PDA

View Full Version : ரேடியோ டாக்சி



akilan
09-12-2006, 01:51 PM
"அது என்னங்க ரேடியோ டாக்சி!"

"விசயம் தெரியாதா உங்களுக்கு? வரும் 2010 -ஆம் ஆண்டுக்குள், தலைநகர் டெல்லி, ரேடியோ டாக்சிகளோட கலக்கப் போகுது."
- என்ற கவர்ச்சிகரமானத் தகவலை கேட்டதும் - சரி நம்ம மன்றத்து நண்பர்களுக்கும் தெரிவிப்போமே என்று கூகிள் செய்தியில் தேடிய போது கிடைத்தவைகளின் தொகுப்பு தாங்க கீழே உள்ளவை.

வரும் 2010 -ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் டெல்லியில் நடைபெற உள்ளன. இவற்றிற்கு முன்பாக தலைநகரில் 10,000 நவீன உயர்தர ரேடியோ டாக்சிகளை உலாவரச் செய்ய டெல்லி அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் முதல்கட்ட அறிமுகத்தைக் கொடி அசைத்து துவங்கி வைத்திருக்கிறார், டெல்லி போக்குவரத்து அமைச்சர் ஹரூண் யூசுப்.

காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக பொதுமக்களின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கான அரசு திட்டங்களின் ஒரு பகுதியே இது என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த புதிய டாக்சிகளில் குளோபல் பொசிசனிங் சிஸ்டம், ரேடியோ, அவசர உதவிக்கு அலாரம் ஆகியவைப் பொருத்தப்பட்டு இருக்கும். குளோபல் பொசிசனிங் சிஸ்டம் என்பதன் துணையோடு வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இந்த கருவிகள் தற்போது பல சரக்கு கையாளும் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கிலோமீட்டருக்கு ரூ. 15 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ள இவற்றிற்கான முன்பதிவுகளை இணையம் வழியே மேற்கொள்ளலாம் என்பதும், கடன் அட்டைகளைத் தேய்க்கும் வசதியும் இவற்றில் இருக்கும் என்பதும் சுவாரசியமான தகவல்களாக உள்ளன.

அடுத்த மார்ச் மாதத்திற்குள் 500 வாகனங்களைப் பயன்பாடிற்குக் கொண்டு வர மூன்று தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் - டெல்லியின் சுறுசுறுப்பை.

"அட நம்ம ஊர் கால் டாக்சிய கொஞ்சம் கலக்கலா விட்டிருக்காங்கன்னு சொல்லு." சுருக்கமாகச் சொன்னார் நண்பர் ஒருவர்.

"புரிந்து கொண்டால் சரிதான், அண்ணாச்சி!"

இளசு
09-12-2006, 10:47 PM
நல்ல செய்தி. மற்ற (மா)நகரங்களுக்கும் பரப்பப்படவேண்டிய வசதி.

நன்றி அகிலன்..

மன்மதன்
10-12-2006, 10:22 AM
நல்ல முன்னேற்றம். வரவேற்கத்தக்கது.

அறிஞர்
11-12-2006, 06:50 PM
நாட்டின் முன்னேற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது. வளரட்டும் பாரதம்.

GPS உண்மையிலே உபயோகமான விசயம்.

omnlog03
22-01-2007, 11:07 AM
துபாயில் உள்ளது போலவா?

Narathar
22-01-2007, 12:08 PM
அட! அந்த ஸிஸ்டம் இப்பதான் அங்க அறிமுகமாக்குக்கின்றார்களா?
நம்ம இலங்கையில் எப்பவோ இருக்கே

ஷீ-நிசி
22-01-2007, 01:36 PM
பலமுறை படித்தும் புரியவில்லை. என்ன சிஸ்டம் இது. நம் ஊரில் கால் டாக்ஸி உள்ளது. அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் நண்பர்களே!