PDA

View Full Version : முடிவில்லா காதல் கடிதம்



sriram
02-12-2006, 04:54 PM
முடிவில்லா காதல் கடிதம்


(1)
சின்ன சின்ன ஆசையடி
சித்திர கயல் விழியே !
என்ன என்ன ஆசையென
எனைத்தான் கேட்பாயோ!
மின்னல் இடை பூங்கொடியே
என் முன்னெ வந்தால்
உன் அத்தான் ஆசைகளை
உனக்கு சொல்வேன்..!

(தொடர்வேன்....)

இளசு
02-12-2006, 05:44 PM
முடிவின்றி தொடரட்டும் ஸ்ரீராம்..

நெல்குவித்து விரல் பிடித்து எழுதவைத்து -
பின் சிலேட்ட்டாகி, காகிதமாகி, கணினியாகி --------

மொழி எழுதப் பழகும் களம் மாறி மாறி..
கவிதை எழுதப் பழக தளம் காதல் ஒன்றே!


----------------------------------------------

அண்மையில் வைரமுத்து கவிதைத் தொகுப்பு வாங்கினேன்.

17 - 20 வயதுகளில் காதல் கவிதைகளை
சந்தம் கொஞ்ச சொன்ன விதம்
இந்தக் களம் தொட்டுத் தொடங்காத(வன்)
கவிஞன் இல்லை என எண்ணுமளவுக்கு இருந்தது..

sriram
02-12-2006, 06:53 PM
(2)
கண்ணோரம் தழும்பு உனக்கு..!
இருந்தாலும் அழகு என்பேன்!
காதோரம் நீ வந்து
கவி ஒன்று சொல் என்பேன்.!
இதழோரம் இனிப்பு நீ தந்து
மனதோர ஆசைகளை படம் பிடிதாய்.
நதியோரம் நாம் நடந்த
நாள் நினைத்து நான் கிடக்கேன்.!

(எப்படி நமக்குள் அந்த பூ பூத்தது?
நாளை சொல்வேன்..!
தொடர்வேன்..) அன்று ....................

பென்ஸ்
02-12-2006, 07:10 PM
ராம் (அப்படி கூப்பிடலாம் தானே???)

உங்கள் கவிதைகளை படித்து வருகிறென்... நேரமின்மையினால் விமர்சனக்கள் இட காலம் எடுத்திருக்கிறென்.
மன்னிக்க...

அட்ரா சக்கை காதலிக்கு கடிதமா...

வாழ்க்கை பயணத்தை ஒரு கடிதமாக எழுதி காதலிக்கு கொடுக்க திட்டமோ??? தொடரட்டும், இந்த ரயிலில் நானும் தொற்றி கொள்கிறென்...

சிது சிறு கவிதைகளக ஒவ்வொரு நாளும் தர முடிவோ??? நல்லது...
சிரு வேண்டுகோள்...

கவிதைகள் ஒவ்வோண்ரும் ஒரு அத்தியாங்கலாக இருந்தால் நன்று... முதல் கவிதையும் இரண்டாவது கவிதையும் ஓட்டாதது போல் இருக்கு அதையும் கவனியுங்க....

*/ கண்ணோரம் தழும்பு உனக்கு..!
இருந்தாலும் அழகு என்பேன்! /*

இது அழகு... !!!!

sriram
02-12-2006, 07:19 PM
பென்சு!
ஒட்டாமல் இருப்பது இனி ஒட்டி வரும். ஒட்டாமல் இருப்பது எப்படி ஒட்டியது என்பதை இனி ஒட்டியே வரும் கவிதைகளை ரசித்து உங்கள் மனதையும் கவிதையில் ஒட்டி வையுங்கள்.

பென்ஸ்
02-12-2006, 07:22 PM
நன்றி ராம்...

உங்கள் கவிதைகளை எதிர்பாக்கிறென்...

இளசு
02-12-2006, 07:29 PM
பென்சு!
ஒட்டாமல் இருப்பது இனி ஒட்டி வரும். ஒட்டாமல் இருப்பது எப்படி ஒட்டியது என்பதை இனி ஒட்டியே வரும் கவிதைகளை ரசித்து உங்கள் மனதையும் கவிதையில் ஒட்டி வையுங்கள்.


ஆஹா ஸ்ரீராம்!

இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்...
அசத்து(றீ)ங்க... இன்னும் பின்னுங்க!

தாமரை
03-12-2006, 05:36 AM
ஸ்ரீராம் --- நீங்க ஃப்ரீமாண்த் ராம் இல்லியே?

தாமரை
03-12-2006, 05:37 AM
ஸ்ரீராம் --- நீங்க ஃப்ரீமாண்ட் ராம் இல்லியே?

sriram
04-12-2006, 02:32 AM
ஸ்ரீராம் --- நீங்க ஃப்ரீமாண்ட் ராம் இல்லியே?

அர்த்தம் புரியவில்லை நண்பரே! எனக்கு புரியும்படி சொல்லுங்கள்.

தாமரை
04-12-2006, 02:49 AM
அர்த்தம் புரியவில்லை நண்பரே! எனக்கு புரியும்படி சொல்லுங்கள்.
அமெரிக்கா கலிஃபோர்னியாவில் ஃப்ரீமாண்ட் என்னும் நகரில் எனக்கு ராம் என்ற வானொலி நண்பர் உண்டு.. அவர் ஸ்டைல் போலவே உங்கள் கவிதை இருந்ததால் சந்தேக நிவர்த்தி வினா எழுப்பினேன்..
அவ்வளவுதான்..

pradeepkt
04-12-2006, 05:25 AM
ராம் இன்னும் எழுதுங்க. படிச்சிட்டு என் கருத்துகளைச் சொல்றேன்.

sriram
04-12-2006, 06:10 AM
(3)
அன்று...
அன்றுதான் உனை பார்த்தேனா?
இல்லை அதற்கு முன்னர் கூட
உனை பார்த்து இருக்கிறேன்..!


எப்போது முதன் முதலாய்
உனை பார்த்தேன்?
இப்போது நினைத்தாலும் சரியாக
நினைவில்லை..!ஏன் என்றால்
அப்போதெல்லாம் என் மனதில்
எதுவும் இல்லை..!-பின்
எப்போது என் மனம் நுழைந்து
உட்கார்ந்தாய்?ம்..ம்..ம்.(யோசிக்கிறேன்)!

(தொடர்வேன்..)

meera
04-12-2006, 06:11 AM
ராம்,

படித்தேன் கவிதை,

நம்ம பென்ஸ்,இளசு அண்ணா,செல்வா அண்ணா அளவுக்கு எனக்கு விமர்சனம் பண்ணதெரியாது.
கவிதை நல்லா இருக்கு.முடிவில்லாமல் கவிதை தொடர வாழ்த்துகள்.

என்ன பென்ஸ்,நான் சொன்னது சரியா?

meera
04-12-2006, 06:13 AM
(3)
அன்று...
அன்றுதான் உனை பார்த்தேனா?
இல்லை அதற்கு முன்னர் கூட
உனை பார்த்து இருக்கிறேன்..!


எப்போது முதன் முதலாய்
உனை பார்த்தேன்?
இப்போது நினைத்தாலும் சரியாக
நினைவில்லை..!ஏன் என்றால்
அப்போதெல்லாம் என் மனதில்
எதுவும் இல்லை..!-பின்
எப்போது என் மனம் நுழைந்து
உட்கார்ந்தாய்?ம்..ம்..ம்.(யோசிக்கிறேன்)!

(தொடர்வேன்..)


ம்ம்ம்ம் யோசிங்க நல்லா யோசிங்க,யோசிச்சு சீக்கிரமா சொல்லுங்க எங்க பார்த்தீங்கனு.

ஓவியா
04-12-2006, 06:44 PM
அழகுக்கு
அழகிய வரியில்
அழகான கவிதை

பாராட்டுக்கள்

ஓவியா
04-12-2006, 06:47 PM
ம்ம்ம்ம் யோசிங்க நல்லா யோசிங்க,யோசிச்சு சீக்கிரமா சொல்லுங்க எங்க பார்த்தீங்கனு.



மீரா எனக்கு
ஒறே போறாமையா இருக்கு
இந்த மாதிறி பசங்க லன்டனுக்குயெல்லாம்
வர மாடேங்கிறானுங்கலேனு தான்.....:D :D

sriram
05-12-2006, 03:36 AM
(4)
உன்னை நான் பார்த்தபோதெல்லம்
என்னை நீ ஒருபோதும் பார்த்ததில்லை.!
உன்னை பார்க்காத நேரம் பார்த்து
என்னை நீ பார்த்திருகிறாய்.!
என்பதை அன்றுதானா தெரிந்து கொண்டென்?

நிலம் நோக்குவது போல்
முகம் தாழ்த்தி
மேல் விழியால் எனை நோக்கிய அந்த
மின்னல் வெட்டிய பொழுதுகள்..!
மின்னதிர்வா? அல்லது உன் மென்னதிர்வா?

(தொடர்கிறேன்)
(காதல் சாறு இனிதானே ஆரம்பம்..!!!!)

sriram
10-12-2006, 12:01 PM
அப்போதெல்லாம் எனை தீண்டாது
எனை சீண்டிய நிமிடங்கள்
இப்போது என் நினைவில்.!
உன் நெற்றியில் விழுந்த
ஒற்றை சுருள் முடி!
உதடு ஒட்டிய காபி நுரையை
நாவில் துடைத்த அந்த பொழுது..!
முகத்தை நிலம் பார்க்க வைத்து
மேல் விழியால்
நோக்கும் நொடிகள்
ஏதோ சொல்ல வந்து
சொல்லாமல்
உதடு கடிக்கும் நேரங்கள்.!
நான் பேசும் குறும்பு கேட்டு
கையில் கிடைத்ததை தூக்கி எனை
அடிப்பதுபோல்
நே செய்யும் பாவனைகள்
நீ பேசும் குறும்பு.!
கண் மட்டும் பார்த்திருக்கும்
யுகப்பொழுது நேரங்கள்.!
உன் துள்ளல் ஓட்டம்.!
கள்ளப் பார்வை.!
கனிசாறு உதடு குவிப்பு.!
வெயில் படாத
காதோரம்.!
கண்சிமிட்டல்.!
இமைவிரிப்பு.!
நான் பார்க்காதபோது
என் மீதான பார்வை.!
என் வரவு எதிர்நோக்கியிருக்கும்
உன் விழி தேடல்.!
விடை பெற்று செல்லும் முன்
ஷ்ரீ என
அழைத்துவிட்டு
ஒன்றுமில்லை எனச் சொல்லும்
அந்த நேரங்கள்.!
உன் தீண்டலுக்கு முன்
உன் சீண்டல் எனக்கு
பிடித்திருகிறது
( சீண்டலின் முடிவில்..தீண்டலின் ஆரம்பமா..?)
(தொடர்ந்து சொல்வேன்...!)

meera
10-12-2006, 12:54 PM
மீரா எனக்கு
ஒறே போறாமையா இருக்கு
இந்த மாதிறி பசங்க லன்டனுக்குயெல்லாம்
வர மாடேங்கிறானுங்கலேனு தான்.....:D :D

:D :D :D :D

meera
10-12-2006, 01:00 PM
ராம்,

படித்தேன், ரசித்தேன்.

leomohan
10-12-2006, 01:22 PM
அப்போதெல்லாம் எனை தீண்டாது
எனை சீண்டிய நிமிடங்கள்
இப்போது என் நினைவில்.!
உன் நெற்றியில் விழுந்த
ஒற்றை சுருள் முடி!
உதடு ஒட்டிய காபி நுரையை
நாவில் துடைத்த அந்த பொழுது..!
முகத்தை நிலம் பார்க்க வைத்து
மேல் விழியால்
நோக்கும் நொடிகள்
ஏதோ சொல்ல வந்து
சொல்லாமல்
உதடு கடிக்கும் நேரங்கள்.!
நான் பேசும் குறும்பு கேட்டு
கையில் கிடைத்ததை தூக்கி எனை
அடிப்பதுபோல்
நே செய்யும் பாவனைகள்
நீ பேசும் குறும்பு.!
கண் மட்டும் பார்த்திருக்கும்
யுகப்பொழுது நேரங்கள்.!
உன் துள்ளல் ஓட்டம்.!
கள்ளப் பார்வை.!
கனிசாறு உதடு குவிப்பு.!
வெயில் படாத
காதோரம்.!
கண்சிமிட்டல்.!
இமைவிரிப்பு.!
நான் பார்க்காதபோது
என் மீதான பார்வை.!
என் வரவு எதிர்நோக்கியிருக்கும்
உன் விழி தேடல்.!
விடை பெற்று செல்லும் முன்
ஷ்ரீ என
அழைத்துவிட்டு
ஒன்றுமில்லை எனச் சொல்லும்
அந்த நேரங்கள்.!
உன் தீண்டலுக்கு முன்
உன் சீண்டல் எனக்கு
பிடித்திருகிறது
( சீண்டலின் முடிவில்..தீண்டலின் ஆரம்பமா..?)
(தொடர்ந்து சொல்வேன்...!)

ரசிச்சு காதல் செஞ்சிருக்காருப்பா ஸ்ரீராம். கொடுத்து வைத்தவர் தான். கலக்குங்க.

sriram
10-12-2006, 04:21 PM
என்னை காதலித்து பார்.!
காதலை காதலிக்க சொல்லித்தருகிறேன்.!
நீ என்னிடம் சொன்னாயா?
நான் உன்னிடம் சொன்னேனா?
(தொடர்ந்து சொல்வேன்)

ஓவியா
11-12-2006, 12:03 PM
ராம்,
ஆப்படியே இது தங்களின் உண்மை அனுபவம்னா....
உங்கள் காதல் வாழ கடவுள் அருள்புரிவாராக....:)



என்னை காதலித்து பார்.!
காதலை காதலிக்க சொல்லித்தருகிறேன்.!
நீ என்னிடம் சொன்னாயா?
நான் உன்னிடம் சொன்னேனா?


இது ரொம்பவே அருமையாய் இருக்கு...:) :)

ஆபாசமில்லா உங்கள் காதல் கவிதை மழை, என்னை கொஞ்சம் கொஞ்சமாய் (மனம்) குளிர வைகின்றது......

ரசித்தேன்............. ரசிக்கின்றேன்

பாரட்டுக்கள், வாழ்த்துக்கள் நண்பா

sriram
11-12-2006, 04:06 PM
மனதை பாகாய் உருகவைக்கும் மெல்லிய காதல் உணர்வுகளை என் ரசனையில் குழைத்து தர முயற்சிக்கிறேன்.இனம் புரியாத மெல்லிய அதிர்வுகளை உணரவதற்காக... விழியோரம் ஒரு சொட்டு கண்ணீர்.. ஆனந்தமா? சோகமா என புரியாத வகையில்..!

sriram
11-12-2006, 04:16 PM
(7)
கொஞ்சும் விழி இரண்டு உனக்கு..!
கெஞ்சும் விழி இரண்டு எனக்கு.!
கொஞ்சலும் ,கெஞ்சலுமாய்
நான்கு கண்களில் ஒரு காட்சி
காண அழைத்தாய்.!கண்ணில் பேசி..!
பேசி கொண்டே பேசாமல் இருந்தோம்.!
பேசாமல் பேசும் கலை பழகினோம்.!
தாவணி பெண்ணாய் உன்னை பார்த்த நாட்கள்...
( தொடர்ந்து சொல்வேன்....)

meera
12-12-2006, 07:42 AM
(7)
கொஞ்சும் விழி இரண்டு உனக்கு..!
கெஞ்சும் விழி இரண்டு எனக்கு.!
கொஞ்சலும் ,கெஞ்சலுமாய்
நான்கு கண்களில் ஒரு காட்சி
காண அழைத்தாய்.!கண்ணில் பேசி..!
பேசி கொண்டே பேசாமல் இருந்தோம்.!
பேசாமல் பேசும் கலை பழகினோம்.!தாவணி பெண்ணாய் உன்னை பார்த்த நாட்கள்...
( தொடர்ந்து சொல்வேன்....)


இது தான் காதலின் மொழியோ??

தொடருங்கள் ராம்.ஆர்வமாய் காத்திருக்கிறோம்.

sriram
12-12-2006, 03:57 PM
(8)
தாவணிப் பருவம் வந்தபின்னும்
தாவணி உடுத்த தயங்கினாய்.!
சுடிதாரில் உனைப் பார்த்த என் கண்கள்
உனை தாவணியில் பார்க்க ஏங்கியது!
.
அது ஒரு ஆவணி மாதம்...!
மொட்டை மாடி..!
சுற்றிலும் பார்த்தால்
மலைகள்-உரசும் மேகங்கள்..!
மயில் கழுத்து நிறத்தில் தாவணி உடுத்தி வந்து
ஒரு வார்த்தை பேசாமல் நின்ட்றாய்.!
நானும் ஒரு வார்த்தை பேசாமல்
ஒரே நொடி பார்த்தேன்.!
.
அதே நொடியில்
உன் இதழோரம் சிந்திய புன்னகை..
இதய குறுகுறுப்பு
ரசித்தேன்...
.
(நீ கொடுத்த அந்த ஒற்றை ரூபாய் மோதிரம்......
பேசாத நாட்களில்.... கண்ணில் கதை பேசிய நிமிடம்..!.)
( தொடர்ந்து சொல்வேன்)

sriram
15-12-2006, 04:38 PM
ஒற்றை ரூபாய் மோதிரத்தில்
உன் இதயத்தை
ஒட்டி வைத்து கொடுத்தயா?
கூர்ந்து பார்த்தால் மட்டுமே
தெரியும்
இதய வடிவம்..!

கண்ணு மொழி பேசுகிற
காதல் விழி கொண்டவளே..!
என் மனசை நேசிக்கிற
நேசமனம் கொண்டவளே..
.
உள்ளுகுள்ளே என்ன வச்சி
உனக்குள்ள பேசிக்கிற..!
உனக்குள்ள என்ன தச்சி
உள்ளுக்குள்ள நேசிக்கிற..!
(பாட்டாவே படிசுட்டேனா? இனிமேல் இசையுமா.?..! தொடர்வேன்.)

அறிஞர்
15-12-2006, 07:36 PM
ஸ்ரீராம் தங்களின் கவிதைகளை இன்று தான் ரசித்து படித்தேன்.

ஒவ்வொன்றும் அருமை.... இன்னும் தொடருங்கள்...


(8)
தாவணிப் பருவம் வந்தபின்னும்

மயில் கழுத்து நிறத்தில் தாவணி உடுத்தி வந்து
ஒரு வார்த்தை பேசாமல் நின்ட்றாய்.!
நானும் ஒரு வார்த்தை பேசாமல்
ஒரே நொடி பார்த்தேன்.!
.
அதே நொடியில்
உன் இதழோரம் சிந்திய புன்னகை..
இதய குறுகுறுப்பு
ரசித்தேன்...
இந்த குறும் சிரிப்பை பார்க்க.... எத்தனை கண்கள் வேண்டும்.
ரசித்தவருக்கு தான் அருமை தெரியும்.
அழகான இயல்பான வரிகள்./


ஒற்றை ரூபாய் மோதிரத்தில்
உன் இதயத்தை
ஒட்டி வைத்து கொடுத்தயா?
கூர்ந்து பார்த்தால் மட்டுமே
தெரியும்
இதய வடிவம்..!

கண்ணு மொழி பேசுகிற
காதல் விழி கொண்டவளே..!
என் மனசை நேசிக்கிற
நேசமனம் கொண்டவளே..
.
உள்ளுகுள்ளே என்ன வச்சி
உனக்குள்ள பேசிக்கிற..!
உனக்குள்ள என்ன தச்சி
உள்ளுக்குள்ள நேசிக்கிற..!
(பாட்டாவே படிசுட்டேனா? இனிமேல் இசையுமா.?..! தொடர்வேன்.)
காதல் மொழி வரிகள் அருமை.

அடுத்த வரிகளை இன்னும் கொஞ்சம் மெருகேத்தலாம்.