PDA

View Full Version : பதிவாளர்கள் கவனத்துக்கு.இளசு
08-12-2006, 08:12 PM
பதிவாளர்கள் கவனத்துக்கு

அன்பு நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்.


உங்கள் பதிவுகளை சரியான மன்றப்பகுதியைத் தேர்ந்து பதியுங்கள்.
சந்தேகம் இருப்பின் மேற்பார்வை, உதவி, நிர்வாகக்குழுவினரைத்
தனிமடல் மூலம் அணுகுங்கள்.

இன்று கணினிப்பாடங்கள், சந்தேகங்கள் பகுதியில் இருந்து சில திரிகளை தமிழும் இணையமும் ( தகவல்கள்) பகுதிக்கு மாற்றியுள்ளேன்.

மேலும் அறிமுகப்பகுதி தவிர மற்ற இடங்களில் முழுதாய்
தமிழில் (மட்டுமே) பதிக்க வேண்டுகிறேன்.

தேவையின்றி முழுப்பதிவையும் Quote செய்வதைத் தவிருங்கள்.
ஒரு நீண்ட பதிவுக்கு அடுத்த கருத்து சொல்ல வரும்போது, மீண்டும் முழுப்பதிவை மேற்கோள் காட்டுவது தேவையற்றது..

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..

.

omnlog03
21-01-2007, 01:55 PM
Nanri Nanbarey...
Naan inrudhan chernthullen... ovvoru padiyaga chenru paarkiren...

ஓவியா
21-01-2007, 03:15 PM
அப்படியே ஆகட்டும்

நன்றி

மதுரகன்
21-01-2007, 03:35 PM
உங்கள் கருத்துக்களை ஏற்று நடக்கின்றேன்..

நன்றி

ஷீ-நிசி
21-01-2007, 04:16 PM
அப்படியே ஆகக்கடவது நண்பரே!

farhan mohamed
22-01-2007, 05:49 AM
சிறந்த ஆலோசனை ஏற்றுக் கொள்கிறோம்.

praveen
20-02-2007, 10:26 AM
இதுவரை இந்த திரியை நான் கண்ணுற்றிருக்கவில்லை. அதனால் இது எனது தாமதமான பதிவு. நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழிமுறைப்படி தான் பிழையில்லாமல் பதிவுகள் செய்து கொண்டிருக்கிறேன்.

ஏற்கெனவே பதிந்ததில் பிழை இருந்தால், அதை கண்டவுடன் திருத்தம் அழுத்தி பிழை நீக்கினால் கூட போதும். ஏனென்றால் ஒரே முறையில் பிழை இல்லாமால் பதிப்பது என்பது எல்லாரோலும் முடியாத செயல்.

ஆனால் நண்பர்கள் சிலர் பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பழைய பிழைகளை திருத்தும் நேரத்தில் புதிதாக இன்னும் சில பதிவுகள் இடலாமே என்று நினைக்கின்றனர்.

பிழையில்லாத பதிவுகள் போலவே, நமது மன்றத்தில் இன்னும் சில விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். இதை விதிமுறையாக நினைக்காமல் நமது மனமாற்றமாக இருக்க வேண்டும்.

1)ஒருவரே ஒரே திரியில் அடுத்தவர் பதியும் முன் பதிக்க நேர்ந்தால் முதலில் பதிந்ததை திருத்தம் செய்து தான் கூடுதல் கருத்து பதிக்க வேண்டும்.

2)திரியின் தலைப்பு, மையக்கருத்துக்கு துளி கூட சம்பந்தமில்லாமல் திரியில் பதிவுகள் இடுவது (அதாவது வெட்டி அரட்டை) கூடாது.

3)திரியில் அடுத்தவர் பதிவை மேற்கோள் ஒரு முழம் நீழத்திற்கு காட்டி பின் தனது கருத்தாக ஒரு வரியில் பதில் பதிதல் கூடாது.

4)தளத்தில் ஒரே பகுதி திரிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் நேரம் கிடைக்கும் போது மற்ற பகுதிகளில் உள்ளவற்றிலும் சென்று பார்த்து சில பதிவுகள் இட்டு திரி (உண்மையிலே சொந்த தட்டச்சில் செய்திருப்பவரை)பதிந்தவரை ஊக்குவிக்க வேண்டும்.

மனோஜ்
20-02-2007, 12:25 PM
தலைவர் ஆனை பின்பற்றும் சேனை

மயூ
22-02-2007, 06:33 AM
அதே அதே கேட்டு நடக்கின்றோம்... :)

க.கமலக்கண்ணன்
26-02-2007, 03:59 AM
அவ்வாறே செய்கிறோம், நான் இந்த தளத்திற்கு பதிது. நீங்கள் சொன்னபடி செய்கிறேன். ஏதாவது சந்தேகம் வந்தால் உங்களை தனி மடலில் தொடர்பு கொள்கிறேன். மிக்க நன்றி !

அறிஞர்
26-02-2007, 02:34 PM
அனைவரும் சரியாக செய்தால், படிப்பவருக்கு நன்றாக இருக்கும்.

மன்மதன்
26-02-2007, 05:52 PM
தேவையின்றி முழுப்பதிவையும் Quote செய்வதைத் தவிருங்கள்.
ஒரு நீண்ட பதிவுக்கு அடுத்த கருத்து சொல்ல வரும்போது, மீண்டும் முழுப்பதிவை மேற்கோள் காட்டுவது தேவையற்றது..


இதை அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளவும். பல இடங்களில் இது மாதிரி பார்த்தேன். படங்களை மேற்கோள் காட்டுவதை கூடுமானவரை தவிர்க்கலாம்..

ஓவியன்
24-03-2007, 08:16 AM
ஆலோசனைக்கு தலை வணங்குகிறேன்!.

அன்புரசிகன்
24-03-2007, 09:01 AM
பொதுவாக நான் கவிதைகள் விவாதங்களில் விமர்சனம் செய்யும் போது அவர்களின் ஒவ்வெருவரிகளுக்கும் விமர்சிப்பேன். விமர்சனம் செய்யாத வரிகளை நீக்கி விடுவேன். இது தவறோ தெரியவில்லை.
உ+ம்: 1 (http://www.tamilmantram.com//vb/showthread.php?t=8314&page=24) - 2 (http://www.tamilmantram.com//vb/showthread.php?p=184234&posted=1#post184234)

தவறாயின் கூறவும். மற்றும் மேற்கோளின் அளவு (quote text font size) குறைவாக பதிக்கக்கூடியவாறு வடிவமைப்பாளர்கள் மாற்றிட முடியாதா?

பிரசாத்
26-03-2007, 05:57 AM
நன்றி இளசு அவர்களே,

தங்களின் அறிவுரையின் படி நடந்துக் கொள்கிறேன். எனக்கு இ-கலப்பை மூலம் நன்றாக தமிழ் எழுத தெறியும் என்பதால் என் பதிப்புகள் அனைத்தும் தமிழிலேயே பதிக்கிறேன்.

நன்றி
பிரசாத்

வாசகி
08-05-2007, 03:43 PM
மன்றத்தின் புதிய வரவு நான். உங்கள் ஆலோசனைப்படி நடக்க முயற்சிக்கின்றேன். முயற்சிப்பது என்ன. முயற்சிப்பது. நடக்கின்றேன். எனது அறிமுகப்பகுதியில் சிலவற்றை மேற்கோடிட்டிருக்கின்றேன். இப்போதே அவற்றை நீக்கிவிடுகின்றேன்.

சூரியன்
18-05-2007, 06:22 AM
நன்றி இளசு அவர்களே,

தங்களின் அறிவுரையின் படி நடந்துக் கொள்கிறேன். எனக்கு இ-கலப்பை மூலம் நன்றாக தமிழ் எழுத தெறியும் என்பதால் என் பதிப்புகள் அனைத்தும் தமிழிலேயே பதிக்கிறேன்....

விகடன்
30-05-2007, 05:44 PM
ஆமாம் ஐயா,
உங்களின் தகவலை பின்பற்றுகிறோம்.

அனுராகவன்
21-02-2008, 12:37 AM
நன்றி இளசு..
பின்பற்ற முயல்வோம்.

srisha
16-03-2008, 12:48 PM
இனி உங்கள் கருத்துக்களை ஏற்று நடக்கின்றேன்

SathyaThirunavukkarasu
24-03-2008, 11:10 AM
இனி உங்கள் கருத்துக்களை ஏற்று நடக்கின்றேஒம், மன்றத்தின் புதிய வரவு நான். உங்கள் ஆலோசனைப்படி நடக்க முயற்சிக்கின்றேன. தமிழ் தட்டச்சு கொஞஜம கடினமாக உள்ளது மட்றபட வேரொன்ருமில்லை

அமரன்
24-03-2008, 11:15 AM
தமிழ்மன்றம் ஒரு நல்ல இணைய எழுதுபலகை. நீங்களும் விரைவில் நன்றாக எழுதுவீர்கள் சத்யா. அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. கட்டுக்கோப்பான மன்றத்துக்கு ஒத்தாசையாக இருப்பேன் என்ற உங்கள் உறுதி மொழிகண்டு பெருமகிழ்ச்சி. நன்றியும் வாழ்த்தும்.

சிவா.ஜி
24-03-2008, 06:44 PM
இனி உங்கள் கருத்துக்களை ஏற்று நடக்கின்றேஒம், மன்றத்தின் புதிய வரவு நான். உங்கள் ஆலோசனைப்படி நடக்க முயற்சிக்கின்றேன. தமிழ் தட்டச்சு கொஞஜம கடினமாக உள்ளது மட்றபட வேரொன்ருமில்லை
என்னங்க இது இன்னும் தமிழ் தகறாரா....நாளைக்கு மீண்டும் வரேன்...ஆனா சாப்பாடு ரெடியா இருக்கனும்....நாமே சமைச்சு நாமே சாப்ட்டு போராயிடிச்சி....வந்து சொல்லித்தாரேன்....ஒரே ஊர்க்காரராயிட்டீங்க இது கூட செய்யலன்னா....எப்படி.....

meera
25-03-2008, 10:15 AM
அப்படியே செய்கிறோம் அண்ணா.