PDA

View Full Version : மீண்டும் மின்புத்தகங்கள்:சில குறிப்புகள



இராசகுமாரன்
10-12-2006, 05:04 AM
இனிய தமிழ் மன்றத்து தோழர்களே.. தோழிகளே..

மன்ற மேம்படுத்தலின் போது மின்புத்தக மென்பொருளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபடியால், இப்போது புதிய மென்பொருளோடு மீண்டும் மின்புத்தக வசதி இன்று முதல் தோன்றியுள்ளது. இது பற்றிய சில குறிப்புகள் பின்வருமாறு:

1) மதுரை ப்ராஜக்ட் புத்தகங்கள் அதிகம் பதிக்கப் படுவதால், மற்ற புத்தகங்கள் அதனுள் மறைந்து விடுகின்றன. அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க, மதுரை ப்ராஜக்ட் புத்தகங்களுக்கு தனி இடம் கொடுக்கப் பட்டுள்ளது (அவை அங்கேயே இலவசமாக கிடைக்கும் போது இங்கே மீண்டும் தேவையா?). பழைய புத்தகங்களில் பலவற்றை அங்கு மாற்றியுள்ளேன். ஒரு சில விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.

2) புதிய மின்புத்தகங்கள் பதிவேற்றம் செய்கையில், புத்தகத்தின் பெயரை தமிழில் தட்டச்சு செய்யலாம். ஆனால், ஆசிரியர் பெயர் (Author Name) பதிக்கையில் அதை ஆங்கிலத்தில் பதிக்கவும். ஆசிரியர் பெயர் இடத்தில் தமிழ் மன்ற பயனாளர் பெயர்களை தவிர்க்கவும்.

3) உங்கள் மின்புத்தகங்களை பதிவேற்றம் செய்கையில், அதற்கு ஏற்ற படங்களையும் பதிவேற்றம் செய்ய முயற்சிக்கவும். நீங்கள் பதிவேற்றம் செய்யும் புத்தகம் ஏற்கனவே வெளியிடப் பட்டிருந்தால், நிச்சயம் அதன் படங்கள் இணையத்தில் கிடைக்கலாம், அவற்றை சேர்க்கவும். அல்லது புத்தக ஆசிரியரின் படத்தையோ, அல்லது புத்தகம் தொடர்பான படத்தையோ ஏற்றலாம்.

4) முன்பு நீங்கள் பதிவேற்றம் செய்த மின்புத்தகங்கள் ஒழுங்காக மீண்டும் சேர்க்கப் படாமல் இருந்தால், நீங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்து விட்டு, பழைய பதிவேற்றத்தை நீக்க தனிமடல் அனுப்பலாம், அல்லது பழைய பதிவேற்றத்தை திருத்தி மீண்டும் பதிவேற்றம் செய்யும் அனுமதியை குறிப்பிட்ட நாட்களுக்கு வேண்டி தனிமடல் அனுப்பலாம்.

5) ஒவ்வொரு மின்புத்தகங்கள் பற்றியும் கருத்துக்களை பதிய இடம் கொடுக்கப் பட்டுள்ளது. அதை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

6) புதிய மின்புத்தகங்கள் வேண்டுவோர் புத்தக களஞ்சியம் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=67) பகுதியில் நமது உறுப்பினர்களிடம் அந்த்ய புத்தகங்கள் வேண்டி வேண்டுகோள் பதிக்கலாம்.

7) நீங்கள் பதிவேற்றம் செய்யும் முன், நீங்கள் பதிவேற்றம் செய்ய நினைக்கும் புத்தகம் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப் பட்டு விட்டதா, என்று ஒருமுறை பார்த்து விட்டு பதிவேற்றம் செய்யவும்.

8) பதிவிறக்கம் செய்யும் வசதியை தவறாக உபயோகப் படுத்துவதை தவிர்க்க ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கு நடுவே ஒன்று அல்லது இரண்டு நிமிடம் இடைவெளி அவசியம்.


உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..

இராசகுமாரன்.

leomohan
10-12-2006, 05:36 AM
மிக்க நன்றி இராசகுமாரன். ஆம் மதுரை புத்தகங்கள் இணையத்திலே வேறு இடங்களில் கிடைப்பதால் இங்கும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

அறிஞர்
11-12-2006, 06:31 PM
மீண்டும் புத்தகங்களை பரிமாறிக்கொள்ள நல்ல சந்தர்ப்பம்.....

இளசு
13-12-2006, 10:15 PM
தலைவருக்கு நன்றி.

வேறு இலவச தளங்களில் கிடைக்கும் நூல்களுக்கு சுட்டி மட்டும் போதுமே.. இங்கு பதிவிறக்கத்தைத் தவிர்க்கலாம்.

பொருளாதார, அறிவியல் நூல்கள்- தேவையிருப்பின் ஆங்கிலத்திலும் தரலாம் எனக் கருதுகிறேன். நன்றி.

thoorigai
03-01-2007, 07:48 AM
நிர்வாக அன்பர்களே!

மின்புத்தக பதிவேற்றம் (அப்லோட்) செய்வது குறித்து ஏதும் திரி (கள்) / குறிப்பு (கள்) இருப்பின், தயை கூர்ந்து தெரிவிப்பீரா?