PDA

View Full Version : 1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை



mgandhi
01-12-2006, 06:08 PM
1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை


"நாடு முழுவதும் ஆறிலிருந்து 14 வயதிற்குட்பட்ட 1.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை'', என பார்லிமென்ட்டில் தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சர் ஏ.பாத்மி கூறியதாவது:

மத்திய அரசின் சார்பில் நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அறிவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஆறிலிருந்து 14 வயதிற்குட்பட்ட 1.34 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பீகார் மாநலத்தில் 31.7 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை.இதற்கு அடுத்தபடியாக உ.பி.,யில் 29.9 லட்சம் குழந்தைகளும், மேற்கு வங்கத்தில் 12.1 லட்சம் குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை. ம.பி.,யில் 10.8 லட்சம் குழந்தைகளும், ராஜஸ்தானில் 7.9 லட்சம் குழந்தைகளும் பள்ளி செல்லவில்லை. நடப்பு 2006&07ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.11 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டது.

இளசு
01-12-2006, 06:51 PM
குழந்தை உழைப்பாளர்களைக் காப்பாற்ற அண்மையில் வந்த சட்டமாவது இந்நிலையை மேம்படுத்துமா???

பீகார் - எதிர்பார்த்தேன்.
மே. வங்கம்? - காம்ரேடுகளின் கண்ணெதிரிலுமா???!!!!


நன்றி காந்தி.

( மூன்று முறை ஒரே பதிவு - இரண்டு நீக்கப்பட்டன.
மன்றத்தின் வேகம் இன்றும் குறைவா?)

pradeepkt
02-12-2006, 01:42 PM
பொதுவுடைமைக் கட்சிகள் முப்பத்து மூன்று வருடங்கள் ஆட்சியில் இருந்தாலும் இருக்கும் நிலை என்னவோ ஒன்றுதான் என்று சொல்லாமல் சொல்கின்றன இந்தத் தகவல்கள். இது மாயை என அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கும் இருக்கும் இன்னொரு முகம் கிழிந்து தொங்குகிறது.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் என்றால் அங்கே பொதுவுடைமைக் கட்சிகள். அவ்வளவே! இங்காவது ஒருவரை ஒருவர் எதிர்த்து செய்யும் அரசியலாம் துளி நன்மை நடக்கிறது. அங்கேயோ நிலைமை படுபாதாளம்! பாலாறும் தேனாறும் ஓடும் என்றுதானே ஒவ்வொரு முறையும் வாக்குறுதி அளிக்கிறார்கள். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஏழு முறை தொடர்ந்து வாய்ப்பளித்தும் அப்படி ஒன்றும் மேற்கு வங்கம் முன்னேறி விடவில்லை. வெட்கக்கேடான விஷயம் இது.

ஓவியா
03-12-2006, 03:04 PM
அரசாங்க பள்ளிக்கூடத்திலும் அதிகபடியான செலவுகள்

இலவசமாக கிடைக்கவேண்டிய கல்வி, விற்ப்பனைக்கு வந்ததும் ஒரு காரணமே,