PDA

View Full Version : பஸ் பயணத்தில் எனது அனுபவம்

arun
11-12-2006, 03:53 AM
அப்போது எனக்கு 16 வயது இருக்கும் நான் டிப்ளமோ முதல் வருடம் படித்து கொண்டிருந்தேன் சொந்தகாரங்க வீட்டு சுப நிகழ்சிகளுக்கு போக ஆரம்பித்த(மெயினா சாப்பாட்டுக்கு தான்) காலமது அப்போது தான் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது

அப்போது நான் எங்கு போனாலும் என் அப்பா அழகாக பஸ் ரூட் சொல்லி விடுவார்கள் அதன் படி போய் விட்டு வருவேன்

அப்படி தான் ஒரு நாள் ஒரு கல்யாணத்துக்கு போவதற்காக பூந்தமல்லியில் இருந்து குமணன்சாவடி என்ற இடத்திற்கு டிக்கட் எடுத்து விட்டு அமர்ந்தேன் பஸ்கண்டக்டரிடம் இடம் வந்தால் சொல்லுமாறு சீட்டில் போய் அமர்ந்து விட்டேன் பேருந்தும் காலியாக தான் இருந்தது பூந்தமல்லியில் இருந்து குமணன் சாவடிக்கு மினிமம் டிக்கட் அதனால் டோக்கன் கொடுக்காமல் காசு கொடுத்து தான் வாங்கினேன் அது தான் வினையே

குமணன் சாவடி எல்லாம் கடந்து பஸ் போய் விட்டது என நினைக்கிறேன் எனக்கு அது தெரியாது நானும் கண்டக்டர் சொல்லுவார் என நினைத்து கொண்டே ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் கண்டக்டரையே பார்த்து கொண்டிருந்தேன் அவரும் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார் நானும் வேடிக்கை பார்த்து கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தேன்

மினிமம் டிக்கட்டுக்கு இவ்வளவு தூரம் எப்படி இருக்கும் என மனதில் ஒரு நெருடல் இருந்தாலும் என்ன தான் நடக்க போகிறது என ஒரு குருட்டு தைரியத்தில் வேடிக்கை பார்த்து கொண்டே வந்து கடைசியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கே வந்து விட்டேன் அப்போது தான் எனக்கு உறைத்தது அடடா ரொம்ப தூரம் வந்து விட்டோம் என்று
அங்கு இருந்த பேருந்து நிருத்தத்தில் இறங்கினால் செக்கிங் மாமா நின்று கொண்டிருந்தார் நான் எடுத்து இருந்த டிக்கெட்டை நீட்டினேன் என்னை அவர் பார்த்து விட்டு டிக்கெட் நம்பரை கண்டக்டரை பார்த்து படிக்க சொன்னார் படித்து முடித்ததும் அவர் என்னிடம் எங்க வாங்குன டிக்கெட் இது என கேட்டார் அதற்கு நான் பூந்த மல்லியில் வாங்குனது என்று சொன்னேன்

அதற்கு அவர் எங்கு இறங்கணும் இங்க இறங்கி இருக்க என்று கேட்டார் நான் அதற்கு குமணன் சாவடியில் இறங்க வேண்டும் என்று சொன்னேன் அத்ற்கு அவர் இந்தா பிடி என 10 2 ரூபாய் டிக்கட்டை கண்டக்டரிடம் வாங்கி கொடுத்து விட்டு ஆப்போசிட் பக்கம் போ போய் பூந்தமல்லி போற பஸ்ல ஏறி இந்த தடவையாவது கரக்டா இறங்கிடு என்று சொன்னார் அதற்கு நான் கண்டக்டரிடம் சொல்ல சொன்னேன் அவர் சொல்லலன்னா நான் என்ன பண்றதுன்னேன் ஆனாலும் அவர் ஒப்பு கொள்ளவே இல்ல அதுக்கு அப்புறம் என்ன பண்றது காச கொடுத்துட்டு திரும்பியும் குமணன் சாவடி வந்து கரக்டா இறங்கினேன்(திரும்பி வரும்போது சீட்டு பக்கம் பாக்க கூட இல்லையே)

அப்போது தெரியாமல் செய்த தவறை இப்போது நினைத்தாலும் என்னை அறியாமல் சிரிப்பு வந்து விடும்

நண்பர்களே டிக்கெட் எடுத்துட்டு கண்டக்டர் சொன்னா தான் இறங்குவேன்னு அடம் பிடிச்சா இது தான் நிலைமை

அருண்

pradeepkt
11-12-2006, 05:27 AM
ம்ம்ம்... இந்த மாதிரி ஆவுமின்னுதான் எப்போ குழப்பத்தோடு பஸ்ஸில ஏறினாலும் கண்டக்டரை நிமிஷத்துக்கு ஒருதரம் கூப்பிட்டு எல்லாருக்கும் தெரியிறமாதிரி ஸ்டாப் வந்துருச்சான்னு கேட்டுக்கிருவேன். ஒரு சந்தர்ப்பத்துக்கு அப்புறம் அவரே கெஞ்சிக் கதறி அந்த இடம் வந்தவுடனே எறக்கி விட்டுருவாரு...

ஓவியா
11-12-2006, 11:19 AM
தகவலுக்கு நன்றி

நானும் இப்படிதான் ஒரு முறை லன்டனில் ஊர் சுற்றினேன்...

நினைக்க நினைக்க சிரிப்புதான் உதிக்கும்

மயூ
18-12-2006, 09:52 AM
இப்படி கண்டக்டரை நம்பி பல தடவை நான் மோசம் போயிருக்கின்றேன்!!! பாவிப்பசஙக!!

இளசு
22-12-2006, 03:43 PM
நடத்துனரை நம்பி மோசம் போன அனுபவம் எனக்கும் உண்டு அருண்.. நன்றி பகிர்ந்தமைக்கு,,,

மயூ
23-12-2006, 04:22 AM
ம்ம்ம்... இந்த மாதிரி ஆவுமின்னுதான் எப்போ குழப்பத்தோடு பஸ்ஸில ஏறினாலும் கண்டக்டரை நிமிஷத்துக்கு ஒருதரம் கூப்பிட்டு எல்லாருக்கும் தெரியிறமாதிரி ஸ்டாப் வந்துருச்சான்னு கேட்டுக்கிருவேன். ஒரு சந்தர்ப்பத்துக்கு அப்புறம் அவரே கெஞ்சிக் கதறி அந்த இடம் வந்தவுடனே எறக்கி விட்டுருவாரு...
இதைத்தான் அன்புத் தொல்லை என்று சொல்வார்களோ??? :D :D :D

உதயா
10-01-2013, 10:35 AM
.
இதை விட ஒரு தமாஷான விஷயம் என்னனா...? ஒரு 10 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து, அதற்கு பாக்கிப்பணம் இறங்கும் போது வாங்கிக்கொள்ளுங்கள் என்று கண்டக்டர் சொன்னால்..... நம்மிடம் அந்த பணம் வரும் வரை டென்ஷன் தான்....

தாமரை
10-01-2013, 10:42 AM
கண்டக்டருக்கு பஸ்ஸூல தனியா போக பயமா இருந்திருக்கும். அதான் கடைசி ஸ்டாப் வரைக்கும் கூட்டிட்டு போகலாம் நினைச்சிருக்காரு. செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்ததும் அருணைக் கழட்டி விட்டுட்டாரு.

கும்பகோணத்துப்பிள்ளை
10-01-2013, 06:49 PM
இவர் பரவாயில்லைங்க, திண்டாடினாலும் போகவேண்டிய இடத்துக்கு போயிட்டாரு (சாப்பாட்டு நேரத்துக்கு கரக்ட்டா கணக்குபன்னி) நம்ப கதைய கேட்டா என்ன சொல்லுவீங்களோ?! திநகரிலிருந்து பாரிஸ்க்கு டிக்கட் எடுத்து திரும்ப திநகரில் இறங்கி பாரிச தேடுன கதையது?!!!

aren
11-01-2013, 04:30 AM

இது தீநகர்ல இருக்கிற வடபழனி பிராஞ்சு ஜோக் மாதிரியல்லவா இருக்கிறது.

seguwera
11-01-2013, 12:29 PM
:lachen001:கண்டக்டருன்னா இந்த நல்ல டிகெட்டெல்லாம் கிழிச்சு குடுப்பாங்கலே அவுகதானே:lachen001:

M.Jagadeesan
12-01-2013, 06:12 AM
சில நாட்களுக்கு முன்பு , சென்னை நகர பேருந்துகளில் , ஒவ்வொரு நிறுத்தத்தையும் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டு இருந்தார்கள். பேருந்து நிற்கப்போகும் நிறுத்தத்தையும், அடுத்து வருகின்ற நிறுத்தத்தையும் ஒலிபெருக்கியில் சொல்லுவார்கள். அது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. தப்பித் தவறி நாம் தூங்கிவிட்டால் கூட , ஸ்பீக்கர் ஒலி நம்மை எழுப்பிவிடும். இப்போது அந்தத் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. நம் இறங்கவேண்டிய இடத்தை நடத்துனரிடம் தெரிவிப்பதைவிட , சக பயணியிடம் தெரிவிப்பது நல்லது. ஆனால் அவரைத் தூங்கவிடாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும்.

கும்பகோணத்துப்பிள்ளை
12-01-2013, 06:28 PM
:lachen001:கண்டக்டருன்னா இந்த நல்ல டிகெட்டெல்லாம் கிழிச்சு குடுப்பாங்கலே அவுகதானே:lachen001:
அட ஆமாங்க! டிக்கெட்டெல்லாம் அப்பளம் மாதிரி உடைஞ்சிபோயிடுமுன்னு நனைச்சு கிழிப்பாருங்க! அவருதாங்க!:aetsch013:

சொ.ஞானசம்பந்தன்
14-01-2013, 07:39 AM
நடத்துநர்க்கு இருக்கிற வேலைச் சுமையில் நம்மை நினைவில் வைத்துக்கொண்டு இறங்குகிற இடத்தையும் மறந்துவிடாமல் நமக்கு உதவுவார் என நம்புவது நம் தவறு . பக்கத்துப் பயணிகளிடம் சொல்லி அவர்களின் உதவியைப் பெறுவதுதான் சிறந்தது .

aren
14-01-2013, 09:45 AM
நாமதான் இரண்டு நிறுத்ததுக்கு ஒரு தடவை அருகில் இருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டு வரவேண்டும், இல்லையென்றால் அவ்ளோதான், திரும்பவும் வரவேண்டியதுதான்.

arun
01-02-2013, 04:25 PM
சில நாட்களுக்கு முன்பு , சென்னை நகர பேருந்துகளில் , ஒவ்வொரு நிறுத்தத்தையும் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டு இருந்தார்கள். பேருந்து நிற்கப்போகும் நிறுத்தத்தையும், அடுத்து வருகின்ற நிறுத்தத்தையும் ஒலிபெருக்கியில் சொல்லுவார்கள். அது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. தப்பித் தவறி நாம் தூங்கிவிட்டால் கூட , ஸ்பீக்கர் ஒலி நம்மை எழுப்பிவிடும். இப்போது அந்தத் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. நம் இறங்கவேண்டிய இடத்தை நடத்துனரிடம் தெரிவிப்பதைவிட , சக பயணியிடம் தெரிவிப்பது நல்லது. ஆனால் அவரைத் தூங்கவிடாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஆம் இப்போது அந்த திட்டம் நடைமுறையில் இல்லை ! சோதனை முயற்சியாக செய்து பார்த்து ஏனோ அதை செயல்படுத்த முடியாமல் போய் விட்டது போலும்