PDA

View Full Version : நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டு கடுங்கா



mgandhi
06-12-2006, 05:38 PM
கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிஜேபி முன்னாள் எம்.பி.யுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்து பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன், தண்டனையை அடுத்த மாதம் (ஜனவரி) 31ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் மேதாப் சிங் கில், பல்தேவ் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று உத்தரவிட்டது.

சித்துவுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதிலும், குர்னாம்சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சித்து தாக்கவில்லை என்பதால் 3 ஆண்டு சிறைத் தண்டனையே விதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இளசு
06-12-2006, 07:43 PM
பெரிய தம்பி :குற்றம் செய்தவர் எத்தனை பிரபலமானவர் ஆனாலும் தண்டனை கிடைத்தே தீரும்!

சின்ன தம்பி : குற்றம் செய்துவிட்டு சட்டத்தின் முன் கண்ணாமூச்சி ஆடி பத்து - இருபது வருடம் வெளியே நடமாட முடிகிறது. அதில் சிலர் எம்.பி,, முதல்வர், மத்திய அமைச்சராகவும் ஆகிவிட முடிகிறது!

தாமதமான நீதி - தரம் குறைந்த நீதி!

அறிஞர்
06-12-2006, 08:16 PM
மத்திய அமைச்சராக இருந்தவருக்கே ஆப்பு வைச்சுட்டாங்க....ஒன்று, இரண்டு பேருக்கு தண்டனை கொடுத்தா தானே... நீதி தன் கடமையை செய்கிறது என சொல்லி.. பலர் தப்பிக்க இயலும்

pradeepkt
07-12-2006, 05:05 AM
சித்துவுக்கும் சோர(ம்)னுக்கும் அதிகபட்சத் தண்டனை கொடுக்குமாறு எதிர்த்தரப்பு கேட்டிருந்தது. அதில் அக்குடும்பத்தினருக்கு வருத்தம்தான்.

ஆனாலும் நேத்து சித்து பேசின பேச்சைக் கேட்டிருக்கணுமே நீங்க... அடடா... இதுக்கு முன்னாடியெல்லாம் ரசிக்க முடிந்த அதே பேச்சை நேற்றுக் கேட்டால் வேறு மாதிரி இருந்தது.