PDA

View Full Version : திசை மாறிய தருணங்கள்.......



mgandhi
13-12-2006, 05:56 PM
மகாத்மா காந்தியடிகள் (1869-1948)

காந்தி 1893-ம் வருடம், தெ‎ன்னாப்பிரிக்கா ரயில் பயணத்தின் போது
முதல் வகுப்பு டிக்கட் எடுத்திருந்தும், வலுக்கட்டாயமாக ஒரு வெள்ளையனால் ‏இனவெறி காரணமாக வெளியே தள்ளப்பட்டார். வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்த தனக்கே ‏இந்த அவமானம் எ‎ன்றால், அங்கே வாழும் ‏இந்தியர்கள் எத்தனை தூரம்
அடிமை வாழ்க்கையில் கொடுமைப் படுத்தப்படுவார்கள் எ‎ன்று சிந்தித்து, அன்றைய ‏இரவே யுத்தம் ஏந்தாத போராளியாக மாறினார். கத்தியி‎ன்றி ரத்தமின்றி இவர் நடத்திய அறப்போராட்டம் உலக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்.


பகத்சிங் (1907-1931)

1919-ம் வருடம் நடந்த ஜாலிய‎ன் வாலா பாக்கில் நடந்த கொடூர
படுகொலை பகத்சிங்கி‎ன் பிஞ்சு மனதில் பெரும் எரிமலையை உருவாக்கியது.அந்தச் சிறு வயதிலேயே அப்பாவி மக்களி‎ன் ரத்தத்தைக் குடித்த வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டு, பஞ்சாப் படுகொலை நடந்த ‏இ‏டத்தி‎ன் ரத்த மண்ணை நெற்றித் திலகமாக வைத்துக் கொண்டார். டெல்லி நாடாளும‎‎ன்றத்தில் வெடிகுண்டு வீசி கைதாகி, 1931-ம் வருடம் மரணக்கயிற்றை முத்தமிட்டு தூக்கிலிடப்பட்டபோது ‏இந்திய நாடே அழுதது.


அன்னை தெரசா (1910-1997)

தீவிரமான கிருஸ்துவ மதத்தை கடைப்பிடிக்கும் குடும்பத்தின் மூன்றாவது மகளாகப்பிறந்த தெரசா, கடவுளுக்கு தொண்டு செய்வதற்க்காக இறை பணியில் சேர்ந்தார். அதற்காகவே இந்தியா வந்தார். ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும், கன்னியாஸ்திரியாகவும் இருந்தார். 1946-ம் வருடம் உடல் நிலை சரியில்லாமல் போகவே, குணமடைவதற்காக ரயிலில் டார்ஜிலிங் சென்றார். அப்போது ஏழையிலும் ஏழைகளுக்கு சேவை செய்வதுதான் எனக்கு நீ செய்யும் சேவை என்று இறைவன் சொன்னதாக உணர்ந்தார். உடனே ஆசிரியர் பணியை துறந்து சமூக சேவையில் ஈடுபட்டு உலகின் தலைசிறந்த தாய் என புகழ் பெற்றார்.


ஈ.வெ.ராமசாமி (1879-1978)

வசதியான குடும்பத்தில் பிறந்து படிப்பதில் விருப்பமின்றி வியாபாரத்தில் ஈடுபட்டார். 1909-ம் வருடம் இவரது தங்கையின் மகள் ஒன்பது வயதிலேயே திருமணம் செய்யப்பட்டு விதவையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு பணியாமல் தங்கை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். இதுபோலவே மூடப்
பழக்கவழக்கம், சாதி, மதம், மொழி என்னும் கட்டுப்பாட்டுக்குள் தழிழகம் தலைகுனிந்து நிற்பதை காணப் பொறுக்காமல் ஒரு பகுத்தறிவு பகலவனாக மாறினார். இறுதி மூச்சு வரை போராடி தமிழ் தந்தையானார்.

சுவாமி விவேகானந்தர் (1863-1902)

பிரபலமான வழக்கறிஞரின் மகனாகப் பிறந்த நரேந்திரனுக்கு எப்போதுமே கேள்விகள் கேட்பதில் ஆர்வம் அதிகம். கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியோடு எத்தனையோ ஞானியரையும், கல்வியாலரையும் கண்டு பேசி எதுவும் கண்டு கொள்ள முடியாமல் இருந்தவர், 1881-ம் வருடம் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். அவரை ஒரு பைத்தியகார சந்நியாசியாக நினைத்து, கடவுள் எங்கே இருக்கிறார் என கேட்டார். கடவுளை காட்டுகிறேன் என்று நரேந்திரனை அவர் தொட்ட நிமிடத்திலேயே உடலில் பெரும் மாற்றத்தை உணர்ந்தார். அன்று முதல் வாழ்வு மாறியது. பகுத்தறிவு வாதியாகிய நரேந்திரன் ஆன்மிகவாதியாக மாறினார். பின்னர் விவேகானந்தர் ஆனார். கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளில் இன்றும் உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது இவர் உருவாக்கிய ராமகிருஷ்ணமிஷன் அமைப்புகள்தான்.

pradeepkt
14-12-2006, 04:12 AM
சபாஷ். காந்தி, உங்கள் பதிவுகளின் தரம் கூடிக் கொண்டே போகிறது. இன்னும் இது போல் தகவல்கள் நிறையத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

ஓவியா
14-12-2006, 01:44 PM
தகவலுக்கு நன்றி

தொடரவும்

mgandhi
01-01-2007, 04:20 PM
காமராஜர் (1903-1975)

அவருடைய பெற்றோர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். 1954-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 13 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணிபுரிந்தார். இவர் சுதந்திர தாகத்தால் காந்தியின் கொள்கையின் பால் கவரப்பட்டு சத்திய மூர்த்தியின் சீடர் ஆகி சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். தூய்மைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்று விளங்கினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1954-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 13 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணிபுரிந்தார். இந்தியாவின் கிங் மேக்கர் என்ற சிறப்பு பெற்றார்.


M.G. இராமச்சந்திரன் (1917 - 1987)

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (M.G.R.) இதுதான் இவர் பெயர். இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
25 ஆண்டுகள் தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். அறிஞர் அண்ணாவின் அறிவாற்றலிலும், பேச்சாற்றலிலும் கவர்ந்த இவர் அரசியலில் ஈடுபட்டார். 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை நிறுவினார். 1977ல் நடந்த தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.

இளசு
02-01-2007, 07:45 PM
முதல் பதிவில் ' திசை மாறிய' தருணங்கள் கருத்தைக் கவர்ந்தன.
பாராட்டுகள் காந்தி.

mgandhi
14-01-2007, 10:55 AM
சுப்பரமணியன் (1882 - 1921)

எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு திங்கள் 11-ம் நாள் சின்னசாமி அய்யருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். பெற்றோர் தம்மகனுக்கு சுப்பரமணியன் என்று பெயரிட்டனர். ஆனால் அனைவரும் சுப்பையா என்றே செல்லமாக அழைத்தனர்.
சுப்பையாவுக்கு படிப்பில் இருந்த ஆர்வத்தைக் காட்டிலும் பாட்டு இயற்றுவதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. சுப்பையாவின் புகழை விரும்பாத காந்திமதி நாதப்பிள்ளை என்பவர் சுப்பையாவை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கோடு, 'பாரதி சின்னப்பயல்' என்ற ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பாவை பாட முடியுமா என்று கேட்டார். கேட்ட அக்கணமே சற்றும் சளைக்காமல் காரதுபோல நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல் என பாடத் தொடங்கினார். சுப்பையா அன்று முதல் பாரதியார் என்று பட்டம் பெற்றார்.
பாரதிக்கு பதினைந்தாம் ஆண்டு தொடக்கத்திலேயே திருமணம் நடந்தது. மனைவி பெயர் செல்லம்மாள்.

பாரதி அப்பா நடத்திய பஞ்சாலை பெரும் இழப்பு ஏற்பட்டது. அதனால் மனம் நொந்து போன அவர் காலமானார். பின்னர் பாரதி காசியில் வாழ்ந்த அத்தையின் இல்லத்திற்கு சென்று தங்கினார். காசியில் இருந்த போதுதான் பாரதிக்கு தலைப்பாகை கட்டும் பழக்கம், மீசை வைத்துக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் பாலகங்காதர திலகர் ஊட்டிய நாட்டுப் பற்றும் உரிமை வேட்கையும் அவர் உள்ளத்தில் பதிந்தன. இவர் இந்திய மொழிகளில் பலவற்றை நன்கு அறிந்து இருந்தார். அதனால்தான் 'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிது ஒன்றும் இல்லை' என்று பாடினார்.
இவர் பல பாடல்கள் இயற்றினார். அவை சுதந்திர தாக்கம் கொண்டவை. 1921ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவரை தேசியகவி என்றும், மகாகவி என்றும் கூறுவர்.

ஓவியா
14-01-2007, 11:23 AM
காமராஜர் (1903-1975)

அவருடைய பெற்றோர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள்.ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.


1954-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 13 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணிபுரிந்தார் இவர் சுதந்திர தாகத்தால் காந்தியின் கொள்கையின் பால் கவரப்பட்டு சத்திய மூர்த்தியின் சீடர் ஆகி சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார் தூய்மைக்கும்,நேர்மைக்கும் பெயர் பெற்று விளங்கினார்.

இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் 1954-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார்.

இவர் 13 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.


காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணிபுரிந்தார்.இந்தியாவின் கிங் மேக்கர் என்ற சிறப்பு பெற்றார்



வணக்கம் காந்தி அவர்களே

தங்களின் பதிப்பில் சிறு தவறு இருக்கின்றது, வர்ணம் செய்துல்ல வரிகல் மீண்டும் பதிவில் இடம் பெற்றுல்லன, கவனிக்க

அன்புடன்
ஓவியா

mgandhi
15-01-2007, 04:17 PM
ஜி.டி நாயுடு(1893-1974)

ஜி.டி நாயுடுவின் முழுப்பெயர் கோபலசுவாமி துரைசாமி நாயுடு.அவரை இந்தியாவின் எடிசன் என்று கூறுவார்கள்.அவர் சிறு வயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அர்வம் மிக்க வராய் திகழ்ந்தார்.அவர் விவசாயத்துறை, எலட்ரிக்கல்,மெக்கானிக்கல் துறை போன்ற பல துறைகளில் தம் முத்திரையைப் பதித்தவர். இவர் 1893-ம் ண்டு மார்ச்சு மாதம் 23ம் நாள் கோயம்புத்தூரில் உள்ள களங்கல் என்னும் ஊரில் பிறந்தவர்.

போக்குவரத்து துறையை தேர்ந்தெடுத்த இவர்,சில வருடங்களில் யுணைட்டட் மோட்டார் சர்வீஸ் என்னும் நிருவனத்தை தொடங்கி,அதில் வெற்றியும் பெற்றார்.
1937-ம் ண்டு இந்தியாவின் முதல் மோட்டார் விற்பனை,ஜி.டி நாயுடுவின் நிறுவனத்தில் தான் தயாராக்கப்பட்டது. அவர் தயாரித்த எலட்ரிக்கல் ரேசர் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.மேலும் அவர் மிகவும்மெல்லிய ஷேவிங் பிளேட்,கேமிராக்களில் தூரத்தை சரிசெய்வது,பழச்சாறை பிழிந்தெடுக்கும் கருவி,மற்றும் மண்ணென்னையால் ஒடும் விசிறி போன்றவற்றை கண்டுபிடித்தார்.
அவர் 1941-ம் ஆண்டு ஐந்து வால்வுகளை கொண்ட ரேடியோவை மிக்க் குறைந்த விலையாக 70- ரூபாய்க்கு தர திட்டமிட்டார் அதை அமல் படுத்தினார்.1952-ம் ஆண்டு இரண்டு சீட்களை கொண்ட பெட்ரேல் காரை கண்டு பிடித்தார்.அதன் விலை ரூ-2000- னால் அவரது தயாரிப்பு அரசால் அங்கிகாரம் தராமல் ரத்து செய்யப்பட்டது.
மேலும் விவசாயத்தில் 10 அடி உயரமுள்ள பருத்தி செடியை கண்டு பிடித்தார்.
அவர் 1974 -ம் ண்டு ஐனவரி மாதம் 4-ம் தேதி இயற்கை எய்தினார்.அவரை நினைவு படுத்த கல்லூரிகளும்,பள்ளிகளும்,திறக்கப்பட்டுள்ளது.அவரது பெருமை இன்றும் அவரை நினைவு படுத்துகின்றது.

மன்மதன்
15-01-2007, 05:23 PM
அருமையான பதிவு. நல்ல பதிவில் எழுத்துப்பிழை இருக்கக்கூடாது காந்தி. டைப் பண்ணியவுடன் பதிக்காமல், பதிக்கும் முன் ஒருதடவை நீங்களே படித்துவிட்டு பதியுங்க. தொடர்ந்து எழுதுங்க. இந்த திரி அனைவருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

mgandhi
08-02-2007, 05:46 PM
தேவநேயப் பாவாணர் (1902-1981)
அவர்கள் ஓர் ஒப்பரிய தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர். அவர் நாற்பதுக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்தவர். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ் வேராய் இருந்தவர். இவர் சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் படுபவர்.

தேவநேயர் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞான முத்தனார் என்னும் கணக்காயருக்கும், அவர் இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் திரு ஞானமுத்து தோக்கசு (Stokes) அவர்களை கிறித்துவ மத குரவராய் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஞானமுத்து தோக்கசு அவர்களின் பெற்றோர் திரு. முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களை கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார்.

1981 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இரவு 12:30க்கு பாவாணர் அவர்கள் தம் புகழுடம்பை நீத்தார். மதுரையில் ஒரு கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் நெஞ்சாங்குலையில் வலி வந்து, குருதியழுத்தமும் மிகுந்து இறுதி நிலை அடைந்தார்

அறிஞர்
09-02-2007, 04:01 PM
கேட்டதற்காக தேவநேயப் பாவாணர் பற்றி கொடுத்த தகவலுக்கு நன்றி.. காந்தி..

மயூ
09-02-2007, 04:02 PM
நன்றி காந்தி அவர்களே!!!
அருமையான தகவல்!!

mgandhi
14-02-2007, 05:36 PM
http://farm1.static.flickr.com/161/390352400_2e624fed4b_o.jpg
சிவாஜி கணேசன் (1927-2001 )
சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்

mgandhi
17-02-2007, 06:13 PM
http://farm1.static.flickr.com/148/393152093_d0f6ceb8dc_o.jpg


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1839-1886)

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், என பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ஆம் நூற்றாண்டு இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவளை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.

கதாதர், குதிராம் - சந்திரமணி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள கமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமன்னில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நன்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.

ராமகிருஷ்ணர் பதினேழு வயதை அடைந்தபோது அவர் குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமானது. அப்போது அவர் அண்ணண் ராம்குமார் கல்கத்தாவில் சில வீடுகளிலும், கல்கத்தா அருகிலிருந்த தட்சினேஸ்வர் காளி கோயிலிலும் புரோகிதராக வேலை பார்த்து வந்தார். அவருடன் சென்று தங்கி பணியாற்றுவதற்காக ராமகிருஷ்ணர் கல்கத்தா சென்றார். ராம்குமார் இறந்தவுடன் ராமகிருஷ்ணர், காளி கோயிலின் பூசாரியானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.

தட்சினேஸ்வர் காளி கோயில் பவதாரினிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ராமகிருஷ்ணருக்கு தாம் கல்லைத்தான் பூசை செய்கிறோமா, அல்லது உயிருள்ள இறைவனையா என்று சிந்தனை எழுந்தது. தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்கு பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்சிக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றென்னி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சினேஸ்வரத்திற்கு வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோரைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் ராமகிருஷ்ணர் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

ராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. இது தமிழில் ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ராமகிருஷ்ணரின் உயிர், 1886 ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு பிரிந்தது.

ஆதவா
17-02-2007, 06:40 PM
அருமையான தகவல்கள் காந்தி .... உங்கள் பதிவுகளனைத்தும் என் கணிணியில் பதித்து வைத்திருக்கிறேன்..

தொடருங்கள்..

mgandhi
17-02-2007, 06:54 PM
அருமையான தகவல்கள் காந்தி .... உங்கள் பதிவுகளனைத்தும் என் கணிணியில் பதித்து வைத்திருக்கிறேன்..

தொடருங்கள்..

தங்கள் ஆதரவுக்கு என் நன்றிகள்.

mgandhi
16-03-2007, 05:37 PM
சரோஜினி தேவி (1879-1949)
கி.பி.1879ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 13ஆம் நாள் சரோஜினி பிறந்தார்.பள்ளியில் படிக்கும் போது நல்ல மாணவி என்ற பெயர் பெற்றார்.உயர் கல்வி கற்க்க சென்னைக்கு வந்தார் அங்கு மெட்ரிக் குலேஷன் தோர்வில் மாநிலத்தில் முதன்மையாகத் தேறினார்.
மகளை மேலும் படிக்க வைக்க இங்கிலாந்திற்கு அனுப்பினார்.
படிப்பை விட அவர் உள்ளம் கவிதையில் தான் அதிக இடுபாடு கொன்டார்.ஆர்தர்,சைமன்ஸ்,எட்மண்ட் காஸ் முதலிய ஆங்கில நாட்டு அறிஞர்கள் படித்து வியப்புற்றனர்.
சரோஜினியின் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டார்கள்.இந்த அதரவும்,அன்பும்,அவரைக் கவிதை மழை பொழியச் செய்த்து.இவறை அனைவரும் கவிக் குயில் என்று அழைத்தனர்.
இவரை லாட் டென்னிசன்,ஷெல்லி,கீட்ஸ் முதலிய கவிஞர்களோடு ஒப்பிட்டனர்.கெய்சர் ஹிந்த் என்னும் பதக்கம் அளித்து ஆங்கில அரசு பெமையைத் தேடிக்கொண்டது.
லோகமான்ய பால கங்காதர்ரின் சந்திப்பு ஏற்பட்டது, சுயராஜ்யம் நமது பிறப்புரிமை! அதை நம்மிடமிருந்து கவர மிடியாது! என்றுஅவர் செய்த விடுதலை மூலமுழக்கம் சரோஜினிக்கு ஊக்கம் தந்தது பின் .விடுதலை வேள்வியில் ஈடுபட்டார்.
அமெரிக்கர்கள் இந்தியாவின் உண்மை நிலை அறிய மகாத்மாவை வரும்படி வேண்டினர்.ஆனால்,தம் பிரதிநிதியாக சரோஜினிதேவியைக் 1928 இல் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.இவரின் அமெரிக்கச் சூறாவளி பிரச்சாரத்தால் பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கொடுமைகள்வெளியாயின.
1949ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2ஆம் நாள் சரோஜினியின் பூதவுடல் மறைந்தது.

இளசு
17-03-2007, 12:14 AM
மிகப் பயனுள்ள தொடர்.

ஆரவாரமில்லாமல் அமைதியாய்த் தொடரும் காந்திக்கு பாராட்டுகள்.

மேதைகளை நினைவுகூற, மேலும் அறிய நல்ல வாய்ப்பு..நன்றி காந்தி..

மனோஜ்
17-03-2007, 08:07 AM
காந்தி அவர்களே பயனுள்ள தகவல்தரும் உன்மையில் நம் மன்றத்து காந்திதான்:smartass: நீங்கள்

pradeepkt
17-03-2007, 04:27 PM
அருமையான தகவல்கள்.
இது ஒரு களஞ்சியம்.
உங்கள் பணி தொடரட்டும் காந்தி!
வாழ்த்துகள்.

mgandhi
22-03-2007, 06:24 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/180px-Ramanujan.jpg
ஸ்ரீனிவாச இராமானுசன்(1887-1920)

ஸ்ரீனிவாச இராமானுசன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தையே வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புது கணித தேற்றங்களை கண்டுபிடித்தார்.
இராமானுசத்தின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாறிவந்தனர். தாய்வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளை கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடி்த்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித இயல் இதழ் ஒன்று துவக்கப்பட்டுள்ளது

mgandhi
01-04-2007, 05:01 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/180px-Peraringnar_Anna.jpg
அண்ணாதுரை(1909-1969)

பரவலாக "அண்ணா" என்று அறியப்பட்ட, காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai)(15 செப்டம்பர் 1909 - 3 பிப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார்.அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தரக் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 1957 ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்துவந்தது. 1957 ல் நடைபெற்ற தேர்தலில் கலந்து கொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்றபோது அண்ணாதுரையும் சட்ட சபை உறுப்பினரானார். தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார். இதன் காரணமாக 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூரப்படுகிறார்.

மனோஜ்
01-04-2007, 05:33 PM
அண்ணாதுரை அவர்களுக்கு எனது அஞ்சலிகள்

இளசு
01-04-2007, 09:08 PM
இராமானுஜன் - இன்னும் மேலைநாட்டு அறிஞர்கள் வியந்து போற்றிக்கொண்டிருக்கும் கணிதமேதை!
30+ வயதில் இறந்தவர்களில் பாரதி, புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டையார் வரிசையில் இவரை நினைத்தாலும்
இழப்புணர்வு வரும்!

பேரறிஞர் - அறிவாளி.. அதை மீறி அவர் தொண்டர்கள் போற்றியது
அவர் காட்டிய பேரன்பை.. அந்த குணம் கொண்ட தலைவர்கள் அமைவது அரிது..

நல்ல தொடருக்கு நன்றி காந்தி!

அறிஞர்
01-04-2007, 11:30 PM
இராமனூசம் சிறந்த கணித மேதை.. அவரை சிறு வயதில் இழந்தது.. நமக்கு பேரிழப்பு....

mgandhi
08-04-2007, 11:08 AM
http://www.southasianmedia.net/profile/india/images/indra2.jpg

இந்திரா காந்தி(1914-1984)

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளருமாவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர் பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. அச்சமயத்தில் அண்டை நாடான பாகிஸ்தானில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.

சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்துவந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்

vijayan_t
08-04-2007, 11:24 AM
மோகன் காந்தி அவர்கள் மிக்க அரிய, மற்றும் படிக்க வேன்டிய தகவல்களாக தருகின்றீர்கள், நன்றி.

கணித மேதை ராமானுஜம் அவர்களின் அச்ச்த்திய கணித அறிவானது இங்கிலாந்தில் உள்ள பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒருவரால் அடையாளங்கானப்பட்டு, இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் என கேள்விபட்டு இருக்கின்றேன். இதுகுறித்த விரிவான விளக்கம் இனையத்தில் எங்கேனும் கிடைக்குமா?.

நன்றி

mgandhi
13-04-2007, 06:14 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/.jpg

ஆபிரகாம் லிங்க்கன் (12-2-1809-15-4-1865)

ஆபிரகாம் லிங்க்கன் (பெப்ரவரி 12, 1809ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார்.

ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிறிவினைக் கருத்தாளர்களை எதிர்கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ள்வில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.

இளசு
16-04-2007, 06:15 PM
காந்தி

உங்கள் பாணியில் இப்போது சன் டிவி இரவு எட்டுமணிச்செய்தியில்
'திருப்பம்' என ஒரு பகுதியைச் சேர்த்திருக்கிறார்கள்.

லிங்கன் ஆர்லியன்ஸ் நகரச் சந்தையில் கறுப்பின மக்கள் கால்நடைகளைப்போல் விற்கப்படுவதைக் கண்ட நாளே அவர் வாழ்வில் திருப்பம் நிகழ்ந்த நாளெனச் சொன்னார்கள்..

mgandhi
17-05-2007, 07:38 PM
ஜவஹர்லால்(1889-1964 )


பாரத ரத்னா ஜவஹர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியப் பிரதமர் ஆவார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்குப் பின்னரும், இந்திய தேசிய காங்கிரசிலிருந்தவர்களுள் மிதமான சோஷலிசவாதிகளின் தலைவராகக் கருதப்பட்டவர். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது அதன் முதலாவது பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். 1964, மே 27 ல், காலமாகும் வரை அவரே இப் பதவியை வகித்து வந்தார்.

இவர் பிரபல காங்கிரஸ் தலைவராக இருந்த மோதிலால் நேருவின் மகனாவார். இங்கிலாந்தில் சட்டம் படித்தபின், சட்டத்தொழில் புரிவதற்காக இந்தியாவுக்குத் திரும்பிய இவர், தந்தையாரைப் பின்பற்றி அரசியலுள் நுழைந்தார். மகாத்மா காந்தியின் நிழலில் உருவாகிய நேரு, 1929 இல் முதல் தடவையாக காங்கிரஸ் தலைமைப்பதவியை ஏற்று இந்திய தேசிய அரசியலில் முதல் வரிசைத் தலைவர்களுள் ஒருவரானார்.

1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பின்னர் 32 மாதங்கள் சிறையிலிருந்த நேரு, 1946 ஜூலையில், 1947 இல் பாகிஸ்தானின் உருவாக்கத்துக்கு வித்திட்ட, தனிநாடு கோரிக்கையை முன்வைத்துப் போராடிய அனைத்திந்திய முஸ்லிம் லீக்கின், எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டின் முதலாவது அரசாங்கத்தை அமைத்தார்.

நேரு, சோவியத் யூனியனின் ஐந்தாண்டுத் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அதை இந்தியப் பொருளாதாரத்திலும் செயல்படுத்த முயன்றார். இந்தியா சோஷலிசம், முதலாளித்துவம் இரண்டினதும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நேரு விரும்பினார். இதனால் இந்தியாவில் ஜனநாயக சோஷலிசத்தை உருவாக்கினார். அரசே தொழிலதிபராகவும், அதன் மக்களனைவரும் சம பங்காளர்களாகவும் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். முறையான செல்வம் பரவலாக்க முறைமைகளை எல்லா மட்டங்களிலும் உருவாக்கியதன் மூலம், ஜனநாயகத்துக்கான அடிப்படைகளை வலுவாக்கினார்

leomohan
17-05-2007, 07:43 PM
ஜி.டி நாயுடு(1893-1974)

ஜி.டி நாயுடுவின் முழுப்பெயர் கோபலசுவாமி துரைசாமி நாயுடு.அவரை இந்தியாவின் எடிசன் என்று கூறுவார்கள்.அவர் சிறு வயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அர்வம் மிக்க வராய் திகழ்ந்தார்.அவர் விவசாயத்துறை, எலட்ரிக்கல்,மெக்கானிக்கல் துறை போன்ற பல துறைகளில் தம் முத்திரையைப் பதித்தவர். இவர் 1893-ம் ண்டு மார்ச்சு மாதம் 23ம் நாள் கோயம்புத்தூரில் உள்ள களங்கல் என்னும் ஊரில் பிறந்தவர்.
.

இவரை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள ஆவல். ஏதாவது இணைய தொடுப்பு இருக்கிறதா. இவருடைய கண்டுபிடிப்புகள் என்ன. இப்போதும் ஏதாவது பயனில் உள்ளதா. நன்றி காந்தி.

அறிஞர்
17-05-2007, 09:02 PM
ஜிடி நாயுடு பற்றி பதிவு... மோகன்

http://ennulagam.blogspot.com/2006/01/1.html
நான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு அறிவியல் ஆசிரியராக கோவையைச் சேர்ந்த ஒருவர் புதிதாக எங்கள் பள்ளியில் சேர்ந்தார்.

அவர் பாடங்களுக்கிடையில் சுவாரசியமான அறிவியல் தகவல்களை சொல்வது வழக்கம். ஆகவே நாங்கள் எல்லோரும் அவருடைய வகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.

அறிவியல் உலகில் அவருக்கு மிகவும் பிடித்த மனிதர் கோவை இவ்வுலகுக்கு அளித்த, விந்தை மனிதர், படிக்காத மேதை, ஒப்பற்ற அறிவியல் நிபுணர், காலம் சென்ற ஜி.டி. நாயுடு அவர்கள்.

என்னுடைய ஆசிரியர், இவரைப் பற்றியும் அறிவியல் துறையில் இவர் சாதித்த இமாலய சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைக்காத நாளே இருந்ததில்லை என கூறலாம்.

என்றைக்காவது ஒரு நாள் அவர் மறந்துவிட்டாலும், சார் ஜி.டி. நாயுடுவைப் பத்தி ஒன்னும் சொல்லலையே சார் என்போம் கோரசாக.

மாணவ பருவத்திலிருந்த எங்களுக்கு ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளை எங்களுடைய ஆசிரியர் கூறும்போது ஒருவேளை சார் ரீல் விடுகிறாரோ என்றும் தோன்றும்.

நட்சத்திர வாரத்தில் நான் கடந்த சில மாதங்களாக எழுதி வரும் திரும்பிப் பார்க்கிறேன் தொடருடன் கூடுதல் பதிப்பாக எனக்குப் பிடித்த தலைவர்கள், அறிவியல் நிபுணர்கள் என எழுதலாமே என்று நினைத்து சென்னையிலுள்ள பிரபல புத்தக கடைகளில் ஏறி இறங்கினேன்.

வாழ்க்கை வரலாறு என்ற பிரிவில் நான் கண்ட புத்தகங்களுள் ஒன்று திரு.மெர்வின் எழுதிய உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு என்ற புத்தகம்.

சட்டென்று எனக்கு பழைய நினைவுகள் திரும்பி வர இவரைப் பற்றி எழுதினாலென்ன என்று தோன்றியதன் விளைவுதான் இந்த நட்சத்திர இடுகை.

ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். ஒரு நாள் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் எழுதுவதற்காக தரையில் பரப்பி வைத்திருந்த மணலை அள்ளி சிரியர் கண்ணில் வீசிவிட்டு சிட்டாய் பறந்துவிட்டார். அவருடைய தந்தை எத்தனை முயன்றும் நம் எதிர்கால விஞ்ஞானிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் போய்த்தொலை என்று தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு காவலனாக இருக்கச் செய்தார்.

எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.

வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

இளம் வயதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல், அயரா உழைப்பு, சுய முயற்சி என்பவற்றில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.

அப்போது முதல் உலகப்போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே லட்சத்து ஐம்பதினாயிரம் சேர்த்து திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

அவரையும் பேராசைப் பேய் பிடித்துக்கொள்ளவே அதிகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களின் தில்லுமுல்லுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து வெறுங்கையுடன் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பஸ் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவரை ஒரு சாதாரண தொழிலாளராக அமர்த்திக்கொள்ள விரும்பவில்லை.

தாமாகவே முன்வந்து ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும். ஆனால், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கியவர் நாயுடுதான்.

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று இன்றிருக்கும் வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு!

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக் கழக படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் பேடண்ட் உரிமையை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அந்நாட்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டன. அன்று நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களின் தூண்டுதலே இதற்கு காரணமாயிருந்தது. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகள் பேடண்ட் செய்ய முடியாமலே போய்விட்டன.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்துலட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

அதற்கு அவர் கூரிய காரணம்: ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.

இவ்வாதம் இக்காலத்திற்கு ஒவ்வாததாக தோன்றினாலும் அன்று நாட்டை ஆண்டுவந்தவர் ஆங்கிலேயர் என்பதைக் கருத்தில் கொண்டால் அவருடைய முடிவில் தவறேதுமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

அதே சமயம் நன்கொடை அளிப்பதில் இணையற்றவராக தோன்றினார். 1938ம் வருடம் பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.

இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார். அமைதியும் அடக்கமும் தன் தந்தையிடமிருந்து படித்தவர் இவர்.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு நாயுடு காட்டன் என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பாராட்டாத தலைவர்களே இல்லையெனலாம்.

இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் என்றார் பெரியார்.

நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள் என்றார் அண்ணா.

'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும் என்று மனம் திறந்து பாராட்டினார் சர்.சி.வி.ராமன்.

ஜி.டி. நாயுடு கற்றவருக்கு மேதை. கல்லாதவருக்கு புதிர். ஆற்றல் மிக்க அவர் அறிவியலையே தன் வாழ்க்கை என்று கருதினார்.

உழைப்பையே நம்பி ஊக்கத்தை உதறிவிடாமல் சுய முயற்சி, அயாரா உழைப்பு என்பவற்றை மட்டுமே நம்பி கோவை மக்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புகழ்ந்து பாராட்டும் வகையில் தன் வாழ்க்கையில் பிரகாசித்தவர் நம் ஜி.டி. நாயுடு.

அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!

*******

மூலம்: உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு: ஆசிரியர்:மெர்வின்.
நன்றி- டிபிஆர். ஜோசப்

mgandhi
18-05-2007, 06:33 PM
மிக்க நன்றி அறிஞர் அவர்களே

leomohan
18-05-2007, 06:40 PM
நன்றி அறிஞரே.

leomohan
18-05-2007, 06:50 PM
படிக்க மிகவும் வியப்பாக இருக்கிறது. அவருடைய ஆராய்ச்சிகளை எல்லாம் document செய்து வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. அவருடைய தாவர கண்டுபிடிப்புகள் இன்னும் பழக்கத்தில் உள்ளதா என்றும் தெரியவில்லை.

அறிஞர்
18-05-2007, 06:53 PM
படிக்க மிகவும் வியப்பாக இருக்கிறது. அவருடைய ஆராய்ச்சிகளை எல்லாம் document செய்து வைத்துள்ளனரா என்று தெரியவில்லை. அவருடைய தாவர கண்டுபிடிப்புகள் இன்னும் பழக்கத்தில் உள்ளதா என்றும் தெரியவில்லை.
கண்டிப்பாக சில இருக்கும்..

ஒரு காலத்தில்... அவரே பலவற்றை அழித்துவிட்டதாக... படித்துள்ளேன்.