PDA

View Full Version : உயர் நீதிமன்றத்தில் தமிழ்



mgandhi
06-12-2006, 05:27 PM
சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 348 (1) பிரிவின் படி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 (2) உடன் இணைந்த 1963 ஆம் ஆண்டு ஆட்சிமொழி சட்டப் பிரிவு 7ன் படி, உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில ஆட்சி மொழியிலேயே நடத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 (2) உடன் இணைந்த 1963 ஆம் ஆண்டு ஆட்சிமொழி சட்டப் பிரிவு 7ன் படி, சென்னை உயர் நீதிமன்றம், மாநில தீர்ப்பாயங்கள் ஆகியவற்றின் அனைத்து நடவடிக்கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அறிஞர்
06-12-2006, 08:17 PM
இது நல்ல விசயம் தான்..

விட்டா நம்மாளுங்க.. சென்னை சிங்கார தமிழில் உரையாடப்போகிறார்கள்.

இளசு
06-12-2006, 08:50 PM
இதுவரை திரைப்படங்களில் மட்டுமே நீதிமன்றக் காட்சிகள் தமிழில்..
இனி நிஜத்திலும்..

பாமரர்களும் ஓரளவு இனி அவற்றை விளங்கிக்கொள்ள முடியும்.

அர்ஜூன் சிங்கும் செம்மொழி ஆணையம் அமைக்க ஒப்புதல் தந்திருக்கிறார்.

எல்லாமே நல்ல செய்திகள்..

நன்றி காந்தி.

pradeepkt
07-12-2006, 05:14 AM
நல்ல தொடக்கம் இது! தமிழ் நாட்டு நீதிமன்றங்களில் தமிழ் புழங்க வழி செய்யும் மசோதா வாழ்க!

இது கொள்கை முடிவுதான். சரியான அளவில் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து சட்டப் புத்தகங்களை மொழி பெயர்க்க வேண்டும்.
அத்தோடு தமிழில் ஆவணம் வேண்டும் என்று கேட்டே வழக்கை இழுத்தடிக்கும் பெரிய மனிதர்களுக்குப் பெரிய ஆப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டம் பலிக்கும்.

ஓவியா
07-12-2006, 03:56 PM
ஆமா,
என்ன கேஸுனுனே தெரியாம உள்ள போற பாமர மக்களுக்கு இது ரொம்ப முக்கியம்தான்....

மொழி விளங்கா ஒரு அப்பாவி தண்டிக்க படக்கூடாது இல்லையா....

திட்டம் பலிக்க வாழ்த்துக்கள்