PDA

View Full Version : MUTE

leomohan
07-12-2006, 05:28 AM
RIAA - Recording Industries Association of America, P2P மென்பொருட்களான edonkey, kazaa, limwire போன்றவற்றை உபயோகித்து மென்பொருள், இசை, திரைப்படங்கள் போன்ற காப்புரிமை தகவல்கள் இறக்குவதற்கு தடைவிதித்து பல வழக்குகள் தொடர்ந்தது.

p2p-ல் உங்கள் IP முகவரியை வைத்து நீங்கள் தான் இந்த காப்புரிமையை மீறியிருக்கிறீர்கள் என்று சொல்லமுடியும். வழக்கும் தொடரமுடியும்.

ஆனால் 26 வயது கொண்ட இளைஞர் MUTE எனும் மென்பொருளை உருவாக்கியுள்ளார். எறும்புகள் உண்பதை பார்த்தே இதை உருவாக்கினேன் என்கிறார்.

அதாவது மென்பொருள் தேடும் நாமெல்லாம் எறும்புகள். ஒருவருக்கு பின் ஒருவராக மறைந்து செல்வதால் நம்முடைய அடையாளங்கள identity க்கு முழு பாதுகாப்பு.

இதோ இந்த சுட்டி
http://mute-net.sourceforge.net/

பாரதி
07-12-2006, 05:14 PM
'சத்தம் போடாமல்' முகவரியை தந்த மோகனுக்கு நன்றி.

மன்மதன்
08-12-2006, 05:53 AM
இதை பயன்படுத்தியிருக்கிங்களா மோகன். எப்படி இருக்கு?

leomohan
08-12-2006, 07:46 AM
இதை பயன்படுத்தியிருக்கிங்களா மோகன். எப்படி இருக்கு?

இதுவரை எனது அலுவலகத்திலிருந்து பார்க்க முடியவில்லை. ஏனென்றால் நெருப்புச்சுவர் காரணமாக இருக்கலாம்.

வீட்டில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

மன்மதன்
08-12-2006, 05:12 PM
இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காட்டுகிறது.

leomohan
08-12-2006, 05:43 PM
இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காட்டுகிறது.

குழப்பம் இல்லாமல் இன்ஸ்டால் ஆகிவிட்டது. ஆனால், தேடும் பொருட்கள் கிடைக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்து சொல்கிறேன் மன்மதன்.

praveen
21-02-2007, 07:00 AM
இதைவிட சூப்பராக torrent மூலமாக அனைத்தும் இலவசமாக பெறலாமே.
நான் எனக்கு தேவைப்படும் அனைத்தும் இதன் மூலமாகவே இனையத்தில் பெறுகின்றேன்.

http://en.wikipedia.org/wiki/BitTorrent

நான் Azureus என்ற ஜாவா client மூலம் சில torrent தளங்களில் மெம்பராக இருந்து அனைத்தும் பெறுகிறேன்.

leomohan
21-02-2007, 07:17 AM
இதைவிட சூப்பராக torrent மூலமாக அனைத்தும் இலவசமாக பெறலாமே.
நான் எனக்கு தேவைப்படும் அனைத்தும் இதன் மூலமாகவே இனையத்தில் பெறுகின்றேன்.

http://en.wikipedia.org/wiki/BitTorrent

நான் Azureus என்ற ஜாவா client மூலம் சில torrent தளங்களில் மெம்பராக இருந்து அனைத்தும் பெறுகிறேன்.

டோரென்ட் மிகவும் மெதுவாக உள்ளது ஆஷோ.

மயூ
21-02-2007, 07:20 AM
முயற்சி பண்ணி விட்டுச் சொல்கின்றேன்...

விகடன்
09-04-2007, 05:27 PM
டோரென்ட் மிகவும் மெதுவாக உள்ளது ஆஷோ.

ஆமாம். நானும் பாவித்திருக்கிறேன். படங்கள் கூட முகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் பெறக்கூடியதாக இருக்கிறது.

அன்புரசிகன்
09-04-2007, 06:08 PM
torrent மிகநேர்த்தியாக வெலைசெய்கிறது. பல திரைப்படங்கள் மென்பொருட்களை இதன்மூலம் பெற்றிருக்கிறேன் அதில் பதிவிறக்கும் வேகத்தைக்கூட கட்டுப்படுத்தலாம். எனக்கு அத நன்றான வேகத்தில் செல்கிறது. Mute ஐ பதிவிறக்கம் செய்கிறென். விமர்சனம் பிறகு.

மயூ
10-04-2007, 03:32 AM

யாருக்காவது உருப்படியா வேலை செய்ததா? எனக்கு வேலை செய்ய வில்லை????

அன்புரசிகன்
10-04-2007, 11:11 AM
யாருக்காவது உருப்படியா வேலை செய்ததா? எனக்கு வேலை செய்ய வில்லை????

அது தான் சொன்னேன். எனக்கு நன்றாக வேலைசெய்கிறது. ஆனால் பழைய torrent files பயன்படுத்தினால் சிலவேளை பிரச்சனைகள் தரலாம். காரணம் torrent ல் பகிர்தல் முறையே கையாளப்படுகிறது. எல்லோரும் பதிவிறக்கி முடித்துவிட்டால் பின்னர் எம்மால் பதிவிறக்கம் செய்யமுடியாது.