PDA

View Full Version : ஓட்டுனர் உரிமத்தை ரத்து



mgandhi
03-12-2006, 05:03 PM
தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமத்தை ரத்துச் செய்ய ஆணை


வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகள்
தமிழ் நாட்டில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களின், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக அரசு ஆணை ஒன்றினை பிறப்பித்துள்ளது.

வாகனங்களை குறிப்பிட்ட அளவிற்கும் அதிக வேகமாக ஓட்டுவது, திருட்டுப் பொருட்களை ஏற்றிச் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, பயணிகளிடம் முறை தவறி நடந்து கொள்வது, விபத்து சமயங்களில் முதலுதவி அளிக்காம்ல் இருப்பது போன்ற பல மீறல்களுக்காக உரிமம் ரத்துச் செய்யப்படும்.

வளர்நது வரும் நாடுகளில் அதிக அளவில் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுப்பதற்கும், அனவரும் சாலை விதிகளை மதித்து நடக்கும் விதமாகவும் இந்த ஆணை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும், விபத்து ஏற்பட்டவுடன் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு எந்த விதமான அல்லலும் இருக்காதும் எனவும் கூறுகிறார் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை ஆணையர் ரா.சிவகுமார்
பின் குறிப்பு -நல்ல சட்டம் விரைந்து செயல்பட்ட்டும்.
நல்ல சட்டம் விரைத்து செயல் பட்டால் நல்லது

pradeepkt
04-12-2006, 04:56 AM
நல்லது... ஆனா இந்தச் சட்டத்தின் கடுமை, நம்ம ஏட்டையாக்களுக்கு பைசா வசூல் அதிகப் படுத்தும் திட்டமாக மாறிவிடக் கூடாது.

தாமரை
04-12-2006, 05:27 AM
நல்லது... ஆனா இந்தச் சட்டத்தின் கடுமை, நம்ம ஏட்டையாக்களுக்கு பைசா வசூல் அதிகப் படுத்தும் திட்டமாக மாறிவிடக் கூடாது.
ஏட்டைய்யா மாதிரி ஓட்டையா சிந்திக்கறீங்களே.. அய்யோ பாவம் டாக்ஸி ஓட்டுனர்களை இனி அவர்கள் சாராய வியாபாரி மாதிரி மாமூல் கொடுண்ணு மிரட்டுவாங்களே!!!!:mad: :mad: :mad:

அறிஞர்
04-12-2006, 09:02 PM
சட்டத்தை பார்த்து சிலர் திருந்தினாலே பெரிய விசயம்

மன்மதன்
05-12-2006, 03:20 PM
நல்லது... ஆனா இந்தச் சட்டத்தின் கடுமை, நம்ம ஏட்டையாக்களுக்கு பைசா வசூல் அதிகப் படுத்தும் திட்டமாக மாறிவிடக் கூடாது.

மாறிடும்..;)