PDA

View Full Version : வெட்கம் தொத்தி நிற்கும்!



ப்ரியன்
06-12-2006, 08:51 AM
வெட்கம் தொத்தி நிற்கும்!

http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Ithal_innum.jpg

http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Vettkam_Thotthi.jpg

http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Alppam_Nee.jpg

ஒரு பூனையின் சாமார்த்தியத்துடன்
சமையலறை நுழைந்து
பின் அணைத்து
அவன் இதழ் புணர்ந்த
அதிர்வின்று மீளா பேதையிவள்,
ஒன்றுக்கு இரண்டுமுறை
உப்பிட்டுவிட்ட உணவை
உண்டபடியே
ருசிப்பதாய் சொல்கிறான்;
இதழ் இன்னமும்!

*

மாராப்புக்கு
பின்போட்டுக் கொள்ளும் சமயங்களில்;
பின்னாக எனைக் குத்திக் கொள்ளேன் என்று
என்றோ அவன் சொன்ன
ஒற்றைவரி மனம் கொத்தி நிற்க
முகமெல்லாம் வெட்கம் தொத்தி நிற்கும்!

*

மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!

- ப்ரியன்.

pradeepkt
06-12-2006, 10:43 AM
அவன் இதழ் புணர்ந்த
அதிர்வினின்று மீளா பேதையிவள்,


ம்ம்ம்... ரசம் சொட்டுதுங்க கவிதைகள்... ஒரு சின்ன 'னி' சேத்துருக்கேன்.
பைதிவே உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு அவளுக்கு யாரோ பதியச் சொல்லிக் கொடுத்திருக்காங்க போல..
கடைசிக் கவிதை இலைமறை! இதுக்கு வெளக்கமா நான் ஏதும் கருத்துச் சொல்லப் போயி பதிவையே பண்பட்டவர் பகுதிக்கு மாத்திரப் போறாங்க.

மதி
06-12-2006, 10:46 AM
கவிதைகள் அருமை...

பென்ஸ்
07-12-2006, 06:58 PM
ப்ரியன்...

நன்றி... :-)

ஒரு நல்ல கவிதை வாசிக்கும் போது நம்மை அதில் நுழைத்து ஒரு பாகமாகி அதை அப்படியே வாழ்ந்து முடிந்து செல்லும் போது ...
இடம், நிறம், முகம் எல்லாம் நமதாக்கி நம் சிந்தனைக்கு மட்டும் எட்டும் வகையில் படம் பிடிப்போம்...

அப்படி இருக்கையில் சினிமாமாதிரி... கலர் கலர் பின்னனி, அருமையான இசை, இது எல்லாம் இருந்தா ஒரு கவிதை எப்படி இருக்கும்....

அட ரஜினி படம் மாதிரி நூறு தடவை பாத்து, முன்னூரு தடவை படித்தாலும் , முழு கவிதையும் மனப்பாடம் ஆனாலும்... இன்னும் இன்னும் வாசிக்க வைக்கும் அழகு....

பாராட்டுகள்....

என்னதான் இருந்தாலும், திருட்டு மாங்கா சாப்பிடுவதில் கிடைக்கும் அலாதி அது தனிதான்... கொஞ்ஷம் உப்பு, கொஞ்ச்ம் மிளகு, நிறைய மாங்காய்...
காதலிலும் களவு ஒரு தனி ருசிதான்... கொஞ்ஷம் சினுங்கல், கொன்ஷம் ஊடல்.. நிறைய காதல்...
(கல்யானம் ஆயிடுச்சுனா அது மாம்பழம் கண்ணா)

அது என்னவோ காதல் வந்தால் கவிதை வரும் என்பார்கள்... எனக்கு இந்த கவிதைகள் வாசிக்கும் போது எல்லாம் காதல் வந்துவிடுகிறது...
காதல் இன்னும் வளரட்டும்....

பென்ஸ்
07-12-2006, 07:03 PM
கடைசிக் கவிதை இலைமறை! இதுக்கு வெளக்கமா நான் ஏதும் கருத்துச் சொல்லப் போயி பதிவையே பண்பட்டவர் பகுதிக்கு மாத்திரப் போறாங்க.

தெரியுதுல்ல அது இலைமறைகாய் என்று, பின்ன என்ன அதை விளக்கம் கொடுத்துகிட்டு.... :rolleyes: :rolleyes:
இங்க இருக்கிறதுல மயுரேசந்தான் சின்ன புள்ள... அவனே பண்பட்டவன் ஆயாச்சு... :D :D :D

pradeepkt
08-12-2006, 03:40 AM
தெரியுதுல்ல அது இலைமறைகாய் என்று, பின்ன என்ன அதை விளக்கம் கொடுத்துகிட்டு.... :rolleyes: :rolleyes:
இங்க இருக்கிறதுல மயுரேசந்தான் சின்ன புள்ள... அவனே பண்பட்டவன் ஆயாச்சு... :D :D :D
எனக்கு இலைமறைகாய்னு தெரிஞ்சிருச்சு, உங்களுக்குத் தெரியுதான்னு பாத்தேன் :) இப்ப மயூரேசனை எதுக்கு இழுக்குறீங்க... :rolleyes:

arun
11-12-2006, 08:18 AM
கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே பாராட்டுக்கள்

guna
11-12-2006, 08:38 AM
ம்ம்ம்... ரசம் சொட்டுதுங்க கவிதைகள்... ஒரு சின்ன 'னி' சேத்துருக்கேன்.
பைதிவே உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு அவளுக்கு யாரோ பதியச் சொல்லிக் கொடுத்திருக்காங்க போல..
கடைசிக் கவிதை இலைமறை! இதுக்கு வெளக்கமா நான் ஏதும் கருத்துச் சொல்லப் போயி பதிவையே பண்பட்டவர் பகுதிக்கு மாத்திரப் போறாங்க.

ப்ரதிப் சார்..

ப்ரியனோட கவிதைகளை வாசிக்க எங்களுக்கும் வாய்ப்பு வேண்டும்..
அதனால, உங்களுக்கு தெரியர்தும், எங்களுக்குப் புரியர்தும், விமர்சனம் இல்லாமல் அப்படியே இருகட்டுமே..
நீங்க கருத்து எழுத, அதை பண்பட்டவர் பகுதுக்கு மாதிட்டா குணாவை போல புதியவர்களாலே படிக்க முடியாது...

பார்து எழுதுங்க சார்..:eek:

ஓவியா
11-12-2006, 09:51 AM
ஒரு பூனையின் சாமார்த்தியத்துடன்
சமையலறை நுழைந்து
பின் அணைத்து
அவன் இதழ் புணர்ந்த
அதிர்வின்று மீளா பேதையிவள்,
ஒன்றுக்கு இரண்டுமுறை
உப்பிட்டுவிட்ட உணவை
உண்டபடியே
ருசிப்பதாய் சொல்கிறான்;
இதழ் இன்னமும்!


வணக்கம் பிரியன்

அழகான் கவிதைக்கு ஒரு நன்றி

பாரட்டுக்கள்

தொடரவும்

mayan
03-01-2007, 04:49 PM
காதல் சொல்லும் கவிதைகள்.
அருமை.. தொடர்கிறேன்.

இளசு
03-01-2007, 10:00 PM
ப்ரியன்

அகச்சுவையில் ஆழ்ந்து அகழ்ந்து எழுதப்பட்ட வரிகள்..

சுகிக்கின்றன...

பாராட்டுகள்!


----------------------------------------------------------

காதல் (காம) மயக்கத்தில் எதை(யோ) கொடுத்தாலும் 'ரசம்' என்று ரசித்து
சாப்பிடுவானாம் புதுமாப்பிள்ளை..

பாட்டிகள் சொல்லும் பழங்கதை...
இங்கே உப்பாய் இதழாய்..இனிப்பாய்
புதுக்கவிதை...

ஆதி தொட்டு காதல் ஒரு தொடர்கதை..

காதல் மிகப் பழமையானது..
ஆனால் ஒவ்வொருவரின் காதல்
மிக மிகப் புதுமையானது ..அவர்களுக்கு..


தொடருங்கள்..