PDA

View Full Version : ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்பாரதி
07-12-2006, 05:39 PM
ஆங்கிலம் - நிகரான தமிழ்ச் சொல்
album தொகுப்பு
algorithm வழிமுறை
alphanumeric எண்ணெழுத்து
animation அசைவூட்டம்
anti virus நச்சு நிரற் கொல்லி
application செயலி
architecture கட்டமைப்பு
archive பெட்டகம்
audio ஒலி
backspace பின்னழிக்க, பின்வெளி
blog வலைப்பதிவு
boot தொடக்கு
browser உலாவி
cache memory பதுக்கு நினைவகம்
compact disc (CD)இறுவட்டு
CD player குறுவட்டு இயக்கி
character வரியுரு
clear துடை
click சொடுக்கு
client வாங்கி
code நிரற்தொடர்
column நிரல், நெடுவரிசை
configuration அமைவடிவம்
console முனையம்
cookie நினைவி
copy படி எடுக்க, படி (பெயர்ச்சொல்)
cordless தொடுப்பில்லா
cut வெட்டுக
cyber மின்வெளி
data தரவு
delete அழிக்க
design வடிவமைப்பு
digital எண்முறை
discovery கண்டறிதல்
driver இயக்கி
edit தொகுக்க
firewall அரண்
floppy நெகிழ்வட்டு
folder உறை
format வடிவூட்டம், வடிவூட்டு
function செயற்பாடு
gallery காட்சியகம்
graphics வரைகலை
guest வருனர்
home முகப்பு, அகம்
homepage வலையகம், வலைமனை
icon படவுரு
information தகவல்
interface இடைமுகப்பு
interpreter வரிமொழிமாற்றி
invention கண்டுபிடிப்பு
IRC இணையத் தொடர் அரட்டை
LAN உள்ளகப் பிணையம்
license உரிமம்
link இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd நிகழ் வட்டு
log in புகுபதிகை, புகுபதி
log off விடுபதிகை, விடுபதி
media player ஊடக இயக்கி
menu பட்டியல்
microphone ஒலிவாங்கி
network பிணையம், வலையம்
object பொருள்
offline இணைப்பறு
online இணைப்பில்
package பொதி
password கடவுச்சொல்
paste ஒட்டுக
patch பொருத்து
plugin சொருகு, சொருகி
pointer சுட்டி
portal வலை வாசல்
preferences விருப்பத்தேர்வுகள்
preview முன்தோற்றம்
processor முறைவழியாக்கி
program நிரல்
proprietary தனியுரிம
RAM நினைவகம்
refresh மீளேற்று
redo திரும்பச்செய்க
release வெளியீடு
repository களஞ்சியம்
row நிரை, குறுக்குவரிசை
screensaver திரைக்காப்பு
server வழங்கி
shortcut குறுக்குவழி
settings அமைப்பு
shutdown அணை
sign in புகுபதிகை, புகுபதி
sign off விடுபதிகை, விடுபதி
skin ஆடை
space வெளி, இடைவெளி
speaker ஒலிபெருக்கி
spreadsheet விரி தாள்
subtitle உரைத்துணை, துணையுரை
system கணினி
tab தத்தல்
table அட்டவணை
terminal முனையம்
theme கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail சிறுபடம்
undo திரும்பப்பெறுக
update இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade மேம்படுத்து, மேம்படுத்தல்
URL முகவரி
version பதிப்பு
video நிகழ் படம்
view பார்க்க
virus நச்சு நிரல்
volume ஒலியளவு
wallpaper மேசைப்பின்னணி
window சாளரம்
wireless கம்பியில்லா
wizard வழிகாட்டி
worksheet பணித் தாள்

நன்றி: விக்சனரி மடற்குழு

paarthiban
07-12-2006, 06:09 PM
மிக மிக பயனுள்ள கட்டுரை. நன்றி பாரதி சார்

pradeepkt
08-12-2006, 04:27 AM
அருமை அருமை அருமை.
அண்ணா, இதே போல் பயனுள்ள தொகுப்புகள் பல கொடுங்க.

akilan
08-12-2006, 05:46 AM
பயனுள்ளவை. நன்றி நண்பரே!

meera
08-12-2006, 06:05 AM
தெரியாதவை தெரிந்து கொண்டேன்.

தொகுப்புக்கு நன்றி அண்ணா.

மன்மதன்
08-12-2006, 06:55 AM
நல்ல பயனுள்ள தகவல்.நன்றி பாரதி.

பாரதி
10-12-2006, 03:17 AM
கருத்துக்களுக்கு மிக்க நன்றி பார்த்திபன்,பிரதீப்,அகிலன், மீரா, மன்மதன்.

உங்கள் பாராட்டுக்கள் எல்லாம் விக்சனரி தமிழ் மடற்குழுவுக்குத்தான் உரித்தானவை.

ஓவியா
10-12-2006, 03:32 PM
படித்தேன்.
பல அரிய கணினி சொற்களை தெரிந்தும் கொண்டேன்

பாரதியண்ணா,
நீங்கள் அருமையான எழுத்தாளர்
இதைபோல் பதிவுகள் அடிக்கடி தொடர வேண்டும்

நன்றி அண்ணா
நன்றி: விக்சனரி மடற்குழு

franklinraja
11-12-2006, 08:47 AM
கணினிக்கும், தமிழுக்கும் தொண்டு செய்த
நண்பருக்கு நன்றி..! ;)

leomohan
11-12-2006, 09:07 AM
இந்த தளமும் (http://tamilcomputing.etheni.com) சென்ற பாருங்களேன்.


http://tamilcomputing.etheni.com (http://tamilcomputing.etheni.com)

பாரதி
11-12-2006, 05:40 PM
அன்பு ஓவியாவிற்கும்,ஃபிராங்க்ளின்ராஜாவுக்கும் நன்றி.

அன்பு மோகன்,
நீங்கள் தந்திருக்கும் சுட்டி மிகவும் அருமையான தளம். மிகவும் நன்றி.

ஒரே ஒரு சந்தேகம். ஆங்கிலத்திலிருந்து மொழிமாற்றம் செய்யும் போது ஒவ்வொருவரும் தத்தம் வழியில் மாற்றம் செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருங்குறி போல இதற்கும் ஏதாவது வகையில் தமிழ் ஆர்வலர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளதா...?

leomohan
11-12-2006, 05:59 PM
அன்பு ஓவியாவிற்கும்,ஃபிராங்க்ளின்ராஜாவுக்கும் நன்றி.

அன்பு மோகன்,
நீங்கள் தந்திருக்கும் சுட்டி மிகவும் அருமையான தளம். மிகவும் நன்றி.

ஒரே ஒரு சந்தேகம். ஆங்கிலத்திலிருந்து மொழிமாற்றம் செய்யும் போது ஒவ்வொருவரும் தத்தம் வழியில் மாற்றம் செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருங்குறி போல இதற்கும் ஏதாவது வகையில் தமிழ் ஆர்வலர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளதா...?

சரியாக சொன்னீர்கள் பாரதி, மைக்ரோஸாஃப்ட், கூகிள் மற்றும் பல தளங்கள் சுயமாக பங்களிப்பவர்களின் உதவியோடு தமிழாக்கி வருகிறது.

யாஹூவில் ஒரு குழு தமிழ் யூனிகோட் சீராக்கும் பணியில் உள்ளது. தமிழக அரசும் இதில் இறங்கியுள்ளது.

ஆகையால் சற்று குழப்பம் தான். இதில் வருந்ததக்க விஷயம் என்னவென்றால் தமிழ் மொழிபெயர்ப்பில் நாம் பின் தங்கியுள்ளோம்.

நல்ல விஷயம் என்னவென்றால் Standards பின்பற்றாவிட்டாலும் தமிழ் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டோமே என்பது தான்.

இதேனீ தளத்தில் தவறானவற்றை திருத்தலாம். புதிய மொழிபெயர்ப்பு தரலாம். அனைவரும் பங்களியுங்களேன். http://wiki.etheni.com சென்று ஒரு கணக்கு துவங்கி அங்கு பங்களிக்கலாம்.

மனோஜ்
18-01-2007, 02:17 PM
அறுமையான பதிவு
ஆனால்
my computer
c drive
networke card
sound card
registry
Synchronize
Windows Explorer
போன்ற வார்த்தைகளுக்கு இல்லையே

மன்மதன்
05-02-2007, 09:05 PM
File என்பதற்கு தமிழில் என்ன? (கோப்பு..?)

அறிஞர்
05-02-2007, 09:17 PM
தமிழ் மேலும் வளர்கிறது...

பாரதி, மோகன் தகவல்களுக்கு நன்றி.. தேவைப்படும் போது உபயோகிக்கிறோம்.

மீனாகுமார்
14-02-2007, 05:29 PM
அருமையான தொகுப்பு.

கீழே உள்ள பக்கங்களையும் பாருங்கள்.


http://www.tamil.net/learn-tamil/tamildic.html
http://www.multilingualbooks.com/onlinedicts-tamil.html
http://www.tamilvu.org - கலைச் சொற்களின் தொகுப்பு அற்புதம்

நாம் தினம் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகளை இணைத்து அவற்றைத் தொகுத்து ஓரிடத்தில் எப்பவுமே வைத்துவிட்டால் தினம் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்... அதற்கு இது சரியான துவக்கம்.

மனோஜ்
15-02-2007, 09:08 AM
Quote:
http://www.tamil.net/learn-tamil/tamildic.html
http://www.multilingualbooks.com/onlinedicts-tamil.html
http://www.tamilvu.org - கலைச் சொற்களின் தொகுப்பு அற்புதம்

பயன் உள்ள பக்கங்கள் நன்றி பல

மயூ
15-02-2007, 04:15 PM
அருமையான தொகுப்பு.

கீழே உள்ள பக்கங்களையும் பாருங்கள்.நாம் தினம் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகளை இணைத்து அவற்றைத் தொகுத்து ஓரிடத்தில் எப்பவுமே வைத்துவிட்டால் தினம் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்... அதற்கு இது சரியான துவக்கம்.
நன்றி மீனாக்குமார்.

அறிஞர்
15-02-2007, 04:34 PM
அருமை மீனக்குமார்... அவற்றை இங்கு கொடுக்கலாமா என யோசிக்கிறேன்..

praveen
22-02-2007, 01:26 PM
அருமையான தொகுப்பு.

கீழே உள்ள பக்கங்களையும் பாருங்கள்.
..........உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. PDF வடிவில் உள்ளவற்றை சேமித்து கொண்டேன்.

drjperumal
22-02-2007, 02:58 PM
இ - புக் பகுதியில் டெச்கினிக்கல் டிக்சனரி உள்லது ஆங்கிலம் தமிழில் சுமார் 128 பக்கம் கொண்டது PDF டவுன் லோட் செய்துகொள்ளவும்

அறிஞர்
22-02-2007, 03:01 PM
இ - புக் பகுதியில் டெச்கினிக்கல் டிக்சனரி உள்லது ஆங்கிலம் தமிழில் சுமார் 128 பக்கம் கொண்டது PDF டவுன் லோட் செய்துகொள்ளவும்
மிகவும் நன்றி டாக்டர்... பலருக்கு உபயோகமாக இருக்கும்.