PDA

View Full Version : பொறுப்பு!



mgandhi
02-12-2006, 05:35 PM
பொறுப்பு!
இலங்கையில் மறுபடியும் அறிவிக்கப்படாத போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்திருப்பது தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.

விதவிதமான எதிர்ப்புகள்.

டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது ஒரு கட்சி. அங்கேயே உண்ணாவிரதம் இருந்திருக்கிறது இன்னொரு கட்சி. இங்கும் உண்ணாவிரதம் முதல் கறுப்புக்கொடி ஏற்றுவது வரை நடந்திருக்கின்றன. ராஜபக்சே கலந்துகொண்ட மாநாட்டினை தமிழக மேயர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

Сதனி ஈழம்தான் தீர்வுТ என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள நிலையில், இந்திய அரசிடமிருந்து எதையோ எதிர்பார்க்கும் நோக்கம் இலங்கை அதிபரின் வருகைக்குப் பின்னிருக்கலாம்.

இலங்கையில் திரும்பவும் எழுந்திருக்கிற போர் அபாயத்தினால், அகதிகள் தமிழகம் வருவது அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அங்கே அத்தியாவசியப் பொருட்கள் கூடக் கிடைக்கவில்லை. சிக்குன் குன்யா உள்ளிட்ட நோய்த் தாக்குதல்களால், யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் பரிதவித்தபடி இருக்கிறார்கள் தமிழ் மக்கள். அந்தப் பகுதிகளுக்குச் சாலை இணைப்பு கூட இலங்கை அரசால் துண்டிக்கப்படுகிறது.

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட மத்தியஅரசு தயக்கம் காட்டுவதில் நியாயம் இருந்தாலும், இரண்டு முடிவுகள் எடுக்கலாம்.

போர் தீவிரமடைந்திருக்கும்போது, இலங்கை அரசுக்கு ராணுவ உதவி அளிப்பதை மறுக்கலாம். அங்கே உணவுக்குத் தவிக்கும் அப்பாவி மக்களுக்கு நேரடியாக உதவலாம்.

பக்கத்து வீட்டில் சண்டை நடக்கும்போது, அண்டை வீட்டுக்காரர் என்கிற நெருக்கத்தின் காரணமாக, இதைச் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.
நன்றி குமுதம்

роЗро│роЪрпБ
02-12-2006, 05:45 PM
குமுதத்தின் பொறுப்பான தலையங்கம். நேற்றே வாசித்தேன்.

நன்றி காந்தி.

leomohan
02-12-2006, 05:54 PM
குமுதம்-பொறுப்பு நல்ல Oxymoron