PDA

View Full Version : நீரிழிவு நோயை குணப்படுத்த....



mgandhi
01-12-2006, 06:26 PM
நீரிழிவு நோயை குணப்படுத்த....
அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் நமது உடலுக்கு தேவையான உயிர்சக்தி நுரையீரலில் உருவாக்கப்பட்டு 2 மணி நேரத்துக்கு ஒரு நரம்பு வழி என 12 நரம்புத்தளங்களின் வழியாக தனது முழுச்சுற்றை ஒரு நாளைக்குள் முடிக்கின்றது.
இந்த உயிர்சத்தை தன்னிடத்தில் வாங்கி தனக்கு அடுத்துள்ளதிற்கு அனுப்பி வைப்பதற்காக உடலில் சுமார் 700 அக்குபஞ்சர் ஸ்தானங்கள் உள்ளன. இந்த உயிர் சக்தியின் ஓட்டம் தடைபடுவதால் நம் உடலில் சில பல உபாதைகள் வருகின்றன.

இந்த தடையை ஊசிகள் மூலம் அகற்றி மறுபடியும் உயிர் சக்தியின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தினால் அந்த உபாதைகள் நீங்கிவிடுகிறது. இதுவே அக்குபஞ்சர் வைத்திய முறையின் அடிப்படை என்கிறார் பிரபல அக்குபஞ்சர் நிபுணர் டாக்டர் முத்துக்குமார்.

அக்குபஞ்சர் வைத்தியமானது 65 வயதுக்கு மேல் உயிர் சக்தியின் வீரியம் தானாக குறைய தொடங்குவதால் 65 வயதுக்கு கீழ் யாரும் இந்த சிகிச்சைக்கு உட்படலாம்.

உணவுக்கட்டுப்பாடோ, பத்தியமோ கிடையாது. எந்த மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆகவே மருத்துவ செலவே இல்லை. நம்கண்களின் கருவிழி, நாக்கு இவைகளை வைத்தே நோயை கண்டு பிடித்து விடுவதால் எக்ஸ்ரே, ஸ்கேன் இவற்றுக்காக செலவு செய்ய தேவை இல்லை.

நம்மை அறியாமலேயே நம்முடைய வாழ்க்கையில் நாம் அக்குபஞ்சர் முறை ளை நமக்கு நாமே செய்து வருவது வியப்பில் ஆழ்த்துகிறது.

காலையில் எழுந்து வெளியே கிளம்பும் போது பிள்ளையார் கோவிலுக்கு போய் நம் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக் காரணங்கள் போடுவது, ஆசிரியர் மாணவனை காதைப்பிடித்து திருகுவது, தலையில் குட்டுவது, நமக்கு ஏதாவது ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வரவில்லை என்றால் பேனாவால் முன் நெற்றியில் அடித்துக் கொள்வது, காதுகளில் வளையம் போடுவது போன்ற அனைத்துமே அக்குபஞ்சர் முறைகள்தான்.

அக்குபஞ்சர் முறையில் நம் காதுகளில் உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கான ஸ்தானங்கள் உள்ளன. நம் காதுகளை இழுக்கும்போது இந்த ஸ்தானங்கள் தூண்டப்பட்டு நம் உடல் வலிமை பெறுகிறது. காதை திருகும் போது தூண்டப்படுகிறது. தலையில் மட்டும் ஒரு ஸ்தானத்தில் 100 ஸ்தானங்கள் உள்ளன. ஆசிரியர் குட்டும் போது அனைத்தும் தூண்டப்படுகின்றன.

நம் முன் நெற்றியில் முக்கியமான ஸ்தானம் உள்ளது. பேனாவால் அதில் தட்டும் போது ஸ்தானம் தூண்டப்பட்டு மறந்து போன விஷயங்கள் நமக்கு ஞாபத்துக்கு வரும். காதில் கம்மல் உராய்வதால் கண் பார்வை பலப்படும்.

அக்குபஞ்சர் முறையில் ஏராளமான நோய்கள் குணமாகின்றன. முக்கியமாக நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்திவிடலாம். இது தவிர எளிதில் குணப்படுத்தக் கூடிய உபாதைகள் பற்றிய விவரம் வருமாறு.

உடல் பருமன் - உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி. 12 நாட்களில் 5 கிலோ எடையை குறைக்கலாம்.

தலை முடி வளர - 20 நாட்கள் சிகிச்சை பெற்ற பின் தலை முடி வளர்ந்து விடும்.

முகச்சுருக்கம் நீங்க - முகத்தில் உள்ள சுருக்கங்கள் கன்னங்களில் தொய்வு, கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் நீக்குவது.

மூட்டு வலி - நாள்பட்ட மூட்டு வலியில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

pradeepkt
02-12-2006, 01:40 PM
நீரிழிவு நோய் குணப்படுத்தக் கூடியதா? நான் கேள்விப்பட்ட வரையில் அது கட்டுப்படுத்தக் கூடியது மட்டுமே!

இளசு அண்ணா, விளக்கம் ப்ளீஸ் ??

karikaalan
08-12-2006, 03:28 AM
நீரிழிவு நோயை நம்பியே எத்தனை எத்தனை ஆராய்ச்சிகள், மருந்துகள், அவற்றைத் தயாரிக்கும் கம்பெனிகள் --- எல்லாமே திவாலாகிவிடுமே ஐயா!!

===கரிகாலன்