PDA

View Full Version : ஏர்டெல்



akilan
08-12-2006, 04:37 AM
ஏர்டெல் நிறுவனம் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக அமெரிக்காவில் ஏர்டெல் கால்ஹோம் சர்வீஸ் என்ற சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் இந்தியாவிலிருக்கும் எந்த செல்பேசிக்கும் அல்லது லேண்ட்லைன் தொலைபேசிக்கும் 7.9 சென்ட் கட்டணத்தில் அழைப்பு மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.

இந்த சேவை தற்போது ப்ரீபெய்ட் முறையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டுமின்றி பல நாடுகளில் வாழும் இந்தியர்கள் உறவினர்களோடு தொடர்பு கொள்ள இணைய வழி குரல் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இணையத்தில் செலவும் குறைவும். ஆனால் இணையத் தொடர்பு என்பது பெருநகர் பகுதிகளில் மட்டுமே வளர்ந்திருப்பதால் புறநகர் மற்றும் கிராம மக்களைக் கவர தொலைதொடர்பு நிறுவனங்கள் இதுபோன்ற கட்டணக் குறைப்பு மேற்கொண்டு வருகின்றன.

மன்மதன்
08-12-2006, 05:57 AM
நல்ல விசயம்.

meera
08-12-2006, 07:23 AM
தகவலுக்கு நன்றி அகிலன் அண்ணா.

karikaalan
08-12-2006, 08:54 AM
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்த சேவையை 2004-லிருந்தே தொடங்கிவிட்டார்களே!

mukilan
08-12-2006, 12:57 PM
ஆமாம். ரிலையன்ஸ் சேவை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ரிலையன்ஸில் இந்தியாவிற்கு அழைக்க நிமிடத்திற்கு 12.9 செண்ட் (13.9 கனடா செண்ட்) என்று நினைக்கிறேன். ஆனால் ஏர்டெல் 7.9 செண்ட் என்பதால அவர்களும் விலை குறைப்பார்கள் என நம்புவோமாக.

அறிஞர்
08-12-2006, 03:05 PM
நல்ல தகவல்..... ஆனால் அவர்களின் தளம் திறக்க வெகு நேரம் ஆகிறது.

ரிலையண்ஸ் உபயோகிக்கிறேன்... நன்றாக உள்ளது.

startech என்ற தளமும் நன்றாக உள்ளதாம்.