PDA

View Full Version : "ஆயுத" எழுத்து..!



franklinraja
11-12-2006, 08:36 AM
என்னவளே...

என்னை நினைக்க மறுக்கிறாயா...
இல்லை, மறுக்க நினைக்கிறாயா..?

இறக்க வேண்டுமானால் சொல்...
மறக்க மட்டும் சொல்லிவிடாதே..!

சிங்கார சென்னை போதாதென்று -
சிங்கப்பூர் கனவு வந்துவிட்டதா..? :rolleyes:

என்னை வதம் செய்ய வேண்டுமென்றா -
நீ இத்தனைகாலம் தவமிருந்தாய்..?

நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்...
நீ ஏன் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருக்கிறாய்..?

மெய்யாக நானிருக்கிறேன்...
என்னுயிராக நீ இருக்கிறாய்...
பிறகு ஏன் ஆயுத எழுத்துக்களால் என்னைக் கொள்கிறாய்..? :confused:

guna
11-12-2006, 08:48 AM
ஏமாறுரவங்க இருந்தா, ஏமாத்த ஆள் இருந்து கிட்டே தான்னிருப்பாங்க ..

ஏமாத்தாதேனு சொல்றதை விட..
ஏமாறாமல் இருக்கலாமே..

ரசித்தேன் கவிதையை, ஆமாம் அது என்ன "கண்ணாம்பூச்சி???"..

பென்ஸ்
11-12-2006, 09:11 AM
காதல் முத்தி போனால்
காதலி அஃறனையால் "குரங்கே, பூசையே... என்று கொஞ்சுவதும்
அதே காதல் முற்று பெற்று போனால்
"அது என்னை இரிட்டேட் பன்ன ஆரம்பிடுச்சு" என்று அஃறினையால் திட்டுவது சகஜம் தான்

இதில் உங்க காதல் எந்த ஆயுத எழுத்து பிராங்...
பாத்தா இரன்டாவது கேஸ் மாதிரி தெரியுது...

பிராங்... இதில் தன்னிலையும், சுட்டிகாட்ட படுவதும் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது. உணர்வுகளை கோபமாய், அழுகையாய், காதலாஉ... எல்லாமய் கொட்டுங்கள் ... யாரையோ சுட்டிகாட்டிவதை தவிர்க்கலாம்...

franklinraja
11-12-2006, 10:05 AM
இதில் தன்னிலையும், சுட்டிகாட்ட படுவதும் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது. உணர்வுகளை கோபமாய், அழுகையாய், காதலாஉ... எல்லாமய் கொட்டுங்கள் ... யாரையோ சுட்டிகாட்டிவதை தவிர்க்கலாம்...

சிங்கார சென்னை போதாதென்று -
சிங்கப்பூர் கனவு வந்துவிட்டதா..?-வரிகள்
ஒருவேளை தனியொருவரை குறிப்பிடுவதாகத்தோன்றலாம்...

ஆனால், பல்வேறு காரணங்களால், காதலை இழந்து வெளிநாட்டிற்கு சென்று கண்ணீர்விடும் மக்களுக்காக பொதுவாகத்தான் எழுதினேன்..!