PDA

View Full Version : எனை முழுதும் எடுத்துக் கொள்!



ப்ரியன்
08-12-2006, 04:41 AM
http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Ini_Yenge.jpg

http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Perumai_Yenakku.jpg

http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Ennaiyae_Edu.jpg

ஆர்வமாய்
தொலைக்காட்சி பார்த்திருக்கையில்
வா!வந்து
வந்தமர்ந்துக் கொள்ளென
மடியில் அமர்த்திக் கொள்கிறாய்!
போ!
இனியெங்கே தொலைக்காட்சி பார்ப்பது!

*

என்னைப் பற்றி
எழுதுவதில் அல்ல!
உன் முதல் வாசகி என்பதிலேயே
பெருமையெனக்கு!

*

விடுமுறை நாளொன்றில்
நண்பிகளுடன் சுற்றி அலைந்து
களைத்து திரும்புமிவளுக்கு
பிடித்த பட்சணத்தை தயாரித்து
சுட சுட பரிமாறுகிறாய் -
ஒரு தாயின் கரிசனத்தோடு
டேய்!உனதன்புக்கு இணையாய்
என்னடா தந்துவிடுவேன் உனக்கு!
வா!வந்து
எனை முழுதும் எடுத்துக் கொள்!

- ப்ரியன்.

pradeepkt
08-12-2006, 05:20 AM
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் குஷ்பூ கமலிடம் இதே வசனத்தைச் சொல்வார். "ஓகே கமான் டேக் மீ"

அந்த காமேஸ்வரக் கமல் உடனே "நீ என்ன பட்சணமா?" என்பார். உங்கள் தபூசங்கர் டைப் கவிதை எல்லாமே காதல் கோலம்.

ம்ம்ம்ம்...
பக்கத்திலேயே இருக்கையில்
எதற்கு
தொலைக்காட்சி?

மதி
08-12-2006, 06:00 AM
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் குஷ்பூ கமலிடம் இதே வசனத்தைச் சொல்வார். "ஓகே கமான் டேக் மீ"

அந்த காமேஸ்வரக் கமல் உடனே "நீ என்ன பட்சணமா?" என்பார். உங்கள் தபூசங்கர் டைப் கவிதை எல்லாமே காதல் கோலம்.

ம்ம்ம்ம்...
பக்கத்திலேயே இருக்கையில்
எதற்கு
தொலைக்காட்சி?
அதனால தானோ
தொ(ல்)லைக் காட்சி..!

ப்ரியன்..கவிதைகள் எல்லாம் அற்புதமாய் உள்ளது..

பென்ஸ்
08-12-2006, 06:57 AM
ஒரு குரூப்பாதான் கிளம்பி இருக்காங்க....

காதல்னு சொல்லிகிட்டு ஒரு கூட்டமும்...
அதை கவிதையால் வளக்க ஒரு கூட்டமும்...
அதை விமர்சிக்க இன்னொரு கூட்டமும்....

ஏன்..?? ஏன்..????

இதுல சினிமா டயலாக்கை வேற எடுத்து கொடுக்கிறார்களாம்....

ஏன்ப்பு.. ஏன்????

கல்யாணகாலம் வந்ததை
கட்டியம் சொல்லும் கவிதைகள் (நன்றி: இளசு)

பனியாய் , தீயாய்
போர்வையாய், தலையனையாய்
வலியாய், சிறு ஒலியாய்
எல்லாமாய் ஒரு ராட்சசி கிடைக்க வாழ்த்துகள்...

(அதுதான் கிடச்சாச்சுன்னு சொல்லுறிங்களா... சரிதான் போங்க.... )

இளசு
08-12-2006, 08:34 PM
ப்ரியனின் தலைமையில் இங்கே
ஒரு காதல் திருவிழா..

ஊர்வலத்தில் சில குரல்கள் உற்சாகமாய்..

நடக்கட்டும் நண்பர்களே..

அனைவருக்கும் முன் வாழ்த்துகள்!

leomohan
09-12-2006, 05:16 AM
சீரியல் பார்த்துக்கிட்டே ஃபிகர் அழுதாலும் ரோமான்ஸ் பண்ணலாம்னு சொல்றீங்க. சரிதான். கன்னத்தில் முத்தமிடுவதற்கு முன் இயற்கை க்ளிசரினை தொடைக்கனுமே. :)