PDA

View Full Version : இந்தியாவில் ஆண்- பெண் விகித சமமின்மை



mgandhi
11-12-2006, 06:08 PM
இந்தியாவில் ஆண்- பெண் விகித சமமின்மை


இந்தியப் பெண்கள்
இந்தியாவில் பொருளாதார ரீதியாக முன்னேறிய சில மாநிலங்களில் கூட, ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கையின் விகிதத்தில் பெரும் சமமின்மை காணப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பின், உலக சிறார்களின் நிலைமை குறித்த அண்மைய அறிக்கை கூறுகிறது.

வடக்கு மாநிலங்களான ஹரியான மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில், குறைந்தது 14 மாவட்டங்களில், ஆயிரம் ஆண் சிறார்களுக்கு 800 பெண்கள் மாத்திரம் என்ற விகிதமே காணப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

சமமின்மை என்பதற்கு, பெருமளவு பெண்கள் கல்வியைக் கைவிட்டு, இளவயதில் திருமணம் செய்வது, இளவயதிலேயே கருவுறுவதால், இறக்கும் வீதம் அதிகரிப்பது மற்றும் அவற்றுடன் வன்செயல்கள் அதிகரித்து பெண்கள் மீதான துஷ்பிரயோகம் அதிகரிப்பது என்று பொருள் என்றும் யுனிசெப் கூறுகிறது.

இந்த பாலியல் விகித சமமின்மைக்கு, பெண் சிசுக்களை கருவிலேயே அழிப்பது முக்கிய காரணமாகும்

அறிஞர்
11-12-2006, 06:45 PM
மற்ற ஆசிய நாடுகளில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். குறிப்பாக தாய்லாந்தில்... நாடு விட்டு நாடு போய் பொண்ணு எடுத்துக்கலாம்.