PDA

View Full Version : மெட்ராஸ்_ஐ



mgandhi
02-12-2006, 05:01 PM
மெட்ராஸ்_ஐ என்பது ஒரு தொற்று நோய். கண்ஜெங்ட்டிவ்வைட் டிஷ்யூவில், அதாவது கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளைப் படலத்தின் மீது மெல்லியதாக படிந்திருக்கும் (கண்ணுக்குத் தெரியாத) நுண்ணிய பகுதியில் வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால்தான் கண்கள் சிவக்கின்றன. கண் அரிப்பு ஏற்பட்டு, எரிச்சல் உருவாகிறது. கண்ணில் அழுக்கு வந்து சேருகிறது.

மெட்ராஸ்_ஐக்கு ஏன் அப்படி ஒரு பெயர் வந்தது என்பதே சுவாரஸ்யமான விஷயம். எழும்பூர் கண் மருத்துவமனை 150 ஆண்டு காலப் பழமை வாய்ந்தது. உலகத்திலேயே இரண்டாவது கண் மருத்துவமனை சென்னையில்தான் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட எழும்பூர் கண் மருத்துவமனையில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, அடினோ என்கிற வைரஸ் கிருமிகளால்தான் இந்தக் கண் நோய் வருகிறது என்று கண்டுபிடித்தார்கள். அதனாலேதான் இந்த நோய்க்கு மெட்ராஸ்_ஐ என்று பெயர் வைத்தார்கள்.

பொதுவாக, தட்பவெப்ப நிலை மாறும்போது, இந்த நோய் அதிகம் வரும். உதாரணமாக, மழைக் காலத்தின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் மெட்ராஸ்_ஐ நிறைய பேருக்கு வரலாம். அல்லது வெயில் காலத்தில் (வெயில் காலம் மாம்பழ சீஸன் என்பதால் ஈக்கள் மூலம் இந்த நோய் எளிதாகப் பரவும்) பலருக்கும் வரலாம். ஆனால் இப்போது சுற்றுச்சூழல் மிகுந்த அளவில் மாசுபடுவதால் வருஷம் பூராவும் யாரோ ஒருவருக்கு மெட்ராஸ்_ஐ சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது.

அடினோ கிருமிகள் தண்ணீர் மூலம் வெகுவேகமாகப் பரவும். இந்தக் கிருமியால் காற்றின் மூலம் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்றாலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மிக அருகில் சென்றால் அவர்கள் தும்மும்போது, அவர்களுடைய மூக்கிலிருந்து புறப்படும் வைரஸ் கிருமி காற்றின் மூலம் நம்மையும் வந்து தாக்க வாய்ப்புண்டு.

மெட்ராஸ்_ஐ வந்தவர்களைப் பார்த்தாலே நமக்கும் அந்த நோய் வந்துவிடாது. மெட்ராஸ்_ஐ வந்தவர்களுடைய கண்ணைத் தொட்டு, அதே கையால் உங்கள் கண்ணையும் நேரடியாகத் தொட்டால் நிச்சயம் மெட்ராஸ்_ஐ வரும். அல்லது மெட்ராஸ்_ஐ வந்தவர்கள் பயன்படுத்திய கர்ச்சீப், தலையணை போன்ற பொருட்களை நாமும் பயன்படுத்தினால் நமக்கும் அந்த நோய் வரும். ஏர்கண்டிஷன் ரூமில், லிப்ட்டில், காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இந்தக் கிருமிகள் வேகமாகப் பரவும்.

மெட்ராஸ்_ஐ வந்தவர்கள் யாராக இருந்தாலும், ஒரு மூன்று நாளைக்கு எங்கும் போகாமல், ஆபீஸக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டில் தனியாக இருப்பது நல்லது.

மெட்ராஸ்_ஐ வந்தால் கண்ணில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதனால் கண் வீக்கம், எரிச்சல் போன்ற வேறு சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மெட்ராஸ்_ஐ வந்தால் மெடிக்கல் ஷாப்பில் ஏதாவது ஒரு மருந்தை நீங்களே வாங்கிப் போடாமல், ஒரு நல்ல கண் டாக்டரை அணுகி, மருத்துவம் செய்துகொள்ளுங்கள்.

நன்றி குமுதம்.

இளசு
02-12-2006, 05:36 PM
மிக தேவையான கட்டுரை. நன்றி காந்தி.

( நீங்கள் மருத்துவரா?)

------------------------------------------------------

இது பற்றி அண்மையில் படித்த 'டயலாக் ஜோக்'-

நண்பன் 1 : ஏண்டா என் கண்ணையே உத்து பாக்குற?

நண்பன் 2 : எனக்கு மெட்ராஸ் ஐ வந்திருக்கு. உன்னைப் பாத்து உனக்கும் வந்தா நீ மருந்து வாங்கினா, அதை எனக்கும் யூஸ் பண்ணலாம்னுதான்..!

அறிஞர்
05-12-2006, 08:17 PM
நல்ல தகவல் காந்தி... பல புத்தகங்கள் சென்று படிக்க முடியாத காரியங்களை தாங்கள் தருகிறீர்கள். உபயோகமாக உள்ளது. தொடருங்கள் தங்கள் பணியை....