PDA

View Full Version : தமிழில் அரட்டை சாட் வசதி



leomohan
12-12-2006, 05:02 PM
இணையத்தில் சில மணி நேரம் இன்று செலவிட்டேன். பிறகு php121 மற்றும் ஹைகோபி இணைத்து தமிழில் அரட்டை வசதி ஏற்படுத்தினேன். இதை இங்கு (http://lyrics.etheni.com/chat) பார்க்கலாம்.

இன்னும் பரீட்ச்சார்த்த நிலையில் உள்ளது.

வசதிகள் -

1. எந்த மென்பொருளும் தேவையில்லை
2. தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு ஒலிவழி போனோடிக் முறையில் அடிக்க வசதி இணைத்துள்ளேன்.
3. தமிழ் தட்டச்சு தமிழ்99 முறை விசை பலகை தமிழ் தட்டச்சு முறை தெரிந்தவர்களுக்காக.
4. நண்பர்களை சேர்க்கலாம் இல்லை தடுக்கலாம் - ப்ளாக்கிங்

வாருங்கள் நண்பர்களே, விளையாடி பாருங்கள். உங்கள் அனுவங்களை கூறினால் இன்னும் மேம்படுத்த முயற்சிக்கிறேன். நான் மென்பொருள் வல்லுனர் இல்லை. சும்மா R&D தான்.


http://lyrics.etheni.com/chat

pradeepkt
13-12-2006, 05:21 AM
ம்ம்ம்... புதிதாய்த் தொடங்கியதற்கு ரொம்ப நல்லாவே இருக்கு.
இப்போ ஆன்லைனா யாரும் இல்லை. உபயோகப் படுத்திட்டு சொல்றேன்...
எனிவே, உங்க பன்முகத் தன்மை சிலிர்க்க வைக்குதுங்க.

leomohan
13-12-2006, 05:49 AM
ம்ம்ம்... புதிதாய்த் தொடங்கியதற்கு ரொம்ப நல்லாவே இருக்கு.
இப்போ ஆன்லைனா யாரும் இல்லை. உபயோகப் படுத்திட்டு சொல்றேன்...
எனிவே, உங்க பன்முகத் தன்மை சிலிர்க்க வைக்குதுங்க.


வேலை வெட்டி இல்லை => பன்முகத் தன்மை :) :)

நிறைய வேலை இருந்தால் வேலையை பார்ப்போம். குடும்பம் இருந்தால் குடும்பத்தை கவனிப்போம். இது இரண்டும் இல்லாததாலே நினைச்சதை செஞ்சிகிட்டு திரியறேன். நான் இன்னும் 1 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பேன். பிறகு புதிய தமிழ் தூதூவனில் கதைக்கலாம்.

ஆங். சொல்ல மறந்துட்டேனே. இப்ப மணி 9.48. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு தான் அலுவலகம் போறேன்னா பார்த்துக்கோங்க. ஹா ஹா

leomohan
13-12-2006, 08:18 AM
வாங்க ராஜேஷ். எங்கே காணாம போயிட்டீங்க.

மதி
13-12-2006, 08:22 AM
வாங்க ராஜேஷ். எங்கே காணாம போயிட்டீங்க.
தங்களுக்கு தனி செய்தி அனுப்பியுள்ளேன்..