PDA

View Full Version : வலி

guna
04-12-2006, 04:31 AM
உறவுகள்
மறுக்கும் போது
உள்ளம் வலிக்கிறது..

உள்ளம்
வலிக்கும் போது
உடல் மரக்கிறது..

உறவுகளும்
உள்ளமும்
உடலும்
ஒரே வலிமயம்!

வலியே
வாழ்க்கை..

வாழ்கையே
வலி..

எழுந்து நின்றால்
தலை
தட்டுகிறது
விழுந்து படுத்தால்
மூச்சு
முட்டுகிறது

எந்தப் பக்கம்
திரும்பினாலும்
இடிக்கிறது..

கனவும்
வலிக்கிறது
நினைவும்
வலிக்கிறது

எண்ணமும்
வலிக்கிறது
எண்ணியதும்
வலிக்கிறது

ஒவ்வொரு
நாளும்
கண் விழிக்கும்போது
"இன்னுமா இருக்கிறேன்"
என்று
உயிர் நடுங்குகிறது..

இது
மரத்துப் போன
உடல்
அலுதுப் போன
உயிர்..

உருக்கத்தான்
இன்னும் நேரம்
வரவில்லை..

meera
04-12-2006, 06:17 AM
குணா,
இந்த வலி, எனக்கும் வலியை ஏற்படுத்துகிறது.

வலியின் காரணம் என்ன குணா.???????
(என்கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்க)

பென்ஸ்
04-12-2006, 08:01 AM
குணா....
வலி மனம் சம்பந்தபட்டது என்று பாரதி ஒரு சிறுகதை எழுதி இருந்தார்... அதுதான் வலியை பற்றி மட்டும் என்னை முதலில் சிந்திக்க வைத்தது...

வலி- இது ஒரு நமக்கு ஒரு விருப்பமில்லாத உணர்வு இல்லையா???
அந்த விருப்பமில்லாத உணர்வு நமக்கு தேவையா????

தேவையே...
பல் சொத்தையாகி தேவையில்லாத நிகழ்வுகளை கொடுப்பதற்க்கு முன் வலிதான் "டேய் வெண்ணை அதை புடிங்கி அப்பால போடுடா..." என்று சுட்டிகாட்டுவது...
இதே போல் உடம்பிலும் வரும் காயங்களையும் காட்டிதருவது வலிதான்....
இத உடல் சம்பந்தபட்டவலி நல்லதுதான், ஆனாலும் கான்சர் போன்ற வலியினால் அவதி படும் மக்களின் நிலை...
இதனால்...
வலியம் மனத்துன்பம்
மனத்துன்பத்தால் வலி...
மனம் புண்ணாகும் போது வரும் வலியும் இப்படிதான்.
சில உறவுகள் வலி கொடுக்கும் போது அது "தூர்" வாரபடவோ (நன்றி: மீரா) இல்லை மறுபரிசிலனை படவோ செய்யவேண்டபட வேண்டும்....
இல்லையேண்றால் இந்த புண்ணே கான்சர் கட்டியாய் நம்மை கொண்று விடும்....
வலி நல்லதே, துவக்கத்தில் கண்டறியபட்டு , கவணிக்கபட்டால்...

pradeepkt
04-12-2006, 08:15 AM
அங்கங்கே மரத்துப் போவதைப் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். மரத்துப் போன பிறகு வலி எப்படித் தெரியும்?

என்னைக் கேட்டால் சில வலிகள் மரத்துப் போவது நல்லது என்பேன்.

ஓவியா
04-12-2006, 09:29 AM
கவிதை வலிகின்றது

குணா
வலியில்லா வாழ்க்கை நீரற்ற நதியாகும்,
ஒவ்வொரு துன்பமும் நம்மை செம்மை படுத்துவதற்க்காகவே,

இதிலிருந்து என்ன தெளிவு பிறந்துல்லது அப்படீனு யோசிக்கலாமே, நான் என்னை எப்படி மாற்றி கொள்வது என்று ஆழ சிந்திக்கலாமே.......
சிந்தனை நம்மை பக்குவப்படுத்தும்

அருமையான பின்னூட்டம்
நன்றி பெஞ்சு

leomohan
04-12-2006, 10:46 AM
கனவும்
வலிக்கிறது
நினைவும்
வலிக்கிறது
..

அருமையான வரிகள் குணா.

தாமரை
04-12-2006, 11:45 AM
உறவுகள்
மறுக்கும் போது
உள்ளம் வலிக்கிறது..

..
உறவுகள் மறுத்த பொழுது
நட்புகள் மறந்ததா குணா?

ஒத்த தடங்களில்
நடப்போர் வார்த்தைகள்
ஒத்தடங்கள் இல்லையா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6503
[/URL]
முகம் தொலையுமிடங்களில்
மரத்த மனங்களில்
நட்பு எனும் நட்பூ
மலரட்டும்..
[URL="http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6503"] (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6503)

sriram
04-12-2006, 12:07 PM
கவலை படாதீர்கள் குணா!
"வலியின் தீர்வு
தாங்கும் சக்தி.!
உளியின் தீர்வு
செதுக்கிய சிற்பம்.!"

வலியால் நம்மை வலிமையாக்கி கொள்ளலாம்.!

ஓவியா
04-12-2006, 12:31 PM
அருமையான வரிகள் குணா.

சார்
நீங்க எவ்வளவு பெரிய எழுத்தாளர், கொஞ்சம் விவரமா விமர்சனம் எழுதலாமே....ஓ அடித்த புத்தக பீஸியா....சரி சரி
.....:D :D

franklinraja
04-12-2006, 12:54 PM
எல்லாவற்றிற்கும்
ஒரு நல்ல வழி பிறந்தால் -
வலி பறக்கும் ! ;)

இளசு
04-12-2006, 11:51 PM
வலி பற்றிய குணாவின் கவிதை, பென்ஸின் பதிவு கண்டு என்னுள்
தோன்றியவை:

1) வலி இதனால் ஏற்பட்டது, இத்தோடு குறைய ஆரம்பிக்கும், இத்தனை நாளோடு மறைந்துவிடும் எனும்போது அதீத வலியையும் மனம் தாங்கும் - ஆப்பிள் நறுக்கும்போது விரலை ஆழமாய்க் கீறிக்கொள்வதுபோல..

2) வலியை அடுத்தவர் புரிந்துகொள்வதே - வலித்த மனதுக்கு ஆறுதல் மருந்தாகிறது.

பரிவான மருத்துவர் - செவிலியர் கவனமாய் கேட்பது..
மலைச்சாமிக்கு குயில் பேசுவது ( முதல் மரியாதை)

3) நள்ளிரவு, தனிமை -- தாங்க முடியா உபாதை.. உறவை எழுப்பி தொந்தரவு தர தயக்கம்.. மருந்து இல்லை/ மருந்தால் பயனில்லை.
எப்போது குறையும் என தெரியாது.. இருள்..பயம்..

இங்கே உடல் வலிக்கு மனவலி ஊக்கி....

4) தோல்வி, இழப்பால் ஏற்படும் மனவலி - உடல் வலிக்கு ஈடானது.. அல்லது இன்னும் வீரியமானது.

5) சிறுநேரம் இருக்கும் உடல் வலி மட்டுமே - முழுக்க உடல் வலி.
விட்டு விட்டு வரும் / நாள்பட்ட உடல்வலி எல்லாமே மனவலியைக் கூட்டணி அமைத்து வாழ்க்கையை ஆட்சி செய்யும்...

6) வலி என்பதன் அளவு அனுபவிப்பவர் சொல்லும் அளவே..
அருகிருந்து அளப்பவர் அளவல்ல!

எந்த வகையிலும் வலி - வேண்டா விருந்தாளி.
முடிந்தால் ஆரம்பத்திலேயே விரட்டிவிட வேண்டும்.

நாளாக நாளாக விருந்தினர் உரிமையாளர் ஆகிடுவார்...
பின்னர் நாம் அனுசரித்து/ உதாசீனப்படுத்தி வாழ வேண்டும்..

குணா,
வலி தீரட்டும்..
இல்லையெனில்
பகிருங்கள்..
குறையட்டும்..
நாளாக மெல்ல
மறையட்டும்!

guna
05-12-2006, 01:33 AM
குணா,
இந்த வலி, எனக்கும் வலியை ஏற்படுத்துகிறது.

வலியின் காரணம் என்ன குணா.???????
(என்கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்க)

ஐயோ மீரா..

நீங்க கேட்டீங்களே'ன்னு , குணாவோட பழைய கவிதைகள்ல இருந்து, எனக்கு பிடிச்ச ஒன்றை இங்கே பதிவிட்டேன், அவ்வளவு தான்...

guna
05-12-2006, 08:36 AM
பெஞ்ஜமின், குணா கவிதைக்கு உங்களின் பின்னூட்டம் அருமை..
நன்றி நன்பரே..
ஓவியா உங்களதும் கூட தான், உங்கள் கருதுக்களுக்கு நன்றிகள் தோழியே..

இளசு சாரின் எண்ணங்களுக்கும், ப்ரதிப் சாரின் கருதுக்கும்,செல்வன் அண்ணா, ராம் மற்றும் ராஜாவின் எதிர் கவிதைகளுக்கும் நன்றிகள்..

பெஞ்ஜமின், ஓவியா, ப்ரதிப் சார், செல்வன் அண்ணா,ராம்,ராஜா மற்றும் இளசு சார் எல்லாருக்குமே ஒன்று சொல்லனும்..நெஜமா நெஜமா வலியால்'ல அவஸ்தை படர்தும் பட்டதும் குணா இல்லை..
குணாக்கு நெருங்கிய ஒருவரின் வேதனையை பார்து எழுதினது..
இப்போ அவங்க ஓரளவு சுகமா இருக்கறாங்க..

குணா கவிதை எழுதினா, அது குணாவோட அனுபவமா தான் இருக்கனுமா என்ன?
ஆனால் தப்பா நினைச்சாலும், எல்லாருமே அருமையா தன்முனைப்பு கொடுக்கறீங்க..

முடிந்தால் குணாவோட அந்த தோழியையும் மன்றம் பக்கம் வந்து போக சொல்றேன், தன்முனைப்பு தூண்டல் கொடுக்கரவங்க இங்க நிறைய பேர் இருக்கறதாலே..:D :D :D

guna
05-12-2006, 08:44 AM
அருமையான வரிகள் குணா.

மோகன், உங்கள் எழுத்துக்களை விடவா?
நன்றிகள் மோகன்.

ஓவியா
05-12-2006, 05:40 PM
அருமையான தங்களின் பின்னூட்டம்
என்னை கவர்ந்தது

நன்றி இளசு

paarthiban
06-12-2006, 05:03 PM
வலி பற்றிய குணாவின் கவிதை, பென்ஸின் பதிவு கண்டு என்னுள்
தோன்றியவை:

1) வலி இதனால் ஏற்பட்டது, இத்தோடு குறைய ஆரம்பிக்கும், இத்தனை நாளோடு மறைந்துவிடும் எனும்போது அதீத வலியையும் மனம் தாங்கும் - ஆப்பிள் நறுக்கும்போது விரலை ஆழமாய்க் கீறிக்கொள்வதுபோல..

2) வலியை அடுத்தவர் புரிந்துகொள்வதே - வலித்த மனதுக்கு ஆறுதல் மருந்தாகிறது.

பரிவான மருத்துவர் - செவிலியர் கவனமாய் கேட்பது..
மலைச்சாமிக்கு குயில் பேசுவது ( முதல் மரியாதை)

3) நள்ளிரவு, தனிமை -- தாங்க முடியா உபாதை.. உறவை எழுப்பி தொந்தரவு தர தயக்கம்.. மருந்து இல்லை/ மருந்தால் பயனில்லை.
எப்போது குறையும் என தெரியாது.. இருள்..பயம்..

இங்கே உடல் வலிக்கு மனவலி ஊக்கி....

4) தோல்வி, இழப்பால் ஏற்படும் மனவலி - உடல் வலிக்கு ஈடானது.. அல்லது இன்னும் வீரியமானது.

5) சிறுநேரம் இருக்கும் உடல் வலி மட்டுமே - முழுக்க உடல் வலி.
விட்டு விட்டு வரும் / நாள்பட்ட உடல்வலி எல்லாமே மனவலியைக் கூட்டணி அமைத்து வாழ்க்கையை ஆட்சி செய்யும்...

6) வலி என்பதன் அளவு அனுபவிப்பவர் சொல்லும் அளவே..
அருகிருந்து அளப்பவர் அளவல்ல!

எந்த வகையிலும் வலி - வேண்டா விருந்தாளி.
முடிந்தால் ஆரம்பத்திலேயே விரட்டிவிட வேண்டும்.

நாளாக நாளாக விருந்தினர் உரிமையாளர் ஆகிடுவார்...
பின்னர் நாம் அனுசரித்து/ உதாசீனப்படுத்தி வாழ வேண்டும்..

குணா,
வலி தீரட்டும்..
இல்லையெனில்
பகிருங்கள்..
குறையட்டும்..
நாளாக மெல்ல
மறையட்டும்!

குணா கவிதை. இளசு சார் கருத்துக்கள் அருமை.

pradeepkt
07-12-2006, 04:54 AM
இளசு சாரின் எண்ணங்களுக்கும், ப்ரதிப் சாரின் கருதுக்கும்,செல்வன் அண்ணா, ராம் மற்றும் ராஜாவின் எதிர் கவிதைகளுக்கும் நன்றிகள்..

பெஞ்ஜமின், ஓவியா, ப்ரதிப் சார், செல்வன் அண்ணா,ராம்,ராஜா மற்றும் இளசு சார் எல்லாருக்குமே ஒன்று சொல்லனும்..நெஜமா நெஜமா வலியால்'ல அவஸ்தை படர்தும் பட்டதும் குணா இல்லை..
குணாக்கு நெருங்கிய ஒருவரின் வேதனையை பார்து எழுதினது..
இப்போ அவங்க ஓரளவு சுகமா இருக்கறாங்க..

அப்படியே புல்லரிச்சுப் போச்சுங்க, நம்மள ரொம்ப நாள் கழிச்சு ஒருத்தர் சார்-னு கூப்பிட்டுருக்கார் பாருங்க!! :)

மதி
07-12-2006, 04:55 AM
அப்படியே புல்லரிச்சுப் போச்சுங்க, நம்மள ரொம்ப நாள் கழிச்சு ஒருத்தர் சார்-னு கூப்பிட்டுருக்கார் பாருங்க!! :)
அதானே...:D :D :D

நம்பிகோபாலன்
15-12-2006, 08:09 PM
சுகமான வலியை ரனமாக உனர்ந்தென்