PDA

View Full Version : குருவிக் கூடு.....

meera
10-12-2006, 05:21 AM
குருவிக் கூடு

கட்டிவைத்தார்கள்
குருவிக் கூடு..
அது கலையாமலிருக்க
கலைத்து கொண்டேன் - என்
காதல் கூட்டை....

தாமரை
10-12-2006, 06:38 AM
கட்டிவைத்தார்கள்
குருவி கூடு..
அது கலையாமலிருக்க
கலைத்து கொண்டேன் - என்
காதல் கூட்டை....

காதல் கூட்டைக்
கலைத்து
கல்யாணக் கூடு..

தேன்கூட்டைக் கலைத்து
குளவிக்கூடு...

கூட்டுக்கு கூடு
நடக்குமா இது
வீட்டுக்கு வீடு,,

காதல் பறவை
சிறகினை விரித்து
ககன வீதியில் பறக்காமல்
கூட்டுக்குள்ளே
குறுகிக் கிடந்து விட்டு
விடுதலை கேட்டால்....

....
....
ஓ நீ பச்சைக்கிளியோ!!!!!:eek: :eek: :eek:

leomohan
10-12-2006, 07:41 AM
கட்டிவைத்தார்கள்
குருவி கூடு..
அது கலையாமலிருக்க
கலைத்து கொண்டேன் - என்
காதல் கூட்டை....

அருமை. தொடருங்கள்.

leomohan
10-12-2006, 07:42 AM
காதல் கூட்டைக்
கலைத்து
கல்யாணக் கூடு..
தேன்கூட்டைக் கலைத்து
குளவிக்கூடு
கூட்டுக்கு கூடு
நடக்குமா இது
வீட்டுக்கு வீடு,,

காதல் பறவை
சிறகினை விரித்து
ககன வீதியில் பறக்காமல்
கூட்டுக்குள்ளே
குறுகிக் கிடந்து விட்டு
விடுதலை கேட்டால்....

....
....
ஓ நீ பச்சைக்கிளியோ!!!!!:eek: :eek: :eek:

செல்வனின் யூஷீவல் பஞ்ச் :)

gragavan
10-12-2006, 08:12 AM
காதல் கூட்டைக்
கலைத்து
கல்யாணக் கூடு..

தேன்கூட்டைக் கலைத்து
குளவிக்கூடு...

கூட்டுக்கு கூடு
நடக்குமா இது
வீட்டுக்கு வீடு,,

காதல் பறவை
சிறகினை விரித்து
ககன வீதியில் பறக்காமல்
கூட்டுக்குள்ளே
குறுகிக் கிடந்து விட்டு
விடுதலை கேட்டால்....

....
....
ஓ நீ பச்சைக்கிளியோ!!!!!:eek: :eek: :eek:முட்டைக்குக் கூடு வேண்டும்
பறத்தற்குக் காடு வேண்டும்
முட்டையும் பறத்தலும்
பெட்டையின் முடிவில்

meera
10-12-2006, 09:20 AM
காதல் கூட்டைக்
கலைத்து
கல்யாணக் கூடு..

தேன்கூட்டைக் கலைத்து
குளவிக்கூடு...

கூட்டுக்கு கூடு
நடக்குமா இது
வீட்டுக்கு வீடு,,

காதல் பறவை
சிறகினை விரித்து
ககன வீதியில் பறக்காமல்
கூட்டுக்குள்ளே
குறுகிக் கிடந்து விட்டு
விடுதலை கேட்டால்....

....
....
ஓ நீ பச்சைக்கிளியோ!!!!!:eek: :eek: :eek:

சிறகு விரிக்க
சிந்தித்தது
பச்சை கிளி!

சிறகு தந்தவர்கள்
சிதைத்துவிட்டார்கள்
பாசத்தால்....:eek:

பென்ஸ்
10-12-2006, 10:38 AM
மீரா...
கவிதையாய் இது அழகு..
வாழ்க்கையில்... வலி

மாற்றத்தை ஏற்கும் மனம்
சிறகடிக்கும்...

வாழ்த்துகள்....

sriram
10-12-2006, 11:36 AM
பச்சை கிளியின் பரிதாபம் புரிகிறது. சிறகு தந்தும் பயன் இல்லாமல் இருக்கிறதே.!
இனம் புரியாத மென்சோகம் இழைந்தோடுகிறது மீரா.
தொடர்ந்து எழுதுங்கள்

தாமரை
10-12-2006, 12:42 PM
சிறகு விரிக்க
சிந்தித்தது
பச்சை கிளி!

சிறகு தந்தவர்கள்
சிதைத்துவிட்டார்கள்
பாசத்தால்....:eek:
நான் சொன்னது இந்தப் பச்சைக் கிளியை..:D :D :D
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994

இருக்கட்டும்.. எமனின் ஆயுதமே "பாசக்" கயிறுதானே...
இங்கும் பாசங்கள் தந்த கயிறுதானே!:eek: :eek: :eek:

தாமரை
10-12-2006, 01:06 PM
முட்டைக்குக் கூடு வேண்டும்
பறத்தற்குக் காடு வேண்டும்
முட்டையும் பறத்தலும்
பெட்டையின் முடிவில்
மீராவுக்கு புரியலைன்னா பரவாயில்லை சரி... உமக்குமா.. கிளிக்கறி செரித்து விட்டதா என்ன?

தாமரை
10-12-2006, 01:14 PM
கட்டிவைத்தார்கள்
குருவி கூடு..
அது கலையாமலிருக்க
கலைத்து கொண்டேன் - என்
காதல் கூட்டை....

காதல் கூடா
இல்லை கூட்டா?

meera
10-12-2006, 01:16 PM
மீராவுக்கு புரியலைன்னா பரவாயில்லை சரி... உமக்குமா.. கிளிக்கறி செரித்து விட்டதா என்ன?

அண்ணா, நீங்க அந்த கிளியை விடறதா இல்லையா??:confused: :confused:

அய்யோ பாவம்

அது சரி,மறந்தவங்களுக்கும் ஏன் ஞாபகபடுத்தறீங்க?????:angry: :angry:

meera
10-12-2006, 01:19 PM
காதல் கூடா
இல்லை கூட்டா?

அண்ணா,

கூட்டு,கறி எதுவும் இல்லை.

அது கூடு தான்.
அது சரி,காதல் கூட்டை கலைத்துவிட்டர்கள் என்பதை எப்படி எழுதுவது குருதேவா??? :eek: :eek:

தாமரை
10-12-2006, 01:21 PM
அண்ணா, நீங்க அந்த கிளியை விடறதா இல்லையா??:confused: :confused:

அய்யோ பாவம்

அது சரி,மறந்தவங்களுக்கும் ஏன் ஞாபகபடுத்தறீங்க?????:angry: :angry:
ராகவன் பேபி கிளாஸ் போனதை.. அப்ப சாப்பிட்டதை எல்லாம் நினைவு படுத்தி சொல்றாரு.. இப்ப சாப்பிட்ட கிளிக்கறியை மறக்கலாகுமான்னு கேட்டேன் தப்பா? :confused: :confused: :confused:

meera
10-12-2006, 01:24 PM
ராகவன் பேபி கிளாஸ் போனதை.. அப்ப சாப்பிட்டதை எல்லாம் நினைவு படுத்தி சொல்றாரு.. இப்ப சாப்பிட்ட கிளிக்கறியை மறக்கலாகுமான்னு கேட்டேன் தப்பா? :confused: :confused: :confused:

அடடா, அதை கறி வச்சு சாப்டு முடிச்சாச்சா???:confused:

சொல்லவே இல்ல:eek: :eek: :eek:

தாமரை
10-12-2006, 01:30 PM
அண்ணா,

கூட்டு,கறி எதுவும் இல்லை.

அது கூடு தான்.
அது சரி,காதல் கூட்டை கலைத்துவிட்டர்கள் என்பதை எப்படி எழுதுவது குருதேவா??? :eek: :eek:

நீங்கள் எழுதிய முறையில் தவறில்லை.. ஆனால் காதலை ஏன் கூடாக உருவகப்படுத்துகிறீர்கள்...

காதல் உங்களுக்குள் இருக்கிறது..
காதலுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்...
உள்ளும் புறமுமான அதை
ஒரு கூடு என்பதன் மூலம்
புறந்தள்ளுகிறீகளே
இது ஞாயமா?

காதல் கட்டப்படுகிறதா?
இல்லை வளர்கிறதா?
காதல் உயிருள்ளதா?
அல்லது உயிரற்றதா?

பாசம் என்பது என்ன?
கட்டுப்படுவதா இல்லை
கட்டுப்படுத்தப்படுவதா?

மனம்
குறுகும் போது கூடு..
விரியும் போது உலகம்...

தாமரை
10-12-2006, 01:31 PM
அடடா, அதை கறி வச்சு சாப்டு முடிச்சாச்சா???:confused:

சொல்லவே இல்ல:eek: :eek: :eek:
சொன்னேமே "ஏஏஏஏஏஏஏஏஏஏவ்" என்று....:rolleyes: :rolleyes: :rolleyes:

meera
10-12-2006, 01:39 PM
நீங்கள் எழுதிய முறையில் தவறில்லை.. ஆனால் காதலை ஏன் கூடாக உருவகப்படுத்துகிறீர்கள்...

காதல் உங்களுக்குள் இருக்கிறது..
காதலுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்...
உள்ளும் புறமுமான அதை
ஒரு கூடு என்பதன் மூலம்
புறந்தள்ளுகிறீகளே
இது ஞாயமா?

காதல் கட்டப்படுகிறதா?
இல்லை வளர்கிறதா?
காதல் உயிருள்ளதா?
அல்லது உயிரற்றதா?

பாசம் என்பது என்ன?
கட்டுப்படுவதா இல்லை
கட்டுப்படுத்தப்படுவதா?

மனம்
குறுகும் போது கூடு..
விரியும் போது உலகம்...

அண்ணா,

இத்தனை கேள்வி ஒரே நேரத்துல கேட்டா,உங்க தங்கைக்கு பதில் சொல்லும் அளவுக்கு திறமை இருக்கா??

கொஞ்சம் யோசிச்சு கேக்க கூடாதா??B) B)

தாமரை
10-12-2006, 02:09 PM
அண்ணா,

இத்தனை கேள்வி ஒரே நேரத்துல கேட்டா,உங்க தங்கைக்கு பதில் சொல்லும் அளவுக்கு திறமை இருக்கா??

கொஞ்சம் யோசிச்சு கேக்க கூடாதா??B) B)

யோசிச்சு கேட்கிற விஷயம் இல்லை.. யோசிக்க கேட்கிற விஷயம்..

ஆழ்மனதில் இருந்து காதலை தோண்டித் தூர் வாருகிற தங்கைக்கு இது பெரிய விஷயமே இல்லை.. திறமைக்கும் யோசிப்பதற்கும் தொடர்பு உண்டுதான்,,, ஆனால் அது நேர்மறையானதா?

meera
10-12-2006, 02:48 PM
அண்ணா,
இந்த விளையாட்டுக்கு நான் வரலை.

ஹ ஹ ஹா

தாமரை
10-12-2006, 02:59 PM
அண்ணா,
இந்த விளையாட்டுக்கு நான் வரலை.

ஹ ஹ ஹா
கூடு கட்டி விளையாடிவிட்டு
இப்ப வரலைன்னா எப்படி?

காதல் கூடு கட்டுவது இருவர்...
ஒருவர் கலைத்துச் செல்லல்
என்ன நியாயம்?

meera
10-12-2006, 03:06 PM
கூடு கட்டி விளையாடிவிட்டு
இப்ப வரலைன்னா எப்படி?

காதல் கூடு கட்டுவது இருவர்...
ஒருவர் கலைத்துச் செல்லல்
என்ன நியாயம்?

அண்ணா, இது சொல்ல படாத காதலாய் இருக்கலாம் அல்லவா?

தாமரை
10-12-2006, 03:14 PM
அண்ணா, இது சொல்ல படாத காதலாய் இருக்கலாம் அல்லவா?
சொல்லப்படாத காதல்..
இங்கே
சொல்லப்பட்டது..

இது
கூடு கட்டும் முயற்சியா?
இல்லை
கலைக்கும் முயற்சியா?

meera
11-12-2006, 02:30 AM
சொல்லப்படாத காதல்..
இங்கே
சொல்லப்பட்டது..

இது
கூடு கட்டும் முயற்சியா?
இல்லை
கலைக்கும் முயற்சியா?

அய்யோஓ அண்ணா,உங்களோட பேசி ஜெயிக்க முடியுமா?

இது விளையாட்டா எழுதப்பட்ட ஒன்னு தான்.

சொல்லும் முயசியும் இல்லை,கலைக்கும் முயசியும் இல்லை.

சமாதானம் அயிடலாம்.

மதி
11-12-2006, 07:26 AM
அருமையான கவிதை மீரா..!

meera
11-12-2006, 07:35 AM
அருமையான கவிதை மீரா..!

நன்றி மதி.

franklinraja
11-12-2006, 07:56 AM
கட்டிவைத்தார்கள்
குருவி கூடு..
அது கலையாமலிருக்க
கலைத்து கொண்டேன் - என்
காதல் கூட்டை....

அழகாய் கட்டிவைத்திருக்கிறார்கள்
குருவிக் கூடு...
அதில் வாழ்வதென்னவோ நம்
எலும்புக் கூடு..! :eek:

ஓவியா
11-12-2006, 10:58 AM
கட்டிவைத்தார்கள்
குருவி கூடு..
அது கலையாமலிருக்க
கலைத்து கொண்டேன் - என்
காதல் கூட்டை....

எத்தனையோ காதல் இப்படிதான் ஆரம்பதிலே முடிந்துவிடும்

சிறகு விரிக்க
சிந்தித்தது
பச்சை கிளி!

சிறகு தந்தவர்கள்
சிதைத்துவிட்டார்கள்
பாசத்தால்........

அப்பா அம்மா சந்தோஷம் தான் முக்கியமல்லவா...:cool: :cool: :cool:

வலியினை கவிதையாய் வடித்தமைக்கு பாரட்டுக்கள்

ஓவியா
11-12-2006, 11:28 AM
மீரா...
கவிதையாய் இது அழகு..
வாழ்க்கையில்... வலி

மாற்றத்தை ஏற்கும் மனம்
சிறகடிக்கும்...

வாழ்த்துகள்....

பெஞ்சு, தங்களின் விமர்சனம்
வலியிலும் வாழ்த்தும் இதயங்கள் இன்னும் இருக்கதான் செய்கின்றன...என்று கண்சிமிட்டுகிறது

எண்ணங்களும் மனங்களும் மாறுவது அவ்வளவு சுலபமில்லை...

ஓவியா
11-12-2006, 11:37 AM
யோசிச்சு கேட்கிற விஷயம் இல்லை.. யோசிக்க கேட்கிற விஷயம்..

ஆழ்மனதில் இருந்து காதலை தோண்டித் தூர் வாருகிற தங்கைக்கு இது பெரிய விஷயமே இல்லை..
திறமைக்கும் யோசிப்பதற்கும் தொடர்பு உண்டுதான்,,, ஆனால் அது நேர்மறையானதா?

நெத்தியடி கேள்வி....

மீரா பதில் இல்லதானே....:D

கூடு கட்டி விளையாடிவிட்டு
இப்ப வரலைன்னா எப்படி?

காதல் கூடு கட்டுவது இருவர்...
ஒருவர் கலைத்துச் செல்லல்
என்ன நியாயம்?

சொல்லுங்க என்ன நியாயம்???????????????
மீரா இதுக்கும் பதில் இல்லதானே...:D

பதில்லெல்லாம் அப்பாவின் தோள் துண்டில் ஒளிந்துல்லது
அப்படிதானே ராஜாத்தி....;)

தாமரை
11-12-2006, 01:31 PM
நெத்தியடி கேள்வி....

மீரா பதில் இல்லதானே....:D

சொல்லுங்க என்ன நியாயம்???????????????
மீரா இதுக்கும் பதில் இல்லதானே...:D

பதில்லெல்லாம் அப்பாவின் தோள் துண்டில் ஒளிந்துல்லது
அப்படிதானே ராஜாத்தி....;)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294&page=3

இதைப் படியுங்கள்...

ஓவியா
11-12-2006, 02:00 PM
அண்ணா, இது சொல்ல படாத காதலாய் இருக்கலாம் அல்லவா?

அஐ லவ் யுனு சொன்னால் தான் காதலா...:eek: :eek:
சொல்லாவிட்டால் காதலில்லையென்று யார் சொன்னது..?????????????...
சொல்லாவிட்டாலும் அது அந்த இரண்டு இதயங்களுக்கு புரியும்......:)

அவனுக்கு இவளை பிடிக்குமென்றும்,
இவளுக்கு அவனை பிடிக்குமென்றும்....
உன்னுல் ஒரு உணர்வு எப்பொழுதும் பேசும்.......:)

ஆனால் சொல்லத்தான் வாய்ப்பிருக்காது
வழியும் தெரியாது....:D
அப்படியே வாய்பிருந்தாலும்....சில காதல் சொல்லாமலே...............

காதல் ஒரு மொழியில்லா பாஷை.....
உதடு பேசாது,
உணர்வு பேசுவதே காதல்.................

meera
11-12-2006, 02:22 PM

ஓவி,கலக்கி போட்டியே மக்கா,

விளக்கம் அழகா இருக்கு.:D :D :D

meera
11-12-2006, 02:28 PM
நெத்தியடி கேள்வி....

மீரா பதில் இல்லதானே....:D

சொல்லுங்க என்ன நியாயம்???????????????
மீரா இதுக்கும் பதில் இல்லதானே...:D

ஹி ஹி ஹி செல்வா அண்ணா கேள்விக்கு பதில் சொல்லற அளவுக்கு நான் இன்னும் தேறவில்லை.

பதில்லெல்லாம் அப்பாவின் தோள் துண்டில் ஒளிந்துல்லது
அப்படிதானே ராஜாத்தி....;)

அடடா யாருக்கும் தெரியாத விஷயம் உங்கலுக்கு தெரிஞ்சு போச்சே.

(ஓவி,யாருகிட்டயும் சொல்லாதீங்க நம்ம ரகசியத்தை) :eek: :eek:

தாமரை
11-12-2006, 02:31 PM
அஐ லவ் யுனு சொன்னால் தான் காதலா...:eek: :eek:
சொல்லாவிட்டால் காதலில்லையென்று யார் சொன்னது..?????????????...
சொல்லாவிட்டாலும் அது அந்த இரண்டு இதயங்களுக்கு புரியும்......:)

அவனுக்கு இவளை பிடிக்குமென்றும்,
இவளுக்கு அவனை பிடிக்குமென்றும்....
உன்னுல் ஒரு உணர்வு எப்பொழுதும் பேசும்.......:)

ஆனால் சொல்லத்தான் வாய்ப்பிருக்காது
வழியும் தெரியாது....:D
அப்படியே வாய்பிருந்தாலும்....சில காதல் சொல்லாமலே...............

காதல் ஒரு மொழியில்லா பாஷை.....
உதடு பேசாது,
உணர்வு பேசுவதே காதல்.................

கைகள் கூட காதலென்றால் தெரியாதென்றே தட்டச்சு செய்யுமில்லையா?

அல்லிராணி
13-12-2006, 07:30 AM
கட்டிவைத்தார்கள்
குருவி கூடு..
அது கலையாமலிருக்க
கலைத்து கொண்டேன் - என்
காதல் கூட்டை....

அவருக்கு சுருட்டை முடியா மீரா???:confused: :confused:

பின்ன(கல்யாணம்) கட்டி வைத்தார்கள் ... குருவிக் கூடு என்கிறீரே:rolleyes: :rolleyes: :rolleyes:

meera
13-12-2006, 02:12 PM
அவருக்கு சுருட்டை முடியா மீரா???:confused: :confused:

பின்ன(கல்யாணம்) கட்டி வைத்தார்கள் ... குருவிக் கூடு என்கிறீரே:rolleyes: :rolleyes: :rolleyes:

:eek: :eek: :eek:
:angry: :angry:

mukilan
13-12-2006, 02:18 PM
நல்ல கவிதை மீரா. வாழ்த்துக்கள்.

நான் முன்னமொரு கவிதை படித்திருக்கிறேன். அப்துல் ரகுமனின் கவிதையென நினைக்கிறேன்.

"ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு
கெட்டி மேளச் சத்ததிலும்
யாரோ ஒருவர் விசும்பும்
சப்தம் அடங்கிப் போகிறது"

பெற்றோரோ, அல்லது வேறு ஏதோ சூழலோ காதலை வெளியில் சொல்லியும் சொல்லாமலும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் எவரோ ஒருவர் அழுவது நிஜம்தானே!

meera
13-12-2006, 02:25 PM

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் முகிலன்.

ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு
கெட்டி மேளச் சத்ததிலும்
யாரோ ஒருவர் விசும்பும்
சப்தம் அடங்கிப் போகிறது
இந்த வரிகள் அருமையாய் இருக்கிறது.

பென்ஸ்
13-12-2006, 02:42 PM
"ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு
கெட்டி மேளச் சத்ததிலும்
யாரோ ஒருவர் விசும்பும்
சப்தம் அடங்கிப் போகிறது"

முகில்ஸ்....
இது கல்யாண பையன் அல்லது பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையப்பா....

மதி
13-12-2006, 02:46 PM
:D :D
முகில்ஸ்....
இது கல்யாண பையன் அல்லது பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையப்பா....
அனுபவசாலிகள் சொன்னா ஒத்துக்க வேண்டியது தான்...!:D :eek: :eek:

mukilan
13-12-2006, 02:53 PM
கல்யாணப் பையனாகவோ இல்லை பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களாகவும் இருக்கலாம். பொன்ணு பையணுக்கு பல்ப் காட்டி இருக்கலாம். அல்லது இன்னொரு பெண் பையன்கிட்ட சொல்லாமலே போய் இருக்கலம்.

கவனிக்க: பொண்ணுங்கதான் பையன்களுக்கு பல்ப் கொடுப்பாங்க.

ஓவியா
13-12-2006, 02:56 PM
கைகள் கூட காதலென்றால் தெரியாதென்றே தட்டச்சு செய்யுமில்லையா?

:D :D :D :D

எப்படியாவது கண்டுபிடிச்சுடுறீங்களே.......:D

meera
13-12-2006, 03:05 PM
கல்யாணப் பையனாகவோ இல்லை பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களாகவும் இருக்கலாம். பொன்ணு பையணுக்கு பல்ப் காட்டி இருக்கலாம். அல்லது இன்னொரு பெண் பையன்கிட்ட சொல்லாமலே போய் இருக்கலம்.

கவனிக்க: பொண்ணுங்கதான் பையன்களுக்கு பல்ப் கொடுப்பாங்க.

முகிலன்,

நல்லா தானே இருந்தீங்க.திடீர்னு இப்படி வாரறீங்களே. :angry: :angry: :angry: :eek:

மதி
13-12-2006, 03:11 PM
முகிலன்,

நல்லா தானே இருந்தீங்க.திடீர்னு இப்படி வாரறீங்களே. :angry: :angry: :angry: :eek:
ஏதோ அவர் தன்னோட அனுபவத்த சொல்றார்..
விடுங்க மீரா..:) :) :)

ஓவியா
13-12-2006, 03:13 PM
கல்யாணப் பையனாகவோ இல்லை பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களாகவும் இருக்கலாம். பொன்ணு பையணுக்கு பல்ப் காட்டி இருக்கலாம். அல்லது இன்னொரு பெண் பையன்கிட்ட சொல்லாமலே போய் இருக்கலம்.

கவனிக்க: பொண்ணுங்கதான் பையன்களுக்கு பல்ப் கொடுப்பாங்க.

கவனிக்க: பையணுங்கதான் பொண்ணுங்களுக்கு அல்வா கொடுப்பாங்க, தண்ணி காட்டுவாங்க .....

mukilan
13-12-2006, 03:20 PM
இப்பவும் நல்லாத்தேன் இருக்கேன் மீரா. நீங்கதான் அதை அழுத்தம் கொடுத்து பெருசாக் காட்டினீங்க. ஓவியாவும் பதிலுக்கு ஏதோ சொல்லி இருக்காங்க பாருங்க.

மதி என்னோட அனுபவம் இதிலே இருக்கு. ஆனா இது இல்லை. புரிஞ்சிடுக்குமே???

ஓவியா
13-12-2006, 03:31 PM

புரியலை.......புரியலை...

அதை ஒரு சிறுகதையா எழுதுங்களேன்..முகி....:D

ஆமா மதீஈஈஈஈஈஈஈஈஈ,
கண்டுகினியா, இன்னைக்கு செஸ்கடூன் ஆபீசர் ரொம்ப பேசுரார்.....ஊரில் பொது விடுமுரையோ.....
எப்பவுமே.....ஒரு பதிவு போடவே........முப்பது நாப்பது நாளாகும்.....

சரி சரி உங்கள் வரவு நல்வரவாகுக.....ஆபீசரைய்யா

தாமரை
13-12-2006, 03:36 PM
நல்ல கவிதை மீரா. வாழ்த்துக்கள்.

நான் முன்னமொரு கவிதை படித்திருக்கிறேன். அப்துல் ரகுமனின் கவிதையென நினைக்கிறேன்.

"ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு
கெட்டி மேளச் சத்ததிலும்
யாரோ ஒருவர் விசும்பும்
சப்தம் அடங்கிப் போகிறது"

பெற்றோரோ, அல்லது வேறு ஏதோ சூழலோ காதலை வெளியில் சொல்லியும் சொல்லாமலும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் எவரோ ஒருவர் அழுவது நிஜம்தானே!

அடங்குவது ஓரழுகை..
ஆரம்பமாவது எத்தனை?

தாமரை
13-12-2006, 03:38 PM
இப்பவும் நல்லாத்தேன் இருக்கேன் மீரா. நீங்கதான் அதை அழுத்தம் கொடுத்து பெருசாக் காட்டினீங்க. ஓவியாவும் பதிலுக்கு ஏதோ சொல்லி இருக்காங்க பாருங்க.

மதி என்னோட அனுபவம் இதிலே இருக்கு. ஆனா இது இல்லை. புரிஞ்சிடுக்குமே???
ரைட்டு ரைட்டு.. புரிஞ்சது..
ஆனால் கல்யாணத்துக்குப் போனா பென்ஸ் ஏன் அழறாருன்னு கேட்டுச் சொல்லுங்களேன்

mukilan
13-12-2006, 03:42 PM
எல்லாக் கல்யாணத்திற்குமா இல்லை எதாவதொரு கல்யாணத்தில் மட்டுமா.??

தாமரை
13-12-2006, 03:45 PM
எல்லாக் கல்யாணத்திற்குமா இல்லை எதாவதொரு கல்யாணத்தில் மட்டுமா.??
இது அவர் முதல்ல சொன்னப்பவே தெரியலையா?

பெங்களுரில் ஒவ்வொரு முறை தவில் தட்டப்படும் போதும்.. அந்த அடி அவர் நெஞ்சில இல்ல இறங்குது

ஓவியா
13-12-2006, 04:08 PM
பென்சு,
ஆபிசுலே பேப்பரை புரட்டியது போதும்லே

இங்க வந்து பாரும்......
இதுக்கு ஒரு விடையை போடும்லே......

இப்படியாவது ஒரு நளைக்கு ஒரு பதிவாவது போடுங்க பென்சு....

நான் அழலே.....கிலாப்புலே அல்லாரும் கண்ண தொடசுக்குக்ங்லே'னு....:D :D :D

பென்ஸ்
13-12-2006, 05:48 PM
நான் அழுவது உன்மைதான்...
சில நேரம் அது ஆனந்த கண்ணிர் ...
அப்படா தோலஞ்சதுன்னு... :-)

தாமரை
14-12-2006, 04:12 AM
நான் அழுவது உன்மைதான்...
சில நேரம் அது ஆனந்த கண்ணிர் ...
அப்படா தோலஞ்சதுன்னு... :-)

ம்ம்ம்.. அதுசரி.. பல நேரம் அது என்ன?

மதி
14-12-2006, 04:30 AM
ம்ம்ம்.. அதுசரி.. பல நேரம் அது என்ன?
ஆனாலும் வெந்த புண்ல.........:D :D :D

ஓவியா
14-12-2006, 04:02 PM
ஆனாலும் வெந்த புண்ல.........:D :D :D

மகனே உனக்கொரு காலம் வருமே......அப்ப இந்த டைலாக் ரொம்ப தேவைப்படுமே...இரு இரு..:D :D :D

மதி
15-12-2006, 01:39 AM
மகனே உனக்கொரு காலம் வருமே......அப்ப இந்த டைலாக் ரொம்ப தேவைப்படுமே...இரு இரு..:D :D :D
இனிமே வர சான்ஸே இல்ல...:D :D :D :D

தாமரை
15-12-2006, 03:23 AM
இனிமே வர சான்ஸே இல்ல...:D :D :D :D
தவளை தவளை:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

மதி
15-12-2006, 03:31 AM
தவளை தவளை:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
தெரிஞ்சே தான் இப்படி எழுதினேன்...
அப்புறம் என்ன..??:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

தாமரை
15-12-2006, 03:39 AM
தெரிஞ்சே தான் இப்படி எழுதினேன்...
அப்புறம் என்ன..??:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
தெரிஞ்சுக்கோங்க மக்கா! கிறிஸ்துமஸ் வாரம் டபுள் பார்ட்டியாம்..

மதி
15-12-2006, 03:50 AM
தெரிஞ்சுக்கோங்க மக்கா! கிறிஸ்துமஸ் வாரம் டபுள் பார்ட்டியாம்..
யார் யார் பார்ட்டி குடுக்கறாங்க..???
நான் ரெடி!:D :D :D

இளசு
15-12-2006, 05:53 AM
மக்களே

இது கவிதைத் திரிதானே? ஐவர் அணி அரட்டைத் திரி இல்லையே??!!!!!!!!!

பென்ஸ்
15-12-2006, 07:39 AM
மக்களே...
இளசு சொல்லுவது போல் கவிதை திரிகளில் கவிதையை பற்றிய விவாதக்களும், விமர்சனக்களும் மட்டுமே போதுமே.....