PDA

View Full Version : உங்களுக்குத் தெரியுமா?mgandhi
13-12-2006, 06:51 PM
மழை பெய்யாத இடம் எது?

உலகில் பலநாடுகளிலும் பலவேறு அளவுகளில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து வருகிறது.மழை அளவை பொதுவாக சென்டீமிட்டரில் கணக்கிடப்படுகாறது.உலகின் பல பாலைவனங்களில் ஒவ்வறு ஆண்டும் 25 செமீ-க்கும் குறைவாகத்தான் மழை பெய்கிறது.இந்த இடங்களில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருக்கும்.

பொதுவாக பாலைவனங்களில் கள்ளிச் செடிகளே பெருமளவில் காணப்படுகின்றன.இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியும் தாங்கி வளரும் திறன் உடையவை.

சிலி நாட்டில் அமைந்துள்ள அடகாமா பாலைவனம் (Atacama Desert) மிகவும் விநோதமானது இந்த பாலை வனத்தில் எந்தத் தாவரமும் வளர்வதில்லை உலகிலேய மிகவும் வறட்சியான பகுதியாக இந்த பாலைவனம் கருதப்படுகிறது.மேலும் பல ஆண்டுகளாக மழையே பெய்வதில்லையாம். சுமார் 400 ஆண்டுகளாக மழை பெய்யாத இடமாக அடகாமா பாலைவனம் இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகாறார்கள்.

உலகின் மிக பெரிய பாலைவனமாக சகாரா பாலைவனம்
(Sahra Desert)திகழ்கிறது இந்த பாலைவனம் சுமார் 84-லட்சம் சதுர கீலோமீட்டர் கொண்டதாகும்

பாலைவனம் என்றால் வெப்பப் பாலைவனங்கள் மட்டுமே என்று நினைத்துவிட வேண்டாம். குளிர்ப் பாலைவனங்களும் உள்ளன.

அன்டார்டிகா,க்ரீன்லாந்து,ரஷ்யாவில் வடக்கு பகுதி போன்றவை குளிர்பாலைவனப் பிரிவைச் சேர்ந்தவை.இங்கும் மழை அளவு குறைவாகும். இங்கு எப்போதும் நம் முகங்களில் பனி கொட்டிக் கொண்டே இருக்கும்.இந்தப் பனி நமது தலைக்கு மேலிருந்து கொட்டாது,இவை பூமியின் மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட பனித் துகள்களாகும்.

இளசு
13-12-2006, 07:55 PM
முகப்பனி....முகத்தில் (மட்டுமே) வீசும் பனி.. புதிதாய்க் கற்றேன்.

நன்றி காந்தி.

அறிஞர்
13-12-2006, 08:10 PM
நல்ல தகவல்.. சிறுவர் மலர் போன்ற இதழ்களில் படித்தது....

இன்னும் கொடுங்கள்...

arun
14-12-2006, 04:27 AM
பயனுள்ள தவல்கள் நன்றி

mgandhi
14-12-2006, 05:11 PM
மனிதர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார்கள்?
மனிதனின் ஆயுட்காலம் நாட்டிக்கு நாடு வேறு படுகிறது.
பொதுவாக வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அதிக காலம் வாழ்வதாக ஆராச்சியாலர்கள் கருத்து. கூறுகின்றனர்.ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களின் சராசரி வயது 76 ஆண்டுகள் ஜெர்மனி மற்றும்வடமெரிக்கா நாட்டினரின் சராசரி வயது 75 ஆண்டுகள். இங்கிலாந்து மக்களின் சராசரி வயது 74 ஆண்டுகள்.
ஏழ்மைநிலையில் உள்ள நாட்டை சேர்ந்த மக்கள். குறைந்த காலம் வாழ்வதாக ஆராச்சியாலர்கள் கருத்து.எதியோப்பியா
நாட்டினருக்கு 43 ஆண்டுகளும்,நேபால் நாட்டினருக்கு 46
ஆண்டுகளும்,இந்தியநாட்டினருக்கு 55 ஆண்டுகளும், சராசரி
ஆயுட்காலமாக கணக்கிடப்பட்டுள்ளது.
பலவித ஆராய்ச்சிகளின் முடிவில் ஆண்களைவிட பெண்களே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

அறிஞர்
14-12-2006, 08:35 PM
இது கொஞ்சம் பழைய செய்தி போல் உள்ளது.

சீனாவில், குறிப்பாக தைவானில் சராசரி வயது அதிகம்.

mgandhi
15-12-2006, 04:39 PM
புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன?

நாம் பயன்படுத்தும் சக்த்தியில் அதாவது மோட்டார் வாகனம்,கப்பல்,விமானம், ,புகைவண்டி, வீடுகள்,தொழாற்சாலைகளிலும் 97 சதவீதம் நிலக்கரி,எண்ணெய்,இயற்கைவாய்வு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது இந்தவகை எரிபொருட்கள் புதைபடிவ எரிபொருள் என்று அழைக்கப்பட்கின்றன.
நிலக்கரி முற்காலத்தில் ஏதாவது காரணத்தினால் பூமிக்குள்ளே புதைக்கப்பட்டு இயற்கையின் பலவித மாற்றங்களுக்குப்பிறகு நிலக்கரியாக மாற்றம் அடைகின்றன.அதே போல பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்த சிறு செடிகள் மிருகங்கள் போன்றவற்றிலிருந்து, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கிடைக்கிறது.இவை எல்லாம் தட்ப வெப்ப
நிலையின் பலவித மாற்றங்களுக்குப் பிறகு உருமாற்றம் அடைந்து நமக்கு பலன் தருகின்றன.

ஆதவா
16-12-2006, 08:19 AM
அய்யா காந்தி,, இதெல்லாம் ஆறாம் கிளாஸ்லேயே படிச்சாச்சய்யா... ஆனா "புதை படிவ எரிபொருள்னு இப்போதான் கேள்வி பட்றேன்...
நன்றி....

mgandhi
17-12-2006, 04:18 PM
பூமியின் மீது பனிக்கட்டிப் பாறை எவ்வளவு வேகத்தில் செல்லும்?

பணிக்கட்டிகள் பலவிதங்களில் கானப்படுகின்றன சிறுசிறு பனிக்கட்டி தகடுகளிலிருந்து பனிக்கட்டி பள்ளத் தாக்கு வரை பலவகைகளில் பனிக்கட்டி வடிவங்கள் இருக்கின்றன.இந்த பனிப்பாறைகள் புவிஈர்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி நகர்ந்து செல்கின்றன பனி சூழ்ந்த அண்டார்டிகா பிரதேசத்தில் பனிக்கட்டித் தகடுகள் (ice Sheets)ஒரு வருடத்திற்க்கு ஒரு மீட்டர் தூரம் நகர்ந்து செல்கிறது.அதே சமயத்தில் பனிக்கட்டிப் பள்ளத்தாக்குகள் (Valley giaciers)
ஒரு மீட்டர் தூரத்தை ஒரே நாளில் நகர்த்து சென்று கடந்துவுடுகிறது.
சில நேரங்களில் பனிக்கட்டி பாறைகளும், பனிக்கட்டி தகடு
களும் மிகவும் அதிகமான வேகத்தில் நகர்ந்து செல்கின்றன.
1936-37-ஆம் ஆண்டுகளில் அலாஸ்கா ஆற்றின் பனிக்கட்டி
ஒரு நாளைக்கு 60 மீட்டர் என்ற விகித்த்தில் நகர்த்து சென்றது. ஆச்சரியமான இந்த வேகம் பூகம்பத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம், என்று ஆராய்சியாளர்கள்
கூறுகிறார்கள்.

mgandhi
18-12-2006, 04:59 PM
குளிர் எப்படி பாறையைப் பிளக்கிறது?

குளிர் என்றால் என்ன என்பது நம் எல்லோர்க்கும் தெறியும் .இது கண்களுக்கு புலப்படாத நீராவியை உண்டாக்குகிறது இந்த நீராவி காற்றுடன் கலந்து பலவித மாற்றக்களுக்கு பிறகு
பனிக்கட்டியாக மாறுகிறது.மலைபகுதிகளில் இரவில் ஏற்படும் குளிர் பனிக்கட்டிகளக உருமாறுகிறது.
மொதுவாக நீராவி பனிக்கட்டியாக மாறும்போது தண்ணிரைவிட அதிகமான இடத்தை பனிக்கட்டி எடுத்துக்கொள்கிறது பாறைகளின் இடைவெளிகளில் தேங்கிஉள்ள நீர்பனிக்கட்டியாக மாறும்போது பாறைகளின் உள்ளே இடமில்லாத காரணத்தால்,பனிக்கட்டிகளின் அழித்தத்தால் பாறை பிளவுபடுகிறது இந்தச் செயல் குளிர் விளைவு(Frost action)எனப்படுகிறது.

அறிஞர்
19-12-2006, 03:27 PM
நீர் பனிக்கட்டியாகி... பிளக்கிறது.... தொடர்ந்து படித்த தகவல்களை கொடுங்கள்... அன்பரே...

mgandhi
21-12-2006, 05:46 AM
கேரளாவின் முக்கியமான அட்ராக்ஷன்களுள் ஒன்று இந்த சுண்டன் படகுப் போட்டிகள். சுண்டன் படகுகள ஆங்கிலத்தில் Snake Boat என்று கூறுவார்கள்.
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் ஜூல மாதத்தில் இருந் செப்டம்பர் மாதம்வர சுண்டன் படகுப் போட்டிகள் தொடர்ந் நடக்கும். (எர்ணாகுளம் ஏரியில் நடக்கும் இந்திரா காந்தி படகுப் போட்டி மட்டும் டிசம்பர் மாதக் கடசியில் நடக்கும்) அனத்ப் போட்டிகளிலும் முக்கியமான நேரு ட்ராஃபி.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னம்மாடா ஏரியில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவ சனிக்கிழம நேரு ட்ராஃபி படகுப் போட்டி நடத்தப்படும்.
கேரளாவின் அறுவடத் திருவிழாவான ஓணம் பண்டிகய ஒட்டி இந்தப் படகுப் போட்டிகள் நடத்தப்படும்.
இந்தப் படகுகளின் நீளம் கிட்டத்தட்ட 100 அடி வர இருக்கும்.
ஒவ்வொரு படகிலும் 4 தலவர்கள், 25 பாடகர்கள், 100 & 125 டுப்பு போடுபவர்கள் இருப்பார்கள்.
டுப்பு போடுபவர்கள உற்சாகப்படுத்த இந்தப் பாடகர்கள் வஞ்சிப்பாட்டு அல்ல வல்லப்பாட்டு என்னும் பாரம்பரிய இசயில் வேகமாகப் பாடுவார்கள்.
பெண்களுக்காகத் தனிப் போட்டிகள் உண்டு. அவர்களும் அதே வகப் படகு, அதே எண்ணிக்கயில் நபர்கள், அதே விதிகளத்தான் பின்பற்றுவார்கள்.
உலகின் மிகப் பெரிய குழு விளயாட்டாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ள.

mgandhi
22-12-2006, 06:08 PM
அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?
பொதுவாக கடற்கரையைத் தாக்கி சேதப்படுத்தும் அலைகள் எல்லாமே கடலின் நடுவில் தாண்டிச் செல்லும் காற்றுகளாள் உருவாகின்றன. மிகப்பெரிய புயற்காற்று ஏற்படும்போது அலைகளின் உயரம் 12 மீட்டருக்கு மேல் செல்லுகிறது அதிகமான உயரமாக 34 மீட்டர் வரை இருக்கும் என ஆராய்சியாளர்கள் கணக்கிட்டு உள்ளார்கள்.
பாதிப்பு ஏற்படுத்தும் மிக பெரிய அலைகள் சுனாமி
(Tsunamis) என்று அழைக்கப்படுகிறது இவை பூகம்பங்களாலும்,எரிமலை வெடிப்புகளாலும் இழுக்கப்படுகின்றன. இந்த அலிகள் குறைவாக இருந்தாலும் வேகமாகச் செல்லக்குடியவையாகும்.அதிக அளவு சக்தி உடையது ஆகும் நிலப்பகுதிக்கு அருகில் இவை உருவாகும்போது இவைகளின் வேகம் குறைந்து,சத்தி உயரமாக மாற்றப்படுகிறது.இந்த வகை அலைக்களில் மிகவும் உயரமான அலை 1971-ஆம் ஆண்டு ஐப்பான் நாட்டில் உள்ள ரியுக்யு (Ryukyu) தீவில் ஏற்பட்டுள்ளதாக ஆராய்சியாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.இதனுடைய உயரம் 85 மீட்டர் 1883-ஆம் ஆண்டு க்ரகடோவா (Krakatoa) என்ற இடத்தில் ஏற்பட்டது.

mgandhi
23-12-2006, 06:44 PM
அடைகாக்கும் ஆண்கள் ?போராளி மீன் (Fighter fish

இம்மீனினத்திலும், ஆண்மீன் நுரையைக்கொண்டு கூட்டைக்கட்டுகிறது. இந்நுரைக்கூட்டில் பெண்மீன் இட்ட முட்டையை ஆண்மீன் கருவுறச்செய்து முட்டையை ஆடாது அசையாது அடைகாக்கிறது. ஏதேனும் முட்டை நுரைக்கூட்டிலிருந்து தண்ணீருக்குள் விழுந்தால் அதை எடுத்து மீண்டும் கூட்டில் விட்டு குஞ்சு பொரிந்து விடும்வரை அயராது அடைகாக்கும்.

வாயிருக்க! வயிறெதற்கு?

மனிதர்களுக்கு வயிற்றிலே வளரும் சிசு, ஆனால் திலேப்பியா மீனினத்தில் (Sarotherodon) கருவுற்ற முட்டைகளை ஆண் மீன் தனது வாயிலெடுத்து வைத்துக்கொண்டு அடைகாக்கும். கடல் கெளுத்தி மீனும் இவ்வகையிலேயே முட்டையை அடைகாக்கிறது

mgandhi
04-01-2007, 05:34 PM
நாம் சாப்பிடும் உணவு உடம்பில் எரிக்கப்பட்டு சக்தியாக மாறுவதைத்தான் கலோரியாகக் கணக்கிடுகிறார்கள். இது உணவுக்கு உணவு மாறுபடும். அதேபோல் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து, தேவையான அளவும் வித்தியாசப்படும்.

உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 1200 கிலோ கலோரி தேவைப்படும் என்றால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு 1500 வரை தேவைப்படும். ஆண்களுக்கு வேலையைப் பொறுத்து 1800_லிருந்து 2000 கிலோ கலோரி தேவைப்படும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கலோரி என்பது தேவையான சக்தியின் அளவு. இதற்கும் சத்துக்கும் சம்மந்தமில்லை. ஒரு கப் ரைஸில் 400 கிலோ கலோரி இருக்கும். 4 கப் ரைஸ் சாப்பிட்டால் 1600 கிலோ கலோரி கிடைத்துவிடும். ஆனால் அதில் நமது உடம்புக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இருக்காது. ஆராக்கியமான உடம்புக்கு சக்தியுடன் சத்தும் தேவை. அதனால் கலோரியைப் பற்றி கவலைப்படாமல் அரிசி, காய்கறி, பழம், பால் என்று எல்லா விதமான உணவையும் ரெகுலராகச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதுதான் நல்லது.

mgandhi
21-01-2007, 05:11 PM
சிலிகான் ... என்றால் என்ன?
சிலிகான் ... மணலோட இன்னொரு பெயர்தான் அது

டைட்டானியம், குரோமியம், இரும்பு, டின், தோரியம், டான்டாலம், நியோபியம், இப்படி நிறயத் தாப்பொருட்கள் கடலுக்கு அடியில் இருக்கு. பூமியின் நிலப்பகுதியில் கிடக்கிறதவிட அதிகமான தாக்கள் கடல்சார்ந்த பகுதியில்தான் இருக்கும்

''கடல்ல உப்பு இருக்குனு மனுஷன் எப்பவோ கண்டுபிடிச்சுட்டான். ஆனா, வேதிப்பொருட்களும் தாப்பொருட்களும் கடலுக்கு அடியில் இருக்குனு அண்மக்காலத்தில்தான் கண்டுபிடிச்சாங்க. 1873-லிருந் 1876 வர ஆராய்ச்சிப் பயணம் போன, 'பிவிஷி சிலீணீறீறீமீஸீரீமீக்ஷீ' என்ற பிரிட்டிஷ் கப்பல். இதனால் கடலப் பற்றியும் முக்கியமாகக் கடலின் பல்வேறு ஆழப்பகுதிகளிலுள்ள வெவ்வேறு தாப் பொருட்கள் பற்றியும் ஓரளவு தெரிந்கொள்ள முடிந்த. தொடர்ந் நவீனக் கருவிகளுடன் சென்ற பல கப்பல்கள், கடல் அடுக்குகளப் பற்றியும் தாப்பொருட்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்கொண்டு இருக்கின்றன.
பல மில்லியன் வருடங்களுக்கு முன்னாடி கடல்பகுதியா இருந்த இடங்கள், இப்போ நிலப்பகுதியா மாறியிருக்கு. அதனால, அப்போ கடல்ல இருந்த தாக்கள்தான் இப்போ நிலத்தில் நமக்குக் கிடக்குனும் சொல்லலாம்.

தென்மேற்கு ஆப்பிரிக்க அட்லாண்டிக் கடல் பகுதியில் வரச்சுரங்கம் தோண்டிக்கொண்டிருந்தனர். 1961-ல் அந்த அரசாங்கமே எடுத்துக் கொண்டது. அங்கே தினமும் 700 காரட் வைரங்கள் கிடத்தன. ஆனால், 1972-ல் வைரங் களச் சலித்தெடுக்க ஆகும் செலவு வைரங்களின் மதிப் பைவிட அதிகமாயிடுச்சு.

மதுரகன்
21-01-2007, 06:20 PM
புதிய புதிய தகவல்களால் வெளுத்துக்கட்டுகிறீர்கள் காந்தி..
இவ்வளவு நாளா தவற விட்டுவிட்டேனே..

mgandhi
06-02-2007, 05:55 PM
ஒரு நாடு எப்போது நாடாகக் கருதப்படும்?

மொதுவாக போராட்டம் நடத்தப்படுவதின் முலம் ஒரு நாடு இரண்டாக பாரிக்கப்படுகிறது 1971-ஆம் ஆண்டு நடந்த போரின் மூலமாக பாக்கிஸ்தான் நாட்டில் இருத்து பங்களா தேஷ் என்ற புதிய நாடு உருவானது சர்வதேச அலவில் அந்த நாடு அங்கீகாரம் பெறேவண்டும். பங்களா தேஷ் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.
1983-ஆம் ஆண்டு சைபரஸ் பிரிநுது வடக்கு சைபரஸ் துருக்கிய குடியரசு (Turkish Republic of Northern Cypirus) என்று வழங்கப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச அளவில் இந்த நாடு துருக்கி என்றே அங்கிகாரம் பெற்றுள்ளது.
1977-ஆம் ஆண்டு போபுதடஸ்வானா(Bobhuthatswana) .1981-ஆம் ஆண்டு சிஸ்கேய்.((Ciskei) 1976-ஆம் ஆண்டு டிரான்கேய்.(Transkei)1979-ஆம் ஆண்டு வேந்தா(Venda) ஆகிய பகுதிகள் சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டன. இருத்தாலும் எந்த நாடும் சுதந்திர நாடுகளாகவோ நீக்ரோக்களின் தாய் நாடுகளிகவோ சர்வதேச அரங்குகளில் அங்கிகாரம் பெறவில்லை இந்த நாடுகள் lதென் அமெரிக்காவின் ஒரு பாகமாகருதப்படுகிறது. இதன் முலம் ஓரு நாடு புதிதிக உருவானாலும், சில நேரங்களில் சர்வதேச அங்கிகாரம் பெறாமல் நாடாக்க் கருதப்படாமல் போய்விடுகிறது.

mgandhi
06-02-2007, 05:57 PM
அமிலமழை என்றால் என்ன?

மோட்டார் கார்கள் வெளியிடும் புகையும்,தொழிழ்சாலைகள் வெளியேற்றும் அசுத்தக் காற்றும் மின்நிலையங்கள் அனுப்பும் இராசாயனப் பொருட்களும் காற்றில் கலக்கின்றன இந்த அசுத்தக் கலவையில் சல்பர்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள் போன்ற இராசாயனப் பொருட்கள் இருக்கின்றன இந்தப் பொருட்கள்ஆவியாகி தண்ணீர் துகள் களுடன் சோர்ந்து கந்தக அமுலம் (Sulphuric Acid) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) போன்றவைகளாக மாறிகான்றன இந்த அமிலங்எள் மழைத்துளிகள்.பனித்துளிகள் மற்றும் இதர வடிவங்களில் பூமியை வந்து அடைகின்றன.
இந்த அமிலமழையால் உலகில் நீர்,நிலம்,உயிர்இனங்கள்
மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

mgandhi
11-02-2007, 10:48 AM
கரடி அறிவியல் உண்மைகள்
பாண்டா கரடிகள் ஐந்து முதல் ஆறடி உயரம் வரயிலும் வளரக் கூடியவ.
பொதுவாக சராசரி தட்பவெப்ப நில உள்ள வடக்குப் பகுதியில் வாழும் இவை, வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் காணப்படுகின்றன.

பனிக் கரடிகள் ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் வசிக்கும். வெள்ளயாக இருக்கும் இவை சிறப்பான நீச்சல் திறமை உடயவை. அறுபது மல்கள்வஐர ஓய்வு எடுக்காமல் நீந்தக் கூடியவை. நீச்சல் வேகம் மணிக்கு ஆறு மயில்.
பெரும்பாலும் அடர்ந்த காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழும் கரடிகள், உயரமான இடத்தயே தங்குவதற்குத் தேர்ந்தெடுக்கும். சமயங்களில் மரக்கிளைகளின் உச்சியிலும் தூங்கும் வழக்கம் உடயவ இவை.

கரடிகளின் கண்பார்வ மிகவும் மங்கலான. பெரும்பாலானவற்றுக்குக் காது மட்டுமே நன்றாகக் கேட்கும். இவற்றின் மோப்ப சக்தி மிகவும் அதிகம்.
குட்டிகள் முதல் ஒன்பது மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும்.
பனிக் கரடிகள், கருப்புக் கரடிகள், பழுப்புக் கரடிகள், பாண்டா கரடிகள் என்று கரடிகளில் பலவக உண்டு.

தூங்கிக்கொண்டிருக்கும்போது சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் விழித்துக்கொள்ளும். வருடத்துக்கு ஆறு முதல் எட்டு மாதங்கள்வர சாப்பிட்டுச் சாப்பிட்டு சேர்த்துவைத்திருக்கும் கொழுப்பு குளிர்காலத் நீண்ட நேரத்தை தூக்கத்தின்போது இவற்றுக்குப் பயன்படும்.
கரடிகளின் விருப்பம் சைவ உணவுகள்தான். தேன், விதகள், பழங்கள், புல், வேர் போன்றவற்றை உண்ணும். சைவ உணவு கிடக்காதபோது, மான்கள், ஆடுகள், பன்றிகள், எறும்பு, தேனீ போன்றவற்றை நாடும்.

கரடிகள் தனிமை விரும்பிகள். பெண் கரடிகள் மட்டும் குட்டிகள் வளரும்வரை தூணை இருக்கும்

சீல் மற்றும் வால்ரஸ் மீன்கள விரும்பித் தின்னும்.
கரடிகளால் முப்பத்தைந்து மயில் வேகத்தில் ஓடமுடியும். குட்டிகளக் காப்பாற்றவும் உணவுக்காகவும் மட்டுமே சண்டையிடும் முடிவுக்கு வருபவை கரடிகள்.

மயூ
11-02-2007, 02:06 PM
முகப்பனி....முகத்தில் (மட்டுமே) வீசும் பனி.. புதிதாய்க் கற்றேன்.

நன்றி காந்தி.
அட எனக்கும்தான்... வாழ்க்கையில் பனியைக் கண்டதே இல்லயே!!!

மனோஜ்
11-02-2007, 02:45 PM
முத்தான தகவல்கள் காந்தி நீங்கள் ஆசிரியரா தெரிந்து கொள்ள கேட்கிரோன் ?

mgandhi
14-02-2007, 07:22 AM
டனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை எது தெறியுமா?
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை இவை.

எட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய கடல் பகுதிகளில் வாழ்கின்றன.

கடல் ஆமைகள் ஊர்வன வகையைச் சேர்ந்தவை.
சூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடலின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும்.

நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது.

கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும். பெரிய ஆமைகளின் எடை ஏறக்குறைய 250-\400 கிலோ!

கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான். இவை டால்பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும்.

பெருந்தலை ஆமைகளின் முக்கியமான உணவு நத்தைகள், ஜெல்லி மீன், சிப்பி போன்றவை. இவை நத்தை போன்ற உறுதியான ஓடுகளையுடைய உயிரினங்களை உட்கொள்ளத் தகுந்தாற் போன்ற வாயமைப்புடன் இருக்கும்.

கடல் ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடைகளை வைத்தே மென்று தின்ன முடியும். மிகக் குறைந்த தூரத்துக்கு மட்டுமே பார்க்க முடியும். நுகரும் திறன் இவற்றுக்கு மிகவும் அதிகம்.

ஒரு ஆமை 50\லிருந்து 200 முட்டைகள் வரை இட்டாலும் சில மட்டுமே பொரியும். முட்டை பொரிந்த பின் (60\85 நாட்கள்) ஆமைக்குட்டிகள் இரவில் கடலுக்குள் சென்றுவிடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து முழு வாழ்நாளையும் கடல் ஆமையால் வாழ முடிந்தால் செஞ்சுரிகூட போடும்!

அலுங்கு ஆமை சில காலங்களில் நச்சுத்தன்மை உள்ள கடல் பஞ்சு போன்ற மிருதுவான தாவர வகையை உண்ணும். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவியிருக்கும். இவற்றை மனிதர்கள் உண்டால் உயிருக்கே ஆபத்து.

பெண் ஆமைகள் முட்டையிட நிலத்துக்கு வரும். இதற்காக சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மைல்கள்கூட நீந்தி வரும். ஆண் ஆமைகள் ஒரு முறை கடலுக்கு சென்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அங்கேதான்!

mgandhi
16-02-2007, 03:46 PM
பச்சிளங்குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்பதேன் ?
இப்பழக்கம் இளங்குழந்தைகளுக்கு இயற்கையாகவே வருவதாகும். குழந்தைகள் பிறந்தவுடனே தாய்ப்பால் அருந்துகின்றன; பின்னர் புட்டிப்பால் குடிக்கின்றன. அப்போது வாயினால் பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது ஏற்படும் பாதுகாப்பு உணர்வை மீண்டும் பெறும் நோக்கத்திலேயே குழந்தைகள் விரலை சூப்ப ஆரம்பிக்கின்றனர். மருத்துவ வல்லுநர்கள் கருத்துப்படி, குழந்தைகளின் இப்பழக்கத்தைப் பற்றி அநாவசியமான கவலை கொள்ளத் தேவையில்லை. அச்சம், கவலை, துக்கம் ஆகியவை காரணமாக, பெரிய சிறுவர்களும் அவ்வப்போது கைசூப்புவதுண்டு. இதற்குக் காரணம் இப்பழக்கத்தினால் அவர்கட்கு ஒருவகை உணர்வுபூர்வமான ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றன. இருப்பினும் வளர்ந்த குழந்தைகள் இப்பழக்கத்தை மேற் கொள்ளும்போது அதனைக் கண்டிப்பாகத் தடுத்திட வேண்டும்.

அறிஞர்
16-02-2007, 04:06 PM
கடல் ஆமைகள்.. வெகு வருடங்களாக இருக்கிறது.

அவற்றின் அளவு.. எடை.... பெரிதாக இருக்கும். தைவானில் இருந்த பொழுது கண்டிருக்கிறேன்.

அறிஞர்
16-02-2007, 04:07 PM
கைசூப்பு பழக்கத்தை சிலர் பள்ளிக்கூடம் வந்த பிறகும் விடுவதில்லை...

மயூ
17-02-2007, 03:16 AM
கைசூப்பு பழக்கத்தை சிலர் பள்ளிக்கூடம் வந்த பிறகும் விடுவதில்லை...
சில காலேஜூ மாணவர்களுக்குக் கூட இந்தப் பழக்கம் உள்ளது!!!! மனநல மருத்துவரின் உதவியடன் இதிலிருந்து விடுபடலாம் என்று நினைக்கின்றேன்.

mgandhi
18-02-2007, 04:26 AM
வண்ணத் தூரிகையின் (paint brush) இழைகள் நீருக்கு வெளியே ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டும், நீரினுள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பிரிந்தும் இருப்பதும் ஏன் ?
வண்ணத்தூரிகையிலுள்ள இழைகளின் அடர்த்தியும் (density), நீரின் அடர்த்தியும் ஏறக்குறைய சமமாகும். எனவே தூரிகையை நீரினுள் வைத்திருக்கும்போது நீரின் மிதப்பாற்றல் (Buoyancy) காரணமாக தூரிகையின் இழைகள் மேலெழும்புகின்றன. இதன் விளைவாக இழைகள் தனித்தனியே பிரிந்து நிற்கும். தண்ணீரால் நனைக்கப்பெற்ற நிலையில், தூரிகையை நீருக்கு வெளியே எடுக்கும் போது, இழைகளின் மூலக்கூறுகளுக்கும் (molecules) தண்ணீரின் மூலக்கூறுகளுக்கும் இடையே உண்டாகும் ஒட்டுவிசையின் (Cohesive force) காரணமாக, இழைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிரியாமல் இருக்கும்.

mgandhi
23-02-2007, 01:26 AM
BAR CODE. அதன் அர்த்தம் என்ன?

என். ஜோசப் உண்டலண்ட் என்பவர் 1952_ல் உருவாக்கியதுதான் பார் கோட். தன் நண்பரின் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தினசரி ஸ்டாக்குகளைச் சரிபார்க்க வசதியாக அவர் உருவாக்கிய முறைதான் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

பார் கோடில் சில கோடுகளும், சில காலியிடங்களும் இருக்கும். அவை ஐந்து பகுதிகளாக முறைப்படுத்தப்பட்டிருக்கும். அதில் சம்மந்தப்பட்ட பொருளைப் பற்றிய முழுத் தகவலும் இருக்கும். தயாரிக்கப்பட்ட நாள், இடம், உபயோகிக்கும் கால வரையறை, விலை, தரம் என அனைத்தும் அடங்கும். கோடுகளாக இருக்கும் அந்தத் தகவல்கள் லேசர் கதிர்களால் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டு, அங்கு டிஜிட்டல் டேட்டாக்களாக மாற்றப்படுகிறது.

வங்கி காசோலைகளில் கம்ப்யூட்டர் நம்பர் மாதிரி காணப்படும் எண்களும் இந்த பார் கோட் வகையைச் சேர்ந்ததுதான். இதை MICR கோட் என்பார்கள். பார் கோட் வகையில் லேட்டஸ்ட், போர்ட்டபிள் டேட்டா ஃபைல் என்கிற PDF 2D கோட்.

mgandhi
27-02-2007, 06:26 PM
பருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராமல், முகத்தில் மட்டுமே மிகுதியாக வருவது ஏன்?
முகத்தின் தோற்பரப்பில் சிவந்த நிறத்தில் தோன்றும் மிகச் சிறு கட்டிகளை முகப்பரு என்கிறோம். இப்பருக்களுள் சீழ்த்துளிகளும் (pus) இருக்கும். பெரும்பாலும் 13 முதல் 20 வயதுவரை உள்ள இளைஞர்கட்கே முகப்பரு மிகுதியாக வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள. பருவ முதிற்சியினால் தோற்சுரப்பிகளில் எண்ணெய்ப் பிசுப்புடைய ஒருவகைக் கொழுப்புப் பொருள் மிகுதியாகச் சுரக்கிறது. இது தோற்பரப்பின் மிக நுண்ணிய துளைகள் வழியே வெளியேறும்போது தோலின் அடிப்புறமுள்ள திசுக்கள் (tissues) சிவந்து வீங்கி பருக்களாகக் காட்சியளிக்கின்றன. பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகளினால் விளையும் தொற்றல் (infection) காரணமாகவும், நமைச்சல் ஏற்பட்டு மேற்கூறிய பிசுபிசுப்பான கொழுப்பு எண்ணெய், சீழாக மாறிச் சிவந்து பருக்களாவதுண்டு.

ஊட்டமான உணவு உட்கொள்ளமை, கவலைப்படுதல், நல்ல காற்றோட்டமில்லாத அசுத்தமான சூழலில் வசித்தல் ஆகிவையும் பருக்கள் தோன்றக் காரணம் எனலாம். உடற்பகுதியிலேயே முகம்தான் நுட்பமான உணர்ச்சிகளுக்கும், தூண்டல்களுக்கும் உட்படும் பகுதியாகும். எனவேதான் பருக்கள் அதிகமாக முகத்தில் தோன்றுகின்றன. பருக்கள் மேலும் பரவாமல் தடுக்க நல்ல நீரையும், சோப்பையும் பயன்படுத்தி, அவ்வப்போது முகத்தைக் கழுவி, தூய்மையான துண்டினால் துடைக்க வேண்டும்.

அறிஞர்
27-02-2007, 09:14 PM
பார் கோடு, பருக்கள் பற்றிய தகவல்கள் அருமை.. காந்தி..

இன்னும் தொடருங்கள்.

mgandhi
04-03-2007, 10:59 AM
தெரிந்து கொள்ளுங்கள்

1. இறக்கை முளைத்த ஈசலுக்கு ஆயுட்காலம் எவ்வளவு?... - ஒரு சில மணி நேரமே

2. பைபிளில் வெட்டுக்கிளிகள் நாடு என்று எந்த நாடு கூறப்படுகிறது? - எகிப்து

3. மண் புழுவின் முக்கியத்துவத்தை உலகிற்கு முதன் முதலில் சொன்னவர்? - சார்லஸ் டார்வின்

4. பூமியில் 35 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பூச்சியினம்? - கரப்பான் பூச்சி

5. இதுவரை எவ்வளவு வண்டு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன? - 3 லட்சம் வண்டுகள்

6. மஸ்கா டொமஸ்டிகா என்னும் வீட்டு ஈயின் தன்மைகளை விளக்கிய சுவீடன் விலங்கியல் ஆய்வாளர்? - லின்னோவஸ்

7. தேள்களே இல்லாத நாடு எது தெரியுமா? - நியுசிலாந்து

8. மின்மினி பூச்சிகளின் மினுக் ஒளி எதனால் ஏற்படுகிறது? - மின்மினிப் பூச்சிகளின் காதல் சங்கேத மொழியால்.

9. தேனீயின் பறக்கும்வேகம் எவ்வளவு தெரியுமா? - மணிக்கு 7 கி.மீ.

11. பூரான்கள் எந்த விலங்கின வகுப்பைச் சேர்ந்தவை? - சைலோபோடா

12. கரையான் புற்றுகள் அதிக பட்சம் எவ்வளவு உயரம் வரை வளரும்? - 40 அடிகள்.

13. மகிழ்ச்சிப் பூச்சி என்றழைக்கப்படுவது? - வண்ணத்துப் பூச்சி

14. விவசாயிகளின் தோழன் என்றழைக்கப்படும் பூச்சி? - குளவி

mgandhi
07-03-2007, 06:30 PM
பண்பலை ஒலிபரப்பு (F M Transmission) என்பது என்ன ?

வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high frequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.

இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM - Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM - Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்.

அறிஞர்
07-03-2007, 07:06 PM
பூச்சிகள் பற்றி கொடுத்த தகவல்கள் பல புதியது.... நன்றி காந்தி..

FM ரேடியோ பற்றி சுவையான தகவல்கள் அருமை..

மனோஜ்
07-03-2007, 07:29 PM
FM தகவல் உன்மையில் எனக்கு அருமையான தகவல் நன்றி காந்தி

mgandhi
11-03-2007, 07:20 PM
ஆற்றின் நடுப்பகுதியில் செல்லும் நீரின் விரைவுத் தன்மை (speed) கூடுதலாகவும், இரு கரைகளின் அருகே செல்லும் நீரின் விரைவுத் தன்மை மிகக் குறைவாகவும் இருப்பது ஏன் ?
தண்ணீர் ஒட்டுந் தன்மை/பசைத் தன்மையுடைய ஒரு நீர்மப் பொருள். இதன் குண நலன்கள் மிகவும் தெளிவானவை. ஆற்றின் இரு கரைகளை ஒட்டி இருக்கும் தண்ணீர், கரைகளுடன் ஏற்படும் உராய்வின் காரணமாக இயக்கம் குறைந்து ஏறக்குறைய நிலையான தன்மையில் இருப்பதாகக் கருதலாம். மாறாக ஆற்றின் இரு கரைகளை விட்டு விலகி இருக்கும் நீரில் மேற்கூறிய உராய்வு ஏதுமில்லை என்பதால் ஆற்றின் நடுப்பகுதியில் ஓடும் நீர் விரைந்து செல்லுகிறது. எனவேதான் ஆற்றின் கரைகளின் அருகே செல்லும் நீரைவிட, நடுப்பகுதியில் செல்லும் நீர் விரைந்து ஓடுகிறது.

இருக்கையில் இருந்து எழும்போது, நாம் முன்பக்கம் சாய்ந்தவாறு காலை உந்திக்கொண்டு எழுந்திருப்பது ஏன் ?ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் (center of gravity) அதன் அடிப்பகுதியிலேயே விழும்போது அப்பொருள் நிலையாக இருக்கும். எனவேதான் ஒரு பொருள் பரந்த அடிப்பகுதியும், அதனால் அதன் ஈர்ப்பு மையம் புவிக்கு அருகிலும் இருக்கும்போது, அப்பொருள் நிலையாக இருக்கிறது.

இருக்கையில் அமர்ந்து இருக்கும் மனிதனின் ஈர்ப்பு மையம் அவன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும். அதனால் அவன் முன்பக்கம் சாய்ந்து, காலை உந்தி எழும்போது ஈர்ப்பு மையம் காலின் அடிப்பகுதியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. எனவேதான் மனிதனால் கீழே விழாமல் எழுந்திருக்க இயலுகிறது. மேற்கூறிய அச்செயல் தன்னியக்கமாக, அனிச்சையாக, எவ்வித முயற்சியுமின்றி, மிகவும் இயல்பாக நடைபெறுகிறது என்பதனை நாம் அறிவோம்.

அமரன்
12-03-2007, 06:58 PM
எல்லாமே அருமை ராஜா.

mgandhi
12-03-2007, 07:14 PM
ஊற்றுப்பேனாவில் (Fountain pen) உள்ள மை, ஏறக்குறைய தீர்ந்து விட்ட நிலையில், அதிகமாக வெளியே கொட்டுவது ஏன் ?

பேனா முள் (nib), மையைத் தேக்கி வைக்குமிடம், மையை முள்ளுக்குச் செலுத்தும் வழி ஆகிய மூன்றும் பேனாவின் முக்கியமான பகுதிகளாகும். பேனாவைப் பயன்படுத்தி எழுதும் போது, கூர்மையான பேனா முள்ளின் பிளவு வழியாக மை கசிந்து தாளில் எழுதும் வாய்ப்பு உண்டாகிறது. மை தேங்கியுள்ள இடத்திலிருந்து மை வெளியேறுவதனால் உண்டாகும் காலி இடத்தில் காற்று நிரம்பிவிடும். இதனால் மை தேக்ககத்திலும், வெளியேயுள்ள வளி மண்டலத்திலும் ஏற்படும் காற்றழுத்த வேறுபாடு சமன் செய்யப்படுகிறது. காற்று உள்ளே செல்வதற்கு வசதியாக பேனா முள்ளின் நடுவில் ஒரு சிறு துளை இருப்பதையும் காணலாம். மை தேக்ககத்திலிருந்து மை வெளியேற வெளியேற, அவ்விடத்தில் நிரம்பும் காற்றின் கொள்ளளவும் மிகுதியாகிக்கொண்டே செல்லும். ஒருவர் பேனாவைப் பிடித்து எழுதிக் கொண்டே இருக்கும்போது, அவர் கை விரல்களின் சூடு உள்ளே இருக்கும் காற்றையும் சூடுபடுத்தும். மை தேக்ககத்தில் பெருமளவு மையும், ஓரளவு காலி இடமும் அவ்விடத்தில் காற்றும் இருக்கும்போது மேற்கூறிய வெப்பத்தினால் உண்டாகும் விளைவு மிக மிகக் குறைவே. ஆனால் சிறிதளவு மையும் பெருமளவு காலி இடமும் அவ்விடத்தில் பெருமளவு காற்றும் நிரம்பி இருக்கும்போது, வெப்பத்தினால் காற்று விரிவடையும். இதன் விளைவாக, மை உந்தித் தள்ளப்பட்டு பேனா முள்ளின் வழியாக சிந்திக் கொட்டத் துவங்கும். மிகச் சிறிதளவே மை இருக்கும்போது அதிகமாக மை கொட்டுவது இதன் காரணமாகவே.

இளசு
12-03-2007, 07:57 PM
சின்ன சின்ன தகவல்கள்.. எல்லாமே சுவையான நான் அறியாத தகவல்கள்..

நன்றி காந்தி..

(சின்ன வயசில் எத்தனை முறை கையைக் கறையாக்கி இருக்கேன்...
ஆஹா.. இப்பத்தான் விஷயம் விளங்குது..
ம்ம்ம்,,, இப்ப கார்ட்ரிட்ஜ் பேனாக்கள்தான்...பயன்படுத்துறேன்..)

pradeepkt
13-03-2007, 05:13 AM
தகவலுக்கு நன்றி காந்தி.

பேனாவில் எழுதியே பல நாட்களாகி விட்டன. இப்போதெல்லாம் எங்காவது கையெழுத்துப் போடும் போது மட்டுமே பேனாவின் அருகாமை தேவைப்படுகிறது.

பல டாக்குமெண்டுகளில் இப்போது டிஜிட்டல் கையெழுத்துகளை இட்டு விடுவதால், அதிலும் குறைவே!

மனோஜ்
13-03-2007, 08:29 AM
இப்படி பேனாவில் ஏற்படும் கசிவு பேனா பழுதானதால் என்று நினைத்ததுன்டு ஆனால் அருமையான அறிவியல் விளக்கம் நன்றி காந்தி அவர்களே

mgandhi
05-04-2007, 06:41 PM
புதைமணற்பரப்பில் எடைகூடிய பொருட்கள் புதையுண்டு போவதும், சாதாரண மணற்பரப்பில் அவ்வாறு நிகழாததும் ஏன்?

சாதாரண மணல் துகள்களுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையினால் (cohesive force) உண்டாகும் உராய்வின் (friction) காரணமாக எடைகூடிய பொருட்கள் கீழ்ப்புறம் செல்வது தவிர்க்கப்படுகிறது. ஆனால் புதைமணல் என்பது மணல் துகள்களும் ஏராளமான நீரும் கலந்த ஒரு கலவை. மணலுடன் கலந்துள்ள தண்ணீரின் மூலக்கூறுகள் மணல் துகள்களுக்கிடையே நிலவும் மேற்கூறிய உராய்வைக் குறைத்து விடுகிறது. எனவே இத்தகைய உதிர்மணற்பரப்பில் எடை கூடிய பொருட்கள் கீழே செல்வதற்கு எவ்விதத் தடையும் உண்டாவதில்லை. இதனால் கனமான பொருட்கள் புதைமணலில் எளிதாகப் புதையுண்டு போகின்றன.

leomohan
05-04-2007, 06:45 PM
நல்ல தகவல். நன்றி மோகன்.

பென்ஸ்
05-04-2007, 07:11 PM
சின்ன சின்ன தகவல்கள்.. எல்லாமே சுவையான நான் அறியாத தகவல்கள்..

நன்றி காந்தி..

(சின்ன வயசில் எத்தனை முறை கையைக் கறையாக்கி இருக்கேன்...
ஆஹா.. இப்பத்தான் விஷயம் விளங்குது..
ம்ம்ம்,,, இப்ப கார்ட்ரிட்ஜ் பேனாக்கள்தான்...பயன்படுத்துறேன்..)
நீங்களாவது பரவாயில்லை....
நான் இப்போ பென்சில்தான்...

mgandhi
11-04-2007, 05:34 PM
தொலைக்காட்சித் திரையில் சினிமாஸ்கோப் படங்களைத் திரையிடும்போது அவற்றின் அகலம் குறைந்து காணப்படுவதேன் ?
சினிமாஸ்கோப் படங்களை எடுப்பதற்கு உருளை வடிவிலமைந்த கண்ணாடி வில்லை (lens) பொருத்தப்பட்ட தனிவகையான ஒளிப்படப் பெட்டியைப் (camara) பயன்படுத்துவர். இதில் எடுக்கப்படும் படம் அல்லது உரு (image) நீளம் மிகுந்தும், அகலம் குறைந்தும் அமையும். இதனால் உருவின் மிகுதியான பரப்பு படத்தில் பதிவாகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட சினிமாஸ்கோப் படங்களை அரங்குகளில் திரையிடுவதற்கு உருளை வடிவிலமைந்த மற்றொரு வில்லை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நீளவாட்டில் அமைந்த பகுதி, உயரவாட்டில் அமைந்த பகுதியைவிட மிகுதியாக உருப்பெருக்கம் (magnify) செய்யப்படுகிறது. படத்தின் நீளவாட்டப் பகுதி, உயரவாட்டப் பகுதியை விட இரண்டரை மடங்கு அதிகமாக அமைந்துள்ளது. எனவே சினிமாஸ்கோப் படத்தை திரையரங்குகளில் திரையிடுவதற்கும் நீள அகல விகிதங்கள் 2.5: 1 என்ற வகையில் அமைந்த சிறப்புத் திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தொலைக்காட்சித் திரையில் நீள அகல விகிதங்கள் மேற்கண்ட விகிதத்தில் இல்லாமல் இருப்பதால் சினிமாஸ்கோப் படத்தின் அகலம், முழுத் திரையிலும் கொண்டுவர இயலாமல், குறைவாகக் காட்சியளிக்கிறது.

ஓவியன்
11-04-2007, 05:38 PM
தகவலுக்கு நன்றி.

இளசு
11-04-2007, 07:36 PM
நன்றி காந்தி

தமிழின் முதல் அகலத்திரைப்படம் -
அருட்செல்வர் ஏ.பி. நாகராஜனின் 'இராஜ ராஜச்சோழன்'

mgandhi
16-04-2007, 08:01 PM
பைசா கோபுரம்
இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இந்த கோபுரம்.
1173--&ஆம் வருடம் கட்டது ஆரம்பிக்கப்பட்ட இந்த கோபுரத்தை வடிவமத்தவர் யார் என்று சரியாகக் கூறமுடியாது. காரணம் இதன் கட்டுமானப் பணிகள் இருநூறு வருடங்களுக்குத் தொடர்ந்தது தான். எனினும் முதலில் கட்டுமானப்பணியைத் தொடங்கியவர் & பொனானோ பிஸானோ.

நேராகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் கட்டடம் கட்டும்போதே சாய்ந்த நிலக்குப் போனது

ஏழாவது மாடியில் இருந்து அளந்ததில் கிட்டத்தட்ட 4.4 மீட்டர் தூரத்க்கு சாய்ந்திருக்கும் இந்த கோபுரம் கட்டப்பட்ட நிலத்தின் தன்மையால்தான் (60 சதவிகிதம் நீர் சேர்ந்த இந்தப் பகுதி மண்) சாயத் தொடங்கியது.

இந்த கோபுரத்தின் எட 14,500 டன்கள்.

சுமார் ஐந்தரை டிகிரி கோணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தெற்க நோக்கி சாய்ந்திருக்கிறது இந்தக் கோபுரம்.

கோபுரத்க்குள் இருக்கும் சுழல் படிக்கட்டுகளின் மூலம் கோபுரத்தின் உச்சி வரை செல்ல அனுமதி உண்டு.

1173&ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி மூன்றாவ மாடி கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது 1178&ஆம் வருடம் பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி 1272&ஆம் வருடம் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை ஏழாவது மாடி கட்ட ஆரம்பித்த போது 1278& ஆம் வருடம் நிறுத்தப்பட்டது.

மறுபடி 1360&ஆம் வருடம் தொடங்கப்பட்டது கட்டுமானப்பணிகள் தொடர்ந் து பத்து வருடங்கள் தடையின்றி நடக்க பைசா கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

கோபுர உச்சிக்குச் செல்ல அமக்கப் பட்டிருக்கும் படிகள் & 293
கோபுரத்தின் உயரம் & 58.36 மீட்டர்கள்.

ஒவ்வொரு வருடமும் சாய்ந்கொண்டே இருக்கும் இந்த கோபுரத்தை அவ்வப்போது நிமிர்த்த யாராவ முயற்சி செய்வண்டு. ஒருமுற 800 டன் எடை கொண்ட கற்கள கோபுரத்தின் ஒரு பக்கம் நிறுத்தி, அதிலிருந் கயிறு கட்டி கோபுரத்த நிமிர்த்தப் பார்த்தனர்.

இரண்டு வெவ்வேறு எடயுடய பந்கள் காற்றோ மற்ற குறுக்கீடுகளோ இல்ல என்றால் ஒரே நேரத்தில்தான் பூமியில் விழும் என்று கலிலியோ மக்களுக்கு எடுத்ச் சொன்ன பைசா கோபுரத்தின் உச்சியில் இருந்தான்.

mgandhi
17-04-2007, 05:58 PM
கண்ணாடிப் பொருட்கள் நொறுங்கும் பண்பைப் (brittleness) பெற்றிருப்பதற்கு என்ன காரணம்?

ஒரு பொருள் மென்மை அல்லது கெட்டித்தன்மை பெற்றிருப்பதும், நொறுங்கும் தன்மை அல்லது கடினத் தன்மை பெற்றிருப்பதும் அப்பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்துள்ளன மற்றும் பிணைக்கப்பட்டுள்ளன என்பவற்றைப் பொறுத்ததாகும். ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் பிணைப்புகளைத் துண்டித்துக் கொள்ளாமல் இடம் பெயரும் தன்மை பெற்றிருக்குமானால், அப்பொருள் தன் மீது செலுத்தப்படும் விசையைத் தாங்கிக் கொண்டு உடையாமாலிருக்கும். எடுத்துக்காட்டாக, உலோகத்தின் ஒரு பகுதி தகைவுக்கு (stress) உட்படும்போது, அப்பகுதியிலுள்ள அணுக்கள் வேறிடத்திற்கு இடம் பெயர்ந்து அங்குள்ள அணுக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்நிகழ்ச்சி உருத்திரிவு (deformation) எனப்படுகிறது. மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள பிணைப்பு, நெகிழ்ச்சித் தன்மையுடனிருந்தால் மட்டுமே இது இயலும்.

கண்ணடியைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் -- அதாவது சிலிகான், உயிர்வளி, போரான், சில உலோகங்கள் ஆகியவற்றின் அணுக்கள்_மிகவும் உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வணுப் பிணைப்புகள் ஏதேனும் அழுத்ததின் காரணமாக சிதைந்து போனால், அவ்வணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் இணைந்து மீண்டும் பிணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள் எளிதில் உடைந்து விடுகிறது. ஆனால் உலோகங்களையோ தகடுகளாகவும், கம்பிகளாகவும் மாற்ற முடிகிறது.

அன்புரசிகன்
17-04-2007, 06:08 PM
நன்றி காந்தி. பல இடங்களிள் தேடித்திரிந்த கிடைக்காத விடையங்கள் இங்கு தருகிறீர்கள். தொடருங்கள்.

mgandhi
22-04-2007, 06:47 PM
அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது நாமக்கு வியர்ப்பது ஏன்?


வியர்வை வருவதற்குக் காரணம், நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே (sweat glands). இவற்றின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இவ்வியர்வைச் சுரப்பிகள் இருவகைப்படும். அவை முறையே, எக்ரின் (eccrine) சுரப்பிகள், அபோக்ரின் (apocrine) சுரப்பிகள் என்பன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு (stimuli) உட்படக் கூடியவை. முதலில் கூறப்பட்ட எக்ரின் வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருப்பவை. உடலின் வெப்ப நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுபவை. அடுத்துக் கூறப்பட்ட அபோக்ரின் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பேரச்சம், கடுஞ்சினம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும், குளிர்காலத்திலும் கூட நாம் வியர்ப்பதற்குக் காரணம் இதுவே.

அன்புரசிகன்
22-04-2007, 06:52 PM
சில வேளைகளழலட நமது வியர்வையே காட்டிக்கொடுத்துவிடும்.
தகவலுக்கு நன்றி காந்தி.

mgandhi
22-06-2007, 05:23 PM
உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் காய்கறி வெங்காயம்.

இந்திய மொழிகளிலே மிகவும் பழமையானது தமிழ் மொழி.

ஒவ்வரு ஆண்டும் சுமார் 5 கிலோ உப்பை ஒரு மனிதன் உணவின்மூலமாக உட்கொள்கிறான்.

சுத்தமான தேனையும் நெய்யையும் செர்த்தால் கடும் விஷம் உண்டாகும்.

உலகில் அம்மாவின் பெயரில் முதல் எழுத்தை இன்சியலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டவர்தான்.

சிற்ப்பிக்குள் புகுந்து கொள்ளும் மணல் துகள்களே நாளடைவில் முத்துக்களாகின்றன.

mgandhi
14-06-2011, 05:42 PM
சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன

mgandhi
14-06-2011, 05:44 PM
இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய்

mgandhi
14-06-2011, 05:45 PM
ஜப்பான் நாட்டவர் தம் நாட்டை அவர்களின் மொழியில் நிப்பான் என்று அழைப்பர்.

உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான தாய்ப்பே கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது

mgandhi
17-06-2011, 05:45 PM
இளவயதில் சாதனை படைத்தவர்கள்

இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத்சிங் வயது 23

புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27

ஜான்சி ராணி வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டபோது வயது 25
திருப்பூர் குமரன் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் ரத்தம் சிந்திய போது வயது 26


அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது படையெடுத்த போது வயது 22


ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டறிந்த போது வயது 24


கலிலியோ தெர்மொமீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20


மார்கோ போலோ உலகப் பயணத்தை தொடங்கிய போது வயது 17


கிரகாம்பெல் தொலைபேசியை கண்டறிந்த போது வயது 29


பாஸ்கல் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்த போது வயது 19

mgandhi
17-06-2011, 05:48 PM
கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் டைட்டானிக் பாக்டீரியா 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

mgandhi
17-06-2011, 05:49 PM
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.

mgandhi
17-06-2011, 05:50 PM
சிரிக்கும் புத்தர், சக்தி நடவடிக்கை ஆகியவை இந்தியா நடத்தியுள்ள அணுக்கரு வெடிப்புச் சோதனைகளின் குறிப்பெயர்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 07:09 PM
அறியாத கண்டுபிடிப்புகள் பல இருந்தாலும் அதனை அறியும் விதத்தில் தரும் அருமையான பதிவு ...

mgandhi
18-06-2011, 07:35 AM
அறியாத கண்டுபிடிப்புகள் பல இருந்தாலும் அதனை அறியும் விதத்தில் தரும் அருமையான பதிவு ...
நன்றி நாஞ்சில் த.க.ஜெய்

mgandhi
18-06-2011, 07:36 AM
பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் (1 மில்லியன் என்பது 10 இலட்சம்) இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாம்.

mgandhi
18-06-2011, 07:56 AM
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குக்கூட கைரேகைகள் ஒரே மாதிரி இருக்காது.

கபில்தேவ் நடத்தும் ஓட்டலின் பெயர் ஹோட்டல் சிக்ஸர்.

நாஞ்சில் த.க.ஜெய்
18-06-2011, 05:12 PM
இரட்டையர்கள் பிறக்கும் போது இரண்டாவதாக பிறக்கும் குழந்தை தான் அண்ணன் என்று பல நாடுகளில் கூறுவார்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறேன் ...அருமையான தொடர் இடைவிடாது அளியுங்கள்...

குணமதி
26-06-2011, 02:15 AM
அரிய செய்திகளைத் திரட்டித் தொகுத்தளிக்கின்றீர்கள். பாராட்டுக்குரிய பணி. நன்றி.


வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.

அது வளரி அன்று. வணரி என்பதே சரியான வடிவமாகும். திகிரி, சென்றுதிரும்பி, போம்வரும் என்ற பெயர்களும் உண்டு. ( தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி, பக்கம் 94.)

mgandhi
26-06-2011, 04:57 PM
1006.7 ஆண்களுக்கு 1000 பெண்கள்தான் உலகில் இருக்கிறார்கள்.

வட அமெரிக்காவில் ஆண்களைவிட 6 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ள்ளனர்.

ஓவ்வொரு வட அமெரிக்கரும் சராசரியாக 2,571.8 தொலைபேசி அழைப்புகளை ஆண்டுதோறும் செய்கிறார்கள்.

mgandhi
26-06-2011, 04:58 PM
நாலாயிரம் ஆண்டுகளாக எந்தப் புது விலங்கும் மனிதனுக்கு உதவும் வளர்ப்புப் பிராணியாக ஆகவில்லை

ஒர் ஆண்டிர்க்குத் தேவையான புட்பால்கள் செய்வதற்க்கு கிட்டத்தட்ட மூவாயிரம் மாடுகளிலிருந்து தோல் உரிக்கப்படுகிறது.

நாய்கள் சுமார் பத்து வகையான ஓலிகளை எழுப்பி மற்ற நாய்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றன.

mgandhi
26-06-2011, 05:01 PM
பார்டர் கோல்லீஸ் என்ற ஜாதி நாய்கள் ரொம்பவும் அறிவுக் கூர்மை உடையவை ஆஃப்கன் ஹெளண்ஸ் என்ற வகை மிகவும் முட்டாளானவை.

இயற்கை உணவான தேன் மட்டுமே கெட்டுப்போவதில்லை.

நத்தை மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் .

mgandhi
27-06-2011, 05:37 PM
எல்லா துருவக் கரடிகளும் இடது கை இடது கால் பழக்கம் உடையவை

பட்டாம்பூச்சி தன் கால்களால் சுவையை அறிகின்றது

எலிகள் மிகவேகமாக இனப்புருக்கம் செய்யக்கூடியவை

பூமியில் இருக்கும் தாவரங்கள்,விலங்குகளில் 85 சதவிகிதம் கடலில் வாழ்கின்றன

mgandhi
28-06-2011, 04:58 PM
ஆப்கானியப் பெண்களுக்காக சமீபத்தில்தான் ஒரு பத்திரிக்கை துவங்கப்பட்டது அதன் பெயர்: ரோஜ் (நாள்)

டைப்ரைட்டர் Keyboard-ல்*ஒரே ஒரு வரிசையில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய பெரிய வார்த்தை Type Writer.

நவீன விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தூய்மைப்படுத்தப்பட்ட கெரஸின்தான்.

mgandhi
30-06-2011, 11:19 AM
டெட்-ஸீ (Dead Sea)யில் உள்ள உப்பு சதவிகிதம் மிக அதிகம். அதில் குதித்தால் முழ்க மாட்டோம

மலரின் வாசனைக்குக் காரணம் அதன் இதழ்களிலுள்ள எண்ணெய்ச் சத்துக்கள் தான்.

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் போது பசி ஏற்படும்.

mgandhi
30-06-2011, 05:23 PM
யானை தினமும் 200 லிட்டர் தண்ணீர் அருந்தும்.

எகிப்தின் பிரமிடுகளில் மிகப்பெரியது கிஸே.

இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம் இந்தியன் ரெயில்வே.

கனடாவின் தேசிய விளையாட்டு, ஐஸ் ஹாக்கி.

பசுவுக்கு நான்கு இரைப்பைகள் உண்டு.

உலகிலேயே பழமையான விளையாட்டு பாலோ.

innamburan
30-06-2011, 09:48 PM
'ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் போது பசி ஏற்படும்.'
=> இது சிக்கலான விஷயம். நீரழிவு நோய் இருந்து, மருந்தோ, இன்சுலினோ எடுத்துக்கொள்பவர்களுக்கு குளுக்கோஸ் மிகவும் குறைந்தால், உயிருக்கே ஆபத்து: பசியினால் அல்ல. சக்தியின்மையினால். மற்றபடி ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையவே குறையாது.

mgandhi
01-07-2011, 06:39 PM
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 1907ஆம் ஆண்டில் தூத்துக்குடி கொழும்புக்கும் இடையே சுதேசிக் கப்பலை செலுத்தியது வரலாற்று நிகழ்வுகளில் ஓன்று அதன் பிறகு 114 ஆண்டுகள் கழித்து இப்போது தூத்துக்குடி கொழும்புக்கு இடையே ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் மீண்டும் போக்குவரத்தை தொடங்கி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது இதில் மொத்தம் ஓன்பது அடிக்குகள் கொண்டது ஒரே நேரத்தில் 1044 பேர் பயணம் செய்யலாம்

mgandhi
03-07-2011, 05:57 PM
http://upload.wikimedia.org/wikipedia/commons/3/3d/Rod_of_asclepius.png
பாம்பின் தோலை உரித்து வளரும் பண்பானது வளர்ச்சி, மறுபிறவி போன்றவற்றைக் குறிப்பதால் அஸ்லெப்பியசின் தடியில் பயன்படுத்தப்படுகிறது. இச்சின்னம், உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க மருத்துவ அமைப்பு, கனேடிய மருத்துவ அமைப்பு, மற்றும் அமெரிக்க கால்நடை மருத்துவ அமைப்பு ஆகியவற்றின் சின்னங்களாகப் பயன்படுத்தப்படுகின்றது.

mgandhi
04-07-2011, 05:45 PM
கரையான்களுக்கு கண்கள் கிடையாது. அதன் இரத்தத்தில் ஹீமோக்ளோபின் கிடையாது.

விஞ்ஞானி ஜன்ஸ்டீனின் மூளையை பிரின்ஸ்டன் மருத்துவமனையில் ஆராங்ச்சிக்காய பாதுகாத்து வருகிறார்கள்.


உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம் கல்கத்தாவில் உள்ள South Point High School.

mgandhi
05-07-2011, 06:39 PM
நிலவில் அதிகமாக காணப்படும் பொருள் டைட்டானியம்.

சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை எழுதியவர் முகமது இக்பால்.

இந்தியாவின் முதல் மிருகக்காட்சிசாலை 1855-ம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்டது.

mgandhi
06-07-2011, 05:52 PM
ஹரிதாஸ் திரைப்படம் ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது

mgandhi
06-07-2011, 05:54 PM
இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி எதுவும் கிடையாது; இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக உள்ளன.

mgandhi
07-07-2011, 05:28 PM
காவேரி டெல்டாபகுதியில் .இயற்கை எரிவாயு அதிக அளவு கிடைகிறது

திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைத்தவர் இராஜாஜி

1975ஆண்டுதமிழ்நாட்டில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது

அக்டோபர் முதல் டிசம்பர் வரைவடகிழக்கு பருவ காற்று வீசும் காலம்

mgandhi
08-07-2011, 05:20 PM
புல்லட் என்ற சொல் பெளலட் என்னும் ஃபிரஞ்சு சொல்லின திரிபாகும் பெளலட் என்றால் சின்னப் பந்து என்று பொருள்

உலகின் மிகப் பெரிய துப்பாக்கி 1942-ல் ஜெர்மனியர்களால் உருவாக்கப்பட்டது இதன் நீளம் 42.9 மீட்டர் எடை 1344 டன்கள்

இந்தியாவில் மட்டும் 300 பிரிவான மலைஜாதி மக்கள் வாழ்கின்றனர்.

பூமியைப் போல் 1313 மடங்கு பெரிதானது ஜூபிடர் கிரகம்

mgandhi
09-07-2011, 12:07 PM
சாஸ்திர விதிப்படி விக்கிரகங்கள் 8 வகைப்படும்.

1*- சிலை விக்கிரகங்கள்,
2- மர விக்கிரகங்கள்,
3- களி மண் விக்கிரகங்கள்,
4- பஞ்சலோக விக்கிரகங்கள்,
5- வரைந்த விக்கிரகங்கள்,
6-பட விக்கிரகங்கள்,
7- மன விக்கிரகங்கள்,
8- அஞ்ஞானத்தில் தோன்றும் விக்கிரகங்கள்.

mgandhi
11-07-2011, 05:31 PM
சிமெண்டைக் கண்டுபிடித்தவர் - ஜோஸப் ஆஸ்ப்டின் (பிரிட்டன்)

விலங்குகளின் நடத்தைப் பற்றிய ஆய்வைப் படிக்கும் பிரிவு - எதாலஜி

பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வான் லீவன்ஹூக்

innamburan
12-07-2011, 07:07 AM
வீராணம் ஏரி குழி தோண்டி அமைத்தது அல்ல. இயற்கை மேடு பள்ளங்களை அனுசரித்துக்கட்டப்பட்டது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்.

mgandhi
13-07-2011, 06:23 PM
`வானம் வசப்படும்' என்ற நூலை எழுதியவர் - பிரபஞ்சன்

`மேதைகளின் மேதை' என்று அழைக்கப்படுபவர் - லியானார்டோ டாவின்சி

ஒளிமிகுந்த கோள் - வெள்ளி.

mgandhi
14-07-2011, 05:19 PM
குங்குமப்பூ சாஃப்ரன் குரோக்கசு எனும் செடியின் பூவிலிருந்துத் தருவிக்கப்படும் நறுமணப் பொருளாகும். இப்பூவின் உலர்த்தப்பட்ட சூலக முடிகளும் சூல் தண்டுகளும் சமையலில் நறுமணத்திற்கும் வண்ணமூட்டவும் பயன்படுகின்றன.

mgandhi
17-07-2011, 05:17 PM
உலகில் மிக நீளமான கடற் பாலமாகிய சிங் டொவ் (Qingdao) வளைகுடாப் பாலமானது சீனாவில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலமானது கிழக்கு சீனாவின் ஷண்டொங் மாகாண துறைமுக நகரமாகிய சிங் டொவ் விலிருந்து ஹுவாங்டோ மாவட்டத்தினை இணைக்கின்றது. 41.58 கிலோமீட்டர் நீளமான இந்தப் பாலத்தினை நிர்மாணிக்க 1.39 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது.

mgandhi
17-07-2011, 06:27 PM
சக்கரை நோய் உள்ளவர்கள்

சாப்பிடக்கூடிய பழங்கள்:
1.ஆப்பிள்
2.ஆரஞ்சு
3.சாத்துக்குடி
4.மாதுளை
5.கொய்யா
6.பப்பாளி
7.தர்பூசணி
8.அன்னாசி
9.எலுமிச்சை
10.தக்காளி
11.நெல்லிக்காய்


சாப்பிடக்கூடாத பழங்கள்:
1.மாம்பழம்
2.வாழை
3.பலாப்பழம்
4.சப்போட்டா
5.திராட்சை
6.சீதாப்பழம்

நாஞ்சில் த.க.ஜெய்
17-07-2011, 06:47 PM
சர்கரை நோயாளிகளுக்கு உதவும் இனிப்பான தகவல் ....

mgandhi
18-07-2011, 05:41 PM
லிட்டில் மாஸ்டர் என்று உலகம் முழுவம் செல்லமாக அழக்கப்படும் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.

யூகலிப்டஸ் மரத்தின் இன்னொரு பெயர் ‘ப்ளூகம்’ மரம்.

உலகில் ஐயாயிரத்க்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் பேசப்படுகின்றன. அவற்றில், இந்தியாவில் மட்டுமே 845 மொழிகள் உள்ளன.

mgandhi
19-07-2011, 06:25 PM
பசிபிக் பெருங்கடலை விட, அட்லாண்டிக் பெருங்கடலில் உப்புத்தன்மை அதிகம்.

உலகிலேயே சுத்தமான காற்று வீசும் நாடு எது தெரியுமா? டாஸ்மேனியா!

புளோரிடா மாகாணம், இங்கிலாந்தை விடப் பெரியது.

ஒவ்வொரு ஆண்டும் அலாஸ்காவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

mgandhi
19-07-2011, 06:32 PM
மருந்தாக உதவும் சர்க்கரை!


இந்தியாவில் 2000 ஆண்டுகளாக கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும் வழக்கம் இருப்பதாக அய்வில் தெரிய வந்துள்ளது. உலகையே வியக்க வைத்த அலெக்ஸாண்டர் இந்தியா வந்தபோது, தேனீக்கள் இல்லாமலேயே தேன் தயாரிக்கும் இந்தியர்களின் திறன் கண்டு வியந்து பாராட்டியதாக வரலாற்று சான்றுக்ள் தெரிவிக்கின்றன.

கரும்புக்கு இணையாக, சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்தும் சர்க்கரை எடுக்கலாம் என்பதை, 1747ம் ஆண்டு முதன்முறையாக ஜெர்மனி ஆய்வாளர் ஆண்ட்ரியாஸ் மார்க்ராப் கண்டறிந்தார். 1802ம் ஆண்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை துவக்கப்பட்டது.

சர்க்கரையில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய நுண்பொருட்கள் உள்ளன. குளுக்கோஸ், ஃபுரூக்டோஸ் மற்றும் கேலக்டோஸ் ஆகியவை அடங்கியுள்ளன.

16ம் நூற்றாண்டில், லண்டனில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையின் விலை 5 டாலர்கள் அளவுக்கு இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தோல் பதனிடுதல், பிரிண்டர் மை, அச்சு டை ஆகியவை தயாரிக்கும் போது சர்க்கரை பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு ஆல்கஹால் சர்க்கரை நல்ல மருந்தாக பயன்படுகிறது. அத்துடன், சில வகையான நோய்களைத் தடுக்கும் மருந்தாகவும் சர்க்கரை பயன்படுகிறது.

சர்க்கரை அதிகம் உண்டால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறான கருத்து. சர்க்கரை அதிகம் உண்பதால் வயிற்றில் பூச்சிகள் உருவாதல், பற்கள் பாதிக்கப்படுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அனால், கடுமையான சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரை உண்பதை தவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

innamburan
19-07-2011, 07:57 PM
திரு மோஹன் காந்தி,
அனுபவம் பேசுகிறது. அனுமதிக்கவேணுமையா. சர்க்கரை அதிகம் உண்டால், சர்க்கரை நோய் தலை தூக்க வாய்ப்புகள் உள்ளன. சர்க்கரை நோய்,சர்க்கரை நோய் தான். அதில் கடுமையும், மென்மையும் கிடையாது, கொடுமை தான். சர்க்கரை நோயை நீக்கமுடியாது, இன்று வரை விஞ்ஞானம் கண்டுபிடித்ததில். அதற்கு மேற்கத்திய (அலோபதி) தான் சிறந்தது. மற்றது ஒன்றிலும் பலன் கிட்டவில்லை.

அக்னி
19-07-2011, 08:03 PM
சர்க்கரை நோய்,
இரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரக அழற்சி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களின் கூட்டாளி.
இதுவொரு பரம்பரை நோயும் கூட.
ஆனால், சர்க்கரை அதிகம் உண்டால் சர்க்கரை நோய் வருமா என்பது எனக்கும் கேள்வியே...

மன்ற மருத்துவர்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
இளசு அண்ணல் பதிலிட்டால் நலம்.

innamburan
19-07-2011, 08:09 PM
இளசு அண்ணலின் பதிலை யானும் எதிர்நோக்குகிறேன்.

mgandhi
20-07-2011, 04:26 AM
ஒரு மாதத்துக்கு 10 லட்சம் இணையதளங்கள்


• 2012ம் ஆண்டுக்குள் 17 பில்லியன் சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

• ஒரு மாதத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான இணையதளப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் இயங்குகிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும்.

• அமெரிக்காவில் திருமணமான 8 ஜோடிகளில் ஒரு ஜோடி, இணையம் வழியாக சந்தித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பர்.

• சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கம்ப்யூட்டரில் இயங்கும்போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

• இணையதளத்தில் பேனர் விளம்பரம் முதன்முறையாக 1994ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

• கம்ப்யூட்டரின் முதல் மவுஸ், மரத்தால் செய்யப்பட்டது. இதை 1964ம் ஆண்டு டாவ்க் ஏங்கல்பார்ட் என்பவர் வடிவமைத்தார்.

அன்புரசிகன்
20-07-2011, 04:33 AM
சர்க்கரை நோய்,
இரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரக அழற்சி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களின் கூட்டாளி.
இதுவொரு பரம்பரை நோயும் கூட.
ஆனால், சர்க்கரை அதிகம் உண்டால் சர்க்கரை நோய் வருமா என்பது எனக்கும் கேள்வியே...

மன்ற மருத்துவர்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
இளசு அண்ணல் பதிலிட்டால் நலம்.
சர்க்கரை (சீனியை தான் சர்கரை என்கிறீங்கள் போல) சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி வருவதில்லை. (இது எனது GP சொன்னது...) ஆனால் நோய் வந்தபின் தவிர்க்கப்படவேண்டியது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கோதுமை, பாஸ்மதி அரிசியை கூடத்தான் தவிர்க்க வேண்டும். மாச்சத்தும் இறுதியில் ஓரளவு குளுக்கோசாக மாறுமாம்.

எதற்கும் வைத்தியர்களின் ஆலோசனை இந்த விடையத்தில் நன்று...

அன்புரசிகன்
20-07-2011, 04:39 AM
யூகலிப்டஸ் மரத்தின் இன்னொரு பெயர் ‘ப்ளூகம்’ மரம்.நம்மூரில் knox மரம் என்றும் விக்ஸ் மரம் என்றும் சொல்வார்கள். தடிமன் சளி பிரச்சனை உள்ளவர்கள் இதன் இலையை நீரில் போட்டு வேகவைத்து குளிப்பார்கள். (ஏறத்தாள விக்ஸ் வேபரப் இன் வாசனை இதன் இலையிலும் உண்டு.
• சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கம்ப்யூட்டரில் இயங்கும்போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


இது உண்மையில் பிரச்சனையானது. வைத்தியர் சொன்னது. 5 நிமிடங்களுக்கு ஒருமுறை ஏறத்தாள 10 வினாடிகளுக்கு மிக தொலைவிலுள்ள பொருட்களை பார்க்க வேண்டுமாம். 1 மணித்தியாலத்துக்கு ஒருமுறை பென்சிலின் முனைப்பகுதியை கண் அருகே கொண்டுவந்து தூர கொண்டு சென்று கண்ணுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமாம். (கண்ணை தாங்கியிருக்கும் தசை வலுவாக இருக்க... தலைவலிகளை தவிர்க்க...)

எல்லாப்புகளும் எனது GP ற்கு... :D

mgandhi
20-07-2011, 05:59 PM
• ஆசியாவிலேயே முதல் முறையாக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது எங்கு தெரியுமா? இந்தியாவின் குஜராத்தில். கண்ட்லா சிறப்பு பொருளார மண்டலம் என்ற பெயரில் 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

• உலகில் பழங்கள், பருப்புகள், சுவைப்பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்.

• இந்திய இரயில்வே உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.

• இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட மிகப் பழமையான பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை. 1875ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1956ம் ஆண்டு இந்திய அரசால் நிரந்தர அங்கீகாரம் பெறப்பட்டது.

• இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம், மும்பை. 2006ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, அங்குள்ள மக்கள் தொகை 1 கோடியே 80 லட்சத்தை எட்டியுள்ளது. தற்போது நிச்சயமாக 2 கோடியைத் தாண்டியிருக்கும்

mgandhi
21-07-2011, 07:09 AM
பெண்டியம் II சிப், ஒரு வினாடிக்கு 5 லட்சம் கணக்கீடுகளைச் செய்யும்.

தினந்தோறும் உலகம் முழுவதும் 16 ஆயிரம் கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அவற்றுள் 97% குப்பை மெயில்கள்.


உலகம் முழுவதிலும் 100 கோடி கம்ப்யூட்டர்கள் உள்ளன.பார் கோடு அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் பொருள், பபுள் கம்.இணயத்தில் அன்றாடம் பார்க்கப்படும் வீடியோக்களில், 20% இசை தொடர்புடையதாக உள்ளன.

முதன் முறையாக செல்போனில் வைரஸ் தொற்றிய ஆண்டு 2004. வரலாற்றில் இடம் பிடித்த அந்த வைரஸின் பெயர் காபிர் ஏ.

mgandhi
21-07-2011, 04:28 PM
90ரூபாய் (90 கியாத்) நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு மியான்மிர் இங்கு 9 என்ற எண் மிகவும் புனிதமானது.

அக்வா ரிஜியா என்னும் திரவத்தில் தங்கம் கரையும்.

அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சசி

அமெரிக்க அதிபர்களில் MBA படிப்பு முடித்த முதல் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்.

அரபிக்கடலின் ராணி என்று அழைக்கப்படும் நகரம் கொச்சி.

ஆசியாவில் மட்டுமே சந்தன மரம் பயிராகிறது.

mgandhi
22-07-2011, 05:42 PM
இந்தியாவின் தலைநகரமான டில்லியின் பழைய பெயர் இந்திரப் பிரஸ்தம்

உப்பு நீரைக் குடிநீராக மாற்ற உதவும் வேதிப்பொருள் செலினியம்.


ஐரோப்பாவைத் தவிர உலகின் எல்லாக் கண்டங்களின் பெயர்களும் Aல் ஆரம்பித்து Aல் முடியும்

கண்டமாகவும், நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே.

mgandhi
23-07-2011, 05:41 PM
தேனீக்கள் ஒரு லிட்டர் தேன் உருவாக்க பத்து இலட்சம் பூக்களிலிருந்து பூந்தேன் சேகரிக்க வேண்டும்

பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் வாயு எத்திலீன்.

பெங்களுர் இந்தியாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஆடம் ஸ்மித்.

மிகக்குறைந்த வயதில் பத்ம விருது பெற்றவர் (செஸ்) விஸ்வநாதம் ஆனந்த்

innamburan
23-07-2011, 07:52 PM
அக்வா ரீஜியா ஒரு அமிலக்கலவை: H2NO4 +HNO3

mgandhi
24-07-2011, 04:57 PM
ரத்தத்தைப் பரிசோதித்து அது ஆணின் ரத்தமா, பெண்ணின் ரத்தமா என்று சொல்ல முடியாது.

விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் சாதனை புரிபவர்களுக்கு அளிக்கப்படும் விருது – பட்நாகர் விருது.

ஜெர்மனியில் உள்ள வால்ஸ்வேகன் வெர்க் (Volkswagen work) உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்புக்கூடம். ஒரு நாளைக்கு 4600 வாகனங்களைத் தயாரிக்க முடியும்.

தபால் அட்டைகளை முதன்முதலில் அதிகாஅப்பூர்வமாக பயன்படுத்திய நாடு, ஆஸ்திரியா.

மழையில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது.

"மவுத் ஆர்கன்' இசைக் கருவியை உருவாக்கியவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புச்மான்.

mgandhi
25-07-2011, 05:50 PM
அச்சமூட்டும் கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸ், பிறக்கும் போது, பேன் அளவு தான் இருக்கும்.
பச்சோந்தியின் நாக்கு அதன் உடல் நீளத்தை விட இரு மடங்காக இருக்கும். இதனால் தொலைவில் உள்ள் இரையைக் கூட எளிதாக நாக்கின் மூலம் இழுத்து விழுங்கி விடும்.

ஒரு பசுமாடு தனது ஆயுள் முழுக்க, சராசரியாக 2 லட்சம் தம்ளர் பால் கொடுக்கும்.

கரப்பான் பூச்சியின் தலையை வெட்டினாலும், பத்து நாட்களுக்கு மேல் உயிர் வாழும். அதன் பின் உணவு உட்கொள்ள முடியாமல் பட்டினியால் இறக்கும்.

16ம் நூற்றாண்டில் ஸ்பெயினை ஆண்ட பிலிப் -II தனது அரண்மனைக்கு ஆயிரத்து 200 கதவுகளை

mgandhi
27-07-2011, 05:26 PM
ஒட்டகச்சிவிங்கி தனது காதுகளை 21 அங்குல நீளமுள்ள தன் நாக்கால் எளிதாக சுத்தம் செய்துகொள்ளும்.

முழுமையாக வளர்ச்சியடைந்த தவளைகள், தனது அளவை விட சிறிய எந்த உயிரினமானாலும் அப்படியே விழுங்கி விடும். சில நேரங்களில் சிறிய தவளைகளையும் இவை விட்டு வைப்ப்பதில்லை.

1800ம் ஆண்டுகளில், பிரிட்டனில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1876ம் ஆண்டு அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் தான் கண்டுபிடித்த தொலைபேசிக்கு காப்புரிமை பெறுவதற்கு புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, எலிசா கிரே என்பவர் தொலைபேசியை தான் வடிவமைத்ததாக காப்புரிமையை பெற்றார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக வழக்கு தொடரப்பட்டது. இறுதியில் தொலைபேசி கண்டுபிடிப்புக்கான காப்புரிமை கிரகாம் பெல்லுக்கு வழங்கப்பட்டது.

கண் இமைகளில் உள்ள முடிகள் 5 மாதங்கள் வரை உதிராமல் இருக்கும். தீயில் பொசுங்கினாலும் வளர்ந்து விடும்.

mgandhi
28-07-2011, 05:29 PM
1938ம் ஆண்டு ஹோவர் ஹூக்ஸ் மற்றும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் "NEW YORK WORLD FAIR

1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இந்திய அரசியல் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

1963ம் ஆண்டு டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர் கம்ப்யூட்டர் மவுஸை கண்டுபிடித்தார்.

mgandhi
29-07-2011, 05:36 PM
1964ம் ஆண்டு 17 வயதான ராண்டு கார்ட்னர் என்பவர் தொடர்ந்து 264 மணி நேரம் தொடர்ந்து தூங்காமல் விழித்திருந்ததே சாதனையாக கருதப்படுகிறது. சாதனையை முடித்து விட்டு 15 மணி நேரம் மட்டுமே அவர் தூங்கினார்


1970ம் ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த பொறியாளர்கள் ஒன்றிணைந்து, தங்கள் கம்ப்யூட்டர்களை தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் இணைக்கும் முயற்சியில் இறங்கினர். அர்பாநெட் என்றழைக்கப்பட்ட இந்த நெர்வொர்க் தான், தற்போதைய இணைய நெட்வொர்க்கின் அடிப்படை கட்டமைப்பு எனப்படுகிறது.

mgandhi
01-08-2011, 05:28 PM
1997ம் ஆண்டு மே மாதம் செஸ் உலக சாம்பியன் காரி காஸ்பரோவை, டீப் புளூ என்ற கம்ப்யூட்டர் தோற்கடித்தது. செஸ் கிராண்ட்மாஸ்டர் ஒருவரை கம்ப்யூட்டர் தோற்கடித்தது இதுவே முதல் முறை.

மின்சார நாற்காலியை கண்டுபிடித்தது ஒரு பல் டாக்டர்!

20 பேரில் ஒருவருக்கு, கூடுதல் விலா எலும்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கை ரேகைகளைப் போலவே, நாக்கிலுள்ள ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித மூளையில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது.

innamburan
01-08-2011, 08:08 PM
நாக்கின் ரேகைகளை பதிவு செய்வது எப்படி?

mgandhi
03-08-2011, 05:39 PM
நமது உடலில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, பாதங்களில் தான் அதிக அளவு வியர்வை நாளங்கள் உள்ளன.

சராசரியாக, மனித இதயத்தின் ஒரு துடிப்பில் 5 ஸ்பூன் ரத்தம் பிரித்து அனுப்பப்படுகிறத

மனிதர்கள் நடக்கும் போது, உடலில் உள்ள 200 தசைகளைப் பயன்படுத்துகின்றனர


வலியை உணர்த்தும் சிக்னல்கள் நம் நரம்புகள் வழியாக, ஒரு வினாடிக்கு 50 அடி தூரம் வரை பயணிக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய பூச்சிகள் கண்டுபிடிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mgandhi
08-08-2011, 05:48 PM
முழுமையாக வளர்ச்சியடைந்த தவளைகள், தனது அளவை விட சிறிய எந்த உயிரினமானாலும் அப்படியே விழுங்கி விடும். சில நேரங்களில் சிறிய தவளைகளையும் இவை விட்டு வைப்ப்பதில்லை.
ஒட்டகத்தின் முதுகுப் பகுதி வளைந்திருந்தாலும், அதன் முதுகெலும்பு வளைவுகளில்லாமல் நேராக இருக்கும்.

புதிதாக பிறந்த கங்காருக் குட்டி, ஒரு தேனீர் கரண்டிக்குள் அடங்கி விடும்.

ஒரு பென்சிலில் மையில் நீளத்துக்கு தொடர்ந்து கோடு வரையும் அளவுக்கு, பென்சிலில் கிராபைட் உள்ளது.

நீர்யானை உதட்டின் அகலம் எவ்வளவு தெரியுமா? இரண்டு அடி.

mgandhi
08-08-2011, 05:48 PM
முழுமையாக வளர்ச்சியடைந்த தவளைகள், தனது அளவை விட சிறிய எந்த உயிரினமானாலும் அப்படியே விழுங்கி விடும். சில நேரங்களில் சிறிய தவளைகளையும் இவை விட்டு வைப்ப்பதில்லை.
ஒட்டகத்தின் முதுகுப் பகுதி வளைந்திருந்தாலும், அதன் முதுகெலும்பு வளைவுகளில்லாமல் நேராக இருக்கும்.

புதிதாக பிறந்த கங்காருக் குட்டி, ஒரு தேனீர் கரண்டிக்குள் அடங்கி விடும்.

ஒரு பென்சிலில் மையில் நீளத்துக்கு தொடர்ந்து கோடு வரையும் அளவுக்கு, பென்சிலில் கிராபைட் உள்ளது.

நீர்யானை உதட்டின் அகலம் எவ்வளவு தெரியுமா? இரண்டு அடி.