல் சோதனை' வந்து சேராமல் இருக்க முயற்சிக்கிறேன்...

நீங்கள் மறுபதிவிடுங்கள்... செல்வன்,பிரதீப், ஓவியா, பாரதி உள்பட எல்லாரையும் பின்னூட்டம் (அதே போல்) இட நான் 'ஜாமீன் ' தருகிறேன்..
(காப்பாத்துங்க மக்காஆஆஆஆஆஆ!)

thoorigai
25-01-2007, 09:04 AM
ராகவன்,

மறுபடியும் போடுங்க நண்பரே.
எதையோ மிஸ் பண்ணிட்டாப்பல இருக்கே...
(நான் அந்த திரியை படிக்கலீங்க..)

ஆவலுடன்

தமிழ்த்தூரிகை

ஷீ-நிசி
25-01-2007, 09:18 AM
ரெண்டு நாளா படிச்சிட்டு, இன்னைக்குதான் என் பதிவை போட்டேன். நான் போட்ட நேரம் சரியில்ல போல. மொத்த பதிவும் போயிடுச்சி.....

gragavan
25-01-2007, 09:42 AM
என்னது ஷூ-நிசியின் பதிவு போயிருச்சா? ஏன்?

ஷீ-நிசி
25-01-2007, 10:13 AM
என்னது ஷூ-நிசியின் பதிவு போயிருச்சா? ஏன்?

உங்களுடைய புதுக்கிராமம் திரிக்கு நான் அளித்த பின்னூட்டத்தை சொல்கிறேன் ராகவன் அவர்களே!