PDA

View Full Version : நாணமெடுத்து உடுத்திக் கொள்கிறேன்!ப்ரியன்
08-12-2006, 08:28 AM
http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Naanam_Uduththugirean.jpg

http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Pudavai_Kathai.jpg

http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Malligai_Kathai.jpg

மெல்ல மெல்ல
ஆடை விலக்குகிறாய்!
வேகமாய் நாணமெடுத்து
உடுத்திக் கொள்கிறேன் நான்!

*

வாங்கி வந்த
புடவை அழகாயிருக்கிறது
எப்படி தேர்ந்தெடுத்தாய் என்றேன்!
'என் தேவதைக்கான புடவை என்றேன்;
நான் நீ என எல்லா புடவைகளும் ஓடி வந்தன!
மீண்டுமொருமுறை ஆழுத்திச் சொன்னேன்
என் தேவதைக்கான புடவை என்று!
இதனை முன்னுக்குத் தள்ளி மற்றது எல்லாம்
மூக்கை உறிஞ்ச ஆரம்பித்துவிட்டன'
என்கிறாய்!
முகமெல்லாம் வெட்கம் வடிய
நெஞ்சோடு சாய்ந்துக் கட்டிக் கொள்கிறேன் நான்!

*

வரும்போது
மல்லிகை கேட்டிருந்தேன்!
மறந்தவனிடம்
பேச மறுத்து
'உம்'மென்றிருந்தவளிடம்!
சிரி!ஒரே ஒரு நிமிடம் சிரி
என கேட்டவனுக்காக
ஒப்புக்கு சிரித்து வைக்க
பிச்சைப் பாத்திரமாக கையை வைத்தவன்
மும்மரமாய் நூலெடுத்து
பூ கட்டுபவனாய்
இடம்பார்த்து அமர்கிறான்!
கடவுளே,
இவனிடமெப்படி கோபம் காட்ட துணிந்தேன்!

- ப்ரியன்.

guna
09-12-2006, 05:29 AM
அருமை நன்பரே...
வேற எப்படி சொல்றதுன்னு தெரியல, ஒவ்வொரு வரிகளும் அப்படியே..
வார்தைகளை கையாண்டிருக்கும் விதம்=அழகு

வாழ்த்துக்கள், படித்து படித்து வியக்க இன்னும் இன்னும் வாய்ப்புக் கொடுங்கள்..

gragavan
09-12-2006, 09:32 AM
மிக அருமை. ருசித்தேன் அதை நான் ரசித்தேன். ஆனால் இது போதாதெனப் பசித்தேன்.

sriram
09-12-2006, 01:10 PM
பிரியன் .. ஒரு மார்க்கமாதான் கிளம்பிட்டீங்க.. சுவையாக இருக்கு..

meera
09-12-2006, 01:42 PM
வார்த்தைகள் வரவில்லை கவிதை பற்றி சொல்ல

கவிதையின் வெளிப்பாடு அழகாய்,அருமையாய்...

இளசு
09-12-2006, 10:39 PM
காதல் என்னும் மயன் புகுந்தால்
மனமாளிகை எவ்வளவு அழகு!

அசத்தல்.. தொடருங்கள் ப்ரியன்..!

--------------------------------------

புறநானூற்றிலும் நாணம் ஆடையாகிறது..
வேறு சூழலில்....

வறுமை சொல்ல நாணம்

மூலம்: புலவர் ஆவுர் மூங்கில்கிழார்
( எளிய வடிவம் - என்னுடையது)

வறுமையா யார் சொன்னது
செம்பட்டு மறைக்குமே என் மனைவி மேனி
நாணமே ஆடை

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=550

பென்ஸ்
10-12-2006, 10:22 AM
ப்ரியன்..

வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு முதிர்ச்சி தெரியும், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேவைகள்... முக்கியமானவைகள் மாறும்...

காதல் இதில் ஒரு பகுதி... இது இப்போதுதான்.. அப்போதுதான் வரனும் என்று இல்லைதான், ஆனால் வரும் போது இதுவும் ஒரு பரிமானவளர்ச்சி கொண்டிருக்கும்...
கண்டு...
பட்டு...
தொட்டு..
உணர்ந்து...
மணந்து..
புணர்ந்து...

சில அவசர குடுக்கைகள் சில பகுதிகளை கடந்தாலும் எப்போதோ... எங்கோ இந்த நிலைகளை கடந்தே ஆகவேண்டும்....

கவிதை மட்டும் அல்ல, கவிதையில் காணும் காதலும் சரியாய் பரிமாண வளர்ச்சியோடு....

வாழ்த்துகள்.....

நடை இலக்கணம் மீறா கவிதையும்
வாழ்க்கை இலக்கணம் மீறா காதலும்
என்றும், என்றேன்றும் சுவையாய்....

leomohan
10-12-2006, 10:30 AM
சிரி!ஒரே ஒரு நிமிடம் சிரி
என கேட்டவனுக்காக
ஒப்புக்கு சிரித்து வைக்க
பிச்சைப் பாத்திரமாக கையை வைத்தவன்
மும்மரமாய் நூலெடுத்து
பூ கட்டுபவனாய்
இடம்பார்த்து அமர்கிறான்!
கடவுளே,
இவனிடமெப்படி கோபம் காட்ட துணிந்தேன்!

- ப்ரியன்.

அருமையான வரிகள் ப்ரியன்.

arun
11-12-2006, 08:19 AM
என்னவொரு அருமையான வரிகள்? பாராட்ட திடீரென்று வார்த்தைகள் கிடைக்கவில்லை நண்பரே வாழ்த்துக்கள்

gragavan
11-12-2006, 08:30 AM
கண்டு...
பட்டு...
தொட்டு..
உணர்ந்து...
மணந்து..
புணர்ந்து...

சில அவசர குடுக்கைகள் சில பகுதிகளை கடந்தாலும் எப்போதோ... எங்கோ இந்த நிலைகளை கடந்தே ஆகவேண்டும்....
யாரந்த அவசரக் குடுக்கை...அந்த அவசரக்குடுக்கைக்குக் கேட்டதைக் குடுக்கை யார்?

பென்ஸ்
11-12-2006, 08:56 AM
ராகவன் அது யாருன்னு உங்களுக்கு தெரியாதா என்னா???? :-)

gragavan
11-12-2006, 09:08 AM
ராகவன் அது யாருன்னு உங்களுக்கு தெரியாதா என்னா???? :-)
நீங்க சொன்னாத் தெரியும் ;-)

mayan
03-01-2007, 04:50 PM
இதில் எனக்குப் பிடித்தது முதல் கவிதை.

ஷீ-நிசி
03-01-2007, 05:13 PM
ப்ரியன் உங்கள் கவிதைகள் நிறைய படித்துள்ளேன்... எல்லாமே மிக மிக அருமையாக உள்ளது.. அதிலும் புடவை கவிதை... அக்மார்க் ரகம்