PDA

View Full Version : உங்கள் கருத்துகளுக்கு ஒரு இன்பாக்ஸ்



mgandhi
03-12-2006, 06:00 PM
உங்கள் கருத்துகளுக்கு ஒரு இன்பாக்ஸ்


நம்மில் பலர் இணையத்தில் வெறுமனே பொம்மை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. வலையகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வரும் கட்டுரைகளையும் பதிவுகளையும் படித்து அவற்றைப் பற்றிய நம் கருத்துகளை கமென்ட் பெட்டியில் அடிக்கிறோம்.

வலைப்பதிவுகளில் பிளாகர், வேர்ட் பிர என்று இரண்டு பெரும் தளங்கள் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸில் மட்டும் தான் நீங்கள் இடும் எல்லா பின்னூட்டங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி இருக்கிறது.

"கோகமென்ட்" www.cocomment.com'' என்ற வலையகத்தில் அக்கவுன்ட் வைத்திருந்தால் நீங்கள் எந்த சைட்டில் கமென்ட் போட்டாலும் உங்கள் அத்தனை கமென்ட்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். ஒரே ஒரு புக்மார்க் அல்லது ஃபயர்ஃபாக் ப்ளக் இன்னை உங்கள் பிரவுசரில் நிறுவிக்கொண்டால் போதும்.

உதாரணமாக நீங்கள் பிளாகரில் இருக்கும் ஒரு வலைப்பதிவுக்குப் போய் ஒரு பதிவைப் படிக்கிறீர்கள். உங்கள் கருத்தைப் பின்னூட்டம் இடுகிறீர்கள். பிறகு வேர்ட்பிர வலைப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டம் இடுகிறீர்கள். அப்புறம் வெப் உலகத்தில் விவாதம் பகுதியில் எழுதுகிறீர்கள். வழக்கமாக நாம் எந்த இடத்தில் என்ன கமென்ட் போட்டோம் என்பதை மறந்து விடுவோம். சமயத்தில் இந்த மறதி நமக்கு அசௌகரியமாக இருக்கும். இங்கே தான் கோகமென்ட் வருகிறது.

கோகமென்ட் உங்கள் எல்லா கமென்ட்களையும் ஒரு ஈமெயில் இன்பாக் போன்ற பக்கத்தில் பட்டியலிடுகிறது. நாம் போட்ட கமென்ட்டுக்கு யார் என்ன பதில் போட்டிருக்கிறார்கள் என்றும் இந்தப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். நாம் கமென்ட் போடாத உரையாடல்களைக் கண்காணிக்கும் வசதியும் இருக்கிறது. இதெல்லாமே சில க்ளிக்குகளில் முடிந்து விடும் சமாச்சாரம்.

pradeepkt
04-12-2006, 05:19 AM
சூப்பருங்க.
இதை ஏற்கனவே நிறுவி இருக்கும் யாராச்சும் இதைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன். நான் நிறுவும்போது இது என்னமோ ஒரு உளவு மென்பொருள்னு எச்சரிக்கை வந்துச்சே..

ஓவியா
04-12-2006, 09:48 AM
நல்ல விசயம்தான்..

ஆமாம்,
யாரவது இன்னும் கொஞ்சம் விவரமா பின்னூட்டம் போடுங்களேன்

நன்றி

அறிஞர்
05-12-2006, 01:29 PM
உள்ளதுக்கே நேரத்தை காணோம். நமக்கு இது சரிபடாது.

பிளாக்கர்களில் சுற்றுபவர்களுக்கு மிகவும் சிறந்தது.

leomohan
05-12-2006, 04:54 PM
சூப்பருங்க.
இதை ஏற்கனவே நிறுவி இருக்கும் யாராச்சும் இதைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன். நான் நிறுவும்போது இது என்னமோ ஒரு உளவு மென்பொருள்னு எச்சரிக்கை வந்துச்சே..

நான் நிறுவியிருக்கிறேன். யாராவது வந்து பின்னூட்டம் இட்டாத்தானே தெரியும். நானும் அதிகமாக பின்னூட்டங்கள் வலைப்பூக்களில் இடுவதில்லை. அதற்கு தான் தமிழ் மன்றங்கள் 5 இருக்கின்றனவே. நேரம் சரியாக இருக்கு.

praveen
21-02-2007, 07:17 AM
உள்ளதுக்கே நேரத்தை காணோம். நமக்கு இது சரிபடாது.

பிளாக்கர்களில் சுற்றுபவர்களுக்கு மிகவும் சிறந்தது.

உண்மைதான் இதற்கு பிளாக் அதிகம் பயன்படுத்துபவர்கள் தான் பதில் கூற வேண்டும். நானும் பிளாக் ஆரம்பிக்ககறேன் பேர்வழி என்று ஒன்றே ஒன்று தொடங்கினேன். முதலில் 10 நாள் வரை அப்டேட் செய்திருப்பேன். பிறகு பார்த்ததே இல்லை.

ஆதவா
21-02-2007, 08:17 AM
பாரம் தளத்திற்கு இந்த விசேடம் ஒத்துவருமா?